Monday 28 July, 2008

ஏமாற்றுக்காரர், மூளைக்கோளாறு, மனநோயாளி...

இவ்வார "திண்ணை"யில் வி.எ.மேனன் எழுதிய‌ ஆங்கில‌மூல‌த்தை தமிழாக்கம் செய்து தமிழநம்பி எழுதிய "மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் - ஆபிரகாம் தொ. கோவூர்" என்ற‌ க‌ட்டுரையொன்று பிர‌சுர‌மாகியிருக்கிற‌து.

ஆபிரகாம் தொ. கோவூர் உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளராகவும் மனநிலை மருத்துவருமாகவும் அறியப்பட்டவர். ஆவி மற்றும் ஆன்மா) குறித்து மிக விரிவாக‌ ஆராய்ந்து அமெரிக்க‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌மொன்றில் முனைவர் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்.

"ஆவிகளுடன் தொடர்புகொண்டு ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்" என்கிற‌து இந்த‌த‌க்க‌ட்டுரை.
ஏனோ "முக‌ம‌திய‌ம்" ஞாப‌க‌த்துக்கு வ‌ந்து போன‌து...

நேசக்குமார் தமிழாக்கம் செய்து சிஃபி‍யில் வெளிவந்த கட்டுடரைத்தொடரை மிண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...

No comments: