Friday, 27 July 2007

ஜடாயு - உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை என்னும் தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்பு உலகில் 11 நாடுகளிலும், சில பிரதேசங்களிலும் இந்துக்களின் மீது தொடரும் வன்முறைகள் மற்றும் கொடுமைகள் பற்றிய விரிவான 200-பக்க அறிக்கையை அளித்துள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க சட்ட நிபுணர்கள் உட்பட பலரும் கவனத்துக்குரியதாகக் குறிப்பிட்டு, ஒரு மாபெரும் மானுட சோகத்தைப் பதிவு செய்தமைக்காக இந்த அமைப்பைப் பாராட்டியுள்ளனர்.ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, ஜம்மு & காஷ்மீர் (இந்தியா), கஜகஸ்தான், மலேசியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, ட்ரினிடாட் & டொபாகோ ஆகிய பிரதேசங்களில் இந்துக்களின் மீது தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய விவரணம் இந்த அறிக்கையில் உள்ளது."இந்து மக்கள், இந்து நிறுவனங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள் இவற்றைக் குறிவைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் உலக ஊடகங்களால் பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஆவணம் மிக முக்கியமானதாகிறது. உலகெங்கும் உள்ள இந்துக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செய்ய வேண்டியது அதிகம் உள்ளது" என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஷெரட் பிரவுன் தெரிவித்தார். ஃப்ராங்க் பாலோன், ஜோ க்ரோலி, பீட் ஸ்டார்க் முதலிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கருத்தை எதிரொலிக்கின்றனர்.இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகித்த ஈசானி சௌதரி என்னும் பெண்மணி " 1947 இந்திய தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் (இன்றைய பங்களாதேஷ்) 30 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை இப்போது வெறும் 9 சதவீதமாக ஆகியுள்ளது - . ஒவ்வொரு நாளும், பங்களாதேசில் இந்துக்கள் பெரும் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிகப் பெரிய இன அழிப்பு பற்றிய உண்மைகள் இவ்வளவு தாமதமாகிவிட்டபோதாவது உலகின் கண்கள் முன்னால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம்.

No comments: