Friday 26 October, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 16,17)

Thursday October 25, 2007
பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 11(அத்தியாயம் 16,17)
எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பதினாறு

தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 24 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: தாமரைக் கண்ணா‚ தெய்வ குணங்கள் யாவை?

கண்ணன்: அகத்தூய்மை, புறத்தூய்மை, அஞ்சாமை, ஆசையில்லாமை, ஆத்திரமில்லாமை, தற்பெருமையில்லாமை, வஞ்சகமில்லாமை, சபலமில்லாமை, பழிசொல்லாமை, சினங் கொள்ளாமை, செருக்கில்லாமை, தருக்கி நில்லாமை, வாய்மை, நேர்மை, வலிமை, பொறுமை, மென்மை, இனிமை, உறுதி, துணிவு, அடக்கம், இரக்கம், தியாகம், அகிம்சை, வெட்கம், புகழ், தயை, ஈகை, வேதம் ஓதுதல், வேள்வியைச் செய்தல், ஞானயோகத்தில் நிலையாய் நிற்றல் ஆகியவை தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பான குணங்கள்.

அர்ஜுனன்: அப்படியானால் அசுர குணங்கள் யாவை?

கண்ணன்: பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, 1கோபம், கடுஞ்சொல் அறியாமை ஆகியவை அசுர சம்பத்துடன் தோன்றியவனின் பிறவிக் குணங்கள்.

அர்ஜுனன்: அசுர குணத்துடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

கண்ணன்: அசுர குணத்துடன் பிறந்தவர்களுக்கு சரி எது.. தவறு எது என்பதே தெரியாது. வாய்மையும் தூய்மையும் அவர்களிடம் இருக்காதுƒ உண்மையே உலகில் இல்லை என்பார்கள்ƒ தர்மமே இல்லை என்று கதையளப்பார்கள்ƒ இறைவனே இல்லை என்று குதி குதிப்பார்கள். ஆண் பெண் உறவு தான் உலகின் அடித்தளம் என்று துணிந்துரைப்பார்கள். அவர்களின் பார்வை குறுகலானது. ஆத்ம குணமும் அருமை விவேகமும் அவர்களிடம் துளியும் இருக்காது. அடுத்துக் கெடுப்பார்கள்ƒ அனைவருக்கும் துன்பமே கொடுப்பார்கள். அடங்காத ஆசையுடன் ஆடம்பரமாய் நடிப்பார்கள்ƒ ஆணவம் அகந்தையுடன் வெறி பிடித்துத் துடிப்பார்கள்ƒ அநியாய வரும்படிக்குப் பாடுபடுவார்கள்ƒ ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். காம நுகர்ச்சிகளில் ஈடுபடுவதே இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். இவர்களைப் பிணைத்திருக்கும் ஆசைக் கயிறுகள் நூறு நூறு‚ காம சுகங்களில் ஊறு ஊறு‚ அதற்காகக் காசு பணங்களைச் சேரு சேரு‚ என்றவாறு தாறுமாறாய்த் துள்ளுவார்கள். 2உலகத்தை அழிவு நோக்;கித் தள்ளுவார்கள்.

அர்ஜுனன்: அவர்கள் எப்படிப் பேசுவார்கள்?

கண்ணன்: „இது என்னால் வந்தது‚ என் திறமையே தந்தது‚ இதோ.. என் ஆசை நிறைவேறுகிறது‚ அலை அலையாய்ப் பெருஞ்செல்வம் சேர்கின்றது‚ மலை மலையாய் இன்னும் அது குவியப் போகிறது‚… என்பான் ஒருவன்.

„பகைவனைக் கொன்று விட்டேன்.. எதிரிப்படைகளை வென்று விட்டேன்‚ நானே கொற்றவன்‚ அனைத்தும் பெற்றவன்‚ வலிமையில் சிறந்தவன்‚ இன்பத்தில் மிதப்பவன்‚… என்பான் மற்றொருவன்.

„நான் பணம்; படைத்தவன்‚ உயர் குலத்தில் பிறந்தவன்‚ எனக்கு நிகர் எவனுமே இல்லை‚ யாகங்கள் செய்வேன்.. தானங்கள் செய்வேன்.. மகிழ்ச்சிப் பெருக்கிலே நீந்தித் திளைப்பேன்‚… என்பான் இன்னொருவன்.

இவர்கள் எல்லாம் அறியாமையில் கட்டுண்டவர்கள்‚ தறி கெட்ட எண்ணங்களால் மொத்துண்டவர்கள்‚ மோக வலை தன்னில் வசமாகச் சிக்குண்டவர்கள்‚ 3காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு ஆழ் நரகில் விழ்வதற்கென்றே தம்மை விற்றுக்கொண்டவர்கள்‚ பணத்திமிர், குலத்திமிர், பிடிவாதம், தற்பெருமை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்‚ சாத்திர முறை மீறி ஆடம்பரப் பகட்டுடன் யாகங்கள் செய்வதைப் பற்றிக் கொண்டவர்கள்‚ இதன் மூலம் பூரணத்துவமிழந்து மண்ணுலச்சுகமிழந்து விண்ணுலகப் பலனிழந்து பாவத்தைச் சுற்றிக் கொண்டவர்கள்‚ ஆணவம், பலம், காமம், குரோதம், இறுமாப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, அவர்கள் உள்ளிட்ட அனைவர் மேனியிலும் உறைபவனாகிய என்னை அவமதிக்க கற்றுக் கொண்டவர்கள்‚ இத்தகைய இழிகுணம் கொண்டவர்களை கடை நிலை கண்டவர்களை, அடிக்கடி நான் 4அசுரப் பிறவியிலேயே தள்ளுகிறேன். இந்த மூடப்பதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலைக்கே தள்ளப் படுகிறார்கள்.

அர்ஜுனன்: அப்படியா கண்ணா?

கண்ணன்: அஞ்சற்க பாண்டவா‚ நீ தெய்வ குணங்களுடன் பிறந்தவன்ƒ தெய்வ குணங்கள் சொர்க்கத்தைக் கொடுக்கும், அசுர குணங்கள் பந்தப் படுத்தும்.

நரகத்திற்கு மூன்று வாயில்கள் உண்டு அர்ஜுனா‚ காமம், குரோதம், லோபம் என்பவைதான் அவை. தமோகுண வாயில்களான இம்மூன்றும் ஆத்மாவை அழிப்பவைƒ ஆகவே அவற்றை விலக்கி விட வேண்டும். இதன் மூலமாகத் தான் ஒருவன் தனக்கே நன்மை செய்து கொள்ளுகிறான்ƒ நற்கதியடைகிறான்.

(பதினாறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. கோபம் வந்தவுடனே முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள.; அப்போது நம் முகத்தைப் பார்த்து நாமே வெட்கப்படுவோம். அது அவ்வளவு கோரமாக இருக்கும். கோபம் வந்தால் உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகலாம். அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கலாம்ƒ இதற்கெல்லாம் வாய்ப்பில்லாவிட்டால் ஒன்று, இரண்டு, மூன்று, என்று நூறு வரையில் எண்ணலாம். இதற்குள் நம் கோபம் தணிந்து விடும். கோபத்தின் மூலமாக நன்மையைப் பெறும் திறமையை நாம் அடையும் வரையில் கோபத்திற்கு நாம் ஆளாகக் கூடாது. - சுவாமி சச்சிதானந்தா.

2. கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனம் குவித்து அந்த மகிழ்ச்சியால் கூத்துக்கள் ஆடி கெடு புத்தி உடையோரைக் கூடி - யானும் கெட்டு அலையாமலே கெதி பெற நாடி மாளிகைமேல் வீடுகட்டி-மனை வாழ்வைச் சதமென்று வாழ்கின்ற மட்டி நாளை எமன் வந்து அதட்டிக்-கொண்டு நடப்பான் என்று அறியானை அருப்பதை வெட்டி இரக்கத் துணிந்து கொண்டேனே எனக்கு இருக்கும் குறைமுழுதும் நிகழ்த்திக் கொண்டேனே‚ - குணங்குடி மஸ்தான்

3. நொங்கும் நுரையுமாகப் பொங்கும் -காமக்கடலுள் முங்கும் பாவி உடலைச் சொங்கும்-சொரி சிறங்கும் வங்கும் நமநமென்று திங்கும்-நரம்புந்தோலும் தொங்கும் மினுமினுப்பு மங்கும்- இல்லந் துறந்த சிங்கங்கட்கு இல்லை காணும் பங்கம்-மேனி உயர்ந்த தங்க மயமாய் நின்று இலங்கும்-அவர்கட் கன்றோ தங்கும் சாயுச்ய பதம் தங்கும் - நமக்கும் அதில் பங்கும் தந்து உதவி, பராபரம் அருள் இறங்கும். - குணங்குடி மஸ்தான்

அத்தியாயம் பதினேழு

சித்ராத்ரய விபாக யோகம்

சித்ராத்ரயம் என்றால் நம்பிக்கை என்று பொருள். சாத்விக, ராஜச, தமச குணபேதங்களுக்கு ஏற்றபடி, நம்பிக்கையும் மூன்று வகைப்படும்.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: ஒரு சந்தேகம் கண்ணா‚ சாத்திர முறை மீறி யாகம் செய்வது தவறு என்றாய்‚ அவ்விதம் செய்பவன் உண்மையான நம்பிக்கையுடன் செய்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு எந்த நிலை கிட்டும்? சத்துவ நிலையா? ரஜோ நிலையா? தமோ நிலையா?

கண்ணன்: ஆசையும் பற்றும் வலுத்தவர்களாய்.. அகங்காரமும் பகட்டும் கொண்டவர்களாய், சில அறிவிலிகள் தங்கள் உடலையும் அதற்குள் உறையும் என்னையும் 1வருத்திக் கொண்டு, சாத்திரத்திற்கு உட்படாத கொடுந்தவம் புரிகிறார்கள்ƒ அவர்கள் அசுரகுணம் படைத்தவர்கள்.
அர்ஜுனா‚ இயல்பாகவே மனிதன் நம்பிக்கை மயமானவன். அந்த நம்பிக்கை சாத்விகி, ராஜசி, தாமசி என்று மூன்று வகைப்படும்ƒ அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடிதான் இந்த நம்பிகைகள் அமைகின்றன. சாத்விக நம்பிக்கை கொண்டவர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்ƒ ராஜச நம்பிக்கை கொண்டவர்கள் அரக்கர்களை வழிபடுகிறார்கள். தாமச நம்பிக்கை கொண்டவர்கள் மூதாதயர்களையும் பூதகணங்களையும் வணங்குகிறார்கள்.

இது போல் அனைவருக்கும் விருப்பமான 2உணவும் மூன்று வகைப்படும். அவற்றின் பேதா பேதங்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள்‚

ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், இன்பம், இவை வளர்ப்பவை, சாறுள்ளவை, பசைக் கூறுள்ளவை, மனதுக்கு இதம் அளிப்பவை போன்ற மதுர உணவுகள் சாத்விகர்களுக்கு விருப்பமானவை. கசப்பானது, புளிப்பானது, உவர்ப்பானது, மிதச்சூடானது, காய்ந்து போனது, காரம் மிகுந்தது, எரிச்சல் தருவது, பசி எடுக்காமல் தடுப்பது, துக்கம் துயரம் நோய் இவற்றைக் கொடுப்பது என்ற வகையான உணவுகள் ரஜோ குணத்தினருக்குப் பிடித்தது. நாளுற்றது, வற்றிச் சுவையற்றது, பழையது, எச்சிலானது, கெட்டுப்போனது, நாற்றமடிப்பது இந்த வகை உணவுகள் தாமச குணத்தார் விரும்பி உண்பது.

இது போல் யாகமும் மூன்று வகைப்படும். பலன் கருதாமல், „யாகம் செய்வது கடமை… என்ற ஒரே எண்ணத்தில் சாத்திர முறைப்படி செய்யும் யோகம் சாத்விகமானது. பலன் கருதிப் பகட்டாகச் செய்யப்படும் யாகம் ராஜசமானது. அன்னதானம் செய்யாமலும், தட்சனை வைக்காமலும், மந்திரங்கள் ஓதாமலும், அக்கறை இல்லாமலும் வேதநெறி தவறி செய்யப்படும் யாகம் தாமசமானதாகும்.

இது போல் தவமும் மூன்று வகைப்படும். மனம் தெளிந்திருத்தல், மவுனமாய் இருத்தல், மனத்தை அடக்குதல், சாதுவாய் இருத்தல், ஆத்மா ஒன்றையே சிந்தனையில் நிறுத்தல் என்ற மனத்தவமும்... இனிமையாய்ப் பேசுதல், உண்மையே உரைத்தல், நயம்பட நன்மையே பகர்தல், வேதம் ஓதுதல் என்ற வாக்கு தவமும்.. தேவர், பிராமணர், ஆசாரியர் மற்றும் ஞானியரை வழிபடல், புனித நீராடல், அஹிம்சை, நேர்மை, பிரம்மச்சரியம் மேற்கொள்ளல் என்ற சரீரதவம் என்ற மூன்றையும் பலன் கருதாமல் பக்தியுடனும் அக்கரையுடனும் செய்யும் போது, அது சாத்விக தவம் எனப்படும். பாராட்டும் பெருமையும் போற்றுதலும் பெறப் பகட்டாகச் செய்யப்படும் தவம் ராஜச தவம் எனப்படும். மற்றவர்களை அழிப்பதற்கென்றே உடம்பை வருத்திச் செய்யப்படும் மூடத்தனமான தவம் தாமசத்தவம் எனப்படும்.

இது போல் தானங்களும் மூன்று வகைப்படும். தனக்கு எந்த உதவியும் செய்யாதவனுக்கு பலன் கருதாமல் காலம், இடம், நடத்தை அறிந்து கொடுப்பது சாத்விக தானம். கைம்மாறு கருதியும், 3பலன் எதிர் நோக்கியும், மனம் வருத்தியும் கொடுப்பது ராஜச தானம். தகாத நேரத்தில், தகாத இடத்தில் தகாதவர்களுக்கு மரியாதையின்றி அலட்சியமாக செய்யப்படும் தானம் தாமச தானம்.

அர்ஜுனன்: அவ்விதமானால் கண்ணா.. இப்போது சொன்ன தானம், தவம், வேள்வி இம்மூன்றையும் எவ்விதம் தொடங்கவேண்டும்?

கண்ணன்: பரம்பொருளான பிரம்மத்திற்கு 4ஓம், தத், சத் என்று மூன்று பெயர்கள் உண்டு. இதைக் கொண்டுதான் முன்பு பிராமணர்களையும், வேதங்களையும், வேள்விகளையும் நான் தோற்றுவித்தேன். ஆகவே வேதம் அறிந்தவர்களால் வேத முறைப்படி செய்யப்படும் வேள்வி, தவம், தானம் ஆகிய மூன்றும் ஓம் என்று சொன்ன பிறகே தொடங்குகின்றன. பலன் கருதாமல் சொர்க்கத்தை நாடும் உத்தமர்கள் தத் என்று சொன்ன பிறகே அந்த முச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நன்மை, உண்மை என்று இருபொருள் கொண்ட சத் என்ற சொல் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வேள்வி, தவம், தானம், இவற்றில் நிலைத்திருக்கும் சொல் சத் எனப்படும்ƒ அது தொடர்பான மற்ற செயல்களும் கூட சத் என்றே சொல்லப்படும். அக்கரை இன்றி செய்யப்படும் வேள்வியும், தவமும், தானமும் அசத் எனப்படும். அது இக வாழ்விலும் உதவாது, பரலோகத்திலும் பயன்படாது.

(பதினேழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.ஆன்மிக சாதனை என்னும் புனிதமான பெயரால் நாம் நம் உடலை வீணாக வருத்திக் கொள்ளக் கூடாது. தீ மிதித்தல், உடலில் வேல்குத்திக் கொள்ளுதல், சவுக்கால் அடித்துக் கொள்ளுதல் முதலியவற்றால் சிலர் தங்களைத் துன்புறுத்திக் கொள்ளுகிறார்கள். இறைவன் நமக்கு உடம்பைக் கொடுத்திருப்பது இவ்வாறு வருத்திக் கொள்வதற்காக அல்ல. நல்ல காரியங்களுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார். - சுவாமி
சச்சிதானந்தா

2.உணவு உடம்பை மட்டும் உருவாக்கவில்லை. மனதையும் அதுவே உருவாக்குகிறது. எனவே மக்கள் வாழ்க்கையில் உணவு மிகவும் முக்கியமானது. - சுவாமி சச்சிதானந்தா

3.விண்ணுலகப் புண்ணியம் கருதி, தானம் செய்பவர் „அறவிலை வணிகர்… என்பது தமிழ் மரபு. இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன். - புறநானூறு

4.ஓம் என்பது அகிலாண்ட ஓசையின் தொகை.
-------------------------------------------------------------------------------

No comments: