Monday, 9 July 2007

பாகிஸ்தான் நாய்கள் கள்ள நோட்டு அடிக்குதுங்க...

பாகிஸ்தானிலிருந்து கள்ளநோட்டு கனஜோர்!

- நாற்பது ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வுக்குக் கடத்திவரப்பட்ட 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கடந்த வாரம் டெல்லியில் பிடிபட்டுள்ளன. இந்த மெகா கடத்தல் வேலையில் பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரிந்து, அதிர்ந்துபோயிருக்கிறது டெல்லி போலீஸ்.

ஜூன் 25&ம் தேதி டெல்லியிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே கள்ளநோட்டு கைமாற உள்ளதாக டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அங்குள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து வெளியே வந்த மூவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவர் களிடம் பெரியபெரிய பெட்டிகளில் அழகாக பேக் செய்யப்பட்ட நூல்கண்டுகள் இருந் திருக்கின்றன. அந்தக் கண்டுகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு நூல்கண்டில் 18 முதல் 20 நோட்டுகள் வரை இருந்தன. பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த ஜமீல் என்கிற வசீம், இவனது கூட்டாளி முகமது முஸ்லிம் மற்றும் ஒன்று விட்ட சகோதரன் நயீம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் ஜமீல், ‘‘இந்த நோட்டுகள், இக்பால் கானா என்பவன் தலைமையில் லாகூர் நகரில் அச்சடிக்கப்படுகின்றன. இதை இந்தியா வுக்குள் கொண்டுவரும் ஆண்கள் சந்தேகத்தின் பேரில் அடிக்கடி பிடிபட்டுவிட்டதால் பெண்களை இந்தக் கடத்தல் வேலைக்குப் பயன்படுத்துகிறோம். இந்தப் பெண்களுக்கு ‘சவாரி’ என்று பெயர். இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப தனியாக ஏஜென்ட்கள் இருக் கிறார்கள். இந்தப் பணத்தைக்கூட ரஷிதா, மெஹருன்னிசா என்ற இரண்டு பெண்கள்தான் பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் வழியாக வரும் தார் எக்ஸ்பிரஸில் கடத்திவந்தனர். அவர்களிடமிருந்து அதை நயீம் வாங்கி வந்தான்.
அவனிடமிருந்து நோட்டுகளை வாங்க நானும் முகமது முஸ்லிமும் வந்தோம், மாட்டிக் கொண்டோம்’’ என்று கூறியிருப்பதோடு,

‘‘இதுவரை ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் தென் இந்தியாவுக்குள்ளும் புழக்கத்தில் விட்டிருக்கிறோம்...’’ என்றும் கூறியிருக்கிறான்.

ஜமீல் கூறுவதற்கு ஏற்ப, கடந்த ஜூன் 7&ல் டெல்லியின் தரியாகன்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தபஸ்யூம் எனும் 26 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் காஸ்மட்டிக் பொருட்களில் பேக் செய்து பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டன. மும்பையில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்துவந்த தபஸ்யூம், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை பாகிஸ்தானுக்கும் துபாய்க்கும் விசிட் செய்து கள்ளநோட்டுகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாக போலீசஸாரிடம் ஒப்புக் கொண்டார். கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்குச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த தகவலையும் போலீஸாரிடம் அவர் சொல்லி இருக்கிறார். அவர் துபாய்க்கு தன் வேலையாக சென்றிருந்தபோது, தற்போது டெல்லி போலீஸாரிடம் பிடிப்பட்டுள்ள ஜமீல் அறிமுகமாகி, இந்தக் கள்ளநோட்டுத் தொழிலில் தன்னை ஈடுபடுத் தியதாகவும் தபஸ்யூம் கூறியுள்ளார்.

இது குறித்து கள்ளநோட்டு வழக்கை விசாரித்துவரும் டெல்லி சிறப்புப் பிரிவின் துணை கமிஷனர் அலோக் குமாரிடம் பேசினோம். ‘‘ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கள்ளநோட்டுகளை அனுப்பி வைக்கும் இக்பால் கானா, உ.பி&யின் முசாபர் நகரைச் சேர்ந்தவன். இவன் 1996&ல் ஐ.எஸ்.ஐ&யிடமிருந்து ஆயுதங்கள் கடத்தும்போது சிக்கியதாக லோதி சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. ஆனால், எப்படியோ தப்பி, பாகிஸ்தான் சென்று செட்டிலாகி, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். அதை விநியோகிக்க ‘சவாரி’ எனப்படும் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையை, இந்தியாவில் ஜமீலும், நேபாளத்தில் ஷஃபீக் என்பவனும் செய்துவருகிறார்கள்.

இந்த சவாரிகள், இலங்கை, மலேசியா, தாய் லாந்து நாடுகளின் வழியாக விமானங் களிலும், பாகிஸ் தான் பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இந்திய எல்லை வழியாகவும் பணத்தைக் கொண்டு வருகிறார்கள். ஜமீல் எங்களுக்குக் கொடுத்த தகவலின் பேரில், விரைவில் சில ‘சவாரிகளைக்’ கைது செய்ய இருக்கிறோம். பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ள நோட்டுகள் ஒரிஜினல் நோட்டைவிட லேசாக இருக்கும். அதன் வரிசை எண்களும் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். அதோடு ரூபாய் நோட்டில் இருக்கும் வாட்டர் மார்க் என்னும் கோடு அதிக இடைவெளியோடு இருக்கும். இதை எல்லாம் ஊனறி கவனத்தால் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்து விடலாம்’’ என்று முடித்தார்.

இந்தியா வரும் இந்தக் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் நாற்பது ரூபாய்க்கு Ôநூறு ரூபாய்Õ என்ற கணக்கில் கைமாறுகிறது. இது உ.பி., பீகார் போன்ற மாநிலங்களின் சிறிய நகரங் களில் புழக்கத்தில் விடப்படுகிறது. இப்படி, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைமாற்றியதில், நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த முடிவின்படி, சில வெளிநாடுகளில் இருப்பதை போல், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் வந்தால்தான் கள்ளநோட்டுகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் போலிருக்கிறது!


நன்றி - ஜூனியர் விகடன் 11 July 2007

No comments: