Friday, 29 June 2007

திண்ணை கட்டுரை - அருணகிரி

ஒரு மத அழிப்பின் கதை
அருணகிரி Thursday June 28, 2007

சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார்.

கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார்.

பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.
அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள "கம்யூனிஸ்டு" இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். 'இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் - தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்..." என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.

பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:

- 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

- பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது "எதிரிச் சொத்து" என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட "அர்பிதா சம்பதி" சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

- பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.
- சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.
- இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.

- பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.

- 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
- கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.

- பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக் குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.

- இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.

- முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன "நடுநிலைவாதிகளிடமிருந்தும்" ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?

- பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் "பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)" என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது- முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் புகைப்படம் உட்பட.

http://www.hrcbm.org/ ( (எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):
.
arunagiri_123@yahoo.com

திண்ணை கட்டுரை - விஷ்வாமித்ரா

பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே - இந்தித் திரைப்படம். ஒரு பார்வை
விஸ்வாமித்திரா Thursday June 28, 2007


2004ல் எடுக்கப் பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்குத் தொடர்ந்து நடந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பையும் விருதையும் பெற்றுள்ளது.

†¥சைன் சைதி எழுதிய ப்ளாக் ·ப்ரைடே என்ற புத்தகத்தை அப்படியே சினிமாவாக எடுத்துள்ளனர் மிட் டே பத்திரிகைக்காரர்கள். அனுராக் காஷ்யப் என்பவர் இயக்கியிருக்கிறார். எவ்விதமான சூடோ செக்குலார் பஜனைகளும், நியூட்ரல் ஜெல்லிகளும் இல்லாத க்ளீன் டாக்குமெண்டரி.

கருப்பு வெள்ளி, மார்ச் 12 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம். ஏறக்குறைய 300 இந்தியர்களை இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கு பாரத மாத பறிகொடுத்த மற்றொரு கோரப் படுகொலை நடந்த துக்க தினம். இந்த சினிமா அன்று நடந்த குண்டு வெடிப்புகளை அதே தீவீரத்துடன் காண்பிப்பதில் ஆரம்பிக்கிறது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமனின் கையாள் ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொண்டு இன்னும் 3 நாட்களில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடக்கப் போகிறது என்ற உண்மையைச் சொல்லுகிறான், நமது போலீசார் வழக்கம் போல உதாசீனம் செய்து விடுகிறார்கள்.

குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷணர் ராகேஷ் மோரியாவின் டீம் தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது.டைகர் மேமனின் மேனேஜரை முதலில் கைது செய்கிறார்கள் அவன் மூலமாக மொத்த ஆப்பரேஷனும் திகிலுடன் விவரிக்கப் படுகிறது. எத்தனைக் குழுக்கள் எங்கெங்கே சென்று குண்டு வைத்தனர் என்பதை அந்த மேனேஜர் விவரிக்கக் காட்சிகளாக விரிந்து நம் வயிற்றைப் பிசைகின்றன. மனதில் கோபம், சோகம் , ஆத்திரம் கையாலகாத்த்தனத்தினால் ஏற்படும் சுய வெறுப்பு என்று பல்வேறு உணர்ச்சிகளில் உள்ளம் கொந்தளிக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஸ்டாக் எக்சேஞ் முன் குண்டு வெடிக்கும் முன்னால் காட்சி கனத்த அமைதியாகி விடுகிறது. அந்த அடர்ந்த மொ:ளனமே நடக்க இருக்கும் விபரீதத்தை கூறி மனம் பதற வைக்கிறது. மேனெஜர் கொடுத்த தகவலின் பெயரில் குண்டு வெடிப்பில் பங்கு கொண்ட அனைத்து தீவீரவாதிகளின் பெயர்களும் சேகரிக்கப் படுகின்றன. போலீஸ் இன்·பார்க்மர்கள் மூலமாக ஒவ்வொரு தீவீரவாதியையும் துரத்தி துரத்தி கைது செய்கிறார்கள். அதிலும் பம்பாய் சேரிகளில் போலீசார் மூச்சுத் திணற ஓடி வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து, புகுந்து ஒரு தீவிரவாதியை மடக்கிப் பிடிக்கும் காட்சி படு பிரமாதமாகப் படப் பிடிக்கப் பட்டுள்ளது.

பாதுஷா என்ற ஒரு தீவிரவாதியின் பின்னால் படம் வெகு நேரம் சுற்றி வருகிறது. போலீசால் துரத்தப் படும் தீவிரவாதி உ பி யில் உள்ள ராம்பூர் போகிறான், அங்கிருந்து ஜெய்ப்பூர் போகிறான், அங்கிருந்து மீண்டும் ராம்பூர், அங்கிருந்து கல்கத்தா, மீண்டும் ராம்பூர் என்று துபாய்க்கு தப்பி சென்று விட்ட டைகர் மேமனின் உத்தரவினால் அலைக்கழிக்கப் பட்டு போலீசிடம் கைதாகிறான். அவனிடம் கமிஷனர் மொளரியா பேசும் ஒரு இடத்தில் மட்டும் இயக்குனரின் கருத்தாக இஸ்லாமியத் தீவீரவாதம் சாடப் படுகிறது.

பாதுஷா கொடுத்த தகவலின் பெயரில் ஆர் டி எக்ஸ் எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பது காண்பிக்கப் படுகிறது. நாட்டைக் கூசாமல் விலை பேசும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கேட்கிறார்கள் சரக்கு ஐ எஸ் ஐ அனுப்புகிறதா தாவூத் அனுப்புகிறானா என்று. 68 கிலோ ஆர் டி எக்ஸ் என்பதனால் கூசாமல் அதிக லஞ்சம் வேண்டும் என்று டிமாண்ட் செய்து வாங்கிக் கொள்கிறார்கள் இந்திய அரசு அதிகாரிகள்.

பாதுஷா எப்படி ஆர் டி எக்ஸ் கடத்தப் பட்டது என்பதை விவரிக்கிறான். அது அப்படியே படமாகக் காட்டப் படுகிறது. அவன் மேலும் தாங்கள் அனைவரும் எப்படி துபாய் சென்றோம் என்பதையும் அங்கிருந்து டைகர் மேமோன் எப்படி பாக்கிஸ்தானுக்கு அழைத்துச் சென்றான் என்பததயும் சொல்லச் சொல்ல காட்சிகளாக விரிகின்றன. அனைவருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கிறது. பின்னர் அனைவரும் பம்பாய் திரும்பி காரியத்தத முடிக்கின்றனர். இதை எல்லாம் போலீஸ் விசாரிக்கும் பொழுது தீவீரவாதிகளின் வாக்குமூலங்கள் காட்சிகளாக வருகின்றன.

ஒவ்வொருவரு விசாரணைக் கைதியையும் போலீசார் அடித்து உதைத்து உண்மையைக் கொணர்கின்றனர் விசாரனை அதிகாரி அதீத மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஆர் டி எக்சைப் பதுக்கி வைத்த பில்டரின் மனைவி உட்பட கடுமையான போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எல்லா விசாரணைகளும் தத்ரூபமான காட்சிகளாக படத்தில் விரிகின்றன. பிடிக்க முடிந்த எல்லா கைதிகளளயும் பிடித்து விடுகின்றனர். டைகர் மேமனின் குடும்பமே தப்பித்து முதலில் துபாயிலும் பின்னர் பாக்கிஸ்தானிலும் அடைக்கலாமாகின்றனர். டைகர் மேமனின் தம்பி இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அவனது பேட்டியும், பாக்கிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே ஒளிபரப்பப் படுகின்றன. டைகர் மேமன் துபாயில் இருந்து கொண்டு தொடர்ந்து உத்தரவுகள் கொடுத்து வருகின்றான்.
பட இறுதியில் ஒரு கைதியின் வாக்குமூலம் மூலமாக தாவூத் இப்ரா†¢மின் சதித் திட்டம் அம்பலமாகிறது,. மும்பையில் பர்தா அணிந்த பெண்கள் ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள். என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை அவளது வளையல்களை உனக்கு அனுப்புகிறேன் நீ தான் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று ஒரு பார்சல் தாவூதுக்கு வருகிறது. உடனடியாக எல்லா டான்களையும் வைத்து மீட்டிங் போடுகிறான். மீட்டிங்கில் அத்வானியையும், தாக்கரேயையும் கொல்லத் தீர்மானம் போடப் படுகிறது. ஆனால் டைகர் மேமன் வேறு விதமான தீர்வைக் கொடுக்கிறான். பம்பாயை நிர்மூலமாக்க வேண்டும், அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்க வேண்டும், லட்சக்கணக்கான இந்து நாய்கள் கொல்லப் பட வேண்டும், உலகத்துக்கு முஸ்லிம் பவர் என்ன என்றால் அப்பொழுதுதான் தெரியும் எனக்கு பணம் கொடுங்கள் நான் அந்தப் பயங்கரத்தத அல்லாவின் ஆணையாக நிகழ்த்தித் தருகிறேன் என்கிறான், அவன் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் படுகிறது, மற்றவை துயர வரலாறு.

படத்தில் எல்லா பாதிரங்களின் பெயர்களும் உருவ ஒற்றுமையுடன் அப்படியே காண்பிக்கப் படுகிறது தாவூத் உட்பட. இது டாக்குமெண்டரி அல்லது உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு. எடிட்டிங், கலர், காமரா கோணம் எல்லாம் கச்சிதமாக அமைந்துள்ள ஒரு தரமான தொழில்நுட்ப நேர்த்தியும் கூடிய படப்பிடிப்பு .

அநாவசியக் காட்சிகள் உணர்சிகள் இல்லல. நடந்தது நடந்தவையாக காண்பிக்கப் படுகின்றன. அநாவசிய சூடோ செக்குலார் கோஷங்கள் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, பாப்ரி மசூதி இடித்ததனால் தான் நாங்கள் குண்டு வைத்தோம் என்று சொல்லும் பொழுது அயோத்தியாக் காட்சிகள் காண்பிக்கப் படுகின்றன. வேறு எந்த இடத்திலும் யாரையும் படம் சுட்டிக் காட்டுவதில்லை, படம் பார்ப்பவர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறார்கள், இப்படி இப்படித் திட்டமிட்டு படு பயங்கர குண்டு வெடிப்புகள் நடத்தினார்கள்., அதற்கு இன்ன இன்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்று காண்பிக்கிறார்களேயன்றி, யார் சரி , யார் தவறு என்ற நீதிபோதனைகள் இல்லை. படத்தின் இறுதியில் தொடர்ச்சியாக பல நிமிடங்களுக்கு குண்டு வெடிப்பில் இறந்த, உடல் உறுப்புக்களைப் பறி கொடுத்த, நெருப்பில் கருகிய கோரக் காட்சிகளின் புகைப் படங்களாகவும், வீடீயோக் காட்சிகளாகவும் காட்டப் படுகின்றன. அந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர் மனதில் படத்தில் வெளிப்படையாகச் சொல்லாமல் விட்ட அனனத்துச் செய்திகளையும் சொல்லுகிறது.

படத்தில் கமிஷணர் மொளரியாவாக வரும் கே கே மேனனின் நடிப்பும், பாதுஷாவாக வருபவனின் நடிப்பும் டைகர் மேமனாக வரும் பவன் மல்§†¡த்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.

மும்பை குண்டு வெடிப்பில் ஈடு பட்ட தீவீரவாதிகளுக்கு தவணை முறையில் தண்டனை அளிக்கப் பட்டு வரும் இந்த நேரத்தில், அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல இன்று நிலவும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஒரு உண்மையான, தத்ரூபமான வாக்குமூலம். கோர முகம். நாம் எவ்வளவு கொடுமையான அரக்கர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அப்பட்டமாகச் சொல்லும் ஒரு ஆவணம். இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு பயங்கரத்தின் ஆவணம் இந்த சினிமா. அவசியம் பாருங்கள் டி வி டியில் கிடைக்கிறது.
தீர்ப்பு வந்து பல தீவிரவாதிகளும் வெளியில் விடப்பட்டு விடலாம். ஆனால் இந்தப் படம் அழுத்தமாக யார் குற்றவாளிகள் என்பதைக் காண்பிப்பிக்கின்றது. இதே போல ஒரு முழுமையான ஆவணப் படம் கோவை குண்டு வெடிப்பு குறித்தும் எடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்கள் தங்களைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பரிமாணத்தை உணர்வார்கள். யார் புத்தகமாக எழுதப் போகிறார்கள், யார் அதைத் துணிந்து படமாக எடுக்கப் போகிறார்கள் ? அப்படியே எடுத்தாலும் அந்தப் படம் வெளி வருமா ?

viswamitra12347@rediffmail.com

Monday, 25 June 2007

கோவிலில் எம்மதத்தார் - ஐயன் காளி திண்ணை கட்டுரை

Thursday June 21, 2007

கோவிலில் எம்மதத்தார்
ஐயன் காளி

திண்ணையில் வெளிவந்த ஐயன் காளி கட்டுரைகட்கு அளப்பரிய உணர்வுகளோடு மின்னஞ்சல்கள் வந்தன. பாராட்டுக்களை பல்கிய கடிதங்களுக்கு நடுவே பல கேள்விகளும்; குறிப்பாய் நம் மதத்தாரை நாணமுறச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி.

சிலர் தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியில் வாழ்வை சாதிக்க வேண்டிய பிறப்பினராய் இருத்தல்கண்டு வருந்தியமைகண்டு யாம் வருந்தினோம். "வருந்தவேண்டுவது நீங்களல்ல என் சகோதரியே. நானும் ஒரு தலித்தே. தாழ்த்தப்பட்ட குலத்தவனே. தாழ்த்தும் வகுப்பாரை எதிர்ப்பவனே. எதிர்க்காதவரைதான் உலகம் ஏமாற்றவதும், நீவிர் ஏமாறுவதும். எதிர்த்து நில், எம் குழந்தாய்" என பதிலும் இறுத்தினோம்.

எம் இந்து மதத்தில் எப்பிறப்பையும் இகழாமல், இழிவுபடுத்தும் சாதியாருக்கு இணையானவராய் தனைக் காண்பவரே இறைக்கு துணையானவர். இருப்பினும், எம்மக்கள் நிலை என்ன?

காலணி அணிந்து காலாற நடக்க இயலுமா?

அடுத்தவருக்கு ஆடை செய்பவர் மேலாடை கழற்ற விழையாமல் மேம்பட்டுவிட்டவர் வீதிக்குள் நுழையமுடியுமா?

சொந்த விளை நிலம்கொண்டு தம் உழைப்பை விதைத்து விதியை வேறு செய்யும் வாழ்வு விளையுமா?

உயர்ந்தகுலத்தில் பிறந்தவர் எனும் பிரமிப்புக்கனவால் நான்கு வயது குழந்தைகூட, கோல் ஊண்றி நடக்கும் கூன் விழுந்த கிழவரையும் தரமின்றி "அடே, தாழ்த்தப்பட்ட சாதியானே, இங்கே வாடா, அங்கே போடா" என்று அழைக்க பழக்கப்படுத்தப்படுவதும் இங்கேதான்.
அதை பெருமையாய் பெற்றோர் பார்ப்பதும் இந்த பாரத பூமியில்தான்.

பல்லாயிரமாண்டுகளாய் பாரினில் எம்குலத்தாரை பார்க்கும் பார்வைக்கும், மலஓட்டத்தில் ஒய்யாரமாய் வாழும் பாழ்பன்றியை பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாட்டை பகுக்கத்தான் இன்னமும் எம்போன்ற தாழ்த்தப்பட்டவர்களால் இயலவில்லை.

இச்சூழலில், கோவிலில் கோவிந்தனை கண் குளிரக் காண இயலாத நிலைக்கு இந்துமதம் காரணமா? ஆம் என்போர் அனைவரும் ஆபிரகாமிய மதங்களின் அச்சாணி சுழற்றும் கயிறுகளின் பாவைகளாய், ஊடகவெளிகளில் உழைப்பின்றி கிடைத்த உன்னத நிலையின் சாறருந்தி உன்மத்தத்தில் உளறுகிறார்; உண்மை தெரியாதவர் சிலர்; தெரிந்தும் திரிப்பவர் பலர்.
சமூக பொருளாதார சகடத்தில் எப்போதும் மேலிருக்க அடிமைகளைத் தேடுபவர் அள்ளிவிடும் கதைகள் அவை. இமயமலை கீழுள்ள இப்பரதகண்டத்தின் இந்து மதத்தில் சாதி உயர்வு இழிவு இல்லை. இல்லை. இல்லை.

எனின், இதன் ஆரம்பம் எதில் என்பதற்கு பொருளாதாரத்தில் பலம்பெற சமூகக்குழுக்கள் ஒருவரை மற்றொருவர் ஏய்ப்பதில் இருந்து என்பதே பதில்.

"மாறாதது ஸ்ருதி; மாறுவதோ ஸ்ம்ருதி" என்றே இந்துமத நூல்களுக்கு இலக்கணமும் இருக்கிறது. இருப்பினும், எதிர்ப்பதுபோல ஏற்றுக்கொள்ள, மறந்துவிட்ட கொடுங்கனவை மலையில் செதுக்கிய சிலையாக்க, மனு ஸ்ம்ருதியின் கொடிய பக்கங்களை தங்கள் வசதிக்கு தக்கதாய் உயிர்ப்பிக்க இந்துத்துவ எதிரிகள் பாடுபடுகையில், ஸ்ம்ருதிகளில் இல்லை இந்த மதம், இந்த இந்து மதம் என்கிறீர். மாறும் ஸ்ம்ருதிகளிலும் பொதுவாய் விளையும் கருத்தென்ன என்பதை விளக்குவீரா எனவும் சில கேள்விகள். ஆதாரம் என்ன? எனவும் சில.
ஆதாரங்கள் இல்லாமல் அல்லல்தருவாரை எதிர்ப்பவர், ஆதாரங்கள் இல்லாததாலேயே தம் மதத்தை புரியந்துகொள்ள இயலாமலும், வெறுப்புறுவாரோடு வாதாட இயலாமலும் இன்னலுறுகிறார்; அவர்தம் சுயகுலம் வெறுக்கிறார்.

வெறுத்தலின் விளைவாய் விலக்கமும், விலக்கத்தின் பின் தொடரும் அகவெறுப்பும் ஆன்மீகத்தின்மேல் வெறுப்பாகி, பிறந்ததின் பலனை பெறவொண்ணாமல் செய்கின்றன. தாழ்த்தப்படும் எம்மக்கள் தலைநிமிர்ந்து கோவிலுக்குள் நுழைய, ஆலயங்களே அவரை அழைக்க, ஆதார கருத்துக்களை ஆடையாய் தரிக்க, இந்திய சமூக நீதிகளான ஸ்ம்ருதிகளில் சிலவற்றை சிறிதே இங்கே காணலாம்.

"துளிக்கூட இல்லை தீட்டு. தீண்டத்தகாதவராய் திரிக்கப்படுபவர் மற்றவரை தொட்ட இடம் கோவிலாகவோ, மத ஊர்வலமாகவோ, ஆச்சாரமாய் நடக்கும் யாகங்களாகவோ, திருவிழாக்களாகவோ, திருமணம் நடக்கும் இடமாகவோ இருந்தால்" - அத்ரி (பாடல் 249)
சததபம் சொல்லுகிறது: "தீண்டத்தகாதாரை தீண்டுதல் பிறழ்தல் இல்லை - மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதைகளிலும், மத ஊர்வலங்களிலும், ஊரார் அனைவரும் கலந்துகொள்ளும் சண்டைகளிலும், அல்லது இயற்கைசீற்றங்களிலும்"
"தவறில்லை. அதனால் ப்ராயச்சித்தமும் தேவை இல்லை. புனிதத் தலங்களிலும், திருமண-திருவிழா நிகழ்வுகளிலும், போரிலும், அல்லது, அந்தோ, அந்நகரமோ, கிராமமோ நெருப்பால் சூழப்படுகையிலும் மனிதர் மனிதரைத் தொடுவதால்" - என்கிறார் ப்ரஹஸ்பதி
நிச்சயமாய் சொல்லுகிறது நித்யசரபத்ததி: "சண்டாளரோ, புக்காசரோ புவனநாயகன் விண்ணையும் அளந்தவன் விஷ்ணுவின் கோயில் அருகில் இருக்கையிலேயோ, அல்லது விழிகளில் விஷ்ணுவை நிரப்ப பக்தியோடு கோயிலுக்குள் நுழைந்திருக்கையிலேயோ அடுத்தவரைத் தொட்டுவிட்டால் நீசம் நீங்க நீராடத் தேவையில்லை."
கோயில் மட்டுமல்ல பொதுவிடங்களிலும் தொட்டுவிட்டால் தொடப்பட்டவருக்கு தோஷமில்லை என்று ஆண்ட வர்க்கத்தாரை அண்டி வாழ்ந்தவர் எழுதிவைத்ததைக் கவனியுங்கள். பொது இடங்களில் தோஷமில்லை, கோயில்களில் தோஷமில்லை என முடிந்த அளவு சீர்திருத்த முற்பட்டு, புரட்சியின் புரிதலை, மனித நேசத்தை புத்தகங்களில் புதைத்திருப்பதைக் காணுங்கள். ஏய்த்து வாழ்பவரே ஏணியின் உச்சத்தில் இருக்கையில், அவர்தம் தயவால்தான் வாழ்க்கை என்பதால் எதிர்த்து வாழ இயலாத ஏழை கல்வியாளர்களால் இவ்வளவுதான் இயம்பமுடிந்திருக்கிறது.

அனைத்து ஸ்ம்ருதிகளின் அர்த்தச்சாற்றாய் விளங்கும் "ஸ்ம்ருத்யர்த்தஸாரம்" சொல்லுவதோ கோவிலுக்குள் நுழைய மட்டுமல்ல, வழிபடவும் வக்கு உண்டு தீண்டத்தகாதவராய் திரிக்கப்பட்டவருக்கு என்று.

"விலக்கம் வேதப்பயிற்சிகளின் முன்நிகழ்வான முப்புரிநூலணியும் சடங்கிற்கு மட்டுமே", எனத்தொடக்கும் யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியும் (I.93), கௌதம ஸ்ம்ருதியும் (IV.20) சொல்லுவதோ, "சண்டாளர்கள் மற்றவரும் வணங்கும் தெய்வீக உருவங்களை வணங்குவதிலிருந்தோ, ஸ்ம்ருதிகளின் விதிகளிலிருந்தோ விலக்கப்பட்டவர் இல்லை. விஷ்ணுவின் அனைத்து வடிவங்களையும் அவர் வணங்கத் தகுந்தவர்."
தற்போதைய தலைமுறையினர் அறியா இவ்வரிகள், அக்காலச் சட்டப்புத்தகங்களின் கரையானும் அரியா வரிகளாய் அழிந்துவிடவில்லை அக்காலத்தே. தேவிபுராணத்தை ஆதாரமாய் காட்டும் நிர்ணயஸிந்து, ஒடுக்கப்பட்ட அந்த்யஜர்கள் பைரவருக்கு ஆகம விதிப்படி கோவிலே கட்ட உத்தரம் தந்திருக்கும் தகவலைத் தம்மைப் படிப்பவருக்குத் தருகிறது.
லோகத்தை காக்கும் திருவரங்கநாதர் லோகசாரங்கரெனும் பார்ப்பன பெரியாருக்கு பணித்த கட்டளை பாரதம் அறிந்ததே. "உயர்சாதி கொடுமையால் ஒடுக்கப்பட்டாரை உள்ளே வரவிடாமல் தடுப்பது தவறு, அத்தவறொழிக்கும் செயலாய் ஒடுக்கப்பட்டவரில் ஒருவரான திருப்பாணாழ்வாரை உன் தோளினில் ஏற்றி என் சன்னிதானத்திற்குத் தருவி. இனி இழிவாக்கப்பட்ட சாதியார் என்னருகில் அமர்ந்து தமிழ் பாடட்டும். உயர்சாதி என இறுமாந்திருப்போருக்கு இஃது ஒரு பாடமாய் இருக்கட்டும்" என இறை இயம்பிய கதையையும் இயற்றியவர்கள் உண்டு. இயற்றப்பட்ட இக்கதைகளை மறைத்தலும், அழித்தலும் இன்றி அனைவருக்கும் திருவிழாக்காலங்களில் கற்பித்துவரும் கலாச்சாரமும் இங்குண்டு.
பள்ளத்தில் இறங்கி பார் பயணுற உணவை உற்பத்தி செய்யும் வெள்ளாள சாதியில் பிறந்தவரை "நம் ஆழ்வார்" இந்த நம்மாழ்வார் என கைகூப்பும் மதம் இந்த மதம். இந்த இந்து மதம்.

நான்கு வர்ணங்கள் தாண்டி ஐந்தாம் வர்ணமாய் சண்டாளர்களை ஆக்குவது சாத்திரவிரோதம் என்பதை பிவி கானே எனும் பெரியார் வடித்தெடுத்த "தர்மசாத்திரங்களின் வரலாறு - Vol. II, Part I" உறுதி செய்கிறது. மொழி இலக்கணம் வடித்த பாணிணியும், மன இலக்கணம் தந்த பதஞ்சலியும் சாதி வேறுபாடுகளை அனுமதிக்கவில்லை.

எனினும், இங்கும் இருக்கிறது சாதிமுறை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இருந்ததுபோல. ஜப்பானிலும், இந்தோநேஷியாவிலும், அரேபியாவிலும், அயர்லாந்திலும், ஆப்பிரிக்காவிலும் இருப்பதுபோல.

எங்கெல்லாம் தொழிற்புரட்சி தீண்டியதோ அங்கெல்லாம் தீண்டாமை மறைந்தது. வெளித்தூண்டுதல்களாலும், உள்ளேயிருந்து உயர்த்தும் ஆன்மீக பலத்தாலும், சாதி தன்னை தகவமைத்துக்கொண்டு மாறுபாடுகளோடேயே மாந்தர் வாழும் இடமெல்லாம் திகழ்ந்துவருகிறது. தொழிற்புரட்சி தொடாத இடங்களிலும், சமூக-முதலாளித்துவம் உயராத இடங்களிலும் இன்னமும் இருக்கிறது சாதி முறை. கார்ல் மார்க்ஸும், மாக்ஸ் வெப்பரும் சொன்னது ஓரளவு ஒத்துவருவதும் இங்குதான்.

அத்தனை சாத்திரமும் அவலத்தை எதிர்க்கையில் எப்படி வந்தது இந்த இறுகிய கட்டுமானங்கள் என ஆராய்ந்தால் உயர்ந்தவை இச்சாதி, தாழ்ந்தவை இச்சாதி என்ற தணிக்கை ஆரம்பித்த காலம் ஆங்கிலேயராண்ட காலமே என்பதைக் காணலாம். அதுவரை இளகிய எல்லைகளையே சாதிகள் சந்தித்திருந்தன. ஆண்ட சாதியார் அடக்கப்பட்டவரானதும், அடங்கியவர் ஆள்பவரானதும் அனுதினமும் நடப்பியழ்வுகளாகவே நாடு பார்த்திருந்தது. இளகிய தன்மையை எடுத்துவிட்டால் இறுகிய சாதியார் இளைப்பார், அவரை நாம் வளைப்போம் என திட்டமிட்ட எவாஞ்சலிக்கர்கள் இயற்றிய சட்டத்தால் வந்தது பாரதீயர் சந்தோசத்திற்குச் சனி. ஜேம்ஸ் மில் போன்றோர் தீட்டிய சித்திரத்தில் இந்திய சாதியார் இணையமுடியாத வட்டங்களுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமுயல் ஆனார்.

பாரதத்தின் கலாச்சார வாழ்வை குறுகிய இறுகிய சாதிகளாய் பிரிப்பதால் காலனியாதிக்கத்தை நிலைநாட்டுதல் எளிது; பாரதத்தின் இயல்பான நெகிழ்வுத்தன்மைகொண்ட கலாச்சாரத்தை அழித்தல் எளிது; யூரோப்பிய கலாச்சார அரசியல் எதேச்சதிகாரத்தை நிலைநாட்டுதலும் எளிது என்றே இங்கனம் சாதி இறுக்கமான அமைப்பாக எடுத்தியம்பப்பெற்றது என்று ரொனால்ட் இண்டெனும் தன்னுடைய "இமேஜினிங் இண்டியா" நூலில் எழுதுகிறார்.
மாறக்கூடிய இந்து ஸ்ம்ருதிகளை காலத்திற்கும், காணவிருக்கும் இலக்கின் கோலத்திற்கும் ஏற்ப மாற்றிக்கொண்டு பயணிக்கவேண்டிய நாம், இன்னமும் விக்டோரியாவின் ஸ்ம்ருதிகளை பின்னேதள்ளாமல் பின்பற்றுகிறோம். கல்வி மற்றும் பொருளாதாரம் பாராமல் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பதை பாரத அரசாங்கமே பாரினில் நடத்திவருகிறது.

இருப்பினும், மனித இயல்பு ஆள்பவரின் ஆசைகளை புறக்கணித்துவிட்டு சாதியை மாற்றும் சம்பவங்களை நிகழ்த்துவதையும் காண்கிறோம். தமிழகத்தில் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்ட நாடார்கள் உயர்ந்த சாதியாராய் விளங்குவதைக்காணலாம். இதுபோன்றே பெங்காலில் எண்ணை பிழியும் சாதியாரும், பஞ்சாப்பின் ஒரு மாவட்டத்திலுள்ள தச்சர்களும், தங்களுடைய சாதியை உயர்ந்த சாதியாக்கியதைக் காணலாம். ஜி எஸ் குரியே மேலாண்மைத் துறைகளும், ராணுவத்துறைகளும் சாதிவேறுபாடின்றி தகுந்தவரை தக்கவைக்கின்றன என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்கிறார். அந்த்ரே பெய்டேல், அத்ரியன் மெயர் போன்றவர்கள் மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் செய்த ஆராய்ச்சிகள் தீண்டத்தகாதவர் பலர் தங்களுடைய சாதியை பழைய நிலையிலிருந்ததைவிட உயர்ந்தநிலைக்கு கொண்டுவந்திருப்பதைச் சுட்டுகின்றன. மற்ற சாதியாரும் இவ்வுயர்வை ஏற்று அவர்களை மதிக்கின்றனர், தீண்டுகின்றனர்.

நம்மறைகள் பகர்ந்தபடி தன்னைத் தன்னால் உயர்த்திக்கொள்ளுபவருக்கும், எதிர்மறைகள் எதிர்மறையாய் போதிப்பின்படி பிற மதங்களுக்கு மாறுவதால் உயர்வைத் தேடுபவருக்கும் ஒரு தெள்ளிய வேறுபாடு தெரிகிறது. மற்ற மதத்திற்கு மாறுபவர் அந்தந்த மதங்களில் பிற்படுத்தப்பட்ட கிருத்துவராகவும், இஸ்லாமியராகவுமே இருக்கிறார். அந்தந்த மதங்களில் உயர் சாதியாரால் ஏளனமாய் நடத்தவும்படுகிறார்.

மேலும், ஆபிரகாமிய மதங்களுக்கு மாறியவருக்கு இந்துக்கள் மரியாதை கொடுக்கவேண்டிய கட்டாயம் ஆபிரகாமிய மதங்கள் பலமுள்ளதாக விளங்கிய இடங்களிலேயே இருந்தன. தங்களுடைய மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்டவரை உயர்வாக மதிக்க இந்துமதத்தார் வற்புறுத்தப்பட்டனர். இதனாலேயே ஆபிரகாமிய மதங்களின் பலம் குறைந்த பகுதிகளில் மீண்டும் மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவராகவே இருக்கிறார். இஸ்லாம் போன்ற மதங்களில் பழைய சாதியின் பெயரை விடுத்து புதிய சாதிப் பெயர் பெற்று ஷேக்குகள் போன்ற இஸ்லாமிய சாதிக்கு முன்னர், பிற இஸ்லாமியர் தாழ்ந்த சாதியாராகவே இருக்கிறார்.

ஆனால், தன்னுடைய சாதியை இந்து மதத்தில் இருந்துகொண்டே உயர்த்துபவர்கள் அச்சாதியின்மேலுள்ள களங்கத்தை முற்றிலுமாய் அழிக்கிறார். மற்ற சாதியாராலும் மதிக்கப்படுகிறார். இதை கோயில்கள் பல நடத்தும் நாடார்களிடமும், நாயக்கர்களிடமும் காணலாம். கோவில்களை நடத்தவே உரிமை இருக்கும்போது, கோவில்களில் நுழைவதற்கு என்ன தடை?

நுழைய இருக்கும் தடைகளை அகற்ற இந்துமதப் புரிதல்கொண்டார் பாடுபடவே செய்கிறார். எதிர்மறை கருத்துக்களுக்கான எதிர்ப்பு சக்தியை இந்து மத மறைகளில் இருந்து அதன் சனாதன வேர்களே பூமியிலிருந்து உறிஞ்சித்தருகின்றன. உதாரணமாய், 2006ம் ஆண்டு நவம்பரில் ஒரிஸ்ஸாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தில், அதை ஆண்டிருந்த அரச பரம்பரைக்குச் சொந்தமான ஜகன்னாதர் கோயிலில் தலித்துக்கள் நுழைய விஷ்வ ஹிந்து பரிஷத் போராடியதைச் சொல்லலாம். தலித்துக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது, வேண்டுமானால் அங்குள்ள ஒரு சுவரின் துளைகளிலிருந்து தரிசனம் செய்யலாம் என்கிற நிலையை எதிர்த்தனர். துறவி லக்ஸ்மனானந்த ஸரஸ்வதி தலைமையில் சென்ற குழு அனைவரும் சமமாய் தரிசனம் செய்ய வசதியாய் அச்சுவரை விலக்கப் போராடி வெற்றிபெற்றது. அச்சுவரும் இடித்துத்தள்ளப்பட்டது. சாதி, மொழி, இன, பால், வர்க்க வேறுபாடின்றி அனைத்து ஜகன்னாதர் கோவில்களிலும் பக்தர்கள் வழிபட்டுவருவதுபோல இங்கும் வழிபாடு நடக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு கட்டிட இடிப்பை பெரிதாய் பூதமாக்கும் ஊடகங்கள் இத்திருச்செயலை அரசாங்க நிர்வாகம் செய்ததாய் தகவல் வெளியிட்டன. இதில் துறவிகளின் பெயரோ, இந்து மதத் தலைவர்கள் பெயரோ வெளிவரவே இல்லை. இதுவரை.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீநாத்ஜி கோவிலையும், ராஜஸ்தானிலுள்ள ஸுலியா கோயிலையும் சமீப கால உதாரணங்களாய் காட்டலாம்.

தென்னிந்தியா போலின்றி வட இந்தியாவின் கோயில்களின் தெய்வீக உருவத்தை கருவறைக்குள் சென்றும் வழிபடலாம். தென்னிந்தியாவில் உள்ள கோயில் விக்கிரகங்கள் போல வட இந்திய தெய்வங்கள் விலையுயர்ந்த அணிகலன்கள் இன்றி இருப்பதும் பக்தர்கள் திருவுருவத்திற்கு நேரடியாக பூசை செய்ய வசதி செய்கிறது. பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் தன் பக்தர்களிடம், பூரி ஜகன்னாதரை கட்டி அணைத்து வணங்கவேண்டும் எனச் சொல்லுவார்.
தேவையற்ற போலித்தன ஆச்சாரங்களை விட்டுவிட்டு அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழையவேண்டும் என்பது மற்ற கோயில்களிலும் விரைவாக நடந்துவருகிறது. ஏன், அம்பேத்காரை கோவிலுக்குள் நுழையக்கூடாதெனச் சொன்னவரின் பேரர் அது ஒரு தவறு என்றும், அம்பேத்காரை அவரது தாத்தா அணைத்து உச்சிமோந்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கவேண்டும் என்றும் இப்போது பேட்டி அளிக்கிறார். அந்தத்தவறை அவரது தாத்தா செய்யாவிட்டால் இந்துமதத்தின் மிகப்பெரிய ஞானியை நாம் இழந்திருக்கமாட்டோம் என்கிறார் அவர்.

இந்த மனமாற்றத்திற்குக் காரணம் மதமாற்றம் இல்லை, இந்துமதத்தின் ஆன்மீக விதிகளை அம்மதத்தார் புரிந்துகொண்டதே.

இந்து மதத்தின் இணையற்ற ஞானியான அம்பேத்காரின் பெயரை உபயோகித்து புத்தமதத்திற்கு மாறுபவர்களுக்கு ஒரு உண்மை தெரியாமல் இருக்கலாம்; ஒருவர் உய்வடைய அவர் தம் மதத்திலிருந்து மாறித்தானாகவேண்டும் என்று புத்தமதம் சொல்லவில்லை என்பதுவே அவ்வுண்மை. இதுவே தெரியாதவர்களுக்கு, புத்தமதத்திலும் சாதிப்பாகுபாடு உண்டென்பதும், போதிசத்துவ நிலையை அடைய ஒருவர் பார்ப்பன அல்லது சத்திரிய சாதியினராய் பிறந்திருக்கவேண்டுமென்கிற கருத்து இன்னமும் அப்படியே இருக்கிறது என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

aiyan.kaLi@gmail.com
http://aiyan-kali.blogspot.com

Sources:
1. History of Dharmasastra, Kane PV
2. "Varna and Caste" Caste in Modern India and Other Essays (Asia Publishing House, London 1962), pp.63-69, Srinivas MN
3. Society in India (University of California Press, Berkley, 1970), Vol.2, pp 545 - 552, David G. Mandelbaum
4. Caste in India, 4th ed., (Oxford University Press, London, 1963), p.I., JM Hutton
5. Homo Hierarchus: The caste system and Its Implications (University of Chicago Press, Chicago, 1980), p. 191, Louis Dumont
6. Imagining India, (Basil Blackwell, Cambridge, 1990), pp 31 - 32, 69., Ronald Inden
7. Caste, Class and Occupation, (Popular Depot, Bombay, 1961), GS Ghurye
8. Caste, Class and Power: Changing Patterns of Social Stratification in a Tanjore Village, (University of California Press, Berkeley, 1965), Andre Beteille
9. Sociological Bulletin, vol. 42. nos. 1 and 2 (March - September 1993), pp. 85 - 112., J. Lerche
10. The Religion of India: The sociology and Hinduism and Buddhism, trans. and ed. Hans H. Gerth and Don Martindale, (Free Press, Glencoe, Ill., 1958), p. 38, Max Weber
11. New-York Daily Tribune, June 25, 1853 MECW Volume 12, p. 125., Karl Marx

Wednesday, 20 June 2007

விகடன் திரைப்பட விமர்சனம் - "ஓசாமா"

விகடன் திரைப்பட விமர்சனம் - "ஓசாமா"
Date: 7 June 2007

ஆண் குழந்தைகளுக்குப் பெண் வேஷமிட்டும், பெண் குழந்தைகளுக்கு ஆண் வேஷமிட்டும் அழகு பார்க்கிற வழக்கம் நம்மிடையே உண்டு. இதை ஒரு வேடிக்கையாகவும், சந்தோஷமாகவும்தான் நாம் செய்-வோம். ஆனால், தன் நாட்டில் நிலவும் சூழல் மற்றும் குடும்ப வறுமையினால் ஒரு தாய், தன் பெண் குழந்தைக்கு ஆண் வேஷமிடும் கதைதான் ‘osama!’

ஒரு சிறுவன், சிறிய டப்பாவில் சாம்பிராணிப் புகை போட்டு, எதிரில் வருபவர்களிடம், ‘‘இது உங்கள் துரதிர்ஷ்டத்தைப் போக்கிவிடும். பணம் கொடுங்கள்’’ என்று கேட்-கிறான். ஒரு அம்மாவும் அவளது 12 வயது மகளும் பர்கா அணிந்துகொண்டு வேகமாக நடந்து வருவதைப் பார்க் கிற சிறுவன், அவர்களிடம் காசு வாங்க ஓடுகிறான். ‘‘சில்லறை இல்லை, போ’’ என்கிற அம்மா, தன் மகளைக் கூட்டிக்-கொண்டு வேகமாக நடக்கிறாள்.

அப்போது அங்கு நீல நிற பர்கா அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ‘‘வேலை வேண்டும்’’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாக வர, ஜீப்பில் துப்பாக்கிகளுடன் வரும் தாலிபான் இயக்-கத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகச் சுடத் துவங்குகிறார்கள். கூட்டத்தைக் கலைக்க, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள். ஊர்வலம் வந்த பெண்கள் ஓடத் துவங்க, பிடிபட்டவர்களைக் கைது செய்கிறார்கள். சாலையோரம் நின்று இதைப் பார்க்கும் அம்மாவும் மகளும் பயத்துடன் வேகமாக வீட்டுக்குள் ஓடி வந்து கதவை அடைக்கிறார்கள்.

தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது. ஆண் துணை யில்லாமல் வெளியில் வரக் கூடாது. இத்தனை கட்டுப்பாடுகளுக்கு இடையே பாட்டி, அம்மா, மகள் எனப் பெண்களே மீதமிருக்கும் அந்தக் குடும்பத்தில் வருமானத்-துக்கு என்ன செய்வது?
பாட்டி, பேத்தியை மடியில் படுக்க-வைத்துக்கொண்டு கண் கலங்குகிறாள். அம்மா அடுப்பு பற்றவைத்துக்கொண்டே, ‘‘கடவுளே! என் கணவனை காபூல் போர்ல பறி கொடுத்தேன். அண்ணன் ரஷ்யா நடத்தின போர்ல இறந்துட்டான். இப்ப நான் என்ன செய்வேன்? இவளா-வது பையனாப் பொறந்திருந்தா, வேலைக்கு அனுப்பலாம். கடவுள் பொண்ணுங்களைப் படைக்காமலே இருந்திருக்கலாம்’’ என்று அழுகிறாள்.

பாட்டி ஆறுதல் சொல்லி, ‘‘உன் பொண்ணுக்கு முடியை ஒட்ட வெட்டி, பேன்ட்டும், குர்தாவும், தொப்பியும் போட்-டுட்டா, பையன் மாதிரியே தெரிவா’’ என்கிறாள்.

‘‘பாட்டி! என்ன சொல்றே? தாலி-பான்கள் பார்த்தா என்னைக் கொன்னுடுவாங்க’’ என்று பதறு கிறாள் சிறுமி, பயத்துடன்.

‘‘அவங்களுக்குச் சந்தேகமே வராது கண்ணு! நீயும் வேலைக்குப் போகலைன்னா நாம மூணு பேரும் பசியாலேயே செத்துரு-வோம்மா’’ என்று பாட்டி சொல்ல, அம்மா தன் கணவனின் பழைய சட்டையை எடுத்து மகளின் அளவுக்கு வெட்டு-கிறாள். குடும்ப நிலையையும், ஊர்வலத்தில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளையும் நினைத்துப் பார்க்கும் சிறுமி, தயக்கத்துடன் வேலைக்குப் போகத் தயாராகிறாள்.

அன்று இரவே, சிறுமியின் பின்னி முடிந்த இரண்டு சடைகளும் கத்தரிக்-கப்பட்டுக் கீழே விழுகின்றன. ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி-யோடும், இறந்து-போன அப்பாவின் பழைய சட்டையோடும் பையன் போலத் தூங்குகிறாள் சிறுமி.

விடிந்ததும், அம்மா அவளை எழுப்பும்போது, மகளின் முகத்தில் அம்மாவின் கண்ணீர்த் துளிகள் உதிர்கின்றன. சிறுமி விழித்து எழுந்து, கண்ணாடியில் தெரியும் தன் முகத்தைச் சோகம் ததும்பப் பார்க்-கிறாள்.

பர்கா போட்டுக்கொண்ட அம்மா, பையனைப் போலத் தெரியும் மகளை அழைத்துக்கொண்டு, வேலை தேடிக் கிளம்புகிறாள். கையில் துப்பாக்கி-யோடு ஜீப்பில் ரோந்து வரும் தாலிபான்களைப் பார்த்து பயப்படுகிறாள் சிறுமி. அப்போது யாரோ அவள் தோளைப் பிடித்துத் திருப்ப... பயத்துடன் திரும்புகிறாள். புகை போடும் சிறுவன் அவளைப் பார்த்து, ‘‘யேய்! நீ பொண்ணு-தானே? ஏன் முடியை வெட்டிட்டே? எனக்குப் பணம் கொடு. இல்லேன்னா சொல்லிக் கொடுத்துடுவேன்’’ என்கிறான்.

அவனைச் சமாளித்து, இறந்து-போன தன் கணவனுடன் ராணுவத்-தில் வேலை பார்த்த ஒருவரின் கடைக்கு அம்மாவும் மகளும் வருகிறார்கள். அவரிடம் அம்மா தன் நிலைமையைச் சொல்கிறாள். ‘‘வெளி-யில என்ன நடக்குதுன்னு தெரியாம பொண்-ணுங்க ஏன் இப்படித் தனியா வந்தீங்க?’’ என்கிறார் அவர். ‘‘எங்க--ளுக்கு வேற வழியில்ல... உங்களை-விட்டா யாரும் எனக்குத் தெரியாது. நீங்கதான் உதவணும்’’ என்று சொல்ல, அவர் சிறுமியைத் தன் சிறிய தேநீர்க் கடையில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளச் சம்மதிக்கிறார். ‘‘யார் கிட்டேயும் பேசாதே! குரல் காட்டிக் கொடுத்-துடும்’’ என்கிறார்.

அன்று மாலை, வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், தாலிபான் ஒருவன் அவளைக் கவனித்து, பின்-தொடர்கிறான். அவள் பயந்து-கொண்டே வேகமாக ஓடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து, வீடு வரை வந்து வீட்டுக்கு வெளியில் நிற்கிறான். வீட்டுக்குள் ஓடி வரும் சிறுமி, ‘‘அம்மா! ஒரு தாலிபான் என் பின்னாடியே வர்றான். நான் பொண்ணுங்கிறதை அவன் கண்டுபிடிச்சுட்டான்’’ என்று அழுகிறாள். அம்மா மெதுவாக கதவைத் திறந்து பார்க்கிறாள். அவன் இல்லை.

அன்று இரவு, சிறுமி பயத்துடன் படுத்திருக்கிறாள். பாட்டி கதை சொல்லித் தூங்கவைக்கிறாள். மறு நாள் காலை, கடைக்கு வருகிறான் அந்தத் தாலிபான். ‘‘அவனை அனுப்புங்க’’ என்று கடைக்-காரரிடம் கேட்கிறான். ‘‘பாவம்! அவன் அநாதை. ரொம்ப ஏழை’’ என்று கடைக்காரர் சொல்ல, ‘‘ஏழைன்னா என்ன?’’ என்று சொல்லி, தாலிபான் அவளை அழைத்துப் போகிறான்.
அந்த ஊரிலிருக்கும் சிறுவர்களை எல்லாம் தாலிபான்கள் ஒரு இடத்-துக்கு அழைத்துப் போகிறார்கள். அதில் அவளும் உடன் நடந்து செல்-கிறாள். அந்தச் சிறுவர் கூட்டத்தில் புகை போட்ட சிறுவனும் இருக்-கிறான். அவன் அவளைப் பார்த்ததும் ‘‘எப்படி இருக்கே?’’ என்று கேட்கிறான். அவள், ‘‘நம்மை எங்கே அழைச்சுட்டுப் போறாங்க?’’ என்று கேட்கிறாள்.

‘‘போருக்காக நமக்குப் பயிற்சி கொடுக்-கப்போறாரு பின்லேடன்’’ என்கிறான் அவன்.
ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் காவலுக்கு இருக்க, பாழடைந்த கோட்டையின் உள்ளே எல்லாச் சிறுவர்களையும் அழைத்துச் செல்-கிறார்கள். எல்லோருக்கும் தலைப் பாகை கட்டிக்கொள்ள வெள்ளைத் துணி தருகிறார்கள். என்ன நடக்குது என்று அவள் புகை போடும் சிறுவ-னிடம் கேட்கிறாள். ‘‘நம்மை எல்லாம் தாலிபான்களாக மாற்ற தலைப்பாகை தருகிறார்கள்’’ என்கிறான். அவளுக்குத் தலைப்பாகையை அவன் கட்டிவிடு-கிறான். ஏறத்தாழ நூறு சிறுவர்கள் இருக்கும் அந்த இடத்தில் எல்லோருக்-கும் குரான் பயிற்றுவிக்கப்-படுகிறது. வகுப்பு முடிந்ததும் எல்லோரும் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். அவள் மட்டும் சோகமாக இருக்கிறாள். அவளின் செயல்கள், அவளை அங்கு அழைத்து வந்த தாலிபானுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இஸ்லாமிய விதிப்படி உடலைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று அங்கிருக்கும் சிறுவர்களுக்கு ஒரு முதியவர் வகுப்பெடுக்கிறார். சிறுவர்-கள் எல்லோரும் சட்டை போடாமல் துண்டு கட்டிக்கொண்டு நிற்கி-றார்கள். இதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் அவள், ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் தானும் அதில் கலந்துகொண்டு புத்திசாலித்தன-மாகத் தப்பிக்கிறாள். உருவத்தில் ஆணாக இருந்தாலும், அவனது செயல்கள் பெண்ணைப் போல இருப்பதாக அந்த முதியவர் சொல்-கி-றார். குளித்து முடித்து வெளியில் வந்ததும் சில சிறுவர்கள், ‘‘யேய்! இது பொண்ணு... பொண்ணு...’’ என்று சொல்லித் துரத்த, அவள் ஓடுகிறாள். புகை போடும் சிறுவன் அவளருகில் வந்து நிற்கிறான். ‘‘இவன் ஒண்ணும் பொண்ணு இல்ல, பையன்’’ என்கிறான்.
‘‘அப்படின்னா அவன் பேர் என்ன?’’

‘‘ஒசாமா!’’

மறுநாள் காலையில், குரான் வகுப்பு முடிந்து வெளியே வரும்-போது, இவளை சிறுவர்கள் சிலர் கூடி நின்று கேலி செய்கிறார்கள். ‘‘இது பொண்ணு. கையைப் பாரு, பொம்பள மாதிரி இருக்கு. குரலைப் பாரு...’’ என்று அவளைத் தள்ளி-விட்டுக் கேலி செய்ய, புகை போடும் சிறுவன் ஓடி வந்து காப்பாற்றுகிறான். ‘‘இவன் பையன்தான்... வேணும்னா பாருங்க’’ என்று அவளை அருகில் இருக்கும் மரத்தின் மீது ஏறச் சொல்கிறான். முதல் நாள் அவனுடன் அந்த மரத்தில் ஏறியிருந்த பழக்கத்தில் அவள் மரத்தின் மீது ஏறத் துவங்கு கிறாள். மரத்தின் மீது ஏறிய அவள், இறங்கத் தெரியாமல் விழிக்-கிறாள். அழுகிறாள்.

சிறுவர்கள் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்க... ஒரு முதியவர் வந்து ‘‘அவனைக் கீழே இறக்குங்க’’ என்கிறார். பயம் தெளிவதற்காக அருகி-லிருக்கும் கிணற்றில் அவளைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். மற்ற சிறுவர்கள் குரான் வகுப்பில் இருக்க, அவள் மட்டும் கிணற்றில் தொங்கு-கிறாள். பயத்தில், ‘‘அம்மா... அம்மா...’’ என்று வாய்விட்டு அழுதுகொண்டே இருக்கிறாள். கொஞ்ச நேரம் ஆனதும், அந்த முதியவர், ‘‘போதும்’’ என்று சொல்ல, கயிற்றை இழுத்து அவளை மேலே தூக்குகிறார்கள். அழுது-கொண்டே இருக்கும் அவளது இடுப்பி-லிருக்கும் கட்டுக்களை விடுவிக்கும்போது, அந்த முதியவர் அவளை விநோதமாகப் பார்க்கிறார். அவள் பருவம் அடைந்-திருக்கிற விஷயம் அவருக்குத் தெரிகிறது. மேலோட்டமான சான்று-களைப் பார்த்து, ‘‘இவ பொண்ணு’’ என்று சொல்ல, அவள் அங்கிருந்து ஓடுகிறாள். சிறுவர்கள் துரத்த, ‘‘அவளைக் கைது செய்யுங்கள்’’ என்று ஒருவன் கத்து-கிறான்.
அன்றே சிறையில் அடைக்கப்படு-கிறாள். மறுநாள், ஒரு மைதானத்தில் பொதுமக்கள் கூடியிருக்க... தாலி-பான்-கள் கூடி, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குகிறார்கள். பெண்களின் ஊர்வலத்தைப் படம் பிடித்த ஒரு வெளிநாட்டு நிருபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, அங்கேயே சுட்டுக் கொல்லப்படுகிறார். இன்னொரு பெண், சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்லப்படுகி றாள். மூன்றாவதாக, ‘ஆண் வேடமிட்ட சிறுமி’ என்று அவளை அழைக்கிறார்கள். அவள் மதரஸாவில் இருந்த 70 வயதுக்கும் மேற்பட்ட முல்லா ஒருவரின் வேண்டு-கோளுக்-கிணங்க மன்னிக்கப்பட்டு, அவருக்கே அவளைத் திருமணம் செய்துவைப்பதாக அறிவிக்கப்படு-கிறது. அவள் ‘இவர்-கூடப் போக-மாட்டேன். அம்மா -கிட்ட போகணும்’ என்று அழுகிறாள். அதைப் பொருட்-படுத்தாமல், கிழவர் அவளை ஒரு மாட்டு வண்டியில் வைத்து, ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

பூட்டிய அந்த வீட்டைத் திறந்து அவளை உள்ளே அனுப்பிப் பூட்டு-கிறார். அவள் சோகமாக வீட்டுக்குள் நுழைய, உள்ளே குழந்தை-களுடன் இருக்கும் கிழவரின் மூன்று மனைவிகள் அவளைச் சோகமாகப் பார்க்கிறார்கள்.

அன்று மாலை, அவளுக்கு வேறு உடைகள் கொடுக்கப்-படுகின்றன. கிழவரின் மனைவி-கள் அவளுக்கு அலங்கரித்-துக்கொண்டே, தங்களின் சோகக் கதையைச் சொல்கிறார்-கள். ‘‘நாமெல்லாம் அகதிகள். என் அண்ணனைக் கொன்-னுட்டு இந்த முல்லாவுக்குக் கட்டிவெச்சுட்டாங்க’’ என்-கிறாள்.

அன்று இரவு, கிழவர் புது மாப்பிள்ளை போல வருகிறார். அவளைக் கூட்டிக்கொண்டு தன் அறைக்குப் போகிறார். முதலிரவு முடிந்து வெளியே வரும் அவர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கிறார். இன்னொருபுறம், அவள் அழுது கொண்டே இருக்கி-றாள். அவள் 12 வயதுச் சிறுமியாக ஸ்கிப்பிங் ஆடும் காட்சிகள் தோன்றி மெள்ள மறைய... நெஞ்சை அழுத்தும் சோகப் பாட லுடன் திரையின் மீது எழுத்துக்கள் நகரத் துவங்குகின்றன.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், நம்மை உறையவைக் கிறது. வெட்டப்பட்ட சடை முடியை அம்மா மகளிடம் கொடுப்பதும், அதை அவள் சிறிய மண் தொட்டியில் வைத்து நீரூற்றுவதும் சோகக் கவிதைகள். வானவில்லின் கீழ் நடந்து சென் றால் ஒரு பெண் ஆணாக மாறுவதாகப் பாட்டி சொல்லும் கதையும், தாலிபான் கள் பீய்ச்சியடிக்கும் நீரில் தோன்றும் வானவில்லின் கீழ் அவள் ஸ்கிப்பிங் ஆடுவதாக வரும் இடங்களும் அவள் பருவத்தின் குதூகலத்தைக் குறியீடாகச் சொல்-பவை.

இந்த ஆப்கானிஸ்தான் நாட்டுப் படம் 2003&ல் வெளியாகி, கோல்டன் குளோப் விருதையும், கேன்ஸ் விருதையும் பெற்றது. திரைக்கதை எழுதி, படத்தொகுப்பு செய்து இதை இயக்கியவர் சித்திக் பர்மக்.

உலகின் எந்த மூலையில் வன்முறை நடந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் பெண்கள்தான். பெண் ணின் சம்மதம் இல்லாமல் தாலிபான்கள் தண்டனையாகச் செய்துவைத்த திருமணம் போல, நம் ஊரில் மேள தாளத்துடன் விமரிசையாக நிறை வேற்றப்படும் தண்டனைகள்தான் எத்தனை? இன்றைக்கும் எத்தனை திருமணங்கள் பெண்ணின் விருப்பம் கேட்டுச் செய்யப்படுகின்றன? வாழ்க்கை யின் ஒவ்வொரு நிலையிலும், ‘நான் விரும்பியதை மட்டுமே செய்தேன்!’ என்று எத்தனை பெண்களால் சொல்ல முடியும்? முதல் படம்.. முதல் தர படம்! ஆப்கானிஸ்தானிலுள்ள பஞ்சிர் எனும் இடத்தில் 1962&ல் பிறந்தார் சித்திக் பர்மக். திரைப்படம் மீதிருந்த ஆர்வத்தால், மாஸ்-கோவுக்குப் போய் திரைப்படக் கலையைக் கற்று முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஆப்கானில் அரசு திரைப்பட நிறுவனத்தில் மேலாளராக நான்கு வருடங்கள் பணிபுரிந்தார். சில திரைக்கதைகளை யும் குறும்படங்-களையும் எடுத்துள்ள இவர், ஆப்கானில் குழந்தைகளுக் கான கல்வி மையத்தின் இயக்குநராக இருந்தார்.

தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த-தும், இவரது வீட்டில் புகுந்து இவரது 8னீனீ கேமராவையும், படங்களையும் அழித்தனர். எனவே, பாகிஸ்தானுக்கு தப்பித்துப் போய் ஆறு ஆண்டுகள் தங்கி இருந்தார். பின்னர், தன் நாட்டுக்குத் திரும்பி வந்து அவர் எடுத்த முதல் படம் ‘ஒசாமா’.



முகத்தில் அறையும் நிஜம்! ‘‘தேவதைகளாக, தெய்வங்களாகப் பெண்களைக் கொண்டாடுவதான கற்பனைகளை உலவவிடும் இந்த உலகம், உண்மையில் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு ஓர் உதாரணம்... ஒசாமா!
பார்வையிலேயே தன் சோகங்கள் அத்தனையும் படம் பிடித்துக் காட்டி விடுகிறாள், அந்தச் சிறுமி! சாம்பி ராணிப் புகை போடும் சிறுவன் முதலில், ‘உன்னைக் காட்டிக் கொடுத்துடுவேன், பணம் கொடு!’ என்று மிரட்டினாலும், பின்பு அவனே அவளைக் காப்பாற்றும் பொருட்டுத் தவிக்கும்போது, சிறுவர்-களின் கள்ளங்கபடற்ற தூய்மையான இதயம் பளிச்சென்று புரிகிறது.
டீக் கடையின் பனிபடர்ந்த கண்ணாடியில், சடையுடன் கூடிய ஒரு சிறுமியின் ஓவியத்தை அந்தச் சிறுமி வரைகிற இடத்தில், நம் கண்களிலும் கண்ணீர் கசிகிறது. 70 வயதான கிழவருக்கு அவள் கட்டிவைக்கப்படும்போது, நாம் உறைந்தே போகிறோம். யதார்த்தமான நிஜம் முகத்தில் அறைகிற படம்... ‘ஒசாமா’!’’
-&நடிகர், இயக்குநர் பொன்வண்ணன்

Monday, 18 June 2007

சீனா வீசிய ‘அருணாச்சல்’ குண்டு!

சீனா வீசிய ‘அருணாச்சல்’ குண்டு!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஜூனியர் விகடன் 20 June 2007

இந்தியாவின் அயலுறவுக் கொள்கைஎன்ன என்பது இப்போது மிகப்பெரும் கேள்விக் குறியாக எழுந்துள்ளது. நமது நட்பு நாடுகள் எவை? எதிரிகள் யார்? எதுவுமே புரியவில்லை. இலங்கைக்கு ஆயுதங்கள் தருவோம் என்று இந்திய அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், ‘எங்களை நாட்டாண்மை செய்ய அனுமதிக்கமாட்டோம்’ என்று சிங்கள கட்சிகள் இந்தியாவை மிரட்டுகின்றன. அமெரிக்காவோடு நாம்தான் ரொம்ப நெருக்கம் என்பது போல காட்டிக்கொண்டோம். இப்போது அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம். சீனாவோடு கை குலுக்கினோம். அவர்களோ அருணாச்சலப் பிரதேசம் தங்களுடையது என் கிறார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போதைய ஒரே கவலை, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதுதான். அதில்தான் நாட்டின் அத்தனை முக்கிய அரசியல் இயக்கங்களும் மும்முரமாயிருக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசப் பிரச்னை சமீபத்திய ஜி.எட்டு மாநாட்டில் பெரிதாக வெடிக்கும் எனப் பலரும் எதிர் பார்த்தார்கள். ஆனால், அதுபற்றி இந்தியாவோ, சீனாவோ அங்கு பேசவில்லை. பேசாமல் விட்டது சீனாவுக்குத் தான் லாபம். குறைந்தபட்சம் நமது கண்டனத்தையாவது அங்கே நாம் தெரிவித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டோம். அப்படி என்னதான் பிரச்னை?

அண்மையில் இந்தியாவிலிருந்து நூற்று ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சீனாவுக்கு ஒரு பயிற்சித் திட்டத்துக்காக செல்வதற்கு ஏற்பாடாகி யிருந்தது. அவர்கள் விசா வேண்டுமென விண்ணப்பித்தபோது நூற்றி ஆறு பேருக்கு விசா வழங்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து விண்ணப்பித்த அதிகாரிக்கு மட்டும் விசா வழங்க சீனா மறுத்து விட்டது. ‘‘அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது. எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை’’ என்று சீனா கூறிவிட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பது இது முதல்முறை அல்ல, மூன்றாவது முறை. சீனாவின் முரட்டுத் தனத்துக்குப் பதிலடி கொடுப்பது போல இப்போது அந்த பயிற்சித் திட்டத்தை மொத்தமாக இந்தியா ரத்து செய்துவிட்டது.
இதனால் சீனாவுக்குச் சென்று பெய்ஜிங்கிலும், ஷாங்காய் நகரிலும் பயிற்சி பெறுகிற நல்ல வாய்ப்பு பறிபோய் விட்டதென்ற வருத்தம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நிச்சயம் இருக்கவே செய்யும். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு என்ற அந்த அதிகாரிக்கு மட்டும் விசா கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண் டாடும் பிரச்னை, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய\சீன உறவு சற்றே மேம்பட்டு, சீன அதிபர் கடந்த ஆண்டு இந்தியா வந்த நேரத்திலும் இந்த சர்ச்சை எழுந்தது. இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யுக்ஷி, ‘‘அருணாச்சலப் பிரதேசம் முழுமையும் சீனாவுக்கே சொந்தம்’’ எனக்கூறி பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டார். அப்புறம் அது அமுங்கிப்போனது.

இந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக எப்போதும் இருந்ததில்லை. உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் இருப்பதும், சீனாவுக்கு எதிராக இந்தியாவை முன்நிறுத்த அமெரிக்கா செய்து வரும் முயற்சிகளும் இந்திய\சீன உறவை மறைமுகமாக பாதித்தே வருகின்றன.
1962&ம் ஆண்டு நடந்த இந்திய\சீன யுத்தத்தின் போது அருணாச்சலப்பிரதேசத்தின் பல பகுதி களை சீனா கைப்பற்றிக்கொண்டது. பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக கைப்பற்றிய இடங் களை விட்டு விட்டு அது பின்வாங்கிச் சென்றது.

சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பிறகு உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா மாறிய சூழலில் சீனாவுடனான உறவை சீர்படுத்திக் கொள்வதன் மூலமே அமெரிக்கா ஆதிக்கத்தைத் தடுக்க முடியும் என்ற நோக்கோடு இந்தியா சீனாவிடம் நெருங்கிச் சென்றது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு 1988&ல் பயணம் மேற்கொண்டார். மெள்ள மெள்ள அந்த உறவு சீர்பட்டு 1996&ல் இரு நாடுகளும் தமது எல்லைப் பிரச்னை குறித்து ஒரு உடன் பாட்டுக்கு வந்தன. ஆனால், 1998&ல் இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததற்குப் பிறகு மீண்டும் இந்திய\சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிடும் காரியத்தில் சீனா ஈடுபடத் துவங்கியது. இவற்றை யும் மீறித்தான் கடந்த ஆண்டு சீன அதிபரின் இந்திய விஜயம் நிகழ்ந்தது.

சீன அதிபரின் விஜயத்தைத் தொடர்ந்து இந்திய\சீன வர்த் தகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. 2010&ம் ஆண்டில் இந்திய\சீன வர்த்தகம் நாற்பது மில்லியன் டாலரை எட்டிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில் சீனாவின் இந்தத் தலை கீழான அணுகுமுறையைக் கண்டு பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவின் இந்தத் திடீர் மனமாற்றத்துக்கான காரணம் இந்திய\அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்திய ராணுவம் மெள்ள மெள்ள அமெரிக்க மயமாகி வருவதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் முப்பது மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவிருப்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவுடனான உறவை வர்த்தக ரீதியில் மட்டுமின்றி ராணுவ ரீதியாகவும் சீனா நோக்குகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவக்கப்பட்ட குயிங்காங்\திபெத் ரயில் பாதையை இந்தியாவைச் சுற்றி நேபாளத்துக்கும், பூட்டானுக்கும் விரிவுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அது நிறைவேறி விட்டால் சீனத் துருப்புகள் விரைவாகவும், எளிதாகவும் இந்தியாவின் எல்லைப் புறங்களில் நிலைகொள்ள முடியும். இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளையட்டியுள்ள மியான்மரின் கோகோ தீவுகளிலிருந்து இந்தியாவை சீனா கண்காணித்து வருவதாக கூறப்படுவதுண்டு. அருணாச்சலப் பிரதேசத்தைத் தனது பிடிக்குள் வைத்துக் கொண்டால் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்பது சீனாவின் திட்டம் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய\சீன உறவை மேம்படுத்தியதில் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தூதராக இருந்தபோதும் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சீன வரலாறு பற்றிய தனது ஆழமான அறிவைப் பயன்படுத்தி இந்திய\சீன நட்புறவை வளர்த்தவர் அவர். அதன் தொடர்ச்சியாகவே எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் அந்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்தே அவர் அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டார். அதற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சீனாவோடு இந்தியாவை நெருக்கமாக கொண்டு செல்ல யார் முயற்சித்தாலும் அதை அமெரிக்கா அனுமதிக்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஈரான் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளில் இந்தியாவை அமெரிக்க சார்பாளராக காட்டுவதன் மூலம் சீனாவுடனான இந்தியாவின் உறவை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. அப்படித்தான் சீன&இந்திய வர்த்தகத்தை பெரும் அளவில் உயர்த்தும் நோக்கோடு திறக்கப்பட்ட நாதுலா பாதை விவகாரத்திலும் அமெரிக்கா செயல் படுகிறது. நேரடியாக இந்த பாதை திறப்பு விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சொல்லாவிட்டாலும், சர்வதேச நிலைப்பாடுகளில் தங்களுக்கு சாதகமாக இந்தியாவை நிர்ப்பந்தித்து பேச வைப்பதன் மூலம் சீனாவுக்கு எரிச்சல் மூட்டியே அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் விவகாரம் போன்றவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு நேரடியாகவே அமெரிக்காவின் சார்பாக இருப்பது இதற்கு உதாரணங்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்றவிரும்பும் அதிகார வர்த்தகத்தினர், அதன் பொருட்டு இந்தியாவின் இறையாண்மையையே விட்டுக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் அணுசக்தி ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையைக் கட்டுப் படுத்தவே சீனா எல்லைப் பிரச்னையை எழுப்புகிறது. இந்தியாவுக்கு சொந்தமான முப்பத்தெட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை காஷ்மீர் பகுதியில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக இந்தியாவும், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியா எடுத்துக் கொண்டு விட்டதென சீனாவும் குற்றம் சாட்டிக் கொண்டாலும் தமக்கிடையே நல்லுறவு வளர வேண்டும் என்பதையே அவை விரும்பின. தமக்கு இடையிலான கூட்டுறவு உலகில் ஆதிக்க சக்தி களாகத் தம்மை மாற்றும் என்று அவை நம்பி வந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்பு கிறவர்களும் அதைத்தான் எடுத்துக் காட்டுகின்றனர். சீனாவும் இந்தியாவும் சேர்ந்தால் உலக மக்கள் தொகையில் அது சுமார் முப்பத்தெட்டு சதவிகிதமாகும். ஆனால், தற்போது உலகின் மொத்த உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு வெறும் ஏழரை சதவிகிதம் மட்டுமே. 2025&ம் ஆண்டில் அது இருபது சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி உயர்ந்தால் உலக அரசியல், பொருளாதார சூழலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பு. இதை உணர்ந்துதான் அமெரிக்கா வேகவேகமாக இந்தியாவிடம் நெருங்கி வருகிறது. எதிர் காலத்தில் தமது ஆதிக்கத்துக்கு சீனா மிகப்பெரும் தடையாக இருக்கும் எனக் கருதும் அமெரிக்கா, இப்போதே அதைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

நமது நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டி சீனாவிடமும் காரியம் சாதிக்கலாம் என்ற நோக்கோடு மாறிமாறி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமக்கு இடையேயான போட்டியில் சீனாவும், அமெரிக்காவும் இந்தியாவைப் பகடையாக உருட்டிக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் அதிகம் பாதிப்பு அடையப்போவது இந்தியா தான். அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக இந்தியா சீனாவிடம் நெருக்கம் காட்டினால் அணுசக்தி ஒப்பந்தம் என்ற சாட்டையை சொடுக்க அமெரிக்கா தயங்காது என்பதைத்தான் நாம் இப்போது பார்த்து வருகிறோம். அதுபோலவே, நாம் அமெரிக்காவிடம் நெருங்கிச் சென்றால் சீனா எல்லைப் பிரச்னை என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் என்பதற்கு அருணாச்சலப் பிரதேசப் பிரச்னை ஒரு உதாரணம்.

அமெரிக்கா, சீனா இரண்டையும் தவிர்த்து சுயேச்சை யான அணுகுமுறையை இந்தியா மேற்கொள்ளமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான கூறுகள் நமது வெளியுறவுக் கொள்கையில் இருந்தன. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவை அழிந்து வருகின்றன. நடுநிலையான நமது அணுகுமுறை இப்போது காணாமல் போய்விட்டது. சுயேச்சையான வெளியுறவுக் கொள் கையை பலவீனப்படுத்துவது நமது சுதந்திரத்தையே நெருக் கடிக்குள்ளாக்கி வருகிறது. இதனால் உலக அரங்கில் நாம் கேலிக்கு ஆளாகியிருக்கிறோம். அமெரிக்கா மட்டுமல்ல அருகாமையில் இருக்கிற இலங்கையும், பங்களாதேஷ§ம் கூட நம்மை மிரட்டக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நமது வெளியுறவுக் கொள்கை நீர்த்துப்போனதே காரணம். நமது இறையாண்மையை விட்டுக்கொடுக்காத வெளிப்படையான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக, சாதுர்யம் என்ற பெயரில் மீள முடியாத சிக்கலில் நமது நாட்டை ஆழ்த்தி வருகின்ற அதிகாரிகளின் போக்கு மாற்றப்பட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமோ, அருணாச்சலப் பிரதேசமோ... இந்தியாவின் நலனுக்கு எதிரான எதற்கும் நாம் இணங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது. நமது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இனியாவது மனம் திருந்தி அன்னிய நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தரமாக நம் நாட்டை மீட்டெடுப்பார்களா?

Friday, 15 June 2007

மலர் மன்னன் திண்ணை கட்டுரை -27

ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்
மலர்மன்னன் Thursday June 14, 2007

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மதப் பித்து தலைக்கு ஏறிவிடுமானால் சிறிது விவரம் அறிந்தவர்கள் கூட எப்படியெல்லாம் தடுமாற நேரிடுகிறது என்பதற்கு நாகூர் ரூமியானவர் வெங்கட் சாமிநாதன் பிறைநதிபுரத்தான் என்பவர் தொடர்பாக எழுதிய கட்டுரைக்குப் பதில் எழுதியமை ஒரு சான்று (பார்க்க: திண்ணை ஜூன் 07, 2007). நாகூர் ரூமி முகமதியம் மீது தனக்குள்ள புனித உணர்வை நிரூபணம் செய்வதற்காக வேண்டி ருஷ்டி விஷயத்தில் பிற்பாடு வரம்பு மீறி எழுத வேண்டியதாயிற்று என்று வெங்கட் சாமிநாதன் சொன்னால் அது ரூமிக்கு முகமதியத்தின் மீது தனக்குள்ள புனிதமாகத் தோன்றாமல் தன் மதத்திற்குரிய புனிதமாகத் தோன்றுவானேன்? முகமதியம் தனது புனிதத்தை நிரூபித்துக் கொண்டாயிற்று எனத் தேவையின்றித் தனது மதத்திற்கு ஒரு நற்சான்றை அவர் அளித்துக் கொள்வானேன்?

காரணம் எதுவாயினும் ருஷ்டியின் நூலுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்று முதலில் சொன்ன ரூமி பிறகு பிராயச்சித்தம் மாதிரி நூலாசிரியனையே அடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்கிற அளவுக்குப் போவானேன்? எங்கே தன் மீதும் ஏதாவது பத்வா வந்துவிடுமோ என்கிற அச்சமா? பொதுவாகக் கண்ணை மூடிக்கொண்டு மரண தண்டனை விதிப்பதுதான் அவ்விடத்து சம்பிரதாயம் ஆதலால் அதற்குப் பொருந்துமாறு ருஷ்டியை அடித்துக் கொல்ல விழைவு தெரிவித்துத் தமது மேலிடத்தைத் திருப்தி செய்யப் பார்த்திருப்பாரோ ஒருவேளை?

நாகூர் ரூமியின் தொடக்க காலத்தில் அவரது எழுத்தில் ஒரு சிறு பொறி இருப்பதைக் கண்டு அதனை ஊதிப் பெருக்க முனைந்தவர்களுள் நானும் ஒருவன். கணையாழியில் அவரது படைப்புகள் இடம்பெறச் செய்வதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. மேலும், கால் இதழிலும் அவரது கவிதைகள் சிலவற்றை வெளியிட்ட நினைவு உள்ளது. எதற்காக இதை நினைவு படுத்துகிறேன் என்றால் முகமதியரைப் பொருத்தவரை மதம் எப்படியெல்லாம் தனிமனித சிந்தனைக்கு விலங்கு போட்டுவிடுகிறது என்பதைப் புலப்படுத்துவதற்காகத்தான். ரூமியின் தனி மனித சிந்தனை தானும் ஒரு படைப்பாளி என்கிற பிரக்ஞையால் தொடக்கத்தில் மிகவும் இயல்பாக ஒரு நியாயத்தை எடுத்துச் சொன்னது. உடனே அவர் சார்ந்துள்ள மதம் அவரது தனி நபர் சிந்தனா சுதந்திரத்தில் தலையிட்டு அவரை வழிக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது! முகமதிய மதத்தில் இருந்துகொண்டு சிந்தனா சுதந்திரத்துடன் தனது கருத்தை வெளியிட ஒருவருக்கு அசாத்தியமான துணிவு தேவைப்படுகிறது. எல்லாரிடமும் அதை எதிர்பார்க்க இயலாதுதான். நாகூர் ரூமி நம் அனுதாபத்திற்குரியவர்.

படைப்பிலக்கியத்தில் சாதனைகள் செய்வதற்கான பல சாத்தியக்கூறுகள் நாகூர் ரூமியிடம் இன்னமும் வற்றிவிடவில்லை. மார்க்க அறிஞர் என்கிற புஜ கீர்த்தி லௌகீக ரீதியாக ஒரு வேளை அவருக்கு நிரம்பப் பயன்களைத் தரக்கூடும். ஆனால் அதில் சபலப்பட்டுவிடாமல் படைப்பாற்றலில் அவர் கவனம் செலுத்துவாரேயானால் அது அவருக்கு லௌகீகப் பயன் தராவிடினும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில்ஒரு நிரந்தரமான அந்தஸ்தைத் தரக் கூடும். தஞ்சை மாவட்டத் தமிழ் பேசும் முகமதிய சமூகத்தின் பிரத்தியேகச் சாயல்களை மிக விரிவான சீலையில் வரைந்து தரக் கூடிய தூரிகை நாகூர் ரூமியிடம் உள்ளது. அது காய்ந்துபோய் அவர் வீட்டின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. அதை வேண்டாத குப்பை என்று வீட்டில் இருக்கிறவர்கள் வீசி எறிந்துவிடுமுன் நாகூர் ரூமி தேடி எடுத்துக் கொள்வது நல்லது. ரூமியின் தொடக்க கால ஊக்குவிப்பாளர்களில் ஒருவன் என்கிற முறையில் இதைச் சொல்ல எனக்கு அனுமதி உண்டு என நம்புகிறேன்.

கொஞ்ச காலத்திற்கு முன்னால் ம.வே. சிவக்குமார் என்கிற எழுத்தாளர் தனக்கு உரிய ஆதரவு கிட்டாத ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள மாட்டாமல் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அறிவித்தது நினைவிருக்கும். அவரை முதல் முதலாகக் கணையாழியில் பிரசுரித்துப் பலரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது நான்தான். இதற்காக அவர் என் வீடு தேடி வந்து தன்னை ஒரு சிஷ்யப் பிள்ளை மாதிரியெல்லாம் காட்டிக் கொண்டார். ஆனால் பிறகு தன்னை ஊக்குவித்தவர்கள் என்று அவர் போட்ட பட்டியலில் எனது பெயர் இல்லை. காரணம் நான் பிரபலஸ்தன் இல்லை. இதையும் எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஒருவேளை நாகூர் ரூமியும் இதனைப் படித்த பிறகு நீயாவது என்னை ஊக்குவித்ததாவது என்று எள்ளி நகையாடக்கூடும்.

வளரும் வேளையில் வலம் வந்து வணங்குவதும் வளர்ந்தபின் வம்பு செய்வதும் சிலருக்குச் சுபாவமாகவே அமைந்துவிட்ட சாமர்த்தியம்.

அன்புடன்,
மலர்மன்னன்

ஐயன் காளி அவர்களின் திண்ணை தொடர்: பாகம்-2

கோயில்களில் பிறமதத்தார் - ஒரு முரண்பார்வை - பாகம் 2
ஐயன் காளி Thursday June 14, 2007

வாதம் 8: பிற மதத்தவரை அனுமதியோம் என்பது ஒரு குறுகிய பார்வை அல்லவா. பன்னெடுங்காலம் முன்பு தோன்றிய மதத்தார் பதின்மவயது பார்வைகொண்ட சிறுபான்மை மதங்களின் பார்வையை ஏன் கொள்ள வேண்டும்?

வைத்தியம்: சரியான புரிதலால் வருவது தர்க்கம். தவறான புரிதலால் வருவதோ குதர்க்கம்.
கொல்லுகிறது விஷக்கிருமிகள் என்பதும், மனிதரைக் கொல்லுவதால் அவை வாழ்கின்றன எனபதும் ஒரு உண்மை நிலை.

அவற்றின் கொலை வெறி தவறு என்பது ஒரு வாதம். இங்கே முதல் வாதம்.
அவற்றை அழித்தால் பிழைக்கலாம் என்பது தெளிந்த மற்றொரு உண்மை நிலை.
இந்நிலையில், முதல் வாதத்தின்படி கொலை வெறி தவறென்பதால், விஷக்கிருமிகளைக் கொல்லுவதும் தவறு என்பது இரண்டாவது வாதம்.

இவ்விரண்டு வாதங்களும் தனித்தனியே கொண்டு செல்லும் முடிவுகள் எதிரானவையாகவே இருக்கும். மேலும் ஒரு வாதம் உண்மைநிலைக்கு எதிரானதாய் இருக்க முடியாது. உண்மை நிலைக்கு எதிரானதாய் இருக்கும் வாதத்தால் உண்மையை அறிய முடியாது. இப்புரிதலின்படி தவறைச் சரி செய்யும் எதுவும் தவறாய் இருக்க முடியாது. இதன்படி முதல்வாதம் மட்டுமே உண்மை. ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.

வாதம் 9: இரண்டையும் ஏற்றுக்கொண்டு ஒரு வித சமாதானத்திற்கு வரலாமே?

வைத்தியம்: இரண்டாவது வாதம் முதல்வாதத்தோடு அமைதிபூண்டிருப்பதால் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் விஷக்கிருமிகள் மட்டுமே உயிர்வாழும். அவற்றின் வாழ்வு மனிதரின் அழிப்பால் நிகழ்வதால், மனிதர் அழிந்த பின் வாழ காரணிகள் இல்லாததால் அவையும் அழியும். விஷத்திற்கும் உணவிற்கும் உடன்பாடு ஏற்பட்டால், உணவும் விஷமாகும். இறுதியில் எதுவும் எஞ்சாது. எஞ்ச வேண்டுமானால் விஷக்கிருமிகள் அழிக்கப்படவே வேண்டும்.

வாதம் 10: இதனால்தான் எங்கள் மதத்திற்கு அடிமையாய் இருங்கள் என்கிறோம். உங்களை முற்றிலும் அழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் உயிர் சத்தை உறிஞ்சி நாங்களும் வாழ்ந்துகொள்கிறோம், நீங்களும் வாழலாம் என்று பரந்த முடிவை உங்களின்மேல் இரக்கத்தோடு வைக்கிறோம். இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

வைத்தியம்: எலியின் வேதனைக்குரல், பூனைக்கு வீணையின் நாதம். உங்களுக்கு எங்கள் உயிர்சத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்து குற்றுயிரோடு வாழ்வது மரணத்தைவிட அதீத வேதனை தரும் நிகழ்வு. இவ்வேதனை எமக்கும், எம் குழந்தைகளுக்கும் வேண்டாம். மேலும், விஷக்கிருமிகளுக்குள்ளும் தூய விஷக்கிருமிகள், அந்த அளவு தூய்மையற்ற விஷக்கிருமிகள் என்கிற பாகுபாட்டை விஷக்கிருமிகளின் வேதங்களே பரப்புவதால் உங்களுக்குள்ளும் என்றும் வன்முறையும், வேதனையும், நரகமும் நிரந்தரம்.

வாதம் 11: இதைத் தீர்க்க என்ன வழி?

வைத்தியம்: ஒன்றல்ல. இரண்டுண்டு. இரண்டு மட்டுமே உண்டு.

முதல் வழி: தங்கள் மதம் தவிர்த்த மற்ற மதங்களும், வழிபாடுகளும், நம்பிக்கைகளும், ஆன்மீகப் பயிற்சிகளும் இகலோகத்தில் தண்டிக்கப்படவேண்டியவை, அழிக்கப்படவேண்டியவை; பரலோகத்தில் நரகத்தைத் தருபவை என்று இருக்கும் கருத்துக்களை அவர்களது மதப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடவேண்டும். அங்கனம் செய்தால் அங்கனம் செய்த மதத்தினர் இந்துக்கோயில்களுக்கு வருவதை அனுமதிக்கலாம்.

இரண்டாம் வழி: முதல்வழி முடியாது என்றால், இந்து மதத்திற்கு மீண்டு வருபவர்களை மட்டும் அனுமதிக்கலாம். ஒரு இந்து எந்த தெய்வத்தையும் வழிபடலாம். எனவே கிருத்துவ இஸ்லாமிய மதங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் தங்களது விருப்ப தெய்வங்களான ஏசுவையும், அல்லாவையும் வழிபட எந்தத் தடையுமில்லை. அனைத்துத் தெய்வங்களையும் மதிக்கின்ற பண்பு இந்து மதத்திற்கு இருப்பதால் அந்த மதிப்பினை மற்றவர்கள், முக்கியமாக பிற மதத்தவருக்கு அனுமதியில்லை எனும் ஆலய நிர்வாகிகள், தெரிந்துகொள்வதற்கு இந்து மதத்திற்கு மீள்வது ஒரு அத்தாட்சியாய் அமையும்.

வாதம் 11: எல்லாம் இறையே என்பது இந்து மதக் கருத்தாயிருப்பின், எல்லாரையும் அனுமதிக்க வேண்டியதுதானே? மேலும், மரியாதை கொடுப்பவர் மரியாதை கொடுக்கட்டும், பக்தியுள்ளவர் பக்தியோடிருக்கட்டும், மதிக்காதவர்கள் மதிக்காமலேயே இருக்கட்டும். விதி செய்து சட்டத்தின் மூலமாய் மரியாதையை ஏன் தேடவேண்டும்?

வைத்தியம்: "எல்லாம் இறையே" எனும் கருத்தை மதிப்பவரை கோயில்கள் அனுமதிக்கின்றன. எங்கள் கடவுள் தவிர்த்த அனைத்தும் எங்களது நுகர்விற்கு எங்களது கடவுளால் படைக்கப்பட்டன என்பவர் அவரது கருத்தாலேயே இக்கருத்தை எதிர்த்தவர் ஆகிறார். அவர்களும், இந்துக்களும் விலகி இருக்கும்வரை இன்னல்கள் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாய் சேரவேண்டும் என வற்புறுத்தினால், அவ்வற்புறுத்தலின் வலியால் மதிப்பவரும், மதிக்காதவரும் ஒன்று சேர்ந்தால் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே அவற்றைத் தவிர்க்க இவ்விதிகள்.

வாதம் 10: சமத்துவமும், சகோதரத்துவமும் சிறந்தவை என ஒத்துக்கொள்ளப்படும் இக்காலத்தில் மனித சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளுவது என்ன தவறு?

வைத்தியம் 1: சமத்துவம் என்பது எல்லா பிரிவினருக்கும் மத்தியில் வைக்கப்படவேண்டும். அங்கனம் இல்லாமல் ஒரு பிரிவினர் மட்டும் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். மற்றையோர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை எதிர்ப்பது அவர்களது நம்பிக்கையிலும், உரிமையிலும் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

வைத்தியம் 2: நீங்கள் சமத்துவம் என்று வைப்பது உண்மையில் சமத்துவம்தானா என்பது விவாதத்திற்குரியது. நீங்கள் சமத்துவம் பேசிய இடங்களில் சமத்துவம் இல்லை என்பதும், மிகப்பெரிய வன்முறைகளின்கீழ் மனிதத்தின் வேறுபட்ட பரிணாமங்கள் மறைக்கப்படுகின்றன என்பதும் ஏற்றப்பட்ட விளக்கின்கீழ் வெளித்தெரியும் உண்மை.

வாதம் 11: சமத்துவம் என்பதை ஏற்காத நம்பிக்கைகளை அழிப்பதால் என்ன தவறு?
வைத்தியம்: சமத்துவம் என்பதை ஏற்காமல் இருப்பதுதான் அக்கோயிலின் புனிதத்தை தெய்வ பலத்தை அளிக்கிறது என்று இவ்வமைப்பின் நிர்வாகத்தார் நம்புகிறார்கள். நம்பிக்கைகள் தவறென்றால் அவற்றினை மாற்ற நேர்மறை நடவடிக்கைகளையே நேர்மையாளர் கொள்வர். ஒரு கோட்டை சிறிதாக்க அதைவிட பெரிய கோடு வரைவதே உதவும்.

வாதம் 12: சிறிய கோடு அப்படியே இருக்குமே. அதை அழிக்க வேண்டாமா?

வைத்தியம்: பல பெரிய கோடுகள் சிறிய கோட்டை தானாகவே மக்களின் கண்களிலிருந்து மறைந்துவிடும். கண்களிலிருந்து மறைந்தால் மனத்திலிருந்து மறைந்துவிடும். மனத்திலிருந்து மறைவதே நிரந்தர மறைவு.

வாதம் 13: எதிர்மறைப்போக்கால் என்ன தவறு? சிறிய கோட்டை ஏன் அழிக்கக்கூடாது? சாதி மத வெறியை பரப்பும் இந்த அமைப்புக்களின் முதுகெலும்பை உடைப்பதால் ஜாதிமத வெறியை யும் அழித்துவிடலாமே?

வைத்தியம்: எதிர்மறைப்போக்கால் எதிர்ப்பவை மேலும் உரம்பெறவே வாய்ப்புண்டு. மேலும், இவ்வமைப்புக்கள் குறுகிய மனப்பான்மையோடு இருப்பினும், இக்குறுகிய மனப்பான்மையையும் தாண்டிய, மீறிய ஒரு மிகப்பெரிய சத்தியத்தையே இவை முன்வைக்கின்றன. இந்த சத்தியமே மக்களை இவ்வமைப்புக்களிடம் ஈர்க்கின்றன. இவற்றை அழித்தால் இச்சத்தியத்தை அணுகுவதற்கு மக்களிடம் இருக்கும் வாய்ப்பு பறிபோகும். இந்து மதத்தை அழிப்பதே தங்களது லட்சியம் என்று சொல்லுபவர்கள் இவ்வமைப்புக்களை அழிப்பதன்மூலம், மக்களை இந்த சத்தியத்தின் அணுக்கத்திலிருந்து அகற்ற விரும்புகின்றனர். இந்த அகற்றுதலால் மக்கள் இவர்தம் கொள்கைக்கு வருவார் என்று நம்பி நடக்கின்றனர்.

வாதம் 14: நேர்மறை அணுகுமுறை என்பது கானல் நீரைக்கொண்டு கரும்பு விளைவிக்கலாம் எனும் ஏமாற்றும் வேலை. நேர்மறை என்று ஏதேனும் இருக்கிறதா?

வைத்தியம்: இருக்கிறது. செய்ய வேண்டியது எல்லாம் இதுபோன்ற குறுகிய சாதி மத மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்களுக்கு மாற்றாக பரந்த மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்கள் பல்கவேண்டும். அதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மேல்மருவத்தூர் கோயில் முதல் ராமக்கிருட்டிண, சின்மயா, அம்ருதானந்த, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளீடாக இன்னும் எத்தனையோ இந்து அமைப்புக்கள் பரந்த தளத்தில் இந்து மத வழிபாட்டுத் தலங்களைப் பல்குகின்றன. அங்கே செல்லும் மக்கள்தொகை சாதி மத உயர்வு தாழ்வு பேசும் தலங்களைவிட மிக மிக அதிகம்.

வாதம் 15: பரந்த மனப்பான்மையுடைய இந்த புனிதத்தலங்கள் இருக்கும்போது, மத வேறுபாடுகள் பார்க்கிற தலங்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

வைத்தியம்: மனிதம் பல பரிமாணங்களை உடையது. பன்முகத்தன்மையை அனுமதிப்பது என்பது மனிதவளத்தை மகத்தாய் பெருக்கும். இதை எதிர்த்து நடக்கும் அனைத்தும் தீவிரவாதம் மட்டுமே. குருவாயூர் கோயிலில் பிற மதத்தவர்கள் வரக்கூடாது என்பது ஒரு விதி. அதே போல மேல்மருவத்தூர் கோயிலில் யார்வேண்டுமானாலும், எந்த சூழலிலும் அருள்தரும் அன்னையை வணங்கலாம் என்பது விதி. இரண்டு விதிகளுமே மதிக்கப்படுவதுதான் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் செயல். உன் வழி உனக்கு. என் வழி எனக்கு.

நாளை ஒரு கோயில் கட்டப்பட்டு மீசை உள்ள ஆண்கள் மட்டுமே அங்கு வரவேண்டும் என்று விதித்தால், அதை மீசை இல்லாத ஆண்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
அதை விடுத்து மேல்மருவத்தூர் கோயிலில் இந்துக்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினாலும், குருவாயூர் கோயிலிலிருக்கும் குழந்தைக்கு செருப்பு அணிவிக்கவேண்டும் என்பவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாலும் அது தவறே.
இந்து மத கோயில்களில் எல்லோரும் வழிபடும் கோயில்கள் உண்டு. இந்துக்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. ஆண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. பெண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும் கோயில்கள் உண்டு. செம்மொழியில் (ஸமஸ்கிருதம்) வழிபாடு நடக்கும் இடங்களும் உண்டு. இரண்டு முறையிலும் வழிபாடு நடக்கிற தலங்களும் உண்டு. அரவாணிகளுக்கு சிறப்பு மரியாதை கொடுக்கும் கூத்தாண்டவர் கோயில் போன்றவையும் உண்டு. ஒவ்வொரு சாதியும் அவர்களுக்குக் கட்டிக்கொள்ளும் குலதெய்வ கோயில்களும் உண்டு. மற்ற மதத்தவர் இஸ்கான் கோயிலுக்கு வரலாம். ஐயப்பன் கோயிலுக்கு எந்த மதத்து ஆணும் விரதமிருந்து இருமுடி கட்டி வரலாம். மேல்மருவத்தூர் கோயிலுக்கு செவ்வாடை அணிந்து எந்த மதத்தவர் வேண்டுமானாலும் வரலாம். புட்டபர்த்திக்கு வருடம்தோறும் வரும் கிருத்துவரும், இஸ்லாமியரும், கம்யூனிஸ்ட்டுகளும் எண்ணிக்கையிலடங்கார்.
தங்களை அனுமதிக்காத சிவன் கோயில்களை புறங்கையால் ஒதுக்கிவிட்டு ஈழவர் கட்டிய கோயில்களிலும் சிவ நர்த்தனம் நடந்துகொண்டுதானிருக்கிறது. அக்கோயில்களுக்கு அனைத்து பிரிவினரும் சென்று அண்ணலின் அருளை அருந்திக்கொண்டுதானிருக்கிறார்கள்.
காபா எனும் கட்டிடத்திற்குள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதில்லை என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ, திராவிடர் கழகத்தில் பார்ப்பனர் உறுப்பினராய் ஆகமுடியாது என்பதை நாம் எங்கனம் ஏற்றுக்கொள்கிறோமோ, கிருத்துவ தேவாலயங்களின் புனித நீரும் அப்பமும் கிருத்துவர்களுக்கு மட்டுமே என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளுகிறோமோ, அதுபோலவே இந்துக் கோயில்களின் விதிகளை ஏற்றுக்கொள்ளுவதும் மாற்று கருத்துக்களை அனுமதிப்பதும் பண்பாடு என்பதை உவப்போடு ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த செயல்.

அதைவிடுத்து, ஒரு குறிப்பிட்ட ஒற்றைப் பார்வைக்குள் அனைத்தும் பொருந்த வேண்டும் என்பது இயற்கைக்கு எதிரான மனித பன்முகத்தன்மைக்கு எதிரான வன்முறை. இதனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை செதுக்கிக்கொள்ள இயலாதவர் வன்முறையில் இறங்குவர். வன்முறை பரப்புவர்.

வாதம் 16: குறிப்பிட்ட மடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் சாதி அடிப்படையில் மரியாதை அளிக்கப்படுகிறதே. இது தவறல்லவா?

வைத்தியம்: அந்த மடங்களில் சென்று அவர்களின் செயலுக்கான காரணிகளை ஆராய்ந்தால் அந்த சாதியைச் சேர்ந்தோர் அந்த மடத்திற்கும், வழிபடு தலத்திற்கும் செய்திருக்கிற உழைப்பும், தியாகங்களும் அதீதமாய் இருக்கும். இக்காரணங்களாலேயே இவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாக உங்களுக்குப் பதிலும் கிடைக்கும். சில மடங்களில் பார்ப்பனர்கள் முக்கியத்துவம் பெறுவதும், தமிழ்நாட்டு ஆதீன மடங்களில் வேளாள சாதியார் மரியாதை பெறுவதும், உயர்சாதி வெறி எதிர்த்துப் புறப்பட்ட நாராயண குருவின் மடங்களில் ஈழவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதும், திராவிடர் கழக மடங்களில் தலித்துகள் பார்ப்பனர்கள் அல்லாத உயர்சாதியார் மரியாதை பெறுவதும் இதன் காரணமாகவே நடைபெறுகின்றன.

ஆயினும், ஒரு மடம் அல்லது வழிபடு தலம் அனைவருக்கும் பொதுவானதாகத் தன்னைக் காட்டிக்கொள்ளுமாயின் அது அனைத்து சாதியாருக்கும் அனைத்து மதத்தாருக்கும் சமமான மரியாதையையே அளிக்கவேண்டும். மனிதரை அவர் பிறந்த சாதி மதம் சாராது அமைப்பிற்கு தரும் பங்களிப்பைப் பொறுத்து மரியாதை செய்யவேண்டும். அத்தகைய சம மரியாதையை இந்து அமைப்புக்களில் ராமகிருட்டிண-விவேகானந்த-சாரதா அமைப்புக்களிலும், சின்மயா அமைப்பிலும், ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புக்களிலும், மாதா அம்ருதானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரஜனீஷின் ஆசிரமங்களிலும், ஜேகேவை ஏற்றுக்கொள்கிற அமைப்புக்களிலும், ஷிர்டி மற்றும் புட்டப்பர்த்தி சாய்பாபா அமைப்புக்களிலும், ரமண ஆசிரமங்களிலும், வேதாத்திரி மகாரிஷியின் அமைப்பிலும், வள்ளலாரின் சீவ காருண்ய அமைப்பினராலும், இன்னும் நம் பார்வைக்கு வராத அமைப்புக்களாலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. ஆயினும், இந்த இடங்களிலும் வேறுபடும் விதிகள் உண்டு. இந்த விதிகளை ஏற்பவரே இந்த புனித இடங்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாதம் 16: உலகில் எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கும் சுதந்திரமான இடங்களே இல்லையா?
வைத்தியம்: முற்றிலும் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும், ஓரளவு இவற்றை வெற்றிகரமாய் செய்யக்கூடிய இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

வாதம் 17: அட, அவை எந்த இடங்கள்?

வைத்தியம்: இந்தியாவின் அனைத்து இலவச பொது கழிப்பறைகள், மற்றும் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும்.

ஐயன் காளி
aiyan.kali@gmail.com
http://aiyan-kali.blogspot.com/

Monday, 11 June 2007

மலர் மன்னன் திண்ணை கட்டுரை -26

Friday December 2, 2005
அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்
மலர் மன்னன்
பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த தகவலை அவர் தந்தமைக்கு நன்றி. அன்றைய சிற்றிதகழ்கள் பெரும்பாலும் சந்தைக்கடை சச்சரவுகள் மாதிரியான வ்சைகளில் தம் அரிய பக்கங்களை விரையம் செய்துகொண்டிருந்ததால்
எழு ந்த எரிச்சலின் காரணமாகவே 'கால் ' இதழைத் தொடங்கும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதுபற்றி வெங்கட் சாமிநாதன் சொன்னது:
' ' எங்கள் எல்லார் முதுகுகளுக்கும் பின்னாலிருந்து எங்களைக் கண்காணித்துக்கொண்டிருந்துவிட்டு, அதன் காரணமாகத்தான் இதைத் தொடங் கியிருக்கிறீர்கள். ' '
இனி அயோத்திதாசர் தொடர்பாக சிவக்குமார் எழுப்பியுள்ள பிரச்னை.
திரு. ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்து இன்னதென்பதை அயோத்திதாசர் கட்டுரையிலிரு ந்தே புரிந்துகொள்ள முடியும்.
அயோத்திதாசரின் பிரிட்டிஷ் ஆதரவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. பிராமணர்கள் ம்ட்டுமின்றி உயர் சாதியினர் என்று அறியப்படும் பிற சாதியினர், தோம்ற்றத்திலும், பொருளாதார நிலையிலும் தங்களைப் போலவே இருந்த மிகப் பிற்படுத்தப் பட்ட வகுப்பாராலுங்கூட ஒதுக்கித்தள்ளப்பட்ட தலித்துகள் சமுதாயத்தில் சம அந்தஸ்து பெறுவதற்கு பாரதம் முதலில் சமூக விடுதலை கிடைத்தாலன்றி அரசியல் விடுதலை பெறுவதில் பயனில்லை என்ற கருத்தின் தாக்கம் அவரை பிரிட்டிஷ் ஆட்சி தொடர விரும்புபவராக இயங்கச் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் பிரிவினை வாதம் பேசியவரல்ல.
தீரமிக்க இளைஞரான சுவாமி விவேகானந்தர் சமூக விடுதலையே முதலில் நமக்குத் தேவை எனக் கருதியதாலேயே அரசியலில் ஈடுபடவில்லை. பின்னாளில் அவர் சமூகத் தொ ண்டில்தான் கவனம் செலுத்தினார். பிராமணர்களையும் மேலாதிக்க ஜாதியினரையும் அவர் திட்டாத திட்டா ? குறிப்பாக நம்பூதிரிமார்களின் சுபாவத்திற்காகவே கேரளத்தைப் 'பைத்தியக்காரர்களின் தேசம் ' என வர்ணித்தவராயிற்றே! ஆனால் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் துர்நோக்கம் அவருக்கு இல்லை. ரிஷி அரவிந்தருங்கூட அரசியல் விடுதலைக்குத் தற்போது அவசரமில்லை, அதற்குமுன் மக்கள் ஆன்ம நேயம்பெறச் செய்யவேண்டும் எனக் கருதி யோக சாதனையில் ஈடுபட்டார்.
ஈ.வே. ரா. வின் சமாசாரம் அப்படியல்ல. ஹிந்து சமூகத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் என்ற பிளவை ஏறத்தாழ நிரந்தரமாகவே ஏற்படுத்தி, இன்று எந்த விவகாரம் என்றாலும் அந்தப் பிரக்ஞையுடனேயே அணுகும் மனப்பான்மையை ஏறத்தாழ ஹிந்துக்கள் அனைவரிடமுமே ஏற்படுத்திவிட்ட வசையை கால காலத்திற்கும் சுமந்து
கொண்டிருப்பவரான ஈ.வே.ரா., தொடக்கத்தில் காங்கிரசில் இருந்தவர்தான். காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாகமாக இருப்பதாகக் கருதியதாலேயே அவர் அதிலிருந்து விலகினாரேயன்றி பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதரவாளராக மாறியதால் அல்ல. என்றைக்குமே சிறுபான்மையினரான பிராமணர்களின் ஆதிக்கம் உத்தியோகத்துறைகளில் இருப்பதை மாற்றி, மற்ற மேலாதிக்க ஜாதியினருக்கும் பிறருக்கும் அந்த வய்ய்ப்புக் கிடைக்கச் செய்வதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய கால கடத்தில்அந்தக் கட்சியை 'முதலியார் கட்சி ' என்றுதான் அடையாளப் படுத்துவார்கள்.
பிரிட்டஷ் ஆட்சி நீடிக்க வேண்டிய அவசியமின்றியே இன்று கல்வித் துறையிலும் பிற துறைகளிலும் ஈ.வே.ரா.வின் குறிக்கோள் நிறைவேற முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால் சலுகைகள் பலவும் அளிக்கப்பட்டாலும் தலித்துகள் சரிசமமாக முடியாத நிலையே நீடிக்கிறது.
சொல்லப்போனால் சிறுபான்மையினரான பிராமணரின் ஆதிக்கம் இருக்குமானால் தலித்துகள் அல்லாத பிற வகுப்பார் அத்தகைய ஆதிக்கத்தை வெற்றிகொள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தலித்துகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் விடுதலை கிட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் பரிவு தேவைப் பட்டது.
அயோத்திதாசர் பிரிவினைவாதியல்ல. ஈ.வே.ரா.வோ, தெற்கே ஒரு ஜின்னாவாக உருவாக ஆசைப்பட்டவர். அதற்காகவே பிரிட்டிஷ்காரனைப் ' 'போகாதே போகாதே, போவதானால் பாகிஸ்தான் மாதிரி திராவிடஸ்தானையும் கொடுத்துவிட்டுப் போ ' ' என்றவர். இதை எப்படி உளப்பூர்வமான பிரிட்டிஷ் ஆதரவு என்பது ? பார்ப்பானே வெளியேறு என்றும் சொல்வார். தேர்தலில் மாவூர் சர்மாவையும் அதரிப்பார். மகளே, மகளே என்பார். அந்த அம்மையாரையே திடாரென மனைவியென்றும் அறிவிப்பார். தம் தொண்டர்களுக்கு சட்டப்படிச் செல்லாத சுயமரியாதைத் திருமணத்தை தட்சிணை வாங்கிக் கொண்டு புரோகிதம் செய்து நடத்தி வைப்பார். ஆனால் தமக்குச் சட்ட அங்கீகாரமுள்ள பதிவுத் திருமணத்தைச் சாமர்த்தியமாக நடத்திக் கொள்வார். காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்பார். பச்சைத் தமிழன் என்று சொல்லி காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்கவும் செய்வார். 1967ல் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டேன் என்றும் சொல்வார். ஆக, எதிலும் தெளிவான போக்கு இல்லாதவர். சமயத்திற்கு ஏற்றாற்போல் நட ந்து கொள்பவர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்ட வீர சாவர்கருங்கூட இரண்டாம் உலகப்போரின்போது ஹிந்துக்கள் பெருமளவில் ராணுவத்தில் சேரவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக யுத்தப் பிரச்சாரம் செய்தார்தான். வருங்கால பாரதத்தின் ராணுவத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையனராக இருப்பதும், போர்ப் பயிற்சியும், போர்க்கள அனுபவமும் உள்ளவர்களாக அவர்கள் இருப்பதும் அவசியம் என்பதால் தொலை நோக்குப் பார்வையுடன் சாவர்கர் யுத்தப் பிரச்சாரம் செய்தார். காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுமோ அத்தகைய தீர்க்க தரிசனமின்றி எதிர்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
சாவர்கரின் தொலைநோக்கு பாரதத்திற்கு எவ்வளவு பயன்பட்டது, பயன்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. குறிப்பாக, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹிந்துக்கள் ராணுவத்தில் சிறுபான்மையினராக இருந்திருப்பின் என்ன ஆகியிருக்கும் ? பெரிய பதவிகளை எளிதில் பெறலாம் என்பதற்காகவே பாரத ராணுவத்திலிருந்த முகமதியர் பலரும் பாகிஸ்தானுக்குப் போய்விடவில்லையா ?
சாவர்கர் இவ்வாறு அன்று செயல்பட்டதால் அவர் பிரிட்டிஷ் ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்பியதாகக் கூறமுடியுமா ? ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள். சாவர்கருக்கு தேசாபிமானம் என்றால் ஈ.வே. ரா. வுக்கு தேசத் துரோகம்! இதை எப்படி அயோத்திதாசரின் குறிக்கோளுடன் இணைத்துப் பார்க்கமுடியும் ?
சிவக்குமார் என் ஆதரவு நிலைப்பாடுபற்றியும் யூகங்கள் செய்திருப்பதால் அதுபற்றியும் தெளிவுபடுத்தும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
மாணவப் பருவத்தில் பரம நாஸ்திகனாகவும், அனேகமாக மார்க்ஸ்ஏங்கெல்ஸின் நூல்கள் எல்லாவற்றையுமே கரைத்துக் குடித்தவனாகவும் இருந்தவன்தான். 'இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் இதயமில்லாதவன்; நாற்பது வயதிலும் தொடர்ந்து கம்யூனிஸ்டாக இருப்பவன் மூளையில்லதவன் ' என்பதற்கு இணங்க, ஆனால் இறையருளால் இருபது வயதைத் தாண்டுமுன்னரே அந்த மாயையிலிருந்து விடுபட்டு, ஆன்மிக உணர்வும் இயற்கை விதிகளை ஒப்புக்கொள்ளும் விவேகமும் வரப்பெற்றவன்.
இன்றுள்ள பிரத்தியட்ச நிலையை நன்கு ஆராய்ந்து பார்த்து, அதன் பின் நாட்டு நலன் கருதி ஹிந்துத்துவக் கோட்பாட்டை சாவர்கர் வழியில் ஏற்றுக்கொண்டவன். எந்த அரசியல் கட்சியிலும் அமைப்பிலும் சேராதவன். ஆனால் ஹிந்து சமுதாய நலனுக்காக நடைபெறும் எல்லா இயக்கங்களிலும் விருப்பத்துடனும் வெளிப்படையாகவும் ஈடுபடத் தயங்காதவன்.
உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் உள்ள ஷியா முகமதியர்களே ' 'இது ஹிந்துஸ்தானம். இங்கு ஹிந்துக்களே பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கும் ' ' என்னும்போது, பல கிறிஸ்துவ நண்பர்களும் அவ்வாறே விரும்பும்போது, நான் ஹிந்துத்துவக் கோட்பாட்டை மனமுவந்து ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?
----
malarmannan97@yahoo.co.uk

மலர் மன்னன் திண்ணை கட்டுரை -25

Friday January 13, 2006
மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
மலர் மன்னன்
(காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித முன் முடிவுகளோடும் கட்டுரையுள் புகும்விதமாக வாசகருக்கு மனத்தடை ஏற்படாது தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையில்!)
-மலர் மன்னன்-
போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன் ?
அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.
பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும் மஹாத்மா என்றும், பாபு (தந்தையார்) என்றும் அழைக்கும் மாபெரும் சக்தியாக சுதந்திரப் போராட்ட காலத்தில் விளங்கிய, 'காந்திஜி ' என மரியாதையுடன் அறியப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன. நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால், அவரது அரசியல் நடவடிக்கைகள் இறுதியில் தேசப் பிரிவினை என்ற உச்ச கட்டமாக, ஹிந்து-முகமதியர் என்று மத அடிப்படையில் இரு நாடுகள் தோன்றி, ஹிந்துஸ்தானத்திற்கு இன்றளவும், இந்த நிமிடம் வரையிலும் பாதகமாகவே அமைந்து போயின.
காந்திஜிக்கு ஹிந்துக்களின் பேராதரவு, அவரே எதிர்பாராத வண்ணம் அரசியல் தலைமை ஸ்தானத்தை எளிிதில் தந்துவிட்டது. எனினும் காந்திஜிக்குத் தேவைப்பட்டது பாரத மக்களனைவர் சார்பிலுமான ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம், அல்லது தலைமை ஸ்தானம். தம்மை பாரதநாட்டவர் அனைவர் சார்பிலும் பேசும் அரசியல்தலைவராகத்தான் அவர் முன்னிலைப் படுத்திக்கொண்டார். ஆனால் காய் நகர்த்துவதில் சாமர்த்தியம் மிக்க ஆங்கிலேய தர்பார், பெருகிவரும் அவரது செல்வாக்கிற்கு அணைகட்டும் பொருட்டு, சில முகமதியத் தலைவர்களை (ஜின்னாவை அல்ல) கைக்குள் போட்டுக் கொண்டு, 'நீ பாரத நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதியல்ல, ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசின் தலைவர் மட்டுமே. குறிப்பாக ஹிந்துக்களுக்கு அடுத்தபடிப் பெரும்பான்மையினராக உள்ள முகமதியர் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றிருப்பதாகக் கூறுவதற்கு இல்லை. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எனவே உன்னை ஹிந்துக்களின் பிரதிநிதியாகக் கருத இயலுமே யன்றி பாரத தேசத்தவரின் பிரதிநிதியாக ஏற்கமுடியாது. அதிலும் ஹிந்து சமூகத்திலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரநிதிதியாகக் கூடக் கருத இயலாது. வேண்டுமானால் இதோபார், இந்த முகமதியப் பிரமுகர்களை, இவர்கள் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை ' என்று கூறியது. காந்திஜி இதற்கு என்ன சொல்லியிருக்க வேண்டும் ? 'பாரத தேசத்தவரை மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேச நீ யார் ? இங்கே நகரத்திற்கு நகரம், ஊருக்கு ஊர், ஹிந்து, முகமதியர்,
கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம். 1857-ல் நடந்த எமது முதல் சுதந்திரப் போர்கூட ஹிந்துக்களும் முகமதியரும் இணைந்து உங்களை வெளியேற்றும் முயற்சியாகத்தான் இருந்தது. மேலும் நீ சொல்கிறாற்போல நான் ஒரு தரப்பு ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால் இந்த தேசம் முழுமைக்குமான பிரதிநிதியாக வாதாடும் உரிமை எனக்கு உண்டு ' ' என்றுதானே ? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாரிஸ்டர் ஆங்கிலேய தர்பாரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, முகமதியரின் ஆதரவையும் தமக்குத் தேடிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்காகவே முகமதியர் மனதில் இடம் பெறுவதற்கான முஸ்தீபுககளை மேற்
கொள்ளலானார். அன்றே தொடங்கியது, காந்திஜியால் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்குச் சேதாரம். (தாம் தாழ்த்தப்பட்டோரின் தலைமையையும் பெறவேண்டும் என்பது உறைத்ததால்தான் அவர்களின் பக்கமும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி, நாமனைவருமே கடவுளின் குழந்தைகளென்ற போதிலும் ஹரியாகிய இறைவனின் ஜனங்கள் என அவர்களுக்குப் பெயர் சூட்டி, முழு மூச்சில் அவர்களுக்கான ஆலயப் பிரவேசம் போன்ற இயக்கங்களையும் ஆரம்பித்துவைத்தார்).
முகமதிய சமயத்தின் பிறப்பிடமான அராபிய தேசமே குப்பையில் தூக்கியெறிந்துவிட்ட, துருக்கியரின் மத ஆளுமைக்கு ஒரு முடிவு வந்தமைக்காக அராபியர் உள்ளூற அகமகிழ்ந்த, ரத்து செய்யப்பட்ட 'கலீபா ' என்கிற நடைமுறையைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி இங்கே கிலாபத் என்கிற போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். பாரத தேசத்து முகமதியர்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற போதிலும்! கிலாபத் இயக்கத்தின் மூலம் தாம் முகமதியரின் பிரதிநிதியுங்கூட என்பதை அவர் நிறுவ முற்பட்டதால் ஹிந்துக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கிலாபத் துருக்கியிலேகூட நடந்ததில்லை! அது காந்தியால் காந்திக்காகவே தொடங்கப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்!
காந்திஜி பாரத தேசத்து ஆங்கில அரசை முன்வைத்து அல்ல, ஒட்டு மொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகத்தான் கிலாபத் இயக்கம் தொடங்கினார். ஏனெனில் கிலாபத் என்பது துருக்கி சுல்தானுக்கு கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை ஸ்தானத்தைத் திரும்ப அளிக்கக் கோரும் இயக்கம்தான். பாரதத்தில் கோலோச்சிய ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதிலும், பிரிட்டிஷ் சாம்ரஜ்ஜியத்தின் பிரதிநிதியாக அதனை அடையாளப்படுத்தி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பது காந்திஜியின் திட்டம். ஆங்கிலேய துரைத்தனம் காந்திஜியைவிடப் புத்திசாலித்தனமாக அவரது திட்டத்தை முறியடித்தது. தனது கைக்குள் போட்டுக்கொண்டிருந்த முகமதியப் பிரமுகர்களைத் தூண்டிவிட்டு, 'நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து போவீர்கள். காந்தியை உங்கள் மக்களும் தலைவராக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆகையால் எப்படியாவது காந்தி தொடங்கியிருக்கிற கிலாபத் இயக்கத்தை முறியடிக்க வேண்டியது உங்கள்
பொறுப்பு ' என்று எச்சரித்தது. முகமதியப் பிரமுகர்களும் அதற்கு இசைந்து கிலாபத் இயக்கத்தை ஹிந்துக்களுக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டார்கள். ஆக, எவ்வித நியாயமும் இன்றி ஹிந்துக்கள் திடாரென முகமதியரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இத்தாக்குதல் கேரளத்தில் மிக உக்கிரமாக நடந்தது.
மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள், ஹிந்து தறவாடுகளைத் தாக்கிச் சூறையாடுவதற்கும் ஹிந்துப் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைகள் செய்வதற்கும் வாகான வாய்ப்பாக காந்திஜியின் கிலாபத் இயக்கம் பயன்பட்டது. சரி, யாரய்யா இந்த மாபிள்ளமார்கள் ? எங்கிருந்து உற்பத்தியானார்கள் இவர்கள் ?
நமது மேற்குக் கடலோரம், எப்போதுமே மேற்கிலிருந்து வரும் மாற்றுச் சமயத்தினர் கரை ஒதுங்கி, ஹிந்துக்களுக்கே இயல்பான சமரச மனப்பான்மை, பெருந்தன்மை, ஆகியவற்றின் பயனாக, அந்நியர்கள் பத்திரமாக வசிக்கத் தொடங்குவதற்கு வசதியான சரணாலயமாக இருந்து வந்துள்ளது. தம் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், பார்சிகள், வியாபாரம் செய்ய வந்த அராபியர், ஐரோப்பிய வணிகர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர், இப்படிப் பலதரப்பட்டோருக்கும் நுழைவு வாயிலாக அது இருந்து வந்துள்ளது. இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். தாயகம் திரும்பும் தருணம் வந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடியும் போனார்கள்(இப்போதுகூட அராபியர்களிடையே இந்த வழக்கம் தொடர்வது தெரியும்தானே ? தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க்கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீிக்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா ?) இதன் விளைவாகக் கேரளத்தில் தோன்றிய ஒரு புதிய வகை வகுப்புதான் மாப்பிள்ளமார்! அதனால்தான் அவர்கள் பெயரே மாப்பிள்ளைகள்!
இந்த மாப்பிளமார்கள் ஹிந்து நிலச்சுவாந்தார்களிடம் குத்தகையாளர்களாகப் பணியாற்றி வந்தனர். உங்களுக்கே நிலம் சொந்தமாகும் என ஆசை காட்டப்பட்டும், சமய உணர்வோடு பொருளதாரக் காரணங்கள் சொல்லப்பட்டும் இந்த மாப்பிள்ளமார்கள் கலவரத்திற்குத் தயார் செய்யப்பட்டார்கள். விளைவு, ஹிந்துக்களுக்கு உயிர்ச் சேதம். பொருள் சேதம், மானச் சேதம்!
மாப்பிள்ளாக் கலவரம் என அறியப்பட்ட இதனை அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் காணச் சகியாமல்! இதுதான் ஆங்கில துரைத்தனத்தின் சாதுரியம்! பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுதல்!
ஆக, காந்திஜி தமக்கு முகமதியர்களின் அங்கீகாரமும் கிட்ட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி ஹிந்துக்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தது. அப்படியும் காந்திஜிக்கு ஆசைவிடவில்லை. போக்கிரித்தனம் செய்த மாப்ப்ிள்ளமார்களை மகத்தான தியாகிகளாக வர்ணித்தார்! அப்படியாகிலும் முகமதியர் மனங்களைக் கவர முடியாதா என்கிற ஆதங்கத்தில்!
(ஒரு தருணத்தில் ஆங்கிலேய தர்பாரை எதிர்க்க ஆப்கானிஸ்தானத்து அமீரை அழைப்பேன் என்றுகூட அவர் சொன்னதுண்டு! ஆனால் அவரே இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயரை எதிர்க்க இன்னொரு அன்னிய சக்தியிடம் தஞ்சமடைவதா என்று சுபாஷ் போஸைக் கண்டித்தார்!)
இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும்.
முகமதியருக்கும் சேர்த்துத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டும், ஆங்கிலேயர் ஆட்சி தம்மை பாரத தேசத்து மக்கள் அனைவருக்குமான பிரதிநிதி என்று அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையின்றியே தமக்கு அவர் நிபந்தனை விதித்துக்கொண்டு அதற்காக முகமதியருக்கு மேலும் மேலும் பரிவுகள் காட்டிவந்தபோதிலும் முகமதியரின் பிரதிநிதி என்கிற அங்ககாரம் ஜின்னாவுக்குத்தான் கிடைத்தது. தலித்துகளை ஹரியின் ஜனங்கள் எனப் புகழ்ந்து ஆலயப் பிரவேசத்தின் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கப் பாடுபட்ட போதிலும், தலித்துகளின் பிரதிநிதித்துவங்கூட அம்பேத்கருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. தலித்துகளல்லாத ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே ஆங்கிலேய அரசு அவரை அடையாளப்படுத்தயது. ஹிந்துக்களின் நலனுக்காக ஏதும் செய்யாதது மாத்திரமல்ல, முகமதியரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை விட்டுக் கொடுத்துக் கூடச் செயல்பட்டவருக்கு ஹிந்துக்களின் பிரதிநிதி என்கிற அடையாளம்! இப்படியொரு விசித்திரமான நிலைமை ஹிந்துக்களைத்தவிர வேறு யாருக்கு வாய்க்கும் ? அப்படியிருந்தும் 'பாபு, பாபு ' என்று ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டுதான் இருந்தார்கள்.
முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்துகொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்.
சிரத்தானந்தர் என்ற ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளியை ஒரு முகமதியன் கொலை செய்தபோது, அது திடாரென்று ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் நேர்ந்துவிட்ட சம்பவம். அதனால் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கூடாது என்று சொன்ன காந்தி, பிற்காலத்தில் பகத்சிங் விஷயத்தில் மட்டும் தண்டனையைக் குறைக்குமாறு வாதாடவில்லை. பகத்சிங் மக்களிடையே பிரபலமடைந்து விட்டால் தமக்கு செல்வாக்கு குன்றி விடும் என்பதற்காகவே அவர் வாளாவிருந்துவிட்டார் என்று கருதுவோரும் உண்டு. இதை ஊர்ஜிதம் செய்வது போலத்தான் அவர் அதற்குப் பின் சுபாஷ் சந்திர போஸ் விஷயத்திலும் நடந்துகொண்டார். சுபாஷ் பாபுவுக்கு மின்னல் வேகத்தில் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு அவரை முடக்கிப் போட்டார் காந்தி, சுபாஷ் பாபுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே காந்தியின் சொல்லை மீறித் தலைவராகத் தேர்வு செய்த பின்னரும்! காரியக் கமிட்டி உறுப்பினர்களையெல்லாம் விலகச் செய்து, உனக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லாமல் சொல்ல வைத்தார்.
சுபாஷ் பாபுவும் ஹிந்து--முகமதியர் ஒற்றுமையின் அவசியம் உணர்ந்தவர்தான். ஆனால் முகமதியரைத் தமது பக்கம் வரச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை! ஒத்துழைக்க மறுத்து விட்ட காங்கிரசில் இனி இருந்து பயனில்லை எனப் புரிந்து கொண்ட சுபாஷ் தம் வழியில் போர்க்களம் காண ரகசியப் பயணம் மேற்கொள்ளுமுன் நம்பிக்கையுடன் சந்தித்த பாரத நாட்டுத் தலைவர், ஹிந்துத்துவக் கோட்பாட்டை நிறுவிய சாவர்கரைத்தான்! சுபாஷின் முன்னோடியான ராஷ்பிகாரி போஸ் ஒருபடி மேலே போய், ஜப்பானில் ஹிந்து மஹா சபையின் கிளையைத் தொடங்கியவர்!
ஹிந்துக்களின் நலனைக் காவு கொடுத்து முகமதியரின் ஆதரவைப் பெற காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விவரிக்கத் தொடங்கினால் நீண்டுகொண்டே செல்லும். அதன் முற்றுப் புள்ளிதான் தேசப் பிரிவினையில் முடிந்தது என்று பார்த்தால் அதன் பிறகும் அது நீடித்தது!
பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 1946-ல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை என்பதாக ஒரு கிளர்ச்சியினை நடத்தியது. கோரிக்கையை முன் வைக்கும் கிளர்ச்சியென்றால் நியாயப்படி அரசுக்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் லீீகர்களின் கிளர்ச்சி ஹிந்துக்களைக் குறிவைத்துக் கொன்றுகுவிப்பதற்கும், சூறையாடுவதற்கும், பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிக்கவும்தான் நடத்தப்பட்டது. அப்போது ஒன்றாக இருந்த வங்காள மாநிலத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் சுரவர்த்தி என்பவர் தலைமயில் ஆண்டுவந்தது. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு முகமதியர் ஹிந்துக்கள் மீது தங்கு தடையின்றித் தாக்குதலைத் தொடங்கினார்கள். அதற்கு சுரவர்த்தியின் அரசும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. ஹிந்துக்கள் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுக்க முன்வந்தபோது சுரவர்தியின் அரசு விழித்துக் கொண்டு தன் ராஜ தர்மத்தை நிலை நாட்ட முற்பட்டது. போதாக் குறைக்கு காந்தியும் வந்து சேர்ந்தார், சமரசம் என்றபெயரில் முகமதியரைக் காப்பாற்ற! நவகாளி யாத்திரை என்று பேசப்படுகிறதே, அது உண்மையில் ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடுக்காமல் தடுப்பதற்கு காந்திஜி மேற்கொண்ட முயற்சிதான்!
ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க சுரவர்த்தி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கவும், அவருக்கு காந்தி ஷஹீத் (தியாகி) என்று பட்டம் வழங்கிப் பாராட்டினார். ஹிந்துக்களை செயலிழக்கச் செய்வதற்காகத் தமது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரத நிர்ப்பந்தததையும் தொடங்கிவிட்டார்!
காந்திஜியை மஹாத்மா என்றும் பாபு என்றும் கொண்டாடியதற்குப் பிரதியாக ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்த அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் எழுதி மாளாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. பாரதம் துண்டாடப் படுமெனில் அது என் சவத்தின் மீதுதான் நிகழமுடியும் என்று பிரகடனம் செய்த காந்திஜி, பிரிவினையைத் தடுக்கத் தமது வழக்கமான உண்ணாவிரத ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. அந்த ஆயுதம் ஹிந்துக்களிடம்தான் செல்லுபடியாகும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது! தம்மை முகமதியருக்கும் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்திக்கொண்ட அவர், பிரிவினைக் கோரிக்கையை நீங்கள் கைவிடாதவரை நான் முன்னெச்சரிக்கையாக எனிமா எடுத்துக் கொண்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்த நீீரை மட்டும் பருகிக்கொண்டு உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று எச்சரிக்கவில்லை! மாறாக, காங்கிரஸ் காரியக் கமிட்டி தேசப் பிரிவினையை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதும், இது தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டம் என அதற்கு சமாதானம் சொல்லலானார்.
நேருவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சத்தியாக்கிரகம்செய்து சோர்ந்துபோய், எப்போதடா பதவியில் நிரந்தரமாய் உட்காருவோம் என்று தவிக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்ததால், போதும் போராடியது, இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பிரிவினை பற்றிய தீர்மானம் விவாதத்திற்குவந்தபோது ஒரே ஒரு குரல்தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. என் தாயகம் துண்டாடப் பட்டுத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அந்த விடுதலை நமக்கு வேண்டாம். நிலைமை சாதகமாகும் வரை காத்திருப்போம் என்று தனி நபராக வாதாடித் தோற்றவர் புருஷோத்தம்தாஸ் தாண்டன்.ஆக, நம் பாரதம் துண்டாடப் பட்டமைக்குக் காங்கிரஸும்தான் பொறுப்பாளி. அதற்குப் பரிசாக நாம் அதற்குத் தந்த பரிசு, நீீண்ட நெடுங்கால பதவி சுகம்! பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்! அதனால்தான் சோஷலிஸ்ட்கட்சித் தலைவர் ராம் மனோஹர் லோஹியா, தமது விருப்பம் என்னவென்று கேட்கப்பட்டபோது, ' ' மக்கள் நேரு இழைத்த குற்றங்களைப் புரிந்துகொண்டு, அதற்குத் தண்டனையாக அவரைச் சிறையில் தள்ளும்வரை அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை ' ' என்று சொன்னார்!
ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!
சீக்கிரம் எப்படியாவது பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டும் என்பதற்காக இறுதியில் காங்கிரஸ் பொறுமையிழந்து பிரிவினயை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தது. எனவே ராஜாஜி சொற்படி முன்கூட்டியே அதற்கு உடன்பட்டிருந்தால் ஒருவேளை பெருமளவுக்கு உயிர், பொருள் மானச் சேதாரங்களைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம். ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் காந்தியால் ஹிந்துக்களுக்கு சோதனை தொடர்ந்தது. பாகிஸ்தானிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகத் தப்பி வந்த ஹிந்துக்கள் இருக்க இடமின்றி தில்லியில் பாழடைந்து கிடந்த முகமதிய மன்னர்களீன் சமாதிகள், இடிபாடுகளுடன் சிதைந்து போன, வழிபாடு ஏதுமற்ற பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒண்டிக்கொண்டார்கள். குளிர்காலம் வேறு வந்துவிட்டிருந்தது. குழந்தைகளும் முதியோரும் உடல் நலம் குன்றியவர்களும் சரியான பாதுகாப்பின்றி அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் முகமதியருக்குச் சொந்தமான கட்டிடங்களை ஹிந்துக்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது தவறு; அவை கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் சரியே. எனவே ஹிந்துக்கள் உடனே அந்த இடங்களைக் காலி செய்து வெளியேறவேண்டும் என காந்தி அறிக்கையிட்டார். அரசுக்கும் ஹிந்துக்களை அக்கட்டிடங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினார். ஹிந்துக்கள் வேறு வழியின்றி சாலை ஓரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். குளிருக்குச் சரியான பாதுகாப்பின்றிப் பலர் இறந்தனர்.
முகமதியர் புறக்கணித்த இடங்களை ஹிந்துக்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாகாது என்று சொன்ன காந்தி, நிர்கதியாக வந்த ஹிந்து அகதிகளுக்கு ஒரு மாற்றிடம் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாகாதா ? கூடரங்கள் பல அமைத்திருந்தும் அவை போதாததால்தானே அகதிகளய் வந்தவர்கள் பாழடைந்த சமாதிகளிலும் மசூதிகளிலும் ஒண்ட நேர்ந்தது ? காந்திதான் பாரதத்தில் அரசாளுவோருக்கு மாளிகைகள் இருக்கலாகாது என்றவராயிற்றே! பிரதமர் நேருவின் இல்லத்தையும் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் வசித்த வைசிராய் மாளிகையையும் அகதிகளுக்கு ஒழித்துக் கொடுக்கச் சொல்லியிருக்கலாமே!
அகதிகள் முகாமைப் பார்வையிடத் தம் அருமை மகள் இந்திராவுடன் நேரு ஒருமுறை சென்றபோது, அகதி ஒருவன் இந்திராவின் சேலைத் தலைப்பை லேசாகப் பற்றி இழுத்தான். உடனே நேரு சீறிப் பாய்ந்து அவன் கன்னத்தில் அறைந்தார்.
'பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா ? ' ' என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை.
இவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக வந்தவைதாம், கற்பனை அல்ல.
ஒன்றுபட்டிருந்த பாரத கஜானாவிலிருந்து பாகிஸ்தானின் பங்காக அறுபது கோடி ரூபாய் தர பாரத சர்க்கார் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் அத்தொகையைக் கொடுத்தால் பாகிஸ்தான் அதனை பாரதத்திற்கு எதிராகப் போர் புரிவதற்குத்தான் பயன்படுத்தும் எனத் தெரிந்ததால் அதனைக் கொடுக்க அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் முட்டுக்கட்டை போட்டார். கொடுத்த வாக்கை மீறலாகாது, உடனே அறுபது கோடியைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்று காந்தி அடம் பிடித்து உண்ணாவிரதமும் தொடங்கிவிட்டார். அவர் பட்டினி கிடப்பதைக் காணச் சகியாது அரசாங்கம் அவரது விருப்பத்திற்கு அடிபணிந்தது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இன்னொரு காரியமும் செய்தார், காந்தி. பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஓடிவந்தது தவறு, என்ன நேர்ந்தாலும் சரி, எமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அங்கேயே இருந்திருக்க வேண்டும். ஆகவே நான் பிப்ரவரி முதல் தேதி அகதிகளாய் வந்த ஹிந்து, சீக்கியர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்குப் போய் அவர்களை அங்கே விட்டுவிட்டு வரப் போகிறேன் என்று அறிவித்தார்!
மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும் ? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன ?
பாரதத்தில் முகமதியரின் உயிர், உடமைகளுக்குப் பாதுகாப்பளிக்க நேருவும் பட்டேலும் அவர்களுக்குமேல் காந்தியும் உண்டு. அதுபோல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க யார் உண்டு ?
காந்தியின் பின்னால் போய் ஹிந்துக்களும் சீக்கியரும் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலுக்கு இரையாகும் அசம்பாவிதம் நிகழாதுதடுக்க என்ன வழி ? காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்.
இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்.
தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை.
காந்திஜியைக் கொன்ற செயலுக்குத் தாம் மட்டுமே பொறுப்பு என்று நாதுராம் வினாயக கோட்ஸே நீதிமன்றத்தில் குற்றம் முழுவதையும் தாமே ஏற்றுக்கொண்டார். எனினும், வழக்கை ஜோடிப்பதற்காகக் காவல் துறை அதற்கே உரிய வழக்கப்படி, வேறு பலரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து நாதுராமுடன் கூண்டில் ஏற்றி, கூட்டுச் சதியெனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் சிலர் நாதுராமின் திட்டத்தை அறிந்திருந்ததோடு அதற்குத் துணை புரியவும் முன்வந்தவர்கள்தான்.ஆனால் சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது ).
1949 நவம்பர் 15 அதிகாலை, தற்போதைய ஹரியாணா மாநிலத்தி லுள்ள அம்பாலா சிறைச்சாலையில் நாதுராம் கோட்ஸேயும் அவருடைய சகா நாரயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே, பஞ்சாபிலிருந்து தப்பி வந்த அகதி மதன்லால் ப ?வா, தில்லி விடுதி உரிமையாளர் விஷ்ணு கர்கரே ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆயுத வியாபாரி திகம்பர் பட்கே அப்ரூவராக மாறி சர்கார் தரப்பு சாட்சியம் கூறி, விடுதலையானார். பட்கேயின் பணியாள் சங்கர் கிஸ்தயா தண்டிக்கப்பட்டுப் பின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆக, இது ஒரு கூட்டுச் சதி போலத் தெரிந்தாலும், நாதுராம் தாமே எடுத்த முடிவுக்கு மற்றவர்கள் துணையாக இருந்ததாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். மதன்லால் பருவா, தமது கண் எதிரில் தம் தந்தை முகமதியரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதால் இதற்கெல்லாம் மூல காரணம் காந்தியே என ஆத்திரமுற்றுத் தாமும் காந்திஜியைக் கொலை செய்ய முடிவு செய்து எறிகுண்டு சகிதம் அலைந்து பின்னர் கோட்ஸேயுடன் சேர்ந்து கொண்டவர். எனவே இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும். எனவேதான் நாதுராம் முழுக் குற்றத்தையும் தாமே ஏற்றுக் கொண்டார். அதற்கு இணங்கவே நானும் கோட்ஸே தாமாகவே எடுத்த முடிவு எனப் பதிவு செய்துள்ளேன்.
கோட்ஸே காந்தியைத் தவிர வேறு எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனவே சுடுவதற்குமுன் காந்தியுடன் மிக நெருக்கத்தில் இருந்த ஆபா காந்தி, மனு காந்தி ஆகிய இருவரையும் தள்ளி, காந்தியைத் தனிமைப் படுத்தினார். நீதிமன்றத்தில் தமது மனச்சாட்சி தமது செயல் குறித்து உறுத்தவில்லை என்றும் தமது தரப்பு நியாயங்களை எதிர்காலத்தில் நேர்மையான சரித்திர ஆசிரியர் எரேனும் முறையாகப் பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
தீர்ப்பளித்த நீதிபதி கோஸ்லா, இங்கு அமர்ந்துள்ளவர்கள் ஜூரிகளாக இருப்பின் கோட்ஸே குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியிருக்கும் எனத் தமது தீர்ப்பில் பதிவு செய்தார்.
கோட்ஸேயின் வாக்குமூலம் 'மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர் ' என்பதாகும். இது பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் படிக்கக் கிடைக்கிறது.கூகிள் மூலம் 'கோட்ஸே ' எனத் தேடினால் ஏராளமான விவரங்களும், நீதிமன்ற விசாரணை, கோட்ஸே வாக்குமூலம் ஆகியவை கிடைக்கும். இருபது ஆன்டுகளுக்கு முன் இந்த வசதி இல்லை. ஆகையால் நான் மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களை நேரில் திரட்ட வேண்டியதாயிற்று. எனினும் நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே போன்றவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பும் பிறகு கடிதத் தொடர்பும் அதன் பயனாகக் கிட்டியது. கோபால் கோட்ஸே தற்சமயம் புணேயில் எண்பது பிராயம் கடந்தவராகப் புற்று நோயால் அவ்திப் பட்டுக் கொண்டும் போதிய பொருளாதார வசதியின்றியும், சாவின் நிழல் படிந்தவராக வாழ்ந்துவருகிகிறார்.
இது குறித்து இன்னொரு தகவலையும் பதிவு செய்ய விழைகிறேன், இதற்காக நான் தூற்றப்படுவேன் என்றாலும்!
காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம். அவரை நான் அறிவேன் என்பது மாத்திரமல்ல, பிற்காலத்தில் சென்னை தி.நகரில் அவரது திருமண மண்டபம் ஆரோவில் ஊதுபத்தி முகவர் ஒருவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தபோது கல்யாணத்திற்கு உதவியாக ஒரு சிறு குழுவுடன் இரவு பகல் திருமண மண்டபத்தில் தங்கியிருந்து, கல்யாணத்திற்கு எதிராகத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அடிதடியில் பங்கு வகித்தேன்!
காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு 'ஹே ராம் ' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி 'ஹே ராம் ' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த 'ஹே ராம் ' சமாசாரமும் ஒன்று!
இந்திரா காந்தி படுகொலையின் போது அதனையும் காந்திஜி படுகொலையினையும் ஒப்பிட்டு துக்ளக்கில் ஒரு கட்டுரை வந்தது. நான் எனக்குத் தெரிந்த நியாயங்களைக் குறிப்பிட்டு அதற்குப் பதில் கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் துக்ளக் அதனை வெளியிடவில்லை. எனது கட்டுரை ஒரு நல்ல ஆவணம்தான். இப்போது அது இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதன் நகல் என்னிடம் இல்லை.
இந்திரா கொலையையும் காந்திஜி கொலையையும் ஒப்பிடமுடியாது. உளவுத் துறையினர் பிரதமர் இந்திரா காந்தியிடம் அவரது மெய்க்காப்பாளர் குழுவில் சீக்கியர் இடம்பெறுவது வம்பை விலைக்கு வாங்குவது போலாகும் என்று வலியுறுத்திய போது, அப்படி அவர்களை ஒதுக்கி வைத்தால் சீக்கியர்களை நாம் புறக்கணிக்கிறோம் என நாமே ஒப்புக்கொள்வது போலாகிவிடும். எனவே எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர்களில் சீக்கியர்களும் இருக்கட்டும் என்று சொல்லித் துணிச்சலுடன் அதற்கு உத்தரவிட்டார், இந்திரா. அதற்குப் பரிசாக அவர் அவரது மெய்க் காப்பாளர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா ? கோட்ஸே எனது செயலுக்கு மன்னியுங்கள் என்பதுபோல் முன்கூட்டியே காந்திஜியை வணங்கிவிட்டு காந்திஜிக்கு மட்டும் படுகிறாற்போல் சுட்டார். துவேஷமோ வெறியோ, இந்தக் காரியத்தை முடித்தால் உன் குடும்பத்தைக் காப்போம், இவ்வளவு சன்மானம் தருவோம் என்ற ஆசைகாட்டுதலோ ஏதுமின்றி, தமக்குத் தாமே எடுத்த சொந்த முடிவின் பிரகாரம்,
விளைவினை அறிந்தே கோட்ஸே வினையாற்றினார். இதனைச் செய்து முடித்தால் சுவர்க்கத்தில் பல அழகியர் பணிவிடை செய்ய, சுக போகம் அனுபவிக்கலாம் என்கிற ஆசைகாட்டுதலுக்கு மயங்கியதாலும் அல்ல! மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை -- இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை. பழிவாங்கும் குரோதம் அவரது செயலுக்குப் பின்னணியாக இருக்கவுமில்லை. அரசாங்கத்தையே சங்கடப்படுத்திப் பணியச் செய்யும் அளவுக்கு முரட்டுப் பிடிவாதமும், தாம் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சாதிக்கிற சுபாவமும் கொண்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன்னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த இதைவிட்டால் வேறு வழியில்லை எனக்கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை (இந்தத் தகவலை நான் பதிவு செய்வதால் காந்திஜியின் கொலையை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. எந்த உயிர்க்கொலையையும் நியாயப் படுத்தும் மனப்போக்கு எனக்கு இல்லை. ஆனால் அதே சமயம், கீதையின் சாரம் தெரிந்தவனாய் இருப்பதால் எமது கீதாசாரியன் அறிவுரைப் பிரகாரம் இம்மாதிரியான நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அவை உருவாகும் அவசியத்தின் பிரகாரம் ஏற்கவும் செயலாற்றவும் தெரிந்தவன்).
இந்திராவைக் கொலை செய்தவர்கள் விஷயத்தில் கோட்ஸேயின் செயலை ஒப்பிடுவது பொருந்தாது என்று நான் எழுதிய கட்டுரையை துக்ளக் ஏனோ நிராகரித்துவிட்டது.
இன்னொரு விஷயமும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்: நமது புண்ணிய தேசத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திராவை உடனிருந்தே கொன்றவர்களை ஆண்டுதோறும் தியாகிகள் எனக் கொண்டாட அனுமதியுண்டு. ராஜீவ் காந்தியைச் சதி செய்து கொல்வதற்காக அவரை மட்டுமின்றி ஏராளமான அப்பாவிகளைக் கொன்றும், ஊனப்படுத்தியும் வினையாற்றியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு மேடையேறிப் புகழ்ந்து பேச வாய்ப்பு உண்டு (பிற்பாடு அப்படிபட்டவர்களுக்கு மத்திய மந்திரிசபையிலேயே இடமும் கிடைத்தது!). ஆனால் கோட்ஸேவுக்கு மாத்திரம் வெளிப்படையாக நினைவு தினம் கொண்டாடவோ அவர் செயலை அவரது கோணத்தில் ஆராய்ந்து மேடை போட்டுப் பகிரங்கமாகப் பேசவோ அனுமதி கிடைக்காது!
காந்திஜி கொலைச் சம்பவம் இது நாள் வரை ஒருதரப்பிலிருந்தே அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை வெகு எளிதில் ஒரு மதவெறியராகச் சித்திரிப்பதோடு விஷயம் முற்றுப்பெற்றுவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு எவரும் எப்படியும் மனம் போன போக்கில் தூற்றித் திரிய முடிகிறது. இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இதுகுறித்து எழுதினேன்.
சொந்தச் செலவில் தில்லியில் போய் காந்திஜி அமைதி நிறுவன விடுதியிலேயே தங்கியிருந்து ஆவணக்காப்பகங்களிலிருந்தும், நாதுராம் வினாயக கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேயிடம் உரையாடியும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் இவை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு மேற்கொள்ளும் அரட்டை அல்ல. பாரதத்தின் பத்திரிகைகளுக்கு இம்மாதிரியான ஆய்வுகளை வெளியிடும் திராணியோ பொறுப்புணர்வோ இல்லாததால், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழான ஆர்கனைசர் கூட 'காந்திஜி கொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குப் பங்கு இருப்பதுபோல் கண்மூடித்தனமாக அவப் பெயர் கற்பிக்கப்பட்டு வருவதால் இது பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பிரசுரிப்போமாயின் காந்திஜியின் கொலையை நாம் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடுவார்கள் என்று சொல்லி, என்னை ஊக்குவிக்கவில்லை. இந்த ஆய்வுக்காக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவே செலவழித்து என் குடும்பத்தைக் கஷ்டப்படவைத்தேன்! எழுத்துத் துறையில் பலவாறாக உழைத்து ஏராளமாகச் சம்பாதிக்கத் தெரி ந்தவன். ஆனால் அப்படிச் சம்பாதிப்பதைக் குடும்பத்திற்கு ஒதுக்காமல் இவ்வாறெல்லாம் செலவழித்துவிட்டுப் பிறகு
சிரமப்படுபவனுங்கூட!
இறுதியாக இன்னொரு தகவலையும் தந்து முடிக்கிறேன்:
காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!
----
malarmannan79@rediffmail.com