Monday 7 December, 2009

அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!

தலையங்கம்:அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!

(c) dinamani.com First Published : 05 Dec 2009 12:30:00 AM IST
Last Updated : 05 Dec 2009 11:40:39 AM IST

க‌ா‌ஷ்​மீ‌ர் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்​க‌வே முடி​ய‌ாத பகுதி எ‌ன்​ப‌தை ஆணி‌த்​த​ர​ம‌ாக வலி​யு​று‌த்​து​வ‌தை வி‌ட்​டு​வி‌ட்டு அ‌தை ஒரு பிர‌ச்​‌னை‌க்​கு​ரிய பகுதி எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ளே உலக அர‌ங்​கி‌ல் ஒ‌த்​து‌க்​‌கொ‌ண்டு விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்​கிற பய‌ம் சமீ​ப​க‌ா​ல​ம‌ாக எழு‌ந்து வரு​கி​றது. இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் ‌தேச நல‌ன் கரு​தி​யு‌ம்,​ ப‌ாது​க‌ா‌ப்பு கரு​தி​யு‌ம் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்​‌னை​யி‌ல் ந‌ா‌ங்​க‌ள் அ‌மெ​ரி‌க்​க‌ா​வி‌ன் வழி​க‌ா‌ட்​டு​த‌ல்​படி நட‌க்​கி​‌றே‌ா‌ம் எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ள் ‌சொல்லி விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்றும் பய​ம‌ாக இரு‌க்​கி​றது.

ஆர‌ம்​ ப‌ம் முத‌லே க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணை​ய‌த் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை எ‌ன்​ப​து​த‌ா‌ன் உ‌ண்‌மை. த‌ா‌ங்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய மு‌ஸ்​லி‌ம்​களி​லி​ரு‌ந்து ‌வேறு​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் எ‌ன்று கரு​து‌ம் க‌ா‌ஷ்​மீ​ரி​க‌ள் ‌கே‌ட்​டது "ஆச‌ாதி', அத‌ா​வது, தனி ந‌ாடு​த‌ா‌னே தவிர ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணைய ஒரு​‌போ​து‌ம் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை. இ‌ந்​தி​ய‌ா‌வை வி‌ட்​டு‌ப் ‌போகு‌ம்​‌போது கூட‌வே பிர‌ச்​‌னை​‌யை​யு‌ம் வி‌ட்​டு‌ப் ‌போக ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று கரு​திய பிரி‌ட்​டி​ஷ‌ா​ரி‌ன் ​ பிரித்தாளும் சூழ்ச்சியின் வி‌ளை​வு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை.

க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌தை‌த் தனது க‌ட்​டு‌க்​கு‌ள் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​பது ஆசிய‌ா க‌ண்​ட‌த்​‌தை‌யே தனது க‌ண்​க‌ா​ணி‌ப்​பி‌ல் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​கிற ரக​சி​ய‌ம் ‌மே‌லை​ந‌ா‌ட்டு வ‌ல்​ல​ர​சு​க​ளு‌க்கு ந‌ன்​ற‌ா​க‌வே ‌தெரி​யு‌ம். க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌ங்‌கே தனது ர‌ாணு​வ‌த் தள‌த்‌தை அ‌மை‌த்​து​வி‌ட்​ட‌ா‌ல்,​ எ‌ண்​‌ணெ‌ய் வள‌ம் மிகு‌ந்த ம‌த்​திய ஆசிய ந‌ாடு​க‌ள், ரஷிய‌ா,​ சீன‌ா ம‌ற்​று‌ம் இ‌ந்​திய‌ா உ‌ள்​ளி‌ட்ட வள​மு‌ம்,​ பல​மு‌ம் ‌பெ‌ாரு‌ந்​திய எ‌ல்ல‌ா ஆசிய ந‌ாடு​க​‌ளை​யு‌ம் க‌ண்​க‌ா​ணி‌க்க முடி​யு‌ம் எ‌ன்று ‌மே‌ற்​க‌த்​திய வ‌ல்​ல​ர​சு​க‌ள் நி‌னை‌க்கின்றன. அத​ன‌ா‌ல்​த‌ா‌ன்,​ அ‌மெ​ரி‌க்க‌ா ஆர‌ம்​ப‌ம் முத‌லே ப‌ாகி‌ஸ்​த‌ா​னு‌க்​கு‌ப் ‌பெரிய அள​வி‌ல் நிதி உத​வி​யு‌ம்,​ ர‌ாணுவ உத​வி​யு‌ம் அளி‌த்​து‌க் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை ‌கொழு‌ந்​து​வி‌ட்டு எரி​யு‌ம்​படி ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​கி​றது.

உலக ர‌ாஜ​த‌ந்​திர வியூ​க‌த்​தி‌ல் த‌த்​த‌ம் ந‌ாடு​க​ளி‌ன் ப‌ாது​க‌ா‌ப்​‌பை​யு‌ம்,​ மேலாண்மையையும் ப‌ாது​க‌ா‌க்க முய‌ல்​வ​து‌ம் ‌செய‌ல்​ப​டு​வ​து‌ம் தவ​ற‌ல்ல. அ‌ந்த வியூ​க‌ங்​க‌ளை உ‌டை‌த்து ந‌ம்​‌மை‌ப் ப‌ாது​க‌ா‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​தி‌ல்​த‌ா‌ன் நமது ச‌ாம‌ர்‌த்​தி​ய‌ம் அட‌ங்கி இரு‌க்​கி​றது. ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ‌ர் கட‌ந்த 60 ஆ‌ண்​டு​க​ளி‌ல் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்க முடி​ய‌ாத பகு​தி​ய‌ாக ம‌ாறி வி‌ட்​டி​ரு‌க்​கி​றது எ‌ன்​ப​த‌ற்கு,​ அ‌ங்‌கே தொட‌ர்‌ந்து நட‌ந்​து​வ​ரு‌ம் ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌ம்,​ அதி‌ல் கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​ள‌ாக ம‌க்​க‌ள் ‌பெரு​ம​ள​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்டு வ‌ா‌க்​க​ளி‌த்​தி​ரு‌ப்​ப​து‌ம்
ச‌ா‌ட்சி. ப‌ாகி‌ஸ்​த‌ா​னி​ய‌ப் பகு​தி​ய‌ான ஆச‌ா‌த் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் மு‌றை​
ய‌ா ​க‌த் ‌தே‌ர்​த‌ல்​க‌ள் நட‌த்​த‌ப்​ப​டு​வ​தி‌ல்‌லை எ‌ன்​ப​‌தை​யு‌ம்,​ அ‌ங்‌கே அடி‌க்​கடி ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய அர​சு‌க்கு எதி​ர‌ாக நட‌க்​கு‌ம் ‌போர‌ா‌ட்​ட‌ங்​க‌ள் இரு‌ட்​ட​டி‌ப்பு ‌செ‌ய்​ய‌ப்​ப​டு​வ​‌தை​யு‌ம் ந‌ா‌ம் இதனுடன் ஒ‌ப்​பி‌ட்​டு‌ப் ப‌ா‌ர்‌க்க ‌வே‌ண்​டு‌ம்.

ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ​‌ரை‌ப் ப‌ற்றி இ‌ப்​‌போது ந‌ா‌ம் விவ‌ா​தி‌க்க ‌வே‌ண்​டி​ய​த‌ன் க‌ார​ண‌ம்,​ அர​சி​ய‌ல் முதி‌ர்‌ச்சி இ‌ல்​ல‌ா​ம‌ல் அ‌ந்த ம‌ாநில முத‌ல்​வ‌ர் உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா சிறு​பி‌ள்​‌ளை‌த்​த​ன​ம‌ாக ‌வெளி​யி‌ட்​டி​ரு‌க்​கு‌ம் சில கரு‌த்​து​க‌ள்​த‌ா‌ன். க‌ா‌ஷ்​மீ​ரி​லு‌ள்ள தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க​ளு​ட‌ன் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்தி,​ அவ‌ர்​க‌ளை ஜன​ந‌ா​யக வழி​மு​‌றை‌க்கு அ‌ழை‌த்து வரு​வ​த‌ற்கு முய‌ற்​சி‌க்க ‌வே‌ண்​டிய முத‌ல்​வ‌ர்,​ திடீ​‌ரெ‌ன்று மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்று ‌பேச‌த் தொட‌ங்கி இரு‌ப்​ப​து​த‌ா‌ன் அதி‌ர்‌ச்சி அளி‌க்​கி​றது.

மு‌த்​த​ ர‌ப்பு எ‌ன்​பது தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள்,​ ம‌ாநில அரசு ம‌ற்​று‌ம் ம‌த்​திய அரசு எ‌ன்று கூறி​யி​ரு‌ந்​த‌ா‌ல் அவ​ரது முய‌ற்​சி‌யை வர​‌வே‌ற்​று‌ப் ப‌ார‌ா‌ட்டி இரு‌க்​க​ல‌ா‌ம். உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா குறி‌ப்​பி​டு‌ம் மு‌த்​த​ர‌ப்பு எ‌ன்​பது இ‌ந்​திய‌ா,​ ப‌ாகி‌ஸ்​த‌ா‌ன் ம‌ற்​று‌ம் தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் எ‌ன்று இரு‌ப்​ப‌தை ந‌ா‌ம் எ‌ப்​படி வர​‌வே‌ற்​பது?​ அது இரு‌க்​க‌ட்​டு‌ம். இ‌ப்​படி ஓ‌ர் அப‌த்​த​ம‌ான கரு‌த்‌தை ஒரு ம‌ாநில முத‌ல்​வ‌ர் ‌வெளி​யி​டு​கி​ற‌ா‌ர். அ‌ந்​த‌க் கூ‌ட்​டணி ஆ‌ட்​சி​யி‌ல் ப‌ங்கு ‌பெறு‌ம் க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி‌யே‌ா,​ உம‌ர் அ‌ப்​து‌ல்​ல‌ா​வி‌ன் ‌தேசிய ம‌ாந‌ா‌ட்​டு‌க் க‌ட்சி அ‌ங்​க‌ம் வகி‌க்​கு‌ம் ம‌த்​திய அர‌சே‌ா மறு‌க்​க‌வே‌ா,​ எதி‌ர்‌க்​க‌வே‌ா இ‌ல்​‌லை‌யே,​ ஏ‌ன்?​

கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​‌ளை​விட,​ தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் விடு‌த்த எ‌ச்​ச​ரி‌க்​‌கை​க​‌ளை‌ச் ச‌ட்‌டை ‌செ‌ய்​ய‌ா​ம‌ல் க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் வ‌ா‌க்​கு‌ப் பதி​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்​டி​ரு‌ப்​ப​தி‌ல் இரு‌ந்‌தே,​ ம‌க்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ம் ‌செ‌ல்​வ‌ா‌க்கு இழ‌ந்து வரு​வது ‌தெளி​வ‌ா​கி​றது.

கட‌ந்த 20 ஆ‌ண்​டு​க​ளி‌ல்,​ இ‌ந்த ஆ‌ண்​டு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ நடவடிக்கைகள் மிக​மி​க‌க் கு‌றை‌ந்​தி​ரு‌ப்​ப​த‌ாக ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ப. சித‌ம்​ப​ர‌ம் ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் கூறி​யி​ரு‌க்​கி​ற‌ா‌ர். இ‌ந்த நி‌லை​யி‌ல்,​ அவ​சி​ய‌மே இ‌ல்​ல‌ா​ம‌ல் மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்​கிற ‌பெய​ரி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா​‌னை‌ப் பிர‌ச்​‌னை​யி‌ல் நு‌ழை​ய​விட ‌வே‌ண்​டிய அவ​சி​ய‌ம்​த‌ா‌ன் எ‌ன்ன?​

க‌ா‌ஷ் ​மீ‌ர் பிர‌ச்​‌னை‌க்​கு‌த் தீ‌ர்வு க‌ாண ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று சீன அதி​ப​ரு‌ம் அ‌மெ​ரி‌க்க அதி​ப​ரு‌ம் ‌பேசு​கி​ற‌ா‌ர்​க‌ள். ந‌ா‌ம் ‌மௌ​ன​ம‌ாக இரு‌க்​கி​‌றே‌ா‌ம். இ‌ங்‌கே,​ க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி​யி‌ன் கூ‌ட்​டணி சக‌ா​வ‌ான க‌ா‌ஷ்​மீ‌ர் முத‌ல்​வ‌ர்,​ மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை​யி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை இ‌ணை‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற விப​ரீத ‌யே‌ாச​‌னை‌யை மு‌ன்​‌வை‌க்​கி​ற‌ா‌ர். ந‌ா‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​‌றே‌ா‌ம். ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்​து​‌வே‌ா‌ம் எ‌ன்று ‌சொல்​வ​து​ட‌ன் நிறு‌த்​தி‌க் ‌கொ‌ள்​ள‌ா​ம‌ல்,​ ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌ம்
கணி​ச​ம‌ா​க‌க் கு‌றை‌க்​க‌ப்​ப​டு‌ம் எ‌ன்​கி​ற‌ா‌ர். எதி‌ர்‌க்​க‌ட்​சி​க‌ள்,​ ப‌த்​தி​ரி​‌கை​க‌ள் எ‌ல்​‌லே‌ா​ரு‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​ற‌ா‌ர்​க‌ள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.

க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌த்​‌தை‌க் கு‌றை‌ப்​ப‌தே‌ா வில‌க்​கி‌க் ‌கொ‌ள்​வ‌தே‌ா ஆப‌த்து. ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை‌க்கு அ‌ழை‌க்க நி‌னை‌ப்​பது அப‌த்​த‌ம். இ‌தை​‌யெ‌ல்​ல‌ா‌ம் ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ண்​டு‌ம் ‌கே‌ட்​டு‌க் ‌கொ‌ண்​டு‌ம் வ‌ாள‌ா​யி​ரு‌ந்தால் அதன் விளைவு விப​ரீ​த‌மாக முடியும்!

Tuesday 1 December, 2009

இந்திய பகுதியில் சாலைப்​பணியை தடுத்து நிறுத்தியது சீனா

Dinamani.com
First Published : 01 Dec 2009 12:53:52 AM IST
Last Updated : 01 Dec 2009 03:52:07 AM IST
லே,​ நவ. 30:​ ஜம்மு காஷ்​மீர்​மா​நி​லம் லடாக் மாவட்​டத்​தில் உள்ள ​ டெம்​ஷோக் பகு​தி​யில் தேசிய வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட இணைப்​புச்​சா​லைப்​பணி சீன ராணு​வத்​தின் ஆட்​சே​பத்​தின் கார​ண​மாக நிறுத்​தப்​பட்​டது.

ஒரு மாதத்​துக்கு முன் இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.​ ​ லே மாவட்ட ​ தலை​மை​ய​கத்​திற்கு தென்​கி​ழக்கே 300 கிமீ தொலை​வில் இந்​திய எல்​லைப் பகு​தி​யில் இந்த கிரா​மம் அமைந்​துள்​ளது. இந்த கிரா​மத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சாலை போடும் பணியை அக்​டோ​பர் மாதத்​தில் தடுத்து நிறுத்​தி​யது சீன ராணு​வம் என்று அதி​கார வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.​ ​

இந்த விவ​கா​ரத்தை சீனா​வி​டம் மத்​திய அரசு எழுப்​பும் என்று தெரி​வித்​துள்​ளார் மத்​திய பாது​காப்​புத்​துறை இணை அமைச்​சர் பல்​லம் ராஜு.​ லடாக்,​ ஹிமா​ச​லப்​பி​ர​தே​சம்-​திபெத்தை ஒட்​டிய ஸ்பிடி மற்​றும் திபெத் ஆகிய மூன்று பகு​தி​க​ளும் சந்​திக்​கும் இட​மான இந்த கயா சிக​ரப்​ப​கு​தி​யை​யொட்டி இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.

இதே பகு​தி​யில் கடந்த ஜூ​லை​யில் சீன ராணு​வம் ஒன்​றரை கிமீ தொலை​வுக்கு இந்​திய பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து மலை​கள்,​ பாறை​க​ளில் சிவப்பு வண்​ணத்தை பயன்​ப​டுத்தி சீன மொழியை எழு​தி​னர்.

இப்​போது வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட சாலைப்​ப​ணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளது.​ சீன-​இந்​திய கட்​டுப்​பாட்டு கோடு பகு​தி​யில் இந்​தி​யா​வுக்கு உட்​பட்ட பகு​தி​யில் இரு கிரா​மங்​கள் உள்​ளன. இந்த கிரா​மங்​களை சாலை மூலம் இணைக்​கத் திட்​ட​மிட்ட லே மாவட்ட நிர்​வா​கம் மத்​திய அர​சின் வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் அதற்​கான பணியை மேற்​கொண்​டது.

சுமார் 3.8 கிமீ தொலை​வுக்கு சாலைப் பணி நடந்த நிலை​யில் சீன ராணு​வத்​தி​னர் குறுக்​கிட்டு சர்ச்​சைக்​குள்ள பகுதி இது;​ இங்கு சாலை போடு​வதை அனு​ம​திக்​க​மு​டி​யாது என ஆட்​சே​பித்​த​னர். இது பற்றி இரு தரப்பு ராணுவ அதி​கா​ரி​கள் நிலை​யில் பேசி​யாக வேண்​டும் என​வும் கூறி​னர்.​

இந்த விவ​கா​ரத்தை மத்​திய அர​சின் கவ​னத்​துக்கு மாநில அரசு கொண்டு சென்​றுள்​ள​தாக ஜம்மு காஷ்​மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​தார்.​ ​ சாலை போடும் பணியை ஒரு மாதத்​துக்கு முன் சீன ராணு​வம் தடுத்து நிறுத்​திய விஷ​யத்தை ​ டோம்​ஷு கிராம தலை​வர் தன்​னி​டம் தெரி​வித்​த​தாக லடாக் தன்​னாட்சி கவுன்​சில் தலைமை அதி​காரி செரிங் டோர்ஜி கூறி​னார்.

சாலை போடப்​பட்ட பகுதி இந்​தி​யா​வுக்கு உட்​பட்​ட​து​தான். ஆனால் சீன ராணு​வத்​தி​னர் சர்ச்​சைக்கு உரிய பகுதி என்று கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்​தி​னர் என்​றும் டோர்ஜி தெரி​வித்​தார். ​​ ​ இந்​திய எல்​லைக்​குட்​பட்ட இந்த பகு​திக்​குள் சமீப கால​மாக சீன ராணு​வம் அடிக்​கடி அத்​து​மீறி நுழை​கி​றது என்​றும் டோர்ஜி குறிப்​பிட்​டார்.​

மத்​திய அர​சின் திட்​டத்​தின் கீழ் சாலை போடும் பணி பாதி ​ முடிக்​கப்​பட்ட நிலை​யில் சீன ராணு​வம் அந்த பணி​யைத் தடுத்து நிறுத்​திய தக​வலை அங்​குள்ள கிரா​ம​வா​சி​கள் என்​னி​டம் தெரி​வித்​துள்​ள​னர் என்று அந்த பகுதி மக்​க​ளவை உறுப்​பி​னர் ஹசன் கானும் தெரி​வித்​தார்.​ மாவட்ட அதி​கா​ரி​கள் தலை​யிட்டு இந்த பிரச்​னைக்கு தீர்வு காண​வேண்​டும் என்று கிராம மக்​கள் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.​

சம்​பந்​தப்​பட்ட இடத்தை மாவட்ட துணை ஆட்​சி​யர் அஜித் குமார் சாஹு பார்​வை​யிட்டு அது தொடர்​பான அறிக்​கையை மாநில அர​சி​ட​மும் முதல்​வ​ரி​ட​மும் தாக்​கல் செய்​துள்​ளார். சீன-​இந்​திய எல்​லை​யில் உள்ள கடை​கோடி பகுதி இது. கர​டு​மு​ர​டான மலை​க​ளும் பாறை​க​ளும் நிறைந்த இந்த பகுதி கிரா​மங்​களை சாலை​க​ளால் இணைத்​தால் பொது மக்​கள் எளி​தில் சென்​று​வர உத​வு​வ​து​டன் வேலை​வாய்ப்​பும் அதி​க​ரிக்​கும் என்ற நோக்​கத்​தில் நியோமா மற்​றும் ​ டெம்​ஷோக் பகு​தி​யில் 7 இணைப்​புச் சாலை​களை அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டி​ருந்​தது.​ சீனா​வு​டன் 3000 கிமீ நீள எல்​லை​யைக்​கொண்​டுள்​ளது இந்​தியா. சீன உயர் தலை​வர்​கள் தூண்​டுத​லில் இத்​த​கைய அத்​து​மீ​றல்​கள் நடப்​ப​தில்லை என்று ஏற்​கெ​னவே வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி​வித்​துள்​ளார்.​

Wednesday 25 November, 2009

என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?

தலையங்கம்: குனியக் குனிய...

Dinamani.com
First Published : 25 Nov 2009 11:42:00 PM IST
Last Updated :

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது.

அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?

Thursday 19 November, 2009

சாத்தானின் தோட்டம் அல்லது கண்ணி வெடிகள்

இவ்வார ஆனந்த விகடனில் வந்த கட்டுரையிது. உலகெங்கும் புதைத்துவக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கணக்கிட்டால் அவற்றின் பெரும்பாலானவை முகமதிய நாடுகளில். கண்ணிவெடிகளில் சிக்கி மாண்டுபோவோர் பெரும்பாலும் அப்பாவி பொதுஜனம்.

தன்னையும் தனது நாட்டினரையும் குண்டுவைத்து கொல்வதற்கு இந்த முகமதியர்களால் மட்டுமே இயலும்.

"தலைவன்" எவ்வழியோ மக்களும் அவ்வழி...
*******

போரைவிடக் கொடுமையானது கண்ணி வெடி. போர்கூட முடிந்துவிடும். ஆனால், கண்ணி வெடிகளின் தாக்குதல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து மக்களைக் காவு வாங்கும். போரில், யார் எங்கே கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு...
எந்தவிதத்திலும் போருடன் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள், உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.

எகிப்து: கண்ணி வெடியால் கதிகலங்கிப்போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கின்றனவாம். 1956, 1967 மற்றும் 1973-களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்கள்தான் நாட்டை இப்படிக் கண்ணி வெடி தேசமாக்கிவிட்டன. 'எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால், சின்னா பின்னமாக வேண்டும்' எனப் புதைக்கப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்றுகொண்டு இருப்பதுதான் வேதனை. இவற்றை அகற்ற 15 வருடங்கள் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் மேற்குப் பாலை நிலப் பகுதியில் 70 லட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியில் இருந்து 30 லட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். தொட்ட இடமெல்லாம் கண்ணி வெடியாகக் காட்சியளிப்பதால் இதைச் சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.

இரான்:

தென்மேற்கு இரான் கண்ணி வெடிகளால்சூழப் பட்டு இருக்கிறது. இரான்-இராக் இடையேயான ஜென்ம விரோதம்தான், இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். 1980 -களில் இரான் அரசு புதைத்துவைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம். இரான் - இராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியே எந்தப் பயனும் இல்லாமல் கிடக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழப்பது மட்டும்தான் மிச்சம்!

அங்கோலா:

அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாக ஒதுங்கினால்கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70,000 பேர் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணி வெடிகள் இங்கு புதைத்துவைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என முழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.

ஆப்கானிஸ்தான்:

சராசரியாகத் தினமும் 10 முதல் 12 பேர் கண்ணிவெடியை மிதித்துக் காலியாகிறார்கள். ஆப்கனில் நீக்கமற நிறைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி! 1979-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை. இராக்: இங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல். இரான்-இராக் எல்லைப் பகுதியில்தான் அதிகபட்சம் இருக்கின்றன. எதிரிக்கு வைத்த வெடியில் வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3,500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக இராக் சொல்கிறது.

Wednesday 18 November, 2009

பிரிவினையின் துயரம் !

********************

திரு. எல்.கே. அத்வானி அவர்கள், ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை,வசந்தன் பெருமாள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1060 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டிருக்கிறது.

********************

பிரிவினையின் துயரம் ! – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 1


அது முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆனால், கராச்சி நகரத்துப் பள்ளிகளில் படிக்கும் ஹிந்து குழந்தைகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட இனிப்புகளைச் "சாப்பிட மாட்டோம்' என்று கூறிவிட்டார்கள். குழந்தைகள் இப்படி ஒட்டுமொத்தமாக இனிப்புகளைத் தவிர்க்கிறார்கள் என்றால், வெளியில் அச்சம் தரும் தவறு ஏதோ நடந்திருக்கிறது என்பதைச் சுலபமாக யூகித்துக்கொள்ள முடியும்...

...குழந்தைகள் இப்படியென்றால், இவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், "இனி என்ன?' – என்ற கேள்வியுடன் இதயத்தைப் பிழியும் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருந்தார்கள். இத்தனைக்கும் காரணம், "அந்த விசேஷ தினம்' கொண்டு வந்து சேர்த்த, கலவரமூட்டும் தகவல்கள்தான். கராச்சியின் பக்கத்து மாகாணமான பஞ்சாபில், ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாக எதிர் எதிர் திசைகளில், அகதிகளைப் போல புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பரவிக்கொண்டிருந்த செய்தி குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பாதிக்கத்தானே செய்யும்?...


...1947 ஆகஸ்டு 14.


அன்றுதான் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து, பாகிஸ்தான் என்ற இஸ்லாமியத் தனிநாடு பிரிக்கப்பட்டது. இந்த இரு தேசக் கோட்பாடு பற்றிய பேச்சு, சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எனது இளமனது, அதை ஏற்க மறுத்து உடனடியாக நிராகரித்தது. வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் – என்கிற ஒரு சாதாரண வித்தியாசத்தை வைத்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எப்படி இரு வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆக முடியும்? இந்த இரு தேசக் கோட்பாட்டை, அறிவுபூர்வமான ஒன்றாக என்னால் நினைக்க முடியவில்லை. குறிப்பாக, சிந்து மாகாணத்தின் சமூகக் கட்டமைப்பு – கலாச்சார ஒன்றிணைப்பு, ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்களையோ, முஸ்லிம்களிடம் இருந்து ஹிந்துக்களையோ பிரிக்க முடியாததாக இருந்தது...


...ஆனாலும் நிகழ்ந்தே விட்டது!


சில வருடங்களுக்கு முன்பு வரையில் யதார்த்தத்துடன் தொடர்பற்ற, அதீத கற்பனையாகத் தோன்றிய பிரிவினை, உண்மையாகிவிட்டது. கராச்சியின் ஒரு சில இடங்களில் மட்டுமே பிரிவினையை வரவேற்று வாண வேடிக்கைகளும், விருந்துகளும், கும்மாளங்களும் விடிய விடிய நடந்தன. பெரும்பாலான பகுதிகளில் அதன் அடையாளங்களே இல்லை. மறுநாள் இந்தியாவின் சுதந்திர தினம். அன்றும் கூட நகரின் எங்கள் பகுதிகளில் ஒரு கொண்டாட்டமும் இல்லை. மாறாக வேதனையும், சோர்வும் நகரத்தை ஆக்ரமித்துக்கொண்டன.

சிந்துவிற்கு காங்கிரஸ் கசந்து போனது ஏன்?


...ஒன்றுபட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோளாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்ததிலிருந்து, அதுவே எனது சொந்தக் குறிக்கோளாகவும் ஆகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியக் கோட்பாடுகளும் – அது தனது கொள்கைகளுக்குத் தரும் முக்கியத்துவமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. (பாகிஸ்தானிலுள்ள) ஹைதராபாத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஸ்வயம் சேவக்காக சேர்ந்ததன் மூலம், என் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது...


...அன்றைய நாட்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும், காங்கிரஸுக்கும் இடையில் பகை உணர்ச்சி இருக்கவில்லை என்ற உண்மையை, இப்போது அறிய நேரும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் இரண்டு இயக்கங்களும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்கும் ஒரே நோக்கம் கொண்டவை என்பதே, ஹிந்துக்களின் எண்ணமாக இருந்தது...


...சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த ஹிந்துக்களும், காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள். பல காங்கிரஸ் குடும்பங்கள் தங்களது இளவயதுப் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்ததை, நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக காலம் சென்ற கே.ஆர். மல்கானியைச் சொல்லலாம்...


...கே.ஆர். மல்கானியின் மூத்த சகோதரர் பேராசிரியர் என்.ஆர். மல்கானி. மிகவும் மதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர். அவர்தான் தன் தம்பி கே.ஆர். மல்கானியிடம் ""ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்துகொள். இளைஞர்களுக்கு தேசபக்தியையும், நல்ல ஒழுக்கத்தையும் போதிக்கும் சிறந்த இயக்கம் அது'' என்று கூறி ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்தார்...


பிரிவினை சிந்துஹிந்துக்களுக்கு இருமுனைத் துயரம்...


...பாகிஸ்தான் உண்டாகும் வரை, சிந்து மாகாணத்தில் பெருமளவில் அமைதி நிலவியது. 1947ன் பின் பகுதியில் பக்கத்து மாநிலமான பஞ்சாபில் கடுமையான வகுப்புக் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கலவரம் பரவியது. பஞ்சாப் முதல் கிழக்கு மாகாணம் வரை கலவரப் பகுதிகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், தங்களது சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ரயில் வண்டிகள் குவியல் குவியலான மனித சடலங்களுடன் இந்தியப் பகுதியைச் சென்று அடைகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அந்தச் செய்திகள் சிந்துவிலும் பயத்தையும், அச்சத்தையும் உண்டாக்கின...

...சிந்துவின் வரலாற்றில் 1948 ஜனவரி 6ஆம் தேதி ஒரு கறுப்பு தினம். திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கொண்டு, கராச்சி முஸ்லிம் மயமாக்கப்பட்டது. நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஒரு சிறிய உதாரணம். சிந்தி சபா என்று ஒரு கட்டிடம். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், பம்பாய் செல்ல கராச்சி வந்து கப்பலில் பயணப்படுவார்கள். மறுநாள் புறப்படுகிற கப்பலில் பயணம் செய்கிறவர்கள், முதல் நாளே கராச்சி வந்து சிந்தி சபாவில் தங்குவார்கள். 1948 ஜனவரி 6ஆம் தேதியும், பல ஹிந்துக்களும், சீக்கியர்களும் சிந்தி சபாவில் தங்கி இருந்தார்கள். கராச்சி நகரை முஸ்லிம் மயமாக்கும் நோக்கத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், சிந்தி சபாவில் தங்கி இருந்த 300 பேர்கள், படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் வைத்திருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிவினைக் கலவரங்களில், சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கக்கூடிய அதிகாரபூர்வமான ஆவணம் எதுவும் இல்லை. ஆனால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்று கருதப்படுகிறது...


...பிரிவினையின் விளைவாக சிந்து மக்கள் தங்களது சொத்துக்களை எல்லாம் இழந்து, சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வெறும் கையுடன் இந்தியாவிற்கு வந்தனர். இருந்ததை இழந்த துன்பம்; இனி புதிய இடத்தில், புதிய வாழ்க்கையை, வெறும் மன உறுதியை மட்டும் துணையாகக் கொண்டு துவக்க வேண்டிய துன்பம் என்று இரட்டைத் துயரங்களுக்கு ஆளாயினர். அகதிகளாக இந்தியா வந்த மக்களின் ஒவ்வொருவரது வாழ்வும் ஒரு தனியான துன்பக் குவியல்...


...பிரிவினைக்கு முந்தைய கால கட்டத்தில், மதங்களிடையிலான பொறுமை, பிணைப்பு ஆகியவற்றைப் பல சிந்துக் கவிஞர்கள், தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஷேக் அயாஸ். 1923ல் பிறந்து 1997 வரை வாழ்ந்த அவர், ஒரு கவிதையில் "நான் எல்லா ஆண்களின், எல்லா பெண்களின், எல்லாக் குழந்தைகளின் மதத்தைச் சேர்ந்தவன். இரக்கமற்ற அரேபியர்களை எதிர்த்துப் போரிட்ட, தாஹிரின் மனைவி லாதியின் ரத்தத் துளிகள் எங்கெல்லாம் சிதறியதோ அந்த இடங்களில், அங்கு எங்கு நட்டாலும் செழித்து வளரும் மதன்மஸ்தி செடி நான். அன்னை காளிதேவியின் ஆயிரம் சிலைகளைக் கொண்ட குகை நான். அவளைக் கல்லால் வடித்து வாழ்நாள் எல்லாம் வழிபடுகிறேன்' என்றார்....

*******

சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள்

சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள் – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 2


நான், 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, கராச்சியில் பிறந்தேன். எனது தந்தை கிஷன்சந்த். தாயார் க்யானிதேவி. எனக்கு ஒரு இளைய சகோதரி. பெயர் ஷீலா. இதுதான் எங்கள் குடும்பம். ஜம்ஷட் காலனியில், எங்கள் வீடு இருந்தது. நான் பிறந்த பிறகு கட்டிய வீடு என்பதால் அதற்கு "லால் காட்டேஜ்' என்று பெயரிட்டிருந்தார்கள். ஓரளவு விசாலமாக – அழகாக வடிவமைக்கப்பட்ட ஒற்றைத்தள பங்களா அது...

...பம்பாய் ராஜதானியின் பெரும்பாலான பகுதிகளில், தந்தையின் பெயரை நடுப் பெயராகப் பயன்படுத்தும் பொதுவான வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு, மஹாத்மா காந்தியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இதில் அவரது பெயர் மோகன்தாஸ். அவரது தந்தையின் பெயர் கரம்சந்த். குடும்பப் பெயர் காந்தி. இவை மூன்றும் சேர்ந்ததுதான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதுபோல, என் பெயர் எல்.கே. அத்வானி. அதாவது லால் கிஷன்சந்த் அத்வானி. என் பெயர் லால். ஆமாம், லால் என்பது மட்டும்தான் எனது பெயர். கிஷன்சந்த் என்பது என் தந்தையின் பெயர். மற்றவர்களால் என் பெயர் கிஷன்சந்த் என்று குறிப்பிடப்பட்டு, பிறகு கிருஷ்ணா என்று குறிப்பிடப்பட்டு, லால் கிருஷ்ண அத்வானி – பிறகு எல்.கே. அத்வானி என்று குறிப்பிடப்படுகிறேன். அத்வானி என்பது எனது குடும்பப் பெயர்...


...அப்போது எனக்குப் பதினான்கு வயது முடிந்து, சில மாதங்கள் ஆகி இருந்தன. நான் மெட்ரிகுலேஷன் முடித்ததும், என் தந்தை சிந்துவின் கராச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு (பாகிஸ்தான்) குடியேறினார். கல்லூரியில் சேர்வதற்கு முந்தைய கோடை விடுமுறை சமயம். நான், டென்னிஸ் விளையாடத் துவங்கியிருந்தேன். முரளிமுகி என்று ஒரு நண்பன். அவன்தான் என்னுடன் டென்னிஸ் விளையாடுவான். ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாட்டின் நடுவில் முரளி "நான் போகிறேன்' என்றான்.


எனக்கு ஆச்சரியம். "ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தைக் கூட முடிக்காமல் எப்படிப் போகலாம்?' என்றேன். அதற்கு முரளியோ, "நான் சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ். எஸ்.ஸில் சேர்ந்திருக்கிறேன். நேரம் தவறாமை அந்த அமைப்பில் முக்கியம். பயிற்சிக்கு தாமதமாகப் போக முடியாது' என்றான்.
ஆர்.எஸ்.எஸ். பற்றிய அறிமுகம் இப்படித்தான் உண்டாயிற்று. ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள, முரளியிடம் கேட்டேன். அவன் "நீயும் என்னுடன் வரலாம்' என்றான். நான், அன்று போகவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, நண்பனுடன் ஷாகாவிற்குப் போனேன். அப்போது சிந்துவில் ராணுவச் சட்டம் அமலில் இருந்தது. பொது இடங்களில், பயிற்சி நடத்தத் தடை நிலவியது. அதனால் ராம்கிருபளானி என்பவரது பங்களாவின் மொட்டை மாடியில் ஷாகா நடந்தது. அதில் முதல் முறையாகக் கலந்துகொண்டேன். அன்று தொடங்கி, இன்று வரையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீது தீவிரமான பற்றுக்கொண்ட, அதற்காகப் பெருமைப்படும் ஸ்வயம் சேவக்காக நிலைத்திருக்கிறேன்...


...ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாவில் பங்கு கொண்ட பிறகுதான், இந்தியாவிலும், உலக அரங்கிலும் நிகழ்ந்துகொண்டிருந்த முக்கிய அரசியல் மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பயிற்சி வகுப்பில் ஒருநாள், ஷியாம் தாஸ் உரை நிகழ்த்தினார். அறிவுபூர்வமான சொற்பொழிவு அது. அப்போது அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்

""இந்தச் சமுதாயத்தில் இருந்து, நீங்கள் நிறையப் பெறுகிறீர்கள். ஆனால் எதைத் திருப்பித் தருகிறீர்கள்? தர வேண்டியது உங்கள் கடமை அல்லவா? இந்தியா இப்போது, அன்னியர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நமது தாய் நாட்டை மீட்பது, நமது பொறுப்பல்லவா?'' என்றார். ஷியாம் தாஸின் அந்த வார்த்தைகள், எனது உள் உணர்வின் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தன. சுய விசாரணையின் பாதைக்கு என்னை அழைத்துச் சென்றன.

....முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்ற பெயரில், முஸ்லிம்களுக்கான தனி நாடு ஒன்றை, இந்தியாவில் இருந்து பிரிக்கத் திட்டமிடுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின்முன்னோடிகளின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன். "இரு தேசக் கொள்கை' என்ற கோஷத்தை, முதன் முதலாகக் கேள்விப்பட்டபோது, மின்சாரம் பாயும் கம்பியைத் தொட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அந்த யோசனை அருவருப்பும், வெறுப்பும் மிகுந்த ஒன்றாகவே எனக்குப்பட்டது.

ஒருநாள் எனது நாடு, இரண்டு துண்டாக வெட்டப்படும் என்பதை, எனது தாய் மண் "பாகிஸ்தான்' என்ற புது நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என்பதை, கற்பனையாகக் கூட என்னால் ஏற்க முடிந்ததில்லை.

"இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், விடுதலைக்கு விலையாக நாட்டைத் துண்டாட வேண்டுமா?' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். முஸ்லிம் லீக்கின் இந்த கொடுமையான கோரிக்கையை அறிந்ததும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதான எனது பிடிப்பு மேலும் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொள்வதில், எனக்குக் கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லை.

...நான் பார்த்த முதல் உத்தியோகம் பள்ளி ஆசிரியர். கராச்சி மாடல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது என் வயது பதினேழு. ஐந்தாவது மற்றும் ஆறாவது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு – ஆகிய பாடங்களைப் போதித்தேன். அந்தக் காலத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காகத் தனியாக டிப்ளமாவோ, டிகிரியோ அவசியமாக இருக்கவில்லை. மிகவும் குறைந்த வயதில் ஆசிரியராகச் சேர்ந்திருந்தேன். அதனால், என்னிடம் பாடம் பயிலும் மாணவர்களில் பலரும் எனது வயதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள்....

...சீக்கியரான ஹீராசிங் என் வகுப்புத் தோழன். என் வீட்டிற்கு அருகில்தான், அவன் வீடும் இருந்தது. எங்கள் ஷாகாவின் தீவிர ஸ்வயம் சேவக்காக இருந்தவன். பிரிவினையைத் தொடர்ந்து, நகரில் இனக் கலவரம் மூண்டது. அதில், ஹீராசிங்கின் குடும்பம் கடுமையான துன்பத்தைச் சந்தித்தது. இந்தியாவிற்குத் தப்பித்து வரவேண்டி நேர்ந்தது. அப்படி வரும்போதும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தலைமுடியை வெட்டி, தாடியை மழித்துக்கொள்ள வேண்டிய அவலத்தை, ஹீராசிங்சந்தித்தான். அந்த அனுபவம், அவனை நிலைகுலையச் செய்துவிட்டது. மனநிலை பாதிப்பால், நீண்டகாலம் துன்பப்பட்டான். பம்பாயில் குடியேறிய ஹீராசிங்கை நான் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். அந்தச் சம்பவத்தின் துன்ப நினைவுகளின் வடுக்கள், இன்னமும் ஹீராசிங்கிடம் நிலைத்திருக்கின்றன.

...தனது மத நம்பிக்கையிலும், அதைப் பின்பற்றுவதிலும், ஜின்னா எவ்வளவு நல்ல முஸ்லிமாக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. பிரிட்டிஷாருக்கு அடுத்தபடி, இந்தியாவை மதரீதியாகப் பிரிப்பதில், முக்கிய நபராகத் திகழ்ந்தார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது.

"ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு தேசங்களைச் சார்ந்தவர்கள். நாங்கள் ஒருநாளும் கூடி வாழ முடியாது' என்று அவர் 1940ல் அறிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபின் அவரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானே, அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

விரிவாக ஆராய்ந்து, தகவல்களைச் சேகரித்து, ஜின்னாவைப் பற்றி எழுதியடாக்டர் அஜித் ஜாவேத்வின் கூற்றுபடி, அவர் வருத்தமும் நோயும் தாக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர் பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம், "நான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். நான் டெல்லிக்கு போய், நேருவைச் சந்தித்து "கடந்த கால முட்டாள்தனத்தை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் நண்பர்களாகிவிடலாம்' என்று சொல்ல விரும்புகிறேன்' என்று வேதனையால் அழுதார்.

1937ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்ப, தன்னை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்து, முஸ்லிம் லீகின் தலைமையை ஏற்க வைத்த லியாகத் அலியை, அவர் வெறுக்கவும் ஆரம்பித்தார் என்கிறார் அஜீத் ஜாவேத்.
பிரிவினையின் போது கராச்சியின் "டெய்லி கெஸட்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எஸ்.எம். சர்மா, ஜின்னாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பாகிஸ்தானில் ஜின்னாவின் இறுதி ஆண்டு பற்றி, பல உண்மை நிகழ்வுகளை, சர்மா பதிவு செய்திருக்கிறார். நோய்வாய்ப்பட்ட உடல்நிலையைத் தவிர, மனப்போராட்டத்தின் துன்பத்தில் தவித்த மனிதராக, ஜின்னாவை சித்தரிக்கிறார்.

""ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்ற முந்தைய தனது பழைய நிலைக்குத் திரும்பி விட, அவர் மிகவும் விரும்பினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுகிறவராக பல ஆண்டுகள் இருந்தது போல, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நன்மைக்காகப் போராடுபவராகத் தொடர விரும்பினார்'' என்கிறார் சர்மா.

ஜின்னா, சர்மாவிடம், ""நண்பரே, பாகிஸ்தானின் ஹிந்து சிறுபான்மையினரின் புரடெக்டர் ஜெனரலாக நான் என்னை நியமித்துக்கொள்ளப் போகிறேன்'' என்று கூறியிருக்கிறார். கராச்சியில், ஹிந்து அகதிகள் முகாம் ஒன்றைப் பார்வையிட்ட போது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்திருக்கிறது.

ஜின்னாவைப் பற்றி இப்படிப்பட்ட செய்திகள் இருந்தாலும், நான் முதல் அத்தியாயத்தில், பாகிஸ்தானில் நிலவியதை விவரித்த சூழ்நிலை முற்றிலும் மாறானது. பாகிஸ்தான் அமைந்த பின், கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்களின் வாழ்க்கையில் கவிந்த அச்சத்தையும், பயத்தையும், உண்டாக்கின. ஜின்னாவின் வார்த்தைகளோ, செயல்களோ அவர்களின் அச்சத்தையும், பயத்தையும் போக்கவில்லை. சிந்துவில் எனது கடைசி நாட்கள், துன்பமும் துயரமும் நிறைந்த நாட்கள் என்பதே உண்மை.

பிரிவினை : யார் பொறுப்பு ?

பிரிவினை : யார் பொறுப்பு ? – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 3


..அவசர, அவசரமாக வரையறுக்கப்பட்ட எல்லையின் இரண்டு பக்கங்களிலும், பிரிவினைக் கலவரத்தில் ஹிந்துக்கள், சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் என்று சுமார்பத்து லட்சம் பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவசரக் கோலத்தில் – அறிவற்றமுறையில், எல்லையை வரைந்த பிரிட்டிஷாரின் செயலால், மனித இன வரலாற்றில், முன் எப்போதும் இருந்திராத வகையில், மிகப்பெரிய மக்கள் கூட்டம் இடம் விட்டு இடம் பெயர்ந்தது. வெறும் ஆறுமாத காலத்தில் ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள், அகதிகளாகிவிட்டனர். ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி துன்பப்பட்டார்கள். பிரிவினைத் தீமை தாங்க முடியாதது. ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் உண்டாக்கிய அளவிட முடியாத வலியும், அதன் நினைவுகளும் பல காலம் நீடிக்கிற அளவு மோசமானவை.


பிரிட்டிஷார் வெளியேறுகிறார்கள் என்பதற்காக, பல நூற்றாண்டு காலம் தங்களது குடும்பங்கள் வாழ்ந்த வீடுகளையும், கிராமங்களையும் விட்டுத் தாங்கள் ஏன் வெளியேற வேண்டும் என்று மக்கள் வியப்படைந்தார்கள்.
பிரிவினை தொடர்பாக அதன் பிறகு வந்த வருடங்களில், நான் ஏராளமான தகவல்களைப் படித்தேன். அதில் சாதாரணமான இரண்டு அகதிகளின் கருத்துக்கள் என் மனதை ஆழமாகத் தொட்டன. பஞ்சாபைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கிராமவாசி, ""இந்த நாடு பல ஆட்சி மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆட்சியாளர்கள் வந்தார்கள், போனார்கள். ஆனால், ஆட்சியாளர் மாறியதால், மக்களும் இடம் மாற வேண்டும் என்று இப்போதுதான் நிர்பந்திக்கப்படுகிறார்கள்'' என்றார். அதே போல ஹிந்து மூதாட்டி ஒருவர் பண்டித நேருவிடம், ""பாகப் பிரிவினை எல்லா குடும்பங்களிலும் நடத்திவைக்கப்படுகின்றன. இந்தப் படுகொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் ஏன் நடக்கின்றன? இந்தக் குடும்பப் பிரிவினையை அறிவார்ந்த முறையில் உங்களால் செய்ய முடியாதா?'' என்று கேட்டார்.

மகத்தான இந்தியக் குடும்பத்தின் பிரிவினைக்கும், அதைத் தொடர்ந்து வந்த படுகொலைகளுக்கும் யார் பொறுப்பு? அடிப்படையில், முஸ்லிம் லீக்தான் குற்றவாளி என்பேன். முஸ்லிம் லீகின் இரு தேசக் கோட்பாடு – பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தனிநாடு கோரிக்கை – மோசமான தவறு! இரு தேசக் கோட்பாட்டில் சமூக – கலாச்சார – ஆன்மீக – உண்மை எதுவும் இல்லை.
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இரு வேறு தேசத்தவர் என்ற வாதம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே வரலாற்றுக்கு உரியவர்களாக வாழ்ந்தவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். முஸ்லிம் தனிநாடு கோரிக்கை தவறு. அதை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறை அதைவிடப் பெரிய தவறு.


1946 ஆகஸ்டு 16ஆம் தேதி, முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்னும் தனிநாடு கோரிக்கையை, உடனடியாக ஏற்க வேண்டும் என்று கூறி, "நேரடி நடவடிக்கை' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அதன் விளைவாக, கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் – பெரும்பாலும் ஹிந்துக்கள், கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் நடவடிக்கை "நீண்ட வாள்களின் வாரம்' என்று குறிப்பிடப்பட்டது.

கல்கத்தா படுகொலைகள் உண்டாக்கிய பயமுறுத்தலைத் தொலைதூரத்தில்கராச்சியிலும் உணர முடிந்தது. பிரிவினைக்குப் பிறகு நடக்கப் போகிற பயங்கரங்களுக்கு இந்த ரத்தக்களறி ஒரு முன்னோட்டம் என்று அப்போது யாராலும் கணிக்க முடியவில்லை.

ஆனால், பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டும்தான் காரணமா? நான் அப்படி நினைக்கவில்லை. 1857ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் துண்டாடிவிட்டார்கள்.....

...1947 பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர் க்ளடிமெண்ட் அட்லி, ""ஒன்றுபட்ட அல்லது பிரிக்கப்பட்ட இந்தியாவில், இந்தியர்களிடம் 1948 ஜூன் மாதத்திற்கு முன் ஆட்சியை ஒப்படைத்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது'' என்று அறிவித்தார்.

1947 மார்ச் மாதம் மௌன்ட் பாட்டன் இந்தியா வந்து சேர்ந்ததும், ஐந்து மாத குறுகிய இடைவெளியில், வெறி பிடித்த வேகத்தில், 1947 ஆகஸ்டில் இந்தியப் பிரிவினையை முடித்துவிட்டார். நிதானமற்ற இந்த நடவடிக்கை, பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி சிறிதும் அக்கறையோ கவலையோ படாமல் செய்து முடித்தார். வன்முறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும், அதைச் சமாளிக்க சரியான திட்டம் இல்லை என்பதும், மௌன்ட் பாட்டனுக்கு நன்றாகத் தெரியும்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நில வரைபடங்களை சிரில் ரேட் க்ளிப் வரைந்தார். அவற்றின் விவரம் மிகமிக ரகசியமாகக் காக்கப்பட்டன.
எல்லைக்கோட்டிற்கு இருபுறமும் வாழும் மக்களும், அதைப் பற்றிய தகவல் எதையும் அறிய முடியாத நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்தப் போக்கு மிகப்பெரிய, நிச்சயமற்ற சூழ்நிலையை, மக்கள் மத்தியில் உருவாக்கியது இயற்கை. நிச்சயமற்ற தன்மையின் விளைவாகச் சந்தேகம் எழுகிறது. அது அக்கம்பக்கத்தில் வாழும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்புகிறது. மத ரீதியான வேகம் பரவிய சூழலில் சந்தேகம் அதிகமாகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு திடீரென்று குலைந்த நிலையும் சேர்ந்தது. சகோதரக் கொலை வன்முறையாகத் தீவிரமடைந்தது. இந்த அவமானகரமான செயல் ஏற்படுத்திய கசப்பும், வேற்றுமையும், துயரம் நிகழ்ந்த அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணமாக நிலைக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் நல்லுறவு ஏற்பட முடியாமல் தடுக்கிறது.
எவ்வளவோ கசப்பான நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதே சமயம், பக்கத்து வீட்டுக்காரரை, பக்கத்து வீட்டுக்காரர் காப்பாற்றிய நிகழ்ச்சிகளும் ஏராளம் என்பதும் உண்மை. இந்த ஊக்கம் தரும் செயல்கள், நம்பிக்கை – சகோதரத்துவம் என்ற ஒளியை அணையாமல் காத்தன. எனினும், இந்தத் தனிமனித அன்பின் அடையாளத்தால் பிரிவினைக் கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை, துக்கத்தை, வலியைக் குறைத்துவிட முடியவில்லை...

...விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களிடம், தேசப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியன் கொண்டிருக்கும் நன்றி உணர்வும், மரியாதையும் எனக்கும் உண்டு. இருந்தாலும் "ஒரு நாடு மாபெரும் விபத்தைச் சந்தித்தபோது, நமது தலைவர்கள், இந்தியாவின் ரத்தக்களறியான பிரிவினையைத் தவிர்க்க, வேறு மாதிரிச் செயல்பட்டிருக்க வேண்டுமோ?' என்று கேள்வி எழுவது இயற்கை.

ந்த விஷயத்தில் பிரபல சோஷலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கணிப்பை என்னால் ஏற்க முடிகிறது. டாக்டர் லோகியா தனது"த கில்டி மென் ஆஃப் பார்டிஷன்' என்ற புத்தகத்தில், ""மகாத்மா காந்தியைத் தவிர மற்றெல்லாத் தலைவர்களும், நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் களைப்படைந்து விட்டிருந்தார்கள்.

""இந்தியா சுதந்திரம் அடைவதை, தங்களது வாழ்நாளில் கண்டுவிட விரும்பினார்கள். காந்திஜியின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் பிரிவினைக்குச் சம்மதித்தார்கள். ஹிந்து, முஸ்லிம் பிரச்சனைக்கு, பிரிவினைதான் சிறந்த விரைவான தீர்வு என்று மௌன்ட் பாட்டன், அவர்களை நம்பவைத்து விட்டார். விரும்பிச் செய்யப்பட்ட தவறு இல்லை; சீர்தூக்கிப் பார்ப்பதில் நிகழ்ந்த தவறு என்பது வெளிப்படையானது'' என்று குறிப்பிடுகிறார்.

பிற்காலத்தில் பண்டித நேருவே ""நாங்கள் பிரிவினையைப் பற்றி முடிவு செய்தபோது, பிரிவினைக்குப் பிறகு இந்த இருதரப்பு பயங்கரக் கொலைகள் நிகழும் என்று நாங்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இம்மாதிரிச் சம்பவம் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நாங்கள் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டோம். அதற்காக நாங்கள் இருமடங்கு விலையைக் கொடுத்துவிட்டோம். முதலாவது அரசியல் ரீதியான – கொள்கை ரீதியான விலை. இரண்டாவது – நாங்கள் எதைத் தவிர்க்க முயற்சித்தோமோ அதுவே நடந்தது'' – என்றார்.

பின்னாளில் சர்தார் படேலும் கூட, ""பிரிவினைக்குச் சம்மதித்திருக்கவே கூடாது. சமுத்திரத்தை அல்லது நதியின் நீரை நீங்கள் பிரிக்கவே முடியாது'' என்று சொன்னார். இறுதி வரையில் பிரிவினைக்கு இணங்காமல் நின்றவர் மஹாத்மாகாந்தி மட்டும்தான்.
****

சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு...

சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு... – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 4


...இந்திய பிரிவினைக்கு இறுதி வரையில் இணங்காமல் நின்ற மஹாத்மா காந்தி, "மதத்தின் அடிப்படையில் இந்தியாவை இரண்டாகப் பிளப்பது, தெய்வத்திற்குப் புறம்பான செயல்' என்று நம்பினார். கடைசியில் அவரும் சம்மதித்தார். என்றாலும், அது தொடர்ந்து நிகழ்ந்த மதக் கலவரங்களை – ரத்தக் களறியை – பிரிவினையாவது முடிவுக்குக் கொண்டு வரட்டுமே என்கிற நம்பிக்கையால், விருப்பத்திற்கு மாறாக தந்த சம்மதம்.

துவேஷமும், வன்முறையும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அவர் தனது சக்தி மொத்தத்தையும் திரட்டி, அமைதியை, இணக்கத்தைப் பரப்ப கவனம் செலுத்தினார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் அது முழுமையானதல்ல. நவகாளி போன்ற பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஆனால் வேறு இடங்களில் நடந்த கொலைகளையும், இரண்டு பக்கத்து அகதிகள் பயணத்தையும் தடுக்கும் சக்தியற்றவராகிவிட்டார்.


பிரிவினை மற்றும் அதற்கு பிறகு கட்டவிழ்த்து விடப்பட்ட குரூரம், தடுக்க முடியாத சக்தியாக, மனித உணர்வுகளைக் கடந்தக் கட்டுப் பாடற்ற நிலையை அடைந்துவிட்டது. தலைவர்களிடம் பிரிவினையின் பாதிப்புகளை உணர முடியாத கூட்டு இயலாமை இருந்தது; அதனால் கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கணிக்க முடியாத அளவிற்கு, நமது தலைவர்களின் சிந்தையில் இயலாமை இருந்திருக்கிறது என்பதை இப்போது உணர முடிகிறது.


இப்படிச் சொல்வது அவர்களின் தோல்வியைக் குத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தலைவர்களும் மனிதர்கள்தான். அவர்களும் தவறு செய்ய நேரும் என்பதை உணரத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. வரலாறுதான் மனிதர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
...நான் பயணம் செய்த விமானம், டெல்லி பாலம் விமான நிலையத்தில் மதியம் வந்து இறங்கியது....


...எங்களது டெல்லி வருகையின் நோக்கம் இரண்டு அம்சங்களைக் கொண்டது. முதலாவது – திடீரென்று ஏற்பட்டு விட்ட மாற்றங்களைத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று ராஜ்பால்ஜியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இரண்டாவது – ராஜ்பால்ஜியை சிந்து திரும்ப வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். காரணம், அவர் அங்கு சென்றால் கைதுசெய்யப்படலாம்.

நாங்கள் கன்டோன்மென்ட் ஏரியாவிற்கு அருகில் வந்த போது, அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் ""உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் யாரையாவது தெரியுமா?'' என்று கேட்டோம். அந்த மனிதர், ஒரு கடையைக் காட்டி, ""அந்தக் கடைக்குப் போங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்'' என்றார்...
...கடைக்காரரின் மூலம் வசந்த்ராவ் வோக்கை சந்திக்க முடிந்தது. "ராஜ்பால்ஜி ஜோத்பூர் போய்விட்டார்; அங்கிருந்து கராச்சி போவார்' என்ற தகவலை வசந்த்ராவ் வோக் தெரிவித்தார். அந்தத் தகவல் எனக்குப் பதட்டத்தை அளித்தது. எப்படியாவது ராஜ்பால்ஜியைத் தொடர்புகொள்ள வேண்டும். சிந்துவிற்குத் திரும்பப் போகாமல் தடுக்க வேண்டும். அன்று இரவே முரளிதரும் நானும், ராஜ்பால்ஜியைச் சந்திக்க ஜோத்பூருக்கு ரயில் ஏறினோம்.

ஜோத்பூரை சென்று அடைந்தபோது, நான் சிந்துவிற்குத் திரும்பக்கூடாது என்ற தகவல் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. தவிர, சிந்துவைச் சேர்ந்த எல்லா பிரச்சாரக்குகளும் ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர்களும் ஜோத்பூர் வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல் அடுத்து வரும் நாட்களில் எங்களுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கராச்சியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி எதுவும் அறியாமல், ராஜ்பால்ஜி ஜோத்பூரில் இருந்து கராச்சிக்கு ரயிலில் போய்விட்டார்...

...பாகிஸ்தானில் இருந்து வந்த ஸ்வயம் சேவக்குகளுக்கு, இடம் பெயர்ந்து வரும் அகதிகளின் இடப் பெயர்வை முறைப்படுத்த உதவும் முக்கியமான வேலை தரப்பட்டிருந்தது. குடிபெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்கு உதவி செய்வதும் எங்கள் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை முழுமனதுடன் செய்வதில், எங்களை நாங்கள் ஈடுபடுத்திக்கொண்டோம்.

...கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பஞ்சாப் மற்றும் புதி தாக உருவான பாகிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த அகதிகளுக்கு நிவாரணப் பணிகளைச் செய்வது – ஆகியவைதான் அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பணியாக இருந்தது.

இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோள்களில் விழுந்தது என்பதை இங்கு விளக்க வேண்டும். "இந்தியாவை மதத்தின் பெயரால் துண்டாடத் திட்டமிட்ட முஸ்லிம் லீகின் செயல் முறியடிக்கப்படும்' என்று காங்கிரஸ் தலைவர்கள் ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் நம்ப வைத்தார்கள். ஆனால், மஹாத்மா காந்தியைத் தவிர பெரும்பாலான மற்ற தலைவர்கள், கொலைக்கு நிகரான அந்த முடிவிற்கு எதிர்ப்பில்லாமல் உடன்பட்டுவிட்டார்கள்.

பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இது அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள், மதவெறி ஊழித் தீயின் கோரத் தாண்டவத்தின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள். பிரிவினையை இனி தவிர்க்க முடியாது என்று அறிந்த நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்களைப் போலவே இந்திய பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் பாதுகாப்பு தேவையாக இருந்தது.

இந்திய அரசாங்கத்திடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் படேல், "எல்லா தனிநபர்களின் உயிரையும், மானத்தையும் காப்பாற்றுகிற நிலையில் அரசாங்கம் இல்லை' என்று அறிவிக்கிற அளவிற்குக் கடுமையானதாக மதக் கலவரம் இருந்தது. இந்த நிர்கதியான சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். களம் இறங்கியது.

சர்தார் படேல்

பிறகு, சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பாராட்டினார். 1948 ஜனவரி 7ஆம் தேதி ஹிந்து நாளிதழில் கீழ்கண்டவாறு செய்தி வெளியானது: "சர்தார் படேல் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) சுயநல நோக்கத்துடன் செயல்படவில்லை என்று உணர்ந்துகொண்டார். அமைதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களைச் செயல்பட வைத்திருக்கிறது... தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தசிலருக்கு அவர் எச்சரிக்கையையும் விடுத்தார்.

அதிகாரத்தில் இருக்கிற காங்கிரஸார், தங்களது அதிகாரத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸை நசுக்கிவிட தங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள். தடியைப் பயன்படுத்தி ஓர் அமைப்பை உங்களால் நசுக்கிவிட முடியாது. தடி, திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்குமானது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருடர்களோ, கொள்ளையர்களோ அல்ல. அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிற தேச பக்தர்கள்'.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக எனது பணி

ஜோத்பூர் கேம்ப் முடிந்த பிறகு, சிந்துவில் இருந்து வந்த நாங்கள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளைத் தொடர, ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டோம். அடுத்த பத்தாண்டுகளுக்கு ராஜஸ்தான் எனது பணியிடமாக இருந்தது. முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரக்காக மட்டும் இருந்து, இடையில் ஜன சங்கக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக ஆனேன்.

...அமைப்பு ரீதியாக எனது வேலைகள் இரண்டு. ஒன்று, ஏற்கெனவே இருக்கும் ஷாகாக்களை வலிமைப்படுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். இரண்டாவது, புதிய ஷாகாக்களை உருவாக்க வேண்டும். இதற்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது அவசியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பஸ் வசதி இருந்தது. ஆனால் இப்போது உள்ள சாலைகளோடு ஒப்பிட்டு அன்று இருந்த சாலைகளைக் கற்பனைக் கூட செய்ய முடியாது. சைக்கிள் அல்லது ஒட்டகத்தில் மட்டும்தான், மற்ற இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். ஆல்வார் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்திற்கு அடிக்கடி பயணம் செய்தது நினைவில் வருகிறது. ஆல்வாரில் இருந்து செல்லும் பஸ் தானா காஜி வரைதான் செல்லும். அங்கிருந்து 12 மைல்களுக்கு அப்பால், நாராயண்பூருக்கு ஒட்டகப் பயணத்தில் மட்டுமே செல்ல முடியும்.
*****

சீன ஆக்ரமிப்பு !

சீன ஆக்ரமிப்பு ! – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 7


1961 அக்டோபரில் நான் ஆர்கனைசர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆனேன். ...1950களின் தொடக்கம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது சர்வதேசிய கனவின் பகுதியாக சீனாவுடன் உணர்வு ரீதியான உறவிற்கு முயன்று கொண்டிருந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சம் எங்கள் கட்சிக்கு இருந்தது. 1950 அக்டோபரில் சீனா திடீரென்று திபெத்தை ஆக்ரமித்துக்கொண்டபோது, நமக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட மலைப்பகுதி எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டிருந்தோம். எங்களுடைய இந்தக் கவலையை துணை பிரதமர் சர்தார் படேல் முழுமையாகப் பகிர்ந்துகொண்டார்.

ஜவஹர்லால் நேரு


தனது மரணத்திற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பு 1950 நவம்பர் 7ஆம் தேதி சர்தார் படேல், பிரதமர் நேருவிற்கு கடிதம் மூலம் தனது கவலையைப் பதிவு செய்தார். "சீன அரசாங்கம் நமக்கு அமைதியை போதித்து நம்மை நீர்த்துப் போகச் செய்துவிட்டது... நாம் சீனாவை நண்பர்களாகக் கருதினாலும் கூட அவர்கள் நம்மை நண்பர்களாகக் கருதவில்லை. "தங்களோடு இல்லாத எல்லோரும் தங்களின் எதிரிகள்' என்பது கம்யூனிஸ மனப்பான்மை. இந்த முக்கிய அம்சத்தில் நாம் போதிய கவனம் கொள்ள வேண்டும்'.


...1962 அக்டோபரில் திடீரென்று சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. நேரு மனமொடிந்து போனார். ஒரு நண்பனின் துரோகமான நடவடிக்கை என்பதாகவே அதை அவர் பார்த்தார். எனினும் அவரது தவறான அணுகுமுறையின் காரணமாக, இந்தியா ராணுவ ரீதியாக தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் போரில் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது.


அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும், 1962ல் சந்தித்த தோல்வியின் கசப்பான நினைவு, இந்தியர்களின் ஒட்டுமொத்த நினைவில் இருந்து துடைக்கப்படாமல் நீடிக்கிறது.


...சீன ஆக்ரமிப்பு இந்திய கம்யூனிஸ்ட்களின் எல்லை கடந்த விசுவாசத்தை, திரையை விலக்கி உலகத்திற்குக் காட்டியது. போரின்போதும், இந்தியாவின் தோல்விக்குப் பிறகும், இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவை ஆதரித்தார்கள். ...ஆர்.எஸ்.எஸ். சுயம் சேவக்குகளும் ஜனசங்கத் தொண்டர்களும் நாடு முழுக்க இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தார்கள். போர் ஆதரவு நிதி திரட்டினார்கள். பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் தேச பக்தி உணர்வை எழுப்பக் கடுமையாக உழைத்தார்கள்.


நேரு சகாப்தத்தின் முடிவு

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் 1962ஆம் ஆண்டின் சீன ஆக்ரமிப்பு பல வழிகளிலும் முக்கியத் திருப்பமாக ஆயிற்று. போரின் முடிவு பண்டித நேருவின் மன எழுச்சியை சீர்குலைத்துவிட்டது. கடைசி வரை அவரால் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. 1964 மே 24ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு சகாப்தம் முடிந்து போயிற்று.


அவரது ஆளுமை மற்றும் சாதனைகள் பற்றிய எனது மரியாதை இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. சந்தேகம் இல்லாமல் நேரு ஒரு மிகப்பெரிய தேசபக்தர்தான். இந்திய சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட போராட்டமும் செய்த தியாகமும் மிகப் பெரியவை. 1947ல் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரதமர் பதவிக்கு சர்தார் படேலுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது.


மகாத்மா காந்தி சர்தார் படேலுக்கு பதிலாக நேரு பிரதமர் ஆவதை விரும்பினார். அதனால் நேருவிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு நேருதான் உறுதியான அடிப்படைகளை உண்டாக்கினார். சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆரம்ப வருடங்களில் இந்தியாவின் தொழில் மாறுதலால், பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின...


வரலாற்றில் நேருவின் மிகப்பெரிய தோல்விகள் என்றால், அவை 1948ல் பாகிஸ்தான் போரையும், 1962ல் சீனப் போரையும் கையாண்ட விதத்தில் கடைப்பிடித்த குறைகள்தான். காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முதல் முயற்சியை முறியடிக்க அவர் உறுதியாகவும், சமரசத்திற்கு இடமின்றியும் செயல்பட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனை அப்போதே முடிந்து போயிருக்கும்.


...நேருவின் இறுதி வருடங்களில் "நேருவிற்குப் பிறகு யார்?' என்ற கேள்வி விவாதப் பொருளாகிவிட்டது. அதற்கு விடையாகக் கிடைத்தவர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் அர்ப்பணிப்பு மிகுந்த ஒரு காங்கிரஸ்காரர். எளிமைக்கும், பண்பிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் பெயர் போனவர். அவரது தனி மனித இயல்புகள் நாட்டில் அவருக்கென்று ஒரு சிறப்பான மரியாதையை, குறுகிய காலத்தில் பெற்றுத் தந்தன...

லால் பகதூர் சாஸ்திரி


1965 ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானின் ராணுவம் எதிர்பாராத அதிரடி நடவடிக்கையின் மூலம் கட்ச்சுக்குள் நுழைந்து நமது பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மத்தியஸ்த முயற்சியின் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது...


பாகிஸ்தான் 1965 செப்டம்பரில் காஷ்மீரில் நடத்தப் போகிற முழு அளவிலான தாக்குதலுக்கு ஒரு முன்னோட்டமே கட்ச்சில் நிகழ்த்திய அத்துமீறல். 1962ல் சீனாவிடம் தோல்வி கண்ட நிலையில், இந்திய ராணுவம் தன்னை தற்காத்துக்கொள்வது இயலாது என்று இஸ்லாமாபாத்தின் ராணுவ ஆட்சியாளர்கள் நம்பினார்கள்.

இந்தச் சிக்கலை சாஸ்திரி எஃகின் உறுதி போன்ற மனதுடன் எதிர்கொண்டார். "படை படையை எதிர்கொள்ளும்' என்று தேசத்திற்கு உறுதி அளித்தார். "முன்னேறுங்கள், முன்னேறித் தாக்குங்கள்' என்று ராணுவத்திற்கு கட்டளையிட்டார். "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்தின் மூலம் நாட்டில் தேசபக்தி என்னும் நெருப்பை மூட்டினார். இந்திய ராணுவம் முன்னேறி கிட்டத்தட்ட லாகூரின் எல்லையைத் தொட்டுவிட்டது.


மூன்று வாரப் போரின் முடிவில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்ட போது சர்வதேச அரங்கில் இருந்து தரப்பட்ட அழுத்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமத் அயூப்கானுக்கும் இடையில் சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவின் தாஷ்கண்டில் 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடந்தது.


சோவியத் யூனியனின் பிரதமர் அலேக்ஸி கோஸிஜின் இருதரப்புக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டார். ஜனசங்கம் தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையை எதிர்த்தது. அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையில் எங்கள் கட்சியின் குழு பிரதமர் சாஸ்திரியைச் சந்தித்து தாஷ்கண்ட் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டாம் என்று வலியுறுத்தியது.

பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய முக்கிய இரண்டு மையங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியிருந்தது. அந்தப் பகுதிகளை இந்தியா பாகிஸ்தானுக்குத் திரும்பத் தந்துவிட வேண்டுமென்று தாஷ்கண்ட் மாநாட்டில் சர்வதேச நிர்பந்தம் பிரயோகிக்கப்படும் என்று நாங்கள் அஞ்சினோம்.


தாஷ்கண்டுக்குப் புறப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன், ஆர்கனைசர் பத்திரிகைக்குப் பேட்டி காண்பதற்காக சாஸ்திரியை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். ஹாஜ்பீர் மற்றும் தித்வா பகுதிகளை பாகிஸ்தானுக்குக் கொடுத்து விட வேண்டும் என்று இந்தியா நிர்பந்திக்கப்படும் என்கிற பரவலான அச்சம் நிலவுவது பற்றி நான் அவரிடம் தெரிவித்தேன். பிரதமரின் பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "நிச்சயமாக அப்படி நிகழாது' என்றார். 1966 ஜனவரி 10ஆம் தேதி சாஸ்திரிக்கும் அயூப்கானுக்கும் இடையில் கூட்டறிக்கை கையெழுத்தானது. துரதிர்ஷ்டவசமாக, எது நடக்காது என்று சாஸ்திரி சொன்னாரோ அது நடந்தது.


போர்க்களத்தில் இந்திய ராணுவம் ஏற்கெனவே தனது மேலான பலத்தை நிரூபித்து இருந்தது. அந்த வலிமையான நிலையில் நின்று சாஸ்திரி பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். பேரத்தில் எந்த ஒரு சமரசத்தையும் ஏற்க இறுதி வரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோசிஜின் சாஸ்திரியிடம் "நீங்கள் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு தந்தாக வேண்டும்' என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சாஸ்திரி "அப்படியென்றால் நீங்கள் வேறு ஒரு பிரதமரோடுதான் பேச்சு நடத்த வேண்டும்' என்றார்.


தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சாஸ்திரி, இந்தியப் படைகளை அந்த இரண்டு முனைகளில் இருந்தும் வாபஸ் பெற மர்மமான முறையில் சம்மதித்துவிட்டார். அதற்குப் பதிலாக எல்லைப் பிரச்சனைகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பாகிஸ்தானிடம் இருந்து மேம்போக்கான உறுதி பெறப்பட்டது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் முடிவு சாஸ்திரிக்கு விருப்பமற்றதாக இருந்தது. அனேகமாக அவரது மனசாட்சி குற்ற உணர்வால் கனத்துப் போயிருக்க வேண்டும். கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் ஜனவரி 11ஆம் தேதி தாஷ்கண்டில் சாஸ்திரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்...

*****

பங்களாதேஷ் உதயம்

பங்களாதேஷ் உதயம் – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை 10


தெற்காசியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டதாக இருக்கப் போகிறது – என்ற முன்னறிவிப்பு போல 1970கள் துவங்கியது. பக்கத்து நாடான பாகிஸ்தானில் தேர்தல் தகராறாகத் துவங்கிய பிரச்சனை, தெற்காசியாவின் பூகோள அரசியல் நிகழ்வாக மாற்றம் கொண்டது.

...1947ல் பாகிஸ்தான் உருவானது. வரலாற்றைத் திரித்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பூகோள ரீதியில் கேலிக்கூத்தாக அமைந்தது. மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் 1200 மைல் இடைவெளியுடன் தனித்தனியாக இருந்தன. இரண்டு பாகிஸ்தான்களுக்கும் இடையில் இந்தியா!

இந்த நிலையில், மேற்குப் பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் – ஒரே நாடு என்ற நினைப்பைத் தாக்கித் தகர்ப்பது போல – கிழக்குப் பாகிஸ்தான் மக்களின், நியாயமான எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்தும், நசுக்கியும் வந்தன. 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அசெம்பிளிக்கு நடந்தத் தேர்தலில், மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றதைவிட, அதிக வெற்றிகளை கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின், அவாமி லீக் கட்சி பெற்றது. ஆனால், ராணுவ சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் யாகியா கான், முஜிபுர் ரஹ்மானை ஆட்சி அமைக்க அனுமதி மறுத்துவிட்டார். அதனால், மோதல் தவிர்க்க முடியாத உச்சகட்டத்தை அடைந்தது.


பாகிஸ்தான் ராணுவ ஆட்சி முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தது. கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ந்து எழுந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தை, வன்முறை கொண்டு நசுக்கியது. தூரத்தில் இருந்த தனது கிழக்குப் பாதி நாட்டின் மீது, ஒரு காலனி ஆதிக்க சக்தி போலத் தாக்குதல் நடத்தி, மனித நாகரீகமற்ற போக்கை அது உறுதி செய்தது. வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. கிணறுகளில் விஷம் கலக்கப்பட்டது. பயிர்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதிர்ச்சியூட்டும் வகையில் போர்க்காலக் குற்றத்தின் ஒரு பகுதியாக, ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.


நன்றாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் கூற்றுப்படி, ஜெனரல் யாஹியா கான், தனது ராணுவ அதிகாரியிடம், ""கிழக்குப் பாகிஸ்தானில் உள்ளவர்களில் முப்பது லட்சம் பேர்களைக் கொன்று விடுங்கள்; மிச்சம் இருப்பவர்கள் நமக்கு அடங்கி வாழ்வார்கள்'' என்று கூறியிருக்கிறார். அந்த ஆணை நிறைவேற்றப்பட்டது. சுமார் முப்பது லட்சம் பேர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுடன், 1947ல் பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த இருதேசக் கோட்பாடும் கொல்லப்பட்டது என்பதே உண்மை...


கிழக்கு வங்கத்தில், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளால், ஏராளமான மக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தது, இந்த விவகாரத்தின் மற்றொரு பரிமாணம். அப்படி வந்தவர்களின் எண்ணிக்கை 1971 நவம்பர் மாதத்தில் 1.5 கோடியைத் தொட்டது. சுமார் ஒரு லட்சம் பேரைக் கொண்ட "முக்தி பாஹிணி' கொரில்லா படையினர் – பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து வீரம் நிறைந்த போரை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவர்கள் ராணுவ நிபுணத்துவத்தில் பின்தங்கி இருந்தாலும், மனபலம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். உலகெங்கும் சுதந்திரத்தை விரும்புகிற மக்களிடம் – குறிப்பாக இந்திய மக்களிடமிருந்து தார்மீக ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அண்டை நாட்டில் மனித இனத்திற்கு எதிராகப் பெருகி வரும் கொடுமைகளை – அதனால் இந்தியாவிற்கு நேரடியாக ஏற்பட்ட பாதிப்பை, பெரிய நாடுகளின் ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்துகொள்ளும்படி செய்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தன...

1971 சம்பவங்களின் தொடர்ச்சியாக, இந்தியாவின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்கத் தயாராகிவிட்டது. 1971 டிசம்பர் 3ஆம் தேதி போர் துவங்கியது. அது, பாகிஸ்தானின் தோல்வியிலும், பங்களாதேஷின் விடுதலையிலும் முடிந்தது. நமது ராணுவத்தின் அற்புதமான மேல்மட்ட திட்டமிடல், போர்க்களச் செயல்பாடு ஆகியவற்றால், இந்திய ராணுவம் பத்தே நாட்களில் டாக்காவைச் சூழ்ந்து கொண்டது. 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை, போர்க் கைதிகளாக இந்தியா சிறை பிடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சரணடைந்தோரின் எண்ணிக்கையில் இது மிகவும் பெரிது. முடிவில் டிசம்பர் 16ஆம் தேதி, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது; நிபந்தனையின்றிச் சரணடைந்தது.

...போர் முடிந்தது. போர் நடந்த சமயத்தில் காட்டிய உறுதிக்காக, வீரம் மிகுந்த தலைமைப் பண்புக்காக – பிரதமர் இந்திரா காந்தி வெகுவாகப் புகழப்பட்டார். அந்தப் புகழுக்கு அவர் தகுதியானவராக இருந்தார். ஜனசங்கத்தைச் சேர்ந்த நாங்கள், தேசியப் பிரச்சனைகளில், குறிப்பாக, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் முழு மனதோடு அரசாங்கத்தை ஆதரித்தோம். தேசத்தின் பெருமை மிகுந்த அந்தத் தருணத்தில், பிரதமரைப் பாராட்டுவதில் எங்கள் கட்சி பின்தங்கி இருக்கவில்லை. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அடல்ஜி, இந்திரா காந்தியை மனம் திறந்து பாராட்டினார்.

1971ஆம் ஆண்டு போரில் கிடைத்த வெற்றிக்கு இந்திரா காந்தியைப் பாராட்டிப் பேசும் போது, அடல்ஜி, அவரை துர்கா தேவியுடன் ஒப்பிட்டு "துர்கா' என்று புகழ்ந்ததாகப் பரவலான ஒரு கருத்து பரவியது. அது இன்று வரை நீடிக்கவும் செய்கிறது. ஆனால், எனது நினைவுக்கு எட்டிய வரையில் அவர் அந்த வார்த்தையை ஒரு போதும் பயன்படுத்தவில்லை. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்றால், 1971ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த ஜனசங்க தேசிய மாநாட்டில், செயற்குழு உறுப்பினர் பி.ஜி. தேஷ்பாண்டே– இவர் இந்திரா காந்தியின் தீவிர அபிமானி– பேசும்போது, ""இந்திராஜி, நாட்டை தைரியத்துடன் வழி நடத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பங்களாதேஷ் விடுதலை பெற நீங்கள் உதவினால், எதிர்கால சந்ததிகள் உங்களை "துர்கா'வாக நினைவில் கொள்ளும்'' என்று குறிப்பிட்டார்.

சிம்லா உடன்படிக்கையும் 1971ஆம் வருடம் போர் தந்த படிப்பினைகளும்

1972ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திரா காந்தியும், ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் (ஜெனரல் யாகியா கானின் விலகுதலுக்குப் பிறகு, புட்டோ பாகிஸ்தான் பிரதமராக ஆகிவிட்டிருந்தார்) இருநாடுகளுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காக, சிம்லாவில் சந்தித்தார்கள். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்பட்ட படிப்பினையால் ஜனசங்கம், சிம்லாவில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அரசாங்கத்திற்கு நினைவூட்ட அக்கறை எடுத்துக்கொண்டது...

ஜனசங்கக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அடல்ஜி, சிம்லாவில் இந்திரா காந்தியைச் சந்தித்தார். காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நிரந்தரமான உடன்பாட்டை அடையாமல், போர்க் கைதிகளை விடுதலை செய்வதையோ, இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதையோ ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார். வருத்தம் தரும் விதத்தில், சிம்லா ஒப்பந்தமும் இன்னொரு துரோகமாகவே மாறியது. ராணுவக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்த ஒன்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைத் திரும்பத் தரவும், ராணுவக் குற்றவாளிகள் அனைவரையும் மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான், பதிலுக்கு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் சொற்பமானவை; பலனற்றவை, பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் அதனால் மீற முடிபவை!....

அப்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நான், ""இந்திரா காந்தி, வெற்று வார்த்தைகளின் குவியலுக்காக ஒரு பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டார்'' என்று குறிப்பிட்டேன்....

போர் முடிந்த சிறிது காலத்திற்குள், 1972 மார்ச் மாதத்தில் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தப்படாமல், தனியே நடத்தப்பட்டன. போரினால் ஏற்பட்ட வெற்றியின் அலையால் காங்கிரஸ் கட்சி, பெரும்பாலான மாநிலங்களிலும் பெரிய வெற்றிகளைப் பெற்றது.
ஜனசங்கத்தின் தேர்தல் முடிவுகள் மோசமாக அமைந்தன. கட்சியின் தலைவர் என்ற முறையில் அடல்ஜி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1972ஆம் ஆண்டு மே மாதத்தில், பாகல்பூரில் நடந்த தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்காமல், கட்சியின் மூத்தத் துணைத் தலைவர் பாய் மஹாவீரைத் தலைமை ஏற்கச் சொன்னார். ""நான் இப்படிச் செய்வதற்குக் காரணம், ஒளிவு மறைவற்ற விவாதம் நடைபெறவும், பிரதிநிதிகள் சுதந்திரமாகத் தலைமையை விமர்சிக்கவும்தான்'' என்றார் அடல்ஜி!
எனினும் அடல்ஜியின் மனதில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தீன்தயாள்ஜியின் மறைவுக்குப் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் தலைவராகப் பணிபுரிந்துவிட்டார். புதிய தலைவரைத் தேடும் முயற்சி நீண்டு கொண்டிருந்தது. அடல்ஜி தன்னிடமிருந்து பொறுப்புகளை ஏற்கும்படி, என்னை வலியுறுத்துவதில் வந்து அது முடிந்தது.

மீண்டும் ஒரு முறை, என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வந்தது!

ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம்

ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 17


...சோமநாத ஆலயம் சில முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உண்டாக்கி வளர்த்த, மத வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் சாட்சியமாக திகழும் அதே நேரத்தில், அதை எதிர்த்து நின்ற மக்களின் தைரியத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பல தேசிய தலைவர்கள் சோமநாத் ஆலயத்தை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று எடுத்த முடிவு, முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் அல்ல. நமது சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, கூடி வாழும் தன்மைக்கு விருப்பமின்மையை வலியுறுத்துகிற போக்கிலும் அல்ல.


...சோமநாத் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, ஜோதிர்லிங்கமும் நிறுவப்பட்டு விட்ட நிலையில், அதைத் துவக்கி வைக்க இந்தியாவின் முதல் குடியரசுதலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை, முன்ஷி அழைத்தார்.
...1990ல், அயோத்தியா இயக்கத்திற்கு மக்களின் ஆதவைத் திரட்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் ரத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தபோது, அந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பயணத்தின் ஆரம்ப இடம் சோமநாத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று உடனே தேர்வு செய்தேன்.


...ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு அவ்வளவு பெரிய வீச்சும், வலிமையும் எதனால் கிடைத்தது? இந்தியாவின் தேசிய வாழ்வில் ராமருக்கும், ராமாயணத்திற்கும் இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால், அதற்கு விடை காண்பது எளிது. பல நூற்றாண்டுகளாக ராமாயணமும், மகாபாரதமும் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையிலும், நற்பண்புகளின் முறையிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. ராமர் உதாரணமாகத் திகழ்ந்த அரசர். அதனால்தான், மஹாத்மா காந்தி "ராம ராஜ்யம் என்ற நல்லாட்சியை இந்தியாவின் கொள்கை' என்று வலியுறுத்தினார். ராமர் உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதப் பிறவியாகவும் திகழ்ந்தார். அதனால், மனிதர்களில் அவர் ஒரு "உதாரண புருஷன்' என்று புகழப்பட்டார்.


...சோமநாத்தைப் போலவே ராமர் பிறந்த அயோத்தியும் அந்நியப் படையெடுப்பாளர்களின் தாக்குதல் இலக்காக ஆனது. முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபர், அயோத்தியைத் தாக்கினார். 1528ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியைக் கட்டும்படி தனது தளபதி மீர்பாகிக்கு பாபர் கட்டளையிட்டார். அதனால், அந்த மசூதிக்கு "பாபர் மசூதி' என்று பெயர் வந்தது. மீர்பாகி, ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து விட்டு, அந்த மசூதியைக் கட்டினார் என்பது ஹிந்துக்களின் பரவலான நம்பிக்கை!

வெல்லப்பட்டவர்கள் தங்களது தோல்வியின் வரலாற்றை எழுதுவது அரிது. வென்றவர்களோ தங்களது வெற்றியை எப்போதும் பதிவு செய்து வைத்திருப்பார்கள் என்பது மிகவும் சரியே. அந்த வகையில் "அயோத்தியைப் பற்றி முகமதியர்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பதினாறாவது நூற்றாண்டின் இறுதியில்அபுல் ஃபாஸல் எழுதிய "அய்ன்ஐஅக்பரி' என்ற நூல், "அயோத்தி அமைந்திருக்கும் பிரதேசமான அவாத்தில் திரேதா யுகத்தில் கட்டப்பட்ட ராமச்சந்திரர் கோவிலில், ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது' என்கிறது.

...அதே போல "ஹடிக்வாஐஸஹாடா' என்ற மிர்சாஜான் (1856) எழுதிய புத்தகம் "...ஜன்மஸ்தானில் கோவில் இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம். அதற்குப் பக்கத்தில் சீதாவின் ரஸோய் இருந்தது. ராமரது மனைவியின் பெயர் சீதா. எனவே, அந்த இடத்தில் மீர் அஷிகானின் வழி காட்டுதல்படி பாபர் பாதுஷா பெரிய மசூதியைக் கட்டினார்' என்று குறிப்பிடுகிறது.
அயோத்யா தகராறின் வரலாற்று மூலங்கள்!

....இந்தப் புனித ஸ்தலத்தை மீட்க ஹிந்துக்கள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன. ராமஜென்ம பூமி அவர்களுக்கு மத ரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. எனினும் முஸ்லிம்களுக்கு அந்த இடம், மத ரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. முஸ்லிம் ஆட்சியின் நீண்ட வரலாற்றின் போது, ஹிந்துக்கள் அயோத்திக்குத் தொடர்ந்து புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதன் முக்கியத்துவம், இடைக்கால வரலாற்றின் காலத்தில் ஒரு முஸ்லிம் ஆக்ரமிப்பாளரால் பெறப்பட்ட வெற்றியின் சின்னம் என்பதைத் தவிர வேறு இல்லை.

.....சுதந்திரத்திற்கு முன்னும் பிறகும் நீண்டகாலமாக ராமஜென்ம பூமியை மீட்கும் முயற்சியை ஹிந்துக்கள் சட்ட ரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள். 1885ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பிறகு உள்ளூர் ஹிந்துத் தலைவர் மஹந்த் ரகுபார்தாஸ் ஃபைஸாபாத் மாவட்ட நீதி மன்றத்தை அணுகி, "ராமஜென்ம பூமியில் ஆலயம் நிறுவ உத்தரவிட வேண்டும்' என்று கோரினார். 1886ஆம் ஆண்டு கர்னல் எஃப்.ஈ.எ. ராமியர் என்ற பிரிட்டிஷ் நீதிபதி, "எல்லா கட்சிக்காரர்கள் முன்னிலையில் தகராறுக்கு உட்பட்ட அந்த இடத்தை நேற்று நான் பார்வையிட்டேன். சக்ரவர்த்தி பாபரால் கட்டப்பட்ட மசூதி, அயோத்தியின் மேற்கு மற்றும் தெற்கு எல்லையில் இருப்பதைக் கண்டேன். ஹிந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அந்தச் சம்பவம் 356 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஹிந்துக்களின் குறைகளை ஏற்று இப்போது முடிவு சொல்வது, மிகவும் காலம் கடந்த ஒன்று. இப்போது உள்ள நிலையே தொடரலாம் என்பதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும். இம்மாதிரி ஒரு வழக்கில் புதிதான எந்த ஒரு கண்டுபிடிப்பும், எந்த நன்மையையும் விளைவிப்பதை விட, தீமையைத்தான் விளைவிக்கும்' என்று தீர்ப்பளித்தார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு சோமநாத் ஆலயத்தைக் கட்ட நேருவின் அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதே போல ஜென்ம பூமியிலும் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அயோத்தி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், புதிய வேகத்துடன் தங்களது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 1949ஆம் ஆண்டு டிசம்பர் 2223 அன்று இரவு சிலர், 1934 முதல் பூட்டி மூடப்பட்டுக் கிடந்த தகராறுக்கு உட்பட்ட கட்டிடத்தில், ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை ஸ்தாபித்து விட்டனர்.
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்ரேட்டாக இருந்த கே.கே. நாயர், அந்தச் சிலைகளுக்கு கர்ப்ப கிரஹத்தில் தினசரி பூஜை நடக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கையில் சிலைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. சிலைகளுக்கு பூஜை செய்யும் ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. அந்தத் தடை உத்தரவை உறுதி செய்தபோது, ஃபைஸாபாத் சிவில் நீதிபதி... "குறைந்தபட்சம் 1936ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை முஸ்லிம்கள் மசூதியாகப் பயன்படுத்தவில்லை. அங்கு தொழுகையும் நடத்தவில்லை. பிரச்சனைக்குரிய இடத்தில் ஹிந்துக்கள் தங்களது பூஜையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சில முஸ்லிம்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், 1955 ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் ஹிந்துக்களின் கட்டுப்பாடற்ற வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றம், தகராறுக்கு உட்பட்ட சொத்தின் வழக்கு பற்றிக் குறிப்பிடும்போது, "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வகையான வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் நல்லது. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு இது முடிவடையாமல் தொடர்வது வருந்தத்தக்கது' என்றது.

அந்த வழக்கு இன்று வரையிலும் முடியாமல் தொடர்வது எவ்வளவு வேடிக்கையானது? எவ்வளவு வருந்தத்தக்கது?

...ராஜீவ் காந்தியின் அரசாங்கம் ராம ஜென்ம பூமி இயக்கத்தை ஆதரித்த சம்பவமும் நடந்தது. 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நாடெங்கிலுமிருந்து அயோத்திக்கு புனித செங்கற்களைக் கொண்டு வரும் திட்டத்தை விச்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. நவம்பர் 10ஆம் தேதி கோவில் கட்ட அடித்தளம் எழுப்பவும் அது அறிவித்திருந்தது. கட்டிடத்திற்கு அருகில் உள்ள காலி இடம் பிரச்சனைக்கு உட்பட்டது அல்ல; அங்கு பூமி பூஜை நடத்தத் தடையில்லை என்று மத்திய, மாநில காங்கிரஸ் ஆட்சிகள் அறிவித்தன. ஆனால், அதற்கு முந்தின தினம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வேறு மாதிரி கூறியிருந்தது. ராமர் கோவி லைக் கட்டும் பணியின் தொடக்கம் நடந்தது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமேஸ்வர் சோபால் என்ற ஹரிஜன், முதல் செங்கல்லை எடுத்து வைத்தது விசேஷமான ஒன்று. எனினும், அடுத்த நாளே அரசாங்கம் கட்டுமானத்தை நிறுத்த உத்திரவிட்டது.

...அயோத்திப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி திடீர் திடீரென்று தன் நிலையை மாற்றிக்கொண்ட மனப்பான்மை வேறு ஒரு கருத்தை உருவாக்கியது. ஷா பானு வழக்கில் முஸ்லிம்கள் தந்த அழுத்தத்தால், அவர்களிடம் அரசு அடி பணிந்துவிட்டது என்ற கருத்து பரவி நின்ற நிலையில், அதைச் சமன்படுத்த ராஜீவ் காந்தி அயோத்திப் பிரச்சனைக்கு ஆதரவு தர முன்வந்தார் என்பதே அந்தக் கருத்து.

...அயோத்திப் பிரச்சனை அகில இந்தியப் பிரச்சனையாக வடிவெடுக்க அது பெரிதும் துணை புரிந்தது. சில முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் சச்சரவுக்கு உட்பட்ட இடத்தின் கதவுகளைத் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயோத்திப் பிரச்சனைக்கு தேசிய அளவில் கவனத்தை உண்டாக்கியது. தேசிய அளவிலான எந்த ஒரு முஸ்லிம் அமைப்புமல்ல – சிறிய ஒரு அமைப்புக் கூட 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்திரவை மாற்றக் கோரி, 1986 வரையில் போராட்டம் நடத்தியதில்லை. ஷா பானு பிரச்சனைக்குப் பிறகு சூழ்நிலை மாறிவிட்டது.

அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தால், 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவையும், 1986ஆம் ஆண்டின் நிர்வாக ஆணையையும் மாற்றிவிட முடியும் என்று முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் இப்போது நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்காக அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டி துவக்கப்பட்டது.
*****

அயோத்தி பிரச்சனை!

அயோத்தி பிரச்சனை! – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 20


டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் நடந்தவை, வரலாற்றை மாற்றும் சம்பவங்களில் அசாதாரணமான வகையைச் சேர்ந்தவை. ஹிந்துக்களின் புனித நகரங்கள் ஒன்றின் நடுவில், நானூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த சச்சரவிற்கு உட்பட்ட ஒரு கட்டிடம், "கடவுள் ராமரது பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது' என்று ஹிந்துக்களால் நம்பப்பட்ட கட்டிடம், தேசிய அடிமைத் தனத்தின் சின்னமாகவும், மத வெறியின் சின்னமாகவும் பார்க்கப்பட்டு வந்த கட்டிடம், அந்த இடத்தின் உரிமையை மீட்க நீண்ட நெடிய, தொடர்ச்சியான போரை ஹிந்துக்கள் நடத்தக் காரணமாக இருந்த கட்டிடம், கடைசியில் மாபெரும் மக்களுடைய ஆவேசத்தின் விளைவாக தரைமட்டமாகிவிட்டது.


...நான் அமைதி இழந்து, செய்வதறியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். எனது நிலையை உணர்ந்து கொண்ட பிரமோத் மஹாஜன், ""அத்வானிஜீ! நீங்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் மேலும் விரக்தி அடைந்துவிடுவீர்கள். நாம் லக்னோவிற்குத் திரும்பி விடலாம்'' என்றார். மாலை ஆறு மணி அளவில் நாங்கள் அயோத்தியில் இருந்து புறப்பட்டோம். நானும் அப்போது வகித்து வந்த ஒரே பதவியான, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவது என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன். லக்னோவைச் சென்று அடைந்ததும் எனது ராஜினாமா கடிதத்தை ஃபேக்ஸ் மூலம், மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தேன்.


...அயோத்தியில் நடந்த சம்பவங்கள் பற்றிய அரசு தரப்பின் வெள்ளை அறிக்கையை, நரசிம்ம ராவ் அரசு 1993 பிப்ரவரி மாதம் வெளியிட்டது. உத்திரப் பிரதேச அரசின் செயலற்றிருந்த குற்றத்தையும், பொறுப்பைத் தட்டிக்கழித்த தன்மையையும் அது குற்றம்சாட்டியது. முதலமைச்சர் கல்யாண் சிங், "வலிமையைப் பயன்படுத்தக்கூடாது' என்று போலீஸ்துறைக்கு உத்திரவிட்டிருந்ததால், நடந்த சம்பவங்களுக்கு அவரைப் பொறுப்பாக்கியது. இந்த விஷயத்திலும் காங்கிரஸ் மத்திய அரசின் கூற்றில் முழு உண்மை இல்லை. டிசம்பர் 6ஆம் தேதி கடைசி டோம் இடித்து வீழ்த்தப்பட்ட போது, மாலை மணி 4.50. கல்யாண் சிங் 5.30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.


அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் அவரது அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து, உத்திரப்பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கிவிட்டது. கர சேவகர்கள் டோம்களை இடித்த பிறகு, சச்சரவிற்கிடமான அந்தக் கட்டிடத்தின் மற்ற பகுதிகளையும் தொடர்ந்து இடித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் சிதைவுகளை எல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அயோத்தி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகுதான் இவை நடந்தன.


இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, அன்று இரவு முழுவதும் கர சேவகர்கள், அங்கு தாற்காலிகக் கோவில் எழுப்புகிற பணியில் முழு கவனத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வேலையை முடித்த பிறகு ராம்லாலா, ஸீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமன் சிலைகளைக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்தனர். உத்திரப் பிரதேசத்தை குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததற்குப் பிறகு, அயோத்தியில் நடந்துகொண்டிருக்கும் எல்லாமும் டெல்லியில் இருந்த பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தெரிந்துகொண்டே இருந்தது. அயோத்தியில் நடந்து கொண்டிருந்தவற்றை மத்திய அரசு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல, சச்சரவிற்குட்பட்ட இடத்தில் தாற்காலிக கோவில் எழுப்ப கரசேவகர்களை அனுமதித்தது என்பதே உண்மை.


சச்சரவிற்குட்பட்ட கட்டிடம் இருந்த பகுதியில், சச்சரவிற்கு அப்பாற்பட்ட இடத்தில் கர சேவகர்கள் கர சேவை செய்ய அனுமதி தராத அரசு, சச்சரவிற்கு உட்பட்ட இடத்திலேயே கர சேவை செய்ய அனுமதி அளித்ததுதான் வேடிக்கையான விநோதம்! இது அடையாள கர சேவை அல்ல. ராம ஜென்ம பூமியில் தாற்காலிகமானது என்றாலும், ராமருக்குக் கோவில் கட்டி, சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


உத்திரப் பிரதேசம் குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகுதான், கோவில் உண்டாகி விட்டதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, 1993ஆம் ஆண்டு உத்திரவின் மூலம் அலஹாபாத் உயர் நீதிமன்றம், தாற்காலிக கோவிலில் ராம்லாலா சிலைகளைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளித்தது.

டிசம்பர் 6ஆம் தேதி சம்பவம் முடிந்ததுமே, சில அரசியல் தலைவர்கள் "பாப்ரி மசூதியை' மறுபடியும் கட்ட வேண்டும் என்றனர். டிசம்பர் 7ஆம் தேதி பிரதமர் நரசிம்ம ராவே அந்த உறுதியை அளித்தார். ராமருக்கு தாற்காலிகமாகக் கோவில் எழுப்ப ஏற்கெனவே கர சேவகர்களை அனுமதித்துவிட்டு, மசூதியை மறுபடியும் கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்ததுதான் வினோதம். இதன் விளைவாக அவரது கட்சி ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகத்தினரின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.

...எனது ராம ரத யாத்திரை நடந்து சுமார் பத்தொன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ராமஜென்ம பூமி ஆலயத்தின் கதவுகளை, ராஜீவ் காந்தி திறந்துவிட அனுமதித்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ராஜீவ் காந்தி அரசின் அனுமதியுடன், ராமருக்கு மாபெரும் கோவில் எழுப்ப பூமி பூஜை நடந்து, பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன இந்தியாவின் அரசியல் வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க முடியாத அடையாளங்கள் இவை என்று அயோத்தி இயக்க ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் கணிக்கப்படுகிறது. கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் நம்பும் இடத்தை மீட்டெடுக்க நடத்தி வந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராட்டத்தில், இவையெல்லாம் மைல் கற்கள். எல்லாம் சில பகுதிகள்.'

ஒரு துண்டு இடத்திற்காக அத்வானி போராட வேண்டுமா, இன்னும் ஒரு கோவிலைக் கட்ட வேண்டியது அவசியமா என்று சில ஹிந்துக்கள் பேசுவது எனக்குத் தெரியும். இவர்களில் பலர், தனிப்பட்ட முறையில் மற்ற யாரையும் போல நல்ல மனிதர்கள். தேச பக்தி கொண்டவர்கள். இவர்களின் பேச்சும்கூட ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை என்னும் சிறப்பியல்புகளின் வெளிப்பாடுதான். அவர்களது கருத்து சுதந்திரத்தையும் அதை வெளிப்படுத்த அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும், நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு எனது கேள்வி இதுதான் : அவர்கள் இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தின் பெரும்பான்மையினரது கருத்துக்களை, நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்கிறார்களா? மதிக்கவில்லை என்றே நான் அஞ்சுகிறேன்.

...முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில் நுழைய முஸ்லிம்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதுகூட இல்லை என்பதை நான் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதே போல சௌதி அரேபியாவின் எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் முஸ்லிம்கள் அல்லாத யாரும், தங்கள் மத நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்ய அல்ல, பின்பற்றக்கூட வெளிப்படையாக முடியாது. சௌதி அரேபியாவின் சகிப்பின்மை என்னும் உதாரணத்தை இந்தியாவில் பின்பற்ற முடியவும் முடியாது. அது தேவையும் இல்லை. எனினும், தங்கள் மதத்தின், தேசியத்தின், ஆக்ரமிப்பின் அன்னிய அடையாளச் சின்னங்களாக விளங்கும் புனிதத் தலங்களில் மூன்றே மூன்றையாவது மீட்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு அதிகப்படியானதா?

...பல நூறு வருடங்களாக ஹிந்துக்கள் தீர்வு வேண்டி, காத்திருக்கும் பிரச்சனையில் ஈடுபட, ஒன்றுபட்ட தேசிய முயற்சியில் பங்குகொள்ள, விதி எனக்கொரு வாய்ப்பைத் தந்ததை நினைத்து நெகிழ்கிறேன். எனது ஒரே விருப்பமும், கோரிக்கையும், நமது முஸ்லிம் சகோதரர்கள் ஹிந்துக்களுக்குச் சமமான அளவில் பெருந்தன்மையும், நல்லெண்ணமும் கொண்டவர்களாக முன்நோக்கி வரவேண்டும். ராமர் ஹிந்துக்களின் வழிபாட்டிற்குரிய புனிதமான மதச் சின்னமாக இருக்கலாம். ஆனால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றேவாக இருக்கும், இந்தியாவின் கலாச்சாரப் பழைமையின் சின்னம்கூட அவர்தானே.

எனவே, அயோத்திப் பணி ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் தீர்க்கப்படும். அதன் மூலம், பரஸ்பரம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்ட, தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்

இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்– எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 22


பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் 161 இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியாக இருந்தும், பதிமூன்று நாட்களுக்கு மேல் ஆட்சியில் தொடர முடியவில்லை...


தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்தி தெளிவாக இருந்தது. மக்கள் அளித்த தீர்ப்பு அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு ஆதரவாக, பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தது. மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையிலே இல்லை. அதனால் இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, அடல்ஜியை ஆட்சி அமைக்க அழைத்ததும், அவருக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் இயற்கையானது. அடல்ஜி மே மாதம் 16ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார். பதினான்கு நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்....


தேவே கௌடா பிரதமராகிறார்

வாஜ்பாய்


அடல்ஜி ஆட்சியின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. ஜனதா தளத்தின் தலைமையில் "தேசிய முன்னணி' என்ற பெயரில் இருந்த கூட்டணி, இப்போது ஐக்கிய முன்னணியாக மாறி இருந்தது. ஐக்கிய முன்னணி ஆட்சியின் கோமாளித்தனம், அது பிறப்பதற்கு முன்பே வெளிப்பட்டது. ஐக்கிய முன்னணியின் தேசியத் தலைவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து உண்டாகவில்லை....


வி.பி.சிங், தான் போட்டியில் இல்லை என்று அறிவித்தார். இதை அவர் விரும்பிச் செய்தார் என்பதைவிட, நிர்பந்தத்தால் செய்தார் என்பதுதான் உண்மை. ஏனெனில், "போஃபர்ஸ்' பிரச்சனையில் அவர் ராஜீவ் காந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் இப்போது அவரது தலைமையில் ஆட்சி அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வழி இல்லை.


அதனால் முன்னணியின் தலைவர்களின் பார்வை, மூத்த சி.பி.ஐ. (எம்) தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான ஜோதிபாசுவின் பக்கம் திரும்பியது. பிரதமர் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருந்தார். ஆனால், அவரது கட்சியின் மத்தியக் குழு அந்த யோசனையை நிராகரித்தது. மத்தியக் குழுவின் அந்த முடிவை பின்னாளில் ஜோதிபாசு "ஒரு வரலாற்றுப் பிழை' என்று விவரித்தது, பிரபலமான வாசகம் ஆயிற்று

சி.பி.ஐ. (எம்)மின் முடிவு சரியா, தவறா என்பதை விட, பிரதமர் பதவி தேடி வந்த போதும், தனது கொள்கைகளில் உறுதியாக நின்ற அதன் தைரியமும், கட்சியின் உயர்மட்ட அமைப்பின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்ட உட்கட்சிக் கட்டுப்பாடும், என்னை மிகவும் கவர்ந்தன என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.

பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்வதை விட, நிராகரிப்பது என்ற முறை தொடர்ந்ததன் காரணமாக, இறுதியில் கர்நாடக முதல்வர் எச்.டி. தேவகௌடாவை ஐக்கிய முன்னணி தலைவர்கள் தேர்வு செய்ய நேர்ந்தது. தேவகௌடா அதுவரையில் தேசிய அரசியலில் பங்கு பெற்றவர் அல்ல. ஜூன் 1ஆம் தேதி இந்தியாவின் 11ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்றார். அதே காலகட்டத்தில், நாடு மற்றொரு வேகமான மாற்றத்தைக் கண்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பி.வி. நரசிம்மராவ் நீக்கப்பட்டார். 1996 பாராளுமன்றத் தேர்தல்களின் தோல்விக்குக் காரணமான வில்லனாக அவர் சித்தரிக்கப்பட்டார். அவரது இடத்திற்கு, கட்சியின் பொருளாளராகப் பல ஆண்டுகள் இருந்த சீதாராம் கேசரி வந்தார்...
1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேசரி, திடீர் என்று தேவகௌடா ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் மக்களைத் திடுக்கிட வைத்தது. "பிரதமர் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதையை, அல்லது அங்கீகாரத்தைத் தரவில்லை. அவரது ஆட்சி எங்களால்தான் பிழைத்திருக்கிறது என்ற போதிலும் மதிக்கவில்லை' என்பது அந்தக் காரணம்.

11 மாதங்கள் நடைபெற்ற தேவகௌடாவின் ஆட்சி, எப்படி நடந்தது என்பதை, அந்த ஆட்சியின் மூத்த, மரியாதைக்குரிய அமைச்சர் சொன்னதைக் கொண்டே அறியலாம். தேவகௌடா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சி.பி.ஐ. தலைவர் இந்திரஜித் குப்தா கூறியது: ""தேவகௌடா மாற்றத்திற்கு முழுக்க முழுக்க சீதாராம் கேசரி மட்டுமே காரணம் அல்ல. அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஐக்கிய முன்னணியிலும் நிலவியது. கௌடா ஒரு சர்வாதிகாரியைப் போல் நடந்து கொண்டார். நான் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். அவர் என்னுடன் பேச மறுத்தார். அவர் ஒருபோதும் என்னோடு பேசியது இல்லை, ஒரு போதும் என்னுடன் கலந்து ஆலோசித்தது இல்லை, இந்த விஷயங்களை நான் வெளியில் சொல்ல முடியாது. ஆட்சியில் இருந்தபோதும் என்னால் சொல்ல முடியாது. நான் மௌனம் காக்க நேர்ந்தது''....

ஐ.கே. குஜ்ரால் பிரதமர் ஆனார்

தேவகௌடா

தேவகௌடாவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால் 1997 ஏப்ரல் 21ஆம் தேதி தேவகௌடாவுக்குப் பதில் பிரதமராக ஆனார். இந்த மாற்றத்தைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய முன்னணி அரசிற்கு நிகழ்த்தப்பட்ட "தலை அறுவை சிகிச்சை இது' என்று குறிப்பிட்டேன். மற்றவர்கள் "ஆபரேஷன் கணேஷ்' என்றனர். அரசாங்கத்தின் உடல் அப்படியே இருக்கிறது. அதன் தலை மட்டும் வேறு ஒருவரின் தலையைக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே "ஆபரேஷன் கணேஷ்' என்ற சொல்லுக்கு விளக்கம்.

ஐ.கே.குஜ்ரால்

இந்த வேகமான அறுவை சிகிச்சைக்கு அவசியமும், அவசரமும் என்ன? இந்தக் கேள்விக்கு ஐ.கே.குஜ்ரால் பிரதமரானதும், எடுத்த நடவடிக்கை விடையாக அமைந்தது. ஸி.பி.ஐ. டைரக்டர் பதவியில் இருந்து ஜோகிந்தர் சிங்கை நீக்கினார். காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சனை உண்டாக்கக்கூடிய போஃபர்ஸ் ஊழல் விசாரணை, லாலு பிரசாத் யாதவிற்குத் தொடர்புடைய மாட்டு தீவின விசாரணை ஆகியவற்றில் ஜோகிந்தர் சிங் தீவிரமாக ஈடுபட்டதுதான் இந்த மாற்றத்திற்குக் காரணம்....

காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முன்னணியின் முதல் ஆட்சியைக் கவிழ்த்ததை விட, சீக்கிரமாக அதன் இரண்டாவது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டது. இப்போது சொல்லப்பட்டக் காரணம், ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஜெயின் கமிஷன் தந்த இடைக்கால அறிக்கை.

ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து மூன்று மாதமான பின், அந்தக் குற்றச் செயலின் விரிவான சதியை ஆராய, 1991 ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் ஜஸ்டிஸ் மிலப் சந்த் ஜெயின் கமிஷனை நியமித்தது. ஜெயின் கமிஷன் 1997 ஆகஸ்ட் 28ஆம் தேதி, தனது 17 தொகுப்புகள் கொண்ட இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் 1991ல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த போது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் பதுங்கி வாழ அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால அறிக்கையின் சில பகுதிகள், சீதா ராம் கேசரியுடன் நல்ல உறவில் இல்லாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரால் ஒரு பத்திரிகைக்கு ரகசியமாகத் தரப்பட்டது. ஐக்கிய முன்னணி ஆளும் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மூன்று தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும்படி குஜ்ராலை காங்கிரஸ் கட்சி கோரியது. ஐக்கிய முன்னணி அந்தக் கோரிக்கைக்குப் பணிய மறுத்தது. நவம்பர் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, குஜ்ரால் ஆட்சிக்கு, தந்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. தேசியமுன்னணி ஆட்சியைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி ஒரு சாக்கு தேடிக்கொண்டிருந்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை வடிவில் அது இப்போது கிடைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது....

குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொண்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், பாராளுமன்ற மக்களவையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த உத்திரவிட்டார். 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது....

இந்திய ஜனநாயகத்தில் இந்தத்தேர்தல் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உணர முடிந்தது. எப்போதும், பாராளுமன்றத் தொகுதிகளை பிடிக்காத தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சி கண்டது....

கோவை குண்டுவெடிப்பு : டி.வி. நிருபர் பேட்டி எவ்வாறு என் உயிர் காத்தது?
1998ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தென்னிந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். பல பயணங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 13ஆம் தேதி, சென்னையை அடைந்தேன். இரவு ஓய்விற்குப் பிறகு, மறுநாள் காலை கோவைக்கு செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். அங்கு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பொறியியல் நிறுவனங்களை திறப்பதற்காகவும், உள்ளூரில் நன்கு புகழ் பெற்ற பா.ஜ.க. வேட்பாளரான சி.பி. ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தேன்.

வர்த்தக விமான சேவை காலையில் இல்லாத நிலையில், எனது கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, கோவை சென்று அங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, அடுத்த விமானத்தில் சென்னை திரும்புவது என திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது எனது நீண்ட நாளைய அந்தரங்க செயலாளர் தீபக் சோப்ரா என்னிடம் வந்து, "தொலைக்காட்சி பேட்டிக்காக காத்திருக்கிறார்கள்' என்று கூறினார்.

அதற்கு நான் "இப்போது சாத்தியமல்ல; புறப்பட இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது' என்றேன். ஆனால் அவர் "சென்னையிலிருந்து வேறு விமானத்தில் கோவைக்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்வதாகவும், அங்கு திட்டமிட்ட நிகழ்ச்சிகள் பாதிக்காது' என்றும் கூற, நானும் பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன். மேலும் அவர் "ஈநாடு டி.வி. நிருபர், உங்களிடம் விமான நிலையத்தில் தேர்தல் பற்றி பேட்டி காண விரும்புகிறார்' என்று கூறினார். "ஈநாடு சேனலுக்கு பேட்டி கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்' என்றும் சோப்ரா கூறினார். ஈநாடு பத்திரிகையால் ஆரம்பிக்கப்பட்ட ஈ டி.வி. மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான தெலுங்கு சேனலாகும். சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன். நான் சென்னையிலிருந்து கோவை செல்ல இரண்டு மணி நேரம் தாமதமானது.

எங்களது விமானம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு கோவையை அடைந்தது. அப்போது விமான நிலைய வளாகத்தில் எதையோ பறி கொடுத்தாற் போன்ற உணர்வைக் காண முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக வரவேற்பதற்கு தொண்டர்களும் அங்கு கூடியிருக்கவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் எங்கள் கட்சி பிரமுகர்கள் சிலர் என்னிடம் வந்தனர். "கூட்டம் நடக்க இருந்த இடம் உள்பட கோவை நகரில் ஆங்காங்கே குண்டு வெடித்துள்ளது. பலர் கொல்லப்பட்டு விட்டனர்' என்ற துக்ககரமான செய்தியைக் கூறினர்.
இந்தச் செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள எனது கட்சியினருடன் பேசினேன். அவர்கள் "நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த இடத்திலிருந்து நேரடியாக வருகிறோம். அங்கு பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். மேலும், நீங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருவதாக இருந்த நேரத்தில் இது நடந்திருக்கிறது. நீங்கள் தாமதமாக வந்ததால் தப்பித்தீர்கள்' என்றனர். காவல் அதிகாரி "நகரம் முழுவதும் பயமும் பதட்டமுமாக இருக்கிறது. ஆகையால் நீங்கள் விமான நிலையத்தில் இருந்து உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்' என்றார்.

அவரிடம் "எனது பிரச்சாரக் கூட்டத்திற்காகக் கூடி இருந்தவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதும், காயம்பட்டவர்களை கண்டு தேற்றுவதும் எனது கடமை' என்றேன். 58 பேர் பலியானதால் நகரமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசாங்க மருத்துவமனையில் நான் கண்ட காட்சி, எனது இதயத்தை ரணமாக்கியது. பத்திரிகையாளர்களிடம், "தென்னிந்தியாவின் மிக மோசமான இந்த தீவிரவாத வெறி செயலை செய்தவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்கள் வெகு விரைவாக, கண்டுபிடிக்கப்பட வேண்டும்' என்றேன்.

நீதியின் சக்கரம் சுழல ஒன்பது வருடங்கள் ஆனது. யாரை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று விசாரித்த தமிழ்நாட்டின் முக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையில், இஸ்லாமிய குழுவான அல்உம்மாவினால் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெளிவானது. 2007 ஆகஸ்டில் சிறப்பு நீதிமன்றம், பாஷா மற்றும் அவரது சகாக்கள் 35 பேர் "ஆபரேஷன் அல்லாஹு அக்பர்' என்ற பெயரில் அந்த தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அறிவித்தது. எனினும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.....

தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதற்கான தண்டனை குற்றவாளியாக மதானி, கோயம்புத்தூர் சிறையில் எட்டு வருடங்கள் இருந்தபோது, கேரளாவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பின.

விடுதலை செய்யப்பட்ட பிறகு மதானி தன் கடந்த காலத்தைப் பற்றி கூறுகையில், "எப்படியிருப்பினும் மனிதாபிமானம்தான் அனைத்திலும் மேலானது என்று சிறையில் தெரிந்து கொண்டேன். நாங்கள் ஒருபோதும் ஹிந்துக்களையோ, அவர்களது உடமைகளையோ, அவர்களது கடவுளையோ தாக்க நினைத்ததில்லை. ஆனால், நாங்கள் தாக்க நினைப்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அத்வானி போன்றவர்களைத்தான்' என்றார்.

கோயம்புத்தூர் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நீதி வழங்கப்பட்டதா என்று தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் எனது சொற்பொழிவுகளில் கோவை குண்டுவெடிப்பு பற்றி குறிப்பிடும்போது, "ஈ டி.வி. நிருபரால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்' என்று கூறுவேன். 1998, பிப்ரவரி 14ஆம் நாள் ஈ டி.வி. நிருபர் என்னை பேட்டி கண்டிரா விட்டால் என் நிலைமை என்னவாகி இருக்கும் என்பது எனக்குப் புலப்படவில்லை' என்பேன்.....

பா.ஜ.க., அரசியல் வரைபடத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது. 1998ஆம் ஆண்டு தேர்தலில், மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. 384 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களைக் கைப்பற்றியது. அதற்கு மாறாக, 462 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 141 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஐக்கிய முன்னணியின் பலம் 183லிருந்து 86ஆக குறைந்தது....

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியை அமைக்க நினைத்தபோது, பல கட்சிகள் தங்களது ஆதரவைத் தர முன்வந்தன....

பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. என்றாலும், சில எதிர்க் கட்சிகள், பா.ஜ.க. ஆட்சி அமைவதைத் தடுக்க முயற்சி செய்தன. மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றன. "ஐக்கிய முன்னணி மற்றும் காங்கிரஸ் அரசுதான் மத்தியில் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்' என்று, பதவி விலகும் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் கூறினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் "காங்கிரஸும், ஐக்கிய முன்னணியும் புரிந்து கொண்டு, ஒற்றுமையாக இருப்பதால், குடியரசுத்தலைவர் அவர்களை (பா.ஜ.க.) முதலாவதாக ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார்' என்றனர்.

சோனியா காந்தி குடியரசுத்தலைவரைச் சந்தித்து, "எங்களிடம் ஆட்சி அமைக்கும் அளவிற்குப் பலம் இல்லை. ஆகவே, நாங்கள் புது அரசு அமைக்க உரிமை கோரப்போவது இல்லை' என்று கூறினார். தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை என்பது தெளிவானது.
அரசு அமைக்க அடல்ஜியை அழைப்பதற்கு, குடியரசுத்தலைவர் நாராயணன் பத்து நாட்களை எடுத்துக்கொண்டார். அது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்தது. பிரதமர் நியமனத்தில், குறிப்பாக தொங்கு பாராளுமன்றம் அமைந்த நிலையில் அவர் புதிய வழிமுறையைக் கொண்டு வந்தார். தொங்கு பாராளுமன்றம் அமையும் போது, தனிப்பெரும் கட்சியின் தலைவரை, அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை அழைக்க வேண்டும். நாராயணனுக்கு முன் இருந்த குடியரசுத்தலைவர்களான ஆர். வெங்கட்ராமனும், சங்கர் தயாள் சர்மாவும் அப்படித்தான் செயல்பட்டனர். ஆட்சி அமைத்த பிறகு, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றனர். ஆனால், நாராயணன் "கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.

பிரபலமான பொம்மை வழக்கில் 1994ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் தனிப்பெருங்கட்சியின், அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றன. ஆனால், "செயல்படும்' குடியரசுத்தலைவர் என்று பெயர் பெற்ற நாராயணன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தைக் கேட்டார். இந்த இடைவெளிக் காலம் எங்கள் கூட்டணியை உடைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள வாய்ப்பளித்தது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. வாஜ்பாய் மார்ச் மாதம் 19ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
****

இரண்டாவது பொக்ரான்

இரண்டாவது பொக்ரான் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 23

1993ஆம் ஆண்டிலிருந்து கட்சிப் பொறுப்பை நிர்வகித்த நான், அடல்ஜியின் அமைச்சரவையில் பங்கேற்றதும், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுபெற வேண்டும் என்று நினைத்தேன். தனது சுயநலமற்ற எளிமை மற்றும் நிர்வாகத் திறமையால் அனைவராலும் பாராட்டப் பெற்ற ஜனசங்க, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் குஷாபாவ் தாக்கரே ஏப்ரல் 1998ல் பா.ஜ.க. தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்...

இரண்டாவது பொக்ரான் அணுசக்தி நாடாகிறது இந்தியா
வாஜ்பாய் ஆட்சி விரைவாகச் செயலில் இறங்கியது. இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்ற வேண்டும் என்பது, எங்களது முதல் கடமையாக இருந்தது. 1972ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் நாங்கள் இதனை வலியுறுத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்த இரண்டு மாத காலத்தில் நாங்கள் மிகத் தைரியத்துடன் இதைச் செய்து காட்டினோம். அதாவது, சொல்லி வந்ததைச் செயலாக மாற்றிக் காட்டினோம்....

ராஜஸ்தானின் பாலைவனப்பகுதியில் உள்ள பொக்ரானிலிருந்து வரும் செய்திக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். சுமார் 4 மணிக்கு, பிரத்தியேகமான தொலைபேசி மூலம், செய்தி வந்தது. "பரிசோதனை வெற்றி'. இந்தியாவின் அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து மூன்று அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து, இந்தியாவை அணு வல்லமை கொண்ட நாடாக உயர்த்தினர்....

துணிவுடனும், திட்டமிட்ட முறையிலும் இந்தியா எடுத்த நடவடிக்கையால், அமெரிக்காவும் மற்றும் பல மிகப்பெரிய நாடுகளும், இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், அந்தத் தடைகள் இந்தியாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு பொருளாதாரத் தடைகளை நீக்கி, இந்தியாவை பொறுப்பான அணு ஆயுத நாடு என்று வர்ணித்தன. இந்தியாவை விமர்சித்த நாடுகளே, மீண்டும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்த முன்வந்தன. இதன் காரணமாக, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக் கூடியது....

அடல்ஜியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் பஸ் பயணம்

பொக்ரான்2 பிரதமர் வாஜ்பாய்க்கும், அவரது அரசாங்கத்திற்கும் செல்வாக்கை உயர்த்துவதாக அமைந்திருந்தது. இந்தியா, பாகிஸ்தானிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் மிகவும் முயற்சி செய்தார். மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகச் செயல்பட்ட வாஜ்பாய், இரண்டு நாட்டிற்குமிடையே நட்புறவு ஏற்பட பலவகையிலும் பாடுபட்டுள்ளார். பொக்ரான் இரண்டிற்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகிவிட்டன. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதட்டம் நிலவியது.

இரு நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த புதுமையான முறையில், 1999ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 அன்று, வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்துப் பயணம் மேற்கொண்டார். டெல்லி முதல் லாகூர் வரையிலான பஸ் பயணத்தின் மூலமாக இருநாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த, வாஜ்பாய் முதலாவது பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார். உண்மையில், வாஜ்பாய் அமிர்தசரஸிலிருந்து லாகூர் வரையிலான 60 கி.மீ. தூரம் பயணம் செய்தார். அதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் எண்ணத்தைக் கவர்ந்தார். பத்து வருடத்தில், இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குச் சென்றது அதுதான் முதல் முறை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியப் பிரதமரை வாகா எல்லையில் வரவேற்றார்....

அதைத் தொடர்ந்து, அடுத்த நாள், இரு நாட்டுப் பிரதமர்களும் லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். லாகூர் ஒப்பந்தம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவது, சிம்லா ஒப்பந்தத்தை தீவிரமாக நடைமுறைபடுத்துவது. இரண்டாவது, இரு நாடுகளின் அணு ஆயுதக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மோதலைத் தவிர்க்கும் பொறுப்பு அதிகரித்திருப்பதை அங்கீகரிப்பது. மூன்றாவதாக, இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் தீவிரவாதத்தை எதிர்ப்பது ஆகியவை லாகூர் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்....

ஒட்டுமொத்தத்தில் லாகூர் பயணம், மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இரண்டு நாடுகளின் எல்லைகளிலும், அமைதிக்கான தீர்வுகள் வகுக்கப்பட்டு, இரு தரப்பிலும் நம்பிக்கையை வளர்த்து, சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....

ஒரே ஒரு வாக்கில் தோற்றோம்

பொக்ரான்2, மற்றும், லாகூர் அமைதி முயற்சி ஆகியவை பிரதமரின் புகழ் வளர்வதற்கும், மக்களின் மனதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும் வழிவகுத்தன. 1999 பிப்ரவரியில், நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சமர்ப்பித்த மிகச் சிறந்த பட்ஜெட், பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பொக்ரான், பஸ் பயணம், பட்ஜெட் ஆகிய அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ஒரு வருடத்தில் நடந்த மிகப்பெரிய சாதனைகளாகும். இதுபோன்ற ஆக்கபூர்வமான வளர்ச்சி, காங்கிரஸிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்தது.

அது தனது பழைய விளையாட்டான, காங்கிரஸ் அல்லாத அரசுகளைக் கவிழ்க்கும்முயற்சியில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்கக் கோரியது. வாஜ்பாய் அரசு செய்ய மறுத்தது. அதை நாங்கள் செய்திருந்தால் எங்களது அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு வழி வகுத்திருக்கும். ஆனால், அப்படி செய்திருந்தால் அது அரசியல் லாப நோக்கத்திற்காகச் செயல்பட்டதாக அமைந்திருக்கும். வாஜ்பாயும், நானும் காங்கிரஸின் இதுபோன்ற மலிவான அபிலாஷைகளுக்கு இடம் தராது இருந்தோம். நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது 356 பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கவிழ்த்திருந்தால் மத்தியில் எங்களது ஆட்சியைத் தொடர்ந்திருக்க முடியும். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை 1999 ஏப்ரல் 14ல் அ.தி.மு.க. விலக்கிக்கொண்டது. மீண்டும் ஒருமுறை குடியரசுத்தலைவர் நாராயணன் பரபரப்பான அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்கேற்றுச் செயல்பட்டார். அவர் வாஜ்பாயிடம், "மூன்று நாட்களில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்றார். குறுகியகால அவகாசமே இருந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட காலம் போதவில்லை....

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வாஜ்பாய் அரசு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில், அதாவது 269270 என்ற முறையில் தோல்வி அடைந்தது. இந்த ஒரு வாக்கு வித்தியாசம், தவறான அரசியல் மற்றும் தவறான நடவடிக்கையினால் நடைபெற்றது. கிரிதர் கோமாங்கொ ஒரிஸ்ஸா நாடாளுமன்ற உறுப்பினர். இவர் ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வராகி விட்டார். இந்நிலையில் இன்னமும் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாதிருந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வைத்து, வாக்களிக்கச் செய்து, எங்களைத் தோற்கடித்தனர்.

வாஜ்பாயும், நானும் மற்றவர்களும் வாக்கெடுப்பு முடிவு
அறிவிக்கப்பட்டவுடன், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினோம். பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அறையான எண் 10ல் அனைவரும் கூடினோம். வாஜ்பாயால் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்மைத் தோற்கடித்துவிட்டார்களே என்று மிகவும் வருந்தினார். நாங்கள் அவரிடம், "புதிய தேர்தலைச் சந்திப்போம், நாங்கள் மக்களிடம் சென்று, உங்கள் ஒரே ஒரு வாக்கின் மூலம் மீண்டும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், வாஜ்பாயைப் பிரதமராக்குங்கள் என்று ஒவ்வொரு வாக்காளரிடமும் கேட்டுப் பெற்று, உங்களை மீண்டும் பிரதமராக ஆக்குவோம்' என்று கூறினோம்....

copyright(c) thuglak.com

எல்லை கடந்த பயங்கரவாதம்

எல்லை கடந்த பயங்கரவாதம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 24

1999ஆம் ஆண்டின் கோடைகாலம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கார்கிலில் 74 நாட்கள் ஒலித்துக்கொண்டிருந்த துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது. போர் இந்தியாவிற்கு மகத்தான வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத தோல்வியாகவும் முடிந்தது. ஆக்ரமிப்பாளரின் தவறான சாகசம், பூமராங் போல அவரையே சென்று தாக்குவதில் போய் முடிந்தது.


அதே போன்ற ஒரு பூமராங் தாக்குதல், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்கும் தவறான சாகசத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த 13ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான அடி கொடுத்தார்கள்....


தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில் 306 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 182 தொகுதிகளை (1998 விட ஒரு தொகுதி அதிகம்) பெற்றது. காங்கிரஸ் 114ல் வெற்றி பெற்றது (1998ல் 140).


...அக்டோபர் 13 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் வளாகம், மூன்றாவதுமுறை இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பதவிப் பிரமாணம் எடுத்து வைக்கும் உற்சாகத்தில் இருந்தது. நானும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நார்த் பிளாக்கில் உள்ள என்னுடைய உள்துறை அமைச்சக அலுவலகத்திற்குச் சென்றேன்.


...1999 டிசம்பர் 24. அந்தக் குளிர் மிகுந்த வெள்ளிக்கிழமையின் மதிய நேரத்தில், நான் எனது நார்த் ப்ளாக் அலுவலகத்தில் இருந்தேன். எல்லா வருடங்களையும் போல அந்த வருடமும் நாடு புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தது...


...நான் எனது அலுவலகத்தில் ஃபைல் பார்த்துக்கொண்டிருந்தேன். மாலை ஐந்து மணிக்குக் கொஞ்சம் முன்பாக, உளவுத்துறை அமைப்பான ஐ.பி.யின் இயக்குனர் எனக்குப் ஃபோன் செய்து, "ஐயா நேபாளத்தில் இருந்து வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுவிட்டது' என்றார். செய்தியைக் கேட்டு நான் திகைப்படைந்தேன்.....

"விமானத்தில் எவ்வளவு பயணிகள் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். "160க்கும் அதிகமாக' என்றார் அவர். காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர வேண்டிய ஐ.சி.814 எண் கொண்ட விமானத்தை ஆயுதம் தாங்கிய ஐந்து நபர்கள் கடத்தியிருந்தார்கள். அவர்கள் விமானத்தை லாகூருக்குக் கொண்டு செல்லும்படி விமானிக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள். லாகூர் விமான நிலைய அதிகாரிகள், கடத்தப்பட்ட விமானம் தரை இறங்க அனுமதி மறுத்துவிட்டதால், அமிர்தசரசில் தரை இறங்கி இருக்கிறது. அங்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த திடீர் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் அடல்ஜி அவசரக் கூட்டத்தை தனது வீட்டில் கூட்டினார். விமானத்தை இயக்க முடியாமல் செய்து, நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாதபடி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைச் செயலர் பிரபாத் குமார் தலைமையில் கூடிய சிக்கல் நிர்வாகக் குழு (கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப்) உடனடியாக அந்தத் தகவலை பஞ்சாப் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியது.

கமாண்டோ படையினரைக் கொண்ட எரிபொருள் நிரப்பும் குழுவை அனுப்பி, விமானத்தின் சக்கரங்களில் காற்றை இறக்கிவிடுவது என்று கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப் தீர்மானித்தது. கமாண்டோ குழு விமானத்தை நெருங்கும் சில நிமிடங்களுக்குமுன், துரதிர்ஷ்டவசமாக கடத்தல்காரர்கள் விமானத்தைக் கிளப்ப விமானிக்கு உத்தரவிட்டனர். அமிர்தசரசில் இருந்து புறப்பட விமானிக்கு உத்தரவிட்டனர்.

அமிர்தரசிலிருந்து புறப்பட்ட விமானம் லாகூருக்குச் சென்றது. அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பினர். அதே சமயம், விமானம் அங்கிருந்து கிளம்பாமல் தடுக்கும்படி நாம் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். கடத்தல்காரர்கள் விமானத்தை துபாய்க்கு அருகில், ஒரு ராணுவ விமான தளத்திற்குக் கொண்டு சென்று இறக்கினர். ரூபின் கத்தியால் என்ற பயணியைக் கொன்று வெளியே வீசினர். 28 பேர்களை விடுதலை செய்தனர். பிறகு 161 பயணிகளுடன் பறந்து, தென் ஆஃப்கானிஸ்தானில் கந்தகாரில் விமானத்தை தரை இறக்கினர். ஆஃப்கானிஸ்தான் அப்போது தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

...இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் 36 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று விமான கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று விரைவில் தெரிய வந்தது. ஆனால், அவர்களின் முக்கிய கோரிக்கை 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட, ஜம்மு காஷ்மீரில் இயங்கும், பயங்கரமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றின் தலைவனான முஹமது மசூத் அஸாரை விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும்.

...பிணைக் கைதிகளாக உள்ள விமானப் பயணிகளின் விடுதலைக்குப் பதிலாக, தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு ஆரம்பத்தில் நான் ஆதரவாக இருக்கவில்லை. எனினும் எங்கள் ஆட்சி, சூழ்நிலையை உண்மையாகவே அசாதாரணமான முறையில் எதிர்கொண்டது. கடத்தல்காரர்கள் விமானத்தை கந்தகாருக்குக் கொண்டு சென்றுவிட்டது, நிலைமையை மேலும் சிக்கலானதாகவும், சிரமமானதாகவும் ஆக்கிவிட்டது.
வழக்கமாக இந்த மாதிரி சூழ்நிலைகளில், கடத்தலுக்கு உள்ளான விமானத்திற்குச் சொந்தமான நாட்டின் அரசாங்கம், வேகமாகப் பேச்சு வார்த்தையை நடத்திப் பேரத்தை முடித்து விடும். கடத்தல்காரர்கள் சிறைப் பிடிப்புக் காலத்தை இழுத்தடிக்கத் தயாராக இருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு இருந்த மூன்று சாதகமான அம்சங்கள். அவர்கள் தாலிபான்களால் ஆளப்படும் ஆஃப்கானிஸ்தானில் வசதியான இடத்தில் இருந்தார்கள். ஆஃப்கானிஸ்தானுடன் இந்தியாவிற்கு தூதரக உறவும் இருக்கவில்லை. தாலிபான் ஆட்சியாளர்கள், விமான கடத்தல்காரர்களிடம், கடத்தலை முடிக்கும்படி அல்லது தங்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி எந்த நிர்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை.

இரண்டாவதாக, விமானக் கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக இருந்து செயல்படுகிறது என்ற, மறுக்க முடியாத தகவல் எங்களுக்குக் கிடைத்திருந்தது. அதே ஐ.எஸ்.ஐ.யால் உருவாக்கப்பட்டதுதான் தாலிபானும் கூட. விமானம் மட்டுமின்றி, விமான நிலையமும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்திய அரசாங்கம், பயணிகளை மீட்க விமானப் படை கமாண்டோ படைகளை கந்தகாருக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தது. ஆனால், இஸ்லாமாபாத்தின் உத்திரவின்படி, தாலிபான் அதிகாரிகள் விமான நிலையப் பகுதியை டாங்கிகளைக் கொண்டு சுற்றி வளைத்திருந்தனர் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. நமது கமாண்டோக்கள் விமானத்திற்குள் சென்று கடத்தல்காரர்களைப் பிடித்துவிட முடியும். ஆனால், விமானத்திற்கு வெளியே தாலிபான் படைகளுடன் ஆயுத தாக்குதல் நடந்து, விமானப் பயணிகளின் உயிரைப் பறித்துவிடக் கூடிய ஆபத்து இருந்தது.

மேலும் ஒரு சிக்கல் இருந்தது. விமானத்தை மீட்டு விட்டாலும் அது பாகிஸ்தானின் வானப்பகுதியின் வழியாகத்தான் இந்தியா திரும்ப முடியும். அதற்கு பாகிஸ்தான் அனுமதி தராது. நிச்சயம் மறுக்கும். கடத்தல்காரர்கள் வெடி பொருட்களை வைத்திருக்கிறார்கள். விமானத்தைத் தகர்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருந்தது. "புத்தாண்டு தினத்தில் வெடிகுண்டு இந்திய அரசாங்கத்திற்கு ஆயிரமாவது ஆண்டிற்கான பரிசு' என்று கடத்தல்காரர்களில் ஒருவன் கூறியதையும் கேட்க முடிந்தது.
மூன்றாவது, மொத்த விவகாரத்திலும் துரதிர்ஷ்டவசமான ஒரு பகுதி, விமானத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப் பவர்களின் உயிர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதல், பிரச்சனை ஆரம்பித்த மூன்றாவது நாள், சில விமானப் பயணிகளின் உறவினர்கள் பிரதமரின் வீட்டின் முன்பாகக் கூடி வெறி பிடித்தவர்கள் போல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் எங்கள் அரசியல் எதிரிகளின் தூண்டுதல் ஓரளவு இருந்தது என்பதைத் தெரிவிக்க, எனக்கு வருத்தமாக இருக்கிறது.

சில தொலைக்காட்சி சேனல்கள், இந்த எதிர்ப்புப் போராட்டங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பி, சில இந்தியர்களின் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அரசாங்கம் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்கமுயன்றன. இந்திய நாடு மென்மையான நாடு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இப்போது இந்திய சமுதாயமும் மென்மையான சமுதாயமாகி விட்டதா என்று இந்தச் சம்பவங்கள் என்னை வியப்படைய வைத்தன. எனினும் கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளின் உறவினர்கள், விமானப் பயணிகளின் உறவினர்களைப் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இது நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை என்ற எண்ணத்தைத் தந்தது.

ஒரு பக்கத்தில் விமானப் பயணிகளின் உறவினர்களின் நெருக்குதல், மறுபுறத்தில் கடத்தல்காரர்கள் சில மோசமான செயல்களில் ஈடுபட்டு விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை. அரசாங்கம், வேறு வழி இல்லை என்ற மனதுடன், இழப்பைக் குறைக்கும் அம்சத்தைத் தேர்வு செய்தது. மசூத் அஸார் உட்பட மூன்று தீவிரவாதிகள் சிறையில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, கந்தகாரில் தாலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கந்தகாரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நமது குழுவினர் கடுமையாகப் பேரம் நடத்தி, 36 தீவிரவாதிகளைச் சிறையில் இருந்து விடுதலை செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வெறும் மூன்று பேர் என்ற அளவிற்குக் குறைத்தனர். ஐ.சி. 814 விமானத்தின் அனைத்துப் பயணிகளும், விமானப் பணியாளர்களும் அன்று இரவே டெல்லி திரும்பினர். சிக்கல் முடிவுக்கு வந்தது. மாபெரும் ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, சாகத் தயாராக இருக்கும் ஒரு சிறிய குழு சவாலாக எழுந்து நிற்கிற, புதிய முகம் கொண்ட போர்முறையை உலகம் கண்டது.

copyright(c) thuglak.com