Tuesday 4 September, 2007

பழைய திண்ணை கட்டுரை - முகமதிய தீவிரவாதம் - பகுதி-1

கூகிளிட்டு தேடிய கட்டுரை இது.


இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
ஒரு விவாத கருத்தரங்கு Saturday March 29, 2003

இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை ' தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம்.

இதில் பங்கு பெற்றோர்:
ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர். இவரது முக்கிய நூல் Canadian Policy towards Kurushchevாs Soviet Union மற்றும் 15 Tips on How to be a Good Leftist. இவ்விவாதக் கருத்தரங்கை வழிநடத்துபவர் இவரே. அவரும் அதில் பங்கெடுக்கிறார்.

இபின் வாராக்: பகுத்தறிவாளர், மதச்சார்பற்ற மானுடவாதி, 'நான் ஏன் முஸ்லீம் இல்லை ' எனும் நூலின் ஆசிரியர்.

ஹுசாம் அயலூஷ்: தென் கலிபோர்னியாவின் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மையத்தின் (Council on American Islamic Relations CAIR) இயக்குநர்.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்தனிஸ்தலாஸான் கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். மத்திய கிழக்கு குறித்த பேராசிரியராக இதே பல்கலைக்கழகத்தின் பெர்க்லீ பிரிவில் பணியாற்றுகிறார். ாBin Laden, Islam, and Americaாs New War on Terrorismா எனும் நூலின் ஆசிரியர்.

ராபர்ட் ஸ்பென்ஸர்: Free Congress Foundation அமைப்பின் உறுப்பினர், ா Islam Unveiledா எனும் சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியர்.

ஜேமி கிளாசோவ்: கனவான்களே இக்கருத்தரங்கில் நான் பெரிதாக ஏதும் பங்கு பெறப்போவதில்லை. ஒரு வினாவின் மூலம் விவாதத்தை தொடக்கி விட்டு மேடை இறங்கி விடுவதே என் பங்கு. எனவே தொடங்குவோம். மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஒரு அபாயமாக கணிக்கப்படும் ஓர் நிகழ்வு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் உள்ளதா அல்லது இஸ்லாமின் அடிப்படையிலேயே உள்ளதா ? இன்று ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான ஆபத்துக்கள் சில தீவிரவாதிகள் ஏற்படுத்தக் கூடியதா அல்லது ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து வாழ முடியாத தன்மை இஸ்லாமின் அடிப்படைகளில் உள்ளதா ? இதுதான் இந்த வன்முறைகளுக் கெல்லாம் காரணமா ?

ராபர்ட் ஸ்பென்ஸர்: எந்த ஒரு தனி நபரும் இஸ்லாம் அனைத்திற்குமாக என்று பேசிவிட முடியாது. முஸ்லீம்களில் ஒரு சாரார் இஸ்லாமின் அடிப்படை என கருதுவது மற்றொரு சாராரால் இஸ்லாமின் அடிப்படைக்கே விரோதமான ஒன்றானதென கருதப்படலாம். சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத ஆலோசகன் ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் பின்வருமாறு கூறுகிறான், 'புனித போர் கடமை இஸ்லாத்தின் தலையாய கடமை ஆகும். புனிதபோர் இல்லாத இஸ்லாம் தலையில்லாத உடல் போன்றதாகும். ' சிறை தண்டனை
பெறும் முன்னர் ஷேக் ஒமர் நியூயார்க் மசூதிகளில் இமாம் சிராஜ் வகாஜான் அழைப்பின் பேரில் உரைகள் ஆற்றி வந்தான். இமாம் சிராஜ் வகாஜ் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மைய (CAIR) ஆலோசனை குழு உறுப்பினர் என்றாலும் இந்த கருத்தியலை ஹுசாம் அயலூஷ் மறுப்பார் என நம்புகிறேன். எனினும் இத்தகைய வன்முறைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் தம் கருத்தியலை குர்ரான் மற்றும் இஸ்லாமிய வரலாறு மற்றும் பாரம்பரியம் சார்ந்தே உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாதது. இராணுவவாத இஸ்லாமின் ஆதரவாளர்கள் முகமதுவின் முக்கிய ஹதீஸானை 'அல்லாவையே தங்கள் இறைவனாகவும் என்னை(முகமதுவை) இறுதி நபியாகவும் மக்கள் ஏற்குமளவும் அவர்களுடன் போராடவே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஏற்கும் போதே அவர்களது இரத்தமும் சொத்துக்களும் பாதுகாப்பு பெறும். ' மேற்கோள் காட்டுகின்றனர். எனவே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகிவிட்டவர்கள் என்பது ஒரு பார்வையில் சரியாகவே இருக்கலாம்.

ஆனால் அவர்களது இஸ்லாம் அமைதியான இஸ்லாம் போன்றே ஒரு வேளை அதைக் காட்டிலும் உண்மையான வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள இஸ்லாமிய மரபென்பதே உண்மை.
ஆசாத் அபு ஹாலில்: ஸ்பென்ஸர் இஸ்லாம் குறித்த தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. அவரது இஸ்லாம் குறித்த அறிவினை பறைசாற்றுபவை எல்லாம் ஒன்று மேற்கத்திய பத்திரிகை செய்திகள் அல்லது ஏதாவது அமெரிக்க சிறையில் வசிக்கும் வெறி பிடித்த மெளல்வியுடையவை. டேவிட் க்வாரேஷ் அல்லது டெட் பண்டி ஆகியோரினை கிறிஸ்தவ இறையியலின் உதாரணங்களாக காட்டுவது போன்ற மடத்தனம் இது. இஸ்லாம், கிறிஸ்தவம் யூதம் ஆகிய மூன்று மதங்களின் வரலாறுகளுமே சமயப் பொறுமை மற்றும் மானுட சமத்துவம் ஆகிய விஷயங்களில் கறை படிந்தே விளங்குகின்றன. ஆனால் மறை நூல்களிலும் வரலாற்றிலும் மிகுந்த கொடுமைகளை செய்ததில் கிறிஸ்தவமே முன்னணியில் உள்ளது. இஸ்லாமை திட்டுகிற ஸ்பென்ஸர் அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் வரலாற்றை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க முடியாது. முதலில் கேட்கப்பட்ட கேள்வியை பொறுத்தவரையில் எல்லா மதங்களிலுமே வெறியர்கள், பயங்கரவாதிகள், பித்துக்குளித்தனமானவர்கள் உள்ளனர். அதை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது மக்களையோ முத்திரை குத்துகிற போக்கு சரியில்லை.

ஸ்பென்ஸர்: ஒமர் அப்துல் ரக்மான் புகழ் பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஆனால் டேவிட் க்வாரேஷோ அல்லது டெட் பண்டியோ அந்த அளவு முக்கிய உயர் பொறுப்பினை மேற்கில் என்றும் அடைந்ததில்லை. எனது இஸ்லாமிய அறிவிற்கு ாமேற்கத்திய பத்திரிகை செய்திகள்ாதான் மூலம் என்பதை பொறுத்தவரை எனது இஸ்லாமிய அறிவு இபின் கால்துன், இபின் தாய்மியா,முகமது முஷான் கான், S. K.மாலிக், மற்றும் சாயித் ராஜாய் கோரசானி ஆகியோரது கூற்றுக்களின் அடிப்படையில் அமைந்தது என தெளிவு படுத்துகிறேன். நான் மேற்கூறிய நபர்கள் எல்லாம் எந்த மேற்கத்திய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் என அபு ஹாலில் தெரியப்படுத்துவார் என கருதுகிறேன். கூறும் மனிதனை குறை கூறி (ad hominem )கருத்துக்களை எதிர்கொள்வது
தன்னிடம் கருத்துக்கள் தீர்ந்துவிட்ட ஒருவரது வாதத்தன்மை. கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை விவாதிப்பதில் கருத்தை செலுத்தலாம். கிறிஸ்துவத்தின் குறைகளை சுட்டிக்காட்டி இஸ்லாமை பாதுகாக்க நினைப்பதும் அதைப்போலவே சரியான நிலைபாடல்ல. ஹிட்லருக்கோ ஸ்டாலினிக்கோ கிறிஸ்தவம் பொறுப்பேற்க முடியாது. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில், இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையற்றோருக்கு எதிரான புனிதப்போரினை கடமையாக முன்வைக்கிறது. இஸ்லாமில் மட்டுமே அதன் செவ்விய நாட்களில் இருந்து இன்று வரை அதன் மிக முக்கிய
இறையிலாளர்களால் நம்பிக்கையற்றோருக்கு எதிரான வன்முறையும் போரும் நிறுவனப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. புகழ் பெற்ற மாலிகி நீதிபதி இபின் அபி சாயீத் அல் க்ய்ராவானி கூறுகிறார், ' ஜாகாத் இஸ்லாமியரின் புனித நிறுவனமாகும். முஸ்லீம் அல்லதாவர்கள் இஸ்லாமுக்கு மாறலாம் அல்லது ஜாஸாயா வரியினை பணிவுடன் கட்டலாம். இரண்டும் இல்லையெனில் நம்பிக்கையற்றோர் மீது போர் தொடுப்பது அவசியமாகும். ' அபு ஹாலில் தாங்கள் தயை கூர்ந்து இக்கோட்பாட்டினை மறுக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய மரபினை காட்டுவீர்களா ? உதாரணமாக ஏறத்தாழ அனைத்து கிறிஸ்தவ சர்ச்களும் சிலுவைப்போரின் மூல கருத்தியல்களை மறுக்கின்றனர்.

அபு ஹாலில்: மீண்டும் ஸ்பென்ஸர் தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை என நிரூபித்துள்ளார். ஒமர் அப்துல் ரக்மான் என்றென்றும் அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றவில்லை. மாறாக அதன் கிளை ஒன்றில் பகுதி நேர விரிவுரைக்கு வரவழைக்கப்பட்டார். அவரது வெறித்தன்மை வெளியானதும் அல் அசார் அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். ஆக இஸ்லாமிய உலகின் முக்கிய அல் அசார் பல்கலைக்கழகம் ஒமர் அப்துல் ரக்மானின் கருத்துக்களுக்கும் இஸ்லாமுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளீப்படையாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய உலகில் ஒமர் அப்துல் ரக்மானுக்கு ஆதரவாக எவ்வித ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஆனால் ஸ்பென்ஸரோ எவ்வித இஸ்லாமிய உலகில் எவ்வித முக்கியத்துவமுமற்ற வார்த்தைகளை பிடித்துக்கொண்டு 'ஒமர் அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என கூறுகிறார். முஸ்லீம்களை விட ஸ்பென்ஸருக்குத்தான் ஒமர் அப்துல் ரக்மான் முக்கியமானவராக தோன்றுகிறார்.
ஸ்டாலின் வேண்டுமானால் கிறிஸ்தவத்துடன் உறவற்றவராக இருக்கலாம். ஆனால் ஹிட்லர் ? ஹிட்லர் தன்னை முழுக்க முழுக்க கிறிஸ்தவராகவே கருதியவர். ஆனால் ஸ்பென்ஸர் இதைவிடவும் ஒருபடி மேலே போகிறார், சிலுவைப்போர்களுக்கும் போப்களுக்குமான தொடர்பு, நிறுவனப்படுத்தப்பட்ட யூத வெறுப்பு, 3 லிருந்து 9 மில்லியன் பெண்களை சூனியக்காரிகளென எரித்தது, நீதியின் தோமிய கோட்பாடு ஆகிய அனைத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறார் போலும். நம்பிக்கையற்றவர்களுக்கு எதிரான புனிதப்போர் இஸ்லாமில் மட்டுமே உள்ளது என ஸ்பென்ஸர் கூறுவது அறியாமையும் நேர்மையின்மையும் கலந்தது. தாமஸ் அகினாஸ் எழுதுயிருப்பதை படியுங்கள் பின் வாதத்திற்கு வாருங்கள்.

ஸ்பென்ஸர்: அல் அசார் பல்கலைக்கழக முன்னாள் மாணவன் ஒருவரின் வார்த்தைகள், 'ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் எனக்கு அல் அசார் பல்கலைக்கழகத்தில் குர்ரான் குறித்த விளக்கங்கள் என விரிவுரைகளாற்றினார். பின்னர் தன் பணியிலிருந்து விலகி 'ஜாகாத் ' மற்றும் 'கமா அல் இஸ்லாமியா ' எனும் இயக்கங்களில் பணியாற்றினார். ' 'அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என நான்கூறியதாக கூறுவது என் வார்த்தைகளை கவனிக்காததால் எழுந்த பிழை. நான் அவ்வாறு எவ்விடமும் கூறவில்லை.மாறாக நான் என்ன கூறுகிறேன் என்றால் அப்துல் ரக்மான் இஸ்லாமின் பாரம்பரியமிக்க செல்வாக்குள்ள ஒரு மரபினைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பல குற்றமற்றவர்களை கொல்லும் மானுட வெடிக்குண்டு தாக்குதல் 'இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நியாயமானதோர் விஷயமாகும் ' என அண்மையில் கூறினார் அல் அசார் பல்கலைக்கழக முதன்மை ஷேக் முகமது சாயீத் தந்தாவி. ஏதோ ஓரிரு தீவிரவாதிகளின் குரலா இது ஆசாத் ? மாறாக அண்மையில் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் மானுட வெடிக்குண்டுகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் 2000 பல்கலைக்கழக மாணவர்கள் மானுட வெடிகுண்டுகளாக முன்வந்தனர். கத்தோலிக்க திருச்சபை குறித்த அவரது மடத்தனமான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. திருச்சபையின் பாவங்களுக்கு மதம் காரணமில்லை என நான் கூறியதாக ஒரு பொய்யனோ அல்லது மடையனோ தான் கருத முடியும்.இஸ்லாமை பாதுகாக்க கிறிஸ்தவத்தை கீழ்மைப்படுத்த வேண்டும் என்கிற நிலையே மோசமானது. இதோ இன்றைய நிலையில் கிறிஸ்தவ வெறித்தன்மைக்கும் இஸ்லாமிய வெறித்தன்மைக்குமான வேறுபாடு. கனடாவைச் சார்ந்த ஜெரி பால்வெல் முகமதுவை பயங்கரவாதி என்கிறார். அதனால் இந்தியாவில் வெடிக்கும் கலவரத்தில் 8 பேர் மரணம் 90 பேர் படுகாயம். ஈரான் ஜெரி பால்வெல்லுக்கு மரண தண்டனை விதிக்கிறது. இந்த எதிர்வினைகள் அனைத்துமே இஸ்லாமிய அடிப்படை கொண்டவை.அதைப்போலவே ஹிட்லருக்கும் ஒசாமாவுக்குமான வேறுபாடு என்னவென்றால் ஹிட்லரின் சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவன் கிறிஸ்தவ விவிலிய மேற்கோள்களை காட்டவில்லை. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தம் செயல்களை குர்ரானையும் ஹதீசையும் இஸ்லாமிய இறையியலையும் கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. ஈரானின் ஐ நா துதெராக விளங்கும் ஒருவரான சாயித் ராஜாய் கோரசானி 'மானுட உரிமைகள் என்பதே கிறிஸ்தவ யூதேய கருத்தமைப்புதான், அது இஸ்லாமுக்கு அந்நியமானது ' என கூறும் போது அதை ஒரு கணிசமான இஸ்லாமியரின் கருத்தியல் இல்லை என எப்படி கூறு முடியும் ?

ஹுசாம் அயலூஷ்: இத்தருணத்தில் நான் ஒன்றினை தெளிவாக்க விரும்புகிறேன். மற்ற மதத்தினரை அவர்களது நம்பிக்கைகளை இழிவாக பேசுவதென்பது இஸ்லாமுக்கு விரோதமான ஒன்று. உலகின் அனைத்து தீவிரவாதிகளும் தம் வெறுப்பினை பரப்ப மதங்களை தவறாக பயன்படுதியுள்ளனர். ஆம் ஹிட்லர் கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவ்வாறு பயன்படுத்தியுள்ளான். இதோ அவனது பேச்சிலிருந்தே, 'ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் என் உணர்ச்சிகள் என் தேவரை என் மீட்பரை ஒரு போர் வீரராகவே காட்டுகிறது. ஒரு தனி மனிதனாக தனிமையில் உண்மையை உணர்ந்து யூதர்களுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்த போராளியாக நான் அவரை காண்கிறேன். ' (ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் வெளீயீடு) ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் வெறுப்பைத் துணெ¢டும் இவ்வார்த்தைகளுக்கும் நாங்கள் நேசிக்கும் இயேசு (அவருக்கு அமைதி உண்டாகட்டும்) வின் போதனைகளுக்கும் தொடர்பில்லை என நான் அறிவேன். ஆனால் எந்த மதமும் மனிதனின் தவறான பயன்பாட்டுக்கு விதிவிலக்கல்ல என்பதனை இது காட்டுகிறது . இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் உலகின் அனைத்து மதங்களும் அமைதியுடன் வாழ முடியும். அதற்கு உண்மையான மத நம்பிக்கையாளர்கள் தங்களுள் இருக்கும் சில வெறியர்களை சகிக்கும் போக்கை கைவிட வேண்டும். நம்மிடம் இருந்து வேறுபடும் மக்களின் நற்குணத்தை நிராகரிப்பவர்களை நாம் சகிக்ககூடாது. நான் ஒரு முஸ்லீம் எனவே இஸ்லாமை அறிவேன். அதேசமயம் நாம் பயின்ற பிராட்டஸ்டண்ட் பள்ளியிலிருந்தும் மேலும் என் நண்பர்கள் உறவினர்களிடமிருந்தும் நான் யூத கிறிஸ்தவ சமயங்களை அறிந்தேன். எனவே உசாமா பின்லேடனும் ஸ்பென்ஸரும் கருதும் வேறுபாட்டைக் காட்டிலும் நம் அனைவரிடமும் அதிகமான பொதுமை இருப்பதை நான் அறிந்துள்ளேன். தீவிரவாதத்தை பொறுத்தவரையில் அது ஒரு வளரும் அபாயம். மேற்கத்திய நாடுகளுக்கென்றில்லை உலகமனைத்திற்குமே அது ஒரு அபாயம் தான். அந்த அபாயம் மதத்தீவிரவாதம் தலை துகெ¢குவதுதான். இந்தியாவில் ஹாந்து தீவிரவாதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்ரேலில் யூத தீவிரவாதம், செர்பியா ஏன் அமெரிக்காவிலும் கூட கிறிஸ்தவ தீவிரவாதம். ஐநாவில் டிசம்பர் 1999 இல் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. 23 பக்க ஐநா அறிக்கை தெரிவிப்பதென்ன ? எந்த மதமும் தீவிரவாதத்திற்கு விதி விலக்கல்ல. மேலும் அந்த அறிக்கை இந்த மத தீவிரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமுதாய பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கிறது. குறிப்பாக அந்த அறிக்கை கூறுகிறது, ' இஸ்லாமை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் சிறு எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளையும், இஸ்லாமை மார்க்கமாக பின்பற்றி வரும்
அமைதி, மதச் சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடற்ற தன்மையுடன் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது அவசியம். ' கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளுக்கு கிறிஸ்தவம் பொறுப்பினை ஏற்காதது போல் இஸ்லாமும் சில தனிமனிதர்களின் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளை சில மில்லியன் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு நடத்தி ஆதரித்திருந்தும் கூட.

இபின் வாராக்: எல்லா மதத்தீவிரவாதங்களும் ஒரே தன்மை கொண்டவைதான். அவை சமுதாய பொருளாதார காரணிகளால் வளர்ந்து வலு பெற்று வருவதும் உண்மைதான். கிறிஸ்தவ ஹாந்து யூத தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவை ஒரு நாடு சார்ந்தவை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமோ உலகப்பேரரசு கனவு கொண்டது.
உலகம் முழுவதும் ஒற்றை இறைச்சட்டத்தின் கீழ் ஷரியத்தின் கீழ் வரவேண்டும் எனும் நோக்கம் கொண்டது. யூதர்களும் ஹாந்துக்களும் மதம் மாற்ற நோக்கங்கள் கொண்டவர்களல்ல. கிறிஸ்தவர்கள் மதம் பரப்ப சர்வ தேச பயங்கரவாதத்தை கருவியாக்குவதில்லை.மதம் சார்ந்த வன்முறைக்கு ஏக இறைவணக்கத்தை வலியுறுத்தும் மதங்களே பெரும் காரணமாக இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் போல இஸ்லாம் தன்னை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி கொள்ளவில்லை. இரண்டாவதாக வன்முறை இஸ்லாமின் தன்னியல்பில் உள்ள ஒன்று. முகமது நடத்திய போர்கள், குர்ரானில் உறைந்திருக்கும் வாளின் சுராக்கள் இவை அனைத்திலும் அவ்வன்முறை உள்ளது. ஒரு கிறிஸ்தவன் செய்யும் வன்முறை ஏசுவின் மறு கன்னத்தை காட்ட சொன்ன வார்த்தைகளை மீறி செய்யும் வன்முறை. ஆனால் ஒரு இஸ்லாமியனின் வன்முறைக்கு குர்ரான், ஹதீஸ் மற்றும் மதக்குருக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. 1992 இல் இருந்து 1,50,000 மக்களை அல்ஜீரியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் என்ன தொடர்பு ? அல்லது அதற்கும் வறுமைக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாம் அரசியலுக்காக பயன்படுகிறதா ? இல்லை அரசியல், அரசியலற்றது என்கிற பகுப்புக்கள் எல்லாம் இஸ்லாம் அறியாதவை. இஸ்லாம் வாழ்க்கை முழுவதற்கும் ஆணைகள் கொண்டதோர் மார்க்கம்.
முதல் நாள் கருத்தரங்கின் மீதிப்பகுதி அடுத்த வாரம்

நன்றி: www.frontpagemagazine.com
***
மொழிபெயர்ப்பாளர் திண்ணைக்குழுவை சார்ந்தவர் அல்ல. வேண்டுகோளினால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை.

No comments: