Monday 22 September, 2008

உடனடியான தேவை உறுதியான தலைமையும் கடுமையான சட்டங்களும்.

அமெரிக்காவும் இன்னபிற மேலைநாடுகளும் நடத்திவரும் தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் பல்வேறு குறைபாடுகள் இருந்த்தாலும், தமது மண்ணில் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறாவண்ணம் தடுப்பதில் பெரும் வெற்றியடைந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக, அன்நாடுகளின் உறுதியான தலைமை, கடுமையான சட்டங்கள், எந்தவித அரசியல் இன/மதவாத குறிக்கீடுகள் இல்லாமல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், மக்களின் விளிப்புணர்வு... இவைகளை காரணமாகச்சொல்லலாம்.

வேறெந்த நாட்டையும்விட அதிகமாக முகமதியம் போன்ற பயங்கரவாதத்தால் பாதிப்படைந்தது நமது பாரதம். இருந்தாலும், மேற்கூறிய எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பலியாகிவருகிறோம்.
இன்றய தினமணியில் இது தொடர்பாக எழுதப்பட்ட தலையங்கக்கட்டுரை கீழே...

*********************
Monday September 22 2008 00:00 IST
தேவை கடுமையான சட்டம்
ஜெ. ராகவன்

தில்லியில் கடந்த 13-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது. பயங்கரவாதிகளின் கொடூரச் செயல்களுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.
"இந்தியன் முஜாஹிதீன்' என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தில்லி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இது வெளிநாட்டு சக்திகளின் சதி என்று கூறுவதும், பயங்கரவாதச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உண்மையில் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க தற்போதுள்ள சட்டங்கள் கடுமையானதாக இல்லை என்பதுதான் உண்மை. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதா அல்லது சட்டங்களைக் கடுமையாக்க வேண்டுமா என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இது விஷயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.

இது இப்படியிருக்க, நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, தனது கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நாட்டில் குற்றச் செயல்களையும், பயங்கரவாதச் செயல்களையும் தடுப்பதற்காக இப்போதுள்ள சட்டங்கள் பலவீனமாக உள்ளன. பயங்கரவாதத்தை வேறுடன் களைய வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சட்டங்களைக் கடுமையாக்கினால் போதாது; அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் பிடிபட்டால், அவர் மீதான வழக்கு நடந்து தீர்ப்பு வர ஆண்டுகள் பலவாகும். அதற்குள் ஏதாவது ஒருவகையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்கிறார். இதைத் தவிர்க்க வேண்டுமானால் இது தொடர்பான வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு வழங்க ஏதுவாக நீதிமன்ற நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கிரண் பேடியின் கருத்து மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

போலீஸ் துறையில் சிறந்த நிர்வாகி என பெயர் எடுத்தவரும், "மகஸôúஸ' விருது பெற்றவருமான கிரண் பேடி, போலீஸ் துறையை காலத்துக்கு ஏற்றவாறு நவீனப்படுத்தி, சீர்த்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று மற்றொரு கருத்தையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நமது நாட்டின் போலீஸ் துறையில் சிபிஐ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அவற்றின் செயல்பாடு பலவீனமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்செயல்கள், வன்முறை, சட்ட விதிமீறல்கள் போன்ற விஷயங்களில் போலீஸôர் மிகவும் மென்மையாக நடந்து கொள்கின்றனர். இப்படி இருந்தால் குற்றங்களை எப்படி குறைக்க முடியும்? பயங்கரவாதச் செயல்களை எப்படித் தடுக்க முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதிகளின் புதுப் புது சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமானால், போலீஸôர் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு துணிச்சலுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டால்தான் இலக்கை நாம் எட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளது சிந்திக்க வேண்டிய விஷயம்.

மத்திய அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. குதிரையை வண்டியில் பூட்டிவிட்டு கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

Copyright(c) Dinamani

No comments: