Friday, 31 August 2007
மலர்மன்னன் திண்ணை கட்டுரை - ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்
மலர்மன்னன் Thursday August 30, 2007
ஹைதராபாதில் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன் என்கிற முகமதியரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர் சங்கத்தினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடு கூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தங்களுடைய பலத்தைப் பரீட்சை செய்துபார்த்ததாக வெளியான செய்தி எனக்கு எவ்வித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. வெறும் பூச் சாடியைத்தானா அந்த வெட்கங்கெட்ட பெண் மீது எறிந்தீர்கள்? அட கையாலாகாதவர்களே! கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லாமல் எதற்காக அங்கு போனீர்கள்? வெறும் விளம்பரம் தேடிக்கொள்வதற்குத்தானா? என்று ஹைதராபாதிலிருந்து வெளிவரும் சில உருது பத்திரிகைகள் பகிரங்கமாக வன்முறையைப் பிரசாரம் செய்ததையோ, முஸ்லிமீன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர் நாங்கள் நஸ்ரீனைக் கொலை செய்து பழிவாங்க ஆயுதங்களுடன் காத்திருந்தோம். அதற்குள் முஸ்லிமீன்கள் சிறு கலவரம் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்; நஸ்ரீனும் பிறரும் எச்சரிக்கையடைந்து விட்டதால் எங்கள் திட்டம் நிறைவேறவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோ கூட எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் முஸ்லிமீன் கட்சியின் பாரம்பரியம் இன்னதென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு சுயேற்சையான குறு நிலமாக நைஜாம் சமஸ்தானம் விளங்கிய கால கட்டத்தில் அந்தக் கட்சியினர் செய்த அட்டகாசங்களை நன்கு அறிவேன்.
செகந்திராபாதில் வசித்த அசோக மித்திரன் என்னை விட இன்னும் நன்றாகவே இதனை அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவரெல்லாம் ஏனோ இதுபற்றியெல்லாம் வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ இல்லை. தமது பதினெட்டாவது அட்சக் கோடு நாவலில் அவர் ரஜாக்கர் என்கிற குண்டர் படை ஹைதராபாதிலும் தெலுங்கானாவிலும் செய்த அட்டூழியங்களை மிக விரிவாகவே எழுதியிருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை. ஆகையால் அவ்வப்போது தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வழியாகவும் மிரட்டல்களைப் பெறுவது வழக்கமாகிவிட்டிருக்கிற நான்தான் இதைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியதாகிறது.
1947 ஆகஸ்ட் 15 க்கு முன் நாங்கள் வசித்தது நாங்கள் என்பது என் அப்பா அம்மா சகோதரிகளுடன் நானும் உள்ளிட்ட ஒரேயொரு தமிழ்க் குடும்பம்இன்றைக்குத் தனது விரிவான காகித ஆலையின் காரணமாகவே அகில பாரதமும் அறிந்து வைத்திருக்கிற ஸிர்பூர் காகஸ் நகர் என்கிற சிற்×ரில். அன்று அது மிகவும் சிறிய ஊராகக் கொத்த பேட்ட என்கிற தெலுங்குப் பெயருடன் விளங்கியது. நைஜாம் சமஸ்தானத்திற்குட்பட்ட அந்த ஊர் மூங்கில் காடுகள் சூழ வறுமைப்பட்டுக் கிடந்தது. நைஜாம் மன்னரின் பல்கிப் பெருகிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு (அதிகாரப் பூர்வமாக மூன்று மனைவிகள், 42 ஆசை நாயகிகள், 200 பிள்ளைகள் மற்றும் கணக்கில் வராத பேரப் பிள்ளைகள்) அந்த மூங்கில் காட்டை அழித்துக் காகிதம் செய்ய ஆர்வம் பிறந்ததால் கொத்த பேட்ட காகஸ் நகர் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இருந்தாலும் பேச்சு வழக்கில் அது கொத்தப் பேட்ட என்றே தொடர்ந்து வழங்கி வந்தது.
தெலுங்கு அறிந்தவர்களுக்குத் தெரியும், கொத்த என்றால் புதிய. பேட்ட என்பது பேட்டைதான். அதாவது புதிய பேட்டை. பழைய பேட்டை மூங்கில் காட்டினுள் எங்கோ ஒளிந்து கிடந்திருக்கக் கூடும்.
கொத்த பேட்டையில் காகித ஆலை நிறுவும் தொடக்கப் பணிகள் ஆரம்பிக்கவும், பல முகமதியக் குடும்பங்கள் அங்கு குடியேறலாயின. கொத்த பேட்ட அவர்கள் வாயில் நுழைவது சிரமம். ஆனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், கொஞ்சங்கூட உறுத்தல் இல்லாமல் குத்தா பேட் என்றே உச்சரிப்பார்கள்! குத்தா பேட் என்றால் நாயின் வயிறு என்பது ஹிந்துஸ்தானி அறிந்தவர்களுக்குத் தெரியும். முகமதியர் குடும்பத்துப் பெண்மணிகள் மிகவும் சலிப்புடன் யே குத்தா பேட்மே குச்பி நஹி மில்தி (இந்த நாயின் வயிற்றில் எதுவுமே கிடைப்பதில்லை) என்று புகார் சொல்வதைக் கேட்கிற போது மிகவும் சிரமத்துடன் சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டிவரும்.
ஆக, கொத்த பேட்ட என்று தெலுங்கில் பெருமிதத்தோடும் குத்தா பேட் என ஹிந்துஸ்தானியில் இளப்பமாகவும் வழங்கி வந்த நாயின் வயிற்றில் மாட்டுத் தொழுவம் போன்ற ஒரு விசாலமான குடிசையில்தான் நான் பிறக்கவே செய்தேன். ஏனெனில் நான் பிறந்த சமயத்தில் மக்கள் வசிப்பதற்கான கல் கட்டிடம் ஏதும் அங்கு கட்டப்பட்டிருக்கவில்லை.
நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஊரில், முகமதியர் செல்வாக்கு பெருகத் தொடங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்ததால் அந்த சமஸ்தானதிற்கே உரியதாகத் தோன்றிய இயக்கத்தின் மூல வேர் எது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தொண்டர் என்னும் கவுரவமான பொருள் தரும் ரஜாக்கர் என்று அறியப்பட்ட வெறும் அடியாள்கள் கூட்டத்தின் சந்ததிதான் இன்று இப்படி ஓர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்று ஆளும் கட்சியான காங்கிரசின் கூட்டாளியாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஹைதராபாத் தெருக்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஊர்களிலும் கையில் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறது.
மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸ்லிமீன் இன்று ஹைதராபாதில் மிகவும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் மிக்க ஓவைசி என்கிற குடும்பத்தின் சொத்தாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. அண்ணன் அஸாவுதீன் ஓவைசி ஹைதராபாத் மக்களைவைத் தொகுதியின் பிரதிநிதி. தம்பி அக்பருதீன் ஓவைசி ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற முஸ்லிமீன் கட்சித் தலைவர். இவர் ஹைதராபாத் மாநகரின் சார்மினார் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு முன் அவர்களின் தகப்பனார் சலாவுதீன் ஒவைசிதான் மக்களவை, சட்ட மன்றம் என்று மாறி மாறிப் போய் வந்து கொண்டிருந்தார். உடல் தளர்ந்ததுவிடவும் பதவிகளை மகன்களிடம் ஒப்படைத்து ஓய்வெடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.
இன்றைக்கு ஹைதராபாதிலும் சுற்றுப் புற ஊர்களிலுமாக 4500 குண்டர் குழுக்கள் ஓவைசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆந்திர மாநில காவல் துறையின் உளவுப் பிரிவு கணக்கெடுத்து வைத்திருக்கிறது. காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கைச் சரியாக நிர்வாகம் செய்வதற்கான சுதந்திரம் தரப்பட்டிருந்தால் ஒரே நாளில் இந்தக் குண்டர் குழுக்களை ஒடுக்கிவிட முடியும். ஆனால் வாக்கு வங்கி அரசியல் காவல் துறையின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது. இப்பொழுதுள்ள சாலமன் ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு முஸ்லிமீனுடன் கூட்டே வைத்திருக்கிறது. தெலுங்கு தேசமே ஆட்சிக்கு வந்தாலும் அதுவும் எங்கே வாக்குகளை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் முஸ்லிமீன் குண்டர் படையைக் கண்டுகொள்ளாது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள தெலுங்கானா, இன்று கர்னாடக மா நிலத்தின் பகுதியாக உள்ள பிஜப்பூர், குல்பர்கா, பீடார் மாவட்டங்கள், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் ரங்கா ரெட்டி மாவட்டம் என்று வழங்கப்படுகிற முன்னாள் மும்பை மாநிலப் பகுதி ஆகியவை சேர்ந்த நிலப் பரப்புதான் நைஜாம் சமஸ்தானமாக முன்பு விளங்கி வந்தது. நான் பிறந்து வளர்ந்த கொத்த பேட்ட என்கிற காகஸ் நகர், தெலுங்கானாவைச் சேர்ந்தது.
ஹைதராபாத் சமஸ்தானத்தில் பெருமளவில் வசிக்கும் முகமதிய மக்களின் வறுமை, கல்லாமை ஆகியவற்றைக் களைவதும், சமூகத்தில் அவர்களின் கவுரவத்தைக் காப்பதும் தனது கொள்கை என அறிவித்து 1927 ல் தொடங்கப் பட்ட மஜ்லிஸ் ஏ இதாஹாதுல் முஸ்லிமீன் உண்மையில் நிஜாமின் அதிகார பலத்தைக் கட்டிக் காக்கும் ஆயுதந் தாங்கிய படையாகத்தான் இயங்கி வந்தது. மஜ்லிஸ் என்பது கூட்டமைப்பு என்பதைக் குறிக்கும். முகமதியரின் சகல பிரிவுகளையும் ஒருங்கிணைத்து நைஜாம் மன்னரின் விசுவாசிகளாக அனைத்துத் தரப்பினரையும் பிணைத்து வைத்திருப்பதுதான் அதன் கடமையாக இருந்தது.
இதேஹாத் பைனுல் முஸ்லிமீன் என்று தொடக்கத்தில் பெயர் சூட்டப் பட்ட இக்கட்சி பிறகு மும்லிகத் ஏ மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸ்லிமீஎன் எனப் பெயர் மாற்றம் பெற்றது. மாற்றமெல்லாம் பெயரில் மட்டுந்தான்; சுபாவம் அப்படியேதான் இருந்து வந்தது. இன்றும் அதே மனப் போக்குடன்தான் நீடிக்கிறது.
ஹிந்துஸ்தானத்தில் சுதந்திரக் காற்று வீசுவதற்கான பருவ நிலையும், அதோடு கூடவே பாகிஸ்தான் என்கிற பெயரில் முகமதியருக்கான தனி தேசம் ஒன்று உருவாகும் சாத்தியக் கூறும் நிலவியபோது நைஜாம் மன்னரின் மகுடமும், அரியணையுமே ஹைதராபாத் முகமதியரின் கலாசார அடையாளம்; அதனை இழக்கச் சம்மதியோம் என அறைகூவித் திரிந்தது, முஸ்லிமீன். ஹைதராபாத் சமஸ்தானம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் சுயாட்சி அதிகாரத்துடன் நைஜாம் மன்னரால் ஆளப்பட்டு வரவேண்டும்; அது சாத்தியமில்லையேல் பாரதத்துடனோ பாகிஸ்தானுடனோ இணையாமல் ஒரு சுதந்திர நாடாக விளங்கி
வரவேண்டும் என முஸ்லிமீன் வலியுறுத்தி வந்தது.
ஹைதராபாத் நகரம் உள்ளிட்ட தெலுங்கானாதான் நைஜாம் சமஸ்தானத்தின் மையப்பகுதியாக இருந்தது. அங்கு நைஜாமின் பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து ஏழை விவசாயத் தொழிலாளர்களை மீட்கும் போராட்டத்தைப் பொதுவுடமைக் கட்சி ஒருபுறம் தொடங்கியபோது, மறுபுறம் காங்கிரஸ் கட்சி ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவேண்டும் என்ற இயக்கத்தை முன்னின்று நடத்தியது. ஆந்திர மகா சபை என்ற அமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கானாவும் மும்பை மா நிலத்திலும் சென்னை மா நிலத்திலும் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளும் இணைக்கப்
பட்டு, விசால ஆந்திர மாநிலம் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனப் பிரசாரம் செய்தது. இவை அனைத்திலும் ஹிந்துக்களே அங்கம் வகித்தனர். குறிப்பாகப் பொதுவுடமைக் கட்சியில் ஹிந்துக்கள்தான் இருந்தனர். ஏழை முகமதியருக்காகவும் சேர்த்தே அவர்கள் கிளர்ச்சி செய்தனர். ஆனால் ஏழை எளிய முகமதியரும் மத ஒற்றுமைக்குக் கட்டுப்பட்டு முஸ்லிமீன் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.
நைஜாம் சமஸ்தானத்தின் தனித் தன்மையை இழக்கச் செய்யும் பிரசாரங்களை முறியடிக்கவும், நைஜாமின் ஆதரவளர்களான நிலச் சுவான்தாரகளுக்குத் தொல்லை தரும் பொதுவுடமைக் கட்சியினரை ஒடுக்கவும் முஸ்லிமீன் கையாண்ட வன்முறை காலப் போக்கில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலாகப் பரிணாமமடைந்தது. வழக்கம் போல ஹிந்துக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சேதாரம், மானபங்கம் என முஸ்லிமீன் தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தது. நைஜாம் சமஸ்தானம் முழுவதும் ஹிந்துக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியது.
ஹைதராபாதின் துணை நகரம் போலிருந்து வந்த செகந்திராபாத் பிரிட்டிஷ் படைகளின் முகாமாகச் செயல்பட்டு வந்ததால் அந்தப் பாதுகாப்பு வளையத்தினுள் ஹிந்துக்கள் பத்திரமாக வசிக்க முடிந்தது. ரஜாக்கர் என அறியப்பட்ட முஸ்லிமீன்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் ஹைதராபாதிலிருந்தும் அதன் சுற்றுப் புறங்களிலிருந்தும் தப்பி செகந்திராபாதில் தஞ்சம் புகுந்தனர். அன்று ஹைதராபாதில் அட்டகாசம் செய்து திரிந்த ரஜாக்கர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்று ஒரு புள்ளி விவரம் உள்ளது. சமஸ்தானத்தின் காவல் துறை அந்த ரஜாக்கர்களுக்கு எடுபிடியாக ஊழியம் செய்தது.
1946, 47 ஆண்டுகளில் ரஜாகர்களின் அட்டகாசம் உச்ச கட்டத்தை அடைந்தது. கொலை கொள்ளை, தீ வைப்பு, பாலியல் கொடுமைகள் அதிகரித்தன (அச்சமயம் காகஸ் நகரில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருந்த ஹிந்துக் குடும்பங்களுக்கு அக்கம் பக்கம் இருந்த முகமதியர் மறைமுகமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்கள், ஊரைவிட்டுப் போய் விடுமாறு! உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையைப் புரிந்துகொண்டு வெளியேறிய எங்கள் குடும்பம், புதுச்சேரிக்கு வந்து அரவிந்த ஆசிரமத்தில் சேர்ந்தது. என் தந்தையார் ஸ்ரீ அரவிந்தரின் தொடக்க காலச் சீடர்களுள் ஒருவராக இருந்தமையால் எவ்விதச் சிக்கலும் இன்றி அரவிந்த ஆசிரமத்தில் எங்களுக்கு இடம் கிடைத்தது. 1947 ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் நாங்கள் பிரஞ்ச் இந்தியாவில் வசிக்கலானோம். அதாவது ஆகஸ்ட் 15 க்குப் பிறகும் எங்களது அடிமை அந்தஸ்து தொடர்ந்தது! ).
1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ஹைதராபாத் சமஸ்தானத்தில் ரஜாக்கர்களின் வன்முறை எல்லை மீறியது. பாதிக்கப்படும் ஹிந்துக்களுக்கு ஆறுதலளிக்க ஆரிய சமாஜம் மும்முரமாக முனைந்தது. அதன் விளைவாக ஆரிய சமாஜத்தினரும் ரஜாக்கக்ர் தாக்குதலுக்கு இலக்காயினர். ஆந்திர மகாசபையும், காங்கிரசும் தலைமறைவாகி விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின.
ரஜாக்கர் என்றே அறியப்பட்ட முஸ்லிமீன் கட்சிக்கு காசிம் ரிஸ்வி என்பவர் தலைமை ஏற்று, விடுதலை இயக்கத்தை ஒடுக்கும் சாக்கில் மிகவும் முரட்டுத்தனமான தாக்குதலை ஹிந்துக்கள் மீது தொடர்ந்தார்.
1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ஹைதராபாத் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைத்துவிடுமாறு பாரத அரசாங்கம் நைஜாம் மன்னருக்கு அறிவுரை கூறியது. ஆனால் அவர் சுதந்திர நாடு என்கிற கனவு கலைந்ததும் பாகிஸ்தானுடன் இணையும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு விண்ணப்பம் செய்தார். ரகசியமாக வெளிநாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வரவழைத்தார். அதிகாரம் முழுவதையும் ரஜாக்கர் கையில் ஒப்படைத்துவிட்டுப் பெயரளவில் ஆட்சிக்கு அதிபதியாக இருப்பதோடு திருப்தியடைந்தார். சமஸ்தானப் பிரதம மந்திரி மீர் லியாகத் அலிகானும் ரஜாக்கர் தலைவர் காசிம் ரிஜ்வியும் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை முடிந்தவரை துஷ்பிரயோகம் செய்யலானார்கள். பாரதத்துடன் இணைப்பு கோரிய ஆந்திர காங்கிரசும்,
ஆ ந்திர மகா சபையும் கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்பட்டன. தெலுங்கானாவில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி, சமஸ்தான இணைப்பிற்காகவும் ஆந்திர மகாசபையுடன் இணைந்து போராடியது. கம்யூனிஸ்ட் கட்சியில் விரல்விட்டு எண்ணத் தக்க முகமதியரும் இருந்தனர். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ராமானந்த தீர்த்தர் சமஸ்தான இணைப்புக் கிளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் 93 சதம் ஹிந்துக்களேயாவர். பாரதத்துடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இணைக்க வேண்டும் என்கிற போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களும் ஹிந்துக்கள்தாம். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காரணத்தால் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்த முகமதியர் வெகு சிலரே.
அன்றைய கால கட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது ஹிந்துக்கள் மீதான எதிர்ப்பாகவே இருந்தது. அந்த எதிர்ப்பு கொலை, கொள்ளை, மான பங்கம் என்பதாகவும் இருந்தது.
1947 நவம்பரில் நைஜாம் பாரத அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஓராண்டு காலத்திற்கு இரு தரப்பிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்போதைய நிலையே தொடரச் செய்வதென்றும், அதன்பிறகு முடிவு எடுக்க முனைவதென்றும் நைஜாமுக்குச் சாதகமாகவே அந்த ஒப்பந்தம் அமைந்தது. நைஜாமை விட்டுப் பிடிக்கலாம் என்பது பாரத அரசின் எண்ணம். ஆனால் அந்த இடைக்காலத்தை ரஜாக்கர் தலைவர் ரிஸ்வியும், பிரதமர் லியாகத்தும் தங்கள் வலிமையைப் பெருக்கிக்கொள்வதற்கும், கிளர்ச்சியை அடக்கும் சாக்கில் ஹிந்துக்களை வதைப்பதற்கும் பயன்படுத்தலானார்கள். நிலைமை எல்லை மீறிப் போகவே, 1948 செப்டம்பர் மாதம் 13 ந் தேதி பாரத ராணுவம் மேஜர் ஜெனரல் ஜே என் சவுதரி தலைமையில் ஐந்து திக்குகளின் வழியாக ஹைதராபாதினுள் புகுந்தது. அய்ந்தே நாட்களில் ஆயிரக் கணக்கான ரஜாக்கர்களைக் கொன்று குவித்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அரசுக்கு திட சங்கற்பமும், பொறுப்பை உரியவர்களிடம் ஒப்படைத்து
விட்டு நிலைமையைக் கண்காணிப்பதோடு ஒதுங்கிக்கொள்ளும் போக்கும் இருந்தால் பயங்கர வாதச் செயல்களை வெகு எளிதாகவும் விரைவாகவும் ஒடுக்கிவிட முடியும் என்பதற்கு ஹைதராபாத் மீதான நடவடிக்கை ஓர் எடுத்துக்காட்டு. அன்று துணைப் பிரதமராகவும் உள்துறைக்குப் பொறுப்பாளராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும்,
கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் அதனை உள்நாட்டுப் போலீஸ் நடவடிக்கை என்று வர்ணித்து, ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது பாரதம் போர் தொடுத்துவிட்டதாக எழுந்த கூப்பாட்டை அடக்கினார்கள்.
வல்லபாய் பட்டேல் ராஜாஜியுடன் ஆலோசனை கலந்து அந்த நடவடிக்கையை நேரடியாக எடுத்திராவிட்டால் ஹைதராபாத் இன்னொரு காஷ்மீராகியிருக்கும். போலீஸ் நடவடிக்கையையொட்டி, ஹைதராபாதின் அமைதியைக் குலைத்து வந்த லியாகத்தும் காசிம் ரிஸ்வியும் கைது செய்யப்பட்டதோடு, புணே சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். முஸ்லிமீன் கட்சிக்கும் அதன் ரஜாக்கர் படைக்கும் தடை விதிக்கப்பட்டது. ரஜாக்கர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தனர். மேஜர் ஜெனரல் சவுதரி செப்டம்பர் மாதம் 18ந்தேதி நைஜாம் மன்னரிடம் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைப்பதாகக் கையொப்பம் பெற்றார். நிலைமை சரியாகும் வரை ஆளுநர் பொறுப்பை வகிக்குமாறு சவுதரிக்கு பாரத அரசு கட்டளை யிட்டது. அந்த வாய்ப்பை சவுதரி சரியாகப் பயன்படுத்தி முஸ்லிமீனை தலை தூக்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விலகிக்கொண்டதும் நிர்வாகத்தில் தளர்வு ஏற்பட்டு, படிப்படியாக முஸ்லிமீன் வெளியே தலையை நீட்டலாயிற்று.
காசிம் ரிஸ்வி சிறையிலிருந்தவாறு முஸ்லிமீனுக்குத் தலைமை தாங்கத் தகுதி வாய்ந்த நபரைத் தேடலானார். எவருமே கட்சிக்குத் தலைமை ஏற்று அதற்குப் புத்தியிரூட்டத் துணியாதபோது, செல்வந்தரும், பிரசித்திபெற்ற வழக்குரைஞருமான அப்துல் வாஹித் ஓவைசி தலைமைப் பொறுப்பேற்க முன்வந்தார். அப்போது முதல் முஸ்லிமீன் ஒவைசியின் குடும்பச் சொத்தாகியது. வாஹித்துக்குப் பின் அவர் மகன் சலாவுதீன் ஓவைசி, அவருக்குப்பின் அவரது மகன்கள் என ஓவைசி குடும்பத்தின் பிடியில் முஸ்லிமீன் கட்சி தொடர்கிறது. இந்த ஒரு குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு பிரிவு விலகிச் சென்று தனிக் கட்சி தொடங்கியுள்ள போதிலும் ஹைதராபாத் முகமதியரிடையே ஓவைசி குடும்பத்தார் மீதான விசுவாசம் குன்றவில்லை. முகமதிய சமுதாயத்தினருக்கான கல்வி நிலையங்கள் பலவற்றை முஸ்லிமீன் சார்பில் ஓவைசி குடும்பதார் நிறுவியிருப்பது அவர்களின் செல்வாக்கு நீடிக்க உதவுகிறது (1958 ல் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுக்குக் குடிபெயர்வதாகத் தெரிவித்து அந்த நிபந்தனையின் பேரில் விடுதலையாகி பாகிஸ்தானுக்குப் போய்ச் சேர்ந்தார். லியாகத் அலியும் அதற்கு முன்னதாகவே சிறையிலிருந்து தப்பி பாகிஸ்தானுக்கு ஓடிப் போனார். இதனால் ஹைதராபாத் முகமதியர் மீதான முழு அதிகாரத்தையும் வெகு எளிதாக ஓவைசி குடும்பத்தார் பெற முடிந்தது).
ஆரம்ப காலங்களில் முஸ்லிமீன் ஹைதராபாத் நகரின் சார்மினார் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. முகமதியரிடையே கட்டுப்பாடான ஆதரவு பெருகி, தற்போது அதற்கு ஆந்திர சட்ட மன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்று ஒவைசி சகோதரர் இருவரிடமும் முஸ்லிமீன் கட்சி அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. மேடைப் பேச்சில் வல்லவர்களான இருவரும், நாம் ஆண்ட பரம்பரை என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேசியே முகமதிய மக்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு சிறு சம்பவமாக இருந்தாலும் அதைப் பெருங் கலவரமாக முற்றச் செய்வதில் இருவரும் வல்லவர்கள். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தபோது, முகமதியரைத் திரட்டி கல்லெறி, தீவைப்பு என ஊரையே அவர்கள் கலகலத்துப் போகச் செய்தனர். காவல் துறை செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டு நின்றது. காரணம், முஸ்லிமீன் இன்று காங்கிரசின் கூட்டாளி! ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்துடன் இணையக்கூடாது என அட்டூழியங்கள் செய்த முஸ்லிமீன் கட்சியைத்தான் காங்கிரஸ் தனது கூட்டாளியாகச் சீராட்டிக்கொண்டிருக்கிறது!
ஒவைசி குடும்பமே சட்டம் பயின்ற குடும்பம்தான். வாஹித்துக்குப் பிறகு முஸ்லிமீன் கட்சிக்குத் தலைமை ஏற்ற சலாவுதீன் ஓவைசி, பாரத அரசியல் சாசனத்திற்கு முரண் இல்லாதவாறு கட்சியின் சட்ட திட்டங்களை வகுத்தார். கட்சியின் மீதான கட்டுப்பாடுகள் யாவும் நீங்குமாறு செய்து அதனை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறச் செய்தார்.
சட்டம் பயின்றவராக இருந்தபோதிலும் சலாவுதீன் ஓவைசியின் பேச்சும் செயலும் சட்டத்திற்கு முரணாகவே இருந்து வந்துள்ளன. பாஸ்கர ராவ் செய்த சதியின் விளைவாக என் டி ராம ராவ் முதலமைச்சர் பதவியை இழந்து சட்டமன்றத்தில் மிகவும் மனம் நொந்து உட்கார்ந்திருந்தபோது சலாவுதீன் ஓவைசி அவர் எதிரில் நின்று கொண்டு மிகவும் அநாகரிகமாகத் திட்டித் தீர்த்ததை இன்றும் ஆந்திரத்தின் மூத்த அரசியல்வாதிகள் பலர் நினைவு கூர்ந்து வருந்துவதுண்டு. ராம ராவ் பதிலுக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஓவைசி பொழிந்த வசைமாரியில் முழுக்க முழுக்க நனைந்த பிறகும் எதுவுமே நடைபெறாததுபோலப் பொறுமையாக இருந்தாராம்!
பாரத தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்த கட்சி முஸ்லிமீன் கட்சி. ஆனால் முன்பொருமுறை காங்கிரஸ் அரசு அதன் தலைவரான சலாவுதீனை தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் உறுப்பினராக நியமித்தது! தயவு தாட்சண்யமின்றிக் கடுமையாக நடத்தப்பட வேண்டிய ஒரு கட்சிக்கு இவ்வாறெல்லாம் அதன் தகுதிக்கு மீறிய
அங்கீகாரத்தை அளிப்பதால்தான் இன்று அது அரசாங்கத்தையே மிரட்டும் அளவுக்குத் துணிவு பெற்று வெளிப்படையாகவே வெட்டுவோம், குத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துக்கொண்டு திரிய முடிகிறது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
Monday, August 27, 2007
ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக வாழும் நகரம் ஹைதராபாத் என்று ஒரு செக்யுலர் பஜனை உண்டு.
ஆனால், பிரிவினையின் போதே ஹைதராபாத் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் சேரத்துடித்து அப்துல் ரசாக் தலைமையில் வன்முறையில் இறங்கியதும் சர்தார் படேல் அவர்களின் உறுதிமிக்க ராணுவ நடவடிக்கையால் அவர்கள் அடக்கப் பட்டதுமான அதி முக்கியமான சரித்திர சம்பவம் இந்த லேசர் காட்சிகளில் கிடையாது..
இந்த வாரக்கடைசியில், வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்ட அதே ஜிகாதி இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதே கோர முகம் அதே பூங்காவிலும், நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் 53க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. வழக்கம் போல வாழ்க்கையின் வாரக்கடைசி குதூகலங்களுக்காக பூங்காவிற்கும், உணவகங்களுக்கும் ஓடும், சட்டத்த்தை மதித்து வாழ்ந்த, உழைத்து உண்ணும் மனிதக் கூட்டத்தின் உயிர்கள் இந்த மதவெறி மிருகங்களின் கோழைத்தனமான தாக்குதலில் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இஸ்லாமிய தீவிரவாதம் ஹைதராபத்திற்குப் புதிதல்ல. லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாட்-அல்-இஸ்லாமி (HuJi) அமைப்புகள் உள்ளூர் முஸ்லீம்கள் மத்தியில் அன்றாடம் புழங்கும் சமாசாரம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர் பி.ராமன் இந்தக் கட்டுரையில் கூறுகிறார்.
அவர் மேலும் தரும் தகவல்கள் - ".. ஹைதராபத்தில் ஏராளமான முஸ்லீம்கள் வீடுகளில் ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் இந்த நகரத்திற்கு வந்த போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தன - எதிர்ப்பாளர்கள் பின் லேடன் படங்களை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றார்கள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீது பட்டப் பகலில் கொலைவெறித்தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு துளிர்விட்டுப் போயிருக்கிறார்கள்.
இந்தியாவில் நடக்கும் எல்லா தீவிரவாத தாக்குதல்களிலும் ஏதாவது ஒரு ஹைதராபாத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.. 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன"கொல்லைப் புறத்தில் இவ்வளவு பெரிய ஜிஹாதி தீவிரவாத ஊற்றை வைத்துக் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், வழக்கம் போல பங்களாதேஷ், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று ஆந்திர முதல்வர் வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார். அதே நேரத்தில் உளவுத்துறை குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெடிமருந்து நாக்புரில் கடை வைத்திருக்கும் ஹைதரபாத்காரர் சுஹைல் என்பவரது கடையில் இருந்து வந்திருப்பதாக அறிவிக்கிறது... நம் நகரங்களிலேயே இருக்கும் இந்த கொலைகாரர்களை பார்க்க மறுத்து இன்னும் எத்தனை காலம் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோம்?
இந்த குண்டுவெடிப்புகள் 2005 தீபாவளிக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த சம்பவத்தையே பெரிதும் ஒத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரங்களில் இந்த நகரில் விமரிசையாகக் கொண்டாடப் படும் முக்கியமான இந்துப் பண்டிகைகளான ரக்ஷா பந்தன் மற்றும் விநாயக சதுர்த்தி விழாக்களைக் குறிவைத்து, இந்தத் தருணத்தில் மக்களை அச்சுறுத்த இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறப் படுகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் எல்லா நகரங்களிலும் முக்கியமான இந்துப் பண்டிகைகளின் போது ஜிகாதி தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
தீபாவளி, பொங்கல் போல ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியர்கள் உயிரிழப்பதும் வழக்கமான நிகழ்வாகி வருகிறது. ஜனவர்-2004 முதல் ஆகஸ்டு 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் இழப்பு 3674 மனித உயிர்கள் என்று ஆகஸ்டு-27 டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. உயிரிழப்பில் போரால் சீரழிக்கப் பட்டிருக்கும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் இந்தப் பத்திரிகை கணக்கிட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பலியான அமெரிக்கர்களின், பிரிட்டிஷாரின், ஐரோப்பியர்களின் ஒட்டுமொத்த ரத்தத்தை விட அதிகமாக இந்துக்களின் ரத்தம் தான் ஜிகாதி வன்முறைக்கு எதிராக இன்றும் சிந்திக் கொண்டிருக்கிறது.
இப்போது நடப்பது கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் ஆட்சியோ, கொள்ளையன் தைமூர் படையெடுப்போ அல்ல, ஆனால் சுதந்திர பாரதத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதவெறி மிருகங்களின் அதிகபட்ச தாக்குதல்கள் இந்துக்களைக் குறிவைத்தே நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு பெரிய அபாயத்தை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சவாலை எதிர்கொள்ளத் திராணியில்லாத அரசியல் சக்திகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. இனிவரும் காலங்களில் தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினை - அதை உறுதியுடன் நேர்கொள்ளும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே தங்கள் உயிர்மீது கொஞ்சமாவது பிரியம் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.
எழுதியவர் ஜடாயு at 7:19 AM
Labels இந்தியா, இஸ்லாம், தீவிரவாதம்
5 மறுமொழிகள்:
a die hard hindu writes said...
DONT COME TO A CONCLUSION VERY FAST. THIS MIGHT BE THE ACT OF HINDU FUNDAMETALISTS. PLEASE READ THIS LINKED PAGE FOR MORE DETAILED INFORMATION BASED ON INTELLIGENCE.http://sadnyvadai.blogspot.com/2007/08/blog-post_5406.htmlLIKE WHAT HAPPENED IN AMERICA 11/8 ATTACK WHY ALL BLAME ISLAMIC GROUPS, ACTUALLY THAT 11/8 ATTACK IS CARRIED OUT BY JEWISH PEOPLE ONLY BUT THEY PUT THE BLAME ON ISLAMIC PEOPLE.HERE IN OUR COUNTRY SIMILARLY BRAHMINS WANT FUNDAMENTALISM AND TERRORISM TO RULE THE COUNTRY. BECAUSE SLOWLY SLOWLY THEY ARE LOSING THEIR POPULARITY AMONG THE HINDU MASSES. SO THEY TRY TO BRING FEAR IN THEM BY CLEVERLY PLANTING THESE BOMBS AND PUTTING THE BLAME ON INNOCENT MUSLIMS.IN COIMBATORE BLAST ALSO, ALL BRAHMIN PRESS BLAMED ISLAMIC FUNDAMENTALISTS, BUT NOW COURT HAS CLEARED THEM; WHICH MEANS HINDU FUNDAMENTALISTS ARE BEHIND IT. I AM SORRY IF I AM WRONG. I STAND FOR CORRECTION.I AM A PRACTICISING HINDU HAILING FROM THE SO CALLED BRAHMIN COMMUNITY, WRITING THIS.
10:14 AM
Subbu said...
// IN COIMBATORE BLAST ALSO, ALL BRAHMIN PRESS BLAMED ISLAMIC FUNDAMENTALISTS, BUT NOW COURT HAS CLEARED THEM; //What ????? The court acquitted only Madani, boss. Al-Umma and its leader are still behind the bars and there is not an inch of doubt that they are the culprits. Where did you come to such utter non sensical theories, moron? THere is a limit to fooling and bluffing. I can understand the frsutrations of moderate Muslims, for the whole community get blamed for such terror attacks. But the honest among them would take responsibility and work towards removing such fanatic elements from the religion.
10:53 AM
Srikanth said...
Most of the people with loud voice - communists, congress men, so called rationalists... (there may be an even bigger list) - they don't consider India as a single country (Desam). The passion for Akanda Bharatham - Bharatha Maatha is long forgotten. Even Hindu sympathizers - with BJP as their political face failed to bring that passion. Desiya vaadam is looked upon as foolishness. Patriotism is ridiculed.In this context, it is a futile attempt to expect the government to react strongly. I read somewhere that Mahatma said Politics should be coupled with spirituality - to maintain high ethics and values. This is misconstrued during Mahatma's times itself and now here we are paying the price. Now with ever growing number of separatists and morally corrupt people (not only politicians - even we people) - I fear even to say this - we might be heading for a collapse.
9:44 PM
ஜடாயு said...
Subbu, Srikanth, THanks for your comments.
2:21 PM
ராஜன் பாபு said...
// 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன" // இவ்வளவு நாள் ஹைதராபாதில் இருந்து கொண்டு மற்ற நகரங்களில் குண்டு வைத்துக் கொண்டிருந்தனர்.. போரடிக்கிறதே நம்ம ஊரிலேயே சும்மா ஏதாவது பண்ணுவோம் என்று இப்போது அங்கேயே குண்டு வைத்து விட்டார்கள் இந்த தீவிரவாத மிருகங்கள். ஆந்திரா தலைநகரம் அல் குவைதாவின் இந்திய தலைமையிடம் ஆகி வருகிறது..
..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது
ஜடாயு எண்ணங்கள் Thursday, August 30, 2007
..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது
முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..விஷயம் இதுதான்.
தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"
செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் - தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html>
இதோமுட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))நாவிதர் <http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))
ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -"...
அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள்.
"அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது. உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதைஇந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !
ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று. அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?
இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....வேறு யாரை நொந்து கொள்வது நாம்?
Comment On: ஜடாயு எண்ணங்கள்"..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது"
5 Comments -
Show Original Post
Collapse comments
ஜயராமன் said...
ஏனுங்க, எனக்கு ரெண்டு சந்தேகமுங்க.இந்த இடி அமீன் ஆம்பிளை இல்லையாங்க. அப்படீன்னா, அவரு பேரை எப்படீங்க மாத்துறது. ஆமா, அந்த இடி அமீன் மனித மாமிசம் எல்லாம் திம்பாராமே. அப்படின்னா அவரு நல்ல முஸ்லிம் ஆம்பிளையாகத்தானுங்களே இருக்கணும். குழப்புதுங்க.அப்புறம், இடி அமீனை 'இடி அமீர்' அப்படீன்னு கூப்பிட்டுக்கலாம். ஆனா, ஜப்பார் சாரை எப்படீங்க மரியாதையாக இன்னோரு 'ர்' போடறது. ஜப்பார்ர்ர்ர் ன்னு சொன்னா டயரு தேயுதுங்க. ரொம்ப கம்ப்யூசனா கீதுங்க. ஒசாமா லாடர்ர்ர்ஐ கேட்டு சொல்லுங்க
3:37 PM
Anonymous said...
//// இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? ////அவுங்க குண்டு வைப்பாங்க. ஆம்பிளைங்க. இவிங்க அதுக்கு கை தட்டுவாங்க. வெளியில வேசம் போடுவாங்க.
6:27 PM
முகமது said...
பின்லேடன் அவனது அப்பாவுக்கு ஐம்பத்தைந்தாவது குழந்தையாம். அவன் அப்பனுக்கு தின்பதும், பெண்களை புணர்வதுமே வேலையாக இருந்திருக்கும் போலிருக்கிறது. சரி,செய்தது தான் செய்து தொலைத்தான். காண்டமாவது போட்டு தொலைத்திருந்தால் இப்படி ஒரு பீ தின்னும் பன்னியை பெற்று தொலைப்பதிலிருந்து தப்பித்திருக்கலாம். இந்த மாதிரி பன்னி பண்ணையை நடத்தி வந்த பின்லாடன் குடும்பத்தை ஜப்பான் அய்யா உச்சி முகர்ந்து மெச்சி கொள்கிறார்.அட தூ
2:20 AM
Anonymous said...
அசோகன் பணக்காரரின் பையன் என்று தெரிந்ததும் பாலையா உடனே அசோகரு உங்க மகருங்களா? என்று ஆரம்பிப்பது )) என்பது பழைய கா நேரமில்லை ஜோக். சிறிது நாட்களுக்கு முன்பாக மன்மோகன் ஹனீஃ பற்றி எழுதிய ஸ்பூஃபில் இது போன்ற கிறுக்கர்களை மனதில் வைத்துதான் ஹனீஃபரு என்று மன்மோகன் சொல்வது போல இருந்தது. முதலில் இந்த ஜப்பார்ர்ர்ர், இவரது மகர் ஆசீஃப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவில் போய் "ன்" ஐத் தேடட்டும். முதலில் ஜப்பார்ர்ர்ர்ர்ர்ர் தன் மகருக்கு அறிவுரை சொல்லி விட்டு வந்து அப்புறமா செல்வனுக்கு சொல்லட்டும். அப்படியே ஆசீஃப்ர்ர்ர்ர்ர் பிராமணக்ர்ளை கிண்டல் செய்து போட்ட "பாப்பானைக் கொன்ற யானை" பதிவையும் ஜப்பார்ர்ர்ர்ர்ர் படிக்கட்டும் அப்புறம் பேசட்டும் வந்துட்டானுங்க துத்தேறிங்க பாப்பானைக் கொன்ற யானை பதிவு போடுறீயே? பதிலுக்கு நாங்களும் ஒரு அசிங்கமான முகத்தைப் போட்டு, கோர முகம் அது, கொடூர முகம் அது, தீவீரவாத முகம் அது, சிறு பெண்களை வன் புணர்ந்த முகம் அது என்று முகமதுக்களை அடுக்கினால் தாங்குவாயா நீ? இந்த ஜப்பாரும் சரி அவரது மகரும் சரி சரியான தீவீரவாத ஆதரவுக் கும்பல்களே.
2:54 AM
ராஜரிஷி சோ ரசிகன் said...
Such mindset which prevails among moderates like Mr.Jaffar is condemnable.I condemn it vehemently.Thanks for this post sri.jatayu
பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 5
எஸ் மெய்யப்பன் Thursday August 30, 2007
அத்தியாயம் ஏழு
விஞ்ஞான யோகம்
விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே சிறந்தவன். தேவதைகளை வணங்கும் பக்தர்களும் இறைவன் அளிக்கும் பலன்களைப் பெறுகின்றனர்.ஆனால் அவை அழியக் கூடியவை. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெறுகின்றன.
இதில் 30 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
----------
கண்ணன்: மேலும் கேள் 1பார்த்தா, என்னையே மையப்படுத்தி அறியும் வழியை, ஐயத்திற்கு இடமின்றி இப்போது கூறுவேன். ஆன்மீக ஞானம், அனுபவம் காட்டும் அகண்ட 2விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுமையும் அறிந்தவன், உலகினில் அனைத்தும் முற்றும் கற்றவன்.
ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவர் தான் சித்தியடைய முயல்கிறான்ƒ அவ்விதம்
சித்தியடைய முயல்பவர்களில் எவனோ ஒருவன் தான் 3என்னை உள்ள படி அறிகிறான். எனது இயற்கையானது பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு வகையாய்ப் பிரிந்துள்ளது. எனது இயற்கையில் இதுவே தாழ்ந்ததுƒ உயர்ந்த இயற்கையும் ஒன்றுண்டு அர்ஜுனா‚ அதுவே ஜீவன் என்பது. அதன் மூலம் தான் நான் இந்த உலகைத் தாங்குகிறேன். இவ்விரு வகை இயற்கையிலிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. உலகங்களின் தோற்றத்திற்குக் காரணம் நானே‚ அவற்றின் அழிவுக்கும் காரணம் நானே‚
தனஞ்ஜயனே, என்னை விட உயர்ந்தது, உலகில் வேறொன்றும் இல்லை. நூலில் கோர்த்த மணிகள் போல் உலகம் முழுவதும் என்னையே பற்றி நிற்கிறது. நீரினில் சுவையும் நானே‚ நெருப்பினின் சுடரும் நானே, சூரிய சந்திரரில் ஒளியும் நானே, 4வானிலே ஓசையும் நானே, வேதங்களில் ஓம்காரம்5 நானே, பூமியில் நறுமணம் நானே, பூதங்களின் வித்தும் நானே,
உயிர்களில் உயிரும் நானே‚ முனிவர்கள் தவமும் நானே‚ அறிஞரின் அறிவும் நானே‚ மனத்தில் ஆண்மையும் நானே‚ வீரரின் வீரம் நானே‚ பலவானின் பலமும் நானே‚ தர்ம விரோதமற்ற ஆசையும் நானே‚
சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்களுடன் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் என்னிலிருந்து தோன்றியவை தான். அவற்றிற்கு 6நான் அடங்கியவனல்ல, அவை அனைத்துமே என்னுள் அடக்கம். இந்த மூன்று குணமக்கள், அந்தக் குணங்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்பதையும், அழிவற்றவன் என்பதையும் அறிந்து கொள்வதில்லை. முக்குண மயமான இந்த தேவமாயை வெல்லற்கரியது, என்னைச் சரண் அடைந்தவர் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பாவிகள் 7என்னைச் சரணடைவதில்லை. அவர்கள் மூடர்கள், மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள் அரக்கத் தன்மை கொண்டவர்கள்.
நான்கு விதமானவர்கள் நாடி என்னை வழிபடுகின்றனர். துயரமடைந்தவர்கள், நற்கதியை நாடுகின்றவர்கள், ஈசுவர தத்துவம் அறிய விரும்புகிறவர்கள், ஈசுவர ஞானம் கைவரப் பெற்றவர்கள் என்ற இந்த நான்கு வகையினரும் உயர்ந்தவர்கள் தான். இவர்களில் எப்பொழுதும் என்னிடம் தொடர்பு கொண்டு, என்னை மட்டுமே வணங்குபவன் தான் உயர்ந்த ஞானி. மனத்தை அடக்கி என்னில் கலந்துவிட்டவனே என்னுடைய ஆத்மா8 பற்பல பிறவிகளின் பயனாய் ‘எல்லாம் கண்ணனே” என்ற ஞானம் பெற்றவனே மகாத்மா, அவன் கிடைத்தற்கரியவன், அவன் என்னை நேசிக்கிறான், நானும் அவனை நேசிக்கிறேன்.
அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் விரதங்கள் மேற்கொள்ளுகிறார்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். அந்த வழிபாட்டையும் நான் ஏற்றுக்கொள்ளத் தான் செய்கிறேன். அது மட்டுமல்ல.. அத்தேவதைகள் மூலமாகவே, அவர்கள் விரும்பிய பலனை நானே அவர்களுக்குத் தருகிறேன். ஆனால் அந்தப் பலன் அழித்துவிடக் கூடியது. தேவர்களை வழிபட்டால் தேவர்களை அடையலாம், என்னை வழிபட்டால் என்னையே அடையலாம். இணையற்ற, அழிவற்ற என் பரமாத்ம வடிவத்தை அறியாத மூடர்கள், பிறவியற்ற என்னை 9பிறந்தவன் என்று எண்ணுகின்றனர். மாய சக்தியால் மறை பொருளாக விளங்கும் நான் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் தெளிவற்ற மக்கள், ஆதியும் அந்தமும் இல்லாதவன் நான் என்பதை அறிந்து கொள்வதில்லை. நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் என்னைத் தான் யாரும் அறிந்ததில்லை.
சுகம் துக்கமாகிய இருவகை உணர்வுகளால், எல்லா ஜீவராசிகளும் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன. ஆனால் புண்ணியத்தால் பாவத்தை விரட்டுகிறவர்கள் இந்த இரட்டைகளின் பிடியிலிருந்து விடுபட்டு, உறுதியான விரதம் பூண்டு என்னையே வணங்குகிறார்கள். ஆத்மயோக கர்மயோகம் அனைத்தையும் அறிந்து கொண்டவர்கள், மூப்பு மரணம் ஆகியவற்றிலிருந்து பிடியிலிருந்து விடுபடுவதற்காக என்னையே சரணடைந்து வணங்குகிறார்கள். பூதங்கள் பற்றிய அறிவும், தெய்வங்கள் பற்றிய உணர்வும், கேள்விகள் பற்றிய தெளிவும் பெற்றவர்கள், அவர்கள் இறக்கும் காலத்திலாவது எனது உண்மைச் சொரூபத்தை அறிகிறார்கள்.
(ஏழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.பிரிதாவின் மகன்.
2.விஞ்ஞானம் என்பது ஒரு பொருளை நன்றாய் அறிவதாம். „பால்… எனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றிக் காதால் மட்டும் கேட்டவன் அஞ்ஞானிƒ பார்த்தவன் ஞானிƒ ருசி கண்டவன் விஞ்ஞானி. பகவானைக் கண்டு அவனுடன் உறவு கொண்டாடுவது தான் விஞ்ஞானம்.
3.அத்தகையவன் ஒருவனுமில்லை என்பது பொருள். - ஸ்ரீ ராமாநுஜர்
4.கண்ணால் சூரியனைப் பார்க்கிறோம். கண்ணும் அவனே, ஞாயிறும் அவனே, இந்தத் தொடர்பும் அவனே. - ஸ்ரீ ராமாநுஜர்
5.எல்லா வேதங்களிலும் பீஜமந்திரமாய் இருப்பது ஓங்காரம். - சுவாமி சித்பவானந்தர்
„ஓம்… அதாவது „அவும்… என்பது ஒலிகளுக்கெல்லாம் ஆதார வார்த்தை. முதல் எழுத்து "அ" நாக்கால் வாயின் உள் பகுதியைத் தொடாமலே ஒலிப்பது. "ம" என்ற கடைசி ஒலி உதடுகளை மூடுவதால் உண்டாக்கப்படுவது. "உ" என்பது இவ்விரண்டுக்கும் இடையில் வாய் முழுவதும் உருள்வது. எனவே "ஓம்" என்பது அனைத்து ஒலிகளுக்கும் அடிப்படை நாதம். - சுவாமி விவேகானந்தர் "அ" என்ற எழுத்து எட்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த அகரம் எண் சாண் உடலாய்ப் புறத்தே உருவம் பெறுகிறது. "உ" என்ற எழுத்து இரண்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த உகரம் இருவகை மூச்சாகி நித்ய மூச்சாகவும், அநித்ய மூச்சாகவும் செயல்படுகிறது. எண் சாண் உடம்பில் நித்திய மூச்சு, அருவமாயும் அநித்ய மூச்சு உருமாயும் செயல்படுகின்றன. "ம்" என்ற மகர மெய்யே உயிருக்கு ஆதாரமாகிறது. உண்மை ஞான அனுபவத்துக்குக் காரணமாகிறது. காண்பதற்கு அரிய அருவமாய் இருந்து ஆட்சியும் செய்கிறது. - சுவாமி சரவணானந்தா
6.அலைகள் சமுத்திரத்தில் இருப்புடையனவேயன்றி சமுத்திரம் அலையில் இருப்புடையதன்று. - ஆதி சங்கரர்.
7.பாவிகள் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப மூடர்கள்,, மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள், அரக்கத் தன்மை கொண்டவர்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுவார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்.
8.என்னை விட்டு உயிர்வாழ முடியாத அவனைப் போலவே, அவனை விட்டு நானும் உயிர் வாழ முடியாதென்று முடிவு கொண்டுள்ளேன். - ஸ்ரீ ராமாநுஜர்
9.இறைவன் நியமிக்கப் படாதவன், சிருஷ்டிக்கப்பட்டவனும் அல்ல, தானே இயங்குபவன், நிர்மலன்.
- குருநானக்
அத்தியாயம் எட்டு
அ~ரப் பிரம்ம யோகம்
அ~ரம் என்றால் அழியாதது, பிரம்மம் என்றால் பரம்பொருள். அறிவற்ற பரம்பொருள் பிரம்மம். உடலில் இருந்து ஆத்மா விடுபடும்போது, அந்தப் பரம்பொருளையே நினைத்திருந்தால், அந்த ஆத்மா பரம்பொருளையே அடையும். அதனால் எப்பொழுதும் பரம்பொருளை நினைத்தே தொழிலில் ஈடுபடுதல் சிறந்தது. இறுதியில் ஆத்மா செல்லும் வழி இரண்டு. இருள் வழி பிறப்பில் தள்ளும். ஒளி வழி பரம்பொருளில் சேர்க்கும். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்பெறுகின்றன.
இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
------------
அர்ஜுனன்: ஓ புருஷோத்தமா, பிரம்மம் என்பது எது?
கண்ணன்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அது எல்லாம் வல்லது‚ பழமைக்கும் பழமையானது‚ உலகனைத்தும் படைத்தது‚ அனைத்தையும் ஆள்வது, அணுவுக்குள் அணுவானது‚ நினைவிற்கு எட்டாதது‚ நெடிய உருவம் கொண்டது‚ ஆதவன் போல் பிரகாசிப்பது‚ அஞ்ஞான இருளை அகற்றுவது‚ அதுவே பிரம்மம்‚
அர்ஜுனன்: அப்படியென்றால் ஆத்மஞானம் என்பது என்ன?
கண்ணன்: பிரம்மத்தின் இயல்பை அறிந்து கொள்ளுவதே ஆத்ம ஞானம்.
அர்ஜுனன்: கர்மம் என்பது என்ன?
கண்ணன்: அசையும் பொருள் அசையாப் பொருள் என்று உயிர்களை உண்டாக்குவதற்காகச் செய்யப்படும் அர்ப்பண ரூபமான செயலே கர்மம் எனப்படும்.
அர்ஜுனன்;: அதிபூதம் என்று எதைச் சொல்கிறார்கள்?
கண்ணன்: அழியும் தன்மை கொண்டதற்குப் பெயர் அதிபூதம்.
அர்ஜுனன்: அதி தைவம் என்று சொல்லப்படுவது எது?
கண்ணன்: உடலில் உறையும் புருஷனே அதிதைவம்.
அர்ஜுனன்: அதியக்ஞம் என்பது எது?
கண்ணன்: அந்த உடலில் இருக்கும் நானே அதியக்ஞம்.
அர்ஜுனன்: அது எவ்விதம் இந்த உடலில் அதியக்ஞம் ஆயிற்று? மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் அந்திமக் காலத்திலாவது பரம்பொருளை அடைவதற்கு வழி என்ன?
கண்ணன்: குந்தி மகனே, பிராணனைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, மனத்தை ஒருமுகப் படுத்தி, சிந்தனையைப் பரம்பொருள் மேல் நிலைநிறுத்துவதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளுகிறவன் ஒளிப் பிழம்பான பரம்பொருளையே அடைகிறான் 1மரண காலத்திலாவது இப்பழக்கத்தை மேற் கொண்டாலும் அவன் பரம்பொருளையே அடைகிறான், அதாவது அந்திமக் காலத்தில் என்னையே நினைத்தவனாய் உயிர் துறப்பவனும் நிச்சயம் என்னையே அடைகிறான். வேறு எதையாவது நினைத்துக் கொண்டே இறப்பவன், எதை நினைத்தானோ அதையே அடைகிறான்.
ஆகையால் அர்ஜுனா, நீ போரிடும் போதெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டு போரிடு‚ மனத்தையும் அறிவையும் எனக்கே அர்ப்பணித்து விட்டுப் போரிடு, நீ என்னையே அடைவாய், இதில் சந்தேகமில்லை.
பற்றற்ற துறவிகள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு எதை அடைகிறார்களோ, வேதவிற்பன்னர்கள் எதை அழிவுற்றது என்று எண்ணுகிறார்களோ அதைப்பற்றி இப்போது சுருங்கச் சொல்லுகிறேன் கேள்‚
உயிர் மூச்சை உச்சந்தலையில் வைத்து, ஒருமுகப்பட்ட மனதை இதயக்கமலத்தில் வைத்து என்னையே நினைத்து "ஓம்"என்ற பிரணவ மந்திரத்தை நாவிலே வைத்து உடலைத் துறப்பவன் உயர்கதி அடைகிறான். இத்தகைய யோகி எளிதில் என்னைக் கண்டு கொள்கிறான். அப்படி என்னைக் கண்டு கொண்ட மகாத்மா மறுபடியும் பிறப்பதில்லை. பிரம்மலோகம் வரையுள்ள அழியக் கூடிய எல்லா உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு. ஆனால் என்னை அடைந்தவர்களுக்கு மறுபிப்பே கிடையாது.
பார்த்தா‚ பகல் இரவு இரண்டின் நிலை குறித்து இப்போது பகர்வேன்‚
ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் 2இன்னும் ஒரு ஆயிரம் யுகங்கள் ஓர் இரவு. பிரம்மாவுக்குப் பகல் வரும் போது உலகில் மறைந்திருக்கும் பொருட்களெல்லாம் காட்சிக்கு வருகின்றன. இரவு வரும் போது அவை பழைய உலகத்திலேயே மறைந்து விடுகின்றன3. மறுபடியும் பகல் வரும்போது அப்பொருட்கள் மீண்டும் பிறக்கின்றன. மறுபடியும் இரவு வரும்போது மீண்டும் மறைகின்றன. இயக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அழியாதது ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் அங்கிருந்து திரும்புவது என்ற பேச்சுகே இடமில்லை. அது தான் என்னுடைய திருவடிகள். எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளான என்னிடம் எல்லாம் பொருட்களுமே அடங்கியுள்ளன. என்னையே நினைத்து என் திருவடிகளை அடைந்தவனுக்குப் பிறகு என்றுமே பிறப்பு என்பது இல்லை.
பாரதச் செல்வா, எந்தக் காலத்தில் மரணமுற்றால் யோகிகளுக்கு மறுபிறவி இல்லையோ, எந்தக் காலத்தில் மரணமுற்றால் அவர்கள் மீண்டும் பிறப்பார்களோ, அந்தக் காலங்களைப் பற்றி இப்போது சொல்லுவேன்.
நெருப்பு, வெளிச்சம், பகல், வளர்பிறைக் காலம், உத்திராயணக் காலம்4 இவற்றில் இறக்கும் ஞானிகள் பிரம்மத்தை அடைந்து பிறப்பை அறுத்துவிடுகிறார்கள். புகை, இரவு, தேய்பிறைக் காலம், தச்சிணாயனக் காலம்5 இவற்றில் மரணமுறும் ஞானிகள், சந்திரனுடைய ஜோதியை அடைந்து மீண்டும் பிறக்கின்றனர். ஒளியும் இருளும் உலகில் என்றும் நிலையானவை. ஒளி வழியில் செல்பவன் திரும்புவதில்லை. இருள் வழியில் போனவன், போன வேகத்தில் திரும்பவும் பிறக்கிறான். இந்;த இரு வழிகளையும் அறிந்து கொண்டவன் மயங்குவதில்லை. ஆகவே அர்ஜுனா, நீ எப்பொழுதும் யோகத்திலேயே நிலைத்திரு‚
( எட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.அஜாமிளன் என்பவன் பெரும் பாவங்களைச் செய்தவன். எனினும் அவன் இறக்கு முன் „நாராயணன்… என்ற தன் மகனைக் கூவி அழைத்ததால் காக்கப்பட்டான் என்பது பாகவதக் கதை.
2.கிருத, திரேதா, துவாபர, கலி ஆகியவை சேர்ந்தது சதுர் யுகம். ஆயிரம் சதுர் யுகம் கொண்டது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஆயிரம் சதுர் யுகம் கொண்டது ஓர் இரவு. ஒரு பகலும் ஓர் இரவும் ஒரு நாள். 365 நாள் ஓர் ஆண்டு. இத்தகைய நூறு ஆண்டுகள் பிரம்மாவின் பூரண ஆயுள் என்பது மரபு.
முந்தையோர் கூரிய காலவரையறை: 15 நாள் (சுக்லப~ம்) வளர்பிறைƒ 15 நாள் (கிருஷ்ண ப~ம்) தேய்பிறை. இரண்டு ப~ம் கூடியது ஒரு மாதம். 6 மாதம், தைமுதல் ஆடி வரை உத்தராயணம். 6 மாதம், ஆடி முதல் தை வரை த~pணாயனம். தேவர்களுக்கு உத்திராயணம் பகல், த~pணாயனம் இரவு. இந்தப் பகலும் இரவும் சேர்ந்து, தேவர்களுக்கு ஒரு தினம். இம்மாதிரி 360 தினம், அதாவது 360 மனித வருஷம் ஒரு தேவ வருஷம்;. 1200 தேவ வருஷம் கலியுகம்ƒ 2400 தேவ வருஷம் த்வாபர யுகம். 3600 தேவ வருஷம் த்ரேதா யுகம். 4800 தேவ வருஷம் க்ருத யுகம். ஆக 12000 தேவ வருஷம் ஒரு சதுர் யுகம். 1000 சதுர் யுகம் பிரம்மதேவரின் பகல்ƒ 1000 சதுர்யுகம் பிரம்மதேவரின் இரவு. ஆக 2000 சதுர் யுகம் பிரம்மாவின் ஒரு நாள். இம்மாதிரி அவர் வயது 100. இதற்கும் பரம்… என்று பெயர். - உரையாசிரியர் அண்ணா.
3.இதுவே பிரளயம் எனப்படும். இது நான்கு வகைப்படும்.தோன்றிய பொருள்கள் அவ்வப்போது அழிவதும், இரவு தோறும் நமது உறக்கத்தில் உலகம் நம்மிடம் ஒடுங்குவதும் நித்யப் பிரளயம். பிரம்மாவின் ஓர் இரவான 1000 சதுர் யுகத்துக்கு ஒரு முறை அவரிடம் உலகம் ஒடுங்குவது நைமித்தியப் பிரளயம். ஒரு பிரம்மாவின் 100 வயது ஆயுள் முடிவில், அந்த பிரம்மாவும் அனைத்து உலகங்களும் ஆதி நாராயணனிடம் ஒடுங்குவது மகாப்பிரளயம். முடிவாக முக்தியடைவதே ஆந்யந்திகப்பிரளயம். - விஷ்ணு புராணம்
4.சூரியன் வடதிசை பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.
5.சூரியன் தென் திசைப் பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.
Wednesday, 29 August 2007
மலர்மன்னன் திண்ணை கட்டுரை
மலர்மன்னன் Thursday August 23, 2007
தஸ்லிமா நஸ்ரீன் தமது மார்க்கத்தை இழிவுசெய்து எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரது தலைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹிந்துஸ்தானத்தில் முகமதியப் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் தமது மார்க்க நெறிமுறைகளுக்கு விரோதமாக மிகவும் ஆபாசமாக எழுதியிருக்கிறார் எனச் சில முகமதிய மார்க்க குருமார்கள் தூண்டுதலின் பேரில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நல்ல வேளையாக சுக்தாய் எதிர்கொள்ள நேர்ந்தது வெறும் நீதிமன்ற வழக்குதான். மனம் போன போக்கில் மரன தண்டனை விதித்துக் கொலை செய்யத் தூண்டுகிற மாதிரி பத்வா விடுப்பது அன்று நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
வட மாநிலங்களில் குளிருக்கு அடக்கமாகப் போர்த்திக்கொள்ள உபயோகப்படும் ரஜாய் என்கிற போர்வையைக் குறியீடாக வைத்து 1941ல் லிஹாப் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினார், சுக்தாய். கணவன் என்று ஒருவன் தனக்கு இருக்கிறானா என்கிற நிச்சயமில்லாத ஒரு சீமாட்டி தன் பணிபெண்ணுடன் உறவு வைத்திருப்பது பற்றிய நுணுக்கமான கதை அது. மேலோட்டாமாகப் படித்தால் எதுவும் தெளிவாகப் புரியாதவாறு மிகவும் இங்கிதமாகத்தான் கதையை எழுதியிருந்தார், சுக்தாய். ஆபாசம் என்று சுட்டிக்காட்டும் படியாக ஒரு சொல்கூட அதில் இல்லை. பல தாரங்களை வைத்துக்கொண்டு, தமது தேவைகளின்போது மட்டுமே அவர்களின் நினைவு வருமாறு வேறு களியாட்டங்களிலும் திளைக்கிற ஆண்கள் மீது குற்றம் சாட்டுகிற கோபம்தான் அப்படியொரு மறைமுகமான சிறுகதையாக அவரிடமிருந்து வெளிப்பட்டது. உடனே தங்கள் மார்க்கத்திற்கு விரோதமாக ஒழுக்ககேட்டைத் தூண்டுகிற சிறுகதை என்று அதனைக் கண்டித்து, அன்றைய பம்பாய் மாகாண அரசிடம் புகார் செய்து அதற்குத் தடை விதிக்கச் செய்தார்கள். போயும் போயும் ஒரு பெண்ணாகப் பிறந்த போதிலும் தங்கள் சமூகத்தையே தலை குனியச் செய்யும் படி பகிரங்கமாக எழுதுகிற அளவுக்குத் துணிந்துவிட்ட சுக்தாயை இதோடு விடலாகாது என்று ஆபாச எழுத்தாளர் எனக் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குத் தொடரச் சிலர் முற்பட்டனர்.
( இஸ்மத் சுக்தாய் )
ஆபாச எழுத்திற்காகத் தன் மீது நடந்த சாரமில்லாத வழக்கை விவரித்துப் பின்னர் மிகவும் நகைச்சுவை ததும்ப எழுதினார் சுக்தாய். ஒரு பெண் என்கிற காரணத்திற்காகத் தான் எதிர்கொள்ள நேரிடும் சில பிரத்தியேகத் தடங்கல்களையும் அதில் ஒரு குற்றச்சாட்டைப் போல் அல்லாது பிரதியட்ச நிலவரத்தை விவரிப்பதுபோலப் பதிவு செய்திருக்கிறார், அவர்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் மும்பை மாநகரிலும் தில்லியிலும் கலை இலக்கியத் தளங்களில் மிகத் தீவிரமாக இயங்கிவந்தவர்களில் சாதத் ஹாசன் மாண்டோவும் இஸ்மத் சுக்தாயும் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் ஹிந்தி திரைப்படத் துறையிலும் ஆளுமை மிக்கவர்களாகவே இருந்தனர்.
இந்திய முஸ்லிம் லீக் சமயத்தின் அடிப்படையில் முகமதியர்களுக்கெனத் தனி தேசம் வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அதைவிட அபத்தம் ஏதுமில்லை என்று சொன்னவர்கள் மாண்டோவும், சுக்தாயும். இருவரும் சம காலத்தவர் மட்டுமின்றி, நெருங்கிய நண்பர்களாகவும் ஒத்த சிந்தனைப் போக்குள்ளவர்களாவும் இருந்தனர்.
நாற்பதுகளின் மையத்தில் பிரிவினை கோஷம் மிகவும் வலுத்துவிட்டிருந்த போதிலும் இருவருமே தைரியமாக எதிர்க் குரல் எழுப்பினார்கள். மாண்டோ தமக்கே உரிய எள்ளல் தொனியில் பிரிவினையக் கிண்டல் செய்தார் என்றால், சுக்தாய் மிகவும் வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துப் பிரிவினைக் கோரிக்கையைக் கண்டித்தார்.
சமயத்தால் நான் முகமதியராக இருக்கலாம. ஆனால் பாரம்பரியமாக எனக்குச் சொந்தமாக இருந்துவரும் ஹிந்து பண்பாட்டுக் கூறுகள், அடையாளங்கள், தொன்மங்கள் ஆகியவை மீது எனக்கு உள்ள உரிமையை என்னால் விட்டுக் கொடுக்கமுடியாது. அவற்றை நான் இழக்கத் தயாரில்லை என்று எழுதினார், சுக்தாய். ராதாக்ருஷ்ண பிரேமையைச் சிலாகித்து எழுதி, பெண்களைத் தனது தோழிகளாய் மதித்து அன்பு செலுத்திய கண்ணபிரான் மீது தனக்கு இருந்த அபிமானத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் சுக்தாய் தயங்கவில்லை.
மாண்டோவாவது பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு மீண்டும் தமது வெளிப்படையான எழுத்துகளுக்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகளில் அவதிப்பட்டு, மனமுடைந்து போதையில் மூழ்கி அற்ப ஆயுளில் இறந்தே போனார். ஆனால் சுக்தாய் ஹிந்துஸ்தானம் தான் எனது தாய்மண் என்று பிடிவாதமாக இறுதி வரை மும்பையிலேயே வாழ்ந்தார். 1991 ல் தனது 76 ஆவது வயதில் அவர் மரித்தபோது, தனது உடலை அடக்கம் செய்வதற்குப் பதிலாகத் தகனம்தான் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே உயில் எழுதிவைத்துவிட்டுத்தான் உயிர் துறந்தார். அப்போதும் மார்க்கத் தலைவர்கள் பெரும் சச்சரவுகளைக் கிளப்பத் தவறவில்லை. எனினும் சுக்தாய் விரும்பிய வண்ணமே அவரது உடல் சமயச் சடங்குகள் ஏதுமின்றி எரியூட்டப்பட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ஒரு சுவாரசியமான கதைபோலவே எழுதிவிட்டார், இஸ்மத் சுக்தாய். சுருக்கமாகச் சொல்வதானால் அது இப்படிப் போகிறது....
வாசலில் உள்ள அழைப்பு மணி உரக்க ஒலித்தபோது பிற்பகல் மணி நான்கு அல்லது நான்கரை இருக்கும். பணியாள்தான் வாயிற் கதவைத் திறந்து பார்த்து, விக்கித்துப் போனவனாகப் பின் வாங்கினான்.
யார் வந்திருப்பது?
போலீஸ்!
அக்கம் பக்கத்தில் ஏதாவது திருட்டு என்றால் முதலில் விசாரணைக்குள்ளாவது பணியாள்கள்தாம்.
போலீசா? ஷஹீத் (சுக்தாயின் கணவர்)அவசராமாக எழுந்தார்.
ஆமாம் ஐயா என்றான் பணியாள், உடல் நடுங்க. ஆனால் ஐயாவே நான் எதுவும் செய்யவில்லை. சத்தியமாக எனப் புலம்பினான்.
வாசலுக்குச் சென்ற ஷஹீத் என்ன விஷயம் என்று வந்தவர்களிடம் விசாரித்தார்.
சம்மன்.
சம்மனா? ஆனால்... சரி கொடுங்கள்.
ஸாரி. அதை உங்களிடம் கொடுக்க முடியாது.
அப்படியென்றாõல் யாருக்கு சம்மன்?
இஸ்மத் சுக்தாய்க்கு. அவரை வரச் சொல்லுங்கள்.
அதைக் கேட்ட பிறகு பணியாள் நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
என்ன விஷயம் என்றாவது என்னிடம் சொல்லுங்கள்.
தயவு செய்து அந்த அம்மாவை வரச் சொல்லுங்கள். லஹோரிலிருந்து அவருக்குச் சம்மன் வந்திருக்கிறது.
பிறந்து இரண்டு மாதங்களேயான என் பெண் குழந்தை ஸீமாவுக்குக் கொடுப்பதற்காகக் கரைத்து வைத்திருந்த பாலை ஆற்றுவதில் முனைந்திருந்தேன். புட்டியைக் குழாய்த் தண்ணீரில் கழுவியவாறு, என்ன, லஹோரிலிருந்து சம்மனா என்று கேட்டேன்.
ஆமாம், லஹோரிலிருந்துதான் என்று குரலில் எரிச்சல் தொனிக்கப் பதிலிறுத்தார், ஷஹீத்.
புட்டியும் கையுமாக, வெறும் பாதங்களுடன் வாசலுக்குச்சென்றேன். அட, எதற்காக எனக்கு சம்மன்?
நீங்களே படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார், சம்மனைக் கொண்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
சம்மனை வாங்கிப் பிரித்து அதன் தலைப்பில் இருந்த வாசகத்தைப் படித்ததுமே அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டேன். இஸ்மத் சுக்தாய்க்கும் பிரிட்டிஷ் ராஜ மகுடத்துக்குமான வழக்கு! அட, என்மீது வழக்குத் தொடரும் அளவுக்கு பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக அப்படி
என்னதான் செய்துவிட்டேன்?
விளையாடாதீர்கள். படித்துப் பார்த்து ஒப்பமிட்டுக் கொடுங்கள் என்று கண்டிப்பான குரலில் கூறினார் இன்ஸ்பெக்டர்.
சம்மனை நான் மேலும் படிக்கலானேன். ரஜாய் என்கிற சிறுகதையை எழுதியதற்காக என் மீது ஆபாச எழுத்தாளர் என்று லஹோர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதோ பாருங்கள், இந்த சம்மனை நான் வாங்கப் போவதில்லை, என்றேன். அந்தக் காகிதத்தை இன்ஸ்பெக்டரிடம் திருப்பிக் கொடுத்தவாறு, பால் புட்டியைக் குலுக்கத் தொடங்கினேன். தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
இல்லை, நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும்.
ஏன்? எனது வழக்கப்படி நான் தர்க்கிக்கலானேன்.
மாடிப்படி வழியாக அவசரமாய் வந்த மோசின் அப்துல்லா, அட, என்ன நடக்கிறது இங்கே என்றார். இவ்வளவு நேரமாக அவர் எங்கேதான் இருந்தாரோ, கடவுளுக்கே வெளிச்சம்.
இந்த சம்மனை வாங்கிக் கொள்ளுமாறு என்னைக் கட்டாயப் படுத்துகிறார்கள். எதற்காக நான் இதை வாங்க வேண்டும்?
மோசின் சட்டக் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறியவர். சம்மனை வாங்கிப் படித்துப் பார்த்தபின், ஊம், எந்தக் கதை அது? என்றார்.
கடவுளே, எல்லாம் அந்தப் பாழாய்ப் போன கதைதான்! பெரிய தொந்தரவாகப் போய்விட்டது.
சம்மனை நீ வாங்கித்தான் ஆக வேண்டும்.
எதற்காக?
ஷஹீத் சீறினார்: எப்பவும் போல அதே தகராறு, அதே பிடிவாதம்!
நான் வாங்கப் போவதில்லை. முடியவே முடியாது!
வாங்காவிட்டால் உன்னைக் கைது செய்வார்கள் என்றார் மோசின்.
வேண்டுமானால் கைது செய்துகொள்ளட்டும். நான் என்னவோ சம்மனை வாங்குவதாக இல்லை.
உன்னைச் சிறையில் தள்ளுவார்கள்!
அப்படியா? அதைவிட விரும்பிக் கேட்பதற்கு எதுவுமில்லை. ஒரு சிறைச் சாலைக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று எத்தனை காலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். சிறைச் சாலையைச் சுற்றிக் காண்பிக்குமாறு யூசுப்பிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன்? அவனானால் எப்போதும் வெறுமே சிரித்துவிட்டுப் போகிறான். இன்ஸ்பெக்டர் ஸாப், தயவு செய்து என்னைச் சிறைக்கு அழைத்துப் போங்கள். கை விலங்கு கொண்டு வந்திருக்கிறீர்களா?
இன்ஸ்பெக்டருக்குக் கோபம் தலைக் கேறியது. அதை அடக்கிகொண்டு, சம்மனைத் திரும்பவும் நீட்டி, விளையாடாதீர்கள். பேசாமல் கையொப்பமிடுங்கள் என்றார்.
ஷஹீத்,மோசின் இருவருமே பொறுமை யிழந்துவிட்டார்கள். நானானால் எதையுமே பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருதேன். ஷஹீதும் மோசினும் என்னை மிகவும் தளர்வடையச் செய்து விட்டார்கள். சரி, கையொப்பமிட்டு சம்மனை வாங்கிக் கொள்ளலாம் என்று கையில் இருந்த பால் புட்டியை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினேன். நான் ஏதோ துப்பாக்கியை நீட்டிவிட்டது போல அவர் பின்வாங்கினார். மோசின் சட்டென என் கையிலிருந்து புட்டியைப் பிடுங்கிக் கொண்டார். நான் கையெழுத்துப் போட்டு சம்மனை வாங்கிக் கொண்டேன்.
இனி காவல் நிலையத்துக்கு வர வேண்டும், ஐநூறு ரூபய் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ள என்றார் இன்ஸ்பெக்டர்.
என்னிடம் இப்போது ஐநூறு ரூபாய் இருக்காது என்று நினைக்கிறேன்.
நீங்கள் அல்ல, உங்களுக்காக யாராவது ஜாமீன் தொகை செலுத்த வேண்டும்.
வேறு எவரையும் இதில் சம்பந்தப் படுத்த எனக்கு விருப்பமில்லை. நீதி மன்றத்தில் நான் ஆஜராகாவிட்டால் எனக்காகச் செலுத்தப்பட்ட ஜாமீன் தொகை பறிபோய்விடுமே! இம்மாதிரி விவகாரங்களில் எனக்கு இருக்கிற அறிவைப் புலப்படுத்த முற்பட்டேன். எனக்காக ஒருவர் ஜாமீன் கொடுப்பதைவிட நீங்கள் என்னைக் கைது செய்துவிடலாம்.
இன்ஸ்பெக்டர் இப்போது சினம் கோள்ளவில்லை. சோபாவில் இரு கரங்களாலும் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருக்கும் ஷஹீதைப் பார்த்துப் புன்னகைத்தார். என்னைப் பார்த்து,
தயவு செய்து என்னோடு வாருங்கள். சில நிமிடங்களுக்கு மேல் ஆகாது என்றார்.
அப்படியானால் ஜாமீன்? என்று கேட்டேன், ஒருவாறு இணக்கத்துடன்.
நான் ஜாமீன் தருகிறேன் என்று முன் வந்தார், மோசின்.
ஆனால் என் மகள் பசியாக இருக்கிறாள். ஆயா புதிசு. சின்ன வயதுப் பெண் வேறு.
குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டே வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.
அப்படியானால் உள்ளே வாருங்கள் என்று மோசின் போலீசாரை அழைத்தார்.
இன்ஸ்பெக்டர் ஷஹீதின் ரசிகனாகிவிட்டார். மிகவும் உற்சாக மாக அவர் பேசத் தொடங்கவும் ஷஹீத் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
ஷஹீத், மோசின், நான் மூவரும் மாஹிம் காவல் நிலையம் சென்றோம்.
கொடுக்கப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிட்ட பிறகு, எங்கே இருக்கிறார்கள் நீங்கள் பிடித்துவரும் குற்றவாளிகள் என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.
அவர்களைப் பார்க்க வேண்டுமா?
நிச்ச்சயமாக.
கம்பிக் கதவுக்குப் பின்னால் ஒரு குறுகலான அறையில் சுமார் பனிரண்டு பேர் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்துக் கிடந்தார்கள்.
இவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். குற்றவாளிகளாகத் தண்டனை வழங்கப் பெற்றவர்கள் அல்ல. நாளைக்கு இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார்கள்.
என்னை உள்ளே வைப்பதாக இருந்தால் எங்கே வைத்திருப்பீர்கள்?
பெண்களை வைப்பதற்கு இங்கே ஏற்பாடு இல்லை. அதனால் கிராண்ட் ரோடு அல்லது மிதங்காவுக்கு அழைத்துப் போயிருப்போம்.
வீடு திரும்பிய பிறகு ஷஹீதும் மோசினும் என்னோடு கடுமையாகச் சண்டை போட்டார்கள். ஷஹீதின் சண்டை இரவு முழுவதுமே நீடித்தது. நாங்கள் ஏறத் தாழ மண விலக்குப் பெற்றுவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு அது வலுத்து விட்டது. மோசினை அடக்குவது எளிதாக இருந்தது. இப்படி விடாமல் சச்சரவிட்டுக் கொண்டிருந்தால் தலைமறைவாகி விடுவேன் அப்புறம் உங்கள் ஐநூறு ரூபாய் பறிபோய்விடும் என்று எச்சரித்தே அவரது வாயைப் பொத்த முடிந்தது. ஆனால் ஷஹீதை அப்படிச் சரிக்கட்ட இயலவில்லை.
இந்தச் செய்தி இதழ்களில் வெளியானதும் என் மாமனாரிடமிருந்து சோõக ரசம் ததும்பும் கடிதம் ஒன்று வந்தது: என் மருமகளுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லு; அவள் அல்லாவைப் பற்றியாவது, அவரது தூதரைப் பற்றியாவது ஏதேனும் எழுதட்டும். அதன் பயனாக அவளது பிற்கால வாழக்கையிலாவது அவள் ஆசீர்வதிக்கப்படட்டும். வம்பு வழக்கு, அதிலும் ஆபாச வழக்கு, எங்கள் அனைவருக்கும் கவலையாக இருக்கிறது. கடவுள்தான் நம் மீது கருணை காட்ட வேண்டும்.
மான்டோவிடமிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. தன் மீதும் ஆபாச எழுத்து வழக்கு அதே நீதி மன்றத்தில் அதே தினம் இருப்பதாக. அவரும் சபியாவும் உடனே வீட்டுக்கும் வந்துவிட்டார்கள். மான்டோ ஏதோ தனக்கு விக்டோரியா க்ராஸ் விருதே அளிக்கப்பட்டுவிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாகக் காணப் பட்டார். எனக்கோ என்ன இப்படியாகி விட்டதே என்கிற விசனத்தில் இதயம் கனத்துப் போனது. மான்டோவிடம் பேசியதில் ஷஹீதுக்கும் சிறிது தென்பு வந்தது; மான்டோவின் உற்சாகமூட்டும் பேச்சு எனது அச்சத்தையும் களைந்தது.
அதன் பின் எனக்கு வசைமாரி பொழியும் கடிதங்கள் வரலாயின. என்னை மட்டுமின்றி, என் குடும்பம் முழுவதையும், ஷஹீதையும், ஏன், இரண்டே மாதங்களான எனது மகளைக்கூட இதுவரை கேட்டேயிராத கெட்ட வார்த்தைகளால் சபிக்கும் அக் கடிதங்களைப் படிக்க நேர்ந்தால் பிணம் கூடச் சிலிர்த்து எழுந்துவிடும்.
எனக்கு வரும் கடிதங்களைக் கண்டதுமே அவற்றுள் பாம்பும் தேளும் இருப்பதாகப் பயந்து நடுங்கலானேன். ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் பாம்பையும் தேளையும் பார்த்தபின் அவசரமாக அதனைத் தீயிலிட்டுப் பொசுக்கிப் போடுவேன். அக் கடிதங்களில் ஏதேனும் ஒன்று ஷஹீதின் பார்வையில் சிக்கியிருந்தாலும் எங்களுக்குள் மீண்டும் மண விலக்குப் பேச்சு தொடங்கியிருக்கும்.
என் மீது தொடரப்பட்டுள்ள ஆபாச எழுத்து வழக்கைப் பற்றிப் பத்திரிகைகளிலும் தனிப்பட்ட அரட்டைப் பேச்சுகளிலும் விரிவாக விவாதம் நடைபெறலாயிற்று. என்னளவு மரத்துப் போன ஒருவரால்தான் சகித்துக் கொள்ளமுடியும் என்று தோன்றுகிற அளவுக்கு அவை கடுமையாக இருந்தன. எதற்கும் நான் பதிலிறுக்க முற்படவில்லை. எனது பிழையை ஒப்புக்கொள்ளவும் மறுக்கவில்லை. ஆம், நான் பிழை செய்துவிட்டேன்; எனது குற்றத்தை நான் ஒப்புக்கொண்டேன். மான்டோ ஒருவருக்குத்தான் எனது இந்தக் கோழைத்தனம் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அச்சமயம் எனது போக்கிற்கு நானே விரோதமாக இயங்கினேன். மான்டோ மட்டும் என் எழுத்தில் பிழையில்லை என்பதில் உறுதியாக இருந்தார். என் நண்பர்களும் சரி, ஷஹீதின் நண்பர்களுங்கூட இதனை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. க்வாஜா அஹமது அப்பாஸ் அந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எதிலோ வெளியிட்டதாகவும் நினைக்கிறேன். முற்போக்கு எழுத்தாளர்கள் அந்தக் கதையை எழுதியதற்காக என்னைத் தூற்றவும் இல்லை, பாராட்டவுமில்லை. அவர்களின் நிலைப்பாடு எனக்குத் தென்பூட்டுவதாக இருந்தது.
என் சகோதரருடன் வசித்து வந்த சமயத்தில்தான் அந்தக் கதையை நான் எழுதினேன். ஓர் இரவு அதை எழுதி மறுநாள் என் அண்ணியிடம் படித்துக் காட்டினேன். அதைக் கேட்டு, இது ஒரு அசிங்கமான கதை என்றெல்லாம் அவள் சொல்லவில்லை. ஆனால் கதையில் விவரிக்கப் படும் நபர் யார் என்பதை அடையாளங் கண்டுகொண்டாள். அதன் பிறகு பதினான்கு வயதேயான என் ஒன்றுவிட்ட சகோதரியிடம் படித்துக் காட்டினேன். கேட்டுவிட்டு நீ என்ன எழுதியிருக்கிறாய்? எதுவுமே எனக்குப் புரியவில்லை என்று சொன்னாள். அதன் பிறகு ஆதாப் ஏ லதீப் என்கிற பத்திரிகைக்கு அதை அனுப்பினேன். இதழின் ஆசிரியர் எவ்வித விமர்சனமும் இன்றி உடனே அதைப் பிரசுரித்துவிட்டார். அதே சமயம் எனது சிறுகதைகைளின் தொகுப்பை வெளியிட முனைந்திருந்த அஹ்மது தலாவி இந்தச் சிறுகதையையும் தொகுப்பில் சேர்த்துவிட்டார். லிஹாப் (ரஜாய்) என்கிற இந்தச் சிறுகதை முதலில் 1942 ல் பிரசுரமாகியது. அந்தச் சமயத்தில்தான் ஷஹீதுக்கும் எனக்குமிடையிலான நட்பு வளர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு நான் வந்திருந்தேன். ஷஹீத் கதையைப் படித்துவிட்டுத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அது பற்றி எங்களிடையே விவாதமும் நடந்தது. ஆனால் அந்தக் கதை மீதான தாக்குதல் இன்னும் பம்பாயை எட்டியிருக்கவில்லை. அந்தச் சமயத்தில் எனக்கு வந்து கொண்டிருந்த இலக்கிய இதழ்கள் சகியும் அதாப் ஏ லதீபும்தாம். ஆகவே ஷஹீதுக்கு அந்தக் கதையின் விளைவு குறித்துக் கவலை ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
வழக்கின் நிமித்தமாக 1944 டிசம்பர் மாதம் லஹோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. எனக்குச் சிறை தண்டனையெல்லாம் விதிக்கப்பட மாட்டாது, ஏதேனும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான் என்று அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்.
சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட அஹ்மத் தலாவியும் எழுத்துரு வரிவடிவம் செய்தவரும் இதே வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள். கதையை முதலில் வெளியிட்ட இதழின் மீது வழக்கு இல்லை. ஆக பதிப்பாளரும், எழுத்துரு
வாக்கியவரும் எங்களுடன் இணைந்துகொண்டனர் (உர்து மொழியைப் பொருத்தவரை தனித் தனி அச்செழுத்து இல்லாத காரணத்தால் முழு வாக்கியங்களை எழுதிப் பக்கங்களை அச்சடிக்க வேண்டியிருந்தது; இதற்கென்றே திறமை வாய்ந்த எழுத்துருவாக்கம் செய்வோர் நியமிக்கப் பட்டிரு ந்தனர்).
இதற்கிடையில் மான்டோவும் வந்து சேர்ந்தார். நாங்கள் ஒவ்வொரு நாளும் நண்பர்களின் விருந்துபசாரத்தைப் பெறலானோம். பெரும்பாலும் மான்டோவின் நண்பர்கள்தாம். என்னை ஒரு வினோதப் பிராணியாகப் பாவித்து என்னையும் விருந்துக்கு அழைத்தார்கள்.
குறிப்பிட்ட தினத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. நீதிபதி என் பெயரைக் கேட்டு சம்பந்தப்பட்ட கதையை எழுதியது நான்தானா என்று விசாரித்தார். நான் ஒப்புக்கொண்டேன். அதோடு விசாரணை முடிந்தது. எனக்கு ஒரே ஏமாற்றமாகி விட்டது. எனது வழக்குரைஞர் மட்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் எங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததால் அதெல்லாம் எங்கள் காதில் விழவில்லை. விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
(அதன் பிறகு சுக்தாய், அவருடைய கணவர் ஷஹீத், மான்டோ ஆகியோர் சில தினங்கள் லஹோரிலேயே தங்கி சுற்றுலாவுக்கு வந்தவர்களைப் போல அந்த நகரின் பிரத்தியேக அமசங்களைக் கண்டு அனுபவிக்கலாயினர். லஹோரையும் அங்கு தம் அனுபவங்களையும் சுவையாக விவரிக்க்கிறார், சுக்தாய்).
ஒரு தெருக் கோடியில் வறுத்த மீனைத் தின்றுவிட்டு உணவு விடுதிக்குள்ளும் நுழைந்தோம். அங்கு ஹாட் டாகும், ஹாம்பர்கர்களும் பார்வையில் பட்டு, நாவில் நீர் ஊறச் செய்தன.
ஹாம்பர்ர்கரில் பன்றி இறைச்சி இருக்கும். அதனால் ஹாட் டாக் சாப்பிடுவோம் என்று ஷஹீத் யோசனை தெரிவித்தார். நாங்களும் அதற்கு உடன்பட்டு விசுவாசமிக்க முகமதியர்களாய் ஹாட் டாக் மட்டும் வயிறு கொள்ளும்வரை உண்டு காந்தஹார் மாதுளை ரசமும் பருகினோம். அதன் பிறகுதான் வெள்ளை இனத்தின் சாதுரியம் எந்த மட்டும் இருக்கும் என்பது தெரிய வந்தது. ஹாம்பர்கரில் பன்றி இறைச்சி கிடையாது; ஆனால் நாங்கள் சாப்பிட்ட ஹாட் டாக் தான் உண்மையில் பன்றி இறைச்சி சாசேஜசால் செய்யப் பட்டது!
இது தெரிய வந்து இரண்டு நாட்களாகிவிட்டன என்ற போதிலும் ஷஹீதுக்குக் குமட்டல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக தெரியாத்தனமாகப் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அது பாவமாகாது என்று ஒரு மவுல்வி சாகிப் பத்வா கொடுக்கவும் ஷஹீதின் குமட்டல் நின்றது.
ஆனால் மாலை வேளைகளில் ஷஹீதும் மான்டோவும் மது அருந்தத் தொடங்கி, விவாதிக்கத் தொடங்குகையில், ஹாம்பர்கர் சரியில்லை என்றும் ஹாட் டாக்தான் மேலானது என்றும் அவர்களிடையே ஆக்ரோஷமான சர்ச்சை கிளம்பும். ஒருமுறை விவாதம் மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்து பிறகு இறுதியில் எது ஹலால் எது ஹராம் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில் எதற்கு வம்பு என்று இரண்டையுமே தவிர்த்து வெறும் சிக்கன் டிக்கா மட்டும் உண்பது என்று இறுதி முடிவாகியது.
எங்கள் மீது இப்படியொரு வழக்கைத் தொடர்ந்து லஹோரில் ஒரு விழாக் காலக் கொண்டாட்டத்தை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்புத் தந்தமைக்காக பிரிட்டிஷ் அரசரை மனமாரப் பாராட்டியவாறு பொழுதைக் கழித்தோம்.
இரண்டாவது விசாரணை 1946 நவம்பர் மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஷஹீத் தனது திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாகியிருந்தார். நான் மீண்டும் லஹோர் சென்றடைந்தேன்.
பதிப்பாளர் அஹமது தலாவியும், கதையின் எழுத்து வரிவடிவம் செய்த காலிகிராபரும் தனியாக வந்து சேர்ந்துகொண்டனர். பாவம், அந்தக் காலிகிராபரைப் பார்க்கிறபோது எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஒவ்வொருமுறை அவரைக் காணும்போது குற்ற உணர்வும் மிகும்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நாம் தோற்றுவிடுவோமா என்று அவரிடம் கேட்டேன்.
என்னால் சொல்ல முடியாது. கதையை நான் படித்துப் பார்க்கவில்லை என்றார்.
ஆனால் நீங்கள்தானே எழுத்துரு செய்தீர்கள்.
எழுதுகிறபோதெல்லாம் நான் தனித் தனி சொற்களைப் பார்த்துத்தான் எழுத்துரு செய்வேன். அவற்றின் அர்த்தத்தில் கவனம் செலுத்த மாட்டேன்.
ஆச்சரியமாக இருக்கிறது. அச்சுக்குப் போகிறபோதாவது வாசிப்பீர்கள் அல்லவா?
ஆமாம், ஆனால் பிழைகளைக் கண்டுபிடிக்க மட்டும்தான்.
அப்படியானால் அதுவும் ஒவ்வொரு சொல்லாகத் தனித் தனியாகத்தானா?
ஆம் என்று சொன்னவர் தலையைக் குனிந்து கொண்டார். பிறகு, நான் ஒன்று சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே என்றார்.
மாட்டேன். சொல்லுங்கள் என்றேன்.
நீங்கள் ஏராளமாக எழுத்துப் பிழை செய்கிறீர்கள். நான் சொற்களைப் படிப்பதால் அர்த்தத்தைக் கவனிப்பதில்லை என்பதுபோல நீங்கள் அர்த்தத்தில் கவனம் செலுத்துவதால் எழுத்துப் பிழைகளை கவனிப்பதில்லை போலிருக்கிறது என்றார்.
ஆண்டவர் இந்த காலிகிராபர்களை ஆசீர்வதிப்பாராக!
(வேறொரு எழுத்தாளரான) அஸ்லம் வீட்டில் தங்கினோம். என்னைப் பார்த்ததும் முகமன் கூறிக் கொள்வதற்கு முன்பாகவே அவர் என்னைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டார். என் எழுத்து மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். நான் வெகுண்டெழுந்தேன்.
நீங்கள் உங்களுடைய இரவின் பாவங்கள் என்கிற கதையில் உடல் உறவை மிகவும் நுணுக்கமாக விவரித்திருக்கிறீர்களே, அது மட்டும் ஆபாசமில்லையா?
என் விஷயம் வேறு. நான் ஆண்.
ஒகோ, அதுதான் என் தவறா?
நீ என்ன சொல்கிறாய்?
கடவுள் உங்களை ஆணாகப் படைத்திருக்கிறார். அதனால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை. அதேபோல என்னை அவர் பெண்ணாகப் படைத்திருக்கிறார். உங்களுக்கும் இதனால் ஆவதொன்றுமில்லை என்கிறேன். நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்களோ அதனை எழுதுவதற்கு என்னிடம் அனுமதி கோரவில்லை. அதேபோல என்ன எழுதத் தோன்றுகிறதோ அதைச் சுதந்திரமாக எழுத உங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆனால் நீ நன்கு படித்த ஒரு கவுரவமான முகமதிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
நீங்களுந்தான் நன்கு படித்த ஒரு கவுரவமான முகமதிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
நீ என்ன ஆண்களுடன் சரி சமான உரிமை வேண்டும் என்றுகேட்கிறாயா?
இல்லவே இல்லை! நான் படிக்கிற காலத்தில் வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் பையன்களைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குவதுதான் வழக்கம்.
எனக்கு இயல்பான தர்க்க சுபாவம் என்னுள் கிளர்வதை நான் உணர்ந்தேன். ஆனால் அஸ்லம் சாகிப்பின் சிவப்பேறிய முகத் தோற்றத்தைப் பார்த்த போது எங்கே அவர் என் கன்னத்தில் அறைந்து விடுவாரோ என்றும் இல்லாவிட்டால் அவரது மூளைக்குள் ஊடுருவிச் செல்லும் ரத்த நாளங்களுள் ஏதேனும் ஒன்று அறுந்துவிடுமோ எனவும் அச்சமாக இருந்தது.குரலைச் சிறிது மென்மையாக்கிக்கொண்டு, அஸ்லம் ஸாப், அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் சொல்லப்படக் கூடாத பாவம் என்று எவரும் என்னிடம் சொல்லவில்லை. இந்த நோயை அல்லது மனப் போக்கை எழுதக் கூடாது என்று எங்கும் நான் படிக்கவும் இல்லை. என்னிடம் ஒரு மலிவான காமராதான் இருக்கிறது. எதையாவது பார்த்தால் அது அப்படியே பதிவு செய்துவிடுகிறது. எனது பேனாவுக்கும் வேறு வழியில்லை. என் மனம் எனது பேனாவை எழுதத் தூண்டுகிற போது, என்னால் அவற்றுக்கிடையே தலையிட முடிவதில்லை என்று சமாதானம் சொன்னேன்.
அப்படியானால் நீ சமயக் கல்வி எதுவும் பெறவில்லையா?
அஸ்லம் ஸாப், சிறு வயதிலேயே பஹிஷ்தி ஸேவர் படித்திருக்கிறேன். அதில் வெளிப்படையாக எழுதப்பட்டுள்ள பல விஷயங்கள் அசிங்கமாகத் தோன்றும். பிறகு பி ஏ வகுப்பில் படிக்கையில் மீண்டும் வாசித்தபோது அதில் அசிங்கம் ஏதும் இல்லை, புத்தியுள்ள எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை என்று புரிந்தது. மருத்துவப் பாடங்களும் உளவியல் பாடங்களுங்கூட மக்களுக்கு அசிங்கமாகத் தோன்றலாம்தான்.
நிலைமை ஒருவாறு சுமுகமானபோது, நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டு விடு என்று அறிவுரை சொன்னார், அஸ்லம்.
எதற்காக? இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று வழக்குரைஞர் சொல்கிறாரே?
இல்லை, அந்த ஆள் சொல்வதெல்லாம் பொய். நீயும் மான்டோவும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுவிட்டால் வழக்கு ஐந்தே நிமிடத்தில் முடிந்துவிடும்.
அப்படியென்றால் இங்கே இருக்கிற கவுரவம் மிக்க பெரிய மனிதர்களுடைய தூண்டுதலின் பேரில்தான் எங்களுக்கு எதிராக அரசாங்கம் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறதா?
அர்த்தமில்லாத பேச்சு என்றார் அஸ்லம். ஆனால் என்னை நேராகப் பார்ப்பதை மட்டும் தவிர்த்தார்.
அர்த்தமில்லாத பேச்சா? அப்படியானால் அரசாங்கமோ பிரிட்டிஷ் ராஜாவோ இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு எங்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?
பதிப்பாளர் தலாவி மிகவும் தணிந்த குரலில் பேசலானார்: அஸ்லம் ஸாப், இங்கே இருக்கிற சில எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பெரிய மனிதர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்தக் கதைகள் ஒழுக்கக்கேடானாவை என்று சொல்லி இவை இடம் பெற்றிருக்கிற புத்தகங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
நீங்கள் என்ன ஒழுக்கக் கேடான புத்தகங்கள் தடை செய்யப்படுவதற்குப் பதில் போற்றப்பட வேண்டும் என்கிறீர்களா என்று உறுமினார், அஸ்லம்.
அவை ஒழுக்கக் கேடானவை என்றால் நிச்சயமாக நாங்கள் தண்டிக்கப்பட வேண்டும்தான் என்றேன்.
மறுபடியும் நீ முரட்டுத்தனமாகத் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டாய்!
(சாதத் ஹாசன் மாண்டோ)
இல்லை, அஸ்லம் ஸாப். நாங்கள் பவித்திரமான மக்களை ஒழுக்ககேடான வழியில் திசை திருப்பும் குற்றத்தை இழைத்திருக்கும் பட்சத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்டு எளிதாகத் தப்பித்துக்கொள்வது சரியல்ல. உண்மையிலேயே நான் ஒரு குற்றம் இழைத்து, அது குற்றம் என்று நிரூபணமும் ஆகிறது என்றால் அதற்கான தண்டனை எனக்கு விதிக்கப்பட்டால்தான் என் மனச் சாட்சிக்குத் திருப்தியாக இருக்க்கும்.
பிடிவாதம் பிடிக்காதே. வெறுமனே மன்னிப்புக் கேள். அது போதும்.
குற்றம் நிரூபணமானால் என்ன மாதிரி தண்டனை எங்களுக்குக் கிடைக்கும்? அபராதம் விதிப்பார்களா?
அதோடு, அவமானமும் கிடைக்கும்.
அதுதான் எப்போதோ கிடைத்தாகி விட்டதே, ஏராளமாக. இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது? நீதிமன்றம், வழக்கு என்பதில் எல்லாம் பெரிதாக ஒன்றும்வந்துவிடப் போவதில்லை. அபராதம் என்றால் எவ்வளவு விதிப்பார்கள்?
இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் விதிப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றார், பதிப்பாளர்.
அவ்வளவுதானா? என்றேன்.
ஐநூறு ரூபாய் வரைகூட விதிக்கப்படலாம் என்றார், அஸ்லம் என்னை அச்சுறுத்திப் பார்ப்பது போல.
அப்படியா என்றேன் இயல்பாக.
ஏது, உன்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கும் போலிருக்கிறதே! என்று சொன்ன அஸ்லமுக்கு மீண்டும் கோபம் வரத் தொடங்கியது.
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். அப்படியே என்னிடம் இல்லாவிட்டாலும் நீங்கள் எனக்காக அபராதம் செலுத்தி சிறைக்குப் போகாதவாறு என்னைக் காப்பாற்றமாட்டீர்களா, என்ன? லஹோரில் உள்ள பெரும் செல்வந்தர்களுள் ஒருவரல்லவா நீங்கள்?
நீ ரொம்பப் பேசுகிறாய் என்று சொன்ன அஸ்லம் சிறிது நேரத்திற்குப் பின் மறுபடியும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுவிடுமாறு வற்புறுத்தினார்.
அவரது மண்டையைப் பிளந்துவிட வேண்டும் போல எனக்கு ஆத்திரம் வந்தது. மவுனமாக இருந்தேன்.
வழக்கு விசாரணைக்கு வந்த அன்று நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜரானோம். சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர். மான்டோ எழுதிய துர் நாற்றம் என்கிற கதையும் எனது ரஜாய் சிறுகதையும் ஆபாசமானவை என்று அவர்கள் நிரூபித்தாக வேண்டும். நேரடியாக ஏதாவது கேட்டாலொழிய நான் வாயைத் திறக்கக் கூடாது என்று என் வழக்குரைஞர் எனக்குச் சொல்லியிருந்தார்.
முதலில் மான்டோ வின் துர்நாற்றம் கதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தக் கதை ஆபாசமாக இருக்கிறது என்கிறீர்களா என்று சாட்சியிடம் கேட்டார், மான்டோவின் வழக்குரைஞர்.
ஆமாம் என்றார் சாட்சி.
கதையில் எந்தச் சொல் ஆபாசமாக இருக்கிறது?
சாட்சி: மார்பு
வழக்குரைஞர்: நீதிபதியவர்களே, மார்பு என்கிற சொல் ஆபாசம் அல்ல.
நீதிபதி: ஆம், நீங்கள் சொல்வது சரிதான்.
வழக்குரைஞர்: எனவே அது ஆபாசமில்லை அல்லவா?
சாட்சி: ஆனால் ஒரு பெண்ணின் மார்பகங்களைக் குறிப்பதாக அந்தச் சொல் இருந்தது.
அதை கேட்டதும் மான்டோ திடீரென எழுந்து நின்று கேட்டார்: பெண்ணின் மார்பகங்களை மார்பு என்று குறிப்பிடாமல் வேறு எப்படிக் கூறுவதாம்? வேர்க்கடலை என்றா?
அதைக் கேட்டதும் நீதிமன்ற அறை முழுவதும் சிரிப்பலை மோதியது. மான்டோவும் சிரிக்கலானார்.
குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் இப்படி மட்டரக நகைச் சுவைகளை வெளியிட்டால் நீதிமன்ற மன்ற அவமதிப்புக் குற்றம் பதிவு செய்து அவரை வெளியேற்ற வேண்டிவரும் என்று நீதிபதி எச்ச்சரித்தார்.
சாட்சி மேலும் விசாரிக்கப்பட்டபோது அவர் திரும்பத் திரும்ப மார்பு என்கிற ஒரு சொல்லே ஆபாசமாகப் பட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதை ஆபாசம் என்று நிர்ணயம் செய்வது சாத்தியமாக இல்லை.
மார்பு ஆபாசம் என்றால் கணுக்கால் தோள்பட்டை எல்லாம் ஏன் ஆபாசமில்லை ? என்று மான்டோவிடம் கேட்டேன்.
எல்லாம் வெறும் குப்பை என்றார், மான்டோ.
வழக்கு மறு நாளும் தொடர்ந்தது. நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதிபதியிடம் மன்னிப்புக் கோருமாறு எங்களுக்குச் சிலர் அறிவுரை கூறினார்கள். எங்கள் சார்பில் தாமே அபராதம் செலுத்திவிடுவதாகவும் சொன்னார்கள். வழக்கு விசாரணையின் போக்கு குற்றச்சாட்டு மிகவும் பலவீனமாக இருப்பதைப் புலப்படுத்திவிட்டது. எனது ரஜாய் சிறுகதையை ஆபாசம் என்று நிறுவ அழைக்கப்பட்ட சாட்சிகள் தடுமாற்றமடைய
லானார்கள். சாட்சி சொல்ல வந்த ஒரு கனவான் நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு அவள் காதலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்தாள் என்கிற சொற்றொடரில் ஆபாசம் இருப்பதாகச் சொன்னார்.
இந்தச் சொற்றொடரில் எந்தச் சொல் ஆபாசமாக இருக்கிறது? சேகரித்தல் என்பதா அல்லது காதலர்களா? என்று கேட்டார், என் வழக்குரைஞர்.
சிறிது தயக்கத்துடன் காதலர்கள் என்கிற சொல் என்று சொன்னார், சாட்சி.
நீதிபதியவர்களே, காதலர்கள் என்கிற சொல்லை மாபெரும் கவிஞர்கள் எல்லோரும் கையாண்டிருக்கிறார்கள். இறைத் தூதுவரைக் துதிக்கும் பாடல்களில்கூட இச்சொல் இடம் பெறுகிறது. இந்தச் சொல் புனிதம் மிக்கதாகவும் பக்திமான்களால் கருதப்படுகிறது என்றார் வழக்குரைஞர்.
ஆனால் பெண்கள் காதலர்களைச் சேகரம் செய்வதாகச் சொல்வது மிகவும் முறைகேடானது என்று சாட்சி அறிவித்தார்.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார், வழக்குரைஞர்.
ஏனென்றால் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவ்வாறு செய்வது முறை கேடானது.
அப்படியானால் கவுரவப்பட்ட குடும்பத்தைச் சேராத பெண்கள் என்றால் அதில் முறைகேடு எதுவும் இல்லை அல்லவா?
இல்லையில்லை.. என்று தடுமாறினார், சாட்சி.
ஒருவேளை என் கட்சிக்காரர் அப்படிப்பட்ட கவுரவம் இல்லாத பெண் காதலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கலாம் அல்லவா?
ஆமாம், ஆனால் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த, நன்கு படித்த ஒருவர் அம்மாதிரியான பெண்களைப் பற்றி எழுதியிருப்பது கண்டிக்கத் தக்கது என்றார் சாட்சி.
அப்படியானால் தாராளமாகக் கண்டியுங்கள். அதைவிட்டு விட்டு எதற்கு சட்டப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று மடக்கினார் வழக்குரைஞர்.
வழக்கு அந்தக் கணமே முனை மழுங்கிப் போனது.
முன்பின் தெரியாத ஒரு நபர் என்னை அணுகி, இருவரும் மன்னிப்புக் கோருங்கள். இந்த வழக்கிற்காக உங்களுக்கு ஆகும் எல்லாச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று ரகசியம் பேசினார்.
நல்லது. மான்டோ சாகிப், என்ன சொல்கிறீர்கள், மன்னிப்புக் கேட்டு விடுவோமா? நமக்குக் கிடைக்கிற பணத்தில் நிறையப் பொருள்கள் வாங்கிக்கொண்டு போகலாம் அல்லவா?
குப்பை என்றார், மான்டோ தனது விழிகளை முறைப்பாக விரித்து.
வருந்துகிறேன், கிறுக்குப் பிடித்த இந்த மான்டோ ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்.
அப்படியானால் நீங்கள் மட்டுமாவது மன்னிப்புக் கேளுங்கள்.
முடியாது. இந்த மனிதர் (மான்டோ) மிகவும் தொந்தரவான பேர்வழி. மன்னிப்புக் கேட்டால் அப்புறம் என்னால் பம்பாயில் வசிக்கவே முடியாதபடிச் செய்துவிடுவார். இந்த வழக்கில் எனக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையைவிட நான் மன்னிப்புக் கேட்பதால் என் மீது அவருக்கு ஏற்படக்கூடிய கோபம் பன் மடங்கு கொடியதாக இருக்கும்.
இறுதியில் தண்டனை ஏதுமின்றி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
மன்னிப்புக் கேட்குமாறு என்னிடம் மன்றாடியவரின் முகம் தொங்கிப் போயிற்று.
தீர்ப்புக்குப் பிறகு என்னைத் தமது அறைக்கு அழைத்த நீதிபதி நான் சென்றதும் அன்போடு வாழ்த்துத் தெரிவித்தார். நீங்கள் எழுதியுள்ள கதைகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அவை ஆபாசமல்ல. ரஜாய் கதையிலும் ஆபாசம் இல்லை. ஆனால் மான்டோவின் எழுத்தில்தான் நிறைய அழுக்கு இருக்கிறது என்றார்.
இந்த உலகமே பல அழுக்குகளால் நிரம்பித்தானே இருக்கிறது என்றேன்.
அதற்காக அதை எடுத்து அப்புவது அவசியந்தானா?
அப்படிச் செய்வதால் அழுக்கு இருப்பது அனைவரின் கவனத்திற்கும் வரும் அல்லவா? அதன் பயனாக அழுக்கை நீக்கித் தூய்மைப் படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படலாம்.
நீதிபதி அதைக் கேட்டு நகைத்தார்.
எங்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதில் எங்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை. வழக்கில்
வெற்றி பெற்றதற்காக எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. உண்மையில் வழக்கு முடிந்துவிட்டதில் எங்களுக்கு வருத்தமே. மறுபடியும் லஹோருக்கு வருகிற வாய்ப்பு எப்போது கிட்டுமோ என்றுதான்.
(இஸ்மத் சுக்தாய் தம் மீது தொடுக்கப் பட்ட வழக்கு குறித்து உர்துவில் எழுதிய விரிவான கட்டுரையை லிஹாப் வழக்கு என்னும் தலைப்பில் தஹிரா நக்வியும் முஹமது உமர் மேமனும் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் தமிழாக்கம் இது. இடக் கட்டுப்பாடு கருதிப் பல பக்கங்களை மொழியாக்கம் செய்யாது விட்டிருக்கிறேன்.)
Friday, 24 August 2007
பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 4
எஸ் மெய்யப்பன் Thursday August 23, 2007
அத்தியாயம் ஐந்து
கர்ம சந்நியாச யோகம்
உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும் அதைச் செய்வதே மேலானது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 29 சுலோகங்கள் உள்ளன.
----------------
அர்ஜுனன்: கிருஷ்ணா, ஒரு முறை கர்மத்தைத் துறந்து விடச் சொல்லுகிறாய், மறுமுறை கர்மத்தை மேற்கொள்ளச் சொல்லுகிறாய், சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டில் எது சிறந்தது என்று முடிவாகச் சொல்.
கண்ணன்: 1கபித்விஜயா, கர்மம் செய்தாலும் சரியே, அதனைத் துறந்தாலும் சரியே, இரண்டுமே சொர்க்கத்தை அளிப்பவை. ஆனாலும் கர்மத்தைத் துறப்பதைக் காட்டிலும், அதைச் செய்வதே மேலானது. ஏனெனில் விருப்பு வெறுப்புகளைக் கடந்த உண்மையான ஞானி, இன்ப துன்ப இரட்டைகளை நீக்கிவிடுவதால், இனிதே பந்தத்திலிருந்து விடுபடுகிறான். ஆத்ம ஞானம் வேறு, செயல் நிலை வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். அறிந்தவர்கள் அவ்விதம் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இவை இரண்டில் எதைக் கடைப்பிடித்தாலும் சொர்க்கம் கிட்டுவது நிச்சயம். ஆத்ம ஞானி அடையும் அதே உன்னத நிலையை, கர்மயோகியும் நிச்சயம் அடையலாம். உண்மையில் சொல்ல போனால் கர்மத்தைச் செய்வது, கர்மத்தைத் துறப்பது இரண்டுமே ஒன்று தான். இதை உணர்ந்தவனே விபரம் தெரிந்தவன்.
மேலும் ஒன்றைப் புரிந்து கொள் அர்ஜுனா, துறவியாக வேண்டுமென்றாலும் சில கர்மங்களைச் செய்து தான் ஆக வேண்டும். அந்த 2கர்மங்களின் மூலம் மனத்தைச் சித்தப்படுத்தி, ஆத்மாவைச் சுத்தப் படுத்தி, புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவில் உயிர்கள் அனைத்திலும் ஊடாடும் பரம்பொருளின் சொரூபமே ஆத்மா என்பதை உணர வேண்டும். இத்தகைய திறமை படைத்தவன் வெகுவிரைவில் இறைவனை அடைகிறான்.
உண்மையான ஞானி எதையுமே தான் செய்வதாக நினைப்பதில்லை. அவன் பார்த்தாலும் கேட்டாலும், உண்டாலும் உறங்கினாலும், தொட்டாலும் விட்டாலும், நடந்தாலும் நுகர்ந்தாலும், எடுத்தாலும் கொடுத்தாலும், சுவாதித்தாலும் பேசினாலும், திறந்தாலும் மூடினாலும், எல்லாம் அவன் செயல்… என்றே நினைக்கிறான். செய்வதைச் செய்துவிட்டுப் பலாபலன்களை ஈசுவரனிடம் விட்டுவிடுகிறவன் தாமரை இலை போன்றவன், அவன் மேல் பாவம் எனும் தண்ணீர் ஒட்டுவதில்லை.
துறவிகள் கர்மத்தில் ஈடுபடுவது எதற்காக? உடம்பு, மனம், அறிவு மற்றும் ஐம்புலன்களில் படிந்துள்ள பற்று எனும் அழுக்கை அகற்றி, ஆத்மாவைப் பரிசுத்தம் ஆக்கத்தான். கர்மங்களின் பலனைத் துறக்கும் ஞானி, நிலையான நிம்மதியை அடைகிறான். ஆனால் இலாப நோக்குடன் செயல் படுபவன் அச்செயலுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளுகிறான். உடம்பை வென்று உள்ளத்தாலும் ஞானியானவன் எதையும் செய்வதில்லை, செய்யப் பிறரை தூண்டுவதும் இல்லை. அவன் 3நவவாயில் நகரத்தில் சுகமாக இருப்பான். „இதைச் செய்‚… என்று ஆத்மா ஆனையிடுவதும் இல்லை, செயல்களை உண்டாக்குவதும் இல்லை, பலாபலன்களுடன் நம்மை பந்தப்படுத்துவதும் இல்லை. இயற்கையே எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த ஆத்மா எவனுடைய பாவத்தையும் எடுத்துக் கொள்ளுவதில்லை, புண்ணியத்தையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. மூடத்தனம் அறிவை மூடி இருப்பதால், ஜீவராசிகள் மயக்க நிலையில் உள்ளன. இந்த மயக்கம் அகல வேண்டுமானால், ஆத்மாவில் ஞானம் உதிக்க வேண்டும். அப்போது ஆத்மா சூரியனைப் போல் பிரகாசிக்கும. ஞானத்தால் பாவங்களைக் கழுவிக் கொண்டு, புத்தி முதலான எல்லாவற்றையும் பரம்பொருளோடு சங்கமிக்கிறவர்கள் பிறவிப் பெருங்கடலைத் தாண்டிவிடுகிறார்கள்.
4சவ்யசாசின், சமநோக்கைப் பற்றி இப்போது விளக்குவேன், நாயையும், பசுவையும், நாய் தின்னும் நீசனையும், மிகப்பெரிய யானையையும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனையும் ஞானிகள் 5சமமாகத் தான் பார்ப்பார்கள், சம நோக்குடைய இவர்கள் பிறப்பு இறப்பு இரண்டையும் வென்றுவிடுகிறார்கள். ஏனெனில் எங்கும் எதிலும் சமமாக இருக்கும் ஈசுவரனும் அவர்களும் ஒன்றாகிவிடுகிறார்கள். ஈசுவர சம்பத்தைப் பெற்றவன் வேண்டியது கிடைத்த போது இன்புறுவதும் இல்லை, வேண்டாதது கிடைத்த போது துன்புறுவதும் இல்லை.
ஆத்ம சுகத்தைப் பற்றி இனி கூறுவேன் அர்ஜுனா, வெளியுலகில் கவனம் செலுத்தாதவன் ஆத்மாவின் உள்ளுக்குள் சுகங்களைக் கண்டு கொள்கிறான். ஈசுவரனிடம் ஈடுபாடு கொள்ளும் அவன், அழிவில்லாத சுகத்தில் திளைக்கிறான். உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் உண்டு, அந்தமும் உண்டு. அவற்றில் சுகமும் உண்டு, துக்கமும் உண்டு. எனவே விவேகி அவற்றில் நாட்டம் செலுத்த மாட்டான். உடம்பெடுத்த இப்பிறவிலேயே காமத்தின் வேகத்தையும், குரோதத்தின் தாபத்தையும் தடுக்கும் சக்தியுள்ளவன் தான் சுகம் பெற்ற ஞானி. ஆத்மாவின் மேல் விருப்பம் கொண்டு, அது காட்டும் வெளிச்சத்தில் வழியைக் கண்டு, அந்த ஆத்மாவின் உள்ளுக்குள்ளேயே சுகத்தில் திளைப்பவன் ஈசுவரனாகவே மாறி விடுகிறான், பிரம்மானந்தத்தில் ஊறிவிடுகிறான். மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகத்தைப் போக்கிக் கொண்டவர்களும், உலக நலத்தையே தங்கள் நலமாக ஆக்கிக் கொண்டவர்களும், மனக்கதவைப் பூட்டிகொண்டவர்களும், ஆத்மஜோதியில் உள்ளத்தை நாட்டிக் கொண்டவர்களும் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகிலும் பிரம்மானந்தத்தை அனுசரிக்கிறார்கள்.
புறவுலகக் காட்சிகளை வெளியிலே இருக்க விட்டு, நயனப்பார்வையை புருவ மத்தியில் நிலைக்க விட்டு, நாசிவழிப் பிராண அபானங்களை சமப்படுத்தி மூச்சுவிட்டு, ஆசை அச்சம் கோபம் இவற்றை நீக்கிவிட்டு, அறிவு, மனம், தேகம் இவற்றை அடக்கிவிட்டு, சொர்க்க நோக்கமே கொண்டிருக்கும் முனிவனுக்கு எந்த நேரமும் சுகம் தான் எந்த இடமும் சொர்க்கம் தான்.
தனஞ்சயா, தவங்களையும் யாகங்களையும் அனுபவிப்பவன் நானே, அனைத்து உலகங்களுக்கும் ஈசன் நானே, சகல உயிர்களுக்கும் நண்பன் நானே, இதனை அறிந்தவன் நிம்மதியில் திளைக்கிறான்.
(ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. குரங்குக் கொடியுடையவன்.
2. காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெற வேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் இயற்கையினின்று பெற வேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ப நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம சந்தியாசம். ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும். - சுவாமி சித்பவானந்தர்
3. ஒன்பது வாசல்களை உடைய உடல், நகரமாக உவமிக்கப்பட்டுள்ளது. நாசித் துவாரங்கள் 2, காதுத்; துவாரங்கள் 2, கண்வழி 2, வாய்த் துவாரம் 1, சிறுநீர்த் துவாரம் 1, மனத்துவாரம் 1 ஆக 9 வாயில்கள்.
-கருணை வடிவான அவன், தான் இருப்பதற்கான இடத்தை அமைத்துக் கொண்டான், காற்று, நீர், நெருப்பு இவற்றை இணைத்து, சரீரத்தைப் படைக்கிறான். அதற்கு ஒன்பது வாசல்களை வைத்து, பத்தாவது வாசலில் அவன் வசிக்கிறான். - குரு நானக்
புனித நகரமாகிய மனித உடம்பில் ஒன்பது வாயில்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கதவுகளும் கிடையாது. ஆனாலும் ஒன்பது ஓட்டைகள் உள்ள உடம்பில் உயிர்க்காற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சுக் காற்று உடம்பிலிருந்து வெளியே செல்லும் போது ஏதோ ஒரு சக்தி அதை மீண்டும் உள்ளேயும் இழுத்துக் கொள்கிறது. - சுவாமி சச்சிதானந்தா
4. இடது கையால் அம்பு எய்பவன்.
5. சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவே படுகிறது. இது கங்கை, இது சாக்கடை என்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை.
- சுவாமி சித்பவானந்தர்.
அத்தியாயம் ஆறு
தியான யோகம்
ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் இன்பமுறுவதே தியானம். கர்ம யோகத்திலும் ஞான யோகத்திலும் சித்தி பெற்றவன் ஆத்ம ஞானம் பெறுகிறான். அப்படிப்பட்டவனுக்கு அனைத்தும் ஒன்றே என்ற சமநோக்கு தோன்றி விடும். உடல் உறவை நீக்கிவிட்டால், ஆத்மாவும் பரம்பொருளும் ஒன்றேயாகும். இக்கருத்துகள் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-------------
கண்ணன்: பாண்டு குமாரனே‚ இலாப நோக்கத்தைத் துறக்காதவன் துறவி ஆக மாட்டான். உணவுக்காக உலையில் நெருப்பைப் பற்ற வைக்காததாலும், உரிய காரியங்களைச் செய்யாமல் துறந்து விடுவதாலும் கூட ஒருவன் துறவியாகிவிட மாட்டான். பலாபலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யும் காரியத்தை ஒழுங்காகச் செய்பவனே உண்மைத் துறவி. புலன்கள் விஷயத்திலும், கர்மங்களைச் செய்யும் விஷயத்திலும் அவன் சகலத்தையும் துறந்துவிட வேண்டும். துறவு என்று சொல்லுகிறார்களே, அது தான் யோகம். தியான யோகத்தில் முன்னேற விரும்பும் முனிவனுக்கு அதற்குரிய வழி கர்மத்தில் இறங்குவது தான். இவ்விதம் தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்றிருப்பது1 சாத்தியாமாகிறது.
ஆத்மாவை 2ஆத்மாவினால் தான் உயர்த்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அதைக் 3கீழ்நோக்கிச் செல்லவிடக் கூடாது. ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன்ƒ 4ஆத்மாவே ஆத்மாவுக்குப் பகைவன். ஆத்மாவினால் ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மா நண்பன்ƒ ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மாவே பகைவன்5.
தன்னை வென்று மனந் தெளிந்தவனுக்கு, குளிர்ச்சியிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பரமாத்ம தரிசனம் கிட்டும். அறிவு மற்றும் அனுபவத்தால் மனத்திருப்தி அடைந்தவனும் இன்ப துன்பங்களில் 6அசைந்து கொடுக்காதவனும், ஐம்புலன்களை வெற்றி கண்டவனும், மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் காணும் பண்பு கொண்டவனும் எவனோ அவன் துறவிகளில் எல்லாம் உயர்ந்த துறவியாவான். அன்பர்கள்.. அலட்சியப்படுத்துபவர்கள், நண்பர்கள்.. பகைவர்கள், நடுநிலையாளர்கள்.. வெறுத்து ஒதுக்குபவர்கள், சாதுக்கள்..பாவிகள், உற்றார்கள்..உறவினர்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளுபவன் மிகவும் உயர்ந்தவன். உண்மையான துறவி ஆசையை அறுக்க வேண்டும்ƒ சொத்து சுகங்களைத் துறக்க வேண்டும்ƒ மனக் கிளர்ச்சியை ஒடுக்க வேண்டும்ƒ 7ஏகாந்தத்தில் கிடக்க வேண்டும்ƒ ஆத்மாவுக்கு யோக விருந்து படைக்க வேண்டும் ƒ சுத்தமான ஓரிடம் பிடிக்க வேண்டும்ƒ அது மிதமான உயரத்தில் இருக்க வேண்டும்ƒ அதன் மேல் 8தர்பைப்புல் பரப்ப வேண்டும், பிறகு 9மான் தோலை விரிக்க வேண்டும்ƒ அதன் மேல் வஸ்திரத்தைப் போட வேண்டும். அதில் அமர்ந்து உடல், தலை, கழுத்து, மூன்றையும், நேராகவும், அசையாமலும், நிலையாகவும் வைக்க வேண்டும். கண்கள் இப்படியும் அப்படியும் அசையாமல் இரண்டு 10புருவங்களுக்கும் இடைப்பட்டு முக்கின் நுனியையே பார்க்க வேண்டும். பிரம்மசரிய கட்டுப்பாட்டுடன் சலனமும் பயமும் நீங்கிய மனத்தை என் மேல் செலுத்த வேண்டும். பிறகு புலன்களை அடக்கி என்னையே குறிக்கோளாய்க் கொண்டு யோகம் பயில வேண்டும். இவ்விதம் யோகம் பயிலும் துறவி என்னிடம் உள்ள, சொர்க்க சுகத்துடன் கூடிய அமைதியை அடைகிறான்.
வயிறு முட்டச் சாப்பிடுபவனுக்கும், பட்டினி கிடப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குபவனுக்கும், விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை. அளவான ஆகாரம், அளவான நடமாட்டம், அளவான தூக்கம், அளவான விழிப்பு, அளவான செயல், இவையே ஒரு வகை யோகம் தான். இது நிச்சயம் துக்கத்தை நீக்கும். மனதைப் பிடித்து ஆத்மாவிற்குள் அடைத்து விட்டு,ஆசையைத் துடைத்து விட்டு,பொருட்களின் மேல் விருப்பத்தை நீக்கி விட்டவன் உன்னதமான யோகியாவான். அவன் காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட மூடியில்லாத விளக்கைப் போன்றவன். விளக்கில் எரியும் நெருப்பு ஆடாது, அசையாது, யோகியின் மனமும் ஆடாதுƒ அசையாதுƒ பரம்பொருள் மேல் நிலைத்து நிற்கும்.
எந்த நிலையில் யோகப்பயிற்சில் கட்டுண்ட மனம் அடைய வேண்டிய இடத்தை நாடுகிறதோ.. எந்த நிலையில் மனமானது ஆத்மாவைக் கண்டு ஆனந்திக்கிறதோ.. எந்த நிலையில் சுகம் என்பது உடலால் அனுபவிக்கப்பட முடியாமல் அறிவால் அனுபவிக்கப்படுகிறதோ.. எந்த நிலையில் இதற்கு மேல் இலாபமில்லை என்று கருதப்படுகிறதோ.. எந்த நிலையில் எந்தத் துக்கம் வந்தாலும் கலங்காத நிலை ஏற்படுகிறதோ.. அந்த நிலையே பிரம்மானந்த யோகம். இந்த யோகத்தை மனங்கலங்காமல் உறுதியாகப் பயில வேண்டும். மனக்கிளர்ச்சியால் தோன்றும் ஆசைகளைத் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனச்சங்கிலியால் கட்டிப் பிணைத்துத் துணிவுடனும் விவேகத்துடனும் மௌ;ள மௌ;ள அடக்க வேண்டும். மனம் வேறொன்றையும் நினைக்காத படி11 ஆத்மாவிலேயே நிலைக்கச் செய்ய வேண்டும். ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும் மனத்தைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்தி, ஆத்மாவுடன் அது கூடிக் கொண்டிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்விதம் ஈசுவர நிலையடைந்த யோகிக்குத் தான் உன்னதமான சுகம் கிடைக்கிறது. அவன் ஈசுவரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு எல்லையற்ற சுகத்தைத் தொல்லையின்றி அனுபவிக்கிறான். அவன் சகல உயிர்களிலும், தன்னைக் காண்பான்ƒ தனக்குள் சகல உயிர்களையும் காண்பான்ƒ அனைத்திலுமே சமநோக்குக் காட்டுவான்12.
எங்கும் நிறைந்தவனாயும் எல்லாம் இருப்பவனாயும் என்னைக் காண்பவனுக்கு நான் காட்சியளிப்பேன். நானும் அவனைக் கண்டு கொள்வேன். ‘உள்ளது ஒன்றே” என்ற உணர்வுடன் எல்லா உயிர்களிலும் உள்ள என்னைத் தொழுகின்றவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் என்னிடமே இருப்பான்.
அர்ஜுனன்: 13கிருஷ்ணா‚ மனம் என்பது சஞ்சலம்மிக்கதுƒ குழப்பம் விளைவிக்கத் தக்கதுƒ அடங்காததுƒ எதற்கும் மடங்காதது. காற்றை அடக்க முடியாதது போல் அதையும் அடக்கமுடியா தென்று நான் நினைக்கிறேன்‚ அதனால் நீ சொன்ன சமநிலை தேவைப்படும் தியான யோகம் செய்வதில், அந்த மனம் நிலையாக நிற்காதென்றே நான் எண்ணுகிறேன்‚
கண்ணன்: உண்மை தான் விஜயா, மனம் அடக்க முடியாதது தான், அலை பாய்வது தான். ஆனால் வைராக்கியம் மிக்க பயிற்சியினால் அதை இழுத்துக் கட்டிவிடலாம். மனதை அடக்கமுடியாதவனுக்கு யோகம் கிட்டுவதில்லை, 14மனத்தை ஒழுங்குபடுத்தி முறையாக முயல்பவனுக்கு யோகம் நிச்சயம் கிட்டுகிறது.
அர்ஜுனன்: சரி கண்ணா, ஒருவன் அக்கறையுடன் யோகத்தில் இறங்கினான். ஆனால் அவனுக்கு முயற்சி போதவில்லை. யோகத்திலிருந்து அவன் மனம் நழுவிவிட்டதால் யோகத்தின் பலன் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் என்ன கதி அடைவான்? சிதறுண்ட மேகம் போல் அவன் அழிந்து விடுவானா? இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்‚ இந்தச் சந்தேகம் தீர்க்க உன்னையன்றி யாரால் முடியும்?
கண்ணன்: அர்ஜுனா, அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகத்திலும் சரி.. மேலுலகத்திலும் சரி அழிவே கிடையாது. நல்லதைச் செய்ய முயலும் எவனும் துர்கதி அடைவதில்லை. அப்பனே‚ அவ்விதம் யோகத்திலிருந்து நழுவியவன் புண்ணியவான்கள் அடையும் இன்பங்களை வேண்டிய மட்டும் அனுபவிப்பான், பிறகு உத்தமச் செல்வர்களின் குலத்தில் மறுபடியும் பிறப்பான். அல்லது ஞானிகளான யோகிகள் குலத்தில் பிறப்பான். இந்தப் பிறவி கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்தப் பிறவியில் முந்திய பிறவியில் இருந்த அதே அறிவைப் பெறுவான். யோக நிலை அடைவதற்கு மறுபடியும் முயற்சி செய்வான். பூர்வ ஜென்ம 15வாசனையால் அவனையறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான். வெறும் யோக ஆராய்ச்சியில் ஈடுபட்டாலே போதும், ஒலி உலகத்தை அவன் கடந்து விடுவான். இடைவிடா முயற்சியில் ஈடுபடும் யோகியானவன், கடந்த பல பிறவிகளில் பக்குவப்பட்டிருப்பதால், யோக சித்தி பெற்று நல்ல கதி அடைகிறான்;.
கடுத்தவ முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கனிந்த நல் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கடமையில் சிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. ஆகவே அர்ஜுனா‚ நீயும் யோகியாய் ஆகுக‚ என்னைச் சரணடைந்து என்னையே தொழுகின்றவன் யோகிகளில் எல்லாம் உன்னதமானவன். இதுவே என் முடிந்த முடிவு.
(ஆறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. பம்பரம் நடுநிலையில் நின்று வேகமாகச் சுழலும் போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பது போன்று அது காட்சியளிக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அதர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும் பொழுது யோகியானவன் கர்மத்தையெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சியளிக்கிறான். - சுவாமி சித்பவானந்தர்
2. எதிலும் பற்றுக் கொள்ளாத உள்ளம். - ஸ்ரீ ராமாநுஜர்.
3. மனதைக் கீழ் ஆதாரங்களில் நிலைக்கும்படிச் செய்வது அறிவுடைய செயல் ஆகாது. கீழ் ஆதாரங்களில் தோன்றும் இனிய வெப்பத்தில் மனம் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதை மேல் நோக்கிச் செல்லும் படிச் செய்ய வேண்டும். இதயப் பகுதியாகிய அனாகத ஆதாரத்தையோ, புருவ மத்திப் பகுதியாகிய ஆக்ஞை ஆதாரத்தையோ, நோக்கி மனம் செல்லும்படிச் செய்ய வேண்டும். தியான ஆற்றல் முழுவதையும் கொண்டு மனத்தை மேல் நோக்கியேச் செல்லும் படிச் செய்ய வேண்டும். - சுவாமி சச்சிதானந்தா
4. தன் மனத்தை வசப்படுத்தியவனுக்கு. - ஸ்ரீ ராமாநுஜர்
5. தீதும் நன்றும் பிறர் தர வாரா. - புறநானூறு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். - திருவள்ளுவர்
6. சம்மட்டி அடிக்கல் அதன் மேல் அடிக்கப்படும் இரும்பு பல உருவத்தை அடைந்தாலும் அடிக்கல் மாறுபடாமல் நிற்பது போல் அசையாமல் நிற்பவன். - உரையாசிரியர் அண்ணா
7. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. - வடலூர் இராமலிங்க சுவாமிகள்
8. தர்பை ஆசனத்திலோ, பலகை ஆசனத்திலோ அமர்ந்து நம் துறவிகள் தியானம் செய்கிறார்கள். இந்த ஆசானங்கள் மின்சாரத்தைத் தடுக்கும் ஆற்றல் உடையவை. பூ மையக் கவர்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு இப்படிப்பட்ட இருக்கைகள் துணை செய்கின்றன. - சுவாமி சச்சிதானந்தா
9. மான் தோலிலோ புலித் தோலிலோ யோகிகள் அமர்ந்து தியானம் செய்யும் படங்களைப் பார்த்திருக்கிறோம். தங்கள் தியானத்திற்கு வேண்டிய தோல்களுக்காக யோகிகள் அந்த உயிர்களைக் கொல்வதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் தோல்களைத் தியானப் பயிற்சிக்கு ஏற்ற இருக்கையாகப் பயன்படுத்துகிறார்கள். அந்தத் தோல்கள் பூ மையக் கவர்ச்சியிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. மின்சாரக் கம்பியில் வேலை செய்பவர்கள் தங்கள் கைகளில் தோலினாலோ ரப்பரினாலோ ஆன கை உரைகளை அணிந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இது மின்சாரத் தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவுகிறது. - சுவாமி சச்சிதானந்தா
10. கையறவு இலாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்குகளி கொண்டுதிறந்(து) உண்டு நடு நாட்டு
ஐயர்மிக உய்யும் வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் மறமறைகள் பாடுவது பாட்டு. - வடலூர் இராமலிங்க சுவாமிகள்
நாட்டமிரண்டு நடுமூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கு மழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமில்லை சிவ னவனாமே. - திருமந்திரம்.
நாசி நுனியைப் பார்ப்பது போல் இருகண்களையும் புறப்பொருள்களில் செல்லாமல் அகத்தில் பதிய வைத்தல். புறத்தில் நாசி நுனியில் கவனம் செலுத்துவது கருத்தன்று. - ஆதி சங்கரர்.
11. தியானம் என்றால், எண்ணெயின் ஒழுக்கு போல், நினைவுகளின் தொடர்ச்சி பொருளை வகை கண்டு, தொடர்பு படுத்திக் காணும் ஆற்றலினால், நினைவானது பொருளை நேராக அறிகிறது. - ஸ்ரீ இராமாநுஜர்
12. இன்பத்திலும் துன்பத்திலும் தன்னைப் போலவே பிறரையும் எண்ணுவான். அவனே உயர்ந்தவன், உன்னதமானவன்.
13. க்ருஷ் என்பதற்கு இழுத்தல் என்று பொருள். பக்தர்களின் பாவத்தைத் தன்பால் இழுத்துக் கொள்வதால் கிருஷ்ணன்.
14. பயங்கர மழை, கடும் குளிர், பெரும் காற்று, மிகுந்த வெயில், இவற்றிற்கு அஞ்சாமல், ஒருமித்த மனத்தோடு கடவுளிடம் பக்தி செலுத்துகிறவனே சாதகப் பறவையைப் போல் புத்திசாலி. மற்றதெல்லாம் பூஜிக்கத் தகுந்த காமதேனுப் பசுவை. தங்கக் கலப்பையில் கட்டி, விஷத்தை அறுவடை செய்ய உழுவது போலாகும். - துளிசிதாசர்
15. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவராக இருப்பது பூர்வ ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறை தானே. - கண்ணதாசன்
(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )