Friday 14 December, 2007

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம் - மலர்மன்னன்

Thursday December 13, 2007
ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்


மலர்மன்னன்

மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது பற்றிக் கருத்துச் சொல்லுமாறு பணிக்கிறார்கள்.

ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கை, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, சூரிநாம் போன்ற பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களையும் தகரம் போன்ற கனிமச் சுரங்கங்களையும் வைத்திருந்த பிரிட்டிஷ் முதலாளிகள் நேரங் காலம் இல்லாமல் அடிமைகளென மிகக் கடுமையாக உழைப்பதற்கு ஏராளமான மனித ஆற்றல் தேவைப்பட்டபோது தானும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹிந்துஸ்தானம் தனது பிரஜைகளை அனுப்பிக் கொடுத்தது.

பிழைக்க வழியின்றி, பிறந்த தேசத்தில் பசிக் கொடுமையன்றி வேறு அறியாது தவித்த மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பலவாறு ஆசைகள் காட்டி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனரே யன்றி, விருப்பம் காரணமாக அல்ல. கடலுக்கப்பால் இருப்பது சொர்க்க பூமி என போதையூட்டப்பட்டதாலும் பலர் கப்பல் ஏறினார்கள். இவர்களைத் தவிர பாரம்பரியமாகத் திரைகடல் தாண்டித் திரவியம் தேடுவதைத் தொழிலாகக் கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும், குறிப்பாகத் தஞ்சை, ராமனாதபுரம் மாவட்ட முகமதியரும் , வாணிபம் செய்து பொருள் ஈட்டக் கடல் கடந்து சென்றார்கள். உடலுழைப்பைக் கொடுத்து உயிர் பிழைக்கச் சென்றவர்கள் அனைவருமே ஹிந்துக்கள்தாம். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழர்கள்.

இவ்வாறு சென்றவர்களில் கணிசமானவர்கள் மலேயாவின் ரப்பர் தோட்டங்களிலும் தகரச் சுரங்கங்களிலும் பாடெடுக்கச் சென்றார்கள். மலேயா ஒரு காலனிய நாடாக இருந்தவரை அவர்கள் தமது சமய நம்பிக்கைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையைத் தொடரத் தடங்கல் ஏதும் இருக்கவில்லை. காலனிய நாடுகள் எல்லாவற்றிலுமே ஹிந்துஸ்தானத்திலிருந்து சென்ற ஹிந்துக்களுக்கு சமயம், கலாசாரம் ஆகியவற்றில் குறுக்கீடு ஏதும் அநேகமாக இருக்கவில்லை. பலவாறான கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளே புகுந்து சபலப்படுத்திக் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யும் தொல்லை மட்டுமே இருந்தது. இப்படிச் சபலத்திற்கு ஆளாகித் தங்களின் பாரம்பரியமான சமய நம்பிக்கையினையும் கலாசார அனுசரிப்பையும் கைவிட்டு மாற்று சமயம் தழுவியவர்கள் சொற்பம்தான். மிகப் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களாகவே நீடித்தனர்.

காலனிய நாடுகளில் எல்லாம் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கிய பிறகுதான் ஹிந்துக்களாகவே நீடித்தவர்களின் வாழ்க்கையில் புயலடிக்கத் தொடங்கியது. இப்போது அங்கெல்லாம் இருந்த ஹிந்துக்கள் இரண்டாவது மூன்றாவது தலைமுறை
யினராகிவிட்டிருந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்து, பிறப்பாலும் அந்த நாடுகளின் பிரஜைகளாகிவிட்டவர்கள் அவர்கள். தமது முன்னோர் நாடான ஹிந்துஸ்தானத்தை அவர்கள் கண்ணால் கண்டதில்லை. அங்கே அவர்களுக்கு வேர்களும் இல்லை.

மலேயா காலனியாதிக்கத்திலுருந்து விடுபட்டு, அங்கிருந்த பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமாரும் சுரங்க அதிபர்களும் சிறிது காலத்திற்குள் இனி இங்கு இருப்பதில் பயனில்லை என முடிவு செய்து வெளியேறியதும் அவர்களின் தோட்டங்களும் சுரங்கங்களும் கை மாறின. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஹிந்துஸ்தானத்திலிருந்து ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களைப் பற்றிக் கவலைப் படாமல் பிரிட்டிஷ் முதலாளிமார்கள் தாயகம் போய்ச் சேர்ந்தார்கள்.

காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் தங்கிப் போன ஹிந்துக்களுக்குத் தமது சமயத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதில் பிரச்சினை தொடங்கியது அந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற பிறகுதான். குறிப்பாகத் தம்மை முகமதிய தேசம் எனவும், பவுத்த தேசம் எனவும் பிரகடனம் செய்துகொண்ட தேசங்களில் ஹிந்துக்களுக்குத் தமது, சமய நம்பிக்கை, பண்பாடு ஆகியவை சார்ந்த விவகாரங்களில் சங்கடம் தலை தூக்கியது. அவர்கள் பகிரங்கமான புறக்கணிப்புகளுக்கு இலக்காகத் தொடங்கியது அப்போதிலிருந்துதான்.

மலேயாவாக இருந்து மலேசியாவென ஒரு சுதந்திர நாடாக மாறிய தேசம் தன்னை முகமதிய தேசமாக அடையாளப் படுத்திக் கொண்ட போதிலும் தொடக்கத்தில் பிற சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அதன் மதச் சார்பு தீவிரப்படலாயிற்று. உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ சமயத்திடம் அதனால் கடுமை காட்ட இயலவில்லை. ஹிந்து சமய மக்கள் சகிப்புத்தன்மை, சமரசப் போக்கு என்றெல்லாம் தமது கையாலாகாத்தனத்திற்கு ஒப்பனைசெய்து தமக்குத் தாமே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதால் வெகு எளிதில் அவர்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, கலாசார வாழ்க்கை ஆகியவற்றுக்கு எங்கும் சோதனை வருகிறது அல்லவா? மலேசிய ஹிந்துக்களுக்கும் அதுதான் நேரலாயிற்று.

மலேசியாவின் பிரஜைகளான ஹிந்துக்கள் அங்கு முகமதியம் அரசின் உறுதுணையுடன் மேலாதிக்கம் செலுத்துவது அதிகரித்ததும் தங்களின் சமய நம்பிக்கையின் அடிப்படை
யிலான வழிபாட்டுத் தலங்களை இழக்கத் தொடங்கியதோடு பொருளாதார ரீதியாகவும் உதாசீனம் செய்யப்படுவதைப் பல காலம் பொறுத்துப் பார்த்துப் பிறகு தமக்கு இவ்வாறான இழப்பு நேர்ந்து வருகின்றமைக்கு அடிப்படைக் காரணம் பிரிட்டிஷ் அரசு, தனது காலனி ஆதிக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கோண்டபோது தம் ஆட்சிக்காலத்தில் அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களின் சமய வழிபாட்டு உரிமைக்கும், கலாசாரப் பாதுகாப்பிற்கும் பொருளாதார உத்தரவாதத்திற்கும் எவ்வித ஏற்பாடும் செய்யாமலேயே போய்விட்டமைக்காக மிகச் சரியாகவே பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அமைதியான பேரணியாகச் சென்று பிரிட்டிஷ் ராணியாருக்கு மனு அளிக்க முற்பட்டு அதன் விளைவாக மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மலேசிய ஹிந்துக்கள் மலேசிய அரசுக்கு எதிரான பேரணியோ மறியலோ நடத்த முற்படவில்லை. பிரிட்டிஷ் தூதரகத்திற்குக் கருணை மனு அளிக்கத்தான் அமைதிப் பேரணியாகச் செல்ல விரும்பினர். ஆனால் அதற்கு அனுமதி யளிக்கக் கூட மலேசிய முகமதியச் சார்பு அரசுக்கு மனமில்லை. அது பேரணிக்கு அனுமதி மறுத்துத் தடையும் விதித்தபோது, ஹிந்துக்கள் தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முற்பட்டு மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் சிறையில் தள்ளப்பட்டு ஏதோ கொடிய குற்றவாளிகளைப் போல பிணையில் வெளிய வர அனுமதிக்கப்படாமல் பல கடுமையான சட்ட விதிகளின்படி வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்துக்களுக்கு இனி இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடும் நினைப்பே வரக்கூடாதவாறு நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்கிற ஆங்காரம் மலேசிய முகமதிய அரசுக்கு இருப்பது இதனால் தெளிவாகிறது. இவ்வளவுக்கும் அது தன்னை ஒரு ஜன நாயக நாடு எனக் கூறிக்கொள்கிறது. மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லாக் கீழ்த் திசை நாடுகளையும்போல் ஹிந்து, பவுத்த சமயங்கள் வேரோடியிருந்த தேசந்தான் அது! வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. ஜனநாயகத்தையும் மதச் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கும் நாடாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு முகமதிய தேசமே இவ்வாறு நடந்துகொள்ளுமானால் ஜன நாயகம் இல்லாத, போலி ஜனநாயக முகமதிய நாடுகளில் சிக்கிக்கொண்ட ஹிந்துக்களின் நிலை என்னவாக இருக்கும்?

மலேசிய ஹிந்துக்கள் மிகச் சரியாகவே தங்கள் அமைப்பிற்கு ஹிந்து உரிமைப் போராட்டக் குழு எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஏனெனில் முகமதியராகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களும், திராவிட மாயையில் கிடப்பவர்களும் சமரம் செய்துகொண்டு முன்னேறிவிட்டவர்களும் தமிழர்களாகவும், இந்திய வம்சாவழியினராகவும் இருந்த போதிலும் ஹிந்துக்களுடன் இணையவில்லை. தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் ஹிந்துக்களாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இந்த நுட்பங்களையெல்லாம் அறியாமல், மலேசிய ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரிடம் இங்கே யிருப்பவர்கள் சிலர் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ அடையாளப் படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுவதுபோலக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

மலேசியப் பிரஜைகளான அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்று அழைத்துக் கொள்வார்களேயானால் அது அவர்கள் இன்னமும் தங்கள் முன்னோர் தேசத்தின் மீது உள்ளூர விசுவாசம் வைத்திருப்பதாகவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுவதற்கு வழிசெய்துவிடும். தமிழர்கள் என அவர்கள் தம்மை மேலும் குறுக்கிக்கொள்வது பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஹிந்துக்களின் அனுதாபம் அவர்களுக்குக் கிட்டாமல் செய்துவிடக் கூடும்.

இன்று உலகெங்கிலும் ஹிந்துக்கள் பலர் சமய நம்பிக்கையுடனும் சமூக உணர்வுடனும் இருந்து வருகின்றனர். ஹிந்து சமயமேகூட சர்வ தேசத் தன்மையடைந்துள்ளது. ஹிந்து சமயத் தத்துவங்களின் சிறப்பையும் இறைக்கொள்கையின் ஆழத்தையும் புரிந்துகொண்டு அதனைப் போற்றுபவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ஹிந்து இயக்கங்கள் பல சர்வ தேசத் தன்மையுடன் வலுப்பெற்று விளங்கி வருகின்றன. ஹிந்துக்கள் இன்று பல்வேறு தேசங்களின் பிரஜைகளாகத் தாம் வாழும் தேசங்களில் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். ஆகவே மலேசிய ஹிந்துக்கள் தம்மை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் ஹிந்துக்கள் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதுதான் நல்லது.

அதன் பயனாக, ஹிந்து சமயம் மிகத் தொன்மையான உயிர்த் துடிப்புள்ள, தத்துவ ஆழம் மிக்க சமயம், ஹிந்து கலாசாரமோ மிகத் தொன்மையான கலாசாரம்; அது அழிந்துவிடலாகாது என்னும் விவேகமுள்ள நாடுகள் பலவும் அவர்களுக்கு ஆதரவு காட்டி கலாசார, சமயச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரும். சர்வ தேச ஹிந்து இயக்கங்களும் அவர்களுக்குத் துணை புரிய முன்வரும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசும் அங்குள்ள நீதி பரிபாலன அமைப்பும் இந்த அடிப்படையில் அவர்களுக்கு உதவ முன்வரக்கூடும்.

ஹிந்து என்கிற அடையாளம் சர்வ வியாபகச் சிறப்பு வாய்ந்தது. இந்திய வம்சாவழியினர் என்கிற அடையாளமோ தங்களுக்குப் பிரஜாவுரிமை தந்துள்ள தேசத்தைக் காட்டிலும் முன்னோரின் தேசத்தையே பெரிதாக நினைக்கும் மக்கள் என்ற கண்டனத்திற்குள்ளாகக்கூடும். அவர்களின் விசுவாசம் குறித்துப் பிறரால் கேள்வி எழுப்பப்படும். தமிழர் என்ற அடையாளமோ ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர் என எல்லையைக் குறுக்கி விடும்.

உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் அந்தந்த தேசங்களின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் தம்மைச் சமய ரீதியாகவும், கலாசார அடிப்படையிலும் ஹிந்துக்கள் என அடையாளப் படுத்திக்கொள்வதே அவர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். கிறிஸ்தவரும் முகமதியரும் தம்மை ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என அடையாளப் படுத்தித் தமது தாய்ச் சமய கலாசாரத்திற்கு உரிமைகொண்டாடுவதில் தவறில்லை. அண்மைக் காலம் வரை பங்களா தேஷ் என இன்று அழைக்கப்படும் கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த முகமதியர் தங்களை அவ்வாறுதான் அடையாளப் படுத்தி வந்தனர். ஹிந்தி ஹை ஹம், ஹிந்தி ஹை ஹம் என்று இக்பால் கூவியது இந்த அடிப்படையில்தான்(பிற்காலத்தில்தான் அவர் பாகிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் ஆனார்).

ஹிந்துஸ்தானத்திலிருந்து செல்லும் முகமதியர் ஹிந்தி என்றுதான் முகமதிய தேசங்களில் அடையாளங் காணப்பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அவற்றின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் தங்களை இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதைவிடுத்து, ஹிந்துக்கள் என்று அடையாளப் படுத்திக்கொள்வதுதான் அவர்களுக்கு சர்வ தேச
அந்தஸ்தையும் அவர்கள் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளில் சமயச் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் கேட்டுப் பெற உதவும். இந்திய வம்சாவழியினரான கிறிஸ்தவரும் முகமதியரும் இவ்வாறு சமயத்தின் அடிப்படையில் அங்குள்ள சமுதாய கலாசாரங்களுடன் இரண்டறக் கலந்து பயனடைய முடிகிறது. ஹிந்துக்களும் தங்கள் சமயத்தின் பெயரால் தங்களை அடையாளப்படுத்தி சிறுபான்மைச் சமயத்தவர் என்ற அடிப்படையில் தாம் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளிலும் சர்வ தேச அரங்குகளிலும் கவனிப்பைப் பெற முனைவது நல்லது.

இன்று இந்திய வம்சாவழியினர்தாம் ஹிந்துக்களாக இருப்பார்கள் என்னும் நிலை இல்லை. பல ஐரோப்பியரும் அமெரிக்கரும் பிற நாட்டினரும்கூட ஹிந்து சமய, கலாசார சிறப்புகளை உணர்ந்து தம்மை ஹிந்துக்கள் எனப் பெருமையுடன் அறிவித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

Wednesday 7 November, 2007

திண்ணை கட்டுரை by நரேந்திரன் - மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகமும் இஸ்லாமும்

Thursday November 1, 2007

மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்

நரேந்திரன்

"In a time of universal deceit, telling the truth is a revolutionary act."
- George Orwell

ஆம். மேற்கத்திய உலகம் தேய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக. தேய்வது நிலப்பரப்பில் அல்ல. மக்கள் தொகையில். இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1970 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையானது, 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் மேற்குலகில் ஏற்பட இருக்கும் அல்லது ஏற்படத் துவங்கி இருக்கும் புவியியல் மற்றும் சமுதாய ரீதியிலான மாற்றங்களின் தாக்கம் அச்சமூட்டும் வகையில் அமைந்திருக்கருக்கின்றது. எனவே அது குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமே.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத வகையில் இந்த நூற்றாண்டில் பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றது மேற்கத்திய உலகம்.

அமெரிக்காவைத் தவிர்த்து அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதனை வைத்து இதனைத் தீர்மானிக்கையில், கிரீஸின் மக்கள் தொகைப் பெருக்கம் 1.3, இத்தாலி 1.1, ஸ்பெயின் 1.1, அமெரிக்கா 2.1, ரஷ்யா 1.14 என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றைய கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் முதியவர்களே. 2050 ஆம் வருடத்திற்குள் 60 சதவீத இத்தாலியர்களுக்கு பெற்றோரைத் தவிர வேறு உறவினர்களே இருக்க மாட்டார்கள் என்பது ஆச்சரியச் செய்தி. இன்னும் முப்பதாண்டுகளில் சகோதர, சகோதரி, மாமன், அத்தை, சிற்றப்பன் என்ற உறவுகள் அனைத்தும் இழந்திருப்பார்கள் இத்தாலியர்கள். அந்த அளவிற்கு இத்தாலிய மக்கள் தொகை படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். ரஷ்யாவின் நிலைதான் இதில் மிகவும் மோசமானது. லெனின் தள்ளிவிட்டுச் சென்ற மார்க்ஸியப் படுகுழியிலிருந்து இன்னும் ரஷ்யர்களால் மீளமுடியவில்லை. வறுமையும், விபச்சாரமும், போதை மருந்துக் கலாச்சாரமும் இன்றைய ரஷ்யாவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் 140 மில்லியன் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் மிக அதிக கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் ரஷ்யப் பெண்களே. நாட்டின் எல்லைகளைக் காக்கப் போதுமான ராணுவ வீரர்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. அதன் 83 குடியரசுகளில், 61-இல் இதே நிலைமைதான். அதற்கு மாறாக 12 இஸ்லாமியக் குடியரசுகளில் மக்கள் பெருக்கம் க்ட்டுக்கடங்காமல் பெருகி வருவது கவனிக்கத்தக்கது.

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் ஜெர்மனிய மக்கள் தொகை நம்பவே முடியாத அளவிற்குச் சரிந்து விட்டது. உதாரணமாக, சில ஜெர்மானிய சிறு கிராமங்களில் வடிகால் (sewer system) இயக்கம் முற்றிலும் இயங்குவது நின்று போகும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. காரணம், பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பைப்புகள் கொண்ட வடிகால் சரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் அதனைத் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். அதன் மூலம் தேவையான அழுத்தம் பெறப்பட்டு, கழிவு நீர் தங்கு தடையின்று வடிந்து செல்லும். உபயோகிப்பாளர்கனின்றி சீரழிந்து கிடக்கும் வடிகால்களை தொடர்ந்து இயக்கும் பொருட்டு, பெரிதான பைப்புகளை அகற்றி, சிறிய பைப்புகள் அமைக்கும் பணியினை ஜெர்மனிய அரசாங்கம் பல பில்லியன் டாலர்கள் செலவில் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை ஓரளவு உணரலாம்.

ஆசிய நாடுகள் பலவற்றிலும் மக்கள் பெருக்கம் குறைந்து வருகிறது. ஜப்பானின் பெரும்பான்மை மக்கள் முதியோர்களே. 1970-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஜப்பானியப் பெண்களில் 51 சதவீதத்தினர் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதால் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருக்கின்றது அங்கே. 2050-இல் சீனர்களில் பெரும்பான்மையோர் முதியோர்களே. இந்திய நடுத்தர வர்க்கமும் தன் பங்கிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தே வருகிறது என்பது நாம் அறிந்ததே.

இன்றைய ஐரோப்பிய மக்கள் தொகைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டுமெனில், பிற நாடுகளிலிருந்து மக்களை குடியமர்த்தச் செய்வதே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஒவ்வொரு வெற்றிகர நாட்டிற்கும் மனிதச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக நுகர்வோர், அதிக உற்பத்தி. அதிக உற்பத்தி, அதிக வேலை வாய்ப்பு. அதிக வேலை வாய்ப்பு உறுதியான பொருளாதாரத்திற்கு அடிப்படை. எனவே மக்கள் தொகை குறைந்து வருவதால் கவலை கொள்ளும் நாடுகள், குடியேற்றங்களை அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு அவ்வாறு குடியேறுபவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.

ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் அதே சமயம், இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இன்னொரு விதமாகக் கூறுவதென்றால், ஒப்பீட்டளவில், 1970களில் இஸ்லாமிய நாடுகளை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்த மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை, 2000-ஆம் வருடம் அதே இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாகக் குறைந்து விட்டது. பதினைந்து வயதிற்கும் குறைவானவர்கள் ஜெர்மனி 14 சதமும், இங்கிலாந்து 18 சதமும், அமெரிக்கா 21 சதமும் இருக்கிறார்கள். அதே சமயம் சவூதி அரேபியாவில் 39 சதம், பாகிஸ்தானில் 40 சதம், ஏமனில் 47 சதம் பேர் இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்காவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உண்மையே. கடந்த இருபது ஆண்டு காலங்களில், இந்நாடுகளுக்கு குடியேறும் இஸ்லாமிய மக்களின் சதவீதம் மிகவும் அதிகரித்திருக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக குடியேறுபவர்கள் இவர்களில் அதிகம் பேருண்டு. உலகில் இருக்கும் நாற்பத்தாறு இஸ்லாமிய நாடுகளில், மூன்றே மூன்று நாடுகளைத் தவிர பிற நாடுகளில் சர்வாதிகாரிகளால் நசுக்கப்படும் முஸ்லிம்கள், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் குடியேற்றச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி அங்கு குடியேறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்றைக்கு இருபது மில்லியன் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். அரசாங்கக் கணக்கு அது. அன்-அ·பிசியலாக இன்னும் அதிகம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இருபது மில்லியன் என்பது டேனிஷ், ஐரிஷ், பெல்ஜியன் மற்றும் எஸ்டோனிய ஜனத்தொகையின் மொத்த கூட்டுத் தொகைக்கும் ஈடானது.

டென்மார்க்கில் மட்டும் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ரோட்டர்டாம் நகரின் மொத்த ஜனத்தொகையில் 40 சதவீதம் முஸ்லிம்களே. ·பிரான்ஸ்சின் நகரப்பகுதிகளில் 30 சதவீதம் முஸ்லிம்கள். இன்னும் பல ·பிரான்சின் சிறு நகரங்களில் 45 சதவீதம் வரை முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பெல்ஜியத்திலும், ஆம்ஸ்டர்டாமிலும், இங்கிலாந்திலும், மால்மோவிலும் சிறுவர்களுக்கு வைக்கப்படும் அதிகபட்சப் பெயர் "மொஹம்மது" என்பது குறித்து நாம் ஆச்சரிப்பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பிய ஜனத்தொகை முதிர்ச்சியடைந்து குறைந்து வரும் வேளையில், பெருகும் இளம் முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை பல மடங்கு அதிகரிது வருகிறது.

***

கிறிஸ்தவ Europe இஸ்லாமிய Eurobia ஆக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நம்பத் தகுந்த சூழ்நிலை நிலவுகிறது அங்கே. எந்த ஐரோப்பிய நாடு முதலில் இஸ்லாமிய நாடாகும் என்பதுதான் கேள்விக்குறி. முதலில் அல்பேனியா. அடுத்ததாக ·ப்ரான்ஸ். பின்னர் இங்கிலாந்து.. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி...?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில், இன்றைக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மயமாவதிலிருந்து மயிரிழையில் ஐரோப்பா தப்பியிருப்பது தெரிய வரும்.

AD 732, அக்டோபரில் மூரிஷ் ஜெனரல் (Moorish) அப்த்-அல்-ரஹ்மானின் தலைமையிலான இஸ்லாமியப் படை, ஜிப்ரால்டரின் வடக்கே ஆயிரம் மைல்கள் வரை முன்னேறியது. மூர்க்கத்தனமாக போர் புரிந்த இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்கத் திராணியற்ற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்தன. ஸ்பெயினையும், ·பிரான்ஸ்சின் தென்பகுதியையும் கைப்பற்றிய அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை, பாரிஸ் நகருக்கு ஏறக்குறைய இருநூறு மைல்கள் தொலைவில் இருக்கும் லோய்ர் (Loire) நதிக்கரையை வந்தடைந்தது. ·ப்ரான்சைச் சேர்ந்த சார்ல்ஸ் ·ப்ரான்கிஷ் (Charles Frankish) என்பவர் தலைமியிலான ஐரோப்பிய கிறிஸ்தவப் படையினர், இன்றைய ·ப்ரான்சின் பொய்ட்டியர்ஸ் (Poitiers) மற்றும் டூர்ஸ் (Tours) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படையினரை எதிர்த்து நின்றார்கள். ஒரு வார காலம் நிகழ்ந்த கடுமையான போரின் போது பிற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளைப் போலப் பின்வாங்கி ஓடாமல் ·ப்ரான்கிஷின் படையினர் எதிர்த்து நின்றார்கள். ஜெனரல் அப்த்-அல்-ரஹ்மான் கொல்லப்பட, இஸ்லாமியப்படை பின் வாங்கிச் சிதறியோடியது.

பொய்ட்டியர்ஸ் போர் ஐரோப்பாவின் திருப்பு முனை எனலாம். அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை இப்போரில் வென்றிருந்தால் ஐரோப்பாவின், ஏன் உலகின் தலையெழுத்தே வேறாக இருந்திருக்கக் கூடும். பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதற்கும் மேலாக ரைன் நதியையும் தாண்டிச் செல்லவே அப்த்-அல்-ரஹ்மான் முயன்றிருப்பார் என நம்பலாம்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்றைய நடைமுறைகளைப் போலல்லாமல், ஆக்ஸ்·போர்டிலும் மற்ற ஐரோப்பிய பல்கலக்கழகங்களிலும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறித்த பாடங்களை மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ மதம் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கலாம். ஐரோப்பாவிலிருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்கா சென்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருப்பார்கள். ஒசாமா பின்-லேடன், கலீ·பா பின்-லேடனாகி இருக்கலாம். 911 தவிர்கப்பட்டிருக்கக் கூடும்... இத்தியாதி. இத்தியாதி. எக்ஸெட்ரா. எக்ஸெட்ரா. இன்ன பிற.

எதிர் வருக் காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாகும் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகயம் தொட அனுமதிக்கப்படுமா அல்லது இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான அரசாங்கம் அமையுமா என்பது யோசிக்கச் சுவராசியமான விஷயங்களே.

எனக்கென்னவோ இரண்டாவதுதான் நிகழும் என்று தோன்றுகிறது.

அதற்கு ஆதாரமாக இரண்டு உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறேன். முதலாவது இங்கிலாந்திலிருந்து. இரண்டாவது அமெரிக்காவிலிருந்து.

இங்கிலாந்தில் வசிக்கும் முப்பத்து ஒன்பது வயதான இஸ்லாமியத் தலைவர் அன்ஜம் சவுதிரி. நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த 911 தாக்குதலை "அற்புதம்" என்று வர்ணித்த அவர், அத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை "ஹீரோக்கள்" என்றார். இலண்டனில் நடந்த ட்யூப் ரயில் தாக்குதலை ஒரு பெரும் வெற்றியாக அறிவித்ததுடன், அத்தாக்குதல் குறித்து இங்கிலாந்து போலிசாரும், அரசாங்கமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர்.

அன்னார் அன்ஜம் சவுதிரியின் இலட்சியம், இங்கிலாந்தில் இஸ்லாமிய ஷரியா ஆட்சி கொண்டு வருவது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. சவுதிரியும் அவரது மனைவியும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் (கணிசமான தொகை என்பதனை விளக்க வேண்டியதில்லை!). அதாவது, மேற்கில் புலம் பெயர்ந்த பெரும்பாலான, கல்வித் திறமைகள் அற்ற பெரும்பாலான முஸ்லிம்களைப் போலவே அவர் அலுவலகப் பணியோ அல்லது வேறு உபயோகமான பணியோ என்றும் எதுவும் செய்வதில்லை. அப்படியாகப்பட்ட அவரை BBC-யில் பேட்டி கண்டார்கள். பேட்டி எடுத்த மகானுபாவர் அவரிடம், "Why don't you move to some other country where islamic sharia is already in place?" எனக் கேட்டு வைக்க, அதற்கு திருவாளர் சவுதிரி அளித்த பதில் உலகப் பிரசித்தமானது.
"Who says you own Britain? Britain belongs to Allah! The whole world belongs to Allah! If I go to the jungle, I'm not going to live like the animals. I'm going to propogate a superior way of life. Islam is the superior way of life!" என்று ஒரு போடு போட்டர். பேட்டி எடுத்தவர் அனேகமாக ஒரு இங்கிலாந்து "காட்டுவாசி"யாகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் நிலை குறித்து நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது உதாரணம் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் சிறுவர் பள்ளி (கிண்டர் கார்டன்) ஆசிரியையான நஸ்ரா குரேஷியினுடையது. ஆங்கிலத்தில் அளிப்பதே சாலப் பொருத்தம் ஆதலால் அதனை மொழி பெயர்க்க முற்படவில்லை. Lansing State Journal பத்திரிகையிலிருந்து இது. இனி நஸ்ரா,

........ Islam is the guide of humanity, for all times, until the day of judgement. It is forbidden in Islam to convert to any other religion. The penalty is death. There is no disagreement about it.
Islam is being embraced by people of other faiths all the times. They should know they can embrace Islam, but cannot get out. This rule is not made by Muslims; It is the supreme law of God.
Please do not ask us Muslims to pick some rules and disregard other rules. Muslims are supposed to embrace Islam in its totality....

அ·ப்கோர்ஸ் இது மெஜாரிடி முஸ்லிம்களின் பார்வையில்லை. குறைவான முஸ்லிம்களே இத்தகைய மனோபாவம் உடையவர்கள் என்று நம்புவோமாக.

Peace be upon you.

ஆதாரம் : "America Alone - The end of the world as we know it" by Mark Steyn.

Tuesday 6 November, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 12(அத்தியாயம் 18)

Thursday November 1, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 12(அத்தியாயம் 18)

எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பதினெட்டு

மோட்ச சந்நியாச யோகம்

சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான்;. செயல்களைத் துறப்பது சந்தியாசம்ƒ செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம்.

இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: 1கேசி என்ற அரக்கனை அழித்த 2நீண்ட கைகளையுடைய கண்ணா‚ சந்நியாசம், தியாகம் ஆகியவற்றின் உண்மைப் பொருளைத் தனித்தனியே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

கண்ணன்: பலன் 3கருதிச்செய்யும் செயல்களைத் துறப்பது சந்நியாசம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்தச் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் சொல்லுகின்றனர். ஆசை முதலியவற்றை விட்டுவிடுவதைப் போல், செயல்களையும் துறந்துவிடவேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களை விடக்கூடாது என்கின்றனர்.

வேள்வி, தானம், தவம் ஆகிய மூன்று செயல்களையும் விடாமல் செய்தே தீர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். விதிக்கப்பட்ட செயலை விட்டுவிடுவது முறையற்றது. ஏனெனில் இச்செயல்கள் தான் அறிஞர்களைத் தெளிய வைத்துத் தூய்மைப்படுத்துகின்றனƒ ஆனால் அவர்கள் அவற்றைச் செய்யும்போது பலன்களில் பற்றைத் துறந்து செய்யவேண்டும்.
பாரதச் செல்வனே‚ இந்தத் தியாகத்தைப் பற்றிய எனது கொள்கை என்ன என்பதைக் கேள்‚ தியாகம் மூன்று வகையானது. விதிக்கப்பட்ட செயலை மதிமயக்கத்தால் துறப்பது4 தாமசத் தியாகமாகும். உடல் வருந்தப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதனால் உண்டாகப்போவது துன்பமே என்ற விரக்தியாலும் ஒருவன் செயலிழந்து நின்றால், அது ராஜசத் தியாகமாகும். அதற்கான பலன் அவனுக்குக் கிட்டாது. செய்யுந் தொழிலே கடமை என்றெண்ணிச் செயல்படும்போது பலன்களின் மேல் பற்றைத் துறந்துவிடுவது சாத்விக தியாகமாகும். சத்வகுணம் நிறைந்து புத்தியில் சிறந்தவன், ஒரு தொழில் நல்லது என்று அதை நாடுவதும் 5இல்லை.. தீயது என்று அதைவிட்டு ஓடுவதும் இல்லை. உடலெடுத்தவன் எவனும் செயல்களை அறவே விட்டுவிட முடியாது. ஆனால்.. அதனால் வரும் பலாபலன்களைத் துறந்துவிட முடியும். அத்தகையவனே உண்மையான தியாகி. இத்தகைய தியாகிகள் அல்லாதவர்கள் இறந்த பிறகு 6இனியது, இன்னாதது, இரண்டும் கலந்தது என்ற பலன்களை அடைவார்கள். ஆனால்.. உண்மைத் தியாகிகளுக்கு அது இல்லை. இனி சந்நியாசத்தைப் பற்றி விளக்குவேன் அர்ஜுனா‚


சந்நியாசம் பூண்டு எதிலும் பற்றினை நீக்கி, ஆசையைப் போக்கி மனத்தை வெற்றி கொண்டவன், இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற 7நிஷ்காமிய கருமா எனும் உயர்ந்த நிலையடைகிறான். இவ்விதம் உயர்நிலை அடைந்தவன் ஞானத்தின் கொடுமுடியாகிய பிரம்மத்துடன் எவ்வாறு இணைகிறான் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
அவன் அறிவின் தூய்மையாலும், மனத்தின்மையாலும் தன்னையே அடக்கிவிடுகிறான்‚ ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன் சுகங்களையும் ஒடுக்கி விடுகிறான்‚ விருப்பு வெறுப்புகளைக் கடந்துவிடுகிறான்‚ தனிமையில்;; இருக்கிறான்‚ கொஞ்;சமாய் உண்கிறான்‚ மனம், மொழி, மெய்யினை அடக்கி தியானத்தில் திளைக்கிறான்‚ வைராக்கியம் என்ற வாளை எடுத்து அபிமானம், அகந்தை, ஆணவம், காமம், மோகம், கோபம் ஆகியவற்றை வெட்டிச் சாய்க்கிறான்‚ தனது என்ற எண்ணம் நீங்கி 8அமைதியில் பாய்கிறான்‚ முடிவில் பிரம்மத்தில் தோய்கிறான்‚ இத்தகைய உத்தமனின் உள்ளம் தெளிந்து விடுகிறது‚ கவலை மறைந்துவிடுகிறது‚ ஆசை அழிந்து விடுகிறது‚ எல்லா உயிர்களும் சமமே என்ற எண்ணம் தோன்றி விடுகிறது‚ அவனுடைய உயர்ந்த பக்தி என்மேலேயே ஊன்றிவிடுகிறது‚ இதனால் „நான் யார்.. எவ்வளவு பெரியவன்?… என்பதைப் பூரணமாய் அறிந்து கொள்ளுகிறான்‚ இவ்விதம் உள்ளது உள்ளபடி 9என்னை அறிந்து கொண்ட பிறகு என்னுடனேயே கலந்து விடுகிறான்‚

நன்கு சித்தாந்தம் செய்யப்பட்டுள்ள சாங்கிய10 சாத்திரத்தின்படி, ஒரு செயல் நிகழ்வதற்கு ஐந்து காரணங்கள் இருந்தாக வேண்டும். இடம், இயங்கும் மனிதன், அவனது செயல்கள், செயலுறும் கருவிகள், அதற்கும் மேல் ஐந்தாவதாக இறையருள் தேவை. மனம், வாக்கு, காயங்களால் மனிதன் நல்லது கெட்டது எது தொடங்கினாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாகும். அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்றும் செயல் செய்யத் தூண்டுகின்றன. கருவி, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் செயலை முடித்து வைக்கின்றன. இதையறியாமல் எதையும் „நானே செய்தேன்‚… என்பவன் பக்குவமடையாத மூடனாவான். ஆகவே அர்ஜுனா‚ அகந்தையை மறந்தவன், பற்றினைத் துறந்தவன் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் பாவம் அவனைப் பற்றாது என்பதை அறிவாயாக‚

அறிவு, செயல்,அதைச் செய்பவன் என்ற மூன்றும் கூட குணவேறுபாடுகளால் மூன்று வகைப்படும் என்று சாங்க்கிய11 சாஸ்திரம் விளக்குவதையும் இப்போது சொல்லுகிறேன் கேள்.
வேறு வேறாய்ப் பிரிந்து நிற்கும் அனைத்து உயிர்களிலும் பிரிவற்றதும், அழிவற்றதுமான ஒரே ஆத்மாவைக் கண்டு கொள்ளும் அறிவு சாத்விக அறிவு. அனைத்து உயிர்களையும் வேறு வேறாகப் கண்டு அவற்றில் உறையும் ஆத்மாக்களும் வேறு வேறானவை என்று கருதும் அறிவு ராஜச அறிவு. நிகழ்த்தும் செயலே எல்லாப் பலன்களையும் கொடுத்துவிடும் என்றெண்ணி அதுவே கதியெனக் கிடப்பதும், காரணமற்றதும், கடுகிலும் சிறியதும், உண்மையில் வறியதுமான அறிவு தாமச அறிவு.

நித்தியமென்று விதிக்கப்பட்ட சத்தியச் செயலை, பலன்களைவிட்டு, பற்றினைச் சுட்டு;, விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் அது சாத்விகச் செயல். அகங்காரச் சித்தனாலும் பலன் கருதும் பித்தனாலும் மிகுந்த ஆயாசத்துடன் செய்யப்படும் செயல், ராஜசச் செயல். வினையின் விளைவையும், வீண் பொருட் செலவையும், செய்பவன் பலத்தையும், மற்றவர் நலத்தையும் எண்ணிப் பார்க்காமல் செய்யும் செயல் தாமசச் செயல்.

பக்குவ மனத்துடன் பற்றினை வென்றவன், உறுதியின் உச்சியில் ஊக்கமாய் நின்றவன், உற்சாகத்தை உடமையாய்ப் பெற்றவன், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவன் சாத்விகன் எனப்படுவான். பலாபலன்களில் பற்றினை வைத்தவன், பணம் என்னும் பேயைப் பற்றிப் பிடித்தவன், தொல்லைகள் பிறர்க்குக் கொடுக்கத் துடிப்பவன், சுத்தமென்பதை அறவே துடைத்தவன், அழுகையும் சிரிப்பும் ஒருங்கே படைத்தவன் ராஜகன் எனப்படுவான். பரபரப்பானவன், பக்குவமற்றவன், முரடன், திருடன், மோசக்காரன், துக்கம் நிறைந்தவன், சோம்பலில் உறைந்தவன் தாமசன் எனப்படுவான்.

இது போலவே அர்ஜுனா12.. சத்வம் முதலிய குணவேறுபாடுகளுக்கு ஏற்ப புத்தியும், துணிவும் மூன்று வகைப்படும். மேலும் துக்கத்தை வீழ்த்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பயிற்சியால் கிடைக்கும் சுகமும் கூட மூன்று வகைப்படும். இவை பற்றி இப்போது விளக்கிக் கூறுவேன்‚
செய்யத்தக்கது, செய்யத் தகாதது.. அஞ்சத்தக்கது, அஞ்சத்தகாதது.. நாடத்தக்கது நாடத்தகாதது.. கூடத்தக்கது, கூடத்தகாதது.. பந்தத்தில் சிக்க வைப்பது, சொர்க்கத்தில் சொக்க வைப்பது என்பவற்றை பகுத்தறியக் கூடியது சாத்விக புத்தியாகும். தர்மத்தையும் தாறுமாறாகப் புரிந்து கொள்வது ராஜச புத்தியாகும். அதர்மத்தையும்.. தக்கதையும், தகாததையும் அறியாமைச் சேற்றில் சிக்கி, தர்மத்தையே அதர்மமாகவும், அதர்மத்தையே தர்மமாகவும் ஏறுமாறாகப் புரிந்து கொள்ளுவது தாமச புத்தியாகும்.

யோகத்தினால் கைகூடி வந்த எந்தத் துணிவால் உயிரையும், புலன்களையும் மனமானது அடக்கியாள்கிறதோ, அதற்குச் சாத்விகத் துணிவு என்று பெயர். பற்று மிகுதியால் பலனை எதிர்பார்த்து எந்தத் துணிவு அறம், பொருள், இன்பங்களைப் பேணிக்காக்கிறதோ அதற்கு ராஜசத் துணிவு என்று பெயர். தூக்கத்தையும், ஏக்கத்தையும்.. தொல்லை கொடுக்கும் துயரத்தையும்.. 13அச்சத்தையும் ஆணவத்தையும் விடாமல் பிடிக்கும் மூடனின் துணிவுக்கு தாமசத் துணிவு என்று பெயர்.

முதலில் நஞ்சுபோல் கசக்கும்.. முடிவில் அமுதம்போல் இனிக்கும்ƒ புத்தித் தெளிவினால் கிடைக்கும் இந்தச் சுகமே சாத்விக சுகமாகும். பொறி புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமுதமாய் இனித்து முடிவில் கசக்கும் சுகமே ராஜச சுகமாகும். முதலிலும் முடிவிலும் மயங்கச் செய்து.. மறதியிலும், சோம்பலிலும், தூக்கத்திலும் பிறக்கும் சுகமே தாமச சுகமாகும்.
இதுவரை நான் விளக்கிக் கூறியதுபோல் இயற்கையான இம்முக்குணங்கள் இல்லாத உயிர்கள், மண்ணுலக மனிதர்களிலும் சரி.. விண்ணுலக தேவர்களிலும் சரி.. இல்லவே இல்லை. இவ்விதம் அவரவரிடம் இயல்பாய்த் தோன்றும் குணங்களுக்கு ஏற்றபடி தான் பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர், என்ற செயற் பாகுபாடுகள் 14வகுக்கப்பட்டுள்ளன.


மனத்தை அடக்குதல், புலன்களை மடக்குதல்.. தவப்பணி ஆற்றுதல், ஆத்திகம் போற்றுதல்.. தூய்மை, பொறுமை, நேர்மை முதலிய குணங்களைப் பூணுதல்.. அனுபவம், ஞானம் ஆகியவை காணுதல்;15 பிராமணருக்கு இயல்பான தொழில்கள். ஆண்மையும், வீரமும், உறுதியும், துணிவும்.. ஈகையும், திறமையும்.. ஆளும் தன்மையும்.. போரினில் புறங் கொடா வீரியத் திண்மையும் 16~த்ரியர்களுக்கு இயல்பான தொழில்கள். பயிர்த்தொழில் செய்தல், பசுக்களைக் காத்தல், வாணிபம் புரிதல் ஆகியவை வைசியர்களுக்கு இயல்பான தொழில்கள். மற்றவர் தேவைக்கேற்ப சேவை புரிவதே சூத்திரனுக்கு இயல்பான தொழில்.

தனக்கு இயல்பான தொழிலைக் களிப்புடன் செய்பவன் சித்தியடைகிறான்ƒ கர்மத்தில் கருத்து வைக்கும் அவன் எவ்விதம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள்‚
அவன் தன் கடமையைச் செய்கிறான் அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு செய்யும் பூiஐ. அது பரம்பொருளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அதனால் அவன் சித்தியடைகிறான். அடுத்தவர் கடமையைச் சிறப்புற முடிப்பதைக் காட்டிலும், தனக்கென அமைந்த தகவுறு கடமையை அரை குறையாக விடுப்பதும் நல்லதே‚ அப்படித் தனக்கென அமைந்த தொழிலைச் செய்பவன் பாவத்தை அடைய மாட்டான். எனவே இயல்பாய் அமைந்த தொழில் இழிவானதென்றாலும் அதை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் நெருப்பைப் புகையானது சுற்றிக் கொண்டருப்பதைப் போல், எந்தத் தொழிலையும் ஏதேனும் ஒரு குறை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

எந்தத் தொழிலை எங்கே செய்து கொண்டருந்தாலும் என்னையே சரணடைந்தவன் என்னருளால் அழிவற்ற நிலையை அடைகிறான். அதனால் அர்ஜுனா.. காரியங்கள் அனைத்தையும் எனக்கே காணிக்கையாக்கி விடு‚ உனது குறிக்கோளாய் என்னையே கருதி விடு‚ அடைய வேண்டிய அறிவாய் என்னையே நினைத்து விடு‚ என்றும் எப்பொழுதும் என்னையே எண்ணத்தில் கொண்டு விடு‚ அப்படிச் செய்தால் உனக்கு வரும் இடையூறுகள் தூள் தூளாகும்‚ நான் சொன்னதைக் கேட்காவிட்டால் நீயே தூள் தூளாவாய்‚

அர்ஜுனா‚ „நான் போர் செய்ய மாட்டேன்‚… என்று ஆணவத்தால் நீ முடிவு செய்தாலும், அந்த முயற்சியும் நிச்சயம் பலிக்காது. ஏனென்றால் பிறவிக்குணம் உன்னைப் போர் செய்யத் தூண்டிவிடும். மதி மயக்கத்தால்தான் போர் செய்ய மறுக்கிறாய்‚ இயல்பான உன் தொழிலுக்குக் கட்டுப்பட்டு.. உன்னையே மறந்து நீ போர் செய்யத்தான் போகிறாய்‚ ராட்டினத்தில் பூட்டிய பாவைகளைப்போல் இறைவன் தன் மாயா சக்தியால் அனைத்து17 உயிர்களையும் ஆட்டிப்படைக்கிறான். அவற்றின் உள்ளங்களில் நின்று பொங்கி வழிகிறான். அதனால் உடலாலும் உள்ளத்தாலும் அவனையேச் சரணடைந்து விடு‚ அவனுடைய அருளால் உனக்கு அமைதி கிடைக்கும். அழிவற்ற உயர்ந்த நிலை சித்திக்கும். புரம ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி விரிவாக விளக்கிச் சொல்லி விட்டேன். இதை நன்றாக ஆராய்ந்து பார்‚ பிறகு எப்படித் தோன்றுகிறதோ.. அப்படிச் செய்‚

அர்ஜுனா‚ இன்னும் ஒரு முறை இரகசியங்களுக்குள் இரகசியமான என் பரம வசனத்தைக் கேள்‚ நீ எனக்கு 18நண்பன் என்பதால்தான் நன்மை தரும் இந்த இரகசியத்தைச் சொல்லுகிறேன்‚ மனத்தை என்னிடமே வை‚ எனக்கே பக்தனாயிரு‚ எனக்கே பூஜை செய்‚ என்னையே வணங்கு‚ இப்படியெல்லாம் செய்தால் என்னையே நீ அடைவாய்‚ என் இனிய நண்பனே‚ ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.. இது சத்தியம்‚ எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னையே சரணடைந்து விடு. வருந்தாதே நண்பனே‚ எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்.

ஆனால் ஒன்று நண்பா‚ இந்த உண்மைகளையெல்லாம் தவமில்லாதவனிடமும், பக்தியற்றவனிடமும், கேட்டும் விருப்ப மில்லாதவனிடமும், என்னை வெறுப்பவனிடமும் எப்பொழுதும் சொல்லாதே‚ இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடம் பரப்புபவன் நிச்சயம் என்னையே வந்தடைவான்‚ நான் விரும்பியதைச் செய்வதில் அவனை விடச் சிறந்தவர் வேறு யாருமில்லை. அவனை விடச் சிறந்த அன்பனும் எனக்கு இப்பூவுலகில் இருக்க முடியாது.
நமக்கிடையே இங்கு நடந்த இந்த உன்னதமான உரையாடலை யார் படித்தாலும் சரி.. ஞான வேள்வியால் அவர்கள் என்னை வணங்கியதாகவே நினைப்பேன். அருவருப்பில்லாமல் அக்கரையுடன் ஒருவன் இதைக் காதால் கேட்டால் கூடப் போதும்.. எல்லாப் பாவங்களும் நீங்கி.. அவன் அமரநிலை அடைவான் என்பது உறுதி.

பார்த்தா‚ உன் மனத்தை ஒருமுகப் படுத்தி என் உபதேசத்தைக் கேட்டாயா? தனஞ்சயா‚ அறியாமை என்ற உன் மயக்கம் நீங்கியதா?

அர்ஜுனன்: அச்சுதா‚ உன் அருளால் மயக்கம்19 நீங்கியது‚ இழந்த நினைவு திரும்பவும் வந்தது‚ ஐயம் அகன்றது‚ நன்னிலை அடைந்தேன்‚ நீ செய்யச் சொன்னதை இப்போது செய்யப் போகிறேன்‚ இதோ.. எடுப்பேன் காண்டீபத்தை.. தொடுப்பேன் பகைவர் மீது பாணங்களை‚
(இப்போது காட்சி அரண்மனை முற்றத்திற்கு மாறுகிறதுƒ திருதராஷ்டிரனுக்குப் பக்கத்தில் இருக்கும் அமைச்சன் சஞ்சயன் ஞானதிருஷ்டி மூலம் கண்டு விளக்கியதைத் தொடர்ந்து முடிவுரை கூறுகிறான்)

சஞ்சயன்: இவ்விதம் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்செறியும் அற்புதமான உரையாடலை நான் கேட்டேன். வேதவியாசர் அருளால் இரகசியங்களுக்குள் சிறந்த இரகசியமான இந்த யோகத்தைக் கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். வேந்தே‚ இந்த அதியற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்‚ அந்த கண்ணனின் அற்புத வடிவத்தை எண்ண எண்ண எனக்குத் திகைப்புண்டாகிறது. மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்‚ உலக நாதனாம் கண்ணன் இருக்குமிடத்தில்.. காண்டீபம் தாங்கிய அர்ஜுனன் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும். வெற்றி செழிக்கும்.. நீதியும் நியாயமும் தழைக்கும் என்பது என் துணிவு.
(பதினெட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.கண்ணனை விழுங்குவதற்காக கேசி என்ற அசுரன் குதிரை வடிவத்தில் வாயைத் திறந்து கொண்டு வர, கண்ணன் அதன் வாயில் தன் கையை வைத்து, பிறகு வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றான். இதனால் அவனுக்குக் கேசி நிஷீதனன் என்று பெயர் வந்தது.
2.முழங்கால் வரை நீண்டு தொங்கும் கைகளின் அமைப்பு மகாத்மாக்களுக்கு உண்டு.
3.இம்மையில் செல்வம், புகழ், பட்டம், புத்திர பாக்கியம், ஆரோக்கியம், தீர்க்காயுள் முதலியனவும் மறுமையில் சொர்க்கம் முதலிய பதவிகள் வேண்டும் என்று விரும்புவது.
4.பணக்காரனைப் போன்று தானும் சுக ஜீவனம் செய்யவேண்டும் என்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோ குணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் இது போன்றதே. - சுவாமி சித்பவானந்தர்.
5.அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமையொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பத்திற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாகறியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப் பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
- சுவாமி சித்பவானந்தர்
6.சொர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இனியது. நரகப் பிராப்தியும் விலங்குகளாகப் பிறப்பதும் இன்னாதது. பூவுலகப் பிராப்தியும் மனிதராகப் பிறத்தலும் இரண்டும் கலந்தது.
7.கருத்தனுக் காக்கிய நிஷ்காமிய கருமம் கருத்தைத் திருத்திய . ;;.துந் தீ பற கதிவழி காட்டு மென்றுந்தீ பற. - ஸ்ரீ ரமணமகரிஷி
8.இரவுக்கு அழகு நிலவுƒ பகலுக்கு ஆதவன். பக்தனுக்கு அழகு பக்திƒ பக்திக்கு அழகு ஆதவன். அறிவுக்கு அழகு தியானம ;ƒ தியானத்துக்கு அழகு துறவு. துறவுக்கு அழகு சாந்தி‚ அமைதி‚ - துளசி தாசர்.
9.பொருளை அறிவது எனும் போது, அந்தப் பொருளை அந்தப் பொருளாகக் காணும் குண அமைப்பைப் பற்றிய வேறுபாட்டுணர்வும் அதில் அடங்கியிருக்கிறது. இது ஜாடி, இது துணி எனும்போது ஜாடியைத் துணியினின்றும் வேறுபட்டதாகக் காணும் அநுபவத்தையும் அது சொல்கிறது. இந்த வேறுபாட்டுணர்விற்கு இடமில்லை என்றால், குதிரையைத் தேடிச் செல்பவன், எருமையைக் கண்டு ஏன் சமாதானப் படக்கூடாது? - ஸ்ரீ இராமநுஜர்.
10.சாங்கிய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். இந்த உலகில் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை விவரிக்கிறது சாங்க்கிய சாஸ்திரம் எனப்படும் வேதாந்த சாஸ்திரம். பிரம்மத்தை அறிவதற்கு இதுவே பிரமாணம்.
11. சாங்கிய சாஸ்திரம் என்று இங்கு கூறப்படுவது கபில முனிவர் இயற்றியது. ஆறு சாஸ்திரங்களுள் இது நான்காவது இடம் பெறுகிறது. பிரபஞ்ச அமைப்பின் கோட்பாடுகளைப் பற்றி இது விளக்குகிறது. பிரபஞ்ச அமைப்பை விளக்க இது முடிவான பிரமாணமாகும். எனவே குணங்களின் பாகுபாடுகளை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை கபில சாங்கியம் சொல்லுவதில்லை.
12. அர்ஜுனன் என்ற சொல்லுக்கு வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்.
13. நம் வாழ்வில் அச்சம் பூஜ்யமாவது தான் நாம் அடைய வேண்டிய வெற்றிகளில் எல்லாம் மிகப்பெரிய வெற்றியாகும்.
- சுவாமி சச்சிதானந்தா
14. வர்ணாசிரமம் என்பது மனிதனுடைய தொழிலை முன்கூட்டியே நிர்ணயிப்பதாகும். வர்ணாசிரம விதிப்படி ஒரு மனிதன் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிக்கத் தன் முன்னோர் செய்த தொழிலையே செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் தகப்பனின் வர்ணத்தையே அல்லது பரம்பரைத் தொழிலையே இயற்கையாகவே பின்பற்றுகிறது. எனவே வர்ணாசிரமம் என்பது ஒரு வகையில் பரம்பரைச் சட்டமாகும். வர்ணாசிரமம் என்பது இந்துக்களின் மேல் வலிந்து புகுத்தப்பட்ட ஒன்றல்லƒ அது இந்துக்களின் நலனுக்காக நம்பகமானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும்ƒ இது மனிதனின் புதுமைக் கண்டுபிடிப்பல்லƒ ஆனால் இயற்கையின் மாற்ற முடியாத சட்டம்ƒ நியூட்டனின் புவி ஈர்ப்பு விதியைப் போல, என்றுமே நிலைத்துச் செயல்படும் ஒரு சட்டம்ƒ புவி ஈர்ப்பு விதி என்பது அது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும் இருந்ததைப் போலத்தான் வர்ணாசிரம தர்மமும்ƒ வர்ணாசிரமச் சட்டத்தைக் கண்டுபிடிக்கும் பாக்கியம் இந்துக்களுக்குக் கிடைத்தது. இயற்கையின் சில சட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் செயல் படுத்தியதன் மூலம் மேற்கத்திய நாட்டார் பொருட் செல்வங்களைப் பெருக்கிக் கொண்டார்கள். அது போலவே இந்துக்கள் எதிர்க்க முடியாத இந்தச் சமுதாயத் தன்மையைக் கண்டுபிடித்து, ஆன்மீகத் துறையில் வேறு எந்த நாடும் சாதிக்க முடியாததைச் சாதித்துக் காட்டியுள்ளனர். - யங் இந்தியா: நவம்பர் 17, 1927.
15.பிராமண கர்மங்கள் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பிரதிக்கிரகம் என ஆறு வகைப்படும். அத்யயனம், யஜனம், தானம் எனும் மூன்றும் ஏனைய வருணத்தாருக்கும் பொதுƒ முதல் மூன்றும் பிராமணருடைய விசேஷ கர்மங்கள் எனப்படும்.
16.~த்ரியன் என்ற சொல்லுக்கு உடலில் காயம்பட்டவன் என்று பொருள்.
17. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. - திருவாசகம்.
18.அவன் கடாட்சம் எல்லாருக்கும் உண்டு. அவன் அருள் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கே உண்டு. - குருநானக்
19.மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே



Friday 26 October, 2007

திண்ணையில் மலர் மன்னன் - சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்

Thursday October 25, 2007
சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
மலர் மன்னன்

திண்ணையில் வெகுஜனப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி வகுஜனத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவியைப் பற்றி எழுதுகையில் ஸ்ரீதேவியைக் காட்டிலும் அதிகமாக மும்பை அரசியல் பற்றியும் பால் தாக்கரே தொடங்கிய சிவ சேனை குறித்தும் சில விமர்சனங்கள் வைத்திருப்பதைப் படிக்க நேர்ந்தது.

வாஸந்தி வெகுஜனப் பத்திரிகைகளின் சுவாரஸ்யத்திற்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பற்றியும் ஹிந்தி திரைப் படத் தொழிலில் மும்பை தாதாக்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியது பற்றியும் எழுதுவதோடு விட்டிருந்தால் இதை எழுத வேண்டிய தூண்டுதல் எனக்கு நேர்ந்திருக்காது. இதற்காக வாஸந்திக்கு என் நன்றி.

நான் சிவ சேனையின் ஆதரவாளன் அல்ல. அதன் அமைப்பு முறையிலும், அது செயல் படும் விதங்களிலும் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் தமிழ் நாõட்டிலும் பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் சிவ சேனை பற்றி உருவாகியுள்ள பிம்பம் எந்த அளவுக்குச் சரி என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் எனக் கருதுகிறேன். வெறும் கேள்வி ஞானத்தை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளைப் படித்துவிட்டும், மும்பையில் வேலை பார்த்த சில வெள்ளைக் காலர் தமிழர்களின் ஒருதலைப் பட்சமான கருத்துகளைக் கேட்டும் சிவ சேனை பற்றிப் பேச நான் முற்படவில்லை என்பதைச் சொல்வதும் இங்கு அவசியம். சிவ ஸேனை தொடங்கப் பட்ட கால கட்டத்தில் அதன் நிறுவனர் என்பதைவிட, ஃப்ரீபிரஸ் ஜர்னல் கார்ட்டூனிஸ்ட் என்ற முறையில் அதிகம் அறியப்பட்ட பால் தாக்கரேயைச் சந்தித்த பத்திரிகையாளரில் நானும் ஒருவன்.

ஹிந்துஸ்தானத்தின் பல்வேறு மாநிலங்களிலும் வசித்ததோடு, வாஸந்தியைப் போல மேல் தட்டுப் பெரிய மனிதர்கள், உயர் அதிகார வர்க்கத்தினர் மத்தியில் அல்லாமல் மிகச் சாதாரண மானவர்களிடையே மிகமிகச் சாதாரண நிலையில் வாழ்ந்த அனுபவமும் இருப்பதால் இது பற்றிப் பேச எனக்கு அருகதை இருப்பதாக நினைக்கிறேன்.

முதலில் தமிழர்கள், குறிப்பாக உட லுழைப்பு, சிறு வியாபாரம் போன்ற வழிகளில் வாழ்க்கைப் பாட்டை நடத்தும் தமிழர்கள் தமிழகத்தைவிட்டு எந்த வெளி மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு கால் ஊன்றிக் கொண்டவுடன் தங்கள் மாநில அரசியல், வெகு ஜன அபிமான திரை நட்சத்திரங்களை முன்னிறுத்தி இயங்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆசியாவிலேயே பெரிய சேரி எனப் பெயர் எடுத்த மும்பை தாராவியை இந்த விஷயத்தில் ஓர் எடுத்துக் காட்டாகவே கொள்ள வேண்டும். அங்கு வசித்த மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தாம். தி மு க, அண்ணா திமுக, தி க என்று தமிழ் நாட்டின் சகல மாநிலக் கட்சிகளின் கொடிகளும் அங்கு பறந்திடக் கண்டிருக்கிறேன். உங்கள் ஊர் அக்கப் போர்களையெல்லாம் இங்கே எதற்காகக் கொண்டு வருகிகிறீர்கள் என்று மும்பையிலும் பெங்களூரிலும் எரிச்சலுடன் என்னிடம் கேட்டவர்கள் பலர். பெங்களூர் காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் தி முக வும் அண்ணா திமுக வும் வெற்றி பெற முடிகிறது; அம்மாதிரி சென்னையில் எந்தத் தொகுதியிலாவது கன்னட சலுவலி ஜயிப்பது சாத்தியமா எனக் கேட்பவர் உண்டு. அதற்குச் சரியான சமாதானம் சொன்னாலும் உங்கள் தமிழ் நாட்டில் தெலுங்கரும் கன்னடியரும் ராஜஸ்தானியரும் தமிழர்களாக உருமாறித்தானே மாநில சட்ட சபையிலும் நகராட்சி மன்ற அவைகளிலும் நுழைய முடிகிறது என பதிலடி கொடுப்பார்கள்.
குறிப்பாக மும்பை மாநகரம் மஹாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரம் என்ற போதிலும் அங்கு மராட்டிய அடையாளங்களைவிடப் பிற மாநிலக் கலாசாரங்களின் பிரதிபலிப்புதான் அதிகம். இதற்கும் நியாயமான சமாதனங்களைச் சொல்ல முடியும் என்றாலும் அவற்றால் மராட்டிய மக்களைத் திருப்தி செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த
மாநிலத் தலை நகரிலாவது இம்மாதிரியான நிலைமை இருக்கிறதா என்று அவர்கள் சிறிது கோபத்துடன் கேட்கும் போது அவர்களைச் சமாதானப் படுத்துவது எளிதல்ல.

கல்கத்தாவில் பிஹாரிகள், தெலுங்கர்கள் அதிகம் எனினும் அவர்கள் அனைவரும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்தாம். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் கணிசமாக இருப்பினும் வியாபார நிர்ப்பந்தம் காரணமாக வங்காள மொழியில் சரளமாகப் பேசுவதுதான் அவர்களின் வழக்கம். இங்கு குடியேறிய தமிழர்கள் பெரும்பாலும் அலுவலகங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்தவர்கள். தென் கல்கத்தாவில் குவிந்து தாம் உண்டு, தமது வேலை உண்டு, பொழுதுபோக்கிற்குத் தமிழ்ச் சங்கமும் ஞாயிறு காலைக் காட்சிக்கு சிவாஜி கணேசன் நடித்ததோ, கே பாலசந்தர் இயக்க்கியதோவான உரத்துச் சத்தமிடும் தமிழ்ப் படங்களும், ராஷ் பிஹாரி அவென்யுவில் இருக்கிற கோமள விலாஸ் பாலக்காட்டு பிராமணர் ஹோட்டலில் மாசால் தோசையும் இருக்கவே இருக்கிறது என வாழ்ந்தவர்கள். நான் சொல்வதெல்லாம் மும்பையில் சிவசேனை தோன்ற நேர்ந்த கால கட்டம் என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆக, அந்தக் கால கட்டத்து மேற்கு வங்கத் தலைநகரான கல்கத்தாவுக்குத் தனது வங்காளச் சாயலை இழக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

கல்கத்தாவின் கோமள விலாஸ் ஹோட்டல் பற்றிச் சொல்கிறபோது ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் நாட்டுக்காரன்தான் என்ற போதிலும் எந்த மாநிலத்தில் வசிக்க நேரிட்டாலும் அந்த மாநிலத்து மக்களுடன் இரண்டறக் கலந்துவிட விரும்பி, அவர்கள் வசிக்கும் பகுதியில்தான் இடம் பிடிப்பேன். உணவகங்களைத் தேர்வு செய்வதும் அவ்வாறே. கோமள விலாசைத் தேடிப் போகிற வழக்கம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் சீக்கியர்களும் வங்காளிகளும் அந்த ஹோட்டலை மொய்ப்பார்கள். எல்லாம் இட்லி வடை சாம்பாருக்காகத்தான்! இட்லி வடையைவிட சாம்பாருக்காக என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் கோமள விலாசுக்குப் போவதே சாம்பாரைக் குடிப்பதற்காகத்தான்! ஆமாம், இரண்டு இட்லி ஒரு வடை வாங்கிக் கொண்டு மேலும் மேலும் சாம்பார் வாங்கிக் கிண்ணம் கிண்ணமாகக் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

சீக்கியரும் வங்காளியரும் இரண்டு இட்லி மட்டும் வாங்கிகொண்டு சாம்பாரை வாளி வாளியாகக் குடிப்பதால் கோமள விலாஸ் ஐயர் கட்டுப்படியாகாமல் திணறினார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு இனியும் தாங்காது என்றானதும், இரண்டு இட்லி ஒரு வடைக்கு ஒரேயொரு தடவை மட்டுமே சாம்பார் பரிமாறப்படும் என்று எழுதிப் போட்டார் (ண்ச்ட்ஞச்ணூ தீடிடூடூ ஞஞு ண்தணீணீடூடிஞுஞீ ணிணடூதூ ணிணஞிஞு ஞூணிணூ ணிணஞு ணீடூச்tஞு ணிஞூ டிஞீடூடி திச்ஞீச்).

அன்று சாயந்திரம் வழக்கம்போல ஒரு ப்ளேட் இட்லி வடை வாங்கிக் கொண்டு கிண்ணம் கிண்ணமாக சாமபாரை உறிஞ்சிக் குடிக்க வந்த சீக்கியரும், சண்டைப் பிரியரான வங்காளியரும் ஐயர் எழுதி வைத்திருப்பதைப் படித்ததும் கொதித்துப் போய் ஹோட்டலையே துவம்சம் செய்துவிட்டார்கள். ஒடி வந்த ஐயரிடம் உன்னுடைய உப்புச் சப்பில்லாத இட்லியைத் தின்பதற்காகவா நாங்கள் வருகிறோம்? இட்;லி வடைக்கு ஆர்டர் செய்தால்தான் சாம்பார் கிடைக்கும் என்பதால்தான் அதற்கு ஆர்டர் செய்துதொலைக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்! சாம்பாருக்கு இப்படியெல்லாம் அளவு நிர்ணயித்தால் அப்புறம் இங்கே உன் கடை இருக்காது என்று எச்சரித்தார்கள். ஐயர் முதல் வேலையாகத் தாம் எழுதி வைத்ததைத் தூக்கி எறிந்தார். வங்காளி, சீக்கியர் சாம்பார் குடித்து மகிழ்வதும் அங்கு தொடர்ந்தது. ஆக, தமிழர்கள் கலகத்தாவில் வியாபாரம் செய்து கொழித்த போதிலும் வங்காளத்தின் தடத்தை அங்கு அழிக்க இயலாது போயிற்று. சாம்பார் முக்கிய உணவாகவும் இட்லி வடை தொட்டுக் கொள்வதற்கான துணையாகவும் அங்கு விதிக்கப்பட்ட சட்டத்தை மீற முடியவில்லை.
ஹிந்துஸ்தானத்தின் மற்றொரு மாநகரமான சென்னையில், குறிப்பாக வட சென்னையிலும் தியாகராய நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் தெலுங்கர்களும் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தவர்களும் மிகுதி என்ற போதிலும் சென்னைக்குத் தனது மண் வாசனையை இழக்க வேண்டிய நிலைமை வந்ததில்லை.

ஹிந்துஸ்தானத்தின் வாணிபத் தலை நகரம் என்றும் ஹிந்தித் திரையுலகின் கேந்திரம் எனவும் ஈட்டிய பெருமைக்காக மும்பை தனது மராட்டிய அடையாளத்தை விலை கொடுக்க நேர்ந்தது என்கிற நிலைமையை ஒரு மராட்டியரின் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அப்போது நிச்சயமாகச் சிறிதளவாவது எரிச்சல் வரத்தான் செய்யும்.

கல்கத்தாவில் ஒரு வங்காளி தனது தேவைக்காக வேற்று மொழியில் பேச வேண்டிய கட்டாயம் இல்லை. அவன் பிடிவாதமாகத் தனது தாய்மொழியில்தான் பேசுவான். சென்னையில் ஒரு தமிழன் வீட்டுக்கு வெளியே பிற மொழியில்தான் பேசியாகவேண்டும் என்பதில்லை. ஆனால் மும்பை மராட்டிய மாநிலத்தின் தலை நகரமாக இருப்பினும் ஒரு மராட்டியன் வீட்டிற்கு வெளியே தனது தேவைக்கு ஒரு வேற்று மொழியைத்தான் சார்ந்திருக்க நேரிட்டு, மும்பைக்கென ஒரு பிரத்தியேக ஹிந்தியை அவன் உருவாக்க நேர்ந்திருக்கிறது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சியான தி மு கவின் கொடியும், மராட்டிய மாநிலத்தில் நாதியற்றுக் கிடந்த முஸ்லிம் லீகின் கொடியும் தாராவியில் பறக்கக் கண்ட மராட்டியனுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் சிவ சேனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தாராவியில் அன்று வசித்த தமிழரில் பெரும்பாலானவர்கள் துறைமுகத் தொழிலாளர்கள். இவர்களில் அதிகம்பேர் ஏர்வாடி, கீழக்கரையிலிருந்து வந்தவர்கள் என்ற கசப்பான உண்மையை நான் சொல்லித்தான் தீரவேண்டும். ஏற்வாடி, கீழக் கரையிலிருந்து வந்து தாராவியில் குடியேறியவர்கள் அனைவருமே முகமதியர் என்பதையும் சொல்லியாக வேண்டும். துறைமுகத் தொழிலாளரில் பலர் கள்ளக் கடத்தல் என்கிற பெரிய சக்கரம் உருள்வதற்கு நெம்புகோலாய் இருப்பவர்கள். நாட்டின் பொருளாதரத்திற்கே சவாலாக இருந்துகொண்டு தமிழ் நாட்டின் வட்டார அரசியலையும் தம்மோடு கொண்டு வந்து இறக்கியவர்கள் மீது சிவ சேனையின் கோபம் பாய்ந்த போது அது தென்னாட்டவரை துவேஷித்து விரட்டும் முரடர் கூட்டம் என்கிற பெயரெடுத்தது.

தாராவியில் தாக்கப்பட்ட பெரும்பான்மைத் தமிழ் நாட்டவர் சென்னையில் வந்து இறங்கியபோது தமிழர்களை மராட்டிய வட்டார வாத சிவசேனை தாக்குவதாகச் சொன்னார்கள். அவர்களே தாராவியில் இருக்கும்போது அங்குள்ள மஸ்தான் மற்றும் பென்டி பஜார் முகமதிய ஏறுமதி இறக்குமதி வர்த்தகப் பெருமக்கள் முதலான ஆபத்பாந்தவர்களின் உதவியைப் பெற ஹிந்து மத வாத சிவசேனையானது முகமதியரான தங்களைத் தாக்குவதாகப் புகார் தெரிவித்தார்கள். சென்னையில் தமிழர்கள், மும்பையில் முகமதியர்கள்!

ஆயிரம் தடவை திரும்பத் திரும்ப மசூதி என்று சாதித்தாலும் அயோத்தியில் இருந்த பாபர் நினைவு மண்டபம் மசூதியாகிவிடாது என்பதை வாஸந்தி போன்றவர்கள் உணரவேண்டும். அங்கு முகமதியர் தொழுகை நடத்தியதாகக் கூறினாலும் 1949 ல் குழந்தை ஸ்ரீராமன் பிரதிமை ப்ரதிஷ்டை செய்யபடுவதற்குப் பல வருடங்கள் முன்பே அங்கு முகமதியர் தொழுகை நின்றுவிட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் 1857 ல் ஸ்ரீராமன் ஜன்மஸ்தலம் எனத் தாம் நம்பும் இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என அயோத்தி நவாப் வாஜித் அலி ஷாவிடம் கோரிக்கை விடுத்து, பாபர் நினைவு மண்டபத்தையொட்டி ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டைத் தொடங்கவே வீம்புக்காகவும் அந்த இடத்தின் மீது தங்களுக்கு உள்ள சொத்துரிமையை நிலை நாட்டவும் முகமதியர் பாபர் நினைவு மண்டபத்தினுள் தொழுகை செய்யத் தொடங்கினார்கள் என்பதுதான் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட உண்மை. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப்பட்ட போது உண்மையில் அது குழந்தை ராமனின் கோவிலாகத்தான் இருந்தது. மசூதியாக இருக்கவில்லை. வி பி சிங்கிற்கு முன் பிரதமராக இருந்த இந்திரா காங்கிரஸ்காரரான ராஜீவ் காந்தியே தனது பாட்டனார் பிரதமர் நேருவின் செயலுக்குப் பிராயச் சித்தம் தேடுவதுபோல பூட்டிவைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமன் சந்நதியின் பூட்டை உடைக்க உத்தரவிட்டு, ராமனுக்குக் குறைவற பூஜைகள் நடைபெற வழிசெய்திருந்தார். 1949 ல் பாபர் நினைவு மண்டபத்தில் ஸ்ரீராம் லல்லாவின் (குழந்தை ஸ்ரீராமன்) பிரதிமையை ஹிந்துக்கள் பிரதிஷ்டை செய்தபோது அந்த அறையைப் பூட்டி வைக்கச் சொன்னவர் அன்றைய பிரதமர் நேரு! ஆமாம், வளர்ப்புமுறையில் கடைப்பிடிக்கும் கலாசாரத்தால் நான் முகமதியன், சிந்தனைப் போக்கால் நான் ஐரோப்பியன், பிறப்பினால் மட்டுமே நான் ஒரு ஹிந்து என்று பெருமைப்பட்டுக்கொண்ட நேருஜிதான்!

அயோத்தியில் மட்டுமின்றி லட்சுமண புரியிலும் ஏன், முகமதியர் மிகப் பெரும் பான்மையினராக உள்ள மொரதாபாதிலுங்கூட அரசியலுக்கு அப்பாற்பட்ட முகமதியர் ஸ்ரீராமனை மர்யாதா புருஷோத்தம் என்றே மரியாதையுடன் விளிப்பார்கள். அந்தரங்கமாகப் பேசுகையில் ஜன்மஸ்தானத்தில் மர்யாதா புருஷோத்தம் ராமச் சந்திரப் பிரபுவுக்கு ஆலயம் எழுப்புவதே நியாயம் என்பார்கள். ரியல் எஸ்டேட் மதிப்புப் போடுபவர்கள் மட்டுமே ஹிந்துக்களின் உணர்வை மதியாமல் பாபர் நினைவு மண்டபத்தை பாப்ரி மஸ்ஜித் என்று சாதிப்பார்கள்!

மூன்றாவது பானிபட் போரில் அந்நியனான பாபர் எதிர்த்துத் தோற்கடித்தது இப்ராஹிம் லோடி என்கிற ஹிந்துஸ்தானத்து முகமதிய சுல்தானைத்தான். மேலும் நியாயப்படி அந்த வெற்றிக்கான நினைவு மண்டபம் பானிபட் டிலாவது தில்லியிலாவதுதான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாபரின் தளகர்த்தன் ஹிந்துக்களின் சுய கவுரவத்தை பங்கம் செய்ய வேண்டும் என்கிற தங்களின் சம்பிரதாயப்படி ஹிந்துக்கள் ஸ்ரீராமனின் திரு அவதாரத்திற்கு முன்பிலிருந்தே தமது ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகக் கருதி வரும் அயோத்தி நகரத்தில் ஸ்ரீராமனின் ஜன்மஸ்தலம் என நம்பும் இடத்தில் தன் எஜமானனின் நினைவாக ஒரு மண்டபத்தைக் கட்டி வைத்தான். எனவே நியாயப்படி ஹிந்துஸ்தானத்து முகமதியரும் பாபர் நினைவு மண்டபத்தை தேசிய அவமானச் சின்னமாகக் கருதி அதனை அப்புறப்படுத்துவதை ஆதரித்திருக்க வேண்டும்.

பல காலம் அமைதியான முறையில் வேண்டுகோள் விடுத்துக் காத்திருந்தும் பலனின்றிப் போனதால் இனியும் பொறுமையாகக் காத்திருப்பதில் பொருள் இல்லை என்றான நிலையில் அந்த பாபர் மண்டபம் இடிக்கப் பட்ட பிறகு, மும்பை முகமதியரிடையே ஏதோ முகமதியரின் வழிபாட்டில் இருந்து வந்த மசூதிதான் இடிக்கப்பட்டதுபோல பிரசாரம் செய்யப்பட்டு அவர்கள் கலவரம் செய்யத் தூண்டப்பட்டனர். அதற்கு சிவ சேனை பதிலடி கொடுத்தது. கலவரம் தொடங்கிய முகமதியர் அனைவரும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்தாம். வெளி நாடுகளான பங்களா தேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றிலிருந்து கள்ளத்தனமாகக் குடியேறியவர்களும் அதில் அடக்கம். பாகிஸ்தானிலிரு ன்து சுற்றுலாப் பயணிக்கான விசா எடுத்துக் கொண்டு வருபவர்கள் திரும்பிச் செல்வதே இல்லை. அவர்களை அடையாளம் காண்பதும் இயலாத காரியம். இவ்வாறு வந்து மும்பையில் புகுந்துவிட்ட பாகிஸ்தானியர் ஏராளம். வெளியிலிருந்து வந்ததுதான் வந்தார்கள், வாலைச் சுருட்ட்டிக்கொண்டு இருக்காமல் விஷமம் செய்வதா என்று மராட்டிய மாநிலக் கட்சியான சிவ சேனை சீற்றம் அடைந்தால் அதில் குறை காண இயலாது. தமிழ் நாட்டுக்கு வெளி மாநிலங்களிலிரு ந்து வந்து குடியேறியவர்கள் ஏதேனும் கலவரத்தில் இறங்கினால் இங்குள்ள மாநிலக் கட்சிகள் எப்படி நடந்து கொள்ளும் என யோசிக்க வேண்டும்.

மும்பை முகமதியர் வெள்ளிக் கிழமை தோறும் மதியம் சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு தொழுகை நடத்துவதும், அச்சமயம் அந்தச் சாலையில் வசிப்பவர்களைக்கூட உள்ளே நுழையவிடாமல் தடுப்பதுமாக இருந்தனர். ஒரு சமயம் கவிஞரும் எழுத்தாளருமான டாம் மொரேஸ் உள்ளே செல்ல முனைந்து உதைபட்டுத் திரும்பினார். பின்னர் பொதுச் சாலை இவ்வாறு அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டித்துக் கட்டுரையும் எழுதினார். மும்பை முகமதியரின் இந்த சாலை மறிப்புத் தொழுகையை நிறுத்த சிவ சேனைதான் மஹா ஆரத்தி என எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆகவே முதலில் பிரச்சினையைக் கிளப்புவது சிவசேனை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று சிவசேனை ஈழத்து விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கிறது. இதிலிருந்தே அதற்குத் தமிழர்கள் மீது எவ்விதத் துவேஷமும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையி லுள்ள தமிழ் பேசும் முகமதியர் தங்களைத் தமிழர்களாக அல்லாமல் தாம் சார்ந்த மதத்தின் அடிப்படையிலேயே அடையாளம் காட்டிக்கொள்வதையும் சிவசேனை கண்டிக்கிறது. தேசியம் வேறு, மதம் என்பது வேறு என்று அது சுட்டிக்காட்டுகிறது.
ஏறத் தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் மும்பையில் சிவ சேனை தலையெடுக்கத் தொடங்கியிருந்த சமயம், எவரும் வெகு எளிதில் சந்திக்கக் கூடியவராக பால் தாக்கரே இருந்தபோது அவரை நான் சந்தித்தேன். தாராவி மராட்டிய மாநிலத்திற்கே அவமானம் தேடித்தரும் கள்ளக் கடத்தல் தொழிலின் அடியுரமாக இருப்பதைத்தான் அப்போது அவர் அதிகம் பேசினார். தாராவியின் தமிழ் பேசும் தொழிலாளர் துணை இல்லாவிட்டால் பின்னணியில் பங்களாக்களில் சொகுசாக வாழும் கள்ளக் கடத்தல் முதலைகள் காணாமல்போய் விடும் என்றார். கள்ளக் கடத்தலில் ஈடுபட்டுள்ள முகமதியர் மதச் சார்புடன் சமூக சேவை என்ற முக மூடி தரித்து இயங்குவதால் அதற்கு மாற்றாகக் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஹிந்து மதத்தவரை ஆதரிக்க வேண்டியதுதான் என்றும் வாதிட்டார்.

கள்ளக் கடத்தல் என்பது சமூகத்தைப் பாதிக்கும் ஒரு பொதுத்தன்மையான பொருளாதாரக் குற்றம். இதனை மொத்தமாக எதிர்ப்பதற்கு மாறாக மத அடிப்படையில் ஒரு சாராரை ஆதரிப்பது எப்படி சரியாகும் என்று கேட்டபோது, கள்ளக் கடத்தல் என்பது இப்போது ஒரு தொழில். அதில் மதத்தை நுழைப்பது முகமதியர்தான். அவர்களை நிறுத்தச் சொல், நானும் நிறுத்துகிறேன் என்று அன்றைக்கே நாயகன் திரைப்பட கமல ஹாசன் பாணியில் சொன்னார்.

வழ வழ, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டி கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதாயிருந்தால் சிவ சேனையின் பால் தாக்கரேயையும் பிறரையும் சந்தித்துச் சரியான விவரங்களைச் சேகரித்துச் சேர்த்திருக்க வேண்டும் (ஐராவதம் மஹாதேவன் தினமணி ஆசிரியராக இருந்தபோது இந்தியா டுடேயைத் தமிழில் கொண்டு வரும் திட்டத்துடன் அவரிடம் ஆலோசனை கேட்ட அருண் புரியிடம் எனது பெயரை ஐராவதம் பிரஸ்தாபித்தார். அதன்பேரில் அருண் புரியும் பிரபு சாவ்லாவும் என்னைச் சந்திக்க விரும்பினர். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் அவர்களைச் சந்தித்தேன். தமிழ் நாட்டு அரசியலைப் பிரதானமாய்க் கொண்டு பத்திரிகையை நடத்தும் முழுப் பொறுப்பையும் ஃப்ரான்சைசி முறையில் ஒப்படைப்பதாக இருந்தால் ஏற்பதாகச் சொன்னேன். அதற்குச் சம்மதம் இல்லாததால் தங்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொள்ளும் நபரை அவர்கள் தேட முனைந்தார்கள் என்ற விவரத்தையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்).

கடைசியாக ஒரு விஷயம்:

ஒன்றே குலம், ஒருவன் தேவன் என்பதும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் வஸுதைவ குடும்பகம் என்பதும் ஸர்வ ஜனோ ஸுகினோ பவந்து என்பதுமே ஹிந்து மதத்தின் அடிப்படையான வாதம். எனவே ஹிந்து மத அடிப்படைவாதி என்று ஒருவரைச் சொல்வது மிகவும் பெருமைப் படுத்துவதேயாகும்.
malarmannan79@rediffmail.com
திண்ணையில் மலர் மன்னன் Copyright:thinnai.com 

Thursday October 25, 2007 Copyright © Authors - Thinnai. All rights reserved.

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 16,17)

Thursday October 25, 2007
பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 16,17)
எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பதினாறு

தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 24 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: தாமரைக் கண்ணா‚ தெய்வ குணங்கள் யாவை?

கண்ணன்: அகத்தூய்மை, புறத்தூய்மை, அஞ்சாமை, ஆசையில்லாமை, ஆத்திரமில்லாமை, தற்பெருமையில்லாமை, வஞ்சகமில்லாமை, சபலமில்லாமை, பழிசொல்லாமை, சினங் கொள்ளாமை, செருக்கில்லாமை, தருக்கி நில்லாமை, வாய்மை, நேர்மை, வலிமை, பொறுமை, மென்மை, இனிமை, உறுதி, துணிவு, அடக்கம், இரக்கம், தியாகம், அகிம்சை, வெட்கம், புகழ், தயை, ஈகை, வேதம் ஓதுதல், வேள்வியைச் செய்தல், ஞானயோகத்தில் நிலையாய் நிற்றல் ஆகியவை தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பான குணங்கள்.

அர்ஜுனன்: அப்படியானால் அசுர குணங்கள் யாவை?

கண்ணன்: பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, 1கோபம், கடுஞ்சொல் அறியாமை ஆகியவை அசுர சம்பத்துடன் தோன்றியவனின் பிறவிக் குணங்கள்.

அர்ஜுனன்: அசுர குணத்துடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

கண்ணன்: அசுர குணத்துடன் பிறந்தவர்களுக்கு சரி எது.. தவறு எது என்பதே தெரியாது. வாய்மையும் தூய்மையும் அவர்களிடம் இருக்காதுƒ உண்மையே உலகில் இல்லை என்பார்கள்ƒ தர்மமே இல்லை என்று கதையளப்பார்கள்ƒ இறைவனே இல்லை என்று குதி குதிப்பார்கள். ஆண் பெண் உறவு தான் உலகின் அடித்தளம் என்று துணிந்துரைப்பார்கள். அவர்களின் பார்வை குறுகலானது. ஆத்ம குணமும் அருமை விவேகமும் அவர்களிடம் துளியும் இருக்காது. அடுத்துக் கெடுப்பார்கள்ƒ அனைவருக்கும் துன்பமே கொடுப்பார்கள். அடங்காத ஆசையுடன் ஆடம்பரமாய் நடிப்பார்கள்ƒ ஆணவம் அகந்தையுடன் வெறி பிடித்துத் துடிப்பார்கள்ƒ அநியாய வரும்படிக்குப் பாடுபடுவார்கள்ƒ ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். காம நுகர்ச்சிகளில் ஈடுபடுவதே இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். இவர்களைப் பிணைத்திருக்கும் ஆசைக் கயிறுகள் நூறு நூறு‚ காம சுகங்களில் ஊறு ஊறு‚ அதற்காகக் காசு பணங்களைச் சேரு சேரு‚ என்றவாறு தாறுமாறாய்த் துள்ளுவார்கள். 2உலகத்தை அழிவு நோக்;கித் தள்ளுவார்கள்.

அர்ஜுனன்: அவர்கள் எப்படிப் பேசுவார்கள்?

கண்ணன்: „இது என்னால் வந்தது‚ என் திறமையே தந்தது‚ இதோ.. என் ஆசை நிறைவேறுகிறது‚ அலை அலையாய்ப் பெருஞ்செல்வம் சேர்கின்றது‚ மலை மலையாய் இன்னும் அது குவியப் போகிறது‚… என்பான் ஒருவன்.

„பகைவனைக் கொன்று விட்டேன்.. எதிரிப்படைகளை வென்று விட்டேன்‚ நானே கொற்றவன்‚ அனைத்தும் பெற்றவன்‚ வலிமையில் சிறந்தவன்‚ இன்பத்தில் மிதப்பவன்‚… என்பான் மற்றொருவன்.

„நான் பணம்; படைத்தவன்‚ உயர் குலத்தில் பிறந்தவன்‚ எனக்கு நிகர் எவனுமே இல்லை‚ யாகங்கள் செய்வேன்.. தானங்கள் செய்வேன்.. மகிழ்ச்சிப் பெருக்கிலே நீந்தித் திளைப்பேன்‚… என்பான் இன்னொருவன்.

இவர்கள் எல்லாம் அறியாமையில் கட்டுண்டவர்கள்‚ தறி கெட்ட எண்ணங்களால் மொத்துண்டவர்கள்‚ மோக வலை தன்னில் வசமாகச் சிக்குண்டவர்கள்‚ 3காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு ஆழ் நரகில் விழ்வதற்கென்றே தம்மை விற்றுக்கொண்டவர்கள்‚ பணத்திமிர், குலத்திமிர், பிடிவாதம், தற்பெருமை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்‚ சாத்திர முறை மீறி ஆடம்பரப் பகட்டுடன் யாகங்கள் செய்வதைப் பற்றிக் கொண்டவர்கள்‚ இதன் மூலம் பூரணத்துவமிழந்து மண்ணுலச்சுகமிழந்து விண்ணுலகப் பலனிழந்து பாவத்தைச் சுற்றிக் கொண்டவர்கள்‚ ஆணவம், பலம், காமம், குரோதம், இறுமாப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, அவர்கள் உள்ளிட்ட அனைவர் மேனியிலும் உறைபவனாகிய என்னை அவமதிக்க கற்றுக் கொண்டவர்கள்‚ இத்தகைய இழிகுணம் கொண்டவர்களை கடை நிலை கண்டவர்களை, அடிக்கடி நான் 4அசுரப் பிறவியிலேயே தள்ளுகிறேன். இந்த மூடப்பதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலைக்கே தள்ளப் படுகிறார்கள்.

அர்ஜுனன்: அப்படியா கண்ணா?

கண்ணன்: அஞ்சற்க பாண்டவா‚ நீ தெய்வ குணங்களுடன் பிறந்தவன்ƒ தெய்வ குணங்கள் சொர்க்கத்தைக் கொடுக்கும், அசுர குணங்கள் பந்தப் படுத்தும்.

நரகத்திற்கு மூன்று வாயில்கள் உண்டு அர்ஜுனா‚ காமம், குரோதம், லோபம் என்பவைதான் அவை. தமோகுண வாயில்களான இம்மூன்றும் ஆத்மாவை அழிப்பவைƒ ஆகவே அவற்றை விலக்கி விட வேண்டும். இதன் மூலமாகத் தான் ஒருவன் தனக்கே நன்மை செய்து கொள்ளுகிறான்ƒ நற்கதியடைகிறான்.

(பதினாறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. கோபம் வந்தவுடனே முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள.; அப்போது நம் முகத்தைப் பார்த்து நாமே வெட்கப்படுவோம். அது அவ்வளவு கோரமாக இருக்கும். கோபம் வந்தால் உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகலாம். அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கலாம்ƒ இதற்கெல்லாம் வாய்ப்பில்லாவிட்டால் ஒன்று, இரண்டு, மூன்று, என்று நூறு வரையில் எண்ணலாம். இதற்குள் நம் கோபம் தணிந்து விடும். கோபத்தின் மூலமாக நன்மையைப் பெறும் திறமையை நாம் அடையும் வரையில் கோபத்திற்கு நாம் ஆளாகக் கூடாது. - சுவாமி சச்சிதானந்தா.

2. கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனம் குவித்து அந்த மகிழ்ச்சியால் கூத்துக்கள் ஆடி கெடு புத்தி உடையோரைக் கூடி - யானும் கெட்டு அலையாமலே கெதி பெற நாடி மாளிகைமேல் வீடுகட்டி-மனை வாழ்வைச் சதமென்று வாழ்கின்ற மட்டி நாளை எமன் வந்து அதட்டிக்-கொண்டு நடப்பான் என்று அறியானை அருப்பதை வெட்டி இரக்கத் துணிந்து கொண்டேனே எனக்கு இருக்கும் குறைமுழுதும் நிகழ்த்திக் கொண்டேனே‚ - குணங்குடி மஸ்தான்

3. நொங்கும் நுரையுமாகப் பொங்கும் -காமக்கடலுள் முங்கும் பாவி உடலைச் சொங்கும்-சொரி சிறங்கும் வங்கும் நமநமென்று திங்கும்-நரம்புந்தோலும் தொங்கும் மினுமினுப்பு மங்கும்- இல்லந் துறந்த சிங்கங்கட்கு இல்லை காணும் பங்கம்-மேனி உயர்ந்த தங்க மயமாய் நின்று இலங்கும்-அவர்கட் கன்றோ தங்கும் சாயுச்ய பதம் தங்கும் - நமக்கும் அதில் பங்கும் தந்து உதவி, பராபரம் அருள் இறங்கும். - குணங்குடி மஸ்தான்

அத்தியாயம் பதினேழு

சித்ராத்ரய விபாக யோகம்

சித்ராத்ரயம் என்றால் நம்பிக்கை என்று பொருள். சாத்விக, ராஜச, தமச குணபேதங்களுக்கு ஏற்றபடி, நம்பிக்கையும் மூன்று வகைப்படும்.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: ஒரு சந்தேகம் கண்ணா‚ சாத்திர முறை மீறி யாகம் செய்வது தவறு என்றாய்‚ அவ்விதம் செய்பவன் உண்மையான நம்பிக்கையுடன் செய்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு எந்த நிலை கிட்டும்? சத்துவ நிலையா? ரஜோ நிலையா? தமோ நிலையா?

கண்ணன்: ஆசையும் பற்றும் வலுத்தவர்களாய்.. அகங்காரமும் பகட்டும் கொண்டவர்களாய், சில அறிவிலிகள் தங்கள் உடலையும் அதற்குள் உறையும் என்னையும் 1வருத்திக் கொண்டு, சாத்திரத்திற்கு உட்படாத கொடுந்தவம் புரிகிறார்கள்ƒ அவர்கள் அசுரகுணம் படைத்தவர்கள்.
அர்ஜுனா‚ இயல்பாகவே மனிதன் நம்பிக்கை மயமானவன். அந்த நம்பிக்கை சாத்விகி, ராஜசி, தாமசி என்று மூன்று வகைப்படும்ƒ அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடிதான் இந்த நம்பிகைகள் அமைகின்றன. சாத்விக நம்பிக்கை கொண்டவர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்ƒ ராஜச நம்பிக்கை கொண்டவர்கள் அரக்கர்களை வழிபடுகிறார்கள். தாமச நம்பிக்கை கொண்டவர்கள் மூதாதயர்களையும் பூதகணங்களையும் வணங்குகிறார்கள்.

இது போல் அனைவருக்கும் விருப்பமான 2உணவும் மூன்று வகைப்படும். அவற்றின் பேதா பேதங்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள்‚

ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், இன்பம், இவை வளர்ப்பவை, சாறுள்ளவை, பசைக் கூறுள்ளவை, மனதுக்கு இதம் அளிப்பவை போன்ற மதுர உணவுகள் சாத்விகர்களுக்கு விருப்பமானவை. கசப்பானது, புளிப்பானது, உவர்ப்பானது, மிதச்சூடானது, காய்ந்து போனது, காரம் மிகுந்தது, எரிச்சல் தருவது, பசி எடுக்காமல் தடுப்பது, துக்கம் துயரம் நோய் இவற்றைக் கொடுப்பது என்ற வகையான உணவுகள் ரஜோ குணத்தினருக்குப் பிடித்தது. நாளுற்றது, வற்றிச் சுவையற்றது, பழையது, எச்சிலானது, கெட்டுப்போனது, நாற்றமடிப்பது இந்த வகை உணவுகள் தாமச குணத்தார் விரும்பி உண்பது.

இது போல் யாகமும் மூன்று வகைப்படும். பலன் கருதாமல், „யாகம் செய்வது கடமை… என்ற ஒரே எண்ணத்தில் சாத்திர முறைப்படி செய்யும் யோகம் சாத்விகமானது. பலன் கருதிப் பகட்டாகச் செய்யப்படும் யாகம் ராஜசமானது. அன்னதானம் செய்யாமலும், தட்சனை வைக்காமலும், மந்திரங்கள் ஓதாமலும், அக்கறை இல்லாமலும் வேதநெறி தவறி செய்யப்படும் யாகம் தாமசமானதாகும்.

இது போல் தவமும் மூன்று வகைப்படும். மனம் தெளிந்திருத்தல், மவுனமாய் இருத்தல், மனத்தை அடக்குதல், சாதுவாய் இருத்தல், ஆத்மா ஒன்றையே சிந்தனையில் நிறுத்தல் என்ற மனத்தவமும்... இனிமையாய்ப் பேசுதல், உண்மையே உரைத்தல், நயம்பட நன்மையே பகர்தல், வேதம் ஓதுதல் என்ற வாக்கு தவமும்.. தேவர், பிராமணர், ஆசாரியர் மற்றும் ஞானியரை வழிபடல், புனித நீராடல், அஹிம்சை, நேர்மை, பிரம்மச்சரியம் மேற்கொள்ளல் என்ற சரீரதவம் என்ற மூன்றையும் பலன் கருதாமல் பக்தியுடனும் அக்கரையுடனும் செய்யும் போது, அது சாத்விக தவம் எனப்படும். பாராட்டும் பெருமையும் போற்றுதலும் பெறப் பகட்டாகச் செய்யப்படும் தவம் ராஜச தவம் எனப்படும். மற்றவர்களை அழிப்பதற்கென்றே உடம்பை வருத்திச் செய்யப்படும் மூடத்தனமான தவம் தாமசத்தவம் எனப்படும்.

இது போல் தானங்களும் மூன்று வகைப்படும். தனக்கு எந்த உதவியும் செய்யாதவனுக்கு பலன் கருதாமல் காலம், இடம், நடத்தை அறிந்து கொடுப்பது சாத்விக தானம். கைம்மாறு கருதியும், 3பலன் எதிர் நோக்கியும், மனம் வருத்தியும் கொடுப்பது ராஜச தானம். தகாத நேரத்தில், தகாத இடத்தில் தகாதவர்களுக்கு மரியாதையின்றி அலட்சியமாக செய்யப்படும் தானம் தாமச தானம்.

அர்ஜுனன்: அவ்விதமானால் கண்ணா.. இப்போது சொன்ன தானம், தவம், வேள்வி இம்மூன்றையும் எவ்விதம் தொடங்கவேண்டும்?

கண்ணன்: பரம்பொருளான பிரம்மத்திற்கு 4ஓம், தத், சத் என்று மூன்று பெயர்கள் உண்டு. இதைக் கொண்டுதான் முன்பு பிராமணர்களையும், வேதங்களையும், வேள்விகளையும் நான் தோற்றுவித்தேன். ஆகவே வேதம் அறிந்தவர்களால் வேத முறைப்படி செய்யப்படும் வேள்வி, தவம், தானம் ஆகிய மூன்றும் ஓம் என்று சொன்ன பிறகே தொடங்குகின்றன. பலன் கருதாமல் சொர்க்கத்தை நாடும் உத்தமர்கள் தத் என்று சொன்ன பிறகே அந்த முச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நன்மை, உண்மை என்று இருபொருள் கொண்ட சத் என்ற சொல் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வேள்வி, தவம், தானம், இவற்றில் நிலைத்திருக்கும் சொல் சத் எனப்படும்ƒ அது தொடர்பான மற்ற செயல்களும் கூட சத் என்றே சொல்லப்படும். அக்கரை இன்றி செய்யப்படும் வேள்வியும், தவமும், தானமும் அசத் எனப்படும். அது இக வாழ்விலும் உதவாது, பரலோகத்திலும் பயன்படாது.

(பதினேழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.ஆன்மிக சாதனை என்னும் புனிதமான பெயரால் நாம் நம் உடலை வீணாக வருத்திக் கொள்ளக் கூடாது. தீ மிதித்தல், உடலில் வேல்குத்திக் கொள்ளுதல், சவுக்கால் அடித்துக் கொள்ளுதல் முதலியவற்றால் சிலர் தங்களைத் துன்புறுத்திக் கொள்ளுகிறார்கள். இறைவன் நமக்கு உடம்பைக் கொடுத்திருப்பது இவ்வாறு வருத்திக் கொள்வதற்காக அல்ல. நல்ல காரியங்களுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார். - சுவாமி
சச்சிதானந்தா

2.உணவு உடம்பை மட்டும் உருவாக்கவில்லை. மனதையும் அதுவே உருவாக்குகிறது. எனவே மக்கள் வாழ்க்கையில் உணவு மிகவும் முக்கியமானது. - சுவாமி சச்சிதானந்தா

3.விண்ணுலகப் புண்ணியம் கருதி, தானம் செய்பவர் „அறவிலை வணிகர்… என்பது தமிழ் மரபு. இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன். - புறநானூறு

4.ஓம் என்பது அகிலாண்ட ஓசையின் தொகை.
-------------------------------------------------------------------------------

Friday 19 October, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 14,15)

Friday October 19, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 14,15)

எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பதினான்கு

குணத்ரய விபாக யோகம்

குணத்ரய என்பது குணங்கள்ƒ விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள்.

சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 27 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா‚ ஞானங்களில் உன்னதமான மற்றோரு ஞானத்தைப் பற்றி
இப்போது உனக்குச் சொல்வேன்‚ பல முனிவர்கள் இதைப் பின்பற்றி நற்கதி அடைந்துள்ளனர். இதைக் கடைப்பிடிப்பவர்கள் எனக்கே சமமானவர்கள் ஆகின்றனர். அவர்கள் மீண்டும் பிறப்பதில்லைƒ ஊழிக்காலத்தில் அழிவதும் இல்லை.

மகா இயற்கையே எனது கர்பப்பை. அதில் நான் விதைகளை விதைக்கிறேன். அதிலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன. கர்ப்பத்தில் தோன்றும் அனைத்து வடிவங்களுக்கும் மகா இயற்கையே தாய்ƒ நான்தான் விதையைத் தூவும் தந்தை. இந்த இயற்கையிலிருந்து தோன்றியவைதான் சத்துவம், ரஜசம், தமசம், என்னும் மூன்று குணங்கள்ƒ இந்த குணங்கள்தான் அழிவற்ற ஆத்மாவை அழியும் உடம்புடன் இறுகப் பிணைத்து விடுகின்றன. இதில் சத்துவகுணம் என்பது பரிசுத்தமானதுƒ ஒளி மிகுந்ததுƒ இடர்ப்பாடற்றதுƒ இது ஆத்மாவுக்குச் சுகத்திலும் ஞானத்திலும் பற்றுதலை உண்டாக்கும். ரஜோகுணம் என்பது ஆசை வடிவானதுƒ இது ஆத்மாவுக்குக் காரியங்களின் மேல் பற்றுதலை உண்டாக்கும். தமோகுணம் என்பது அறியாமையால் தோன்றுவதுƒ எல்லா உயிர்களையும் மயங்கச் செய்வது. இது அசட்டை, சோம்பல், உறக்கம் ஆகியவற்றுடன் ஆத்மாவைப் பிணைக்கும். சுருங்கச் சொன்னால், சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கும்ƒ ரஜோகுணம் செயலைத் தூண்டும்ƒ தமோகுணம் கவனமின்மையால் தள்ளும். சிலநேரங்களில், சத்வகுணம் ரஜசையும் தமசையும் அமுக்கி மேலோங்கி நிற்கும். சில சமயங்களில் ரஜோகுணம் சத்துவம், தமஸ் இரண்டையும் அமுக்கித் தலைதூக்கி நிற்கும். இன்னும் சில நேரங்களில் தமோகுணம், சத்துவம், ரஜஸ் இவைகளை அமுக்கி உச்சத்தில் நிற்கும். உடம்பின் ஒன்பது வாயில்களிலும் ஞானி ஒளி வீசும்போது சத்துவ குணம் ஓங்கியுள்ளது என்பதை அறியலாம். பேராசை, பிறன்பொருள் விரும்பல், வினை விருப்பம், வினைப் பெருக்கம், துடிதுடிப்பு, பரபரப்பு இவை ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன. விவேகமின்மை, முயற்சியின்மை, அசட்டை, மதிமயக்கம் ஆகியவை தமோகுணம் மேலிடும்போது உண்டாகின்றன.

சத்துவகுணம் ஓங்கி நிற்கும்போது உயிர்விடுபவன், உத்தம ஞானிகள் வாழும் உலகத்தை அடைகிறான்ƒ ரஜோகுணம் ஓங்கி நிற்கும் போது இறப்பவன், தொழிற்பற்று கொண்டவர் குலத்தில் பிறக்கிறான். தமோகுணம் ஓங்கி நிற்கும் போது மரிப்பவன், மூடர்களிடையில் பிறக்கிறான்.

சாத்துவிகத்தின் பலன் நன்மைƒ இதிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசின் பலன் துன்பம்ƒ இதிலிருந்து பேராசை தோன்றுகிறது. தமசின் பலன் மடமைƒ இதிலிருந்து சோம்பல், மயக்கம், அறியாமை உண்டாகிறது.

சத்வ குணத்தார்; மேலெழுந்து சொர்க்கமடைகின்றனர்ƒ ரஜோகுண மனிதர்கள் மீண்டும் மனிதர்களாகவே மண்ணில் பிறக்கிறார்கள்ƒ தாமச மூடர்கள் பறவை மற்றும் பிற ஜந்துக்களாகப் பிறந்து தாழ்நிலை அடைகிறார்கள். இம்மூன்று குணங்களையும் கடந்தவன் பிறப்பு, மூப்பு, துக்கம், இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான். அத்தனை செயல்களையும் குணங்களே இயக்குகின்றன என்பதையும் அவற்றைத் தவிர வேறொரு கர்த்தா இல்லை என்பதையும், குணங்கள் வேறு.. தான் வேறு என்பதையும் கண்டு கொண்டவன் என் சொரூபமாகவே மாறிவிடுகிறான்.

அர்ஜுனன்: பிரபோ‚ ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்துவிட்டான் என்பதற்கு அடையாளம் என்ன? அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் எவ்விதம் இந்த முக்குணங்களையும் கடக்கிறான்?

கண்ணன்: பாண்டவனே‚ முக்குணங்களைக் கடந்தவன் தெளிவு, செயல், மயக்கம், ஆகியவை தோன்றும்போது அவற்றை வெறுக்கவும் மாட்டான்ƒ தோன்றாத போது தேடித்திரியவும் மாட்டான். எல்லாம் குணங்களின் இயக்கமே என்பதை உணர்ந்து எதிலும் அக்கரை இல்லாதவன் போல் காட்சியளிப்பான். குணங்களின் தாக்குதலுக்கு அசைந்து கொடுக்கமாட்டான். தன்னிலை தவறமாட்டான். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான். இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இன்முகத்துடன் ஏற்பான். மான அவமானங்களை நிகராக நினைப்பான். நண்பன் பகைவன், பிடித்தவன் பிடிக்காதவன் இவர்களை இணையாகக் காண்பான். பொன்னையும் மண்ணையும் ஒன்றுபோல் பார்ப்பான். தனக்கென வேண்டிய தொழில் எதும் செய்யான். இத்தகையவனே1 குணங்களைக் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.

அர்ஜுனா‚ ஒப்பற்;ற சுகத்திற்கும் அழிவற்ற தர்மத்திற்கும் நானே இருப்பிடம். அப்படிப்பட்ட என்னைச் சலனமிலா பக்தியோகத்தால் வழிபடுகிறவன், முக்குணங்களையும் கடந்து2, பிரம்மம் ஆவதற்குத் தகுதியடைகிறான்.

(பதினான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. உதாரணம் சுகர், ஜடபரதர் முதலியவர்கள். 2. பிருஹத் என்ற சொல்லினின்றும் பெறப்படும் பிரம்மம் என்றால், நிறையுள்ள, பரிபூரணமான குணங்களுடன் கூடிய அரும்பொருள் என்று பொருள்படும். -ஸ்ரீ இராமாநுஜர்

அத்தியாயம் பதினைந்து

புருஷோத்தம யோகம்
புருஷர்களில் உத்தமமானவன் என்பது பொருள். இயற்கை, ஆத்மா இரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் இறைவன், அவற்றிலும் மேலானவர். அதனால் புருஷோத்தமன் எனும் பெயர் பெறுகிறான். சம்சாரம் என்பது அசுவத்த மரம் போன்றதுƒ பற்றைத் துறப்பது என்ற வாளால் தான் அதை வெட்டிச் சாய்க்க முடியும்.

இதில் 20 சுலோகங்கள்அடங்கியுள்ளன.

கண்ணன்: சம்சாரம் என்ற 1அசுவத்த மரம் மேலே 2வேரும் கீழே கிளைகளும் கொண்டது, அது அழிவில்லாதது. வேதங்களே அதன் இலைகள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் நலன்களின் செயல்களே அதன் தளிர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் செழித்து வளர்ந்த அதன் கிளைகள் கீழ்நோக்கிப் பரவியுள்ளன. மனித உலகில் பரவலாய்க் காணும் தொழிலின் தொகுப்புகள் தான் பல்கிப் பெருகும் அதன் வேர்கள். இவ்வாறு வேதங்களே கூறுகின்றனƒ இதை அறிந்தவனே வேதத்தை அறிந்தவன்.

ஆதியும் அந்தமும் இல்லாத இந்த அசுவத்த மரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கு அடியுமில்லை.. முடிவுமில்லை.. இருப்புமில்லை. வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைக் கூரூன்றிய பற்றிலாமை எனும் உறுதியான 3வாளால் வெட்டித் துணிந்திட வேண்டும்ƒ பிறகு அடைந்தவர் திரும்பாத இனிய உலகைத் தேடத் துணிந்திட வேண்டும்ƒ முடிவில் அந்த மரத்தையே உண்டு பண்ணிய ஆதிபுருஷனை அடைந்து பணிந்திட வேண்டும். பற்றுதல் என்னும் குற்றத்தைப் போக்கி.. இன்ப துன்ப இரட்டைகளை நீக்கி.. கர்வம், மோகம், காமம் இவற்றை விலக்கி.. ஆத்மஞானத்தைத் துலக்கி ஆத்மாவின் உண்மை வடிவத்தை அறிந்தவர்கள் அந்த அழிவிலா இடத்தை அடைகின்றனர்ƒ அந்த அற்புத இடத்தைச் சூரியனோ சந்திரனோ அல்லது பெரு நெருப்போ பிரகாசிக்கச் செய்வதில்லைƒ அது தானாகவே பிரகாசிக்கிறதுƒ அதுவே எனது பரமபதம்.

அநாதியான என்னுடைய அம்சங்களில் ஒன்றான ஆத்மாதான் உலகெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அதுவே உடம்பிலுள்ள மனம் முதலான 4ஆறு புலன்களுக்கும் தலைமை தாங்கி இங்குமங்கும் இழுத்துச் செல்லுகிறது. மலர்களின் மணத்தைக் காற்று எடுத்துச் செல்லுவதைப் போல், அந்த ஆத்மா உடல் எடுக்கும் போதும் அதை விடுக்கும் போதும் புலன்களைத் தன்னுடனே எடுத்துச் செல்லுகிறது. அது உடம்பிலுள்ள கண்ணால் பார்க்கிறதுƒ காதால் கேட்கிறதுƒ நாவால் சுவைக்கிறதுƒ நாசியால் நுகர்கிறதுƒ சதையால் உணர்கிறதுƒ மனத்தால் நினைக்கிறதுƒ அந்த ஆத்மா உடலை விடுவதையும் உடலில் படுவதையும், புலன்கள் மூலம் அனுபவிப்பதையும், குணங்களுடன் கூடி மிளிர்வதையும் மூடர்கள் அறிய மாட்டார்கள். ஞானக்கண் கொண்டவர்களே அறிவார்கள். அந்த ஞானிகள் ஆத்மாவைத் தங்களுக்குள்ளாகவே காண்பார்கள். மூடர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆத்மாவை காண மாட்டார்கள்.

சூரியனின் ஒளியும், சந்திரனின் கிரணமும், நெருப்பின் ஜுவாலையும் என்னுடைய பிரகாசம் தான். நான் தான் சந்திரனாக அமுத மழை பொழிந்து பயிர் பச்சைகளையெல்லாம் வளர்க்கிறேன்ƒ என் பலத்தினால் பூமிக்குள் புகுந்து எல்லா உயிர்களையும் தாங்குகிறேன். மேலும், உயிருக்கு ஆதாரமான உள்மூச்சு, வெளி மூச்சு, ஆகியவற்றின் துணை கொண்டு, உதரக் கனலாக மாறி, 5நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கிறேன். அனைவரது இதயங்களிலும் நிறைந்து, நான் தான் நினைக்கவும் செய்கிறேன்... மறக்கவும் செய்கிறேன். அறிவை ஆக்கவும் செய்கிறேன்.. பிறகு நீக்கவும் செய்கிறேன். வேதங்கள் விளக்கும் உட்பொருள் நான் தான்ƒ வேதாந்தத்தைச் செய்தவனும் நான் தான்ƒ முற்றும் அதை அறிந்தவனும் நான் தான்.

ஆத்மாவில் இரண்டு வகையுண்டுƒ ஒன்று அழியக் கூடியது, மற்றொன்று அழிவில்லாதது. எல்லா உயிர்களும் அழியக் கூடிய ஆத்மாவின் வடிவங்களே ஆகும்ƒ வடிவத்தில் உறைவதே அழியாத ஆத்மாவாகும். இவை இரண்டையும் விட மேலான மற்றொரு ஆத்மா இருக்கிறதுƒ அது அழிவற்ற ஈசனாய் மிளிர்ந்து, மூன்று உலகிலும் பரிணமித்து, அவற்றைத் தாங்குகிறதுƒ அது தான் பரமாத்மாƒ அந்த பரமாத்மா நான் தான். அதனால் தான் 6புருஷோத்தமன் என்று எல்லோரும் என்னைப் போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை உள்ளபடி அறிந்தவன், எப்பொழுதும் என்னையே தொழுவான்.

குற்றமற்ற அர்ஜுனா‚ குவலயத்தில் இரகசியமான சாஸ்திரத்தை இது வரை உனக்குச் சொன்னேன்ƒ இதை அறிந்தவனே அறிஞன்ƒ அவனே செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்தவனாவான்.

(பதினைந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. அசுவத்த மரம்: அச்வத்தம் என்றால் இன்றிலிருந்து நாளை இல்லாதது என்று பொருள்.

2. படைப்புக் கடவுளான நான்முகனே மேற்புறம் உள்ள வேர். பூவுலக மானிடர் முதலியவர் கிளைகள். மனிதர்கள் செய்யும் செயல்களால் உண்டாகக் கூடியவை கீழ் நோக்கிப் பரவிய கிளைகள். - ஸ்ரீ ராமாநுஜர்

அசுவத்தம் என்பது அரச மரம். அரசமரம், ஆலமரம் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலை செய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி, மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக் கொண்டு கீழ் நோக்கி வருகிறது. மாயப் பிரபஞ்சம் மேலே பரமபொருளிடத்தில் இருந்து சத்தை வாங்கிக் கொண்டு கீழே பிரகிருதியாக பரிணமித்து வருகிறது.

3.வந்த வரவை மறந்துமிக்க மாதர் மயக்கத்தி லாழும் இந்த மயக்கத்தை அறுக்க - எனக் கெந்தை எழில்வாள் கொடுத்தான். - தாயுமானவர்

4.ஐம்புலன்களுடன் மனமும் சேர்ந்து ஆறு புலன்கள் ஆயிற்று.

5.ப~;யம் - கடித்து உண்பவை, போஜ்யம் - கடிக்காமல் விழுங்குபவை, லேஹ்யம் - நாக்கால் நக்குபவை, சோஷ்யம் - வாயல் உறிஞ்சக் கூடியவை என்று உணவு நால் வகைப்படும்.

6.புஷ்பேசு ஜாதி புரு ஷேசு விஷ்ணு நாரீசு ரம்பா நகரேசு காஞ்சி. - காளிதாசர்.

Friday 12 October, 2007

மலர்மன்னன் திண்ணை கட்டுரை - நவகாளியில் காந்திஜி

Thursday October 11, 2007

நவகாளியில் காந்திஜி

மலர்மன்னன்

திண்ணை வாசகர் ஒருவர் காந்திஜியின் நவகாளி யாத்திரையின் நோக்கம் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். திடீரென அதற்கு இப்போது என்ன அவசியம் என்று வினவியதற்கு அதுபற்றி நண்பர்களிடையே மாறுபட்ட கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வேறுபாடு முற்றிச் சச்சரவே ஏற்பட்டுவிட்டதாகவும் அதைத் தவிர்க்க நான் நவகாளி பற்றி எழுதுவது உதவக் கூடும் என்றும் பதில் சொல்கிறார் (இது அக்டோபர் மாதம் ஆதலால் காந்திஜி பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதும் ஒரு விதத்தில் பொருத்தம்தான்).

ஆதாரம் எதுவும் காட்டாமலேயே வெறும் சொந்த நினைவுகளின் அடிப்படையில் தகவல்களைப் பதிவு செய்வதாக என் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவதை அறிந்திருக்கிறேன். என்றோ நிகழ்ந்தவற்றை ஏதோ நேற்றுத்தான் நேரில் கண்ட மாதிரி எழுதுகிறானே, அவற்றையெல்லாம் எப்படி ஒப்புக் கொள்வது என்று ஏளனமாகவும் எரிச்சலோடும் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் அப்பா, இதைப்பற்றி எழுது, அதைப்பற்றி எழுது என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (தாஜ்மஹலின் அடைக்கப்பட்ட அறைகளில் அடங்கியுள்ள மர்மம் பற்றி எழுத வேண்டும் என்றும் இன்னொரு மகன் கேட்கிறார்)!

இந்த மனித மனம் இருக்கிறதே, அது மிகவும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ராத்திரி என்ன சாப்பிட்டோம் எனக் காலையில் சுத்தமாக மறந்து போகிறது. உடனிருக்கிற எந்த மகளாவது (உடன் இருந்து சகாயம் செய்வதெல்லாம் பெற்ற மகள் அல்ல, வரித்துக்கொண்ட மகள்களோ மகன்களோ தாம்!) காலைப் பலகாரத்திற்குப் பிறகு மாத்திரை சாப்பிட்டாயா, எடுத்துத் தரவா என்று கேட்டால் சாப்பிட்டோமா இல்லையா என்பது அதற்குள் மறந்து போகிறது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்கள் அச்சடித்த மாதிரி தெள்ளத் தெளிவாகப் பதிந்து கிடக்கின்றன. வயது ஏற ஏற இப்படித்தான் பழைய சம்பவங்கள் கூர்மை பெற்று நினைவு அடுக்குகளில் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் போலும்.

நான் ஆராய்ச்சி மாணவன் அல்ல, வார்த்தைகளின் உச்சியில் எண் குறித்து, அடிக் குறிப்பாக விவரம் சொல்வதற்கு. என்றைக்கோ நடந்த சம்பவங்களில் நேரில் சம்பந்தப்பட்டோ, அல்லது கேள்விப்பட்டோ ஒரு சாட்சிக்காரனாக இருந்த சந்தர்ப்பங்களின்போதெல்லாம் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றிப் பதிவு செய்ய வேண்டிவரும், ஆகையால் ஆதாரங்களைத் தேடி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வோம் என்கிற முன் யோசனை எதுவும் எனக்கு இருந்ததும் இல்லை. நினைவில் இருப்பதை எழுதுகிறேன், நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதம் இல்லை; விருப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ளலாம், இல்லாதவர்கள் ஒதுக்கித்தள்ளி விடலாம்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சாவி தமிழ் நாட்டிலிருந்து கிழக்கு வங்காளம் போய் காந்திஜியோடு கூடவே நடை பயணமாகச் சென்று திரும்பி வந்து நவகாளி யாத்திரை என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார். பிறகு அது புத்தகமாகவும் வந்தது.
சாவியின் எழுத்தில் விவரங்களின் பதிவைக் காட்டிலும் காந்திஜியைப் புனிதப் படுத்தி பூசனை செய்யும் மெய் சிலிர்ப்புதான் இருக்கும். மக்களின் அழுகுரலைவிட காந்திஜி மீதான ஆராதனைகள்தான் உரக்கக் கேட்கும். சமூக வரலாற்றுப்பார்வையுடன் பிரச்சினையை அணுகும் கண்ணோட்டம் அந்த எழுத்தில் இருக்காது. ஆகையால் நவகாளி நிகழ்வுகளையும் அவற்றின் பின்னணியில் காந்திஜியின் சாதனையையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு சாவியின் நவகாளி யாத்திரை புத்தகத்தைப் பரிந்துரைக்க மாட்டேன்.

நவகாளி இன்று வங்க தேசத்தில் உள்ளது. அது ஒரு சிறிய மாவட்டம். சணலும் நெல்லும் வெற்றிலையும் முக்கியப் பயிர்கள். வருஷத்தில் ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை அங்கு மழை பெய்துகொண்டிருக்கும். தென்மேற்கு, வட கிழக்குப் பருவக் காற்றுகள் இரண்டுமே விளையாடுகிற பூமி. பயிர்கள் பெரும்பாலும் மழை நீருக்குள் மூழ்கித்தான் கிடக்கும். மழை இல்லாத நவம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்தில்தான் பயிõரிடும் பணி நடக்கும். இன்றளவும் அது வறியவர் மிகுந்த பிரதேசமாகத்தான் இருந்து வருகிறது (1963 ல் கல்கத்தாவில் இருந்த போது கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதிக்கு ஒருமுறை செல்லும் வாய்ப்புக் கிட்டியது. சிட்டகாங், நவகாளி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தேன். எல்லாம் வெறும் வெள்ளக்காடு!)

பிரிவினைக்கு முன் வங்காளம் ஒரு தனி மாநிலமாக இருந்தது. ஒரிஸ்ஸாவின் பெரும் பகுதி, பிஹாரின் பெரும் பகுதி, அஸ்ஸாõமின் பெரும் பகுதி எல்லாமே அதில் அடக்கம். வங்காள ராஜதானி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரு நிலப் பரப்பு, 1946 ல் அகில இந்திய முஸ்லிம் லீகின் ஆளுகையில் இருந்தது. அப்போதெல்லாம் ராஜதானி முதல்வர்கள் பிரதமர் என்றே அழைக்கப்பட்டனர். வங்காள ராஜதானியின் பிரதமராக அப்பொழுது இருந்தவர் முஸ்லிம் லீகின் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் சுரவர்த்தி.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் ஹிந்துஸ்தானத்தை அடக்கி அதிகாரம் செலுத்தியவர்கள் முகமதியர்கள். ஆகவே ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசிடம் ஒப்படைத்துவிட்டு ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியேறினால் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் கீழ் சிறுபான்மையினரான முகமதியர் நிரந்தரமாக இருந்து வரநேரிடும். அது முகமதியரின் சுய கவுரவத்திற்கு இழுக்கு. ஆகவே முகமதியருக்கு அவர்கள் பெரும்பான்மையினராக உள்ள பகுதியை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரித்துத் தனி நாடாகத் தந்துவிட வேண்டும் என வாதித்த முகமது அலி ஜின்னா, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாளைப் பாகிஸ்தான் பிரிவினை கோரும் நேரடி நடவடிக்கை தினமாக ஹிந்துஸ்தானம் முழுவதும் தமது முஸ்லிம் லீக் கட்சி அனுசரிக்கும் என அறிவித்தார் (1946 ஜூலையில் முஸ்லிம் லீக் கட்சியின் செயற் குழு சம்பிரதாயமாகக் கூடி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது).

கலாசார அடிப்படையிலும், பூகோள அமைப்பிலும் ஹிந்துஸ்தானம் ஒரே தேசியம் எனச் சுட்டிக்காட்டிய டாக்டர் அம்பேத்கர், சமய த்தின் பேரால் முகமதியர் பிரிவினை கோருவது அபத்தம் என்று சொன்னார். நாடு முழுவதுமே ஊருக்கு ஊர் முகமதியர் வசிக்கும் பகுதிகள் உள்ள நிலையில், ஆங்காங்கே முகமதியர் கூடுதலான எண்ணிக்கையில் வாழும் ஊர்களும் இருக்கையில், மத அடிப்படையில் முகமதியருக்கென ஒரு தனி தேசத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து உருவாக்கிக் கொடுப்பது எவ்வாறு சாத்தியம் என்று அவர் கேட்டார். எக்காலமும் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களே பெரும்பான்மையினராக இருக்கக் கூடுமாதலால் அவர்களுக்குக் கட்டுபட்டு இருப்பது சுய கவுரவத்திற்கு இழுக்கு என முகமதியர் எண்ணும் பட்சத்தில் அவர்களுக்கு தேசத்தை பிரித்துக் கொடுத்து விடுவதே மேல்; ஆனால் அதன் பிறகு அவர்கள் அனைவரும் பிரித்துக் கொடுக்கப்படும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பதிலுக்கு பாகிஸ்தானாக அமையும் பகுதியில் உள்ள ஹிந்துக்களை ஹிந்துஸ்தானத்திற்கு அழைத்துக்கொள்ள வேன்டும். இது நடக்க வில்லையென்றால் ஹிந்துஸ்தானத்திற்கு மதக் கலவரம் என்கிற தலைவலி நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றும் டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். அம்பேத்கர் பாகிஸ்தான் கோரிக்கை பற்றித் தெரிவித்த கருத்தை முழுமையாக வெளியிடாமல் முகமதியருக்கு தேசத்தைப் பிரித்துக் கொடுத்துவிடுவதே மேல் என்று இடையில் அவர் சொன்ன ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததாகச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் (மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் சொன்னதாகச் சொல்லிக் கொண்டு திரிவதுபோலத்தான் இதுவும்! அதற்கு முன்னும் பின்னும் மார்கஸ் என சொன்னார் என்பது அவர்களுக்கே தெரியாது!).

வங்காள ராஜதானியின் அரசு முஸ்லிம் லீகின் வசம் இருந்தமையால் அங்கு பாகிஸ்தான் பிரிவினை கோரும் தினம் அதிகாரப் பூர்வமாகவே திட்டமிடப் பட்டது. ஆகஸ்ட் 16 ஒரு விடுமுறை தினமாகவே கருதப்படும், காவல் துறையினர் கூட அன்று வேலைக்கு வர மாட்டார்கள் என்று வங்காளப் பிரதமர் சுரவர்த்தி பகிரங்கமாகவே அறிவித்தார். முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அந்த அறிவிப்பின் உட்பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள் (பின்னர் வங்காளம் முழுமையையும் ஒரு தனிச் சுதந்திர நாடாக அடைந்து தாமே ஆண்டு அனுபவிக்க வேண்டும் எனவும் சுரவர்த்தி முதற்சி செய்து பார்த்தார்!).

மா நில அரசங்கத்தின் ஒத்துழைப்போடு ஒரு லட்சம் பேருக்குத் தேவையான ரேஷன் அரிசியும் பிற உணவுப் பண்டங்களும் நேரடி நடவடிக்கை தினத்தை அனுசரிக்க வரும் முஸ்லிம் லீகர்களுக்கு வழங்குவதற்காகச் சேகரித்து வைக்கபட்டன. குறிப்பாக பிஹாரிலிருந்து ஆயிரக்ககணக்கான முரட்டு முகமதிய ரவுடிகள் வரவழைக்கப்பட்டனர். இதற்காகவே சிறையிலிருந்தும் கொலை பாதகங்களுக்கு அஞ்சாத போக்கிரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிற்பாடு குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அந்தக் கால கட்டத்து ஸ்டேட்ஸ்மன் நாளிதழிலும் ஆனந்த பஜார் பத்திரிகா போன்ற வங்க மொழி நாளிதழ்கள்களிலும் இவை பற்றிச் செய்திகள் பதிவாகியுள்ளன. ஸ்டேட்ஸ்மன் அப்போது வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்டு வந்த பத்திரிகை. ஆகவே அதன் செய்திக்கு உள் நோக்கம் எதுவும் கற்பிக்க இயலாது.

வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1946 ஆகஸ்ட் 16 சாதரணமாகத்தான் விடிந்தது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெருக்களில் திரண்டு, ஹிந்துக்களும் சீக்கியர்களும் திறந்து வைத்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தத் தொடங்கினார்கள். பாகிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனால் நாங்கள் கடையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று ஹிந்து, சீக்கிய வியாபாரிகள் வாதித்தனர். உடனே கடைகளை நோக்கிக் கல் வீச்சு தொடங்கியது. வெகு விரைவில் அது ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் திட்டமிட்டுத் தாக்கும் கலவரமாக உருவெடுத்தது. எப்படியும் நேரடி நடவடிக்கை தினம் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதில் முடியும் என எதிர்பார்த்த வங்காளிகளும் சீக்கியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் பதில் தாக்குதல் நடத்தி நிலைமையைச் சமாளித்தார்கள். ஆனால் அரசே முகமதியர் பக்கம் இருந்ததாலும் பாதுகாப்பு கிட்டாததாலும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அதிக அளவில் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடைய நேரிட்டது.

ஒரே நாள் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நேரடி நடவடிக்கை ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவிப்பதற்கு வசதியாக நாலைந்து நாட்கள் நீடித்தது. ஆக்ரோஷமிக்க வங்காளிகளும் சீக்கியர்களும் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் திட்டமிட்டு வந்திரு ந்த உள்ளூர் வெளியூர் கும்பல்களின் கைதான் மேலோங்கியிருந்தது. எனினும் வைசிராய் வேவலுக்குக் கலவரம் குறித்து அறிக்கை அனுப்பிய சுரவர்த்தி அரசு, முகமதியர் தரப்பில்தான் அதிகச் சேதம் எனத் தெரிவித்தது! வங்காளத்தின் ஆங்கிலேய கவர்னர் இரு தரப்பினரிடையிலான மோதலில் வெள்ளையருக்குப் பாதிப்பு வந்துவிடலாகாது என்பதற்காக ராணுவத்தின் பாதுகாப்பு வெள்ளையருக்குக் கிடைக்கச் செய்வதிலேயே கவனமாக இருந்தார். சுரவர்த்தி அறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து அவர் கவலைப்படவில்லை. வைசிராய் வேவல், சுரவர்த்தியின் அறிக்கையை அப்படியே நகல் செய்து பிரிட்டிஷ் அரசின் இந்தியா மந்திரிக்கு அனுப்பிவைத்தார்!

கல்கத்தாவில் கலவரம் அடங்கத் தொடங்கியதும், வங்காளத்தின் பிற பகுதிகளுக்கு அது பரவத் தொடங்கியது. முக்கியமாக முகமதியர் அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் அது வேகம் எடுத்தது.

கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்திற்கு இவ்வாறாகத்தான் கலவரம் போய்ச் சேர்ந்தது. முஸ்லிம் லீக் அறிவித்த ஒரே நாள் நேரடி நடவடிக்கை தினம் ஆகஸ்ட் 16. ஆனால் நவகாளியில் அதைச் சாக்கிட்டு அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது.

அன்றைய நவகாளி மாவட்டத்தில் எழுபது சதம் முகமதியர், முப்பது சதமே ஹிந்துக்கள். கிறிஸ்தவர்கள் அன்று அங்கு இல்லையென்றே சொல்லிவிடலாம். அது ஒரு வெறும் விவசாய பூமி. மாட்டு வண்டி போக்குவரத்துகூடச் சொற்பம். படகுப் பயணம் அதிகம். எண்பது சத நிலம் ஹிந்து நிலச் சுவான்தார்கள் வசம் இருந்தது. ஆனால் முப்பது சத ஹிந்துக்களும் அவற்றுக்குச் சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது. நிலப் பிரபுக்களின் எண்ணிக்கை குறைவுதான். மக்களில் பெரும்பாலானவர்கள் குத்தகைதாரரும் விவசாயக் கூலிகளும்தாம். உப தொழில்கள் செய்வோர் இரு சமயத்தவரிலும் இருந்தனர். பொதுவாக மாவட்டத்தில் முகமதியர் பெரும்பான்மையினராக இருப்பினும் பல கிராமங்களில் ஹிந்துக்கள் கூடுதலாகவும் சில இடங்களில் சரிசமமாகவும் இருந்தனர். ஹிந்து விவசாயக் கூலித் தொழிலாளரில் தலித்துகளே கூடுதல்.

அக்டோபர் மாத மையத்தில் நவகாளி மாவட்ட முகமதியர் ஹிந்துக்கள் மீதான தமது தாக்குதலைத் தொடங்கினார்கள். மாவட்டத்தில் ஹிந்துக்களை இன அழிப்புச் செய்துவிடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

வங்கப் பெரும் பஞ்சம் என்று பெயர் பெற்ற, 1943 ல் நிகழ்ந்த கொடிய பஞ்சத்தின்போது நவகாளி நிலச் சுவான்தார்கள் ஹிந்து, முகமதியர் என வேறுபாடு பாராமல் ஏழை விவசாயத் தொழிலாளர் அனைவரிடமுமே நிர்த்தாட்சண்யமாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் முகமதிய விவசாயத் தொழிலாளர்கள் சமயத்தின் அடிப்படையில் நிலச் சுவான்தார்கள் மீது தாக்குதலைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டனர். அது விரைவில் ஹிந்துக்கள் அனைவர் மீதுமான தாக்குதலாக விரிவடைந்தது. தலித்துகளின் சேரிகள் கூடத் தீக்கிரையாக்கப் பட்டன!
வழக்கம் போல ஹிந்துக்களில் ஆண்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இலக்காவதும் தொடர்ந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவிமார் வலுக்கட்டாயமாக முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்டு பலவந்த மணம் செய்விக்கப்பட்டனர்.

நவகாளியில் ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும் முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின் துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார்.

முகமதியர் தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின் ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம் செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள் விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச் செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்.

பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கும்போது முகமதியர் ஓரமாக நின்று கேட்டுவிட்டுக் கூட்டம் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஹிந்துக்கள் மட்டும் கலைந்து செல்லாமல் பழி கிடப்பார்கள். காந்திஜி எழுந்து செல்லும்போது அவர் பின்னாலேயே பய பக்தியுடன் செல்வார்கள்!
நவகாளியில் மக்களை அமைதிப்படுத்த வந்த காந்திஜியோடு இருந்த குழுவினருள் திருமணமாகாத ஒரு முகமதியப் பெண்ணும் இருந்தார். முகமதியர் அதிக எண்ணிக்கையில் இருந்த நவகாளி கிராமத்திற்கு அவர் சென்று மக்களைச் சந்தித்தபோது ஹிந்துக்கள் தமது வழிபாட்டுத் தலத்தில் பூஜை செய்து வந்த வாளை முகமதியர் கைப்பற்றிச் சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. உடனே அந்த வாள் எங்கு இருந்தாலும் அதனை முகமதியர் ஹிந்துக்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த முகமதியப் பெண் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த வாள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை. முகமதியப் பெண் தமது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

நவகாளியில் முகமதியரைத் தமது கோரிக்கையை ஏற்கச் செய்வதற்காக ஒரு முகமதியப் பெண் உண்ணாவிரதம் தொடங்கினார்! அது இன்றைய காலை உணவுக்குப் பிறகு மாலைவரை மட்டுமே நடக்கும் அடையாள உண்ணாவிரதம் அல்ல. கோரிக்கை ஏற்கப்படும் வரையிலான தொடர் உண்ணாவிரதம்.

முகமதியர் மனம் மாறும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய முகமதியப் பெண்மணியின் பெயர் அம்துஸ் ஸலாம். அம்துஸ் உண்ணாவிரதம் நீடித்ததேயன்றி ஹிந்துக்களின் பூஜைக்குரிய வாள் வந்து சேர்ந்தபாடாயில்லை. அம்துஸ் திரும்பத் திரும்பத் தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அம்துஸ் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து காந்திஜி அங்கு வந்துவிட்டார். அதன் பிறகு முகமதியர் குற்ற உணர்வுடன் ஓர் உண்மையை வெளியிட்டனர்.
வாளைத் திரும்பக் கொடுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஆத்திரத்தில் ஒரு குளத்தில் அது வீசி எறியப்பட்டுவிட்டது. அதைக் கண்டெடுப்பது இயலாத காரியம். இதை அறிந்த பின் அம்துஸ்ஸுக்கு வேறு வழி தெரியவில்லை. பிற சமயத்தவரின் வழிபாட்டு சுதந்திரத்தில் இனி தலையிடுவதில்லை என வாக்குறுதியளிக்கும் ஒப்புதல் கடிதம் எழுதி முகமதியர் அனைவரிடமும் அதில் கையொப்பமிடச் செய்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அம்துஸ் ஸலாம்.

அறிவுத் தெளிவுடன் துணிவும் மிக்க அந்த முகமதியப் பெண்மணியின் பெயர் நமது சரித்திரப் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காது. அதனால் அவருக்கு என்ன நஷ்டம்? இழப்பெல்லாம் நமக்குத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்குத் தலை வணங்குவோம். காந்திஜி தமது ஹரிஜன் பத்திரிகையில் அம்துஸ் பற்றி எழுதியிருக்கிறரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றிச் செய்தி சேகரிக்க உலகின் பிரபல பத்திரிகைகளிலிருந்தெல்லாம் நிருபர்கள் வந்திருந்தனர். அவர்களில் அமெரிக்காவின் ஷிகாகோ டெய்லி நாளிதழின் தெற்கு ஆசிய நிருபர் பிலிப்ஸ் டால்போட் நவகாளி பற்றிய உண்மைத் தகவல்கள் பலவற்றையும் தெரிவித்ததோடு இந்தச் செய்தியை
யும் பதிவு செய்திருக்கிறார்.

காந்திஜியின் வருகைக்குப் பிறகு நவகாளியில் கலவரம் ஓயலாயிற்று என்ற போதிலும் அதற்குள் இன அழிப்பு என்று சொல்லும் அளவுக்கு மாவட்டத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். ஹிந்துக்கள் கூடுதலாக உள்ள கிராமங்களில் முகமதியரைத் திருப்பித் தாக்குவது தவிர்க்கப் படுவதற்கே காந்திஜியின் நவகாளி யாத்திரை பெரிதும் பயன்பட்டது. அக்டோபர் மத்தியில் நவகாளியில் முகமதியர் தொடங்கிய இனக் கலவரத்தை அடக்கக் கல்கத்தாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதிதான் காந்திஜியால் நவகாளி செல்ல முடிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கல்கத்தாவில் 1947 தொடக்கத்தில் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததும் தேசப் பிரிவினையைத் தம்மால் தவிர்க்க இயலவில்லை என்ற வேதனையில் சுய தண்டனையாக மேற்கொண்டதுதான். மேலும் பழி தீர்க்கமாட்டோம் என ஹிந்துக்களிடம் உத்தரவாதம் பெறுவதற்காகவும் அவர் உண்ணா விரதம் இருந்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முகமதியர் கைவிட வேண்டும் என்பதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை. ஏனெனில் உண்ணாவிரதம் என்கிற தமது வலிமை மிக்க ஆயுதம் முகமதியரிடம் செல்லுபடியாகாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதேபோலத் தமது அஹிம்சைப் போராட்டம் ஆங்கிலேயரை மட்டுமே வழிக்குக் கொண்டுவரும் என்பதைத் தாம் அறிந்திருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத போர்த்துக்கீசியர், ஸ்பானியர்கள் போன்ற ஐரோப்பியர் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்.

படங்கள்:

1. நவகாளியில் காந்திஜி பாத யாத்திரை

2. கல்கத்தாவில் தமது ஆத்ம சுத்திக்காகவும் ஹிந்துக்களிடமும் சீக்கியர்களிடமும் முகமதியரைப் பழி வாங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்க வற்புறுத்தியும் உண்ணாவிரதம் இருக்கும் காந்திஜி

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 10

Thursday October 11, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 10 அத்தியாயம் பதின்மூன்று

எஸ் மெய்யப்பன்

(முன்னுரை

இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த பகவத்கீதையின் சாரம் அவரது வாழ்க்கையின் மிக முக்கிய எழுத்துச் சாதனை என்றே சொல்லலாம.

அவர் கடந்த ஆண்டு, 2006, டிசம்பர் மாதம் 29ஆம் நாள் இறைவனடி சேர்ந்தாh. அவரது இறுதிச் சடங்கின் போது அதன் இரண்டு அத்தியாயங்களைப் படித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன. அப்போது உறவினர்கள,; நண்பர்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

காரைக்குடியில் பிறந்து சின்னாளப்பட்டியில் வளர்ந்து சென்னையில் உயர் கல்வி கற்று அரசாங்கப் பணியில் மிகச் சிறப்பான காரியங்களைச் செய்து தமிழ்ப்பணியும் ஆற்றியவர் அவா. அவர் தனது எழுத்திறனை வளர்த்ததோடல்லாமல் என்னையும் எழுதத் தூண்டி பயிற்சி அளித்தவா. அவர் இருக்கும் போதே இதை நூல் வடிவமாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன. ஆனால் அதற்கு அவர் ஒப்பவில்லை. அவருக்கு பின இந்த எளிய இனிய நடையில் எழுதப்பட்ட கீதையின் சாரத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதிகமான மக்கள் படிக்கும் செய்தித்தாளிலும, எளிதில் கேட்கும் வகையில் தட்டுருக்களையும் செய்யத் தீர்மானித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன.

அவரது நினைவு நாளுக்கு முன்பாக அதை நூல் வடிவமாகக் கொண்டு வர முயன்று வருகிறேன். அதைச் செவ்வனே செய்து முடிக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.
நன்றி.
சித்ரா சிவகுமார்
ஹாங்காங்)

அத்தியாயம் பதின்மூன்று

N~த்ர N~த்ரக்ஞ விபாக யோகம்

N~த்ரம் என்பது உடல்ƒ N~த்ரக்ஞன் என்பது உயிர்ƒ உடல், இயற்கை, ஆத்மா, பரம்பொருள் ஆகியவற்றின் தன்மைகள் விளக்கப்படுகின்றன.

இதில் 35 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
--------------
அர்ஜுனன்: கேசவா‚ N~த்திரம் என்பது எது? N~த்ரக்ஞன் என்பது எது?

கண்ணன்: உடல் தான் 1சேத்திரம் என்பதுƒ அதில் இயங்கும் அந்த உயிர்தான் N~த்ரக்ஞன்ƒ எல்லா உடல்களிலும் இயங்கும் அந்த உயிர் நான்தான் என்பதை அறிக‚

அர்ஜுனன்: அந்த உடல் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? எத்தகைய மாறுதல்களை அடையக் கூடியது? எங்கிருந்து தோன்றியது? உயிர் என்பது எது? அதன் மகிமை என்ன?

கண்ணன்: சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேள் அர்ஜுனா‚ 2மகா பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், அறிவு, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், உடலின் அமைப்பு, உணர்வுகளின் கூட்டம், உறுதி இவையெல்லாம் குண வேறுபாடுகளுடன் கூடியிருப்பது தான் 3உடல் என்பது. அசையும் பொருள், அசையாப் பொருள் என்ற வகையில் எந்த உயிர் உண்டானாலும், அது உடல், உயிர் இரண்டின் சேர்க்கையால் பிறந்தது என்பதை அறிவாயாக‚

அர்ஜுனன்: ஞானம் என்பது என்ன கண்ணா?

கண்ணன்: உயிரைப் பற்றிய அறிவே ஞானம் என்பது. அகிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, குருசேவை, அடக்கம், உறுதி ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.. அகங்காரம், ஆணவம்4, ஆரவாரம், ஆசையில் பற்றுதல், மனைவி, மக்கள் வீடு இவற்றில் ஒட்டுதல் என்பவற்றைத் துறத்தல்.. பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு இவற்றில் தீமை கண்டு தெளிதல்.. வருவதைக் கண்டு மகிழாமலும் போவதைக் கண்டு கலங்காமலும் சமநிலையில் இருத்தல்.. ஜனக் கூட்;டம் கண்டு வெறுத்தல்.. தனிமையில் இருத்தல்.. ஆத்ம ஞானத்தில் நிலை பெறுதல்.. தத்துவ ஞானப் பலன்களை எண்ணுதல்.. என்னையே சரணடைந்து பக்தியைப் பண்ணுதல் ஆகியவவை அனைத்துமே ஞானம் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் அஞ்ஞானமாகும்.

அர்ஜுனன்: இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது எது?

கண்ணன்: ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருளே இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது‚ அந்தப் பரம்பொருள் உண்டு அல்லது இல்லை என்று சொல்ல முடியாதது. அதுவே உனக்கு சாகாத்தன்மை அளிப்பது. தன்னைத் தாங்குவோர் இல்லாமலே உலகனத்தையும் தாங்கி நிற்பது. அதுவே பொருளைத் தாங்குவது.. அழிப்பது.. மறுபடியும் தோற்றுவிப்பது. குணங்கள் இல்லாமலே குணங்களை அனுபவிப்பது‚ புலன்களில்லாமலே புலன்களின் வேலைகளைச் செய்திடும் அற்புத சக்தி வாய்ந்தது‚ எல்லாப் பொருள்களிலும் அது உள்ளேயும் இருக்கிறது.. வெளியேயும் இருக்கிறது‚ அது கிட்டவும் இருக்கிறது.. எட்டவும் இருக்கிறது‚ அது பிளவு படாதது.. பொருள்களில் பிளவுபட்டது போல காட்சியளிப்பது‚ அது அசையாதது.. அசையவும் செய்வது‚ அது இருளைக் கடந்தது.. ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய்த் திகழ்வது‚ அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளியிருப்பது‚ தலைகளும் முகங்களும்.. கண்களும் காதுகளும்.. கைகளும் கால்களும்.. உலகம் முழுவதும் பரவி நிற்பது‚ நுண்மையிலும் நுண்மையானது‚ அழியாதது‚ அறிவு மயமானது‚ எளிதில் அறிய முடியாதது‚ இது தான் ஞானத்தால் அறியப்பட வேண்டியது‚ ஆத்மாவால் அடையப்பட வேண்டியது‚ இந்தப் பரம்பொருளை அறிந்தவன் அமிர்தத்தையே அருந்தியவனாவான்ƒ அழிவற்ற என் திருவடி மலர்களைப் பொருந்தியவனாவான்.

அர்ஜுனன்: இயற்கை, ஆத்மா இவற்றைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் கண்ணா‚

கண்ணன்: இயற்கை, ஆத்மா இரண்டுமே தொடக்கமற்றவை. மனவேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் இயற்கையில் இருந்தே தோன்றுகின்றன. உடல் தான் அரங்கம்ƒ அதில் நடிக்கும் புலன்களின் இயக்குநர் இயற்கையே‚ இதன் இலாப நட்டங்களை அனுபவிப்பதற்கு மட்டும் ஆத்மா காரணமாகிறது. இந்த ஆத்மாவானது இயற்கையில் கலந்து நின்று, இயற்கையிலிருந்தே தோன்றும் நல்லது கெட்டதை அனுபவிக்கிறது. இந்த ஆத்மாவிற்கு நல்ல பிறப்பு அல்லது கெட்ட பிறப்பு கிடைப்பதற்கு ஆசைகளே காரணமாகின்றன. இவ்விதம் இயற்கையே அனைத்திற்கும் இயக்குநர் என்பதையும், ஆத்மா எதற்கும் காரணம் அல்ல என்பதையும் அறிந்து கொண்டவன் உன்னதமானவன்‚ இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு புரிந்து கொண்டவன், அவன் எந்நிலையிலிருந்தாலும் மறுபிறப்பற்ற பொன் மயமானவன்‚
சிலர் தியானத்தில் பக்குவமுற்ற அறிவால் ஆத்மாவைக் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும் மற்றும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். இது தெரியாத இன்னும் சிலர், 5பெரியோர் சொற்கேட்டு ஆத்மாவைக் காண முயற்சிக்கிறார்கள். காதால் கேட்டதை நம்பிக் காரியத்தில் ஈடுபடும் இவர்களும் கூட மறுபடியும் பிறப்பதில்லை.
இவ்விதம் உடம்பினுள் உயர்ந்து நிற்கும் ஆத்மாவைத் தான் அருகில் நின்று பார்ப்பவன் என்றும், அனுபவிப்பவன் என்றும், அன்பாகத் தாங்குபவன் என்றும், அனுமதி அளிப்பவன் என்றும், ஆள்பவன் என்றும,; அரிய பரமாத்மா என்றும,; பலவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பரமாத்மா உடலுக்குள் உறைந்தாலும் செயலற்றவன்ƒ பற்றற்றவன். இருந்தாலும் எல்லாப் பொருள்களிலும் சமமாக இருப்பவன்ƒ அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவன். அவனை உள்ளது உள்ள படி கண்டு கொண்டவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள மாட்டான். பூதங்கள் அனைத்தும் பரம்பொருளில் அடங்கியிருப்பதையும், அதிலிருந்தே அவை விரிவடைகின்றன என்பதையும் உணர்கின்றவன் பிரம்ம நிலை அடைகிறான்.
எனவே அர்ஜுனா‚ பரந்து விரிந்த ஆகாயம் எவ்விதம் எதிலும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லையோ, அது போல், ஆத்மாவானது தேகத்தில் பரிணமித்திருந்தாலும், அதிலே ஒட்டிக் கொள்வதில்லை. உலகத்தைச் சூரியன் ஒளி பெறச் செய்வது போல், தேகத்தை ஆத்மா ஒளி பெறச் செய்கிறது. இவ்விதம் உடல், உயிர் இரண்டுக்குமுள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்து கொண்டு, உயிரானது உடம்பிலிருந்து விடுதலை பெறுவதை ஞானக் கண்ணால் காணும் சித்தி பெற்றவர்கள் பிரம்மத்தையே அடைகிறார்கள். இத்தத்துவங்கள் மகா முனிவர்களால் பல விதமாகப் பாடப் பெற்றுள்ளன. வேதங்களிலும் பலவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அறிவுக் களஞ்சியமான பிரம்ம சூத்திரங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

(பதின்மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.சேத்திரம் என்றால் வயல் என்று பொருள். வயலைப் போல் கர்மங்களாகிற விதைகள் முளைத்து வளரும் இடம். - உரையாசிரியர் அண்ணா

2.மகாபூதங்கள் ஐந்து: நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம். உணர்வுகள் பத்து: கண், காது, மூக்கு, நாக்கு, கவக்கு முதலிய ஞானேந்திரங்கள் ஐந்தும், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.
சுகங்கள் ஐந்து: ஒளி, ஓசை, சுவை, வாசனை, உணர்வு

3.பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், புத்தி, அகங்காரம் இந்த இருபத்து நான்கின் கூட்டத்தாலும், பிரிவாலும், விகாரத்தாலும் தோன்றுவனவெல்லாம் சேத்திரம். இருபத்து ஐந்தாம் தத்துவம் புருஷன் அல்லது சேத்ரக்ஞன் அல்லது ஆத்மா. புருஷன் இயற்கையுமன்று, காரியமுமன்று. காரணமும் அன்று. எதிலும் பற்றாமல் எல்லாவற்றையும் சாட்சியாய்ப் பார்த்து நிற்பவன். - உரையாசிரியர் அண்ணா
நம் ஒவ்வொருவருக்குமென்று ஒரு தனி நாடு இருக்கிறது. அது தான் நமது உடம்பு. - சுவாமி சச்சிதானந்தா

4.ஆணவத்தை ஆண் + அவம் என்று பிரிக்க வேண்டும். „ஆண் அவம்… என்று பலமுறை சொல்லிப் பார்த்தால் நாம் ஆண் என்பது அவமாகும்ƒ வீணாகும் என்பதை அறியலாம் நாம் ஆண் அல்ல, இறைவன் தான் ஆண் என்பதையும் உணரலாம். - சுவாமி சச்சிதானந்தா

5.சத்யகாமன் சரிதை இதற்கு உதாரணம். குருவின் உத்தரவுப்படி மாட்டுக் கூட்டம் ஓராயிரமாக வளரும் வரை மேய்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றையும் சிந்திக்காமல் இருந்த அவனுக்கு, அவன் சிரத்தையே காரணமாகப் பிரம்ம ஞானம் உதித்தது. குருவே அவனைப் பார்த்து, „நீ ஞானியாய் விளங்குகிறாய்ƒ உனக்கு யார் உபதேசித்தது?… எனக் கேட்கிறார். - சாந்தோக்ய உபநிடதம்