Monday, 29 June 2009

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது ரூ. 60 லட்சம் "ஜிஸியா' வரி

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது ரூ. 60 லட்சம் "ஜிஸியா' வரி: தலிபான்கள் எச்சரிக்கை

First Published : 28 Jun 2009 11:58:07 PM IST
Last Updated : 29 Jun 2009 03:43:28 AM IST

இஸ்லாமாபாத், ஜூன் 28: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பட்டகிராம் என்ற ஊரில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆண்டுதோறும் 60 லட்ச ரூபாயை "ஜிஸியா'வாகத் தங்கள் அமைப்பிடம் தர வேண்டும்; இல்லாவிட்டால் இந்தப் பகுதியைவிட்டே வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மொகலாயர்கள் ஆண்டபோது ஒüரங்கசீப் இந்த ஜிஸியா என்ற வரியை ஹிந்துக்கள் மீது விதித்தார் என்று வரலாறு கூறுகிறது. வடமேற்கு எல்லைப்புறத்தில் பட்டகிராம் என்ற ஊரில் ஹிந்துக்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போதுகூட அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் அங்கேயே தொடர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தனர்.

""எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்க வேண்டும், அதற்குச் சம்மதம் இல்லை என்றால் இடத்தைவிட்டு வெளியேற வேண்டும், அதுவும் முடியாதென்றால் ஹிந்துக்களாக இருக்கும் பாவத்துக்குப் பரிகாரமாக தங்களுக்கு ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும்'' என்று தலிபான் இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற டாக்டரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த எச்சரிக்கையைத் தலிபான்கள் விடுத்துள்ளனர்.

தலிபான்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். அவர்களை ஒடுக்க ராணுவத்தாலேயே முடியவில்லை. உள்ளூர் போலீஸôர் அவர்களை நெருங்குவதே இல்லை. இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை ஹிந்துக்கள் அலட்சியப்படுத்தவே முடியாது. இப்படி ஒரு மிரட்டல் வந்திருப்பது குறித்து மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஹைல் காலித் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, எனக்கு எந்தப் புகாரும் வரவில்லையே என்றார். டாக்டருக்கு வேண்டாத யாராவது இப்படி பணம் பறிப்பதற்காக மிரட்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இதே போல ஒüராக்சாய் என்ற இடத்தில் மிரட்டல் வந்தபோது அலட்சியம் செய்த 35 சீக்கிய குடும்பங்களின் வீடுகள், கடைகள் தாக்கி உடைத்து நொறுக்கப்பட்டன. வீடு, கடைகளில் உள்ள சாமான்கள், சரக்குகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அடித்து அகதிகளாக விரட்டப்பட்டனர். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் வீடு வாசலை விட்டுவிட்டு வெளியேறினர். இன்றுவரை அவர்களை மறு குடியமர்த்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் ஹிந்துக்கள் அச்சப்பட ஆரம்பித்துள்ளனர்.
**********

Copyright(c) dinamani.com

No comments: