Friday 24 July, 2009

கார்கில் போர் தான் காஷ்மீர் பேச்சுக்கு வழிவகுத்தது : முஷாரஃப்

விகடன் செய்தியிது. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு புறம்பாக இந்தியாவின்மீது
படையெடுத்து, ஹிந்துஸ்தானிய மக்களின் உயிர்சேதமும் பொருள் சேதமும் விழைய காரணமான முஷ்ரஃப் எவ்வளவு தைரியமாக பேட்டி கொடுக்கிறான்.

*******************************************
கார்கில் போர் தான் காஷ்மீர் பேச்சுக்கு வழிவகுத்தது : முஷாரஃப்
இஸ்லாமாபாத், ஜுலை.24:


கார்கில் போருக்குப் பின்னர் தான் காஷ்மீர் விவகாரம் குறித்து தங்கள் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடந்த இந்தியா முன்வந்தது என்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கார்கில் போருக்கு முன்பு வரை காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபை உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளிலும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வரவில்லை.

கடந்த 1999-ல் கார்கில் போருக்கு பின்னர் தான் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வந்தது. எனவே, பாகிஸ்தானை பொறுத்தவரை கார்கில் போர் என்பது மிகப் பெரிய வெற்றியே.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பகுதியான ராவல்பிண்டி கார்ப்ஸ் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள படைகள் தான் (Force Command Northern Areas) கார்கில் போரில் ஈடுபடுத்தப்பட்டது," என்றார் முஷாரஃப்.

ஆனால் கார்கில் போரின் போது, 'காஷ்மீர் விடுதலை விரும்பிகளே கார்கில் போரில் ஈடுபட்டனர்,' என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

*******************************************

வலிமையான தலைமை பாரதநாட்டுக்கு இல்லை என்ற தைரியம்தானே கண்டநாய்களும் சூரியனைப் பார்த்து குலைக்கின்றன. ஆட்சிமாற்றத்துக்கு அண்மையில் கிடைத்த பொன்னான வாய்ப்பையும் தவறிவிட்டோம்.

பாகிஸ்தானின் நாளிதழான "டான்', தங்கள் நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் அளித்துவிட்டது என்று புதன்கிழமை செய்தி வெளியிடடுகிறது.

தன்னுடைய நாட்டில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்து சாவின் விளிம்பில் நிற்கும் இந்த நாடு, கட்டுக்கோப்பாகச் செயல்படும் பாரதத்தின் மீது பழியைப் போடுவத எத்தனை காலம்தான் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கப்போகிறோமோ ?

எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் நடந்த உச்சிமானாட்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பயங்கரவாதம் பின் தள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடிவெடுத்ததாக தினசரிகளில் செய்திகள் வருகிறது. மிகவும் திட்டவட்டமான உறுதிமொழிகள் தரவேண்டும், நம்பிக்கை ஊட்டக்கூடிய (பயங்கரவாத எதிர்ப்பு) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அப்படியிருந்தால்தான் பாகிஸ்தானுடன் ஒருங்கிணைந்த பேச்சுக்கு இந்தியா தயாராக முடியும் என்று பிரதமர் தெளிவுபடுத்திவிடவேண்டாமா ?

சுவனகன்னிகைகளைக் காட்டி முகமதிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து ஹிந்துஸ்தானத்தின்மீது முகமதிய பயங்கர வாத செயல்களை ஏவிவிடுவதே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான். இன்றய தினமணியில்...

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவமும், ரகசியப் புலனாய்வு நிறுவனமும் (ஐஎஸ்ஐ) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பாகிஸ்தானின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தாங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் தாங்களும் பங்கேற்பது அவசியம் என, அந்த இரு அமைப்புகளும் கருதுவதாக
அந்த செய்தி தெரிவிக்கிறது.

பாரதத்தைப் பொருத்தவரையில் ராணுவமும், புலனாய்வு அமைப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ராணுவமும், புலனாய்வு அமைப்புகளும் அரசுக்கு ஆலோசனை வழங்குவாதோடு நிறுத்திக்கொண்டு தாங்களாகவே முடிவு எதையும் எடுத்துச் செயல்படுத்த முயல்வதில்லை.

ஆனால், பாகிஸ்தானில் இதற்கு நேர் எதிரான நிலைமை. அன்நாட்டின் கொள்கை முடிவுகளில் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் நேரடியாகத் தலையிட்டு, தாங்கள் நினைப்பதைச் செயல்படுத்தி வருகின்றன.

இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் கவனமாக செயல்பட நமது அரசு... என்னதான் செய்யக்காத்திருக்கிறதோ ?

No comments: