Friday, 7 March, 2008

ஔரங்கசீப் கண்காட்சி : வரலாற்று மறைக்கப்படுதலும் திரிக்கப்படுதலும்

முகமதிய மன்னர்கள் படையெடுப்பால் விளைந்த நமது நெடிய பண்பட்ட பாரத பண்பாடு/பாரம்பரியங்களுக்கு ஏற்பட்ட இழுக்குகளையும், சோதனைகளையும் பாதிப்புகளையும் பல்வேறு அராய்சியாளர்கள்/அறிஞர்கள் பல்வேறு மட்டங்களில் சரியான முறையில் ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.

ஹிந்துஸ்தான மக்கள் தமக்கே உரித்தான சகிப்புத்தன்மை காரணமாக இந்த இழிவான நிகழ்வுகள் புறம்தள்ளப்பட்டுவந்திருக்கின்றன.

பல்வேறு அரசியல் காரணங்களால், இந்த நிகழ்வுகள் சரியான முறையில் அனைத்துத்தட்டு மக்களுக்கும் சென்றடையாமல் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. நாலந்தா போன்ற கல்வி ஆலையங்களும், எண்ணிலடங்கா தெய்வ வழிபாட்டு ஆலயங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது மட்டுமல்லாது, இன்றளவும் முகமதிய மன்னர்கள் அந்த இடங்களில் நிறுவிய அவமானசின்னங்களை சுமந்துகொண்டுதானிருக்கிறோம்.

வரலாற்றூ நிகள்வுகளை உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்தப்படுதலும், பாமர மக்களுக்கும் வரலாற்று உண்மைகள் எந்தவித திரிபுகளும் இல்லாது வழங்கப்படவேண்டியது நமது அரசாங்கத்தின் கடமை. அரசு இந்த கடமைகளிலிருந்து தவறுமானால் அதனாலான விளைவுகளை நாம் எதிர்காலத்தில் அனுபவிக்கநேரிடும்.

கடந்த வாரங்களில் திப்புசுல்தான் பற்றிய விவாதங்கள் திண்ணை மற்றும் வலப்பதிவுகளில் எழுந்து அடங்கியதை படிக்க நேரிட்டது. இன்னிலையில், சென்னையில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியில், முகமதியர்களும் அவர்களுக்கு ஆதரவாக போலீசாரும் நடந்துகொண்ட வன்முறை நாடகங்கள் பற்றிய செய்தி இன்றய நாளிதள்களில் வந்திருக்கின்றன.

ஏதோ ஒருசில முகமதியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், விலைபதிப்பில்லா ஆவணங்கள் அழிக்கப்பட்ட கொடுமை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

******இன்றய தினமணி செய்தி கீழே********

ஒளரங்கசீப் கண்காட்சி: ஓவியங்களை போலீஸôர் அகற்றியதால் பரபரப்பு-5 பேர் கைதாகி விடுதலை

சென்னை, மார்ச். 6: சென்னை லலித்கலா அகாதமியில் நடைபெற்று வந்த ஒளரங்கசீப் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை போலீஸôர் வியாழக்கிழமை அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான பிரான்ஸ்வா கோத்தியேவின் "ஃபேக்ட்' அமைப்பு ஒüரங்கசீப் ஆட்சிக் காலத்திய ஆவணங்கள் குறித்த கண்காட்சியை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாதமியில் மார்ச் 3-ம் தேதியிலிருந்து இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் சோமநாதர் கோவில், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா உள்ளிட்ட பல்வேறு கோவில்களை இடித்து சேதப்படுத்திய நிகழ்வுகளும் இந்துக்கள் மீதான ஜஸியா வரிவசூல் கொடுமைகளை விளக்கும் வகையில் தீட்டப்பட்ட 65 ஓவியங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ராஜஸ்தானில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை என ஃபேக்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

ஒüரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டது தொடர்பான படங்கள் இடம் பெற்றதால், கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் வியாழக்கிழமை பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் உள்ளிட்ட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் லலித்கலா அகாதமியில் திரண்டனர்.

ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்தவர்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பிரான்சுவா கொத்தியே கூறியதாவது:

மாலை 6.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி தலைமையில் போலீஸôர் கண்காட்சி நடந்த இடத்துக்கு வந்தனர்.
போலீஸôருடன் பிரான்சுவா கொத்தியே பேச்சு நடத்தினார். அப்போது முரளியும் அவருடன் வந்த போலீஸôரும் ஓவியங்களை அப்புறப்படுத்த தொடங்கினார்கள். அப்போது சில ஓவியங்கள் உடைந்தது.

கண்காட்சி ஏற்பாடுகளில் இருந்த சரஸ்வதி (65), டாக்டர் விஜயலட்சுமி (55), மாலதி (40), அனுபமா (25), பி.ஆர். ஹரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை போலீஸôர் விடுவித்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ். ராமனை (72) போலீஸôர் கடுமையாக தாக்கினர். இதில் தோள்பட்டையில் அவருக்கு பலத்த அடி விழுந்தது என்றார்.

போலீஸôர் அராஜகம்: ""இரவு 6 மணிக்கு பெண்களை கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் அதனை மீறி நான்கு பெண்களை இரவு 7 மணிக்கு போலீஸ் வேனில் ஏற்றி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த ஒருசிலருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரலாற்று ஆவணங்களை போலீஸôர் உடைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட போலீஸôர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

கைது செய்யவில்லை: ""முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான ஓவியங்கள் கண்காட்சியில் இருப்பதாக முஸ்லிம்கள் எங்களிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்தோம்.

பாதுகாப்பு கருதித்தான் பெண்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். யாரையும் கைது செய்யவில்லை'' என்று தெரிவித்தார் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி.
கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுவதாக இருந்தது. போலீஸôர் ஓவியங்கள் அகற்றி விட்டதால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாக பிரான்சுவா கோத்தியே தெரிவித்தார்.

2 comments:

Anonymous said...

To know more pictures of Aurangazeb exhibition, visit http://cuziyam.wordpress.com

சுழியம் said...

வீரவேல் ! வெற்றி வேல் !

கௌரவமான குலப்பெண்களை கைது செய்யும் காவல்துறை பற்றித் தெரியுமா?

மேல் விவரங்களுக்கு: http://cuziyam.wordpress.com/2008/03/09/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/

வந்தே மாதரம் !