Wednesday, 7 November 2007

திண்ணை கட்டுரை by நரேந்திரன் - மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகமும் இஸ்லாமும்

Thursday November 1, 2007

மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்

நரேந்திரன்

"In a time of universal deceit, telling the truth is a revolutionary act."
- George Orwell

ஆம். மேற்கத்திய உலகம் தேய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக. தேய்வது நிலப்பரப்பில் அல்ல. மக்கள் தொகையில். இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1970 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையானது, 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் மேற்குலகில் ஏற்பட இருக்கும் அல்லது ஏற்படத் துவங்கி இருக்கும் புவியியல் மற்றும் சமுதாய ரீதியிலான மாற்றங்களின் தாக்கம் அச்சமூட்டும் வகையில் அமைந்திருக்கருக்கின்றது. எனவே அது குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமே.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத வகையில் இந்த நூற்றாண்டில் பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றது மேற்கத்திய உலகம்.

அமெரிக்காவைத் தவிர்த்து அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதனை வைத்து இதனைத் தீர்மானிக்கையில், கிரீஸின் மக்கள் தொகைப் பெருக்கம் 1.3, இத்தாலி 1.1, ஸ்பெயின் 1.1, அமெரிக்கா 2.1, ரஷ்யா 1.14 என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றைய கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் முதியவர்களே. 2050 ஆம் வருடத்திற்குள் 60 சதவீத இத்தாலியர்களுக்கு பெற்றோரைத் தவிர வேறு உறவினர்களே இருக்க மாட்டார்கள் என்பது ஆச்சரியச் செய்தி. இன்னும் முப்பதாண்டுகளில் சகோதர, சகோதரி, மாமன், அத்தை, சிற்றப்பன் என்ற உறவுகள் அனைத்தும் இழந்திருப்பார்கள் இத்தாலியர்கள். அந்த அளவிற்கு இத்தாலிய மக்கள் தொகை படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். ரஷ்யாவின் நிலைதான் இதில் மிகவும் மோசமானது. லெனின் தள்ளிவிட்டுச் சென்ற மார்க்ஸியப் படுகுழியிலிருந்து இன்னும் ரஷ்யர்களால் மீளமுடியவில்லை. வறுமையும், விபச்சாரமும், போதை மருந்துக் கலாச்சாரமும் இன்றைய ரஷ்யாவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் 140 மில்லியன் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் மிக அதிக கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் ரஷ்யப் பெண்களே. நாட்டின் எல்லைகளைக் காக்கப் போதுமான ராணுவ வீரர்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. அதன் 83 குடியரசுகளில், 61-இல் இதே நிலைமைதான். அதற்கு மாறாக 12 இஸ்லாமியக் குடியரசுகளில் மக்கள் பெருக்கம் க்ட்டுக்கடங்காமல் பெருகி வருவது கவனிக்கத்தக்கது.

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் ஜெர்மனிய மக்கள் தொகை நம்பவே முடியாத அளவிற்குச் சரிந்து விட்டது. உதாரணமாக, சில ஜெர்மானிய சிறு கிராமங்களில் வடிகால் (sewer system) இயக்கம் முற்றிலும் இயங்குவது நின்று போகும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. காரணம், பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பைப்புகள் கொண்ட வடிகால் சரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் அதனைத் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். அதன் மூலம் தேவையான அழுத்தம் பெறப்பட்டு, கழிவு நீர் தங்கு தடையின்று வடிந்து செல்லும். உபயோகிப்பாளர்கனின்றி சீரழிந்து கிடக்கும் வடிகால்களை தொடர்ந்து இயக்கும் பொருட்டு, பெரிதான பைப்புகளை அகற்றி, சிறிய பைப்புகள் அமைக்கும் பணியினை ஜெர்மனிய அரசாங்கம் பல பில்லியன் டாலர்கள் செலவில் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை ஓரளவு உணரலாம்.

ஆசிய நாடுகள் பலவற்றிலும் மக்கள் பெருக்கம் குறைந்து வருகிறது. ஜப்பானின் பெரும்பான்மை மக்கள் முதியோர்களே. 1970-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஜப்பானியப் பெண்களில் 51 சதவீதத்தினர் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதால் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருக்கின்றது அங்கே. 2050-இல் சீனர்களில் பெரும்பான்மையோர் முதியோர்களே. இந்திய நடுத்தர வர்க்கமும் தன் பங்கிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தே வருகிறது என்பது நாம் அறிந்ததே.

இன்றைய ஐரோப்பிய மக்கள் தொகைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டுமெனில், பிற நாடுகளிலிருந்து மக்களை குடியமர்த்தச் செய்வதே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஒவ்வொரு வெற்றிகர நாட்டிற்கும் மனிதச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக நுகர்வோர், அதிக உற்பத்தி. அதிக உற்பத்தி, அதிக வேலை வாய்ப்பு. அதிக வேலை வாய்ப்பு உறுதியான பொருளாதாரத்திற்கு அடிப்படை. எனவே மக்கள் தொகை குறைந்து வருவதால் கவலை கொள்ளும் நாடுகள், குடியேற்றங்களை அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு அவ்வாறு குடியேறுபவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.

ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் அதே சமயம், இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இன்னொரு விதமாகக் கூறுவதென்றால், ஒப்பீட்டளவில், 1970களில் இஸ்லாமிய நாடுகளை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்த மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை, 2000-ஆம் வருடம் அதே இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாகக் குறைந்து விட்டது. பதினைந்து வயதிற்கும் குறைவானவர்கள் ஜெர்மனி 14 சதமும், இங்கிலாந்து 18 சதமும், அமெரிக்கா 21 சதமும் இருக்கிறார்கள். அதே சமயம் சவூதி அரேபியாவில் 39 சதம், பாகிஸ்தானில் 40 சதம், ஏமனில் 47 சதம் பேர் இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்காவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உண்மையே. கடந்த இருபது ஆண்டு காலங்களில், இந்நாடுகளுக்கு குடியேறும் இஸ்லாமிய மக்களின் சதவீதம் மிகவும் அதிகரித்திருக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக குடியேறுபவர்கள் இவர்களில் அதிகம் பேருண்டு. உலகில் இருக்கும் நாற்பத்தாறு இஸ்லாமிய நாடுகளில், மூன்றே மூன்று நாடுகளைத் தவிர பிற நாடுகளில் சர்வாதிகாரிகளால் நசுக்கப்படும் முஸ்லிம்கள், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் குடியேற்றச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி அங்கு குடியேறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்றைக்கு இருபது மில்லியன் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். அரசாங்கக் கணக்கு அது. அன்-அ·பிசியலாக இன்னும் அதிகம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இருபது மில்லியன் என்பது டேனிஷ், ஐரிஷ், பெல்ஜியன் மற்றும் எஸ்டோனிய ஜனத்தொகையின் மொத்த கூட்டுத் தொகைக்கும் ஈடானது.

டென்மார்க்கில் மட்டும் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ரோட்டர்டாம் நகரின் மொத்த ஜனத்தொகையில் 40 சதவீதம் முஸ்லிம்களே. ·பிரான்ஸ்சின் நகரப்பகுதிகளில் 30 சதவீதம் முஸ்லிம்கள். இன்னும் பல ·பிரான்சின் சிறு நகரங்களில் 45 சதவீதம் வரை முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பெல்ஜியத்திலும், ஆம்ஸ்டர்டாமிலும், இங்கிலாந்திலும், மால்மோவிலும் சிறுவர்களுக்கு வைக்கப்படும் அதிகபட்சப் பெயர் "மொஹம்மது" என்பது குறித்து நாம் ஆச்சரிப்பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பிய ஜனத்தொகை முதிர்ச்சியடைந்து குறைந்து வரும் வேளையில், பெருகும் இளம் முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை பல மடங்கு அதிகரிது வருகிறது.

***

கிறிஸ்தவ Europe இஸ்லாமிய Eurobia ஆக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நம்பத் தகுந்த சூழ்நிலை நிலவுகிறது அங்கே. எந்த ஐரோப்பிய நாடு முதலில் இஸ்லாமிய நாடாகும் என்பதுதான் கேள்விக்குறி. முதலில் அல்பேனியா. அடுத்ததாக ·ப்ரான்ஸ். பின்னர் இங்கிலாந்து.. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி...?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில், இன்றைக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மயமாவதிலிருந்து மயிரிழையில் ஐரோப்பா தப்பியிருப்பது தெரிய வரும்.

AD 732, அக்டோபரில் மூரிஷ் ஜெனரல் (Moorish) அப்த்-அல்-ரஹ்மானின் தலைமையிலான இஸ்லாமியப் படை, ஜிப்ரால்டரின் வடக்கே ஆயிரம் மைல்கள் வரை முன்னேறியது. மூர்க்கத்தனமாக போர் புரிந்த இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்கத் திராணியற்ற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்தன. ஸ்பெயினையும், ·பிரான்ஸ்சின் தென்பகுதியையும் கைப்பற்றிய அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை, பாரிஸ் நகருக்கு ஏறக்குறைய இருநூறு மைல்கள் தொலைவில் இருக்கும் லோய்ர் (Loire) நதிக்கரையை வந்தடைந்தது. ·ப்ரான்சைச் சேர்ந்த சார்ல்ஸ் ·ப்ரான்கிஷ் (Charles Frankish) என்பவர் தலைமியிலான ஐரோப்பிய கிறிஸ்தவப் படையினர், இன்றைய ·ப்ரான்சின் பொய்ட்டியர்ஸ் (Poitiers) மற்றும் டூர்ஸ் (Tours) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படையினரை எதிர்த்து நின்றார்கள். ஒரு வார காலம் நிகழ்ந்த கடுமையான போரின் போது பிற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளைப் போலப் பின்வாங்கி ஓடாமல் ·ப்ரான்கிஷின் படையினர் எதிர்த்து நின்றார்கள். ஜெனரல் அப்த்-அல்-ரஹ்மான் கொல்லப்பட, இஸ்லாமியப்படை பின் வாங்கிச் சிதறியோடியது.

பொய்ட்டியர்ஸ் போர் ஐரோப்பாவின் திருப்பு முனை எனலாம். அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை இப்போரில் வென்றிருந்தால் ஐரோப்பாவின், ஏன் உலகின் தலையெழுத்தே வேறாக இருந்திருக்கக் கூடும். பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதற்கும் மேலாக ரைன் நதியையும் தாண்டிச் செல்லவே அப்த்-அல்-ரஹ்மான் முயன்றிருப்பார் என நம்பலாம்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்றைய நடைமுறைகளைப் போலல்லாமல், ஆக்ஸ்·போர்டிலும் மற்ற ஐரோப்பிய பல்கலக்கழகங்களிலும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறித்த பாடங்களை மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ மதம் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கலாம். ஐரோப்பாவிலிருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்கா சென்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருப்பார்கள். ஒசாமா பின்-லேடன், கலீ·பா பின்-லேடனாகி இருக்கலாம். 911 தவிர்கப்பட்டிருக்கக் கூடும்... இத்தியாதி. இத்தியாதி. எக்ஸெட்ரா. எக்ஸெட்ரா. இன்ன பிற.

எதிர் வருக் காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாகும் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகயம் தொட அனுமதிக்கப்படுமா அல்லது இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான அரசாங்கம் அமையுமா என்பது யோசிக்கச் சுவராசியமான விஷயங்களே.

எனக்கென்னவோ இரண்டாவதுதான் நிகழும் என்று தோன்றுகிறது.

அதற்கு ஆதாரமாக இரண்டு உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறேன். முதலாவது இங்கிலாந்திலிருந்து. இரண்டாவது அமெரிக்காவிலிருந்து.

இங்கிலாந்தில் வசிக்கும் முப்பத்து ஒன்பது வயதான இஸ்லாமியத் தலைவர் அன்ஜம் சவுதிரி. நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த 911 தாக்குதலை "அற்புதம்" என்று வர்ணித்த அவர், அத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை "ஹீரோக்கள்" என்றார். இலண்டனில் நடந்த ட்யூப் ரயில் தாக்குதலை ஒரு பெரும் வெற்றியாக அறிவித்ததுடன், அத்தாக்குதல் குறித்து இங்கிலாந்து போலிசாரும், அரசாங்கமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர்.

அன்னார் அன்ஜம் சவுதிரியின் இலட்சியம், இங்கிலாந்தில் இஸ்லாமிய ஷரியா ஆட்சி கொண்டு வருவது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. சவுதிரியும் அவரது மனைவியும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் (கணிசமான தொகை என்பதனை விளக்க வேண்டியதில்லை!). அதாவது, மேற்கில் புலம் பெயர்ந்த பெரும்பாலான, கல்வித் திறமைகள் அற்ற பெரும்பாலான முஸ்லிம்களைப் போலவே அவர் அலுவலகப் பணியோ அல்லது வேறு உபயோகமான பணியோ என்றும் எதுவும் செய்வதில்லை. அப்படியாகப்பட்ட அவரை BBC-யில் பேட்டி கண்டார்கள். பேட்டி எடுத்த மகானுபாவர் அவரிடம், "Why don't you move to some other country where islamic sharia is already in place?" எனக் கேட்டு வைக்க, அதற்கு திருவாளர் சவுதிரி அளித்த பதில் உலகப் பிரசித்தமானது.
"Who says you own Britain? Britain belongs to Allah! The whole world belongs to Allah! If I go to the jungle, I'm not going to live like the animals. I'm going to propogate a superior way of life. Islam is the superior way of life!" என்று ஒரு போடு போட்டர். பேட்டி எடுத்தவர் அனேகமாக ஒரு இங்கிலாந்து "காட்டுவாசி"யாகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் நிலை குறித்து நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது உதாரணம் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் சிறுவர் பள்ளி (கிண்டர் கார்டன்) ஆசிரியையான நஸ்ரா குரேஷியினுடையது. ஆங்கிலத்தில் அளிப்பதே சாலப் பொருத்தம் ஆதலால் அதனை மொழி பெயர்க்க முற்படவில்லை. Lansing State Journal பத்திரிகையிலிருந்து இது. இனி நஸ்ரா,

........ Islam is the guide of humanity, for all times, until the day of judgement. It is forbidden in Islam to convert to any other religion. The penalty is death. There is no disagreement about it.
Islam is being embraced by people of other faiths all the times. They should know they can embrace Islam, but cannot get out. This rule is not made by Muslims; It is the supreme law of God.
Please do not ask us Muslims to pick some rules and disregard other rules. Muslims are supposed to embrace Islam in its totality....

அ·ப்கோர்ஸ் இது மெஜாரிடி முஸ்லிம்களின் பார்வையில்லை. குறைவான முஸ்லிம்களே இத்தகைய மனோபாவம் உடையவர்கள் என்று நம்புவோமாக.

Peace be upon you.

ஆதாரம் : "America Alone - The end of the world as we know it" by Mark Steyn.

Tuesday, 6 November 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 12(அத்தியாயம் 18)

Thursday November 1, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 12(அத்தியாயம் 18)

எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பதினெட்டு

மோட்ச சந்நியாச யோகம்

சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான்;. செயல்களைத் துறப்பது சந்தியாசம்ƒ செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம்.

இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: 1கேசி என்ற அரக்கனை அழித்த 2நீண்ட கைகளையுடைய கண்ணா‚ சந்நியாசம், தியாகம் ஆகியவற்றின் உண்மைப் பொருளைத் தனித்தனியே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

கண்ணன்: பலன் 3கருதிச்செய்யும் செயல்களைத் துறப்பது சந்நியாசம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்தச் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் சொல்லுகின்றனர். ஆசை முதலியவற்றை விட்டுவிடுவதைப் போல், செயல்களையும் துறந்துவிடவேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களை விடக்கூடாது என்கின்றனர்.

வேள்வி, தானம், தவம் ஆகிய மூன்று செயல்களையும் விடாமல் செய்தே தீர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். விதிக்கப்பட்ட செயலை விட்டுவிடுவது முறையற்றது. ஏனெனில் இச்செயல்கள் தான் அறிஞர்களைத் தெளிய வைத்துத் தூய்மைப்படுத்துகின்றனƒ ஆனால் அவர்கள் அவற்றைச் செய்யும்போது பலன்களில் பற்றைத் துறந்து செய்யவேண்டும்.
பாரதச் செல்வனே‚ இந்தத் தியாகத்தைப் பற்றிய எனது கொள்கை என்ன என்பதைக் கேள்‚ தியாகம் மூன்று வகையானது. விதிக்கப்பட்ட செயலை மதிமயக்கத்தால் துறப்பது4 தாமசத் தியாகமாகும். உடல் வருந்தப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதனால் உண்டாகப்போவது துன்பமே என்ற விரக்தியாலும் ஒருவன் செயலிழந்து நின்றால், அது ராஜசத் தியாகமாகும். அதற்கான பலன் அவனுக்குக் கிட்டாது. செய்யுந் தொழிலே கடமை என்றெண்ணிச் செயல்படும்போது பலன்களின் மேல் பற்றைத் துறந்துவிடுவது சாத்விக தியாகமாகும். சத்வகுணம் நிறைந்து புத்தியில் சிறந்தவன், ஒரு தொழில் நல்லது என்று அதை நாடுவதும் 5இல்லை.. தீயது என்று அதைவிட்டு ஓடுவதும் இல்லை. உடலெடுத்தவன் எவனும் செயல்களை அறவே விட்டுவிட முடியாது. ஆனால்.. அதனால் வரும் பலாபலன்களைத் துறந்துவிட முடியும். அத்தகையவனே உண்மையான தியாகி. இத்தகைய தியாகிகள் அல்லாதவர்கள் இறந்த பிறகு 6இனியது, இன்னாதது, இரண்டும் கலந்தது என்ற பலன்களை அடைவார்கள். ஆனால்.. உண்மைத் தியாகிகளுக்கு அது இல்லை. இனி சந்நியாசத்தைப் பற்றி விளக்குவேன் அர்ஜுனா‚


சந்நியாசம் பூண்டு எதிலும் பற்றினை நீக்கி, ஆசையைப் போக்கி மனத்தை வெற்றி கொண்டவன், இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற 7நிஷ்காமிய கருமா எனும் உயர்ந்த நிலையடைகிறான். இவ்விதம் உயர்நிலை அடைந்தவன் ஞானத்தின் கொடுமுடியாகிய பிரம்மத்துடன் எவ்வாறு இணைகிறான் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
அவன் அறிவின் தூய்மையாலும், மனத்தின்மையாலும் தன்னையே அடக்கிவிடுகிறான்‚ ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன் சுகங்களையும் ஒடுக்கி விடுகிறான்‚ விருப்பு வெறுப்புகளைக் கடந்துவிடுகிறான்‚ தனிமையில்;; இருக்கிறான்‚ கொஞ்;சமாய் உண்கிறான்‚ மனம், மொழி, மெய்யினை அடக்கி தியானத்தில் திளைக்கிறான்‚ வைராக்கியம் என்ற வாளை எடுத்து அபிமானம், அகந்தை, ஆணவம், காமம், மோகம், கோபம் ஆகியவற்றை வெட்டிச் சாய்க்கிறான்‚ தனது என்ற எண்ணம் நீங்கி 8அமைதியில் பாய்கிறான்‚ முடிவில் பிரம்மத்தில் தோய்கிறான்‚ இத்தகைய உத்தமனின் உள்ளம் தெளிந்து விடுகிறது‚ கவலை மறைந்துவிடுகிறது‚ ஆசை அழிந்து விடுகிறது‚ எல்லா உயிர்களும் சமமே என்ற எண்ணம் தோன்றி விடுகிறது‚ அவனுடைய உயர்ந்த பக்தி என்மேலேயே ஊன்றிவிடுகிறது‚ இதனால் „நான் யார்.. எவ்வளவு பெரியவன்?… என்பதைப் பூரணமாய் அறிந்து கொள்ளுகிறான்‚ இவ்விதம் உள்ளது உள்ளபடி 9என்னை அறிந்து கொண்ட பிறகு என்னுடனேயே கலந்து விடுகிறான்‚

நன்கு சித்தாந்தம் செய்யப்பட்டுள்ள சாங்கிய10 சாத்திரத்தின்படி, ஒரு செயல் நிகழ்வதற்கு ஐந்து காரணங்கள் இருந்தாக வேண்டும். இடம், இயங்கும் மனிதன், அவனது செயல்கள், செயலுறும் கருவிகள், அதற்கும் மேல் ஐந்தாவதாக இறையருள் தேவை. மனம், வாக்கு, காயங்களால் மனிதன் நல்லது கெட்டது எது தொடங்கினாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாகும். அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்றும் செயல் செய்யத் தூண்டுகின்றன. கருவி, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் செயலை முடித்து வைக்கின்றன. இதையறியாமல் எதையும் „நானே செய்தேன்‚… என்பவன் பக்குவமடையாத மூடனாவான். ஆகவே அர்ஜுனா‚ அகந்தையை மறந்தவன், பற்றினைத் துறந்தவன் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் பாவம் அவனைப் பற்றாது என்பதை அறிவாயாக‚

அறிவு, செயல்,அதைச் செய்பவன் என்ற மூன்றும் கூட குணவேறுபாடுகளால் மூன்று வகைப்படும் என்று சாங்க்கிய11 சாஸ்திரம் விளக்குவதையும் இப்போது சொல்லுகிறேன் கேள்.
வேறு வேறாய்ப் பிரிந்து நிற்கும் அனைத்து உயிர்களிலும் பிரிவற்றதும், அழிவற்றதுமான ஒரே ஆத்மாவைக் கண்டு கொள்ளும் அறிவு சாத்விக அறிவு. அனைத்து உயிர்களையும் வேறு வேறாகப் கண்டு அவற்றில் உறையும் ஆத்மாக்களும் வேறு வேறானவை என்று கருதும் அறிவு ராஜச அறிவு. நிகழ்த்தும் செயலே எல்லாப் பலன்களையும் கொடுத்துவிடும் என்றெண்ணி அதுவே கதியெனக் கிடப்பதும், காரணமற்றதும், கடுகிலும் சிறியதும், உண்மையில் வறியதுமான அறிவு தாமச அறிவு.

நித்தியமென்று விதிக்கப்பட்ட சத்தியச் செயலை, பலன்களைவிட்டு, பற்றினைச் சுட்டு;, விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் அது சாத்விகச் செயல். அகங்காரச் சித்தனாலும் பலன் கருதும் பித்தனாலும் மிகுந்த ஆயாசத்துடன் செய்யப்படும் செயல், ராஜசச் செயல். வினையின் விளைவையும், வீண் பொருட் செலவையும், செய்பவன் பலத்தையும், மற்றவர் நலத்தையும் எண்ணிப் பார்க்காமல் செய்யும் செயல் தாமசச் செயல்.

பக்குவ மனத்துடன் பற்றினை வென்றவன், உறுதியின் உச்சியில் ஊக்கமாய் நின்றவன், உற்சாகத்தை உடமையாய்ப் பெற்றவன், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவன் சாத்விகன் எனப்படுவான். பலாபலன்களில் பற்றினை வைத்தவன், பணம் என்னும் பேயைப் பற்றிப் பிடித்தவன், தொல்லைகள் பிறர்க்குக் கொடுக்கத் துடிப்பவன், சுத்தமென்பதை அறவே துடைத்தவன், அழுகையும் சிரிப்பும் ஒருங்கே படைத்தவன் ராஜகன் எனப்படுவான். பரபரப்பானவன், பக்குவமற்றவன், முரடன், திருடன், மோசக்காரன், துக்கம் நிறைந்தவன், சோம்பலில் உறைந்தவன் தாமசன் எனப்படுவான்.

இது போலவே அர்ஜுனா12.. சத்வம் முதலிய குணவேறுபாடுகளுக்கு ஏற்ப புத்தியும், துணிவும் மூன்று வகைப்படும். மேலும் துக்கத்தை வீழ்த்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பயிற்சியால் கிடைக்கும் சுகமும் கூட மூன்று வகைப்படும். இவை பற்றி இப்போது விளக்கிக் கூறுவேன்‚
செய்யத்தக்கது, செய்யத் தகாதது.. அஞ்சத்தக்கது, அஞ்சத்தகாதது.. நாடத்தக்கது நாடத்தகாதது.. கூடத்தக்கது, கூடத்தகாதது.. பந்தத்தில் சிக்க வைப்பது, சொர்க்கத்தில் சொக்க வைப்பது என்பவற்றை பகுத்தறியக் கூடியது சாத்விக புத்தியாகும். தர்மத்தையும் தாறுமாறாகப் புரிந்து கொள்வது ராஜச புத்தியாகும். அதர்மத்தையும்.. தக்கதையும், தகாததையும் அறியாமைச் சேற்றில் சிக்கி, தர்மத்தையே அதர்மமாகவும், அதர்மத்தையே தர்மமாகவும் ஏறுமாறாகப் புரிந்து கொள்ளுவது தாமச புத்தியாகும்.

யோகத்தினால் கைகூடி வந்த எந்தத் துணிவால் உயிரையும், புலன்களையும் மனமானது அடக்கியாள்கிறதோ, அதற்குச் சாத்விகத் துணிவு என்று பெயர். பற்று மிகுதியால் பலனை எதிர்பார்த்து எந்தத் துணிவு அறம், பொருள், இன்பங்களைப் பேணிக்காக்கிறதோ அதற்கு ராஜசத் துணிவு என்று பெயர். தூக்கத்தையும், ஏக்கத்தையும்.. தொல்லை கொடுக்கும் துயரத்தையும்.. 13அச்சத்தையும் ஆணவத்தையும் விடாமல் பிடிக்கும் மூடனின் துணிவுக்கு தாமசத் துணிவு என்று பெயர்.

முதலில் நஞ்சுபோல் கசக்கும்.. முடிவில் அமுதம்போல் இனிக்கும்ƒ புத்தித் தெளிவினால் கிடைக்கும் இந்தச் சுகமே சாத்விக சுகமாகும். பொறி புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமுதமாய் இனித்து முடிவில் கசக்கும் சுகமே ராஜச சுகமாகும். முதலிலும் முடிவிலும் மயங்கச் செய்து.. மறதியிலும், சோம்பலிலும், தூக்கத்திலும் பிறக்கும் சுகமே தாமச சுகமாகும்.
இதுவரை நான் விளக்கிக் கூறியதுபோல் இயற்கையான இம்முக்குணங்கள் இல்லாத உயிர்கள், மண்ணுலக மனிதர்களிலும் சரி.. விண்ணுலக தேவர்களிலும் சரி.. இல்லவே இல்லை. இவ்விதம் அவரவரிடம் இயல்பாய்த் தோன்றும் குணங்களுக்கு ஏற்றபடி தான் பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர், என்ற செயற் பாகுபாடுகள் 14வகுக்கப்பட்டுள்ளன.


மனத்தை அடக்குதல், புலன்களை மடக்குதல்.. தவப்பணி ஆற்றுதல், ஆத்திகம் போற்றுதல்.. தூய்மை, பொறுமை, நேர்மை முதலிய குணங்களைப் பூணுதல்.. அனுபவம், ஞானம் ஆகியவை காணுதல்;15 பிராமணருக்கு இயல்பான தொழில்கள். ஆண்மையும், வீரமும், உறுதியும், துணிவும்.. ஈகையும், திறமையும்.. ஆளும் தன்மையும்.. போரினில் புறங் கொடா வீரியத் திண்மையும் 16~த்ரியர்களுக்கு இயல்பான தொழில்கள். பயிர்த்தொழில் செய்தல், பசுக்களைக் காத்தல், வாணிபம் புரிதல் ஆகியவை வைசியர்களுக்கு இயல்பான தொழில்கள். மற்றவர் தேவைக்கேற்ப சேவை புரிவதே சூத்திரனுக்கு இயல்பான தொழில்.

தனக்கு இயல்பான தொழிலைக் களிப்புடன் செய்பவன் சித்தியடைகிறான்ƒ கர்மத்தில் கருத்து வைக்கும் அவன் எவ்விதம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள்‚
அவன் தன் கடமையைச் செய்கிறான் அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு செய்யும் பூiஐ. அது பரம்பொருளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அதனால் அவன் சித்தியடைகிறான். அடுத்தவர் கடமையைச் சிறப்புற முடிப்பதைக் காட்டிலும், தனக்கென அமைந்த தகவுறு கடமையை அரை குறையாக விடுப்பதும் நல்லதே‚ அப்படித் தனக்கென அமைந்த தொழிலைச் செய்பவன் பாவத்தை அடைய மாட்டான். எனவே இயல்பாய் அமைந்த தொழில் இழிவானதென்றாலும் அதை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் நெருப்பைப் புகையானது சுற்றிக் கொண்டருப்பதைப் போல், எந்தத் தொழிலையும் ஏதேனும் ஒரு குறை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

எந்தத் தொழிலை எங்கே செய்து கொண்டருந்தாலும் என்னையே சரணடைந்தவன் என்னருளால் அழிவற்ற நிலையை அடைகிறான். அதனால் அர்ஜுனா.. காரியங்கள் அனைத்தையும் எனக்கே காணிக்கையாக்கி விடு‚ உனது குறிக்கோளாய் என்னையே கருதி விடு‚ அடைய வேண்டிய அறிவாய் என்னையே நினைத்து விடு‚ என்றும் எப்பொழுதும் என்னையே எண்ணத்தில் கொண்டு விடு‚ அப்படிச் செய்தால் உனக்கு வரும் இடையூறுகள் தூள் தூளாகும்‚ நான் சொன்னதைக் கேட்காவிட்டால் நீயே தூள் தூளாவாய்‚

அர்ஜுனா‚ „நான் போர் செய்ய மாட்டேன்‚… என்று ஆணவத்தால் நீ முடிவு செய்தாலும், அந்த முயற்சியும் நிச்சயம் பலிக்காது. ஏனென்றால் பிறவிக்குணம் உன்னைப் போர் செய்யத் தூண்டிவிடும். மதி மயக்கத்தால்தான் போர் செய்ய மறுக்கிறாய்‚ இயல்பான உன் தொழிலுக்குக் கட்டுப்பட்டு.. உன்னையே மறந்து நீ போர் செய்யத்தான் போகிறாய்‚ ராட்டினத்தில் பூட்டிய பாவைகளைப்போல் இறைவன் தன் மாயா சக்தியால் அனைத்து17 உயிர்களையும் ஆட்டிப்படைக்கிறான். அவற்றின் உள்ளங்களில் நின்று பொங்கி வழிகிறான். அதனால் உடலாலும் உள்ளத்தாலும் அவனையேச் சரணடைந்து விடு‚ அவனுடைய அருளால் உனக்கு அமைதி கிடைக்கும். அழிவற்ற உயர்ந்த நிலை சித்திக்கும். புரம ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி விரிவாக விளக்கிச் சொல்லி விட்டேன். இதை நன்றாக ஆராய்ந்து பார்‚ பிறகு எப்படித் தோன்றுகிறதோ.. அப்படிச் செய்‚

அர்ஜுனா‚ இன்னும் ஒரு முறை இரகசியங்களுக்குள் இரகசியமான என் பரம வசனத்தைக் கேள்‚ நீ எனக்கு 18நண்பன் என்பதால்தான் நன்மை தரும் இந்த இரகசியத்தைச் சொல்லுகிறேன்‚ மனத்தை என்னிடமே வை‚ எனக்கே பக்தனாயிரு‚ எனக்கே பூஜை செய்‚ என்னையே வணங்கு‚ இப்படியெல்லாம் செய்தால் என்னையே நீ அடைவாய்‚ என் இனிய நண்பனே‚ ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.. இது சத்தியம்‚ எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னையே சரணடைந்து விடு. வருந்தாதே நண்பனே‚ எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்.

ஆனால் ஒன்று நண்பா‚ இந்த உண்மைகளையெல்லாம் தவமில்லாதவனிடமும், பக்தியற்றவனிடமும், கேட்டும் விருப்ப மில்லாதவனிடமும், என்னை வெறுப்பவனிடமும் எப்பொழுதும் சொல்லாதே‚ இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடம் பரப்புபவன் நிச்சயம் என்னையே வந்தடைவான்‚ நான் விரும்பியதைச் செய்வதில் அவனை விடச் சிறந்தவர் வேறு யாருமில்லை. அவனை விடச் சிறந்த அன்பனும் எனக்கு இப்பூவுலகில் இருக்க முடியாது.
நமக்கிடையே இங்கு நடந்த இந்த உன்னதமான உரையாடலை யார் படித்தாலும் சரி.. ஞான வேள்வியால் அவர்கள் என்னை வணங்கியதாகவே நினைப்பேன். அருவருப்பில்லாமல் அக்கரையுடன் ஒருவன் இதைக் காதால் கேட்டால் கூடப் போதும்.. எல்லாப் பாவங்களும் நீங்கி.. அவன் அமரநிலை அடைவான் என்பது உறுதி.

பார்த்தா‚ உன் மனத்தை ஒருமுகப் படுத்தி என் உபதேசத்தைக் கேட்டாயா? தனஞ்சயா‚ அறியாமை என்ற உன் மயக்கம் நீங்கியதா?

அர்ஜுனன்: அச்சுதா‚ உன் அருளால் மயக்கம்19 நீங்கியது‚ இழந்த நினைவு திரும்பவும் வந்தது‚ ஐயம் அகன்றது‚ நன்னிலை அடைந்தேன்‚ நீ செய்யச் சொன்னதை இப்போது செய்யப் போகிறேன்‚ இதோ.. எடுப்பேன் காண்டீபத்தை.. தொடுப்பேன் பகைவர் மீது பாணங்களை‚
(இப்போது காட்சி அரண்மனை முற்றத்திற்கு மாறுகிறதுƒ திருதராஷ்டிரனுக்குப் பக்கத்தில் இருக்கும் அமைச்சன் சஞ்சயன் ஞானதிருஷ்டி மூலம் கண்டு விளக்கியதைத் தொடர்ந்து முடிவுரை கூறுகிறான்)

சஞ்சயன்: இவ்விதம் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்செறியும் அற்புதமான உரையாடலை நான் கேட்டேன். வேதவியாசர் அருளால் இரகசியங்களுக்குள் சிறந்த இரகசியமான இந்த யோகத்தைக் கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். வேந்தே‚ இந்த அதியற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்‚ அந்த கண்ணனின் அற்புத வடிவத்தை எண்ண எண்ண எனக்குத் திகைப்புண்டாகிறது. மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்‚ உலக நாதனாம் கண்ணன் இருக்குமிடத்தில்.. காண்டீபம் தாங்கிய அர்ஜுனன் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும். வெற்றி செழிக்கும்.. நீதியும் நியாயமும் தழைக்கும் என்பது என் துணிவு.
(பதினெட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.கண்ணனை விழுங்குவதற்காக கேசி என்ற அசுரன் குதிரை வடிவத்தில் வாயைத் திறந்து கொண்டு வர, கண்ணன் அதன் வாயில் தன் கையை வைத்து, பிறகு வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றான். இதனால் அவனுக்குக் கேசி நிஷீதனன் என்று பெயர் வந்தது.
2.முழங்கால் வரை நீண்டு தொங்கும் கைகளின் அமைப்பு மகாத்மாக்களுக்கு உண்டு.
3.இம்மையில் செல்வம், புகழ், பட்டம், புத்திர பாக்கியம், ஆரோக்கியம், தீர்க்காயுள் முதலியனவும் மறுமையில் சொர்க்கம் முதலிய பதவிகள் வேண்டும் என்று விரும்புவது.
4.பணக்காரனைப் போன்று தானும் சுக ஜீவனம் செய்யவேண்டும் என்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோ குணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் இது போன்றதே. - சுவாமி சித்பவானந்தர்.
5.அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமையொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பத்திற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாகறியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப் பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
- சுவாமி சித்பவானந்தர்
6.சொர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இனியது. நரகப் பிராப்தியும் விலங்குகளாகப் பிறப்பதும் இன்னாதது. பூவுலகப் பிராப்தியும் மனிதராகப் பிறத்தலும் இரண்டும் கலந்தது.
7.கருத்தனுக் காக்கிய நிஷ்காமிய கருமம் கருத்தைத் திருத்திய . ;;.துந் தீ பற கதிவழி காட்டு மென்றுந்தீ பற. - ஸ்ரீ ரமணமகரிஷி
8.இரவுக்கு அழகு நிலவுƒ பகலுக்கு ஆதவன். பக்தனுக்கு அழகு பக்திƒ பக்திக்கு அழகு ஆதவன். அறிவுக்கு அழகு தியானம ;ƒ தியானத்துக்கு அழகு துறவு. துறவுக்கு அழகு சாந்தி‚ அமைதி‚ - துளசி தாசர்.
9.பொருளை அறிவது எனும் போது, அந்தப் பொருளை அந்தப் பொருளாகக் காணும் குண அமைப்பைப் பற்றிய வேறுபாட்டுணர்வும் அதில் அடங்கியிருக்கிறது. இது ஜாடி, இது துணி எனும்போது ஜாடியைத் துணியினின்றும் வேறுபட்டதாகக் காணும் அநுபவத்தையும் அது சொல்கிறது. இந்த வேறுபாட்டுணர்விற்கு இடமில்லை என்றால், குதிரையைத் தேடிச் செல்பவன், எருமையைக் கண்டு ஏன் சமாதானப் படக்கூடாது? - ஸ்ரீ இராமநுஜர்.
10.சாங்கிய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். இந்த உலகில் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை விவரிக்கிறது சாங்க்கிய சாஸ்திரம் எனப்படும் வேதாந்த சாஸ்திரம். பிரம்மத்தை அறிவதற்கு இதுவே பிரமாணம்.
11. சாங்கிய சாஸ்திரம் என்று இங்கு கூறப்படுவது கபில முனிவர் இயற்றியது. ஆறு சாஸ்திரங்களுள் இது நான்காவது இடம் பெறுகிறது. பிரபஞ்ச அமைப்பின் கோட்பாடுகளைப் பற்றி இது விளக்குகிறது. பிரபஞ்ச அமைப்பை விளக்க இது முடிவான பிரமாணமாகும். எனவே குணங்களின் பாகுபாடுகளை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை கபில சாங்கியம் சொல்லுவதில்லை.
12. அர்ஜுனன் என்ற சொல்லுக்கு வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்.
13. நம் வாழ்வில் அச்சம் பூஜ்யமாவது தான் நாம் அடைய வேண்டிய வெற்றிகளில் எல்லாம் மிகப்பெரிய வெற்றியாகும்.
- சுவாமி சச்சிதானந்தா
14. வர்ணாசிரமம் என்பது மனிதனுடைய தொழிலை முன்கூட்டியே நிர்ணயிப்பதாகும். வர்ணாசிரம விதிப்படி ஒரு மனிதன் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிக்கத் தன் முன்னோர் செய்த தொழிலையே செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் தகப்பனின் வர்ணத்தையே அல்லது பரம்பரைத் தொழிலையே இயற்கையாகவே பின்பற்றுகிறது. எனவே வர்ணாசிரமம் என்பது ஒரு வகையில் பரம்பரைச் சட்டமாகும். வர்ணாசிரமம் என்பது இந்துக்களின் மேல் வலிந்து புகுத்தப்பட்ட ஒன்றல்லƒ அது இந்துக்களின் நலனுக்காக நம்பகமானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும்ƒ இது மனிதனின் புதுமைக் கண்டுபிடிப்பல்லƒ ஆனால் இயற்கையின் மாற்ற முடியாத சட்டம்ƒ நியூட்டனின் புவி ஈர்ப்பு விதியைப் போல, என்றுமே நிலைத்துச் செயல்படும் ஒரு சட்டம்ƒ புவி ஈர்ப்பு விதி என்பது அது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும் இருந்ததைப் போலத்தான் வர்ணாசிரம தர்மமும்ƒ வர்ணாசிரமச் சட்டத்தைக் கண்டுபிடிக்கும் பாக்கியம் இந்துக்களுக்குக் கிடைத்தது. இயற்கையின் சில சட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் செயல் படுத்தியதன் மூலம் மேற்கத்திய நாட்டார் பொருட் செல்வங்களைப் பெருக்கிக் கொண்டார்கள். அது போலவே இந்துக்கள் எதிர்க்க முடியாத இந்தச் சமுதாயத் தன்மையைக் கண்டுபிடித்து, ஆன்மீகத் துறையில் வேறு எந்த நாடும் சாதிக்க முடியாததைச் சாதித்துக் காட்டியுள்ளனர். - யங் இந்தியா: நவம்பர் 17, 1927.
15.பிராமண கர்மங்கள் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பிரதிக்கிரகம் என ஆறு வகைப்படும். அத்யயனம், யஜனம், தானம் எனும் மூன்றும் ஏனைய வருணத்தாருக்கும் பொதுƒ முதல் மூன்றும் பிராமணருடைய விசேஷ கர்மங்கள் எனப்படும்.
16.~த்ரியன் என்ற சொல்லுக்கு உடலில் காயம்பட்டவன் என்று பொருள்.
17. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. - திருவாசகம்.
18.அவன் கடாட்சம் எல்லாருக்கும் உண்டு. அவன் அருள் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கே உண்டு. - குருநானக்
19.மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே