Friday 12 October, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 10

Thursday October 11, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 10 அத்தியாயம் பதின்மூன்று

எஸ் மெய்யப்பன்

(முன்னுரை

இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த பகவத்கீதையின் சாரம் அவரது வாழ்க்கையின் மிக முக்கிய எழுத்துச் சாதனை என்றே சொல்லலாம.

அவர் கடந்த ஆண்டு, 2006, டிசம்பர் மாதம் 29ஆம் நாள் இறைவனடி சேர்ந்தாh. அவரது இறுதிச் சடங்கின் போது அதன் இரண்டு அத்தியாயங்களைப் படித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன. அப்போது உறவினர்கள,; நண்பர்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

காரைக்குடியில் பிறந்து சின்னாளப்பட்டியில் வளர்ந்து சென்னையில் உயர் கல்வி கற்று அரசாங்கப் பணியில் மிகச் சிறப்பான காரியங்களைச் செய்து தமிழ்ப்பணியும் ஆற்றியவர் அவா. அவர் தனது எழுத்திறனை வளர்த்ததோடல்லாமல் என்னையும் எழுதத் தூண்டி பயிற்சி அளித்தவா. அவர் இருக்கும் போதே இதை நூல் வடிவமாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன. ஆனால் அதற்கு அவர் ஒப்பவில்லை. அவருக்கு பின இந்த எளிய இனிய நடையில் எழுதப்பட்ட கீதையின் சாரத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதிகமான மக்கள் படிக்கும் செய்தித்தாளிலும, எளிதில் கேட்கும் வகையில் தட்டுருக்களையும் செய்யத் தீர்மானித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன.

அவரது நினைவு நாளுக்கு முன்பாக அதை நூல் வடிவமாகக் கொண்டு வர முயன்று வருகிறேன். அதைச் செவ்வனே செய்து முடிக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.
நன்றி.
சித்ரா சிவகுமார்
ஹாங்காங்)

அத்தியாயம் பதின்மூன்று

N~த்ர N~த்ரக்ஞ விபாக யோகம்

N~த்ரம் என்பது உடல்ƒ N~த்ரக்ஞன் என்பது உயிர்ƒ உடல், இயற்கை, ஆத்மா, பரம்பொருள் ஆகியவற்றின் தன்மைகள் விளக்கப்படுகின்றன.

இதில் 35 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
--------------
அர்ஜுனன்: கேசவா‚ N~த்திரம் என்பது எது? N~த்ரக்ஞன் என்பது எது?

கண்ணன்: உடல் தான் 1சேத்திரம் என்பதுƒ அதில் இயங்கும் அந்த உயிர்தான் N~த்ரக்ஞன்ƒ எல்லா உடல்களிலும் இயங்கும் அந்த உயிர் நான்தான் என்பதை அறிக‚

அர்ஜுனன்: அந்த உடல் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? எத்தகைய மாறுதல்களை அடையக் கூடியது? எங்கிருந்து தோன்றியது? உயிர் என்பது எது? அதன் மகிமை என்ன?

கண்ணன்: சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேள் அர்ஜுனா‚ 2மகா பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், அறிவு, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், உடலின் அமைப்பு, உணர்வுகளின் கூட்டம், உறுதி இவையெல்லாம் குண வேறுபாடுகளுடன் கூடியிருப்பது தான் 3உடல் என்பது. அசையும் பொருள், அசையாப் பொருள் என்ற வகையில் எந்த உயிர் உண்டானாலும், அது உடல், உயிர் இரண்டின் சேர்க்கையால் பிறந்தது என்பதை அறிவாயாக‚

அர்ஜுனன்: ஞானம் என்பது என்ன கண்ணா?

கண்ணன்: உயிரைப் பற்றிய அறிவே ஞானம் என்பது. அகிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, குருசேவை, அடக்கம், உறுதி ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.. அகங்காரம், ஆணவம்4, ஆரவாரம், ஆசையில் பற்றுதல், மனைவி, மக்கள் வீடு இவற்றில் ஒட்டுதல் என்பவற்றைத் துறத்தல்.. பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு இவற்றில் தீமை கண்டு தெளிதல்.. வருவதைக் கண்டு மகிழாமலும் போவதைக் கண்டு கலங்காமலும் சமநிலையில் இருத்தல்.. ஜனக் கூட்;டம் கண்டு வெறுத்தல்.. தனிமையில் இருத்தல்.. ஆத்ம ஞானத்தில் நிலை பெறுதல்.. தத்துவ ஞானப் பலன்களை எண்ணுதல்.. என்னையே சரணடைந்து பக்தியைப் பண்ணுதல் ஆகியவவை அனைத்துமே ஞானம் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் அஞ்ஞானமாகும்.

அர்ஜுனன்: இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது எது?

கண்ணன்: ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருளே இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது‚ அந்தப் பரம்பொருள் உண்டு அல்லது இல்லை என்று சொல்ல முடியாதது. அதுவே உனக்கு சாகாத்தன்மை அளிப்பது. தன்னைத் தாங்குவோர் இல்லாமலே உலகனத்தையும் தாங்கி நிற்பது. அதுவே பொருளைத் தாங்குவது.. அழிப்பது.. மறுபடியும் தோற்றுவிப்பது. குணங்கள் இல்லாமலே குணங்களை அனுபவிப்பது‚ புலன்களில்லாமலே புலன்களின் வேலைகளைச் செய்திடும் அற்புத சக்தி வாய்ந்தது‚ எல்லாப் பொருள்களிலும் அது உள்ளேயும் இருக்கிறது.. வெளியேயும் இருக்கிறது‚ அது கிட்டவும் இருக்கிறது.. எட்டவும் இருக்கிறது‚ அது பிளவு படாதது.. பொருள்களில் பிளவுபட்டது போல காட்சியளிப்பது‚ அது அசையாதது.. அசையவும் செய்வது‚ அது இருளைக் கடந்தது.. ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய்த் திகழ்வது‚ அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளியிருப்பது‚ தலைகளும் முகங்களும்.. கண்களும் காதுகளும்.. கைகளும் கால்களும்.. உலகம் முழுவதும் பரவி நிற்பது‚ நுண்மையிலும் நுண்மையானது‚ அழியாதது‚ அறிவு மயமானது‚ எளிதில் அறிய முடியாதது‚ இது தான் ஞானத்தால் அறியப்பட வேண்டியது‚ ஆத்மாவால் அடையப்பட வேண்டியது‚ இந்தப் பரம்பொருளை அறிந்தவன் அமிர்தத்தையே அருந்தியவனாவான்ƒ அழிவற்ற என் திருவடி மலர்களைப் பொருந்தியவனாவான்.

அர்ஜுனன்: இயற்கை, ஆத்மா இவற்றைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் கண்ணா‚

கண்ணன்: இயற்கை, ஆத்மா இரண்டுமே தொடக்கமற்றவை. மனவேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் இயற்கையில் இருந்தே தோன்றுகின்றன. உடல் தான் அரங்கம்ƒ அதில் நடிக்கும் புலன்களின் இயக்குநர் இயற்கையே‚ இதன் இலாப நட்டங்களை அனுபவிப்பதற்கு மட்டும் ஆத்மா காரணமாகிறது. இந்த ஆத்மாவானது இயற்கையில் கலந்து நின்று, இயற்கையிலிருந்தே தோன்றும் நல்லது கெட்டதை அனுபவிக்கிறது. இந்த ஆத்மாவிற்கு நல்ல பிறப்பு அல்லது கெட்ட பிறப்பு கிடைப்பதற்கு ஆசைகளே காரணமாகின்றன. இவ்விதம் இயற்கையே அனைத்திற்கும் இயக்குநர் என்பதையும், ஆத்மா எதற்கும் காரணம் அல்ல என்பதையும் அறிந்து கொண்டவன் உன்னதமானவன்‚ இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு புரிந்து கொண்டவன், அவன் எந்நிலையிலிருந்தாலும் மறுபிறப்பற்ற பொன் மயமானவன்‚
சிலர் தியானத்தில் பக்குவமுற்ற அறிவால் ஆத்மாவைக் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும் மற்றும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். இது தெரியாத இன்னும் சிலர், 5பெரியோர் சொற்கேட்டு ஆத்மாவைக் காண முயற்சிக்கிறார்கள். காதால் கேட்டதை நம்பிக் காரியத்தில் ஈடுபடும் இவர்களும் கூட மறுபடியும் பிறப்பதில்லை.
இவ்விதம் உடம்பினுள் உயர்ந்து நிற்கும் ஆத்மாவைத் தான் அருகில் நின்று பார்ப்பவன் என்றும், அனுபவிப்பவன் என்றும், அன்பாகத் தாங்குபவன் என்றும், அனுமதி அளிப்பவன் என்றும், ஆள்பவன் என்றும,; அரிய பரமாத்மா என்றும,; பலவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பரமாத்மா உடலுக்குள் உறைந்தாலும் செயலற்றவன்ƒ பற்றற்றவன். இருந்தாலும் எல்லாப் பொருள்களிலும் சமமாக இருப்பவன்ƒ அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவன். அவனை உள்ளது உள்ள படி கண்டு கொண்டவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள மாட்டான். பூதங்கள் அனைத்தும் பரம்பொருளில் அடங்கியிருப்பதையும், அதிலிருந்தே அவை விரிவடைகின்றன என்பதையும் உணர்கின்றவன் பிரம்ம நிலை அடைகிறான்.
எனவே அர்ஜுனா‚ பரந்து விரிந்த ஆகாயம் எவ்விதம் எதிலும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லையோ, அது போல், ஆத்மாவானது தேகத்தில் பரிணமித்திருந்தாலும், அதிலே ஒட்டிக் கொள்வதில்லை. உலகத்தைச் சூரியன் ஒளி பெறச் செய்வது போல், தேகத்தை ஆத்மா ஒளி பெறச் செய்கிறது. இவ்விதம் உடல், உயிர் இரண்டுக்குமுள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்து கொண்டு, உயிரானது உடம்பிலிருந்து விடுதலை பெறுவதை ஞானக் கண்ணால் காணும் சித்தி பெற்றவர்கள் பிரம்மத்தையே அடைகிறார்கள். இத்தத்துவங்கள் மகா முனிவர்களால் பல விதமாகப் பாடப் பெற்றுள்ளன. வேதங்களிலும் பலவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அறிவுக் களஞ்சியமான பிரம்ம சூத்திரங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

(பதின்மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.சேத்திரம் என்றால் வயல் என்று பொருள். வயலைப் போல் கர்மங்களாகிற விதைகள் முளைத்து வளரும் இடம். - உரையாசிரியர் அண்ணா

2.மகாபூதங்கள் ஐந்து: நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம். உணர்வுகள் பத்து: கண், காது, மூக்கு, நாக்கு, கவக்கு முதலிய ஞானேந்திரங்கள் ஐந்தும், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.
சுகங்கள் ஐந்து: ஒளி, ஓசை, சுவை, வாசனை, உணர்வு

3.பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், புத்தி, அகங்காரம் இந்த இருபத்து நான்கின் கூட்டத்தாலும், பிரிவாலும், விகாரத்தாலும் தோன்றுவனவெல்லாம் சேத்திரம். இருபத்து ஐந்தாம் தத்துவம் புருஷன் அல்லது சேத்ரக்ஞன் அல்லது ஆத்மா. புருஷன் இயற்கையுமன்று, காரியமுமன்று. காரணமும் அன்று. எதிலும் பற்றாமல் எல்லாவற்றையும் சாட்சியாய்ப் பார்த்து நிற்பவன். - உரையாசிரியர் அண்ணா
நம் ஒவ்வொருவருக்குமென்று ஒரு தனி நாடு இருக்கிறது. அது தான் நமது உடம்பு. - சுவாமி சச்சிதானந்தா

4.ஆணவத்தை ஆண் + அவம் என்று பிரிக்க வேண்டும். „ஆண் அவம்… என்று பலமுறை சொல்லிப் பார்த்தால் நாம் ஆண் என்பது அவமாகும்ƒ வீணாகும் என்பதை அறியலாம் நாம் ஆண் அல்ல, இறைவன் தான் ஆண் என்பதையும் உணரலாம். - சுவாமி சச்சிதானந்தா

5.சத்யகாமன் சரிதை இதற்கு உதாரணம். குருவின் உத்தரவுப்படி மாட்டுக் கூட்டம் ஓராயிரமாக வளரும் வரை மேய்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றையும் சிந்திக்காமல் இருந்த அவனுக்கு, அவன் சிரத்தையே காரணமாகப் பிரம்ம ஞானம் உதித்தது. குருவே அவனைப் பார்த்து, „நீ ஞானியாய் விளங்குகிறாய்ƒ உனக்கு யார் உபதேசித்தது?… எனக் கேட்கிறார். - சாந்தோக்ய உபநிடதம்

No comments: