Friday 3 October, 2008

கைநாட்டு மந்திரிகளும் பொருளாதார இழப்புகளும்

பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற சொல்வழக்கம் ஒன்று உண்டு. நாட்டின் நிகழ்கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசியல்/அதிகார உயர்பதவிகளுக்கு தகுதியில்லா நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பாரதம் முழுவதுக்குமான சாபக்கேடு. தவறான நேரத்தில் எடுக்கப்படும் தவறான முடிவுகளால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவது மட்டுமல்லாது மீளாத இழப்புகளுக்கும் ஆளாகநேரிடும் என்பதை விளக்க ஆயிரம் உதாரணங்கள் காட்டமுடியும்.

உறுதியான திட்டமிட்ட நடவடிக்கைகளால் பயங்கரவாத செயல்கள் நிகழாவண்ணம் தடுப்பதில் வெற்றிகொண்ட நாடுகள் பல உண்டு. நமது அரசியல் அதிகார வர்கத்தினர் இம்மாதிரியான நாடுகளைப்பார்த்து பாடம் ஏதும் கற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, சுயமான முயற்சிகளும் இல்லாது போனதால் எத்தனை உயிர் இழ‌ப்புகள்... எவ்வளவு மனித ஆற்றல்கள் வீணடிக்கப்பட்டன...

பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாழும் நம்நாட்டில் இலவச உதவி திட்டங்கள் மிகவும் அவசியமான ஒன்று. இலவச உதவியென்பது பிச்சையிடுவது போலல்லாமல், அம்மக்களின் வாழ்க்கத்தரம் உயர தரப்படும் ஒரு வாய்ப்பாகவும்/உந்துகோலாகவுமே இருத்தல் அவசியம். ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது ? ஓட்டு வாங்குவதற்கான வெறும் கவர்ச்சித்திட்டமாகத்தானே இருக்கிறது (இலவச கலர் தொலைக்காட்சி திட்டம் ஒரு உதாரணம்).

பெரும்பான்மை மக்களது வரிப்பணத்தை, மக்கள் மற்றும் மாற்றூ அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்டும் நடவடிக்கைகள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வாரியிறைக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது ? சமீப அமெரிக்க நாட்டின் நிகள்வுகளை அனைவரும் கவனித்துவருகிறோமே... கொழுத்த லாபம் ஈட்டிவந்த‌ வந்த வங்கிகள்/ஃபைனான்ஸ் கம்பெனிகள் தமது தவறுதலான நடவடிக்கைகளால் திவாலானதும், அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்லாது உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையிலும், அந்த நிதி நிருவனங்களுக்கு அரசு உதவிகள் கிடக்க எவ்வளவு கட்டுப்பாடுகள்.. மக்கள் வரிப்பணத்தைக்கொண்டு மான்யம் தருவருவதை எதிர்க்கும் அமெரிக்க மக்களையும் அரசியல் அதிகாரிகளையும் பார்க்கத்தானே செய்கிறோம்... (இலவச திட்டங்கள் குறித்து நிறைய படித்து நீண்டகட்டுரை ஒன்றை எழுதவேண்டும்).

இன்றய தினமணியில் வந்த செய்தியொன்று.

அலைவரிசை தொகுப்பு ஒதுக்கீட்டில் விஷயத்தில் மத்திய மந்திரி ஆ. ராசாவின் குளறுபடிகளால் மத்திய அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்ப‌ட்டிருப்ப‌தாக‌ இந்த‌ செய்தி தெரிவிக்கிற‌து. இந்த‌ மந்திரியால் இழ‌ப்பு ஏற்ப‌டுவ‌து இது முத‌ல் முறைய‌ல்ல‌ இன்ப‌தையும் க‌வ‌னிக்க‌ வேண்டும். இந்த கைநாட்டு மந்திரிகளின் சொந்த‌ இலாப‌ங்க‌ளுக்காக‌வும் அர‌சிய‌ல் இலாப‌ங்க‌ளுக்காக‌வும் நாம் இன்னும் எவ்வ‌ள‌வு இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டுமோ?

*****************************

மத்திய அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு?: அலைவரிசை தொகுப்பு ஒதுக்கீட்டில் ஆ. ராசாவின் குளறுபடி

நமது சிறப்பு நிருபர்


சென்னை, அக்.2: அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பு (ள்ல்ங்ஸ்ரீற்ழ்ன்ம்) சுமார் ரூ.90 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்தியாவிலும் அலைவரிசைத் தொகுப்பு விற்கப்பட்டிருக்கிறது. எவ்வளவுக்குத் தெரியுமா? வெறும் ரூ.1650 கோடிக்கு.

""முதலில் கேட்பவருக்கு, முதலில் அனுமதி'' என்ற அடிப்படையில் இந்த அனுமதி தரப்பட்டது. தொலைபேசி சேவை தருவதற்கு ஏற்கெனவே உரிமம் பெற்று வைத்திருக்கும் "ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்தின் மதிப்பு இப்போது மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணம் மேற்படி அலைவரிசைத் தொகுப்புக்குக் கிடைத்த அனுமதிதான்.

இந் நிறுவனம் ரூ.1,539 கோடியைக் கட்டணமாகச் செலுத்தியது. இன்னும் சேவையைத் தொடங்கவே இல்லை. ஒன்பதே மாதங்களில் இதன் மதிப்பு ரூ.5,000 கோடியாக மாறிவிட்டது.

எஸ்ஸôர் குழுமத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள லூப் டெலிகாம் நிறுவனம் புதிதாக இச் சேவையில் நுழைகிறது. இதுமட்டுமின்றி டேட்டாகாம், ஷியாம் டெலிலிங்க், யுனிடெக் ஆகியவையும் புதிய வரவுகள். ஏற்கெனவே இச் சேவையில் இருக்கும் டாட்டா டெலிசர்வீஸஸ், ரிலையன்ஸ் நிறுவனங்களும் அலைவரிசைத் தொகுப்பு ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.
இதையே ஏலம் மூலம் விட்டிருந்தால் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறைக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் கோடியாவது கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என்று துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வருமான இழப்புக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முடிவுதான் காரணம் என்பது பலரின் கருத்து.

இந்தியாவில் செல்போன் சேவை மிகவேகமாக வளர்ந்து வருவதால், செல்போன் நிறுவனங்களுக்குக் கூடுதல் அலைவரிசைகள் தேவைப்படுகின்றன. உரையாடல், இன்டர்நெட் சேவையில் தகவல் பரிமாற்றம், புகைப்படம், விடியோ பரிமாற்றம் ஆகியவற்றுக்கெல்லாம் அதிக அளவில் அலைவரிசை ஒதுக்கீடு பெற்றிருந்தால் மட்டுமே நிறைய பேருக்கு நிறைவான சேவையை அளிக்க முடியும்.

அதனால்தான் அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. இதற்கான ஒதுக்கீட்டைப் பொருத்தவரை நிலையற்ற கொள்கையைத்தான் மத்திய தொலைத்தொடர்புத்துறை பின்பற்றுகிறது.
மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப சேவைக்கான அலைவரிசை தொகுப்பை ஒதுக்குவதென முடிவு செய்தபோது இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியது. ஆனால், பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி, ரிலையன்ஸ் போன்ற சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் அனுமதி, பங்குதாரர் அடிப்படையில் அனுமதி என்றெல்லாம் அவ்வப்போது வசதிக்கேற்ப கொள்கைகள் மாற்றப்பட்டன.
இதனால், குறைந்த கட்டணத்தைச் செலுத்தி இப்போதைக்கு அலைவரிசைத் தொகுப்பை வாங்கி வைத்துக் கொள்வோம் என நிறுவனங்கள் இறங்கியுள்ளன. பெரிய தொழில் முதலாளிகள் வேறு நிறுவனங்களின் பெயர்களில் இவ்வாறு அலைவரிசைத் தொகுப்பை பிடித்து வைத்துக் கொண்டனர். அதை இனி யாரும் பயன்படுத்த முடியாது.

தொலைத்தொடர்பு நிறுவன சேவை விரிவாக்கத்துக்கு அலைவரிசை கூடுதலாகத் தேவைப்படும் போது தங்களிடம் உள்ள அனுமதியை நல்ல விலைக்கு விற்கலாம். இதன்மூலம் இந்த நிறுவனங்கள் லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்கூட சம்பாதிக்க முடியும்.

பங்குச் சந்தையில், பொருள் வணிகத்தில் குறைந்த விலைக்கு வாங்கி இருப்பு வைத்துவிட்டு, லாபகரமான விலை வரும்போது விற்பதைப் போலத்தான் இதுவும்.

நம்மிடம் உள்ள அலைவரிசைத் தொகுப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவை அளிப்பதற்குப் பதிலாக, இதை தனியாரின் வியாபாரப் பொருளாக்கிவிட்டது மத்திய தொலைத் தொடர்புத் துறை என்று மூத்த அதிகாரிகள் வருந்துகின்றனர்.

போட்டியை உருவாக்கி ஏலம் மூலம் விற்றால் இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும். என்ன காரணத்தாலோ அப்படியொரு முயற்சியை மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுக்கவில்லை.

============ Another News ==================

வழக்குகளால் திணறும் ஆ.ராசா

புது தில்லி, அக். 2: செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான அலைவரிசை தொகுப்பை ஒதுக்கியது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் முயற்சியில் அத்துறை அமைச்சர் ஆ.ராசா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எடுத்த முடிவுகளை எதிர்த்து தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் அடுத்த சில வாரங்களில் விசாரணைக்கு வர உள்ளன. குறிப்பாக இரண்டு முக்கிய விவகாரங்கள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக பூதாகரமாக கிளம்பியுள்ளன.

செல்போன் சேவைகளுக்கு இரட்டை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவித்த முடிவை எதிர்த்து ஜி.எஸ்.எம். சேவை செல்போன் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தை நாடியுள்ளன.

அதேபோல், 6.2 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு மேல் அலைவரிசை தொகுப்பு பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து அந்த உரிமையைப் பறிக்க வேண்டும் என்று சி.எம்.டி.ஏ. சேவை செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இந்த இரண்டு விவகாரங்களிலும் தீர்ப்பாயத்துக்கு வெளியே தீர்வு காண அமைச்சர் ஆ.ராசா முயற்சி மேற்கொண்டிருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரது உத்தரவுப்படி மத்திய தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த்த பெகுரா, ஜிஎஸ்எம் மற்றும் சிஎம்டிஏ நிறுவனங்களின் கூட்டுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், இருதரப்பு நிறுவனங்களும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஆனால் வழக்குகளை வாபஸ் பெற மாட்டோம் என்று ஜிஎஸ்எம் மற்றும் சிஎம்டிஏ நிறுவன வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால் அமைச்சர் ஆ.ராசாவின் முயற்சிகள் கேள்விக்குறியாகி உள்ளன.

No comments: