Monday, 28 July 2008

மறுபடியும் கோரமுகம்காட்டிய "முகமதிய" தீவிரவாதம்

மறுபடியும் குண்டுகள் வெடித்தன.... ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் பலரும் மாண்டொழிந்தனர்... போலீசாரின் தீவிரமான‌ தேடுதல்கள் தொடரும்... முகமதியர்கள் பலரும் கைதுசெய்யப்படுவர்... கைதுகளுக்கு எதிராக இடதுசாரிகளிடமிருந்து கண்டனங்கள் பாயும்... கைதான தீவிரவாதிகளுக்ளின் விடுதலைக்காக பல்வேறு திசைகளுலிருந்தும் உதவிகள் பாய்ந்து வரும்... குண்டுவெடிப்புக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று மதசார்பறோர் கட்டுரைகள் எழுதுவர்... குண்டுவைப்பது முகமதியத்துக்கு எதிரானது, முகமதியர்களுக்கு "குண்டு" என்பதன் ஸ்பெல்லிங்கே தெரியாது என்று குரானிலிருந்தே மேர்கோள்கள் அடுக்கப்பட்டு இணைய முல்லாக்களால் கட்டுரைகள் எழுதப்படும்...... இமாம்கள் ஃபத்வாக்கள் விடுப்பதை தற்காலிகமாக மறந்துபோவர்...... குண்டுவெடிப்பை, முகமதியர்களாலும், இடதுசாரிகளாலும், போலிபதசார்பற்ற அரசியல்வாதிகளாலும், பல்லாண்டுகளுக்கு முன்னான குஜராத் நிகள்வுகளின் தொடர்சியாக பேசப்படும்..... குண்டுவைத்தவனையும் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களையும் ஒப்பிட்டு காங்கிரஸ் மந்திரியால் பேசப்படும்.... கைதுசெய்யப்பட்ட முகமதியர் அனைவரும் விடுவிக்கப்படுவர்.... விடுதலையான முகமதியர் அனைவரும், புத்துணர்வுடன், புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு அடுத்த ஜிகாத்துக்கு ஆயத்தமாவர்..... கொலையுண்ட அந்த அப்பாவி மக்களும் அவர்தம் குடும்பத்தாரும் மறக்கப்பட்டு, அடுத்த குண்டுவெடுப்பு நிகழும்வரை அன்றாட லெளகீகங்களில் லயித்திருப்போம்....

***தின‌ம‌ணி த‌லைய‌ங்க‌ம் Monday July 28 2008 ***

பெங்களூரு, ஆமதாபாத் என்று தீபாவளி சரவெடிகள்போலத் தொடர் குண்டுவெடிப்புகள், இந்தியாவையே உலுக்கி இருக்கின்றன. உயிர்ச்சேதம், காயம் என்று பல அப்பாவிப் பொதுமக்கள் எழுப்பும் ஓலக்குரலில் உலகமே அதிர்ந்து போயிருக்கிறது. உலகின் ஏனைய பகுதிகளில் இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்து வரும் வேளையில், இந்தியாவில் இவை அதிகரித்து வருவது ஏன் என்பதற்கும், இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த பல தீவிரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது ஏன் என்பதற்கும் பதில் காண வேண்டும்.
இப்போது இந்தியாவின் எந்த மாநிலமும், எந்த நகரமும் இந்தத் தீவிரவாதிகளின் இலக்காக முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் முக்கியமான ஆராய்ச்சி நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றைத் தக்காண பீடபூமியில் அமைக்க முற்பட்டதன் காரணம், மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பகுதி, அன்னியர்களின் தாக்குதலுக்கு அவ்வளவு எளிதில் இலக்காகிவிடாது என்பதால்தான். இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளால் அந்த நம்பிக்கையையும் தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள் தீவிரவாதிகள்.
கோவையில் தொடங்கி காஷ்மீர்வரை அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாக வெடித்துக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகள் ஒருபுறம் இருக்க, நமது பாதுகாப்பு அமைப்புகள் ஏன் வலுப்படுத்தப்படவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும்தான் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகின. ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர்களால் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ந்த கண்காணிப்புகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. உலகத் தரம் பற்றிப் பேசும் நாம், அத்தகைய முயற்சியைக்கூடச் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
நம்மிடம் போதிய காவல்துறையினர் கிடையாது. தரமான காவல்துறை, பலமான பாதுகாப்பு அமைப்பு, கூடுதல் காவலர்களும் அவர்களுக்கு நவீன ஆயுதங்களும் வசதிகளும், விலைபோகாத அளவுக்குச் சம்பளமும் மரியாதையும் இவையெல்லாம் இந்தியாவின் அடிப்படைத் தேவை. ஒவ்வொரு நகரமும் 24 மணிநேரமும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதை நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும். அதற்கான முயற்சியில் மத்திய உள்துறை ஈடுபடுகிறதா என்பதுகூட சந்தேகமாக இருக்கிறது.
அமெரிக்காவுடனான நமது நெருக்கம்கூட இந்த அதிகரித்த தீவிரவாதத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தகுந்த பாதுகாப்பு அமைப்பு அமெரிக்காவில் செயல்படுவதால், அமெரிக்காவின் மீதுள்ள கோபத்தை அப்பாவி இந்தியர்கள்மீது காட்டி இந்தத் தீவிரவாதிகள் தங்களது கோபத்தைத் தணித்துக் கொள்கிறார்களோ என்னவோ?
இஸ்லாமின் பெயரால் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்களும் இதற்குக் காரணமாக இருப்பதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்களை சராசரி இந்திய இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைத்துப் பார்த்து, தப்பிக்க விடுவது என்பது முட்டாள்தனம். அதை எந்த இந்திய இஸ்லாமியரும் ஆதரிக்கவும் மாட்டார்கள். தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டுமே தவிர மதவாதிகளாகப் பார்க்க முடியாது. வெடிக்கும் குண்டுக்கு இந்து முஸ்லிம் வேற்றுமை எல்லாம் கிடையாது.
கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்களது ஊடுருவலை மேற்கு வங்க அரசும், அசாம் அரசும் கண்களை மூடிக்கொண்டு அனுமதித்திருக்கின்றன. அந்த அகதிகள் இப்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர்கள்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவுக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும் உதவி வருகின்றனர் என்று நாடு தழுவிய குற்றச்சாட்டு நிலவுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தால்கூடக் காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறோம். இந்த வங்கதேச அகதிகளின் பட்டியல் இருக்கிறதா, அவர்களைக் கண்காணிக்கும் முயற்சியாவது இருக்கிறதா, மேலும் அவர்கள் ஊடுருவாமல் தடுக்கவாவது செய்கிறோமா என்றால் இல்லை. அது ஏன்?
உலகமயம், சர்வதேசத் தரம் என்று பேசும் இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் சர்வதேசத் தரமுள்ள பாதுகாப்பு அமைப்பையும் சட்டங்களையும் உருவாக்கட்டும். அதனால் முற்றிலுமாகத் தீவிரவாதம் தடுக்கப்பட முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், நாம் கண்டுபிடிக்கப்படுவோம், தண்டிக்கப்படுவோம் என்கிற அச்சமாவது தீவிரவாதிகளுக்கு ஏற்படும். இப்போது அரசுதான் தீவிரவாதிகளைப் பார்த்து பயப்படுவதுபோல இருக்கிறது.
இத்தனை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகும், உயிர்ச்சேதங்களுக்குப் பிறகும் கடுமையான சட்டங்கள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசு முற்படாமல் இருப்பது வெட்கக் கேடு!

No comments: