Tuesday 4 September, 2007

பழைய திண்ணை கட்டுரை - முகமதிய தீவிரவாதம் - பகுதி-2

கூகிளிட்டு தேடிய கட்டுரை இது.


Sunday April 6, 2003
இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
ஒரு விவாத கருத்தரங்கு
அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான கரம் கிடையாது. எந்த மதமும் இல்லாத ஒரு உலகம் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் ஒழிந்து போவது அல்ல. மதச் சார்பற்ற மானுடவாதிகளும் இறை எதிர்ப்பாளர்களும் தத்துவார்த்த அடிப்படையில் சமயத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் ஒரு மதத்தை விட்டுவிட்டு ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது என்பது ஒன்று மதவெறி அல்லது குறுகிய கண்ணோட்டம் அல்லது இரண்டுமே.தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தில் மதச்சார்பற்று இருப்பவர்கள் என்றுமே எனக்கு வியப்பளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதம் சகிக்க முடியாததாகவும் மற்றொன்று சகிக்க முடிந்ததாகவும் உள்ளது. கிறிஸ்தவத்தின் வரலாற்றை பொறுத்தவரையில்: கடந்த நூற்றாண்டில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கிலான மக்கள் இஸ்லாத்தால் கொல்லப்படவில்லை. கிறிஸ்தவ மேற்கத்திய அரசுகளாலேயே கொல்லப்பட்டனர். கிறிஸ்தவம் அமைதியின் மதம் என்பது அமெரிக்க அரசிலேயே பலராலும் மறுக்கப்படும்.. ஜெரி பால்வெல் எவரையும் கொல்லவில்லையாயிருக்கலாம் (ஆனால் கருகலைப்பு மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட பல அமைதியற்ற ஆர்பாட்டங்களை அவர் தூண்டியிருக்கலாம்.) ஆனால் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொன்றிருக்கின்றனர்.


வராக்: திரு.அபுஹாலில் என் 'நான் ஏன் முஸ்லீம் அல்ல ' எனும் நூலை படிக்கவேண்டும். நான் அனைத்து மதங்களை குறித்தும் கண்டிக்கும் போக்கையே எடுத்துள்ளேன். எனவேதான் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு நூல்களைப் போல என் நூல் சிறந்த விற்பனை நூல் ஆகவில்லை. நிறுவன சமயத்தையும் அரசையும் முழுமையாக பிரிப்பதை தீவிரமாக ஆதரிக்கும் மதச்சார்பற்ற மானுடவாதியே நான். கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொலைகளை கிறிஸ்துவின் போதனைகளுக்கு புறம்பாக புரிந்துள்ளனர்.
ஆனால் முஸ்லீம்கள் ஜிகாத் என்கிற பேரில் நடத்தும் கொலைகளுக்கு குர்ரான், ஹாடித் மற்றும் சுன்னா ஆகியவற்றில் போதுமான அளவு நியாயப்படுத்துதல் உள்ளது.
இச்சமயத்தில் திரு அபுஹாலின் வாதத்தன்மை ஆதிக்கத்தன்மையும் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவமானப்படுத்தும் விதமாகவே தன்வாதங்களை வைப்பதாக உள்ளது. மேலும் என் நெருங்கிய குடும்பத்தினர் அனைவருமே முஸ்லீம்களே. என்நூலின் முகவுரையிலேயே இதனை கூறியுள்ளேன். என் உடன் பிறந்த சகோதரனைப் போல ஒரு உயிரை கனவில் கூட துன்புறுத்த துணியாத ஒரு மனிதரை நான் கண்டதில்லை. எனவே எல்லா முஸ்லீம்களும் கொலைவெறியர்கள் என நான் கூறவில்லை. 9/11 துயரச் சம்பவத்திற்கு பின் நான் எழுதிய கட்டுரையில் (காண்க WWW.SECULARISM.ORG) எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு
அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.முஸ்லீம்களிடையே அமைதிவாதிகள் இருந்தாலும் இஸ்லாம் சமரசப் போக்குடையதல்ல. இஸ்லாமுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இடையேயான வேறுபாடு தரத்தினுடையதன்று அளவினுடையதே.

ஸ்பென்ஸர்: முஸ்லீம் வெறியர்கள் இஸ்லாமை விமர்சித்த முஸ்லீமான ரஷித் கலிஃபாவினை அரிசோனாவில் கொன்றது 1990 இல். எனவே இபின் வராக் தான் விரோதித்திருப்பது யாரை என நன்றாகவே அறிவார். எல்லா மதங்களிலும் மதவெறி சமமான தன்மையுடையது என்பது மடத்தனமானது.பால்வெல்லை கொலையுடன் இணைக்க உங்கள் கற்பனையை எவ்வளவுக்கு ஓடவிட வேண்டும் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகளும் கொலையும் இணைவது எத்தனை எளிதான விஷயம். ஏனென்றால் இஸ்லாமின் மரபுப் போதனைகளிலேயே போரும் வன்முறையும் உள்ளடங்கி உள்ளன. ஜிகாத் குறித்த வரலாற்று பெரும்பான்மை பார்வை ஹன்பலி மெளலானாவான இபின் தாய்மியாவால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி பார்வையினை ஏற்றுக்கொள்ளும் இவர் கூறுகிறார், 'நீதிக்குட்பட்ட போர் என்பது ஜிகாத்தான், ஏனெனில் ஏக இறைவனின் மதமே அதன் நோக்கமாகும். இறைவனின் வார்த்தையே அதன் முக்கிய விஷயமாகும்.இந்த நோக்கத்தின் பாதையில் நிற்போர் அனைவருடனும் போராட வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமினுடையவும் கடமையாகும்.. நம்மோடு போராட முடியாத பலஹீனர்கள் நமக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை கொல்லப்படவேண்டியதில்லை. ' இது உண்மையில் முஸ்லீம், புகாரி மற்றும் அபு தாவுத் ஆகியவற்றில் இருக்கும் முகமதுவின் ஹாடித்தின் விரிவான விளக்கமே, 'அல்லாவைத்தவிர வேறு இறைவன் யாருமில்லை மற்றும் நானே அல்லாவின் தூதர் என்பதை மக்கள் ஏற்பது வரை நான் போராட கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கை தெரிவிப்பவர்களின் இரத்தம் மற்றும் உடமைகள் என்பெயரால் பாதுகாப்பளிக்கப்படும். ' இத்தகையதோர் கோட்பாடோ அல்லது இதற்கு இணையான ஒன்றோ கிறிஸ்தவத்திலோ அல்லது இஸ்லாமைத் தவிர மற்ற மதத்திலோ கிடையாது.
அய்லோஷ்:இஸ்லாம் அமைதி விரும்பி மதமல்ல. இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு தங்களையும் மானுடகுலம் முழுவதையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக பாதுகாக்க
போராட வேண்டுமென விதிக்கிறது. இந்த நியாய போர்கூட கட்டுப்பாடான வரைமுறைகளுக்கு உட்பட்டது. குர்ரான் கூறுகிறது: 'உங்களுக்கு எதிராக போராடுவோருக்கு எதிராக இறைவனுக்காக போராடுங்கள் ஆனால் ஆக்ரமிக்காதீர்கள் ஏனெனில் இறைவன் ஆக்ரமிப்பாளர்களை அன்பு செய்வதில்லை ' (2:190) 'ஓ நம்பிக்கையாளர்களே!இறைவனுக்காக திடமாயிருங்கள்; நியாயத்தின் சாட்சியாயிருங்கள். ஒரு மக்களிடமான வெறுப்பு உங்களை நியாயமற்றவர்களாக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். நியாயவான்களாயிருங்கள். அதுவே நன்மைக்கு அருகாமையிலிருக்கிறது. மேலும் இறை அச்சத்துடனிருங்கள்; ஏனெனில் நீங்கள் செயவதனைத்தையும் இறைவன் அறிந்திருக்கிறான். ' (5:8) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பொறுத்தவரையில் இஸ்லாம் அவர்களை 'நூலின் மக்கள் ' என தனி அந்தஸ்து அளிக்கிறது. ஏனெனில் நாம் அனைவருமே ஆபிரகாமின் கடவுளாகிய ஒரே கடவுளை வழிபடுபவர்கள். மேலும் ஒரே இறைதூதர்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் மத்திய இழக்கில் 14 நூற்றாண்டுகளுக்கு பின் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கின்றனர். இச்சகோதரத்துவத்துக்கு எதிரான சிற்சில சம்பவங்கள் நம் அனைவரையுமே சமமாக பாதிப்பவை. நபிகள் நாயகம் (சல்) ஒரு கிறிஸ்தவரையும் யூதரையும் மணந்தவர், அவர் கூறினார், 'கிறிஸ்தவனையோ யூதனையோ துன்புறுத்துபவன் என்னையே துன்புறுத்துகிறான். '


அபுஹாலில்: செவ்விய கிழக்கத்தியம் எனும் இன்று அறிவுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாக்கத்தையே ஸ்பென்ஸர் நம்பியிருப்பதை பாருங்கள்.21 ஆம் நூற்றாண்டு முஸ்லீம்களை பற்றிய விவாதத்தில் பல நூற்றாண்டுகள் முற்பட்ட முக்கியத்துவமற்ற இபின் தய்மிய்யா மூலம் அவர் முயற்சிப்பதை காணலாம்.கிறிஸ்தவர்களற்றவர்களுடனான கிறிஸ்தவ அரசுகளின் வெளியுறவு கொள்கையை புனித அகஸ்தீனின் கோட்பாட்டால் விளக்க முற்பட்டால் எப்படி மடத்தனமாக இருக்கும் ? இஸ்லாமின் பழம் வரலாறு இன்றைய முஸ்லீம்களுக்கு விட ஸ்பென்ஸருக்கு முக்கியமானதாக உள்ளது போலும். மேலும் ஜிகாத்தை பொறுத்தவரையில் அது பல பொருள்களை உள்ளடக்கியது. என் அண்மை நூலில் இது குறித்து ஒரு பகுதியையே ஒதுக்கி உள்ளேன். இராணுவ விளக்கத்தை தாண்டி பல பொருட்பதம் அது. பின்லாடன் போன்ற வெறியர்களும் ஸ்பென்ஸர் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுமே அது புனித போர் மட்டுமே என பிரச்சாரம் செய்கின்றனர் என நான் அதில் விளக்கியுள்ளேன். இந்நூல் அராபியமொழியிலும் வெளியிடப்பட்டது. என் இந்த மதச்சார்பற்ற விளக்கத்திற்காக எந்த முஸ்லீம் மத வெறியனாலும் நான் கொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஸ்பென்ஸரின் 10 ஆம் நூற்றாண்டு கணக்கு படி நான் கொல்லப்பட்டுவிட்டேனா ?

வராக்கை பொறுத்தவரையில் எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் இல்லை என சொல்லும் அவரது தாராள மனதிற்கு நான் என்ன பரிசா அளிக்க முடியும் ? ஏன் ஹிட்லரின் வெளியுறவு அமைச்சர் வான் ரிபெந்த்தாராப் கூட நியூரம்பர்க் விசாரணையில் இவ்வாறுதான் அனைத்து யூதர்களையும் தான் வெறுக்கவில்லை என கூறினான்.

ஸ்பென்ஸர்: நான் இஸ்லாமின் தொடக்க கால வரலாறு முதல் இன்றுவரை பல்வேறு அதிகார பூர்வ ஜிகாத் குறித்த விளக்கங்களை முன்வைக்க முடியும். ஆனால் அபு காலில் அவை எல்லாம் இஸ்லாமிய பொது நீரோட்டம் சாராத விளிம்பு நிலை விளக்கங்கள் என ஒதுக்கிவிட கூடும். உண்மையில் ஆசாத், இன்றும் புனித அகஸ்தினை படிக்கும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதைப்போலவே தயிமியாவை பின்பற்றும் வன்முறை ஜிகாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நம்பிக்கையற்றோருக்கு எதிராக புனிதப்போர் தொடுப்பதே ஜிகாத் என கூறும் எஸ்.கே.மாலிக்கின் நூல் பாகிஸ்தானில் 1979 இல் வெளியிடப்பட்டது.

பாகிஸ்தானிய அதிபர் ஜியா வுல் ஹக் ஜிகாத் ஒன்றேரொரு இஸ்லாமிய நாட்டிற்கான நியாயமான போர் வழிமுறை என்றார் . ஓ சரி சரி இதுவும் ஒரு விளிம்பு நிலை கண்ணோட்டம்தான். ஜியா வெறும் அதிபர்தான். ஜிகாத் எனும் பதத்திற்கு ராணுவரீதியான போர் என்பதற்கு அப்பால் பல பொருள்கள் உள்ளன என்பது உண்மையானதுதான். ஆனால் ஜிகாத் ராணுவரீதியான போருக்கான பதமே அல்ல என கூறினால் நீங்கள் மக்களை இஸ்லாமிய வரலாற்றின் பெரும் பகுதியை குறித்தும் இன்றைய சூழலை குறித்தும் ஏமாற்றுகிறீர்கள்.

அய்லோஷ்: எந்த மதத்தையும் அதன் புனித நூலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மேற்கோள்கள் மூலம் மதிப்பிடக்கூடாது. எந்த புனித நூலிலும் பயங்கரவாதத்தை
நியாயப்படுத்தும் வாசகங்களை பயங்கரவாதிகள் தேடி எடுத்துக்கொள்ள இயலும். உதாரணமாக பைபிள் வசனங்கள் எவ்விதமாக சிலுவைப்போர்களை, கிழக்கத்திய கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் கொல்லவதை, புனித இன்க்விசஷன்களை, கறுப்பின மக்களினை அடிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை வெட்டிக்கொல்லுதலை, நாஸி போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தலை, ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களும் புரோட்டஸ்டண்ட்டுகளும் சுழற்சி முறையில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தலை,

தென்னாப்பிரிக்காவில் இனவேற்றுமையை, கருகலைப்பு மருத்துவமனைகளை வெடிகுண்டு வைத்து தகர்த்தலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டதென பாருங்கள். இவை எல்லாமே பொய்யாக இறைவனின் பெயரால் அல்லது ஏசுவின் பெயரால் நடத்தப்பட்டன.

'நான் சமாதானத்தை கொண்டுவர வந்தேன் என எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல போர்வாளையே கொண்டு வந்தேன் ' (மத்தேயு 10:34)

'வயதானவர்கள், இளைஞர்கள், பணிப்பெண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரையும் கொல்லுங்கள் ' (எசேக்கியேல் 9:6)

'உங்களிடமிருக்கும் ஆண் பெண் அடிமைகளை பொறுத்தவரையில்: உங்களை சுற்றியிருக்கும் தேசங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் அடிமைகளை வாங்கிக்கொள்ளுங்கள்,அந்த அடிமைகளை உங்கள் சந்ததியினர் உங்களுக்கு பின் அதனை தங்களை சொத்தாக ஏற்றுக்கொள்வார்கள் ' (லேவியாகமம் 25:44ெ46)

ஆனால் முஸ்லீம்களாகிய நாங்கள் கிறிஸ்தவத்தையும் யூத மதத்தையும் இத்தகைய வாசகங்களால் தீர்ப்பிடுவதில்லை, மாறாக இறைவாக்கினரான மோசஸ் மற்றும் ஏசு (அவர்கள் மீது அமைதி நிலவுவதாக) ஆகியோரின் செய்தின் முழுமையான அமைதியின் மீதான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே முன்வைக்கிறோம். இஸ்லாமின் செய்தியின் இவ்வாறே அதன் 1.3 பில்லியன் நம்பிக்கையாளர்களால் பின்பற்றப்படும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றால் மதிப்பிட பட வேண்டும். எனவே வாசகர்களை முதலில் இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களால் ஏற்பட்ட முன்பார்வைகளற்று
குர்ரானை முழுமையாக வாசிக்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

வாராக்: பைபிள் கடவுளின் நேரடி வார்த்தை என நம்பும் கிறிஸ்தவர்கள் ஒரு சிறு கூட்டமே. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் குர்ரானை இறைவனின் நேரடி வார்த்தையாக ஏற்கின்றனர். பல கிறிஸ்தவர்களுக்கு பல பண்பாடற்ற வசனங்களை முழுமையாக மறுப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது ஆனால் ஒரு முஸ்லீம் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் அத்தகைய வசனங்களை குர்ராருஷ் பல நூறு காட்டலாம்.

மேலும் குர்ரானே இஸ்லாமிய சட்டமான ஷரியத்தின் அடிப்படை, எனவே அதுவே பண்பாடற்ற தண்டனைகள் (கை,கால்களை ஊனப்படுத்துதல் போன்றவை), பெண்களுக்கான கீழான நிலை (ஆண்கள் அவர்களை சட்ட பூர்வமாக அடிக்க முடியும் போன்றவை), தீவிர யூத வெறுப்பு, முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான வெறுப்பு, மற்றும் இராணுவ பொருளிலான ஜிகாத் ( 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ') ஆகியவற்றின் மூலமாக விளங்குகிறது. ஜிகாத்தின் இராணுவ அடிப்படையிலான விளக்கமும் நடைமுறையும் செவ்விய முஸ்லீம் மறையியலாளர்களிடமிருந்தே நமக்கு வந்துள்ளன. உதாரணமாக இபின் தமியா, அவ்வெரோஸ், இபின் கால்துன் ஆகியோர் போன்ற கற்றறிந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏதோ குர்ரானால் புனித இரத்தம் சிந்தும் ஜிகாத்தை நியாயப்படுத்தும் விளிம்பில் உள்ள கூட்டம் அல்ல.சகிப்புத்தன்மையை போதிக்கும் மூன்று வசனங்கள் குர்ரானில் இருந்த போதிலும் அவை முஸ்லீம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லும் வாளின் வசனங்களால் மறுக்கப்பட்டு பின் தள்ளப்பட்டுவிட்டன.

இறுதியாக நான் ஒரு முஸ்லீமாக குர்ரானை கற்ற போது அதன் பண்பாடற்ற தன்மையை உணர்ந்ததாலேதான் நான் முஸ்லீமாக இன்று இல்லை.

அபுஹாலில்: நீங்கள் வரும் முடிவு உங்களுக்கு நன்மையை தரட்டும். ஆனால் நீங்களும் சரி ஸ்பென்ஸரும் சரி (உங்கள் இருவர் நூலையும் நான் படித்திருக்கிறேன்) யூத வெறுப்பாளர்கள் யூதர்களை நடத்தியது போன்றே முஸ்லீம்களை நடத்துகிறீர்கள். நீங்கள் முஸ்லீம்கள் ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட மக்கள் என கருதுகிறீர்கள். முஸ்லீம்கள் எல்லோருமே குர்ரானை கடவுளின் வார்த்தை என நம்பி செயல்படுவதாக கூறுவது மடத்தனமானது. அவ்வாறு நீங்கள் நம்பினால் ஒவ்வொரு முஸ்லீமும் இப்போது கொல்வதற்கு ஒரு நம்பிக்கையற்றவன் கிடைப்பானா என தேடித்திரிவதாகவும் ஒவ்வொரு முஸ்லீமும் தன் மனைவியை (அன் நிசா சுராவின் வரிகளின் அடிப்படியில்) அடிப்பதாகவும் எண்ணவேண்டும் . உண்மையில் எல்லா சமயங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் தங்கள் புனித நூல்களின் வரிகளுக்கு, அதை அவர்கள் கடவுளின் வார்த்தைகளாக மதிக்கிறார்களோ அல்லவோ, மிகுந்த நெகிழ்ச்சியான முறையில்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். குர்ரான் முத் 'தா எனும் தற்காலிக திருமணத்தை அனுமதிக்கிறது. ஆனால் முகமது நபியின் மரணத்திற்கு சில வருடங்களுக்கே பின் 'சன்னி ' முஸ்லீம்கள் அதனை தடை செய்தார்கள். இந்த மூன்று புனித மதங்களிலும் இருக்கும் சர்ச்சைக்குரிய, சகிப்புத்தன்மையற்ற வரிகளை நம்புபவர்கள் வன்முறைவாத வெறியர்கள்தான். அவர்களைதான் ஸ்பென்ஸரும் வாராக்கும் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறிவருகின்றனர்.

ஸ்பென்ஸர்: ஆசாத், நீங்கள் வாசித்தறிதல் குறித்து வகுப்புக்களுக்கு போக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நான் ஒரு போதும் வன்முறைவாத முஸ்லீம் வெறியர்கள்தான் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் குர்ரானில் காணப்படும் தத்துவங்கள் இராணுவத்தன்மை கொண்ட கொலைவெறிக்கு ஒருவரை கொண்டு செல்வதாகவே உள்ளன. நீங்கள் கூட இதை ஏறக்குறைய ஏற்றுக் கொள்வது போல படுகிறது. இவ்வுண்மை எதிர்கொள்ளப்பட்டு குர்ரானும் சன்னாவும் மறு மதிப்பீடு செய்யப்படும்வரை பெருமளவில், ஒரு சிறிய அளவில் அல்ல, மத வெறியாலான வன்முறை இஸ்லாமின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதனை நீங்கள் நீக்க முடிந்தால் நான் பெ¢ரு மகிழ்ச்சி அடைந்து உங்களை பாராட்டுவேன். ஆனால் உங்களால் அது முடியுமென எனக்கு தோன்றவில்லை. எனவே குர்ரானின், 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ' (சுரா 9:5) எனும் வசனத்திற்கும் தற்போது மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் வசனங்களுக்குமான வேறுபாடென்னவென்றால்,அவை அங்குமிங்குமாக பொறுக்கி எடுக்கப்பட்டவை. ஆனால் குர்ரானிலோ அது அடிப்படையானது. மேலும் மரபிலும் இறையியலிலும் அது உறைந்துள்ளது.

டாக்டர்.முகமது முஷின் கான் ஷாகித் புகாரி எனும் ஹாடித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார், 'முதலில் போராடுதல் விலக்கப்பட்டிருந்தது; பின்னர் அது அனுமதிக்கப்பட்டது; பின்னர் அது கடமையாக்கப்பட்டது. '. எஸ்.கே மாலிக் 'The Qur 'anic Concept of War ' எனும் நூலில் விளக்குகிறார், 'அல்லா முஸ்லீம்களுக்கு புனிதப்போரை இறைக்கடமையாக செயலாக்கும்படியாக கட்டளை அளித்துள்ளார். ' சன்னி இஸ்லாமிய மரபின் நான்கு முக்கிய நீதியியல் மரபுகளாகிய ஷாஃபி, மாலிகி, ஹனாஃபி,ஹன்பலி ஆகிய நான்குமே, ஜிகாத் குறித்து விரிவாக விவரிக்கின்றன, வன்முறைக்கு அனுமதி அளிக்கின்றன. இபின் கல்துன் (1406) கூறினார், 'முஸ்லீம் சமுதாயத்தில் புனித போர் ஒரு இறைக்கடமையாகும். இஸ்லாமின் உலகளாவிய பணிநோக்கு அனைவரையும் புரியவைத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ முஸ்லீம் ஆக்குவதாகும். மற்ற மதத்தினருக்கு ஒரு உலகளாவிய பணிநோக்கு இன்மையால் புனிதப்போர் எனும் தத்துவமும் இல்லை...இஸ்லாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செய்வது என்பது அதன் கடமையாகும் '

இந்த முஸ்லீம்கள் எல்லாம், 'இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களா ' ? இஸ்லாத்திற்கு வன்முறையை இறையியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளது. நவீன காலத்திலும் முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் செய்யும் வன்முறைகளை நியாயப்படுத்த அந்த மரபு துணைபோகிறது. கிறிஸ்தவத்திற்கு அத்தகையதோர் மரபு இல்லை.

அபுஹாலில்: ஸ்பென்ஸரின் அறியாமை எந்த அளவு இருக்கிறதென்றால், ஒரு சாதாரண முஸ்லீம் அறிந்திராத சிலருக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய பார்வைக்குமான வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை. ஸ்பென்ஸரை நான் அதிர்ச்சி அடைய செய்கிறேன். முஸ்லீம்கள் தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு குர்ரான் வசனத்தை தேடிப்பிடித்து அதன் படி நடப்பதில்லை...

[தொடர்கிறது]
நன்றி: www.frontpagemagazine.com

No comments: