Friday, 14 December 2007

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம் - மலர்மன்னன்

Thursday December 13, 2007
ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்


மலர்மன்னன்

மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது பற்றிக் கருத்துச் சொல்லுமாறு பணிக்கிறார்கள்.

ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கை, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, சூரிநாம் போன்ற பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களையும் தகரம் போன்ற கனிமச் சுரங்கங்களையும் வைத்திருந்த பிரிட்டிஷ் முதலாளிகள் நேரங் காலம் இல்லாமல் அடிமைகளென மிகக் கடுமையாக உழைப்பதற்கு ஏராளமான மனித ஆற்றல் தேவைப்பட்டபோது தானும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹிந்துஸ்தானம் தனது பிரஜைகளை அனுப்பிக் கொடுத்தது.

பிழைக்க வழியின்றி, பிறந்த தேசத்தில் பசிக் கொடுமையன்றி வேறு அறியாது தவித்த மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பலவாறு ஆசைகள் காட்டி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனரே யன்றி, விருப்பம் காரணமாக அல்ல. கடலுக்கப்பால் இருப்பது சொர்க்க பூமி என போதையூட்டப்பட்டதாலும் பலர் கப்பல் ஏறினார்கள். இவர்களைத் தவிர பாரம்பரியமாகத் திரைகடல் தாண்டித் திரவியம் தேடுவதைத் தொழிலாகக் கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும், குறிப்பாகத் தஞ்சை, ராமனாதபுரம் மாவட்ட முகமதியரும் , வாணிபம் செய்து பொருள் ஈட்டக் கடல் கடந்து சென்றார்கள். உடலுழைப்பைக் கொடுத்து உயிர் பிழைக்கச் சென்றவர்கள் அனைவருமே ஹிந்துக்கள்தாம். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழர்கள்.

இவ்வாறு சென்றவர்களில் கணிசமானவர்கள் மலேயாவின் ரப்பர் தோட்டங்களிலும் தகரச் சுரங்கங்களிலும் பாடெடுக்கச் சென்றார்கள். மலேயா ஒரு காலனிய நாடாக இருந்தவரை அவர்கள் தமது சமய நம்பிக்கைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையைத் தொடரத் தடங்கல் ஏதும் இருக்கவில்லை. காலனிய நாடுகள் எல்லாவற்றிலுமே ஹிந்துஸ்தானத்திலிருந்து சென்ற ஹிந்துக்களுக்கு சமயம், கலாசாரம் ஆகியவற்றில் குறுக்கீடு ஏதும் அநேகமாக இருக்கவில்லை. பலவாறான கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளே புகுந்து சபலப்படுத்திக் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யும் தொல்லை மட்டுமே இருந்தது. இப்படிச் சபலத்திற்கு ஆளாகித் தங்களின் பாரம்பரியமான சமய நம்பிக்கையினையும் கலாசார அனுசரிப்பையும் கைவிட்டு மாற்று சமயம் தழுவியவர்கள் சொற்பம்தான். மிகப் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களாகவே நீடித்தனர்.

காலனிய நாடுகளில் எல்லாம் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கிய பிறகுதான் ஹிந்துக்களாகவே நீடித்தவர்களின் வாழ்க்கையில் புயலடிக்கத் தொடங்கியது. இப்போது அங்கெல்லாம் இருந்த ஹிந்துக்கள் இரண்டாவது மூன்றாவது தலைமுறை
யினராகிவிட்டிருந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்து, பிறப்பாலும் அந்த நாடுகளின் பிரஜைகளாகிவிட்டவர்கள் அவர்கள். தமது முன்னோர் நாடான ஹிந்துஸ்தானத்தை அவர்கள் கண்ணால் கண்டதில்லை. அங்கே அவர்களுக்கு வேர்களும் இல்லை.

மலேயா காலனியாதிக்கத்திலுருந்து விடுபட்டு, அங்கிருந்த பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமாரும் சுரங்க அதிபர்களும் சிறிது காலத்திற்குள் இனி இங்கு இருப்பதில் பயனில்லை என முடிவு செய்து வெளியேறியதும் அவர்களின் தோட்டங்களும் சுரங்கங்களும் கை மாறின. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஹிந்துஸ்தானத்திலிருந்து ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களைப் பற்றிக் கவலைப் படாமல் பிரிட்டிஷ் முதலாளிமார்கள் தாயகம் போய்ச் சேர்ந்தார்கள்.

காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் தங்கிப் போன ஹிந்துக்களுக்குத் தமது சமயத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதில் பிரச்சினை தொடங்கியது அந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற பிறகுதான். குறிப்பாகத் தம்மை முகமதிய தேசம் எனவும், பவுத்த தேசம் எனவும் பிரகடனம் செய்துகொண்ட தேசங்களில் ஹிந்துக்களுக்குத் தமது, சமய நம்பிக்கை, பண்பாடு ஆகியவை சார்ந்த விவகாரங்களில் சங்கடம் தலை தூக்கியது. அவர்கள் பகிரங்கமான புறக்கணிப்புகளுக்கு இலக்காகத் தொடங்கியது அப்போதிலிருந்துதான்.

மலேயாவாக இருந்து மலேசியாவென ஒரு சுதந்திர நாடாக மாறிய தேசம் தன்னை முகமதிய தேசமாக அடையாளப் படுத்திக் கொண்ட போதிலும் தொடக்கத்தில் பிற சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அதன் மதச் சார்பு தீவிரப்படலாயிற்று. உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ சமயத்திடம் அதனால் கடுமை காட்ட இயலவில்லை. ஹிந்து சமய மக்கள் சகிப்புத்தன்மை, சமரசப் போக்கு என்றெல்லாம் தமது கையாலாகாத்தனத்திற்கு ஒப்பனைசெய்து தமக்குத் தாமே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதால் வெகு எளிதில் அவர்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, கலாசார வாழ்க்கை ஆகியவற்றுக்கு எங்கும் சோதனை வருகிறது அல்லவா? மலேசிய ஹிந்துக்களுக்கும் அதுதான் நேரலாயிற்று.

மலேசியாவின் பிரஜைகளான ஹிந்துக்கள் அங்கு முகமதியம் அரசின் உறுதுணையுடன் மேலாதிக்கம் செலுத்துவது அதிகரித்ததும் தங்களின் சமய நம்பிக்கையின் அடிப்படை
யிலான வழிபாட்டுத் தலங்களை இழக்கத் தொடங்கியதோடு பொருளாதார ரீதியாகவும் உதாசீனம் செய்யப்படுவதைப் பல காலம் பொறுத்துப் பார்த்துப் பிறகு தமக்கு இவ்வாறான இழப்பு நேர்ந்து வருகின்றமைக்கு அடிப்படைக் காரணம் பிரிட்டிஷ் அரசு, தனது காலனி ஆதிக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கோண்டபோது தம் ஆட்சிக்காலத்தில் அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களின் சமய வழிபாட்டு உரிமைக்கும், கலாசாரப் பாதுகாப்பிற்கும் பொருளாதார உத்தரவாதத்திற்கும் எவ்வித ஏற்பாடும் செய்யாமலேயே போய்விட்டமைக்காக மிகச் சரியாகவே பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அமைதியான பேரணியாகச் சென்று பிரிட்டிஷ் ராணியாருக்கு மனு அளிக்க முற்பட்டு அதன் விளைவாக மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மலேசிய ஹிந்துக்கள் மலேசிய அரசுக்கு எதிரான பேரணியோ மறியலோ நடத்த முற்படவில்லை. பிரிட்டிஷ் தூதரகத்திற்குக் கருணை மனு அளிக்கத்தான் அமைதிப் பேரணியாகச் செல்ல விரும்பினர். ஆனால் அதற்கு அனுமதி யளிக்கக் கூட மலேசிய முகமதியச் சார்பு அரசுக்கு மனமில்லை. அது பேரணிக்கு அனுமதி மறுத்துத் தடையும் விதித்தபோது, ஹிந்துக்கள் தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முற்பட்டு மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் சிறையில் தள்ளப்பட்டு ஏதோ கொடிய குற்றவாளிகளைப் போல பிணையில் வெளிய வர அனுமதிக்கப்படாமல் பல கடுமையான சட்ட விதிகளின்படி வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்துக்களுக்கு இனி இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடும் நினைப்பே வரக்கூடாதவாறு நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்கிற ஆங்காரம் மலேசிய முகமதிய அரசுக்கு இருப்பது இதனால் தெளிவாகிறது. இவ்வளவுக்கும் அது தன்னை ஒரு ஜன நாயக நாடு எனக் கூறிக்கொள்கிறது. மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லாக் கீழ்த் திசை நாடுகளையும்போல் ஹிந்து, பவுத்த சமயங்கள் வேரோடியிருந்த தேசந்தான் அது! வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. ஜனநாயகத்தையும் மதச் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கும் நாடாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு முகமதிய தேசமே இவ்வாறு நடந்துகொள்ளுமானால் ஜன நாயகம் இல்லாத, போலி ஜனநாயக முகமதிய நாடுகளில் சிக்கிக்கொண்ட ஹிந்துக்களின் நிலை என்னவாக இருக்கும்?

மலேசிய ஹிந்துக்கள் மிகச் சரியாகவே தங்கள் அமைப்பிற்கு ஹிந்து உரிமைப் போராட்டக் குழு எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஏனெனில் முகமதியராகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களும், திராவிட மாயையில் கிடப்பவர்களும் சமரம் செய்துகொண்டு முன்னேறிவிட்டவர்களும் தமிழர்களாகவும், இந்திய வம்சாவழியினராகவும் இருந்த போதிலும் ஹிந்துக்களுடன் இணையவில்லை. தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் ஹிந்துக்களாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இந்த நுட்பங்களையெல்லாம் அறியாமல், மலேசிய ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரிடம் இங்கே யிருப்பவர்கள் சிலர் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ அடையாளப் படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுவதுபோலக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

மலேசியப் பிரஜைகளான அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்று அழைத்துக் கொள்வார்களேயானால் அது அவர்கள் இன்னமும் தங்கள் முன்னோர் தேசத்தின் மீது உள்ளூர விசுவாசம் வைத்திருப்பதாகவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுவதற்கு வழிசெய்துவிடும். தமிழர்கள் என அவர்கள் தம்மை மேலும் குறுக்கிக்கொள்வது பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஹிந்துக்களின் அனுதாபம் அவர்களுக்குக் கிட்டாமல் செய்துவிடக் கூடும்.

இன்று உலகெங்கிலும் ஹிந்துக்கள் பலர் சமய நம்பிக்கையுடனும் சமூக உணர்வுடனும் இருந்து வருகின்றனர். ஹிந்து சமயமேகூட சர்வ தேசத் தன்மையடைந்துள்ளது. ஹிந்து சமயத் தத்துவங்களின் சிறப்பையும் இறைக்கொள்கையின் ஆழத்தையும் புரிந்துகொண்டு அதனைப் போற்றுபவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ஹிந்து இயக்கங்கள் பல சர்வ தேசத் தன்மையுடன் வலுப்பெற்று விளங்கி வருகின்றன. ஹிந்துக்கள் இன்று பல்வேறு தேசங்களின் பிரஜைகளாகத் தாம் வாழும் தேசங்களில் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். ஆகவே மலேசிய ஹிந்துக்கள் தம்மை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் ஹிந்துக்கள் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதுதான் நல்லது.

அதன் பயனாக, ஹிந்து சமயம் மிகத் தொன்மையான உயிர்த் துடிப்புள்ள, தத்துவ ஆழம் மிக்க சமயம், ஹிந்து கலாசாரமோ மிகத் தொன்மையான கலாசாரம்; அது அழிந்துவிடலாகாது என்னும் விவேகமுள்ள நாடுகள் பலவும் அவர்களுக்கு ஆதரவு காட்டி கலாசார, சமயச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரும். சர்வ தேச ஹிந்து இயக்கங்களும் அவர்களுக்குத் துணை புரிய முன்வரும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசும் அங்குள்ள நீதி பரிபாலன அமைப்பும் இந்த அடிப்படையில் அவர்களுக்கு உதவ முன்வரக்கூடும்.

ஹிந்து என்கிற அடையாளம் சர்வ வியாபகச் சிறப்பு வாய்ந்தது. இந்திய வம்சாவழியினர் என்கிற அடையாளமோ தங்களுக்குப் பிரஜாவுரிமை தந்துள்ள தேசத்தைக் காட்டிலும் முன்னோரின் தேசத்தையே பெரிதாக நினைக்கும் மக்கள் என்ற கண்டனத்திற்குள்ளாகக்கூடும். அவர்களின் விசுவாசம் குறித்துப் பிறரால் கேள்வி எழுப்பப்படும். தமிழர் என்ற அடையாளமோ ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர் என எல்லையைக் குறுக்கி விடும்.

உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் அந்தந்த தேசங்களின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் தம்மைச் சமய ரீதியாகவும், கலாசார அடிப்படையிலும் ஹிந்துக்கள் என அடையாளப் படுத்திக்கொள்வதே அவர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். கிறிஸ்தவரும் முகமதியரும் தம்மை ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என அடையாளப் படுத்தித் தமது தாய்ச் சமய கலாசாரத்திற்கு உரிமைகொண்டாடுவதில் தவறில்லை. அண்மைக் காலம் வரை பங்களா தேஷ் என இன்று அழைக்கப்படும் கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த முகமதியர் தங்களை அவ்வாறுதான் அடையாளப் படுத்தி வந்தனர். ஹிந்தி ஹை ஹம், ஹிந்தி ஹை ஹம் என்று இக்பால் கூவியது இந்த அடிப்படையில்தான்(பிற்காலத்தில்தான் அவர் பாகிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் ஆனார்).

ஹிந்துஸ்தானத்திலிருந்து செல்லும் முகமதியர் ஹிந்தி என்றுதான் முகமதிய தேசங்களில் அடையாளங் காணப்பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அவற்றின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் தங்களை இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதைவிடுத்து, ஹிந்துக்கள் என்று அடையாளப் படுத்திக்கொள்வதுதான் அவர்களுக்கு சர்வ தேச
அந்தஸ்தையும் அவர்கள் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளில் சமயச் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் கேட்டுப் பெற உதவும். இந்திய வம்சாவழியினரான கிறிஸ்தவரும் முகமதியரும் இவ்வாறு சமயத்தின் அடிப்படையில் அங்குள்ள சமுதாய கலாசாரங்களுடன் இரண்டறக் கலந்து பயனடைய முடிகிறது. ஹிந்துக்களும் தங்கள் சமயத்தின் பெயரால் தங்களை அடையாளப்படுத்தி சிறுபான்மைச் சமயத்தவர் என்ற அடிப்படையில் தாம் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளிலும் சர்வ தேச அரங்குகளிலும் கவனிப்பைப் பெற முனைவது நல்லது.

இன்று இந்திய வம்சாவழியினர்தாம் ஹிந்துக்களாக இருப்பார்கள் என்னும் நிலை இல்லை. பல ஐரோப்பியரும் அமெரிக்கரும் பிற நாட்டினரும்கூட ஹிந்து சமய, கலாசார சிறப்புகளை உணர்ந்து தம்மை ஹிந்துக்கள் எனப் பெருமையுடன் அறிவித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

Wednesday, 7 November 2007

திண்ணை கட்டுரை by நரேந்திரன் - மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகமும் இஸ்லாமும்

Thursday November 1, 2007

மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்

நரேந்திரன்

"In a time of universal deceit, telling the truth is a revolutionary act."
- George Orwell

ஆம். மேற்கத்திய உலகம் தேய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக. தேய்வது நிலப்பரப்பில் அல்ல. மக்கள் தொகையில். இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1970 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையானது, 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் மேற்குலகில் ஏற்பட இருக்கும் அல்லது ஏற்படத் துவங்கி இருக்கும் புவியியல் மற்றும் சமுதாய ரீதியிலான மாற்றங்களின் தாக்கம் அச்சமூட்டும் வகையில் அமைந்திருக்கருக்கின்றது. எனவே அது குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமே.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத வகையில் இந்த நூற்றாண்டில் பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றது மேற்கத்திய உலகம்.

அமெரிக்காவைத் தவிர்த்து அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதனை வைத்து இதனைத் தீர்மானிக்கையில், கிரீஸின் மக்கள் தொகைப் பெருக்கம் 1.3, இத்தாலி 1.1, ஸ்பெயின் 1.1, அமெரிக்கா 2.1, ரஷ்யா 1.14 என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றைய கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் முதியவர்களே. 2050 ஆம் வருடத்திற்குள் 60 சதவீத இத்தாலியர்களுக்கு பெற்றோரைத் தவிர வேறு உறவினர்களே இருக்க மாட்டார்கள் என்பது ஆச்சரியச் செய்தி. இன்னும் முப்பதாண்டுகளில் சகோதர, சகோதரி, மாமன், அத்தை, சிற்றப்பன் என்ற உறவுகள் அனைத்தும் இழந்திருப்பார்கள் இத்தாலியர்கள். அந்த அளவிற்கு இத்தாலிய மக்கள் தொகை படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். ரஷ்யாவின் நிலைதான் இதில் மிகவும் மோசமானது. லெனின் தள்ளிவிட்டுச் சென்ற மார்க்ஸியப் படுகுழியிலிருந்து இன்னும் ரஷ்யர்களால் மீளமுடியவில்லை. வறுமையும், விபச்சாரமும், போதை மருந்துக் கலாச்சாரமும் இன்றைய ரஷ்யாவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் 140 மில்லியன் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் மிக அதிக கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் ரஷ்யப் பெண்களே. நாட்டின் எல்லைகளைக் காக்கப் போதுமான ராணுவ வீரர்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. அதன் 83 குடியரசுகளில், 61-இல் இதே நிலைமைதான். அதற்கு மாறாக 12 இஸ்லாமியக் குடியரசுகளில் மக்கள் பெருக்கம் க்ட்டுக்கடங்காமல் பெருகி வருவது கவனிக்கத்தக்கது.

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் ஜெர்மனிய மக்கள் தொகை நம்பவே முடியாத அளவிற்குச் சரிந்து விட்டது. உதாரணமாக, சில ஜெர்மானிய சிறு கிராமங்களில் வடிகால் (sewer system) இயக்கம் முற்றிலும் இயங்குவது நின்று போகும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. காரணம், பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பைப்புகள் கொண்ட வடிகால் சரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் அதனைத் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். அதன் மூலம் தேவையான அழுத்தம் பெறப்பட்டு, கழிவு நீர் தங்கு தடையின்று வடிந்து செல்லும். உபயோகிப்பாளர்கனின்றி சீரழிந்து கிடக்கும் வடிகால்களை தொடர்ந்து இயக்கும் பொருட்டு, பெரிதான பைப்புகளை அகற்றி, சிறிய பைப்புகள் அமைக்கும் பணியினை ஜெர்மனிய அரசாங்கம் பல பில்லியன் டாலர்கள் செலவில் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை ஓரளவு உணரலாம்.

ஆசிய நாடுகள் பலவற்றிலும் மக்கள் பெருக்கம் குறைந்து வருகிறது. ஜப்பானின் பெரும்பான்மை மக்கள் முதியோர்களே. 1970-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஜப்பானியப் பெண்களில் 51 சதவீதத்தினர் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதால் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருக்கின்றது அங்கே. 2050-இல் சீனர்களில் பெரும்பான்மையோர் முதியோர்களே. இந்திய நடுத்தர வர்க்கமும் தன் பங்கிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தே வருகிறது என்பது நாம் அறிந்ததே.

இன்றைய ஐரோப்பிய மக்கள் தொகைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டுமெனில், பிற நாடுகளிலிருந்து மக்களை குடியமர்த்தச் செய்வதே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஒவ்வொரு வெற்றிகர நாட்டிற்கும் மனிதச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக நுகர்வோர், அதிக உற்பத்தி. அதிக உற்பத்தி, அதிக வேலை வாய்ப்பு. அதிக வேலை வாய்ப்பு உறுதியான பொருளாதாரத்திற்கு அடிப்படை. எனவே மக்கள் தொகை குறைந்து வருவதால் கவலை கொள்ளும் நாடுகள், குடியேற்றங்களை அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு அவ்வாறு குடியேறுபவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.

ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் அதே சமயம், இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இன்னொரு விதமாகக் கூறுவதென்றால், ஒப்பீட்டளவில், 1970களில் இஸ்லாமிய நாடுகளை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்த மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை, 2000-ஆம் வருடம் அதே இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாகக் குறைந்து விட்டது. பதினைந்து வயதிற்கும் குறைவானவர்கள் ஜெர்மனி 14 சதமும், இங்கிலாந்து 18 சதமும், அமெரிக்கா 21 சதமும் இருக்கிறார்கள். அதே சமயம் சவூதி அரேபியாவில் 39 சதம், பாகிஸ்தானில் 40 சதம், ஏமனில் 47 சதம் பேர் இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்காவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உண்மையே. கடந்த இருபது ஆண்டு காலங்களில், இந்நாடுகளுக்கு குடியேறும் இஸ்லாமிய மக்களின் சதவீதம் மிகவும் அதிகரித்திருக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக குடியேறுபவர்கள் இவர்களில் அதிகம் பேருண்டு. உலகில் இருக்கும் நாற்பத்தாறு இஸ்லாமிய நாடுகளில், மூன்றே மூன்று நாடுகளைத் தவிர பிற நாடுகளில் சர்வாதிகாரிகளால் நசுக்கப்படும் முஸ்லிம்கள், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் குடியேற்றச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி அங்கு குடியேறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்றைக்கு இருபது மில்லியன் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். அரசாங்கக் கணக்கு அது. அன்-அ·பிசியலாக இன்னும் அதிகம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இருபது மில்லியன் என்பது டேனிஷ், ஐரிஷ், பெல்ஜியன் மற்றும் எஸ்டோனிய ஜனத்தொகையின் மொத்த கூட்டுத் தொகைக்கும் ஈடானது.

டென்மார்க்கில் மட்டும் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ரோட்டர்டாம் நகரின் மொத்த ஜனத்தொகையில் 40 சதவீதம் முஸ்லிம்களே. ·பிரான்ஸ்சின் நகரப்பகுதிகளில் 30 சதவீதம் முஸ்லிம்கள். இன்னும் பல ·பிரான்சின் சிறு நகரங்களில் 45 சதவீதம் வரை முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பெல்ஜியத்திலும், ஆம்ஸ்டர்டாமிலும், இங்கிலாந்திலும், மால்மோவிலும் சிறுவர்களுக்கு வைக்கப்படும் அதிகபட்சப் பெயர் "மொஹம்மது" என்பது குறித்து நாம் ஆச்சரிப்பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பிய ஜனத்தொகை முதிர்ச்சியடைந்து குறைந்து வரும் வேளையில், பெருகும் இளம் முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை பல மடங்கு அதிகரிது வருகிறது.

***

கிறிஸ்தவ Europe இஸ்லாமிய Eurobia ஆக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நம்பத் தகுந்த சூழ்நிலை நிலவுகிறது அங்கே. எந்த ஐரோப்பிய நாடு முதலில் இஸ்லாமிய நாடாகும் என்பதுதான் கேள்விக்குறி. முதலில் அல்பேனியா. அடுத்ததாக ·ப்ரான்ஸ். பின்னர் இங்கிலாந்து.. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி...?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில், இன்றைக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மயமாவதிலிருந்து மயிரிழையில் ஐரோப்பா தப்பியிருப்பது தெரிய வரும்.

AD 732, அக்டோபரில் மூரிஷ் ஜெனரல் (Moorish) அப்த்-அல்-ரஹ்மானின் தலைமையிலான இஸ்லாமியப் படை, ஜிப்ரால்டரின் வடக்கே ஆயிரம் மைல்கள் வரை முன்னேறியது. மூர்க்கத்தனமாக போர் புரிந்த இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்கத் திராணியற்ற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்தன. ஸ்பெயினையும், ·பிரான்ஸ்சின் தென்பகுதியையும் கைப்பற்றிய அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை, பாரிஸ் நகருக்கு ஏறக்குறைய இருநூறு மைல்கள் தொலைவில் இருக்கும் லோய்ர் (Loire) நதிக்கரையை வந்தடைந்தது. ·ப்ரான்சைச் சேர்ந்த சார்ல்ஸ் ·ப்ரான்கிஷ் (Charles Frankish) என்பவர் தலைமியிலான ஐரோப்பிய கிறிஸ்தவப் படையினர், இன்றைய ·ப்ரான்சின் பொய்ட்டியர்ஸ் (Poitiers) மற்றும் டூர்ஸ் (Tours) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படையினரை எதிர்த்து நின்றார்கள். ஒரு வார காலம் நிகழ்ந்த கடுமையான போரின் போது பிற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளைப் போலப் பின்வாங்கி ஓடாமல் ·ப்ரான்கிஷின் படையினர் எதிர்த்து நின்றார்கள். ஜெனரல் அப்த்-அல்-ரஹ்மான் கொல்லப்பட, இஸ்லாமியப்படை பின் வாங்கிச் சிதறியோடியது.

பொய்ட்டியர்ஸ் போர் ஐரோப்பாவின் திருப்பு முனை எனலாம். அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை இப்போரில் வென்றிருந்தால் ஐரோப்பாவின், ஏன் உலகின் தலையெழுத்தே வேறாக இருந்திருக்கக் கூடும். பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதற்கும் மேலாக ரைன் நதியையும் தாண்டிச் செல்லவே அப்த்-அல்-ரஹ்மான் முயன்றிருப்பார் என நம்பலாம்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்றைய நடைமுறைகளைப் போலல்லாமல், ஆக்ஸ்·போர்டிலும் மற்ற ஐரோப்பிய பல்கலக்கழகங்களிலும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறித்த பாடங்களை மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ மதம் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கலாம். ஐரோப்பாவிலிருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்கா சென்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருப்பார்கள். ஒசாமா பின்-லேடன், கலீ·பா பின்-லேடனாகி இருக்கலாம். 911 தவிர்கப்பட்டிருக்கக் கூடும்... இத்தியாதி. இத்தியாதி. எக்ஸெட்ரா. எக்ஸெட்ரா. இன்ன பிற.

எதிர் வருக் காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாகும் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகயம் தொட அனுமதிக்கப்படுமா அல்லது இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான அரசாங்கம் அமையுமா என்பது யோசிக்கச் சுவராசியமான விஷயங்களே.

எனக்கென்னவோ இரண்டாவதுதான் நிகழும் என்று தோன்றுகிறது.

அதற்கு ஆதாரமாக இரண்டு உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறேன். முதலாவது இங்கிலாந்திலிருந்து. இரண்டாவது அமெரிக்காவிலிருந்து.

இங்கிலாந்தில் வசிக்கும் முப்பத்து ஒன்பது வயதான இஸ்லாமியத் தலைவர் அன்ஜம் சவுதிரி. நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த 911 தாக்குதலை "அற்புதம்" என்று வர்ணித்த அவர், அத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை "ஹீரோக்கள்" என்றார். இலண்டனில் நடந்த ட்யூப் ரயில் தாக்குதலை ஒரு பெரும் வெற்றியாக அறிவித்ததுடன், அத்தாக்குதல் குறித்து இங்கிலாந்து போலிசாரும், அரசாங்கமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர்.

அன்னார் அன்ஜம் சவுதிரியின் இலட்சியம், இங்கிலாந்தில் இஸ்லாமிய ஷரியா ஆட்சி கொண்டு வருவது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. சவுதிரியும் அவரது மனைவியும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் (கணிசமான தொகை என்பதனை விளக்க வேண்டியதில்லை!). அதாவது, மேற்கில் புலம் பெயர்ந்த பெரும்பாலான, கல்வித் திறமைகள் அற்ற பெரும்பாலான முஸ்லிம்களைப் போலவே அவர் அலுவலகப் பணியோ அல்லது வேறு உபயோகமான பணியோ என்றும் எதுவும் செய்வதில்லை. அப்படியாகப்பட்ட அவரை BBC-யில் பேட்டி கண்டார்கள். பேட்டி எடுத்த மகானுபாவர் அவரிடம், "Why don't you move to some other country where islamic sharia is already in place?" எனக் கேட்டு வைக்க, அதற்கு திருவாளர் சவுதிரி அளித்த பதில் உலகப் பிரசித்தமானது.
"Who says you own Britain? Britain belongs to Allah! The whole world belongs to Allah! If I go to the jungle, I'm not going to live like the animals. I'm going to propogate a superior way of life. Islam is the superior way of life!" என்று ஒரு போடு போட்டர். பேட்டி எடுத்தவர் அனேகமாக ஒரு இங்கிலாந்து "காட்டுவாசி"யாகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் நிலை குறித்து நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது உதாரணம் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் சிறுவர் பள்ளி (கிண்டர் கார்டன்) ஆசிரியையான நஸ்ரா குரேஷியினுடையது. ஆங்கிலத்தில் அளிப்பதே சாலப் பொருத்தம் ஆதலால் அதனை மொழி பெயர்க்க முற்படவில்லை. Lansing State Journal பத்திரிகையிலிருந்து இது. இனி நஸ்ரா,

........ Islam is the guide of humanity, for all times, until the day of judgement. It is forbidden in Islam to convert to any other religion. The penalty is death. There is no disagreement about it.
Islam is being embraced by people of other faiths all the times. They should know they can embrace Islam, but cannot get out. This rule is not made by Muslims; It is the supreme law of God.
Please do not ask us Muslims to pick some rules and disregard other rules. Muslims are supposed to embrace Islam in its totality....

அ·ப்கோர்ஸ் இது மெஜாரிடி முஸ்லிம்களின் பார்வையில்லை. குறைவான முஸ்லிம்களே இத்தகைய மனோபாவம் உடையவர்கள் என்று நம்புவோமாக.

Peace be upon you.

ஆதாரம் : "America Alone - The end of the world as we know it" by Mark Steyn.