Friday, 28 September 2007

திண்ணை கட்டுரை - K.ரவி ஸ்ரீநிவாஸ் - வன்முறையே வழிகாட்டி நெறியா?

Thursday September 27, 2007
வன்முறையே வழிகாட்டி நெறியா?
K.ரவி ஸ்ரீநிவாஸ்

ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்கள் வன்முறைக்கு இட்டுச் சென்றிருப்பது கண்டிக்க வேண்டியது. பெங்களூரில் கருணாநிதியின் மகள் வீட்டில் நடந்த தாக்குதல், பேருந்து எரிக்கப்பட்டு இருவர் மரணமடைந்தது - இவற்றை செய்தவர்களை சட்டப்படித் தண்டிப்பதே முறையாகும். வேதாந்தி தான் அவ்வாறு சொல்லவில்லை என்று மறுத்திருந்தாலும் மத நூல்களை காரணம் காட்டி வன்முறைக்கு தூண்டுவதோ, நியாயப்படுத்துவதோ சரியல்ல. அதையும் சட்ட ரீதியாகவே எதிர் கொள்ள வேண்டும். ஆனால் இவறிற்கு பதிலாக ஏவப்படும் வன்முறை மிகவும் மோசமானது. அதற்கு பதில் வன்முறை என்ற சுழற்சிக்கு அது இட்டுச் செல்லக்கூடும். தமிழ் நாட்டில் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது, கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன, அலுவலகங்கள் மீதும், தனி நபர் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. இதைக் கண்டிக்காமல் இவற்றிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவும், மகிழ்ச்சியினை தெரிவிக்கும் போக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. பாஜகவையும், ஹிந்த்துவ அமைப்புகளையும் கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும், வன்முறை மூலம் அவற்றை எதிர்கொள்வது விரும்பத்தகாத விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

தீக்கதிரில் வெளியான ஒரு தலையங்கம் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை. மாறாக பாஜக ஒரு பாசிசக் கட்சி என்று பதில் சொல்கிறது. அந்தக் கட்டுரையில் அவ்வளவும் சொல்லிவிட்டு இறுதியாக சொல்லப்படுவது இது.

"இந்த தாக்குதல்களை எதிர்த்து - சேது திட்டத்தை முடக்க அவர்கள் செய்யும் சாகசங் களை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. ஆளும் திமுக வுக்கு அதில் அதிகப் பொறுப்புண்டு. ஆயினும் அந்த ஆர்ப்பாட்டங்கள் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் ஆட்சியாளர்கள் பொறுப்பே. ஏனெனில் பாசிஸ்டுகளை எதிர்த்த போராட்டத்தையும், ஜனநாயக வழியிலேயே நடத்த வேண்டும். அதுதான் இன்றைய காலத்தின் கட்டளை."

(பாசிஸ்டுகள் யார்? காலத்தின் கட்டளை எது?-http://www.theekkathir.in/index.asp)

இக்கட்டுரை ஏதோ பாஜகவும், ஹிந்த்துவ அமைப்புகள்தான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என்றத் தொனியைத் தருகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து நீதிபதி வேணுகோபல் கமிஷன் கூறியதை எடுத்துக்காட்டுபவர்கள் அது கிறித்துவ அமைப்புகள் குறித்து கூறியதையும் சொல்ல வேண்டும். கேரளாவில் கம்யுனிஸ்ட்கள் நடத்தாத வன்முறையா, வெறியாட்டமா. மேலும் இந்தியாவில் அனைத்து மதக்கலவரங்களுக்கும் பாஜகவையும், சங்க பரிவாரங்களையும் குறை கூறுவது முறையன்று. அது சரியானகண்ணோட்டமுமல்ல. ஆனால் இடதுசாரிகளைப் பொருத்தவரை இப்படி ஒருபட்சமாக எழுதுவதும்,. பேசுவதும் வழக்கமாகிவிட்டது.

இந்தியாவில் எங்காவது ஒரிடத்தில் ஒரு சர்ச்சில் சன்னல் கதவுகளை யாரேனும் உடைத்துவிட்டால் கூட அய்யோ மதசார்பின்மைக்கு ஆபத்து என்று அறிக்கை விடும் சிபிஐ(எம்) தலைவர்கள்/பொலிட்பீரோ இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வன்முறைகளை, குறிப்பாக பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கவில்லை. இந்த வன்முறையை மேலே சுட்டிக்காட்டபட்ட தலையங்கமும் கண்டிக்கவில்லை.

சிபிஐ(எம்) இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார்கள். இந்த்துவ அமைப்புகள், பாஜக இந்த திட்டத்தினை எதிர்க்கவில்லை, ராமர் பாலம் இதனால் பாதிப்படையக்கூடாது என்றுதான் கோருகிறார்கள் என்ற உண்மையை மறைத்து விட்டு பொய்ப் பிராச்சரம் செய்கிறார்கள். இந்தப் பொய்ப்பிரச்சாரம் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் செய்யப்படுகிறது. இங்கு சர்ச்சை ராமர் பாலம் குறித்துதான், திட்டத்தின் தேவை குறித்து அல்ல என்பதை இடதுசாரிகளும், தமிழ் நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் மூடி மறைத்துவிட்டு பாஜக/இந்த்துவ அமைப்புகளுக்கு எதிரான ஒன்றாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் பாஜக/இந்த்துவ அமைப்புகள் தமிழர்கள் நலனுக்கு, தமிழ் நாட்டிற்கு எதிரிகள் என்ற கருத்தினைப் பரப்புகிரார்கள். குஜராத்தில் நர்மதை திட்டத்தினை எதிர்ப்பவர்கள் குஜராத்தின் எதிரிகள்/துரோகிகள் என்று மோடி சொன்னால் அது கலாச்சார பாசிசமாகிவிடும். சேதுசமுத்திரம் திட்டத்தினை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்று கருணாநிதி சொன்னால் இடதுசாரிகள் கைதட்டி வரவேற்ப்பார்கள், அதே கருத்தையே தாங்களும் பரப்புவார்கள். இந்த துரோகிகளை தாக்கினால் சரிதான் என்று இவர்கள் நேரடியாக வாதிடமாட்டார்கள், ஆனால் வன்முறையை மறைமுகமாக நியாயப்படுத்துவார்கள். நீ அன்றைக்கு அவர்களை, இவர்களை அடித்தாயே, இன்று நீ அடிவாங்கினால் அது சரிதான் என்பது இங்கு சொல்லாமல் சொல்லப்படுகிறது.

மொகலாயர் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன, அந்தக் கணக்கினை இப்போது தீர்த்துக் கொள்கிறோம் என்ற வாதத்திற்கும், இன்று வன்முறைக்கு மறைமுகமாக நியாயம் கற்பிக்கும் தீக்கதிரின் வாதமும் ஒரே அணுகுமுறையின் அடிப்படையில்தான் அமைகின்றன. முன்னது மத வெறி, பின்னது மதச்சார்பற்ற கன்ணோட்டம் என்று வாதிடுவது சரியல்ல. இரண்டும் பழிக்கு பழி வன்முறை என்ற கருத்தினையே வலியுறுத்துகின்றன. பாஜகவோ, இந்த்துவ அமைப்புகளோ மீதான வன்முறை தவறு, அவர்களை இப்படி எதிர்கொள்வது மத சார்பற்ற கண்ணோட்டமல்ல என்ற நிலைப்பாட்டினை சிபிஐ(எம்) எடுக்கவில்லை. மாறாக அது வெறுப்பினையும், காழ்ப்புணர்வினையும் வளர்க்கிறது.

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தன் இணைய தளத்தில் காலச்சக்கரம் சுழல்கிறது என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பினை வெளியிடுகிறது. http://www.tmmkonline.org/tml/others/109044.htm

அதில் இரண்டு புகைப்படங்கள் உள்ளன. இறுதியில் குறிப்பிடப்படுகிறது " அன்று மிரட்டியவர்கள், இன்று மிரட்டப்படுகிறார்கள். இறைவன் மிகப் பெரியவன். அவன் பொறுமையாளர்களோடு இருக்கிறான்". சென்னையில் பாஜக தலைமயகத்தினை தாக்குபவர்கள் 'போராட்டக்காரார்கள்' என்று இக்குறிப்பில் குறிப்பிடப்படுகிறார்கள். கல்லை எடுத்து அடிப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் போராட்டம் என்றால் அதன் பொருள் என்ன. குஜராத்தில் அன்று மிரட்டியவர்களுக்கும், இன்று பாஜக அலுவலகத்தில் அப்புகைப்பட்டத்தில் இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு. இவர்களா அன்று குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள், இல்லை இவர்கள் கருணாநிதியை கொன்றால் பரிசு என்று அறிவித்தார்களா. இக்குறிப்பின் மூலம் தமுமுக வன்முறையை நியாயப்படுத்துகிறது. இதில் இறைவன் மிகப் பெரியவன் என்று வேறு எழுதுகிறார்கள். இதன் மூலம் தமுமுக என்ன சொல்ல வருகிறது, அன்று குஜராத்தில் பாஜக ஆட்சியில் மதக்கலவரம் நடந்தது, முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று சென்னையில் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது, உள்ளிருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். காலச்சக்கரம் சுழல்கிறது, இன்று நீங்கள் அடி வாங்குவது சரி. எத்தகைய வாதம் அது. இந்த தர்க்கத்தினை இந்துத்துவ அமைப்புகள் நீட்டித்து வன்முறையில் இறங்கினால் அது சரியாகுமா.
பாஜகவை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள வேண்டியவர்கள், இப்படி வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்றால் மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க), அதன் ஆதரவாளர்கள் அத்வானி தலைக்கு இவ்வளவு விலை என்று சுவரொட்டி ஒட்டுகிறார்கள். வலைப்பதிவுகளில் இந்த வன்முறை குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். பார்பபன வெறுப்பும் இதில் இடம் பெறுகிறது. குடுமி மறைத்து வந்தாலும் என்றே தலைப்பிட்டு எழுதுகிறார்கள். உதாரணமாக

http://potteakadai.blogspot.com/2007/09/blog-post_24.html
http://kedayam.blogspot.com/2007/09/blog-post_25.html
http://kedayam.blogspot.com/2007/09/blog-post_24.html
http://www.poar-parai.blogspot.com/

இது போன்ற போக்கினைத்தான் பெரியார் சிலை தாக்கப்படதற்கு எதிரடியாக பெரியார் தி.கவினரும், ம.க.இ.க வினரும் வன்முறையில் ஈடுபட்ட போது காண முடிந்தது. அப்போதும் அந்த வன்முறையை நியாயப்படுத்தித்தான் அவர்கள் எழுதினார்கள், பேட்டி கொடுத்தார்கள்.தா.பாண்டியன் அப்போது அந்த வன்முறையை மறைமுகமாக ஆதரித்துப் பேசினார். இடதுசாரிகள் இந்த வன்முறையை பெயரளவிற்கு எதிர்த்தார்கள். குஜராத்திலோ அல்லது ராஜஸ்த்தானிலோ ஒரு பாதிரியாரின் ஆடை கிழிக்கப்பட்டால் கூட கூக்குரல் எழுப்பியிருப்பார்கள்,அகில இந்திய அளவில் அறிக்கைகள் வெளியிட்டு, பாராளுமன்றத்தில் கூக்குரல் எழுப்பியிருப்பிபார்கள். அதற்கு ஆதரவாக பிரபுல் பித்வாய், ராம் புனியானி போன்ற போலி மதச்சார்பின்னைவாதிகள் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டிம் பெரியார் சிலை தாக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தொடர்பே இல்லாதவர்கள் தாக்கப்பட்டதை, வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடைபெற்றதை இங்குள்ள இடதுசாரிகள் பெயரளவிற்கு, ஏதோ ஒப்புக்கு எதிர்த்தன. அப்போதும் இந்த்துவ அமைப்புகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, இந்துக்களின் மத உணர்வுகள், உரிமைகளுக்கல்ல.
பாஜக/இந்த்துவ அமைப்புகளை அரசியல்/கொள்கை ரீதியாக ஆதரிக்காத இந்துக்கள் கூட அரசு இந்துக்களின் உணர்வினை மதித்து ராமர் பாலம் பாதிப்புறா வண்ணம் மாற்றுப் பாதைகளை பரீசீலிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் உள்ள நியாயத்தினை இடதுசாரிகளும், திமுகவின் தோழமைக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறின்றி அவ்வுணர்வுகள் மதிக்கப்படாமல் பாஜகவிற்கான எதிரான ஒன்றாக இந்தச் சர்ச்சையை திசை திருப்புவது குறுகிய கால நோக்கில் பலன் தரலாம், ஆனால் நீண்ட கால நோக்கில் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

மத்திய அரசு கோரிப் பெற்றுள்ள மூன்று மாத காலத்தினை சுமுகத் தீர்வு எட்டுவதற்காக பயன்படுத்த வேண்டும். அத்தகைய தீர்வு உருவாவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். ஆனால் கருணாநிதியின் பேச்சுக்கள், அவற்றிற்கான இடதுசாரிகளின் ஆதரவும் அதற்கு எதிரான திசையில் இருக்கின்றன. இந்துக்களின் மத உணர்வுகளை இடதுசாரிகள் அலட்சியம் செய்கின்றனர். தங்களது மதச்சார்பின்மைக் கண்ணோட்டம் எவ்வளவு போலியானது, பாரபட்சமானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். இதை பாஜக எதிர்ப்பு அரசியலாக மாற்றி விட்டனர். எனவே இன்று பாஜக/இந்த்துவ அமைப்புகளை ஆதரிக்காத இந்துக்கள் கூட எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவாளர்களாக மாறும் சூழல்தான் உருவாகும். இந்துக்களின் உண்ர்வுகளை மதிக்க வேண்டும் என்று கோரியதால்தான் பாஜக/இந்த்துவ அமைப்புகள் தாக்கப்படுகின்றன என்ற எண்ணம்தான் இந்துக்கள் மத்தியில் வலுப்பெறும். இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் அமைப்புகள்தான் , அரசியல் கட்சிகள்தான் தங்கள் ஆதரவினைப் பெறத் தகுதியானவை என்று இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதும் சூழ்நிலை ஏற்பட்டால் அதானல் ஆதாயம் பெறப் போவது பாஜகதான். இந்த வன்முறை தொடருமானால் அத்தகைய சூழ்நிலை உருவாக அது ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடும். இடது சாரிகளும், முற்போக்கு, மதத்சார்பற்ற என்று சொல்லிகொள்ளும் அமைப்புகளும் அதைத் தான் விரும்புகின்றன என்றால் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை குறிப்பாக வன்முறையை நியாயப்படுத்துவது, ஆதரிப்பதை தொடர்ந்து செய்யட்டும்.

பிற்குறிப்பு:
இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிபிஐ, சிபிஐ(எம்) - இரண்டும் மதவாத, ஜாதியவாதக் கட்சிகளாகி விட்டன. இவற்றை மதசார்ப்பற்ற கட்சிகள் என்று நான் கருதமாட்டேன். மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினர் சார்பு, பாஜக/இந்த்துவ எதிர்ப்பு என்பதாக குறுக்கப்பட்டுள்ளது. இதை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள், அமைப்புகள் உட்பட பலரும் செய்கிறார்கள். எனவே இன்றுள்ள சூழலில் இந்தியாவில் உள்ள இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள், அவறிற்கு ஆதரவு தரும் அறிவு ஜீவிகளை எந்த அளவிற்கு உண்மையான மதச்சார்பின்மையளர்கள் என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. பெரியார் தி.க, ம.க.இ.க போன்றவை வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும், நடைமுறைப்படுத்தும் அமைப்புகள், இயக்கங்கள். பெரியார் தி.க பிராமணர்கள், ஜைனத் துறவிகள் மீதான தன் வன்முறையை நியாயப்படுத்திய அமைப்பு. வெளிப்படையாக, இந்து மதத்தினையும், இந்தியாவையும் சிதறடிப்பதே தங்கள் நோக்கம் என்று அதன் தலைவர் கொளத்தூர் மணி பேசியிருக்கிறார். இத்தகைய அமைப்பினைத்தான் எஸ்.வி.ராஜதுரை புகழ்ந்து பேசுகிறார், ஆதரிக்கிறார். எனவே இன்று முற்போக்கு,மதச்சார்பின்மை என்ற பெயர்கள்/முத்திரைகளுக்கு பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அது இந்துமத எதிர்ப்பு, இந்தியா என்கிற தேசத்திற்கான எதிர்ப்பு, பிரிவினைவாதத்திற்கான ஆதரவு, கண்மூடித்தனமான அமெரிக்க/இஸ்ரேல் எதிர்ப்பு என்பதாக இருக்கும் போது அதை முற்போக்கு என்றோ, மதச்சார்பின்மை என்றோ ஏற்கமுடியாது. வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்று முற்போக்கு, இடதுசாரி என்பது குறுகிய கண்ணோட்டங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஒரு தாராளவாத(liberal) கண்ணோட்டமாகக் கூட அது இல்லை. மாறாக அது அடையாள அரசியலுக்கான (identity politics) ஆதரவு என்ற பெயரில் சமத்துவத்தினை நிராகரித்துவிட்டு, ஜாதிய, மத அரசியலுக்கு துணையாக இருக்கிறது. சிபிஐ, சிபிஐ(எம்) என்ற இரண்டு கட்சிகளும் இன்று இப்படிப்பட்ட கொள்கைகளை இன்று கொண்டிருக்கின்றன. இன்றுள்ள சூழலில் பாஜக/இந்த்துவத்தினை எதிர்க்கும் அமைப்புகள், இயக்கங்களின் போக்குகள்,நிலைப்படுகள் எனக்கு பல நேரங்களில் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. ராமர் பாலம் பிரச்சினை உட்பட பலவற்றில் இன்று முற்போக்கு, இடதுசாரி நிலைப்பாடு(கள்) என்று முன்வைக்கப்படும் நிலைப்பாடுகளை, குறிப்பாக இட ஒதுக்கீடு, குறித்த நிலைப்பாடுகளை நான் ஏற்கவில்லை. இது 123 ஒப்பந்தத்திற்கும் பொருந்தும். 123 ஒப்பந்தத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், அணுசக்தி குறித்து எனக்கு ஐயப்பாடுகள் இருந்தாலும், அதை நான் நிராகரிக்கவில்லை, அது தேச விரோதமானது என்று கருதவும் இல்லை. முடிந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் இதை விரிவாகப் பேசலாம்.

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 8


Thursday September 27, 2007
பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 8


எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் 11

அத்தியாயம் பதினொன்று
விசுவரூப தரிசன யோகம்

விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூப்பத்தைத் தரிசிக்கிறான்ƒ பிறகு அர்ஜுனனே அதை விளக்கியுரைக்கிறான். கண்ணனின் விசுவ ரூபத்தில் உலகங்கள் அனைத்தும் அடங்கியுள்ள தன்மை இதில் விவரிக்கப் பெற்றுள்ளன.

இதில் 55 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-------------
அர்ஜுனன்: தாமரைக் கண்ணா‚ ஆத்மாவைப் பற்றிய உன் அற்புதமான விளக்கத்தால் என் மனமயக்கம் மறைந்து விட்டது. உன் அழிவற்ற மகிமைகள் பற்றியும் உலகின் தகைமைகள் பற்றியும் விரிவான உன் விளக்கம் கேட்டேன்ƒ அனைத்தும் உண்மையே‚ இப்போது உன் விசுவரூப1 வடிவத்தைக் காண விரும்புகிறேன். அதை நான் காணக் கூடும் என்று நீ கருதுவாயானால், அழிவில்லாத அந்த வடிவத்தைக் காட்டியருள்க‚

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா‚ ஆனால், உனது ஊனக் கண்ணால் அதைக் காண முடியாது. ஆகையால் உனக்கு ஞானக்கண் தருகிறேன்ƒ எனது யோகக் காட்சியைப் பார்‚ தொகை தொகையாகப் பெருகும் என் வடிவங்களைப் பார்‚ வகை வகையான வண்ணங்களுடன் ஒளி வீசி நிற்கும் என் உருவங்களைப் பார்‚ ஆதித்யர்களையும்2, அஷ்ட வசுக்களையும், அசுவினி தேவதைகளையும்3, பதினொரு ருத்ரர்களையும், ஏழு மருத்துக்களையும் அத்துடன் இதுவரை நீ பார்த்திராத பல அற்புதங்களையும் பார்‚ இன்னும், உலகமெனும் அரங்கில் எந்நெந்தக் காட்சிகளைப் பார்க்க விரும்புகிறாயோ, அவை அனைத்தையுமே என் மேனியிலே பார்‚

(இவ்விதம் உரைத்த கண்ணன் தன் மேலான விசுவரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான். அடடா‚ முகங்கள் தான் எத்தனை‚ விழிகள் தான் எத்தனை‚ அற்புதக் காட்சிகள் தான் எத்தனை‚ அணிந்த ஆபரணங்கள் தான் எத்தனை‚ அலங்கார ஆடைகள் தான் எத்தனை‚ தெய்வீக மாலைகள் தான் எத்தனை‚ தாங்கிய ஆயுதங்கள் தான் எத்தனை‚ இது மட்டுமா‚ சந்தனப் பூச்சுடன், ஒளிக்கதிர் வீச்சுடன் அதிசயமானதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திசைகளிலும் முகங்கள் கொண்டதுமான தன் அற்புத வடிவத்தைக் காட்டினான் கண்ணன்.

அது 4ஓராயிரம் சூரியர்கள் வானில் ஒரே நேரத்தில் உதித்தது போல் இருந்தது. பலவிதமாய்ப் பிரிந்துள்ள உலகின் காட்சிகள் அந்தத் தெய்வத் திருமகனின் மேனியில் ஒன்று கூடியிருந்ததை அர்ஜுனன் கண்டான். பிறகு அவன் வியப்பு மேலிட, மெய்சிலிர்த்தவனாய் தலையால் வணங்கினான்‚ கை கூப்பிக் கூறத் தொடங்கினான்.)

அர்ஜுனன்: தேவா‚ உன் தெய்வீக மேனியில் தேவர்கள் அனைவரையும் காண்கிறேன். ஜீவராசிகளின் கூட்டங்களையும் காண்கிறேன்ƒ தெய்வ நாகங்களையும், திவ்ய முனிவர்களையும், கமலாசனக் கடவுள் பிரம்மாவையும் காண்கிறேன்.
உலகநாதா‚ கணக்கிலாக் கைகளையும், வயிறுகளையும், முகங்களையும், கண்களையும் கொண்ட உன் முடிவிலா உருவத்தை எங்கும் காண்கிறேன். உன் வடிவத்தின் அடியையோ, முடியையோ, நடுவையோ நான் காண முடியவில்லை. சந்திர சூரியர்களைக் கண்களாகவும், செந்தழல் நெருப்பை முகமாவும் கொண்டு, ஒளி வெள்ளத்தால் இந்த உலகையே எரிப்பவனாய்க் காட்சியளிக்கிறாய். தலைக்கு மகுடம் தரித்து, கதையும் சக்கரமும் கைகளில் தாங்கி, எட்டுத்திசையும் ஒளியுமிழும் உன் உருவத்தை எங்கும் காண்கிறேன்.

உலகிற்கே உயர்ந்த ஆதாரம் நீ‚ உத்தம தர்மத்தின் ரட்சகன் நீ‚ அறிந்திட வேண்டிய அழிந்திடாப் பரம்பொருள் நீ‚ பழமைக்கும் பழமையான பழம் பொருள் நீ ‚ எல்லாவற்றையும் நான் நேரில் காண்கிறேன்.

அற்புதம்மிக்க உன் வடிவம் விண்ணையும் மண்ணையும் அடைந்து நிற்கிறது‚ உக்கிரம் மிக்க உன் உருவம் திக்குகள் அனைத்திலும் பரவி நிற்கிறது‚ மூவுலகும் இது கண்டு நடுங்கி நிற்கிறது‚

இதோ வானவர் பல்லோர் உன்னுள் நுழைகின்றனர்ƒ பயத்தால் அதில் சிலர்5 கைகூப்பித் தொழுகின்றனர்ƒ மகா முனிவர்களும் சித்தர்களும் „வாழ்க‚ வாழ்க… என்று பாடிப் புகழ்ந்து பரவுகின்றனர்ƒ உருத்திரர், ஆதித்யர், சாத்தியர்6, 7வசுவதேவர், அசுவினி தேவர், வசுக்கள், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், ய~ர், அசரர், சித்தர் என்ற வித்தகர் அத்தனை பேருமே வியப்புடன் உன்னையே பார்க்கிறார்கள்.

பலப்பல முகங்களும், கண்களும், கைகளும் தொடைகளும், பாதங்களும் வயிறுகளும், பயமுறுத்தும் வளைந்த பற்களும் கூடியவுடன் நெடிய உருவங்கண்டு மூவுலகங்களும் நடுங்குகின்றன. வான்வரை நீட்டி, வண்ணங்கள் தீட்டி, பிரகாசம் கூட்டி, திறந்த வாயினைக் காட்டி, அகன்ற கண்களில் ஒளியினை நாட்டியுள்ள உன்னைக்காணும் போது என் அமைதியும் வீரமும் ஒடுங்குகின்றன. கோர பயங்கரப் பற்களுடன் ஊழிக்காலத்துப் பெருந்தீ போன்ற உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்குத் திக்குத் திசை தெரியவில்லை‚ ஒன்றும் புரியவில்லை‚
நீ எனக்கு அருள் புரிக‚

திருத்ராஷ்டிரன் மைந்தர்களும், பாராளும் வேந்தர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியவர்கள் மட்டுமல்ல... நம் பக்கத்துப் படைத் தலைவர்களும் கூட, பயங்கரமான உன்னுடைய வாய்களில் நுழைகின்றனர். சிலர் பொடிபட்ட தலைகளோடு உனது பல்லிடுக்குகளில் அடிப்பட்டுச் சிக்கியிருப்பதைக் காண்கிறேன். கடலை நோக்கி ஓடும் நதிகளின் வெள்ளங்களைப் போல், இந்த மானிட வீரர்கள் சுடர் விட்டு எரியும் உன் வாய்க்குள்ளே ஓடுகிறார்கள்ƒ விட்டிற் பூச்சிகள் கொழுந்து விடும் நெருப்பில் வேகமாக வந்து விழுவதைப் போல் நாசமடைவதற்காகவே இந்த ஜனங்கள் அதிவேகத்துடன் உன் வாய்க்குள்ளே நுழைகிறார்கள். வெந்தழல் வாய்களால் சகல உலகங்களையும் சாப்பிட்டு முடித்து, நாக்கைச் சுழல விட்டு நக்கிச் சுவைக்கிறாய். உனது கொடுஞ் சுடர்களால் உலகையே எரிக்கிறாய். தேவ தேவனே‚ உன்னை வணங்குகிறேன்ƒ உன்னைப் பற்றி அறிய விரும்புகிறேன்ƒ உன் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லைƒ பயங்கர மூர்த்தியாகிய நீ யார் என்று கூறுயருள்க‚
உலகை அழிக்கவல்ல காலன் நான்ƒ அழிக்கும் அந்தக் காரியத்தைத்தான் தொடங்கியுள்ளேன். இதோ.. களத்திலே அணிவகுத்து நிற்கும் வீரர்கள், நீயில்லாவிட்டாலும் அழியத்தான் போகிறார்கள்ƒ இவர்களெல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள்‚ துரோணரும், பீஷ்மரும், கர்ணனும், கெயத்ரதனும் கூட ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே‚ இப்போது என் பொருட்டு நீ 8கருவியாக மட்டும்தான் இருக்கப் போகிறாய். எனவே இணையிலா இடது கை வீரா‚ கவலையை விட்டுப் போரிடு‚ எதிரிகளை வென்று புகழுடன் வாழ்வாயாக‚ இணையிலாத இந்த நாட்டை ஆள்வாயாக‚

(இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் கை கூப்பி, நடுநடுங்கி வணங்கி எழுந்து, மீண்டும் நடுக்கத்துடன் வணங்கி, நாக்குழறக் கண்ணனிடம் நவில்கிறான்)

அர்ஜுனன்: ஹிருஷீகேசனே‚ உன் புகழ் பாடுவதில் உலகம் மகிழ்ச்சி அடைகிறதுƒ அரக்கர்கள் எல்லாம் அஞ்சி நாலா பக்கமும் ஓடுகிறார்கள்ƒ சித்தர்கள் எல்லாம் வணங்கிப் பாடுகிறார்கள். இது மிகவும் சரி தான்‚ ஏனெனில் பிரம்மாவுக்கும் பெரியவனான உன்னை எப்படி வணங்காமல் இருக்க முடியும்? மூவுலகிலும் உனக்குச் சமமானவனே இல்லை என்றால், உயர்ந்தவன் எங்கே இருக்க போகிறான் ‚ பிரபஞ்சம் அனைத்திற்கும் நீயே தந்தை‚ நீயே வணக்கத்திற்குரியவன்‚ உண்மையும் பொய்யும் கடந்த உன்னதமானவன்‚ அழிவிலாப் பரம் பொருளானவன்‚ ஆதிதேவன்‚ புராண புருஷன்‚ குரு சிரேஷ்டன்‚ உலகைத் தாங்குபவன், அறியத் தகுந்தவன். அனைத்தும் அறிந்தவன். பரம பதமானவன். எண்ணிலா வடிவம் கொண்டவன்ƒ எங்கும் நிறைந்தவன். வீரத்தில் உறைந்தவன்ƒ ஆற்றிலில் உயர்ந்தவன். காற்றும் நீயே... காலனும் நீயே‚ மழையும் நீயே.. தண்மதியும் நீயே‚ மேலும் நீயே பிரஜாபதி. நீயே பிரம்மனின் தந்தை. உன்னை ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் வணங்குகிறேன். முன்புறமும் வணங்குகிறேன்‚ பின்புறமும் வணங்குகிறேன்‚ எல்லாப் பக்கங்களிலும் வணங்குகிறேன்‚
அச்சுதா‚ உன் பெருமையறியாமல் அன்பினாலும் அறியாத்தனத்தாலும், உன்னைத் தோழனாய்க் கருதி, „அடடே கண்ணா‚ அடே யாதவா‚ அடே நண்பா‚… என்றெல்லாம் ஏக வசனத்தில் அழைத்திருக்கிறேன். உண்ணும் போதும், உறங்கும் போதும், உவந்து விளையாடும் போதும், ஏகாந்தமாய் இருக்கும் போதும், எத்தனையோ பேர் இருக்கும் போதும் ஏளனம் செய்து உன்னை நான் அவமதித்திருந்ததால், அருள்கூர்ந்து அவற்றையெல்லாம் மன்னித்தருள்க‚ நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நான் கேட்டுக் கொள்கிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும், பிழை பொறுத்தருள்க‚
தேவதேவா‚ இது வரை எவரும் கண்டிராத உன் தெய்வீக உருவைக் கண்டு நான் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் என் மனம் பயத்தால் நடுங்குகிறது. மகுடம் தரித்து, 9கதையும் சக்கரமும் கையில் ஏந்திய உன் பழைய உருவத்தைப் பார்க்க விரும்புகிறேன். நான்கு கை கொண்ட அந்த நாயக உருவத்துடன் சேவை தர வேண்டுகிறேன்.
கண்ணன்: அர்ஜுனா‚ நான் உள்ளம் குளிர்ந்து என்னுடைய யோகத்தினால் உனக்கு இந்த விசுவரூபத்தைக் காட்டினேன். வேதம் கற்றாலும், வேள்வி நடத்தினாலும், தவம் புரிந்தாலும், தானம் செய்தாலும் எவருமே காண முடியாத என் தெய்வீக வடிவத்தை இப்போது நீ கண்டு கொண்டாய். 10உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் இதைக் கண்டதில்லை. இந்த கோர வடிவத்தை கண்டு நடுங்க வேண்டாம்‚ பயப்படாதே‚ மறுபடியும் மகிழ்ச்சியோடு என் பழைய வடிவத்தைப் பார்‚

(இவ்வாறு கூறிய கண்ணன் பயங்கரமான அந்த விசுவரூபத்தை மறைத்து, சாந்த மயமான தன் இனிய வடிவத்தை மீண்டும் காட்டினான்ƒ அச்சத்தால் நடுங்கிய அர்ஜுனனைத் தேற்றினான்)

அர்ஜுனன்: ஜனார்தனா‚ இப்போது தான் எனக்கு நிம்மதி. சாந்தமயமான உன் மோகன வடிவைக் கண்ட பிறகு தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

கண்ணன்: பாண்டவா‚ எப்போது காண்போம் என்று ஏங்கி நிற்கும் தேவர்களும் காண முடியாத விசுவரூபத்தை நீ கண்டுவிட்டாய்‚ வேதம் பயின்றும், தவமியற்றியும், தானம் செய்தும் காண முடியாத தெய்வீக ரூபத்தைக் கண்களால் உண்டுவிட்டாய்‚ மாறாத பக்தி ஒன்றின் மூலமாகத்தான் இந்த நிலையில் என்னை காண முடியும்‚ உள்ளபடி என்னை அறிய முடியும்... அடைய முடியும்‚ எனக்கு பலன் வேண்டாம்.. எல்லா உயிர்களுக்கும் நலன் வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னையே நினைந்தவனாய், எனக்காகவே செயல்படும் பக்தனே என்னை அடைகிறான்.

(பதினொன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.ஆக்கல், அழித்தல், காத்தல், ஆளுதல், தாங்குதல், கல்யாண குணங்களுடன் இருத்தல், எதிலும் உயர்ந்ததாக இருத்தல், எல்லாவற்றைக் காட்டிலும் வேறாக இருத்தல் என்று எல்லா நிலைகளிலுமுள்ள உன் வடிவம். - ஸ்ரீ ராமாநுஜர்

2.ஆதித்யர்கள் 12, வசுக்கள் 8, ருத்ரர்கள் 11, மருத்துக்கள் 7, இவை முன்பே விளக்கப் பெற்றுள்ளன.

3.அசுவினி தேவதைகள் இருவர்: அசுவினி குமாரர் இரு சகோதரர். விஷ்ணு புராணத்தில் இவர்கள் சூரிய புத்திரர்களாகவும், இராமாயணத்தில் கசியபரின் புத்திரர்களாவும், வாயு புராணத்தில் பிரம்மாவின் காதில் உதித்தவர்களாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் வௌ;வேறு கல்பத்தில் தோன்றினர் எனக் கொள்ளுதல் வேண்டும். இவர்கள் ததீசி முனிவரிடத்தில் ஞானோபதேசம் பெற்றனர்.
- உரையாசிரியர் அண்ணா

4.ஆயிரம் கண்கள் உண்டு உனக்குƒ இருப்பினும் கண்ணென்று ஏது உனக்கு‚ உனக்கு ஆயிரம் வடிவங்கள் உண்டுƒ இருப்பினும் வடிவமென்று ஏது உனக்கு? உனக்கு ஆயிரம் தாமரைப் பாதங்கள் உண்டுƒ இருப்பினும் பாதமென்று ஏது உனக்கு? ஆயிரம் நாசிகள் உண்டு உனக்குƒ இருப்பினும் நாசி என்று உனக்கு உண்டோ? வியப்பிலும் வியப்பே‚ நீ எங்கும் நிறைந்துள்ளாய்‚ - குரு நானக்

5.ஓடிப்போகவும் முடியாதவர்களாய் - ஸ்ரீ சங்கரர்

6.சாத்யர்: தட்ச கன்னிகையான சாத்தையிடம் பிறந்த தருமரின் புத்திரர்கள் சாத்யர்கள்.

1.விசுவதேவர்: தட்ச கன்னிகையான விசுவா தேவியிடம் தருமரின் புத்திரர்கள் பதின்மர் விசுவ தேவர்கள்.

2.வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லைƒ தன்னைப் பயன் படுத்துபவரைத் தடுக்கவில்லை. தான் உடைந்து போனாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை. ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டுƒ பயன்படுத்தப்படுவதிலும் ஆனந்தமுண்டு. அந்தச் சமமான ஆனந்தத்தைக் கண்டு கொள்வாய். - ஸ்ரீ அரவிந்தர்.

3.இந்தப் போரில் கண்ணன் ஆயுதம் எடுப்பதில்லை என்ற விரதங்கொண்டு கையில் சவுக்கும் லகானும் பிடித்திருந்தார். திவ்ய ஆயுதங்கள் தாங்கிய வடிவையும் காண விரும்புகிறான் அர்ஜுனன்.

4. நான் அளித்த திவ்யதிருஷ்டியால் நீ கண்டவாறு என் விசுவரூபத்;தை வேறு யாரும் கண்டதில்லைƒ மண் திறந்த வாயில் யசோதை கண்டதும், கௌரவர் சபையில் துரியோதனதியர் கண்டதும் நீ கண்டதற்கொப்பாகாது. - உரையாசிரியர் அண்ணா.

திண்ணையில் "பத்ரிநாத்" என்பவர் உளரியது...

இவ்வார திண்ணையில் பத்ரிநாத் என்னும் முகமதிய ஊதுகுளலொன்று கீள்கண்டவாறு உளறிக்கொட்டியிருக்கிறது.
ராமருக்கும் பாபருக்கும் வித்தியாசம் தெரியாத புலம்பல்....


Article by Mani and badrinath are given below.

-----------------------------------------------------------

Friday September 21, 2007
9 கேள்விகளும் - உண்மையின் மையப்புள்ளியும்
கே. ஆர். மணி


நிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர நேரமே, முதிர்ச்சியோ கிடைப்பதில்லை. சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதன் மூலமே உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி நம்தேடல் தொடங்கும்.

நீண்டு தொடரும்........
சில நேரங்களில் சில கேள்விகள் :

1) பாஜக ஆட்சியில்தானே இந்த சேதுசமுத்திரத்திட்டம் ஆரம்பித்தது ? இப்போது ஏன்
அது எதிர்க்கிறது ? அரசியல் ஆதாயம்தேடித்தானே ?
அப்படித்தான் தெரிகிறது. அப்படியும் இருக்கலாம். எப்போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்கள் அரசியலின் வாக்குறுதியாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் உண்மை முகம் தோற்கடிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாத உண்மை.

2) தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குபதிலாக அவரின் மகள் வீட்டில் செய்தது தவறுதானே ?
ஆம். தவறுதான். மிகப்பெரிய தவறு. குடும்பம் வேறு. அரசியல் வேறு. அம்பை எய்தவனை விட்டுவிட்டு வேடிக்கைபார்ப்பவர்களை முட்டும் அலங்காநல்லூர் மாட்டின் கதைபோலயிருக்கிறது. எதிர்ப்புகள் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அங்கு செய்யமுடியாத கையலாகதனத்தின் வெளிப்பாடே இது. குடும்பம் ஆட்சியில் மட்டும் பங்குபெறுகிறது, பாபத்திலும் பங்கேற்கட்டுமே என்று வால்மீகிக் கேள்விகளை கேட்காதீர்கள். தவறு. தவறுதான். நல்ல மானிடதர்மத்திற்கு அது அழகல்ல.

2. அ) இதன் தொடர்ச்சி/ பின் விளைவு எவ்வாறு அமையலாம் ?

வாய்ப்பு 1 : கொஞ்ச நாளைக்கு பிறகு மறந்துபோகிற அரசியல் சண்டையாக மாறலாம்.

வாய்ப்பு 2 : நாளைக்கு தமிழரிருக்கும் எல்லாயிடங்களிலும் இது தொடரப்படலாம். எப்படி சங்க பரிவாரம் இந்துக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் பிரதபலிப்பு என்று சொல்லப்படுகிறதோ, தமிழக முதல்வரின், ஒரு சில பழுத்து, விழப்போகிற திராவிடத்தலைகளின் காலம் காலமான எதிர்ப்பும், அடித்தளமற்ற ஆரவராமான இந்து எதிர்ப்பும் தமிழகத்தின் மொத்தக்குரலென நம்பப்படலாம். அல்லது நம்புவிக்கப்படலாம்.

வாய்ப்பு 3 : தமிழகத்தில் இந்துத்துவத்தின் வேர் மேலும் ஆழப்படலாம். தேசிய கட்சிகள் தமிழகத்தில் பலப்படுவது மிகமுக்கியமான ஒன்று. ராமரை ஆதரிக்காத திராவிட கட்சிகள் அடுத்த மாநிலத்திற்கு தாவுவதற்கு/ பரவுவதற்கு நல்ல காரியமாய் அமையலாம்.

வாய்ப்பு 4 : [நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள் ]

3) தமிழக முதல்வரின் பேச்சு இந்துக்களின் இதயத்தை புண்படுத்துவதாக அமைவதாயிருக்கிறதே. இவரது எதிர்ப்பை வேறு நல்ல வார்த்தைகளில் சொல்லியிருக்க கூடாது ?

இது என்ன புதுசா ? இந்து திருடன், இது சூத்திர ஆட்சி, ஏன் சீதை முதுகில் மூன்று கோடில்லை என்பதான மலிவான, ஆரோக்கியமற்ற தளத்திலிருந்து எழுந்த கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும். இரத்தத்திலே ஊறிய திராவிட பராம்பரியத்தின் எதிர்ப்புக்கொள்கைதானேயிது. எதிர்த்தாலும் நல்ல, ஆரோக்கியமான வார்த்தைகளால் எதிர்க்கிற கம்யூனிஸ்டு கட்சிகளின் முதிர்ச்சியை நீங்கள் எதிர்பார்ப்பது உங்களின் தவறு. மற்றவர்களை புண்படுத்துவதன் மூலமும், ஆக்ரோசமாய், நாராசமாய் பேசுவதன் மூலமே தங்களின் கருத்துக்கள் பரப்பப்பட முடியும் என்று நம்புகிற தத்துவ ஆதாரமும், சில போலியான வெற்றியும் கொண்டவர்களிடம் வேறேதை எதிர்பார்க்கீறீர்கள். கனிமீது நம்பிக்கையற்று காய் மீதான நம்பிக்கை கொண்ட பழைய தலைமுறையது. கனிந்தால் நல்ல மொழி வருமென எதிர்பார்ப்பதைவிட வேறென்ன சொல்ல ?

4) ராமசேது சமுத்திரத்தை ஒரு நடுநிலை இந்தியான எப்படி எதிர்கொள்வேன் ?
ராம் கட்டியதாகவேயிருந்தாலும், ராம் ஒரு தியாகத்தின் பிரம்மம். வேறு வழிகளிருந்தாலும் தான் கட்டிய பாலத்தை இடிக்கவேண்டுமென்றால் தயக்கமின்றி தருபவன். தனது அரசாங்கப்பதவியையே தந்தவனுக்கு இது சூஜுபி.. இதை இடிப்பதன் மூலம் மட்டுமே பாலம் கட்டமுடியும் என்ற நிலையிருந்தால் அவன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பிக்கலாம். மற்ற வழிகளிலும் குறைந்த செலவில் அதுமுடியுமென்ற பட்சத்தில் அதை கையாள்வதே சிறந்தது. நம்புவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் ஒரு லெவல்

ப்ளேயிங் பீல்டு கொடுத்தாகவேண்டும். நம்புவர்களுக்கு - நாட்டில் நலந்தான் முக்கியமென உணரச்செய்யலாம். என்ன தேர்தல்முடியும் வரை பொறுத்திருக்கவேண்டும் ஒரு ஆரோக்கியமான விவாத சூழலுக்காக.

5) 'சிவில் போர். .போய்க்கொண்டிருக்கிறது. எரிகிற தீயில் முதல்வரின் வார்த்தைகள் எண்ணெய் ஊற்றும்..' அத்வானியின் கமெண்ட் ?

பதில்: ஓவர் பில்டப். இல்லாத போரை எதற்கு தேவையில்லாமல் ஆரம்பிப்பானேன்..செய்ய வேண்டியது நிறையயிருக்கிறது. தமிழகத்தில் பாஜ காலுன்ற இந்த திராவிட மண்குதிரைகள் தேவைதான். எவ்வளவு சீக்கிரம் தேசிய கட்சிகளின் பலத்தை பெருக்கமுடியுமோ அவ்வளவு சீக்கரம் வளர்க்கப்பாருங்களய்யா..

6) ஒரு முஸ்லிம் கடவுளை இப்படி சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும் ?
இது ஒரு தேவையற்ற ஆனால் தேவையான ஒப்பிடு. உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி போகிற எந்த இந்துவுக்கும் இந்த உறுத்தலிருக்க கூடாது. அதுதான் வாசுதேவ குடும்பகத்தின் சிறப்பே. ஆனால் பொய் மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரசு முதலான கட்சிகள், இதை ஆழமாய் யோசிக்கவேண்டும்.

7) சங், தமுமுக, விஹபி போன்ற அடிப்படைக்குழுக்கள் தேவையானவையாயென்ன ? அவற்றை அழிப்பதால் நிரந்திரமான அமைதி ஏற்படுமல்லவா ?
வீட்டிற்கு எப்படி காவலாளி முக்கியமோ அதுபோல அடிப்படை குழுக்களான விஎஸ்பி போன்ற குழுக்கள் அவசியம். அவைகள் வீட்டிற்கு வெளியில் தேவையான வேலைக்கு மட்டுமே நிறுத்தப்படவேண்டுமேயன்றி, வீட்டின் தலைவனுக்கான அதிகாரத்தை வாசலின் கூர்கா எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிப்படை குழுக்கள் எல்லா மதத்திற்கும் அவசியமானதும் கூட. ஆனால் அவை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவை எழுப்பும் குரல்களின் நியாயம் பொதுத்தளங்களுக்கு உடனடியாக கொண்டுவரப்படவேண்டும். சரிசெய்யப்படவேண்டும். ஒரு தரமான ஜனநாயகத்தின் வேலை இதுபோன்ற அடிப்படைக்குழுக்களுக்கு அதிகமான வேலை இல்லாமல் செய்வதேயாகும். இது முஸ்லிம் குழுக்களுக்கு பொருந்தும். அவையனைத்தும் ஜனநாய
கோட்டுக்கள் நின்று செயல்படவேண்டுமென்பதை சொல்லத்தேவையில்லை.

8) காங்கிரசு ஏன் திமுகவை இப்படி பேசாதீங்க என்று சொல்லக்கூடாது ?
அப்பூ.. என்ன ஜோக் சொல்றீங்க.. ஏற்கனவே சிவப்பு குத்து தாங்கமுடியலை. திருப்பி கறுப்புகிட்டவேற அடிவாங்கணுமா.. எங்களுக்கு அப்படியெல்லாம் தீர்மானமான மானம், கொள்கை, கருத்துன்னு வெச்சிக்கரதில்லை.. நாங்க தீர்மானமாயிருக்கறது.. எப்படியாவது
அஞ்சு வருசத்தை கழிச்சு கூட்டிடணும்னுதான.. என்று யாராவது காங்கிரசுக்காரர் சொன்னால் நீங்கள் யாரும் அதிர்ச்சியடையமாட்டீர்கள்தானே.. காங்கிரசு, மற்றும் பிஜேபி கட்சிகளிடம் கொஞ்சம் கண்டிப்பாய் நடந்துகொண்டால் இந்த மாதிரி
தான் தோன்றித்தனமான பிரச்சனைகள் தாண்டி நம் தேசம் முன்னேறும்.
தேசிய கட்சிகளேநீங்கள் உண்மையிலே ஆன்ம பலம் பெறவேண்டிய நேரமிது. நீங்கள் அரசியல் அரங்குகளின் ஜோக்கர்களாக மாற்றப்பட்டீர்கள் என்பது தான் சோகமான உண்மை. சாட்டைக்குப்பயந்து உங்களின் ஆட்டம் நாட்டிற்கு நல்லதல்ல. இது உங்களுக்கான புழுதிவாரித்துற்றல் நேரமல்ல. வருகிற தேர்தலுக்கும் முகம் காக்கும் கவசமாய் வார்த்தை ஜம்பம் விளையாடவேண்டாம். ஒரு மத நம்பிக்கை எவ்வளவு தூரம் விவாதிக்கப்படலாம் என்பது பற்றிய ஆரோக்கியமான

கட்சிதாண்டி விவாதம் வருவதற்கான அருமையான தருணமிது. காங்கிரசு கட்சி நல்ல மென்மையான, முதிர்ந்த தலைவர்களை கொண்டகட்சி. அது தனது குரலை உயர்த்தி கோடு கிழிக்கும் நேரம். உங்களுக்கென எப்போதும் பயணிக்கிற திராவிடக்குதிரையென்று
எதுவுமில்லை. ஆனாலும், உங்கள் குரலின் உண்மை நடுநிலை இந்துக்களின் வலிக்கு கொஞ்சம் மருந்து தடவலாம். பாஜக மட்டுமல்ல காங்கிரசும் எப்போது தேவையோ அப்போது இந்துக்களுக்காக பேசும் என்று நம்புவார்கள்.

9) கண்ணகி கரடியென்றவுடன் கத்தியகுரல் ஏன் ராமனுக்கு மட்டும் அபஸ்வரம் வாசிக்கிறது ?
நம்பிக்கை என்பது எல்லாவற்றிகும் ஒன்றுதான் என்று நம்ப மறுத்து பழக்கப்பட்ட மனம். கண்ணகி ஒட்டு வாங்கித்தருவாள். ராமன் ஒட்டு வாங்கித்தருவாரா ? ராமன் தோட்டத்திலும் நம்பிக்கை மணக்கலாம் என்று நம்பவுதற்கு நாமென்ன பகுத்தறிவற்றவர்களாயென்ன ?
கூடிய விரைவில் தமிழக பாடப்புத்தகத்தில்/கேள்வித்தாளில் இவை இடம்பெறலாம் :

அ) ராம் - குடிகாரன் - கட்டுரை வரைக.

ஆ) இந்து என்றால் திருடன் என்று பொருள்.. விளக்கவுரை எழுதவும்.

இ) சீதை எந்த நர்சிங்ஹோமில் குழந்தை பெற்றாள் ? ஆதாரத்துடன் படம் வரைக.

ஈ) தசரதன் சாப்பிட்ட லேகியமேது ? எவ்வாறு இத்தனை மனைவிகளை சமாளித்தார் ?

எ) ஆரியமாயை - நீள்கட்டுரை வரைக..

ஏ) கண்ணகியின் திருப்புகழ் எழுதவும்.

[உங்களுக்கும் சில வினாக்கள் சேர்க்கவேண்டுமெனில் திண்ணைக்கு அனுப்புங்கள். திண்ணை ஆவன செய்யும்.]
mani@techopt.com
திண்ணையில் கே. ஆர். மணி Copyright:thinnai.com 


----------------------------------------------------------------------------

Thursday September 27, 2007
மேலும் சில விடை தெரியாத கேள்விகள்
பத்ரிநாத்


திருகே ஆர் மணி அவர்கள் நீண்ட கேள்வி பதில் பகுதியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

1) ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்டதா இல்லை என்ற விவாதமே இன்னமும் ஓயாத போது, அது ஒரு புனித சின்னம், மதச் சின்னம், பராம்பரிய கலை என்றெல்லாம் குதிக்கும் அத்வானிகள், பாபர் மசூதியை இடிக்கும் போது ஏன் இந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை.? சேது பாலம் புனித சின்னம், புராதனச் சின்னம் என்றால், பாபர் என்ற மன்னர் கட்டிய அந்த மசூதி மட்டும் புடலங்காய்ச் சின்னமா..?

2) சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இசைவோடு சட்டப் படி ஆரம்பிக்கப் பட்ட ஒரு திட்டம். ஏந்த சட்டப்படி (?) பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

3) இந்திய சட்டவழி முறைகளுக்கு உட்பட்டு ஒரு திட்டமாக நடப்பதையே எங்கள் மனம் புண் படுகிறது என்று கூவினால், அக்கிரமமாக ஒரு வழிபாட்டு இடத்தை இடித்துத் தரை மட்டமாக்கினால் அவர்கள் மனம் புண் படாதா..? அல்லது அவர்கள் மனம் உங்களுக்குக் கிள்ளுக்கீரையா..? எந்த நாத்திகர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்..?

3) மனிதப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றிற்கு காரணம் திராவிட இயக்கமா, தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையா அல்லது இந்தப் பரஸ்பர மதவெறியா ? (மனசாட்சியைக் கேட்டால் தெரியும்.) சிந்தனையைத் தூண்டுவது பெரியாரின் பகுத்தறிவா அல்லது பரிவாரங்களின் மதவெறியா..?

4) ராமன் என்பவன் உண்மையா அல்லது கற்பனையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி ஒரு வாதத்திற்காக உண்மை என்றே வைத்துக் கொண்டால், அவன் "சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்தான்" என்று கூறி அவனவன் குலத் தொழிலை அவனவன் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டு சம்புகன் தலையை ராமன் வெட்டினான் என்ற செய்தியும் அதில் சொல்லப் பட்டுள்ளதே.. அதுவும் உண்மைதானே..?

5) ராமனின் வாரிசாக தன்னை பாவித்துக் கொண்டிருக்கும் வேதாந்திகள் நிறைந்ததுதானே அனைத்து மதவெறி ஸ்தாபனங்கள்? "எதைச் சொன்னாலும் நம்பிவிடாதே.. நான் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு யோசி.. என்னையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கு" என்ற பெரியாரிசம் ஜனநாயகமானதா..? பேசினாலே தலையை வெட்டுவேன்.. நாக்கை அறுப்பேன் என்ற மதவெறி ஜனநாயகமானதா..?

6) மற்றவர்களை புண் படுத்துவது போல பேசுவது, ஆக்கிரோசமாய் பேசுவது, நாராசமாய்ப் பேசுவது திராவிடக் கட்சிகள் என்கிறீர்கள். சரி என்று அவர்களைக் கேட்டால், வால்மீகி ராமாயணத்திலிருந்து (சமஸ்க்ருத மொழி பெயர்ப்பு மதிப்பிற்குரிய சீனுவாச அய்யங்கார்) எடுத்துச் சொல்வதுதானே தவிர சொந்தக் கற்பனை அல்ல என்கிறார்கள். ஆனால் இந்து அமைப்புகள் தங்கள் கூட்டத்தில் பிற மதத்தினரை குறிப்பாக முஸ்லிம் மதத்தினரை எப்படிப் பேசுவார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா..?

7) கண்ணகிக் கதையை மறுபடியும் கையில் எடுத்துள்ளீர்கள். உங்கள் ராமன் மாபெரும் அரசன். சகல வசதி வாய்ப்புக்கள் கொண்டவன். கண் அசைத்தால் பணிவிடை செய்ய பலர் தயாராக உள்ளவன். ஆள் அம்பு சேனை கொண்டு, வர்ணாஸ்ரமத்தைக் காத்தவன். ராவண வதம், சம்புக வதம், வாலி வதம் ஆகியவை புரிந்தவன்.. ஆலோசனைகள் சொல்ல பல ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களால் சூழப்பட்டவன்.. ஆனால் எங்கள் கண்ணகி சாதாரணமானவள். எந்த செல்வாக்கும், ஆள் பலமும், பின் புலமும் இல்லாத ஒரு சமானிய, சராசரிக் குடும்பப் பெண். ஆனால் ஒரு அரசனையே நீதி கேட்டு சங்கநாதம் செய்தவள். இப்போது சொல்லுங்கள் நாங்கள் யாரை போற்றுவோம். ? ( குறைந்த பட்சம் women empowerment என்று பேசுபவர்கள் கூட இதில் மயங்கலாமா?)

8) ஒரு பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேச முடியுமா..? என்று கேட்டால், உண்மை.. முடியாதுதான். நம்நாடு எதைப் போல ஆக ஆசைப் படுகிறோம்.. இன்னொரு பாகிஸ்தானைப் போலவா.. அல்லது அமெரிக்க வல்லரசைப் போலவா..? பாகிஸ்தானில் அதன் அதிபராக இருந்த நவாஸ் செரீப்புக்கே ஜனநாயகம் இல்லையே.. அதைப் போலவா நம் நாடு ஆக ஆசைப் பட வேண்டும்..?

9) நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனும் "Scientific Temperament" வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அப்படியென்றால் அது பகுத்தறிவு சம்பந்தப் பட்டதா ? அல்லது மதவெறி உணர்வா..?
பத்ரிநாத்

Wednesday, 26 September 2007

மலர்மன்னன் திண்ணை கட்டுரை - சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

Thursday September 20, 2007

சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

மலர் மன்னன்

ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர். அதாவது பாலத்திற்கு அதிபதி. ஆனாலும் பாலமே இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் ஸேது ஸமுத்திரக் கால்வாய் திட்டம்? ஸேது ஸமுத்திரம் என்பது காலங்காலமாய் இருந் து வரும் அடையாளம் என்பதால்தானே? வழக்கு என்றால் வெறும் மணல் திட்டுகளின் தொகுப்பு என்பார்கள். ஆனால் அடையாளப் படுத்த மட்டும் பாலம் என்பதைத்தான் பயன் படுத்துவார்கள்! ஏன் இந்த முரண்பாடு?


கால வெள்ளத்தின் பின்னால் இன்னும் கொஞ்சம் போனால் ஸ்ரீராம ஸேது என்கிற அடையாளம் தெரியும். அது ஹிந்து தேச கலாசாரத்தின் அடையாளம். மர்யாதா புருஷோத்தம் ராமபிரானும் கீதாசாரியன் கண்ணபிரானும் ஒவ்வொரு ஹிந்துவின் அணுவிலும் உள்ளனர். சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, சிறுவர்கள் யாவரும் ஸ்ரீராமர், சிறுமியர் எல்லாம் சீதையரே என்று பெருமிதம் கொள்ளும் ஹிந்துக்களிடம் ராமர் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சொன்னால் எதிர்வினை என்னவாக இருக்கும்? அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவரவர் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.


ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா என வழங்கப்படும் ஹிந்துஸ்தானத்துத் தொல்லியலாய்வு மற்றும் பராமரிப்பு அரசினர் நிறுவனம் இதுவரை ஸ்ரீராம ஸேது பற்றி எவ்வித ஆய்வும் செய்ததுமில்லை, அறிக்கை தயாரித்து ஆவணப் படுத்தியதுமில்லை. ஆகவே ஸ்ரீராம ஸேது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான அருகதை அதற்கு இல்லை. மத்திய அரசின் கலாசாரத் துறை அதனிடம் தகவல் கேட்டபோதே இது பற்றி நாங்கள் ஆய்வு ஏதும் செய்ததில்லை என்றுதான் நியாயமாக அது பதிலளித்திருக்க வேண்டும்.


ஸ்ரீராம ஸேதுவைத் தொல்பொருளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லை என்று தொல்லியல் ஆய்வு மற்றும் பராமரிப்பு நினைத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது தன் கடமைகள் யாவை என்பதையே சரியாக அறியவில்லை என்று அர்த்தம். வெறும் புராதனக் கட்டிடங்கள் மட்டுமல்ல, இயற்கையாகவே அமைந்த நூதனமான கலாசார அடையாளங்களையும் இனங் கண்டு பாதுகாத்துப் பராரிப்பது அதன் கடமை. ஆர்க்கியாலாஜிகலை ஆர்க்கிடெக்சராஜிகல் என்று கண்டுபிடித்திருகிறார்களா என்ன?


ஸ்ரீ ராம ஸேது ஒரு நீண்ட நெடிய கால கலாசாரத்தின் அடையாளம். தொன்மையான தொரு மாபெரும் சமூகத்தின் உயிரோட்டத்தில் இறண்டறக் கலந்துவிட்ட நம்பிக்கையின் அடையாளமும் கூட. நமது தொல்லியல் துறையில் பொதுவாகப் புராதனக் கட்டிட நிர்மாணங்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத்தான் வைத்திருப்பார்கள்.


ஆயிரமாயிரம் ஆண்டு வயதான மரங்கள் கல்லாகிப் போய்விடுவதுபோல் எந்த யுகத்திலோ முறையான பாலம் அமைக்க வேண்டிய அவசியமோ அதற்கான அவகாசமோ இன்றிக் கடலில் பாதை அமைக்க அணை கட்டுவதுபோலப் பாறைகளை இட்டு நிரப்பிய அமைப்பின் மீது கால வெள்ளம் போர்த்தி மூடிய மணல் கெட்டித்துப் போய், உடைத்து எறிந்தால்தான் அகற்ற இயலும் என்னும் அளவுக்குக் கவசம்போலாகிவிட்டது பற்றி மத்திய அரசின் கலாசார அமைச்சகம் தனது அறியாமையின் காரணமாக விசாரித்தாலும் அல்லது உச்ச நீதிமன்றமேகூடக் கேட்டிருந்தாலும் எங்களிடம் இது பற்றி விவரம் இல்லை. காலாசாரம் தொடர்பான ஆய்வாளர்களிடமோ ஆன்மிகப் பெரியவர்களிடமோ கேளுங்கள் அல்லது புவிஇயலாளரிடம் விசாரியுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், அந்த ஆர்க்கியாலாஜிகல் சர்வே? அதற்கு மாறாக அதிகப் பிரசங்கித்தனமாகச் சம்பந்தா சம்பந்தமின்றி ஒரு அறிக்கை தந்தால் அவ்வாறு தருமாறு அது நிர்பந்திக்கப்பட்டிருக்கும் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. தொல்லியல் துறை என்ற முறையில் இதுபற்ற்றி ஆய்வு செய்து எங்கள் கருத்தைத் தெரிவிக்கிறோம், அவகாசம் தாருங்கள் என்றாவது அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்; அவ்வாறில்லாமல் ராமபிரான் இருந்ததற்கே வரலாற்றுச் சான்று இல்லை, ஆகவே அவர் கட்டியதாகக் கூறப்படும் பாலத்திற்கும் வரலாற்றுச் சான்று இல்லை என்று வாக்குமூலம் அளித்தால் அது வெளி நிர்ப்பந்தமாக இருக்கக்கூடுமேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?


இந்த ஐயப்பாட்டின் முள் முனை மூவரை நோக்கி நீள்கிறது. ஒருவர் மத்திய கலாசார அமைச்சர் சோனி, சட்ட அமைச்சர் பரத்வாஜ் மற்றும் என்ன காரணத்தாலோ ராமர் பாலத்தை உடைத்தே தீருவது எனத் துடித்துக்கொண்டிருக்கும் மத்திய தி மு க கடல் வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு. அரசு அதிகாரிகளை இவர்கள் நிர்ப்பந்திதிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் இம்மூவரையும் மன்மோஹன் சிங் தமது அமைச்சரவயிலிருந்து நீக்கியிருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தாம் வெறும் பொம்மலாட்டப் பிரதமர்தான் என்பதை இந்த விஷயத்திலும் நிரூபித்திருக்கிறார். இதில் அமானுஷ்ய மவுனம் நீடிப்பதால் னமது சந்தேக முள் சோனியா காந்தியை நோக்கியும் நீள்கிறது.


ஸ்ரீராமர் என்று ஒருவர் இருந்தார் என்று ஒப்புக்கொண்டால்தானே ஸ்ரீ ராமர் கட்டிய பாலமா அல்லவா என்கிற விவாதம் எழும், ஆகவே ஸ்ரீ ராமபிரான் இருந்ததற்கே ஆதாரம் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று ஹிந்துதானத்தின் கலாசாரம், நம்பிக்கை, புனிதம் ஆகியவை பற்றி ஏதும் தெரிந்துகொள்ள முனையாத கிறிஸ்தவரான மத்திய காலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனியோ, தேர்தலில் வெற்றிபெற்றமைக்குக் குறிப்பாகக் கிறிஸ்தவர்களுக்கு நன்றி சொன்ன தி மு க மத்திய கடல்வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவோ அவர்களை வற்புறுத்தியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுமானால் அது நியாயம்தானே?


ஒரு நாட்டின் மலைகள், நூதனமான புவியமைப்புகள், விசாலமான நீர்நிலைகள் முதலானவை யாவும் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் கலாசாரத்தின் அடையாங்கள். அவற்றுக்கு மூலாதாரமாக இருப்பவை மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஊற்றுக்கண் சமயம், அதாவது அந்த நாட்டின் மண்ணுகே உரித்தான மதம். புராதன நாகரிகங்கள் தவழ்ந்த எகிப்து, பாலஸ்தீனம் (இன்றைய இஸ்ரேல் உள்ளிட்ட பகுதி), கிரேக்கம் முதலான இடங்களில் இத்தகைய சமய நம்பிக்கை சார்ந்த இயற்கையாகவே உருவான கலாசார அடையாளங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காணலாம். ஜெருசலேத்தில் உள்ள ஒரு குன்றிலிருந்துதான் தம் இறை தூதர் குதிரை மீதேறி வானுலகு ஏகினார் என்பது முகமதியர் நம்பிக்கை. அந்தக் குன்று அவர்களுக்கு ஒரு புனிதச் சின்னம். உங்கள் இறை தூதர் இந்தக் குன்றின் மீதிருந்து குதிரை ஏறி வானுலகு ஏகியமைக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. சொல்லிவிட்டுப் பத்திரமாக வீடு திரும்பவும் முடியாது!
மிகத் தொன்மையான ஹிந்து நாகரிகத்தின் தொட்டிலான பழம் பெரும் பாரத பூமியிலும் ஏராளமான இயற்கை அமைப்புகள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவான கலாசார அடையாளங்களாகத் திகழ்வதில் வியப்பில்லை.


விழுப்புரம் அருகில் கண்ட மானடி என்ற பெயரில் ஒரு சிற்×ர். இங்கதான் சீதை கேட்ட பொன்மானை ராமர் அடிச்சாரு என்று நேரில் கண்டதுபோல ஒரு பொட்டலைக் காட்டிச் சொல்கிறான் அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சிறுவன்! இதற்கு என்ன சொல்வது? ஆழப் பதிந்த அவனது நுட்மான உள்ளுணர்வைச் சிதைத்துப் போடுவதுதான் பகுத்தறிவு போலும்! தனது கிராமத்தில்தான் ராமபிரானும் சீதை பிராட்டியாரும் தங்கிச் சென்றனர் என்கிற அந்தச் சிறுவனின் பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வை ஏளனம்
செய்வது என்ன நாகரிகம்? பண்பாடுள்ள எவரும் இத்தகைய நுண்ணுணர்வுகளை ஏளனம் செய்யவோ அவமதிக்கவோ மாட்டார்கள்.


ராமர் பாலம் இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொகுப்பு என்று அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆய்வு மையம் சொல்லிவிட்டதாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் நாஸா இதுபற்றிய தனது கருத்தை வெளியிடுகையில் முடிவாக என்னதான் சொல்லியிருக்கிறது?


பூமியைச் சுற்றி வரும் செயற்கை கோள்களில் பொருத்தபட்டுள்ள தொலை தூர உணர்வுப் பதிவுக் கருவிவிகளும் புகைப்படக் கருவிகளும் இதுபோன்ற திட்டுகள் எவ்வாறு தோன்றின என்றோ , அவை தோன்றி எத்தனை காலம் ஆயிற்று என்றோ நேரடியான தகவலைத் தரக் கூடியன அல்ல. அவை மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையா அல்லவா என்றும் அவற்றின் மூலம் திட்ட வட்டமாகக் கூற முடியாது என்றுதான் நாஸா அதிகாரி மார்க் ஹெஸ் அறிவித்திருக்கிறார். அதாவது ராமர் பாலம் இயற்கையாகத் தோன்றிய மணல் திட்டுகளின் தொகுப்பா அல்லது மனித முயற்சியால் உருவான அமைப்பா என்று எங்களால் சொல்ல முடியாது என்று அதற்குப் பொருள்!


ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே அச்சு அசலாக ஒரு பாலம் போலவே தோற்றமளிக்கும் அமைப்பு ஸ்ரீராம பிரான் தம் துணைவர்களின் உதவியால் உருவாக்கியது என்ற கருத்தை நாஸா உறுதி செய்யவும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை! ஆனால் ஹிந்துக்களின் நம்பிக்கைகள், மன உணர்வுகள் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதில் மகிழ்ச்சியடையும் தகவல் தொடர்பு சாதனங்களும் அரசியல்வாதிகளும் நாஸாவின் கருத்திற்கு மாறான தகவலைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்!
ஹிந்துஸ்தான அரசின் கலாசார அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் அரசு சார்ந்த அமைப்புமே ஸ்ரீராம ஸேது பற்றிப் பொறுப்பில்லாமலும், கலாசார நுட்பம் தெரியாமலும் ஒரு வாக்கு மூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமது சிறுபிள்ளைத்தனத்தை பகிரங்கப் படுத்தக் கூடுமானால் நமது பொறுப்பிலிருந்து கை நழுவிப் போய்விட்ட திருக்கயிலாயத்தின் நிலை என்னவாகுமோ என யோசிக்க வேண்டியுள்ளது.


திருக் கயிலாயம் திபேத்தினுள் இருந்த போதிலும் ஹிந்துஸ்தானத்திற்கு வெகு அருகாமையி லுள்ளதுதான் என்பது வரைபடத்தைப் பார்த்தால் தெரியும். வட கிழக்கேஇமய மலையின் ஓர் அங்கமாகவே திகழ்வது திருக் கயிலாயம். ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள், திபேத்தின் பவுத்தத்திற்கு முற்பட்ட புராதன சமயத்தினர் ஆகிய அனைவருக்குமே சமய நம்பிக்கையின் அடிப்படையில் மிகப் புனிதமாக இருந்துவரும் திருக் கயிலாயம், கம்பீரமாக எழுந்து நிற்கும் ஒரு கரிய நிறக் கற்பாறை. பெரும்பாலும் பனிப் போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டிருப்பதால் அது வெண்ணிறமாய்ப் பொலிகிறது. சூரிய ஒளி படும்போது அது மஞ்சள் நிறமாகவும் ஆரஞ்சு வண்ணத்திலும் ஒளிர்கிறது! ஸிந்து, சட்லெட்ஜ், பிரம்மபுத்திரா முதலான ஆறுகளின் தோற்றுவாய் அது. ஞான பூமிக்காகப் பணி செய்து வந்த நாள்களில் தலங்கள் பலவற்றுக்கும் சென்று அவற்றின் தனிச் சிறப்பு குறித்து எழுதி வந்த நான் திருக் கயிலாயமும் சென்று வர வேண்டும் என மணியன் விரும்பினார். அதற்கான நடைமுறைப் பணிகளும் தொடங்கின. ஆனால் குடும்பப் பிரச்சினை ஒன்றால் அந்த அரிய வாய்ப்பை இழக்க நேரிட்டது.


ஹிந்துஸ்தானத்தின் தென்கோடியிலுள்ள தமிழகம் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் எவ்வித வசதியையும் எதிர்பாராமல், எத்தகைய இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் திருக் கயிலாய யாத்திரையைக் காலங் காலமாக மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இருந்ததில்லை!
1950 ல் சீனா துராக்கிரமாகத் திபேத்தை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு ஹிந்துஸ்தானத்திலிருந்து எவரும் திருக் கயிலாயம் செல்வதற்கு சீன அரசு அனுமதிக்கவில்லை. 1980 ல் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக ஆண்டு தோறும் பாரதத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் திருக் கயிலாய தரிசனம் செய்ய சீன அரசு அனுமதித்தது. எனது ஞாபகம் சரியாக இருக்குமேயானால் சுப்பிரமணியம் ஸ்வாமி இதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார் எனலாம்.


இன்று உரிய கட்டணம் செலுத்திச் சீனாவின் அனுமதிச் சீட்டைப் பெறாமல் பாரதத்திலிருந்து எவரும் திருக் கயிலாய யாத்திரை மேற்கொள்ள இயலாது! திபேத் இன்று சீனாவுக்குச் சொந்தம். ஆகவே திபேத் எல்லைக்குள் உள்ள திருக்கயிலாயமும் சீனாவுக்குச் சொந்தமாகிப் போனது!


சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோதே நேரு அதனைத் துணிவுடன் கண்டித்து சர்வ தேசப் பிரச்சினையாக்கியிருந்தால் அன்றைக்கு இருந்த கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையில் அமெரிக்காவும் மேற்கத்திய வல்லரசுகளும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக இறங்கியதால் சிறிது சலிப்புற்றிருந்த ரஷ்யா பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கியிருந்திருக்கும். மேலும் தொடக்கத்திலிருந்தே ரஷ்யாவுக்கு சீனாவின் மீது அப்படியொன்றும் பந்த பாசமில்லை. அங்கும் கம்யூனிஸம் காலூன்றியதால் ஒரு சம்பிரதாயமான இசைவுதான் இருந்தது (பிறகு இரண்டுக்குமிடையே எல்லைப் பிரச்சினை எழுந்து பிணக்கும் தோன்றியது). 1949ல்தான் பிறந்திருந்த செஞ்சீனமும் நெருக்கடியைச் சமாளிக்க இயலாமல் பின் வாங்கியிருக்கும். திபேத் தொடர்ந்து ஒரு சுயாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாக நீடித்திருக்கும். திருக்கயிலாய புனித யாத்திரை மேற்கொள்ள சீனாவின் தயவை எதிர் நோக்கியிருக்கும் தலைக் குனிவும் நமக்கு நேர்ந்திருக்காது. நேருவின் மார்க்ஸிய மயக்கம் சீனாவின் மீதான மயக்கமாகிவிட்டதால் அதன் அத்துமீறலை அவரால் எதிர்க்க இயலவில்லை. இந்தி சீனி பாய் பாய் என்றார்; பிறகு அதற்கும் நம்மை விலை கொடுக்கச் செய்துவிட்டுப் போனார்!


1962 ல் சீனா பாரதத்தின் மீது படையெடுத்து, வட கிழக்கு இமய மலைப் பகுதியில் பாரதத்திற்குச் சொந்தமான பெரும் பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து தனதாக்கிக்கொண்டு விட்டது. பல்லாயிரக் கணக்கான சதுர மைல்கள் பரப்புள்ள பகுதியை சீனாவிடம் இழந்துவிட்ட மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம் குறித்து நாடாளுமன்றத்த்தில் கடும் விமர்சனம் எழுந்தது.


அப்போது, பிரதமராகப் பொறுப்பு வகித்த நேரு, ஒரு புல் பூண்டு கூட முளைக்காத வெறும் பனிப் பாலைவனத்தைத்தான் சீனா தன் வசமாக்கிக் கொண்டுள்ளது என்று சமாதானம் சொன்னார்.


உடனே எதிர்க் கட்சி வரிசையிலிருந்த லோஹியாவோ அன்றி காமத்தோ எழுந்து, பிரதமர் அவர்களே உங்கள் மண்டையும் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கையாகத்தான் கிடக்கிறது. அதற்காக உங்கள் தலையை யாராவது பறித்துச் செல்ல ஒப்புவீர்களா என்றுகேட்டார். அதற்கு நேருவால் அசட்டுச் சிரிப்புச் சிரித்துத்தான் சமாளிக்க முடிந்தது.


மெய்ஞானத்தை மதிக்காத விஞ்ஞானத்தை மனித சமுதாயம் மேற்கொண்டதால்தான் இன்று உலகமே இயற்கையின் பலவாறான சீற்றங்களுக்கு இலக்காகியுள்ளது. சுற்றுப்புறச் சூழலின் சீரழிவுக்குக் காரணமே இயற்கையின் தோற்றத்தில் இறைச் சக்தியைக் கண்டு அதனை மதிப்பதற்கும் மகிழ்வதற்கும் மாறாக எந்த வகையில் அந்த இயற்கை அமைப்பைச் சிதைத்து ஆதாயம் அடையலாம் என்று பேராசைப்பட ஆரம்பித்ததுதானே!


அதிலும் மக்களின் மன உணர்வுகளையோ நுட்பமான அழகியலையோ சிறிதும் மதிக்காத சீன அரசு ஏதேனும் ஆதாயம் கருதி தன் வசமுள்ள கயிலாய பர்வதத்தைச் சிதைக்கவோ அதன் மீது ஏதேனும் கருவிகளைப் பொருத்தவோ, அல்லது திருக் கயிலாயத்தையே முற்றிலுமாக அகற்றிவிடவோ முற்பட்டால் என்னவாகும்?


தனது பேராசையை நிறைவேற்றிக்கொள்ள எத்தகைய முறைகேட்டையும் செய்யத் தயங்காதவர்கள் இன்றைக்கு சீனாவில் அதிகாரம் செலுத்துபவர்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஒரே பண்டத்தை மிக உயர்ந்த தரம், நடுத்தரம், கடைத்தரம் என்று மூன்று விதமாக உற்பத்தி செய்து உலகச் சந்தையில் நபர்களின் தன்மைக்கு ஏற்ப விற்கிற ஒழுக்கங்கெட்ட தேசம் எனப் பெயர் எடுத்துள்ள தேசம் இன்றைய சீனம்!


இத்தகைய சீனா கவர்ந்துகொண்ட நிலத்தைப் பற்றிச் சர்வ சாதாரணமாகக் கருதிய நேருவின் வழி வந்தவர்களின் கையில்தான் இன்று அதிகாரம் உள்ளது.


மக்களின் மன உணர்வுளைச் சிறிதும்பொருட்படுத்தாமல் தனது எல்லைக்குட்பட்ட ராமர் பாலத்தைப் பற்றி அலட்சியமாக வாக்குமூலம் அளித்து, அந்தப் பாலத்தைத் தகர்ப்பதில் எவ்விதத் தயக்கமும் தனக்கு இல்லை எனத் தனது சொரூபத்தை பகிரங்கப் படுத்தி விட்ட காங்கிரஸ் வசமுள்ள இன்றைய பாரத அரசு, ஒருவேளை சீனா திருக் கயிலாயத்தைச் சிதைக்க முடிவு செய்தால் அதுபற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாது என்றுதானே எண்ண வேண்டியிருக்கிறது?


இன்றைக்கு இருக்கிற கங்யூனிஸ்ட் ஆதரவு பாரத காங்கிரஸ்தி முக கூட்டணி அரசு, பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளை மதிக்காத அரசு. எத்தகைய பாதகத்தை விளைவித்தாலும் அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என்று அலட்சியம் செய்யும் அரசு. கண் துடைப்பாகச் சிறிதளவு பரிகாரம் செய்வதுபோலக் காண்பித்தாலேயே திருப்தியடைந்துவிடும் ஒட்டகக் கூட்டம் என்று பெரும்பான்மை மக்களை துச்சமெனக் கருதும் அரசு.
எனவேதான் ராமர் பாலத்தோடு கூடவே திருக் கயிலாயம் பற்றிய கவலையும் எழுகிறது.
(1950ல் சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோது, பாரத அரசு சீனாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. வல்லபாய் பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் நேருவுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றிருந்ததால்தான் அது சாத்தியமாகியது.அமெரிக்காவும் பிரிட்டனும் பாரதத்தின் நிலைப் பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாகவே சீனா பாரதத்தின் மீது உள்ளூரப் பகைமை கொள்ளலாயிற்று. எவ்வித முறைகேட்டுக்கும் தயங்காத சீனாவிடம், அரசியல், பொருளாதாரம், வாணிபம் என எல்லாக் கோனங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. திண்ணை வாசகர்கள் விரும்பினால் இதுபற்றி ஒரு தனிக் கட்டுரை எழுத முற்படுவேன்)


malarmannan79@rediffmail.com

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3


Saturday September 22, 2007
அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப்
பயன்படும் பகலில்
பல்லாண்டு !
ஓயாத கடல் அலைகளின்
அசுர அடிப்பில்
அளவற்ற மின்சக்தி உள்ளது !
காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று
மேட்டில் கிடைக்கும் மின்சக்தி !
மாட்டுச் சாணி வாயு
வீட்டு மின்சக்தி ஆக்கும் !
நிலக்கரி மூலம்
நிரம்ப மின்சக்தி பெறலாம்,
கரியமில வாயு வோடு !
அந்த முறைகள் யாவும் ஓர்
அளவுக் குட்பட்டவை !
சிக்கன மானவை சில !
செலவு மிக்கவை சில !
சிறியவை சில !
பேரளவு மின்சக்தி படைக்க
நுணுக்கமான
அணுப் பிளவுச் சக்தி தேவை.
கதிரியக்கம் இல்லா
அணுப் பிணைவுச் சக்தி தேவை.
அவற்றுக்கு
எல்லை இல்லை !
வரையறை ஏதுவு மில்லை !
மின்சக்தி
பற்றாக் குறையைத்
தீர்க்க
அவை அனைத்தும் தேவை
அகில உலகுக்கு !

"அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்."
ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

"மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை." [No Power is so costly as no Power]
டாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)

"அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்."
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)

Fig. 1
Pressurized Water Reactor Sytems

முன்னுரை: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. 1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.

மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.


இந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் <<>> விளக்கமாகக் காணலாம்.

1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள், இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது. ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 17 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.


இந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது..

Fig 1A
Reactor Vessel Parts


அணு மின்சக்தி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்
அணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன ? 500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும். அவற்றின் விபரங்களைக் காண்போம்: கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)] ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.


1. அணு உலை, அழுத்த அணு உலைக் கலம் (Atomic Reactor & Reactor Pressure Vessel)
அணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel) அமைக்கப் படலாம். நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன.

உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கியிருக்கும். யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப்பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது. [200 Mev Energy per Fission]. அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும். உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

Fig. 1B
Nucear Safety Analysis


1. "நிறுத்த அணு உலை வெப்பத்தணிப்பு ஏற்பாடு" [Shutdow Cooling Water System] : அணு உலை நிறுத்தமான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது, இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System]. இது தானாக இயங்குவது. இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.


2.. அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது "பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று" [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும். இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும். பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.


3. அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது "பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்" [Main or Primary Coolant Sysyem] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும். அணு உலையில் கீழே இறக்கப்பட்டுள்ள நியூட்ரான் விழுங்கிகளை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான்களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது. பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.

Fig 1C
Steam Generator


4. நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும். அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும். பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது. அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் ! இதுவே "நீரிழப்பு விபத்து" [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது. 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த "நீரிழப்பு விபத்து" நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன !


அவ்வித "நீரிழப்பு விபத்தைத்" தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, "அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு" [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.

Fig. 1D
Reactor Systems


5. அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக "அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு" [Emergency Poison Injection System] இணைக்கப் படுகிறது. நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது. கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.


அணு உலையை முற்றிலும் நிறுத்த "இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்" இருக்கின்றன.


a) நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு
b) நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் "அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு"


6. தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems]. உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம். நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப்பட்டிருக்கும். அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும். ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.

Fig. 1E
Primary Giant Pump Motor


7. அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் "தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்" அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Hear Exchangers]


8. துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர்
நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.


9. டர்பைன் குளிர்ப்புக் கலனைத் தணிப்பு செய்யும் நீரோட்டம் [Condensor Cooling water System or Sea Water Cooling System for the Steam Condensor].


10. அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் "தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு" [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.

Fig. 2
Reactor Internal Parts


பொது அபாய மின்சாரத் தயாரிப்பு ஏற்பாடுகள்


பொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System]
அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டிருக்கும். முதல் யூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும். மின்னல் இடி மழைச் சமயங்களில் நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக்கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.

Fig. 3
Primary & Secondary Coolant Systems


(தொடரும்)
***********************
தகவல்:
1. http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]
2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]
3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4. World Nuclear Association - WNA
Radiological Protection Working Group - RPWG (Official List - July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association - WNA
Waste Management and Decommissioning Working Group - WM&DWG (Official List - July 25, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)
10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 20, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 7

Thursday September 20, 2007


பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 7

By எஸ் மெய்யப்பன்

அத்தியாயம் பத்து

விபூதி யோகம்

விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெற்றுள்ளன.


இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-----------
கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா, நீ என் அன்புக்குரியவன். நான் சொல்வதை விரும்பிக் கேட்பவன். நல்லது செய்யக் கருதி நான் உனக்குக் கூறும் உயர்ந்த தத்துவம் கேள்.


எனது பெருமையைத் தேவரும் முனிவரும் கூட அறிய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் நானே மூலகாரணம்1. பிறப்பும் மூலமும் அற்றவனாய், நாயகன் எனும் பெயர் பெற்றவனாய் விளங்கும் என்னை உண்மையாக அறிந்து கொண்டவன், சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டவன். அறிவும் தெளிவும், பொறுமையும் வாய்மையும், அடக்கமும் அமைதியும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், அச்சமும் துணிவும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், திருப்தியும் சமநிலையும், தவமும் தானமும், மனதின் மயக்கமும், மற்றும் அஹிம்சையும் என்னிடம் இருந்தே தோன்றுகின்றன. பிறகு தான் பிராணிகளின் மேல் கால் ஊன்றுகின்றன. 2மகரிஷிகள் எழுவரும், 3மனுக்கள் நால்வரும், 4மனுக்களும் என் மனத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள். இவர்களின் பரம்பரை தான் இவ்வுலக மக்கள். இந்த என் பெருமையை அறிந்தவன், யோக சக்தியைப் புரிந்தவன்; அசைக்க முடியாத யோக நிலை அடைந்தவன். இதில் சந்தேகமே இல்லை. உலகின் தோற்றத்திற்கும் அதன் மாற்றத்திற்கும் நானே காரணம் என்பதை நன்கறிந்தவன் என்னைத் தொழுகிறான். என்னைப் பற்றியே பேசிப்பேசி மகிழ்கிறான் பிறருக்குப் போதனைகள் செய்கிறான். என்மேல் உயிரையே பெய்கிறான். மனம் நிறைந்து உய்கிறான்ƒ அவனுக்கு நான் புத்தியோகம் அளிக்கிறேன் உள்ளத்தில் கருணை தெளிக்கிறேன். ஞான விளக்கினால் அறியாமை அழிக்கிறேன். அதனால் அவன் எனையடைந்து செழிக்கிறான்.

அர்ஜுனன்: கேசவா‚ நீயே பரம்பொருள் நீயே நிலைத்தவன் நீயே தூயவன் நீயே நாயகன் நீயே ஒளிர்பவன். நீயே உயர்ந்தவன் நீயே மூலதேவன் எங்கும் நிறைந்தவன் பிறப்பிலாச் சிறந்தவன் இதைத்தான் எல்லா ரிஷிகளும், 5தேவரிஷி நாரதரும், அசிதர், தேவலர், வியாசர் ஆகியவர்களும் சொல்லுகிறார்கள். அதையே தான் நீயும் கூறுகிறாய். அனைத்தையும் நான் நம்புகிறேன். ஆனால் ஒன்று. அரக்கரும் தேவரும் நிச்சயம் இதை அறியமாட்டார்கள். உயிர்களின் ஈசனான உலக நாயகனே‚ உன்னை நீயே தான் அறிவாய்‚ எங்கும் நீக்கமற எந்த மகிமையால் நீ நிறைந்துள்ளாயோ அதை மிச்சம் மீதயின்றி எனக்குச் சொல்லுவாயாக‚ உன்னை எப்படி நினைப்பது? எப்படி தொழுவது? அமுதம் போன்ற உன் மகிமைகளைக் கேட்கக் கேட்க எனக்குத் திகட்டவே இல்லை‚ மீண்டும் அவற்றை எனக்கு விரிவாக விளக்கிச் சொல்‚

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, மங்களகரமான என் மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் விளக்குவேன். நான்முகனாகிய படைப்புக் கடவுள் நானே‚ அனைத்து ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் இருப்பவன் நானே, அவற்றின் முதலும், முடிவும், நடுவும் நானே‚ பிராணிகளில் உள்ள உயிரும் நானே, மேலும் கேள் அர்ஜுனா,
பன்னிரண்டு 6ஆதித்தியர்களில் விஷ்ணு நான்ƒ ஒளி விடும் கிரகங்களில் சூரியன் நான். நட்சத்திரங்களில் சந்திரன் நான். காற்று 7வகைகளில் மரீசி நான் அது மட்டுமல்ல‚ 8வேதங்களில் நான் சாமவேதம். புலன்களில் நான் உயர்ந்த மனம். தேவர்களில் நான் இந்திரன். 9ருத்ரர்களில் நான் சங்கரன் 10யட்ச ராட்சசர்களில் நான் குபேரன் 11அஷ்ட வசுக்களில் நான் அக்கினி. மலைகளில் நான் மகா மேரு. புரோகிதரில் நான் 12பிருகஸ்பதி சேனாபதிகளில் நான் முருகவேள். நீர்நிலைகளில் நான் நீள்கடல். மகரிஷிகளில் நான் 13பிருகு. சொற்களில் நான் ஓங்காரம் வேள்விகளில் நான் ஐபம் உறுதியில் நான் இமயம் தேவமுனிவரில் நான் நாரதர் 14கந்தர்வரில் நான் சித்ர ரதன். 15சித்தர்களில் நான் கபில முனி பசுக்களில் நான் காமதேனு குதிரைகளில் நான் உச்சை சிரவஸ் யானைகளில் நான் ஐராவதம். மரங்களில் நான் அரச மரம் மனிதர்களில் நான் சக்கரவர்த்தி ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம் பாம்புகளில் நான் வாசுகி. படைப்பவர்களில் நான் மன்மதன் நாகங்களில் நான் அனந்தன் என்ற ஆதிசேஷன் நீர் தேவதைகளில் நான் வருணன். பிதிர்க்களில் நான் அரியமான். அடக்குபவரில் நான் யமன் அரக்கர்களில் நான் பிரகலாதன் கணிப்பவர்களில் நான் காலம். விலங்குகளில் நான் சிம்மம். பறவைகளில் நான் கருடன் தூய்மையிலே நான் காற்று வீரர்களில் நான் ராமன் மீன்களிலே நான் மகரம். நதிகளில் நான் ஜான்ஹவீ (கங்கை).

வித்தைகளில் நான் ஆத்ம வித்தை. தர்க்கங்களில் நான் வாதம். எழுத்துக்களில் நான் அகரம். புணர்ச்சிகளில் நான் துவந்துவம். கானங்களில் நான் பிருகத்சாமம். சந்தங்களில் நான் காயத்ரீ. மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம். யாதவர்களில் நான் வாசு தேவன். பாண்டவர்களில் நான் அர்ஜுனன். புத்திக் கூர்மையில் நான் சுக்கிராச்சாரி. இரகசியங்களில் நான் மௌனம்.

மேலும் கேள் பார்த்திபா, எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் மரணம் நானே, பிறக்கின்றவர்களின் பிறப்பும் நானே, ஏமாற்றுகிறவர்களின் சூதாட்டம் நானே‚ ஒளிமிக்கவர்களின் பிரகாசம் நானே‚ தண்டிப்பவர்களின் செங்கோல் நானே, வெற்றி விரும்பிகளின் நீதியும் நானே‚ துறவிகளின் ஞானம் நானே‚ உயிர்களின் வித்தும் நானே‚ முடிவில்லாத காலமும் நானே‚ முயற்சியும் நானே‚ வெற்றியும் நானே, மங்கையர் தம் புகழ், புத்தி, செல்வம், பொறுமை, நினைவு, வாக்கு, திண்மை அனைத்தும் நானே, திறமை மிக்கது, செழுமை மிக்கது, நன்மை மிக்கது, நல்லொளியும் மிக்கது. அத்தனையும் என் சாயலின் தோற்றமே, நானில்லாமல் இந்த உலகமே இல்லை, ஆம், என் மகிமைகளுக்கு ஒரு முடிவே இல்லை, அதில் ஒரு சிறு துளியே இப்போது நான் சொல்லியிருப்பது‚ பன்னிப்பன்னி இதைப் பகர்ந்திடத் தேவையில்லை. என்னிடம் மிளிர்ந்திடும் இத்தனை அம்சங்களில் ஓரே ஓர் அம்சத்தால் உலகையே தாங்கி நிற்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் அதுவே போதும்.

(பத்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.இறைவனுக்குத் தாய் இல்லை, தந்தை இல்லை, மகன் இல்லை, உறவினர் இல்லை, ஆசை இல்லை, மனைவி இல்லை. மூலம் அறியப்படாத தூய்மை வடிவான அவன், எங்கும் நிறைந்த ஒளியாவான். - குரு நானக்

2.சப்தரிஷிகள்: ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் இவர்கள் வேறானவர்கள். இந்த சுவேதவ்ராக கல்பத்தில் முதல் மன்வந்த்ரமான ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தோன்றிய மகரிஷிகளே இங்கு முன்னவர்களாகக் கூறப் பட்டவர்கள். மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர் எனும், எழுவர். இப்பொழுது நடக்கும் வைவஸ்தவ மன்வந்த்ரதத்திற்குரிய சப்தரிஷிகள்: அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர், காசியபர். - உரையாசிரியர் அண்ணா

3.நால்வர்கள்: சனகர், சநந்தனர், சனாதனர், சனத்குமாரர். சப்தரிஷிகள் பிரவிருத்தி மார்க்கத்தைக் காட்டியது போல், இவர்கள் நிவிருத்தி மார்க்கத்தைக் காட்டியவர்கள். இவர்களுடைய பிரஜைகள் ஞானப் புதல்வர்கள். இவர்களின் வம்சம் ஞானிகள் பரம்பரை. - உரையாசிரியர் அண்ணா

4.மனுக்கள்: பிரம்மாவின் ஒரு பகலாகிய கல்பத்தில் 14 மனுக்கள் இப்போது நடக்கும் சுவேதவராக கல்பத்தின் மனுக்கள் ஸ்வாயம்புவர், ஸ்வாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாச்சுஷர், வைவஸ்தவர், சாவர்ணி, தச்சாசாவர்ணி, பிரம்மசாவர்ணி, தர்மசாவர்ணி, ருத்ரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி எனப் பதினால்வர். இப்போது நடைபெறுவது 7-வது, அதாவது வைவஸ்த மன்வந்த்ரம். - உரையாசிரியர் அண்ணா
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு, தேவர்கள், மனுபுத்திரர்கள், இந்திரன், ரிஷிகள், பகவானுடைய அம்சாவதாரம் என்று ஆறு இடங்களில் பகவானுடைய விபூதிகள் முக்கியமாய் விளங்கும். - பாகவதம்

5.தேவரிஷிகள்: தேவலோகத்தில் வசிக்கக் கூடியவராகவும், முக்கலை ஞானிகளாகவும், சத்திய விரதர்களாகவும், இயற்கையில் சம்புத்தர்களாயினும் இச்சா மாத்திரத்தால் உலகியல் சம்பந்தத்தை ஏற்பவர்களாகவும், எங்கும் தடையின்றிச் செல்லக் கூடியவர்களாகவும், உள்ளவர்கள் தேவர்களாயினும் மனிதர்களாயினும் தேவரிஷிகளாவர். இவர்களில் சிலர்: நரநாராயணர், வால்கில்யரிஷிகள், கர்த்தமர், பர்வதர், நாரதர், அசிதர், வத்சரர். இவர்கள் தேவர்களையும் அடக்கியாளக் கூடியவர்கள். - வாயு புராணம்.

6.ஆதித்யர் பன்னிருவர்: தாதா, மித்ரன், அர்யமா, இந்திரன், வருணன், அம்சன், பகன், விவஸ்வான் (சூரியன்), பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு. கடைசி புதல்வனான விஷ்ணு குணத்திற் சிறந்தவன். இவர்கள் அனைவரும் கசியபருக்கு அதிதி தேவியிடம் பிறந்தவர்கள். - மகாபாரதம்.

7.மருத் கணங்கள் அல்லது காற்று தேவதைகள் காசியருக்குத் திதி தேவியிடம் பிறந்த 49 புத்திரர்கள் மருத் கணங்கள் ஆவர். திதி தேவியின் மற்ற புத்திரர்கள் அசுர குணம் உடையவர்கள். மருத்துக்கள் தேவர்களாயினர். அவர்களில் சிறந்தவன் மரீசி.

8.தேவர்கள்: முப்பத்தி மூவர்.

9.ருத்ரர்கள் பதினொருவர்: ஹரன், பகுபேன், திரியம்பகன், அபராஜிதன், விருஷாகபி, சம்பு, சங்கரன், கபர்த்தீ, ரைவதன், மருகவ்யாதன், சர்வன், கபாலி, இவர்களில் சம்புமூர்த்தியான சங்கரன் மங்களங்களை அளிப்பவன். இந்தப் பதினொருவரும் பிரம்மாவின் நெற்றிக் கண்ணில் உதித்தவர்கள். - ஹரிவம்சம்

10.யட்ச ராட்சசர்கள்: புலஸ்திய ரிஷியின் புத்திரர்கள் அகஸ்தியர், விச்ரவஸ் இவர்களில் விச்சிரவசுக்கு ஒரு மனைவியிடம் யட்சர்களுக்குத் தலைவனான குபேரனும் இன்னொரு ராட்சச மனைவியிடம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் புத்திரர்கள். - பாகவதம்

11.அஷ்ட வசுக்கள்: தரன், துருவன், சோமன், அகஸ், வாயு, அக்கினி, ப்ரத்யுஷன், ப்ரபாசன். இவர்களில் அக்கினி சிறந்தவன். இவர்கள் பிரம்மபுத்திரராகிய தர்மர், தட்சன் குமாரியாகிய வசுதேவியிடம் பெற்ற பிள்ளைகள்.

12.பிருகஸ்பதி: அக்கிரச மகரிஷியின் புத்திரர். தேவேந்திரனுடைய புரோகிதர். தேவர்களுக்கெல்லாம் குரு.

13.பிருகு: முன் ஏழு மகரிஷிகளில் முக்கியமானவர்.

14.கந்தர்வர்: தேவர்களில் ஒரு வகையினர். ஆடல் பாடல்களில் சிறந்தவர்கள்.

15.சித்தர்கள்: அஷ்டமா சித்திகளைப் பெற்றதுடன் தருமம், ஞானம், வைராக்கியம் நிறையப் பெற்றவர்கள். காமதேனு, உச்சைசிரவஸ்,

ஐராவதம்: பாற்கடலைக் கடைந்த போது உண்டானவை.

வஜ்ரம்: ததீசி முனிவர் தேவர்களிடம் கருணை கொண்டு தபோ மயமான தன் சரீரத்தை அவர்களுக்காக தியாகம் செய்தார். அவருடைய முதுகெலும்பால் அமைந்தது இந்திரனுடைய வஜ்ராயுதம். அதனால் அது ஆயுதங்களுள் சிறந்ததாயிற்று.

வாசுகி: பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வாசுகி நாணாக அமைந்தது. இது சர்ப்பங்களின் அரசன்.

வருணன்: சமுத்திர ராஜன். எட்டு திக்குப் பாலகர்களில் ஒருவன். அர்யமன்: கவ்வவாகன், அனலன், சோமன், யமன், அர்யமா, அக்னிஷ்வாத்தா, பர்கிஷத் என்பவர் ஏழு வகைப் பிதிரர்கள்.

யமன்: இந்த மன்வந்தரத்தில் இவர் விவஸ்வானுடைய புத்திரராகிய வைவஸ்தவர். நல்லோர்களிடம் அறக் கருணையும் தீயோர்களிடம் மறக் கருணையும் காட்டுபவர். இவர் தருமத்தை நிலை நாட்டும் லோகபாலருள் ஒருவர். ஞானத்திலும் கருமத்திலும் பக்தியிலும் சிறந்தவர்.

அரக்கர்கள்: கசியபருக்குத் திதிதேவியிடம் பிறந்த புத்திரர்களின் வம்சம். இரண்யகசிபு, இரண்யாட்சன் முதலிய அசுரர்கள் பரம்பரை. இவ்வம்சத்தில் சிறந்தவன் பிரகலாதன்.

வைனதேயன்: தட்சன் மகள் வினதைக்குப் பிறந்தவன் இதனால் வைனதேயன் என்று பெயர். பகவானுடைய வாகனம். தேவஸ்வரூபியாக வர்ணிக்கப்பட்டவர்.

ஜான்ஹவீ: சதீ தேவி தட்ச யாகத்தில் தன் சரீரத்தை விட்ட பின்பு, தேவர்கள் பிரார்த்தனைக்கிணங்கி மறுபடி இமவானுக்கும் மேனகைக்கும் மகளாக இரண்டு வடிவங்களில் அவதரிப்பதாய் வாக்களித்தாள். ஒரு வடிவம் சாகரமூர்த்தி பார்வதி மற்றொரு வடிவம் அருஷருவம். பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து நீர் வடிவம் பெற்று சொர்க்கம், அந்தரிட்சம், பூலோகம் ஆகிய மூவுலகையும் பாவனமாக்கிக் கொண்டு பாய்ந்தாள். ஜன்ஹீ மகரிஷி ஆசிரமத்தில் பாய்ந்து, அவர் ஆசமனம் செய்து பின் அவர் விட, மேலே பாய்ந்து சென்றதால் ஜான்ஹவீ என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. - பிருகத் தர்ம புராணம்.

ஆத்மவித்தை: ரிக் வேதம், யஜீர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிசம் முதலியன அபர வித்தை, அட்சரப் பொருள் எதனால் உணரப்படுமோ, அது பரவித்தை அல்லது ஆத்மவித்தை. - முண்டக உபநிடதம்

வாதம்: தர்க்கம் மூன்று வகையானது. நியாயம் பார்க்காமல் தன் கட்சியையே பேசுதல் ஜல்பம். எதிர்கட்சியைக் கண்டித்து பேசுதல் விதண்டை. கோபத்துக்கும் துவேஷத்துக்கும் இடம் கொடாமல் பாரபட்சமின்றி நியாயத்தை விசாரித்தல் வாதம்.

துவந்துவம்: சொற்களின் புணர்ச்சி சமஸ்கிருதத்தில் நான்கு வகை. (1) அவ்யயீ (2ம் அதிஹரி) (2) தத்புருவி (சீதாபதி) (3) பஹீவ்ரிகி (பீதாம்பரம்) (4) துவந்துவம் (ராம லட்சுமணன்). துவந்துவப் புணர்ச்சியில் புணரும் புதங்கள் இரண்டுக்கும் சமப்பிரதானம். - உரையாசிரியர் அண்ணா

சுக்கிராச்சாரி: பிருகு மகரிஷியின் புத்திரர்ƒ சஞ்;சீவினி வித்தையில் வஜ்ர சகீரம் படைத்தவர். யோக வித்தையில் நிபுணர்ƒ அரக்கர்களின் புரோகிதர்.

சூதாட்டம்: இங்கு சூதாட்டம் ஒரு மகிமையாகக் கூறப்பட்டதால், மனதைக் கவரும் அதன் சக்தியைக் கண்டு, சிங்கத்தினிடம் பயப்படுவது போல் பயப்பட வேண்டும் என்ற கருத்தேயன்றி, சூதாடுவது நல்லது என்பதன்று. - உரையாசிரியர் அண்ணா

(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Friday, 14 September 2007

பெரியவர் மலர்மன்னன் திண்ணை கட்டுரை - காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்

திண்ணையில் இந்த வாரம் வெளியான, பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை.

1980களிலும் 1990களிலும் பாகிஸ்தான் (குப்பை மேடு) உதவியுடன் காலிஸ்தான் தீவிரவாதம் அறங்கேறிய கொடுமைகளும்...

அதனை அப்போதைய பாரத அரசு மற்றும் பாரத ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அழித்தொழித்ததையும்....

பாரத அன்னையின் மேன்மையை உணர்ந்த அம்மாநிலம் இன்று நாட்டுப்பற்றிலும் பொருளார ரீதியாகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக பரிணமித்திருப்பதையும்....

காஷ்மீர் விஷயத்தில் நமது முந்தய அரசியல் தலைவர்கள் செய்த தவறுகளால் இன்றளவும் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் நிலையினையும்.....

ஏதேதோ நினைத்துக்கொண்டு....

முகமதியம் வேரோடு அழிக்கப்படுவதுதான் முழுமையான தீர்வு...

பெரியவர் எழுதிய திண்ணை கட்டுரை கீழே...

----------------------------------------------------------------------------------------------

காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
By மலர் மன்னன் Thursday September 13, 2007

(அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய கட்டுரையினை காலச் சுவடு ஆகஸ்ட் 2007 இதழில் படிக்க நேர்ந்தது. அதுவே இக்கட்டுரைக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது. இது ஜி கே ராமசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை அல்லவே அல்ல. காஷ்மீர் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதலால் விளைந்த கட்டுரை இது.)

கடந்த காலங்களில் ஒரு சுயேற்சையான பத்திரிகையாளன் என்கிற முறையில் ஹிந்துஸ்தானத்தின் எந்தப் பகுதியில் எந்தப் பிரச்சினையென்றாலும் அதன் உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம் காரணமாக எதற்கும் காத்திராமலும், எதைப்பற்றியும் யோசியாமலும் நேராகக் கள ஆய்வுக்குப் போய்விடுவது எனது வழக்கமாக இருந்து வந்தது. சில சமயம் பத்திரிகைகள் தாமாகவே முன் வந்து பிரச்சினைக்குள்ளான இடங்களுக்கு என்னை அனுப்பி வைப்பதும் உண்டு.

1984 ல் போபால் ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்ட போது வேறொரு நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்த என்னை இதயம் பேசுகிறது மணியன் அழைத்து விமானத்திலேயே போபால் சென்று தகவல் சேகரித்து விமானத்திலேயே சென்னை திரும்பி அறிக்கை தருமாறு கேட்டார். செலவுக்குத் தில்லியில் இதயம் பேசுகிறது, ஞான பூமி முகவரிடமிருந்து தேவையான செலவுக்கும் ஏற்பாடு செய்தார். இதன் பயனாக அந்த வார இதயம் பேசுகிறது இதழிலேயே போபால் துயரச் சம்பவம் பற்றி ஏராளமான புகைப்படங்களுடன் ஒரு நீண்ட கட்டுரை வெளிவருவது சாத்தியமாயிற்று.

அதுபோலவே சீக்கியர் பொõற்கோவிலில் பதுங்கி அதன் புனிதத்துவத்தையே நாசம் செய்துகொண்டிருந்த பிந்தரன்வாலேயையும் அவனது கூட்டாளிகளையும் வெளியேற்ற பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கையையும் நேரில் கண்டு வந்து எழுதினேன். வழிபாட்டுக்குரிய தலமான பொற்கோயிலில் ஆணுறைகளும், பெண்களின் கிழிந்துபோன உள்ளாடைகளும் மூலைக்கு மூலை சிதறிக் கிடந்ததையும் புகைப் படம் எடுத்து காலிஸ்தான் கோரிக்கைப் போராட்டத்தின் லட்சணம் இன்னதென்று அறியச் செய்தேன். ஆனால் இவற்றையெல்லாம் ஒரு பத்திரிகையாளனின் இயல்பான பணியாகச் செய்தேனே யன்றி, உண்மை கண்டறியும் நடவடிக்கையாக அதனைக் கருதியதில்லை.

மேற்கு வங்கத்திலும் பிற வட மாநிலங்களிலும் அவ்வப்போது நிகழ்ந்து வந்த ஹிந்து முகமதியர் மோதல்களையும் நேரில் கண்டு எழுதியண்டு. ஆனால் அவற்றைப் பத்திரிகை கள் வெளியிட மறுத்துவிடும். இத்தகைய கலவரங்களை உள்ளது உள்ளபடி வெளியிட்டால் மோதல்கள் பிற பகுதிகளுக்கும் பரவி சட்டம் ஒழுங்கு நிலைமை பல்வேறு மாநிலங்களிலும் குலைந்து போய்விடும் என்று அதற்குச் சமாதானம் சொல்லப்படும். நிலமையைக் கண்டறிந்து வருமாறு பணித்து அனுப்பும் பத்திரிகைகளே கூடத் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் அனுப்புகிறோம், அவற்றைப் பிரசுரம் செய்வதற்காக அல்ல; காவல் துறை பூசி மெழுகித் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே பிரசுரத்திற்கு வைத்துக்கொள்வோம் எனக் கூறிவிடுவதுண்டு!

இவ்வாறாக அவ்வப்போது எழும் பிரச்னைகளை நேரில் கண்டறிந்து வரப் பழகிய எனக்கு ஹிந்துஸ்தானத்தின் நிரந்தரமான பிரச்சினையாகிவிட்ட காஷ்மீரில் என்னதான் நடக்கிறது எனத் தெரிந்து வந்து சொல்வதில் ஆர்வம் இல்லாமல் போகுமா?

1964-65 கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த போதே காஷ்மீருக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எல்லைக் கோட்டிற்கு அப்பால் இருந்துகொண்டு ஹிந்துஸ்தானத்திற்குட்பட்ட காஷ்மீர் கிராமப்புற அப்பாவி விவசாயிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு விளையாடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த காலகட்டத்திலும், பயங்கர வாதக் குழுக்களை எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைக்கும் பொருட்டு அது ஹிந்துஸ்தானத்து ராணுவத்திற்கு போக்கு காட்டும் உத்தியாக திடீர் குண்டு மழை பொழியச் செய்து வந்த சமயங்களிலும், பின்னர் பயங்கர வாதக் குழுக்களின் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்த போதுமாக உடம்பில் போகிய வலிமை இருந்தவரை பலமுறை எவரது நிதி உதவியையும் எதிர்பாராமலும், குடும்பத்தாரின் வன்மையான ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமலும் காஷ்மீருக்குப் போய் வந்துவிட்டேன்.

காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ராணுவப் பிரிவுகளில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்களும் தென்பாரதத்தவருமேயாவர். தமிழனாகப் பிறந்து, பிற தென் மொழிகள் அனைத்திலும் பேசவும் தெரிந்திருக்கிற எனக்கு இது மிகவும் வசதியாகப் போயிற்று. ஹிந்துஸ்தானியில் சரளாமாகக் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள முடிவது அங்குள்ள மக்களுடன் ஒன்றி அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்வதை மிகவும் எளிதாக்கியது. பாரசீகச் சொற்கள் மலிந்த இன்றைய காஷ்மீரி மொழி ஹிந்துஸ்தானிக்கு மிக அருகாமையிலேயே இருப்பதால் காஷ்மீரிகளுடனான கருத்துப் பரிமாற்றங்களில் சங்கடம் ஏதும் இல்லை.

பயங்கர வாதத்தின் கொடிய பிரசன்னம் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் வெளிப்படக் கூடிய ஒரு பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு திடீர் தாக்குதலுக்குப் பலியாக நேரிடலாம் என்கிற நெருக்கடியுடன்தான் நமது பெருமைக்குரிய ராணுவத்தின் அடி மட்ட சிப்பாய் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறான். தனக்கு ஒத்து வராத தட்ப வெப்பம், பற்றாக்குறையான வசதிகள், சொற்பமான மாதச் சம்பளம், அவசரமான சந்தர்ப்பங்களில்கூட விடுமுறை பெற்று சொந்த ஊர் திரும்ப முடியாத இக்கட்டு, பலவாறான மன உளைச்சல்கள் என எத்தனையோ சிரமங்கள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் கருமமே கண்ணாயிருப்பதையும், நிர்வாகத்தின் கரங்கள் நீள முடியாத ஒதுக்குப் புறங்களில் எவரையும் கேள்விமுறையின்றிச் சுட்டுத்தள்ளும் வாய்ப்பிருந்தும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக எவரையும் தாக்காமல் அவன் அமைதி காப்பதையும் பயங்கர வாதிகளின் ஈவிரக்கமற்ற வெறியாட்டம் எல்லை மீறிய போதிலும் எதிர்த் தாக்குதலால் பொது மக்களுக்கு இழப்பு ஏதும் நேர்ந்துவிடலாகாது என்பதற்காக ஒற்றைக்கையால் மட்டுமே போராடுங்கள் என ராணுவத்திற்கு நிரந்தரமான உத்தரவிட்டிருக்கும் பாரத அரசின் பொறுமையையும் பார்க்கையில் நமது தேசத்தின் அருமையான ஜனநாயகப் பண்பிற்கு காஷ்மீர் மிகச் சிறந்த உரை கல்லாக இருப்பதை நேரில் கண்டுணரும் வாய்ப்பினைப் பல முறை பெற முடிந்தது. பாரத தேசத்தின் ஜனநாயகம் இதர பகுதிகளில் மிகுந்த மனச் சோர்வினை அளிப்பதாக இருந்த போதிலும், காஷ்மீர் மாநிலத்தில் அது மக்களுக்கு இயன்றவரை பாதுகாப்பு அளிப்பதாகவே உள்ளது. ஷேக் அப்துல்லா காலத்திலிருந்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் பாரத அரசு காஷ்மீர் மாநில நலனுக்காக ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளித் தந்த நிதியைச் சூறையாடிக் கொழுக்க ஜனநயகம் மிகவும் வசதியாகப் போயிற்று என்பது உண்மைதான் என்ற போதிலும், காஷ்மீர் மக்கள் தமது விருப்பத்திற்கு இணங்க ஆட்சியை நிர்ணயிக்கும் வாய்ப்பினைப் பெற பாரத நாட்டின் ஜன நாயகம் வழிசெய்து கொடுப்பதாகவே இருந்து வருகிறது. அதன் காரணமாகவே ஷேக் அப்துல்லா தொடங்கிவைத்து அவரது வாரிசுகளின் பரம்பரைச் சொத்தாக இருந்துவரும் தேசிய மாநாடு கட்சிக்கு மாற்றாக முஸ்தி முகமது சயீதின் காஷ்மீர் மநிலக் கட்சியையும் காங்கிரசையும் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஓர் அமைதியான தேர்தல் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்த்தெடுக்க முடிந்திருக்கிறது. ஐ நா பார்வையாளர்களே வியந்து சான்றறிக்கை அளிக்கும் வண்ணம் காஷ்மீரில் மக்கள் தீர்ப்பு அளிப்பது சாத்தியமானது பாரதத்தின் ஜன நாயகப் பண்பிற்குச் சரியான உரைகல்லேயாகும்.
சைவ சித்தாந்தமும் பவுத்தமும் தத்துவார்த்த சிகரங்களைத் தொட்டு நின்ற காஷ்மீரில் ஈரான் என இன்று வழங்கப்படும் பாரசீகத்தின் வழியாகத்தான் முகமதியம் நுழைந்தது. இது நடந்தது 1370ல். காஷ்மீர் முகமதிய மயமான பின்னரும் அதன் அசலான அடையாளங்கள் இன்றளவும் நீடிக்கவே செய்கின்றன. எந்தக் காராணத்திற்காக ஹிந்து சமூகம் கடுமையான விமர்சனங்
களைத் தாங்கிக் கொள்ள நேர்ந்துள்ளதோ அந்தக் காரணமான ஜாதி அடையாளங்களை இன்று பல காஷ்மீரி முகமதியர்கள் பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அகமது தார், சுலைமான் பண்டிட் என்று ஜாதிப் பெயர் தொற்றிக் கொண்ட முகமதியப் பெயர்கள் அங்கு சர்வ சாதாரணமாகக் காதில் விழும். குறிப்பாக உயர் ஜாதியினர் எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் முகமதியர் தங்கள் ஜாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை. தாழ்ந்த ஜாதியினராகக் கருதப்படும் முகமதியர் மட்டுமே தமது ஜாதி அடையாளங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.

1972-73ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.

அவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை
நடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன!
தி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன!
ஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.

நீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.

நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.
முன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களையெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்!
ஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.

1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்தேன்.

கருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

அந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.
காஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்!

என்னை அணுகியதால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்ற போதிலும் நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக அந்த காஷ்மீரி டாக்டர் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டினார். மருத்துவ மனையில் என் மாமனார் இறந்தபோது சிறிதும் தயக்கமின்றித் தனது காரின் பின் இருக்கையில் அவரது உடலைக் கிடத்தி தலைமாட்டில் தானும் கால் மாட்டில் நானுமாக உட்கார்ந்து வீடு வந்து சேர உதவினார்.

பிற்காலத்தில் காஷ்மீரில் சில தொடர்பு முகவரிகளைக் கொடுத்தும் உதவினார், அந்த காஷ்மீரி டக்டர். மீண்டும் அவர் தன் மனைவியுடன் குவைத்துக்குச் சென்று விடவே அவருடனான எனது தொடர்பு அறுந்து போயிற்று.

இவ்வளவும் விவரிக்கக் காரணம் வெறும் செய்தியாளனாக அல்லாமல் நட்பு ரீதியாகவும் எனக்குக் காஷ்மீருடன் தொடர்பு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான்.

வலுக்கட்டாய முகமதிய மத மாற்ற காலத்திலிரு ந்தே காஷ்மீரின் சோகக் கதையைப் பேச முடியும் என்றாலும் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங் காலத்திலுருந்து தொடங்ககினாலேயே பக்கங்கள் நீளும். ஆகையால் டோக்ரா அரசர் குலாப் சிங் காலத்திலிருந்து ஆரம்பிப்போம்.

பஞ்சாப் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட ரஞ்சித் சிங் காஷ்மீரையும் தனது ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டமையால் மகுடம் இழந்து நின்ற டோக்ரா அரசர் குலாப் சிங்கிடம் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் பேரம் பேசி ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவி கோரினர். தமக்குரிய காஷ்மீர் பிரதேசத்தைத் தம்மிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவுவதாக குலாப் சிங் பதிலுக்குப் பேரம் பேசினார். பேரம் படிந்தது. குலாப் சிங் உதவியுடன் ஆங்கிலேயர் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாபைத் தமது ஆளுகையின்கீழ் கொண்டு வந்தபோது தாம் அளித்த வாக்குறுதிக் கிணங்க காஷ்மீர் பகுதிகளை டோக்ரா அரச வம்ச குலாப் சிங்குக்கு ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்தனர். காஷ்மீரை குலாப் சிங் பரிசாகப் பெறவில்லை. தமக்கு உரிமையுள்ள பிரதேசத்தைத்தான் அவர் பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற வேண்டும் என்பதற்காகவே அவர் ரஞ்சித் சிங் மீது போர் தொடுத்த ஆங்கிலேயருக்கு உதவ முன்வந்தார். அது முதல் காஷ்மீர் சமஸ்தானம் பிரிட்டிஷ் தயவிலும் கண் காணிப்பிலும் ஒரு சுதந்திரப் பிரதேசமாக இருந்து வந்தது.
1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு சுயேற்சையான சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைக்கும் முயற்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டபோது காஷ்மீர் சமஸ்தானத்தையும் பாரதத்துடன் இணைக்க முனைந்தார். அன்று காஷ்மீரின் நுழைவு வாயில்கள் யாவும் பாகிஸ்தானாகப் பிரிந்து தனி தேசமாகிவிட்ட பிரதேசத்தில் இருந்தன. எனவே தமது சமஸ்தானத்தை எப்படி பாரதத்துடன் இணைக்க இயலும் என்று அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங் தர்க்கித்தார்.

ஹிந்துமுகமதியர் என மத அடிப்படையில் தேசத்தைப் பிரிப்பது முஸ்லிம் லீகின் கோட்பாடேயன்றி, காங்கிரஸ் மகாசபையின் கொள்கை அல்ல. முஸ்லிம் லீகின் பிரிவினைக் கோரிக்கைக்கு அது இசைந்தது, மாறாக இசைய நேரிட்டது, அவ்வளவே.

எனவேதான் பிரிவினைக்குப் பிறகும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து செல்ல விரும்பாத முகமதியர் அனைவரும் தொடர்ந்து பாரதத்தில் வசிக்க அனுமதித்தது. இதன் அடிப்படையில்தான் பட்டேலும் காஷ்மீரம் பாரதத்துடன் இணைவதற்கு முயற்சி மேற்கொண்டார். பாகிஸ்தானோ தனது மதவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் காஷ்மீர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் அதனைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே முகமதியரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஜம்முவிலும் லடாக்கிலும் ஹிந்துக்களும் பவுத்தர்களும் வசித்தனர். ஹிந்துக்கள் மிகுதியாக இருந்த ஜம்முவிலாவது முகமதியர் ஓரளவு இருந்தனர். லடாக்கில் மிகச் சொற்பமாக உள்ள மக்கள் தொகையில் அனைவரும் பவுத்தர்களாகவே இருந்தனர் எனலாம்.

தன்னுடன் இணைந்துவிடுமாறு காஷ்மீரை நிர்பந்திக்கும் பொருட்டு பாகிஸ்தான் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த காஷ்மீரின் நுழை வாயில்களை எல்லாம் அடைத்து காஷ்மீர் சமஸ்தானத்திற்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது. இதனால் அத்தியாவசியப் பண்டம் எதுவும் கிடைக்கப் பெறாமல் காஷ்மீர் திண்டாடியது. மக்கள் பொறுமையிழந்து ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்தே மன்னராட்சியை நீக்கி மக்களாட்சியை நிறுவுவோம் என ஜன ரஞ்சகக் கோஷத்தை எழுப்பி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்து வந்த ஷேக் அப்துல்லாவின் முஸ்லிம் மாநாடு இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தி கிளர்ச்சியைத் தீவிரப்படுத்த மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.

மக்களாட்சி முறையில் மிகுந்த ஈடுபாடுள்ள ஜவஹர்லால் நேருவிடம் தொடக்கத்திலிருந்தே ஆதரவு கேட்டு வந்த ஷேக் அப்துல்லாவுக்கு அவரது கட்சியின் பெயரை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பெயராக இல்லாமல் அனைவருக்கும் இசைவான பொதுப் பெயராக மாற்றிவைக்குமாறு நேருஜி ஆலோசனை சொன்னார். ஷேக் அப்துல்லாவும் அதனை ஏற்று முஸ்லிம் மாநாடு என்று இருந்த தன் கட்சியின் பெயரை தேசிய மாநாடு என மாற்றிக் கொண்டார். பாகிஸ்தான் கொடுத்த னெருக்கடியைத் தொடர்ந்து மன்னரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்ய்த்துவிட்டதைப் புரிந்துகொண்ட ஷேக் அப்துல்லா, தமது கட்சியினரை நன்றாக ஊக்குவித்துக் கிளர்ச்சி பரவலாக நடைபெறச் செய்தார்.

ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு சட்டம் அமதியைக் குலைக்கிறார் என்னும் குற்றத்தின் அடிப்படையில் ஷேக் அப்துல்லாவை மன்னர் ஹரி சிங் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு குலைந்து அமைதிக்குக் குந்தகம் விளைந்ததை பாகிஸ்தான் நன்கு புரிந்து கொண்டது. தனது வசமுள்ள வட மேற்கு எல்லைப் புறப் பிரதேசத்தில் வாழும் வனவாசிகளுக்கு ஆயுதங்கள் அளித்துப் பலவாறான ஆசைகள் காட்டி காஷ்மீரை ஆக்கிரமிக்கச் செய்தது. தனது ராணுவத்தினரையும் அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.
மக்களின் கிளர்ச்சிக்கு உதவும் சாக்கில் கூலிப்படைகளான வடமேற்கு எல்லைப்புற வனவாசிகளும், பாகிஸ்தான் ராணுவமும் 1947 அக்டோபர் 22 அன்று காஷ்மீருள் நுழைந்தன. ஆனால் எந்த மக்களுக்கு உதவுவதற்கு வந்ததாகக் கூறியதோ அந்த மக்களின் உடமைகளைச் சூறையாடுவதிலும் பெண்களைக் கூட்டாக வன்புணர்வதிலும் வெகு உற்சாகமாக விறுவிறுப்புடன் ஈடுபட்டது!

காஷ்மீர் ஆக்கிரமிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் அக்பர் கான் தலைமை வகித்தார். இதற்குப் பரிசாகப் பின்னர் அவர் பதவி உயர்வும் பெற்றார். காஷ்மீரில் தான் ஆகிரமிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் அது மலைவாசிகள் தம் சகோதர மக்களான காஷ்மீரிகளுக்கு உதவப் பொங்கி எழுந்துவிட்டதன் விளைவு எனவும் பாகிஸ்தான் தொடக்கத்தில் சாதித்தது. ஆனால் அதன் ராணுவத்தினர் பலர் சீருடையில்லாமலும், சீருடையிலும் மலைவாசிகளை வழி நடத்துவதும், மலைவாசிகள் வசமுள்ள ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துபவை என்பதும் அம்பலமானதும், முகமதியர் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தான் உதவுவதாகப் பாகிஸ்தான் சொல்லத் தொடங்கியது.

ஆகிரமிப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பராமுலா, ரஜோரி, பூஞ்ச் மாவட்ட கிராமங்களை முற்றிலுமாக அழித்தது. குறிப்பாக பராமுலாவில் தனது சாதனை பற்றி அக்பர் கான் தனது தலைமயகத்திற்கு அனுப்பிய செய்தியை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்தது, பத்தாயிரம்பேருள்ள பராமுலாவில் ஏழாயிரம்பேரைக் கொன்றுவிட்டோம். அவர்கள் அனைவரும் பால்வாலே காபிர் ( சிகை வளர்த்துள்ள காபிர்கள்; அதாவது சீக்கியர்கள்). பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டனர் என்கிற பெருமித அறிவிப்பு அது!
பாகிஸ்தானின் கொடூரமான ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்க இயலாத காஷ்மீர் மன்னர் பாரத அரசிடம் உதவி கேட்டார். உள்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைத்தால் தக்க உதவி கிடைக்கும் என்றார். பிரதமர் நேருவோ அது போதாது, சிறை வைக்கப்பட்டுள்ள ஷே அப்துல்லாவை விடுதலை செய்வதும் அவசியம் என்று நிபந்தனை விதித்தார். வேறு வழியின்றி மன்னர் ஹரி சிங் இரண்டுக்கும் ஒப்புக்கொண்டார். விடுதலையான அப்துல்லா பாகிஸ்தான் படைகளால் எங்கே தான் சிறைப் பிடிக்கப் பட்டுவிடுவோமோ என அஞ்சி, நேருவின் தயவில் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று பத்திரமாகப் பதுங்கிக் கொண்டார்.

1947 செப்டம்பர் மாதமே மன்னர் ஹரி சிங்கிற்குக் காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதற்கான மனப்பக்குவத்தை குருஜி கோல்வால்கர் ஏற்படுத்தியிருந்தார். பாகிஸ்தானின் திடீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்புத் திட்டத்தைத் துரிதப் படுத்தியது. மன்னர் ஹரிசிங் இணைப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டதும் பாரத ராணுவம் காஷ்மீரைக் காக்கும் பணியை மேற்கொள்ள விரைந்தது. அன்று ஜம்முவில் லுள்ள ஸ்ரீநகரில் சரியான விமான ஓடுதளம் கூட இல்லை. இருபத்து நான்கே மணி நேரத்தில் அங்கு ராணுவத்தினர் பெருமளவில் வந்திறங்குவதற்கு வசதியாக விசாலமான விமான ஓடு தளத்தை ஆர்எஸ்எஸ் என அறியப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தொண்டர்கள் அமைத்து மகத்தான சாதனை புரிந்தனர். தன்னலமற்ற அவர்களின் தொண்டை பாரத ராணுவம் தனது ஆவணங்களில் பதிவு செய்து கவுரவித்தது.

காஷ்மீர் சமஸ்தானத்தின் வடக்குப் பிரதேசத்தைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த நிலையில் வலிமை மிக்க பாரத ராணுவம் வெகு எளிதில் அதனை மீட்டிருக்க முடியும். அதற்குள் பிரதமர் நேரு போரில்லாத புத்துலகைக் காணும் தமது கனவின் லயிப்பால் போரைத் தவிர்த்து ஐக்கிய நாடுகள் அவையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் புகார் செய்து பரிகாரம் வேண்டினார்.

இதற்கிடையில் 1947 அக்டோபர் 31 அன்று மக்கள் கருத்து எதனையும் கேட்டறியாமலேயே ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் மாநிலத்தின் அவசர கால நிர்வாகியாக நேரு நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். காஷ்மீர் சமஸ்தானத்தைத் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் ஷேக் அப்துல்லா ஊர் திரும்பி சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டார். மன்னர் ஹரிசிங் அதிகாரம் இல்லாத வெறும் பொம்மையானார். சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க மட்டுமே அவரது அதிகாரம் தேவைப்பட்டது. ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் அவசர கால நிர்வாகியாக நியமிக்கலாமா என அவரிடம் ஒரு மரியாதைக்காகக் கூட ஆலோசனை கேட்கப்படவில்லை. இது குறித்து பட்டேலும் அதிருப்தி தெரிவித்தார். குருஜி கோல்வால்கர் அவர்களும் பொறுப்பை ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைப்பது உசிதம் அல்ல என்றே கருத்துத் தெரிவித்தார். சொல்லப் போனால் குருஜிதான் ஹரி சிங்கின் தயக்கத்தை அகற்றி பாரதத்துடன் இணைவதுதான் அவருக்கும் காஷ்மீர் சமஸ்தானத்தின் எதிர் காலத்திற்கும் நல்லது என்று அறிவுரை சொன்னவர். அது ஹரி சிங்கின் மனதில் நன்கு பதிந்தது.

காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் முடிவை ஷேக் அப்துல்லாவும் ஆதரித்தார். வெறும் உணர்ச்சிப் பெருக்கினாலோ, சங்கடமான சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாகவோ காஷ்மீர் மக்கள் பாரத்ததுடன் இணையவில்லை. பாரத மக்களின் எதிர்காலத்துடன் தங்கள் எதிர்காலத்தையும் மனமொப்பிப் பிணைத்துக் கொள்வது எனத் தேர்ந்துதான் பாரதத்துடன் இணையும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று 1947 அக்டோபர் மாதம் ஷேக் அப்துல்லா பிரகடனம் செய்தார்.

ஆட்சி அதிகாரம் தன்னிடம் வந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒரு பகுதியாக இருப்பதைவிடச் சுதந்திர தேசமாகக் காஷ்மீர் இயங்கினால் மேலும் தன்னிச்சையாக ஆளலாமே என்கிற ஆசை வயப்பட்ட ஷேக் அப்துல்லா, பாகிஸ்தானுடன் ரகசியமாக பேரம் பேசத் தொடங்கி, காஷ்மீரைச் சுதந்திர நாடு எனப் பிரகடனம் செய்யத் திட்டமிட்டார். உளவுத் துறையின் மூலம் இதனை அறிந்துகொண்ட பாரத அரசு, தக்க தருணத்தில் ஷேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறையில் தள்ளியது. நேருஜி யாரைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எனக் கருதிப் பரிவு காட்டிப் பதவியில் அமர்த்தினாரோ அவரது சாயம் வெளுத்துப் போனதில் நேருவுக்குப் பெருத்த அதிர்ச்சி. கனாக் காண்பதிலேயே காலம் முழுவதையும் செலவிட்ட நேருஜி இப்படித்தான் எல்லாவற்றிலும் தவறான முடிவுகளை எடுத்து அவற்றால் இன்றளவும் பாரதம் சிரமப்பட்டுக் கொண்டிருக்க நேர்ந்துவிட்டது. காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த மன்னர் ஹரி சிங்கிடமே பாரத அரசின் துணையோடு அவரது சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யும் அதிகாரத்தை அளித்திருந்தால் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் ஏக போகத் தலைவராக உருவெடுக்காமல் பத்தோடு பதினொன்றாக அவரளவில் ஓர் அரசியல்வாதியாக இயங்கி வந்திருப்பார்.
காஷ்மீர் இணைப்பின்போது அதற்கான தனி ஒப்பந்த ஆவணம் ஏதும் எழுதப்படவில்லை. பிற சமஸ்தான மன்னர்கள் பாரதத்துடன் தமது சமஸ்தானங்களை இணக்க எந்த ஆவணம் பயன் படுத்தப்பட்டதோ அதே ஆவணத்தில்தான் காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரி சிங்கும் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷேக் அப்துல்லா மீது நேருவுக்கு இருந்த பிரத்தியேகப் பரிவின் காரணமாகவே காஷ்மீருக்குச் சில சிறப்புச் சலுகைகள் தரப்பட்டன. மேலும் ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியமும் காஷ்மீரைச் சேர்ந்தது என்பதும் கவனத்திற்குரியது.

1948 ல் காஷ்மீர் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னதென்று பிரிட்டிஷ் அரசிடம் தெளிவாகவே தெரிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஸி மார்ஷல் காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் முறையாக இணைந்துவிட்ட பகுதி என்பதுதான் எங்கள் கருத்து என்று கூறினார். காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி அல்ல என அவர் தெளிவு படுத்தினார்.

பாரதமாகட்டும், பாகிஸ்தானாகட்டும், சமஸ்தானங்களைத் தம்மோடு இணைத்துக் கொள்கையில் அந்தந்த சமஸ்தான மக்களின் கருத்தைக் கேட்டறியவில்லை. எனவே காஷ்மீருக்கு மட்டும் அவ்வாறு இணைப்பு குறித்து மக்கள் கருத்தறிய வேண்டும் எனக் கோருவது எந்த அளவுக்குச் சரி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்ட ஐ நா அவையும் காஷ்மீர் பாரதத்துடன் இணைந்தது பற்றிக் கேள்வி எதுவும் எழுப்பவில்லை. 1948 தொடங்கி, 195051 வரை காஷ்மீர் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ நா அவற்றில் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. பரிந்துரைகளாகத்தான் தனது தீர்மனங்காளைத் தெரிவித்தது.

காஷ்மீரில் மக்கள் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறும் ஐ நா தீர்மானத்தில் பாகிஸ்தான், தான் அக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவதோடு, காஷ்மீரிகள் அல்லாத பிறர் எவரும் அந்த அக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கவும் கூடாது என்று மிகத் தெளிவாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறாதது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட காஷ்மீர் என்று தான் ஆக்கிரமித்த பகுதியைக் கூறிக் கொள்ளவும் தயங்க வில்லை. எனவே காஷ்மீர் பாரதத்துடன் நீடிப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனித்து இயங்குவதா என மக்கள் கருத்தறிவற்கான சூழல் தொடக்கத்திலிருந்தே உருவாகவில்லை.

காஷ்மீரின் பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கும் தேவையான ராணுவத்தை பாரதம் அங்கு நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் என்றும், ராணுவக் குவிப்பை மட்டுமே தவிர்க்க வேண்டும் எனவும் ஐ நா தீர்மானம் கூறுகின்றது. காஷ்மீரில் நிலவும் பதட்டச் சூழ்நிலையினை அறிந்தவர்கள் அங்கு பாரதம் தனது ராணுவத்தைத் தேவையான அளவுக்கே வைத்துள்ளது என ஒப்புக்கொள்வார்கள். 1947 அக்டோபர் முதலே காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக தினந் தினம் பாரத தேசத்து ராணுவ வீரன் தனது ரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கின்றான். 1947 அக்டோபர் தொடங்கி இன்றுவரை இருபதாயிரத்துக்கும் அதிகமான பாரத ராணுவ வீரர்களும் இளம் அதிகாரிகளும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆம்புஷ் எனப்படும் ஓளிந்திருந்து கைப்பற்றிக் கொல்லும் முறைக்கும் அது ஏவி விட்ட பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கும் பலியாகியுள்ளனர். இத்தகைய தாக்குதலால் நிரந்தரமாக ஊனமடைந்தவர்களும், இன்றளவும் வலியையும் வேதனையையும் சகித்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.

எந்த நிமிடமும் எந்த மூலையிலும் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான திடீர் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் வழிபாட்டுத் தலமான மசூதிகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பயங்கர வாதிகள் பதுங்கியிருக்கும் சாத்தியம் உள்ள சந்தர்ப்பத்திலும், அமைதியான மக்களின் வீடுகளில்கூட அடாவடியாக நுழைந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பயங்கரவாதிகள், தாம் பலவந்தமாகத் தஞ்சம் புகுந்த வீட்டில் உள்ள நபர்களையே கேடயங்களகப் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையிலும் உள்ள பாரத் தேசத்து ராணுவ வீரர்கள் எத்தகைய நெருக்கடியில் இருப்பார்கள் என யோசிக்க வேண்டும்.

காவல் காத்து நிற்கும் ராணுவ வீரன் எதிரில் வருபவரை யார் எனக் கேட்டு அதற்குச் சரியான பதில் வராவிடில் பதற்றமுற்றுச் சுட்டுவிடுவது உள்ளதுதான்.

சில மாதங்கள் முன்பு லண்டனில் ஒருவனை இவ்வாறு பிரிட்டிஷ் காவல் துறையினர் சுட்டுவிடவில்லையா? பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது இப்படிச் சில அசம்பாவிதங்கள் நடந்து விடுவதைத் தவிர்க்க இயலாது என அதற்குச் சமாதானம் சொல்லப் படவில்லையா? அந்த நபர் சிறு குற்றம் ஏதோ இழைத்துவிட்ட அச்சத்தில் ஒடத் தொடங்கி விட்டார்; அவ்வாறு ஒடாமல் இருந்திருந்தால் அவரைச் சுடும்படியான கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்றுதான் விளக்கம் தரப்பட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் எதிரில் வரும் எவரும் ஒரு பயங்கரவதியாக இருக்கக்கூடும் என்ற பதற்றமான சூழலில் ஒரு காவலரோ ராணுவ வீரரோ எத்தைய நெருக்கடியில் இருக்கக்கூடுமென யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியொரு சூழலை அனுபவித்தால்தான் அதன் இறுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் ஒரு சில சபல சித்தம் உள்ளவர்களும் இருக்கக்கூடும்தான். அவர்கள் செய்யும் தவறோ இழைக்கும் குற்றமோ தெரியவரும் போது தக்க நவடிக்கைகள் எடுக்க்கப்படாமல் போவதில்லை. சில அத்துமீறல்கள் நடக்கவும் கூடும்தான். பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு பெரிய அவசர அவசிய காரியத்தில் இம்மாதிரியான உறுத்தல்கள் ஏற்படவே செய்கின்றன. அதற்காக மேற்கொண்ட பொறுப்பைக் கைவிடுவது அறிவுடமையாகாது.

பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தபோது பாரத நாட்டு ராணுவத்திற்கு உறு துணையாக இருந்து தொண்டு செய்த வரலாறும் குருஜியின் சீடர்களான ஆர் எஸ் எஸ் ஊழியர்களுக்கு உண்டு. ஆனால் அவரகள் அனைவரும் மறக்கப்பட்ட, வரலாறு அடையாளம் காட்டத் தவறிய வீர சாகச தீரர்கள். காஷ்மீர் போரில் கடமையாற்றிய பாரத ராணுவத்தினர் மட்டுமே நேரில் கண்டு வியந்து பாராட்டிய பெயர் தெரியாத சாமானியர்கள், அவர்கள்.

காஷ்மீர் போரின்போது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் உயிராசையின்றி மிகவும் துணிவோடு செயல் புரிந்தது பற்றிப் பின்னர் குருஜியிடம் ராணுவத் தளகர்த்தர்கள் வியப்போடு விசாரித்தனர், உங்கள் தொண்டர்கள் இவ்வளவு துணிச்சலாகச் செயல்படுமளவுக்கு நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் பயிற்றுவிக்கிறீர்கள் என்று.

குருஜி புன்னகையுடன் அதற்கு அளித்த பதில்: கபடி!

எந்தச் சமயத்திலும் நான் ஆர் எஸ் எஸ் ஸில் இருந்ததில்லை. வெளியிலிருந்து அதனை அவதானிக்கும் பார்வையாளனாகவே இருந்து வந்துள்ளேன். ஆகவே ஆர் எஸ் எஸ் தொடர்பான எனது தகவல்களில் கற்பிதங்கள் ஏதும் இல்லை.

நேருஜி காஷ்மீர் பிரச்சினையை ஐ நா அவையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் பின் விளைவுகள் பாரதத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் காஷ்மீரில் தான் ஆக்கிரமிப்புச் செய்த பகுதியில் பாகிஸ்தான் நிலையாகத் தன் கால்களை ஊன்றிக் கொண்டு விட்டது. சில ஆண்டுகள் கழித்து அதில் ஒரு பகுதியை சீனாவுக்குத் தாரை வார்த்தும் கொடுத்துவிட்டது! இதற்கெல்லாம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்து விட்டதாக பாரதம் கருதுகிறது. 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பாரதம் வெகு எளிதாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை மீட்டிருக்க முடியும். ஆனால் ஐ நா வுக்கு அளித்த வாக்குறுதிக்குக் கட்டுபட்டு, தான் கைப் பற்றிய அந்தப் பகுதியின் சில பாகங்களிலிருந்து வெளியேறியது.
காஷ்மீரில் மக்கள் பாரத ராணுவத்தின் எதிர்ப்பாளராக இருப்பதுபோலவும் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாக எவர் தலையீடுமின்றி இயங்க வேண்டும் என விரும்புவது போலவும் ஒரு தோற்றத்தைச் சிலர் உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

உண்மையில் 85 சத காஷ்மீர் மக்கள் பாரதத்தின் ஒரு பகுதியாகத் தங்கள் மாநிலம் இருந்து வருவதைத்தான் விரும்புகின்றனர். பத்து சதவீதத்தினர் மட்டுமே மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்புகின்றனர். வெறும் ஐந்து சதவீத மக்கள் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாகத் தனித்து இயங்குவதை விரும்புகின்றனர். தங்கள் மாநிலம் எல்லா அம்சங்களிலும் முன்னேற்றம் காணவும் பாதுகாப்பாக இருக்கவும் பாரதத்தின் ஒரு மா நிலமாக இருப்பதுதான் நல்லது என்பதைப் பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் அறிந்துள்ளனர்.

காஷ்மீர் சுதந்திர தேசமாக இயங்க அனுமதிக்கப்பட்டால் அடுத்த கணமே பாகிஸ்தான் அதனைக் கபளீகரம் செய்துவிடும் எனக் காஷ்மீரிகள் பலரும் கருதுகின்றனர். அவ்வாறு நேர்ந்தால் அறுபது ஆண்டுகளாகியும் இன்னமும் ஒரு ஸ்திரத் தன்மையின்றி வெளி நாட்டு நிதி உதவியின் தயவிலேயே உயிர் தரித்திருக்கும் பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம் தங்களையும் தொற்றிக் கொண்டுவிடும் எனக் காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர்.

1947ல் காஷ்மீரை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோது அது நடத்திய அட்டூழியங்களை நினைவுகூரும் முதிய காஷ்மீரிகள், பாரதத்தின் ராணுவம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்வதில்லை என்றும் மிகவும் கட்டுப்பாடாகத்தான் இயங்கிவருவதாகவும், எப்போதேனும் எங்கேயாவது அபூர்வமாக நடைபெறும் முறைகேடுகள்கூட, மேலதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரில் தேர்தல்கள் நடைபெற்று மக்கள் தீர்ப்பிற்கிணங்க ஆட்சியமைந்து வருகிறது. நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. இதி லுள்ள குறைபாடுகள் பாரதத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுபவைதாம். காஷ்மீர் மாநிலம் பாரதத்தின் மைய அரசாலோ பிற மாநிலங்களாலோ சுரண்டப்படும் நிலைமை ஏதும் இல்லை. காஷ்மீரில் பிற மாநிலத்தவர் வீடோ, நிலமோ வாங்க அனுமதியில்லை என்பதுபோன்ற தனிச் சலுகைகள் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் அங்கு வேரூன்றுவதைத் தவிர்க்கிறது.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் தேர்தல் என்பதெல்லாம் இல்லை. அங்கு பாகிஸ்தான் நியமிக்கும் ராணுவ அதிகாரிதான் அதிபர் பதவியில் அமர முடியும். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டால்தான் ரேஷன் கார்டே கிடைக்கும். கில்ஜ்த் முதலான இடங்களில் மக்களுக்குக் குடியுரிமையே வழங்கப்படவில்லை. கடந்த அறுபது ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் காணாத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் அண்மையில் பாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரிலேற்பட்டுள்ள வளர்ச்சியையும் மக்கள் சுதந்திரமாகச் செயல்படுவதையும் கண்டு வியப்படைந்தனர். மிகுந்த ஏக்கத்துடன்தான் அவர்கள் தாம் வசிக்கும் பாகிஸ்தானின் பிடியிலுள்ள காஷ்மீருக்குத் திரும்பிச் சென்றனர்.

பாரத ராணுவம் பெருமளவில் குவிந்திருப்பதால் பயங்கர வாதிகள் பொது மக்களைத் தாக்குவது குறைந்திருப்பதாகவும் ராணுவத்தினர், கவல் துறையினர் ஆகியோர் மீதுதான் பயங்கர வாதிகளின் கவனம் செல்வதாகவும் காஷ்மீரிகள் பலர் கூறுகின்றனர். இதுபற்றி நூலாசிரியரும் இஸ்கான் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவருமான ஸ்டீபன் நாப் என்ற அமெரிக்கர் தமது நேரடி அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு சுற்றுலாப் பயணியாகக் காஷ்மீர் சென்ற அவர், பொது மக்கள் பலரையும் சந்தித்துப் பேசி அவர்களிடம் பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கேட்டார். ஸ்டீபன் நாப் 2007 ஜூன் மாதம்தான் காஷ்மீர் சென்று வந்துள்ளார். எனவே அவரது தகவல்களை மிக மிகச் சமீபத்திலானவையாகக் கொள்ள வேண்டும்.

ஸ்டீபன் நாப் பதிவுகளிலிருந்து சில பகுதிகள்:

காஷ்மீருக்கு நான் சென்றது கோடைப் பருவத்தில். ஸ்ரீநகரில் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிரு ந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தேன் (காஷ்மீரில் பாரத எதிர்ப்புணர்வு அதிகமாகிவிட்டதால் அங்கு பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து எவரும் செல்லவே அஞ்சுவதாகப் பிரசாரம் செய்யபடுவதால் இவ்வாறு குறிப்பிடுகிறார் ).

காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை நிலையினையும் மக்களின் கருத்தினையும் அறிய எனது பயணத்தைப் பயன் படுத்திக்கொண்டேன். ஒரு முகமதிய சிறு வியாபாரியையும், சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முகமதியக் குடும்பத்தினரையும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்வோரையும் சந்தித்துப் பேசினேன்.

காஷ்மீரில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பதாகவும் பயங்கரவாதிகளின் குறி ராணுவம், காவல் துறை ஆகியவற்றின் மீது திரும்பிவிட்டதால் பொது மக்கள் மீதான தாக்குதல் குறைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொதுவாக மக்களிடையே பாரத அரசின் மீதோ பாரத மக்கள் மீதோ வெறுப்பு ஏதும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது.

காஷ்மீர் மக்கள் தமது வருமானத்திற்குப் பெரும்பாலும் சுற்றுலா வரும் பயணிகளையே சார்ந்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்ட மிகுதியால் சுற்றுலா பாதிக்கப்பட்டு, வருமானம் குன்றுவதால் அவர்கள் உண்மையில் பயங்கரவாதிகளை அறவே வெறுக்கின்றனர். பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்கு பாரத ராணுவத்தின் பிரசன்னம் பெரிதும் இடைஞ்சலாக இருப்பதால் தொடர்ந்து பாரத ராணுவத்தின் கண்காணிப்பு இருந்து வருவதையே அவர்கள் விரும்புகின்றனர்.

பயங்கரவாதிகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களில் பெருமளவு குறைந்துவிட்டது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த கிராமப் புறங்களில்தான் திடீர் திடீர் என அவர்கள் தோன்றி மக்களை மிரட்டுகின்றனர். ஆயுதங்களை நீட்டி உணவும், பணமும் ஏன் பெண்களையுங்கூடத் தருமாறு அதிகாரத்துடன் கேட்கும்போது அதற்கு மக்கள் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. ராணுவத்திற்கோ காவல் துறைக்கோ தகவல் கொடுப்பவர்கள் எனப் பழி சுமத்திப் பலரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று அவர்களின் உடமைகளைச் சூறையாடிப் பெண்களையும் தமது போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்வதைக் காணும் காஷ்மீரி எவனும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முன்வரமாட்டான். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் நுழையும் பயங்கர வாதக் குழுக்கள் காஷ்மீரி இளைஞர்களை வலுக்கட்டாயமாகவும் பலவாறு ஆசைகாட்டியுமே தம்முடன் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பயங்கரவாதச் செயலில் ஈடுபடுமாறு திருப்பி யனுப்புகின்றன. அதற்கு ஒப்புக்கொள்ளாத காஷ்மீரி இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்களின் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். அதற்கு அஞ்சி பயங்கர வாதச் செயலில் ஈடுபடும் காஷ்மீரி இளைஞர்கள் பாரத ராணுவத்திடமோ காஷ்மீர் காவல் துறையிடமோ சிக்கிகொள்ள நேர்ந்தால் அப்போதும் துன்புறநேரிடும். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் காஷ்மீர் மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகப் பொங்கி எழுகிறார்கள். இதனை பாரத ராணுவத்தின் இருப்புக்கு எதிரான நிலையாகப் பிரசாரம் செய்வது சரியல்ல. பயங்கரவாதிகளும் பாகிஸ்தானிகளும் எளிதாகப் பிரவேசிக்கும் நிலை இருப்பதால் காஷ்மீர் மக்களுக்குக் குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் காவல் துறையினரும் காஷ்மீர் மக்களிடம் அவர்களின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கெடுபிடி செய்யும்போது மக்களுக்கு எரிச்சல் ஏற்படுவதும் இயற்கையே. ஆனால் பாரத ராணுவத்தின் இருப்பு தங்களின் அமைதியான வாழ்க்கைக்கும் சுற்றுலா மூலமான தடையில்லாத வருமானத்திற்கும் மிகவும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர்.

பயங்கர வாதம் காலூன்றுவதற்கு முன் காஷ்மீரிகள் சிலரால் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு பிரபலமடையலாயிற்று. அந்த இயக்கம்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்த ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் அப்புறப்படுத்தும் செயலை மேற்கொள்ளலாயிற்று. அதற்குமுன் மக்களிடையே சமயத்தின் அடிப்படையில் வேற்றுமை உணர்வோ வெறுப்போ இருந்ததில்லை. ஹிந்துக்களான காஷ்மீர் பண்டிட்களைத் துரத்திவிட்டு அவர்களின் வீடு வாசல்களை இந்த விடுதலை இயக்கத்தினர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். பண்டிட்களை அச்சுறுத்தி விரட்ட க் கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் கொடுமை என எல்லாவிதமான முறைகேடுகளும் கையாளப்பட்டன. விடுதலை இயக்கத்தின் பெயரால் ஹிந்து இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஹிந்து பண்டிட்கள் கொல்லப்பட்டு நான்கு லட்சத்திற்கும் அதிகமான பண்டிட்கள் இன்று தமது தாயகமான காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். மனித உரிமைக் காவலர்கள் எவரும் அவர்களைச் சந்தித்து குறை கேட்பதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இல்லை.

தொடக்கத்தில் காவல் துறையினர் தம்மிடம் சிக்கும் பயங்கரவாதிகளைக் கைது செய்து வழக்குப் பதிவுசெய்து தண்டனை பெற்றுக் கொடுத்தனர். ராணுவத்தினரும் தாம் பிடித்து வைக்கும் பயங்கர வாதிகளைக் காவல் துறையிடம் ஒப்படைப்பதோடு தமது கடமையை முடித்துக்கொண்டனர். ஆனால் தண்டனைக் காலம் முடிந்தபின் பயங்கரவாதிகள் திரும்பவும் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்ததால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டது. இதையொட்டி எதிர்ப்படும் பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களைச் சுட்டு வீழ்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வப்போது பிழைகளும் நேர்ந்து முறையாகத் தங்களை அடையாளங் காட்டிக் கொள்ளத் தவறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகின்றனர். பயங்கரவாதிகளுடனான துப்பாகிச் சண்டையின்போது இடையில் தற்செயலாகச் சிக்கிக்கொள்பவர்களும் குண்டடி படுவதுண்டு. பயங்கரவாதிகளின் நெருக்கத்தில் சிக்குண்ட ஒரு பிரதேசத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்வது இயற்கையே என்பதை விவரம் அறிந்த காஷ்மீர் மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஸ்ரீநகரில் கடை வைத்துப் பிழைக்கும் அப்துல்லா பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் நல்லது, அவர்களைச் சிறைக்கு அனுப்புவதால் பலனில்லை என்கிறார். பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது குறைந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்று போடுவதுதான் என்று அவர் கூறுகிறார். காஷ்மீர் மக்களின் வருமானத்திற்குத் தடையாக இருக்கும் பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் சரி என்பது அவரது கருத்து. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கொல்வதுதான் சரி என்று சொல்வதை முதல் தடவையாகத் தாம் கேட்டதாகக் கூறுகிறார், ஸ்டீபன் நாப்.
அமைதியான அன்றாட வாழ்க்கை, சீரான வருமானத்திற்கு இடையூறில்லாத சூழல், தடங்கல் இல்லாத வளர்ச்சிப் பணிகள், கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இவையே மக்களின் எதிர்பார்ப்பு. உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமில்லாத நிலைமையை அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. காஷ்மீரில் பயங்கர வாதம் ஊடுருவுமுன், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் எல்லைக் கோட்டினையொட்டி உள்ள காஷ்மீர் மாநில கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்தின் தொல்லை இருந்து வந்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தொல்லை தராமல் இருக்க பாரத ராணுவம் ஒரு கவசமாகவும் காஷ்மீர் மாநில மக்களைக் காத்து வந்தது.

முன்பு பாரத ராணுவத்தின் அரவணைப்பில் நிம்மதியாகக் கழிந்த அமைதி வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டுமாயின் பயங்கரவாதம்தான் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமேயன்றி பாரத ராணுவம் அகற்றப்படலாகாது என்பதைக் காஷ்மீர் மக்கள் நன்கு அறிந்தேயுள்ளனர்.