இஸ்லாமிய பயங்கரவாதிகள் வைத்த குண்டுக்கு பலியான ஒரு குடும்பத்தின் கதை இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது. இதைப்போல் எத்தனை குடும்பங்களோ ?. இவ்வளவுக்கு பின்னரும், குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தபின்னரும், அந்த பன்றிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகாலத்தை குறைக்கவும் விடுதலை செய்யுமாறும் எழுதிவரும் நபர்களை நினைத்தால் பற்றிக்கொண்டு வருகிறது.
---------------------------------------------
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு... 12 Aug.2007
‘பத்து வருட சோகத்துக்கு ஆறுதல்...!’
ஆகஸ்ட் ஆறாம் தேதி...
கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் முன்பு காலையில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. காரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அன்று, முதல் தண்டனை குறித்த தீர்ப்புகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புதான்!
அன்றைய தினம் கோர்ட் நடவடிக்கைகள் குறித்து செய்தி சேகரிக்க கோர்ட்டில் குழுமியிருந்த பத்திரிகை யாளர்களை காலையில் மட்டும் சேம்பருக்குள் அனுமதிக்கவில்லை.
கடந்த ஒன்றாம் தேதி சர்புதீன், சிக்கந்தர் பாஷா, சபீர் அகமது, செரியன், உபைதுல் ரஹ்மான் ஆகிய ஐந்து கைதிகளுக்கான தீர்ப்பு சொல்லப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக 6&ம் தேதி நீதிபதி உத்ராபதி அறிவித்தார். அடுத்து, முக்கிய குற்றச்சாட்டான கூட்டு சதி நிரூபிக்கப்படாத 84 கைதிகள் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை துவங்கியது. அவற்றை விசாரித்த நீதிபதி, அவற்றுக்கான தீர்ப்பை ஆகஸ்ட் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்து இருவருக்கு மட்டும் ஜாமீன் அளித்தார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத மதானி உட்பட எட்டு கைதிகளை ஆகஸ்ட் 16&ம் தேதி வரச்சொல்லி இருந்தார் நீதிபதி உத்ராபதி. எனவே, அன்றைய தினத்தில் இருந்து தண்டனை பற்றிய தீர்ப்பு வழங்கப்படும் என்றுதெரிகிறது.
இந்நிலையில், நாம் ஒரு தம்பதியைத் தேடிப்போனோம். ‘ஐயோ... வெடிகுண்டு பூமியில் கலங்கிப்போன ஜூ.வி நிருபர்கள்’& என்ற தலைப்பில் 22.2.98 ஜூ.வி. இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். குண்டுவெடிப்பில் இறந்து போன தனது மகனை மடியில் கிடத்தியவாறு கதறிக் கொண்டிருந்த தாயின் படத்தை அட்டைப்படமாக தாங்கி வந்தது அந்த இதழ். அந்தத் தாயைத் தேடித்தான் நாம் போனோம்.
கோவை பெரியகடை வீதிக்கு அருகாமையில் இருக்கும் விஜயலெட்சுமி&செல்வராஜ் தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்த ராமகிருஷ்ணன் என்ற ஒன்பதாவது படிக்கும் சிறுவன் தான் குண்டு வெடிப்பில் இறந்து போனவன். கோவையை ரத்தக் காடாக்கிய அன்றைய தினத்தன்று, பெரியகடை வீதி போலீஸ் ஸ்டேஷனை தாக்குவதற்காக, தீவிரவாதிகள் அன்னாசி பழ வண்டியில் வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷ னுக்கு அருகாமையில் பாதுகாப்பு பலமாக இருக்கவே, சற்றுத்தள்ளி வண்டியை நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
அந்தப் பழவண்டி வெடித்து சிதறியபோது அதன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த ராமகிருஷ்ணனும் பலியானான்.
இந்த பத்து வருட காலமாக ராமகிருஷ்ண னின் வீட்டில் தீபாவளி, பொங்கல் என்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. குடும்பத்துக்கு தெய்வமாகிப் போன அவனது படத்துக்கு தினமும் விளக்கேற்றி கும்பிடுகின்றனர். தினமும் பையனுக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து, அதனை காகத்துக்கு உணவாக வைக்கிறார்கள்.
ராமகிருஷ்ணனின் படத்துக்கு விளக் கேற்றி கும்பிட்டுக்கொண்டிருந்த தாய் விஜயலெட்சுமி, அதனை முடித்துவிட்டு கலங்கிய கண்களோடு நம்மிடம் பேசத் துவங்கினார்.
‘‘அவன் ரொம்ப சுத்த பத்தமானவன் தம்பி. அதுவும் சனிக்கிழமைன்னா குளிச்சுட்டு கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு அதுக்குப் பிறகுதான் சாப்பிட உக்காருவான். அன்னிக்கும் சனிக்கிழமைதான். மதியம் சாப்பிட்டு விட்டு வெளியே போனவன்தான். சாயந்திரமா டமார்னு சத்தம் கேக்கவும், எலெக்ஷனுக்காக வெடி போடறாங்கனு நினைச்சுகிட்டோம். அப்புறமாத்தான், குண்டு வெடிச்சிருக்குனு சொல்லி ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில ஓடறாங்க. நானும் ஒரு கோயிலுக்குள்ள ஓடிப்போய் ஒளிஞ்சுகிட்டேன்.
அப்பதான் எங்க ஏரியாக்காரர் ஒருத்தர் ஓடி வந்து, ‘உம்பையன் குண்டு வெடிச்சு உசுருக்கு போராடிக்கிட்டு இருக்கறான்’னு சொன்னாரு. பதறிப்போய் அந்த இடத்துக்கு ஓடினேன். உசுருக்கு துடிச்சுகிட்டு இருந்த அவனுக்கு சோடா கொடுத்துக்கிட்டு இருந்தாங்க போலீஸ்காரங்க. நான் என்னோட செல்லத்தை மடியில எடுத்து வைச்சுகிட்டு கதறினேன். ‘அம்மா...’னு எதோ சொல்ல வந்தான். அந்த நிமிஷமே அவனோட உயிர் போயிடுச்சு.
அவன் செத்துப்போறதுக்கு முந்தினநாள்தான், ‘அம்மா நான் எங்க பி.டி. மாஸ்டரோட ஹாக்கி விளையாட மெட்றாசுக்குப் போறேன். அங்க போய் விளையாட்டுல ஜெயிச்சு முதல் பரிசு வாங்குவேன். என்னோட போட்டோ எல்லா பேப்பர்லேயும் வரும்’னு சொன்னான். ஆனா, அவனோட போட்டோ இப்படி பொணமா வரும்னு தெரியாம போச்சே!
பிப்ரவரி எட்டாம் தேதிதான் அவனுக்குப் பொறந்த நாள். அதுக்காக அவனுக்கு சட்டை, பேன்ட் எடுத்து வச்சிருந்தேன். அந்த டிரெஸ்ஸை எல்லாம் அப்படியே பீரோவுல எடுத்து வைச்சிருக்கேன். நான் செத்துப் போகும்போது என் பொணத்து மேல போடணும்னு சொல்லி வைச்சிருக்கேன்’’ என்றார் கண்களிர் நீர் வழிந்தோட.
ராமகிருஷ்ணன் குண்டு வெடிப்பில் இறந்து போனதை அடுத்து அவனுடைய அப்பா செல்வராஜுக்கு கோவை அரசு மருத்துவமனையில் உதவியாளர் வேலை கொடுத்து இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் குண்டு வெடிப்புக் கைதிகள் சிகிச்சைக்கு வரும்போது, அவர்களை கவனித்துக் கொள்ளும் பணியையும் பார்த்து இருக்கிறார் செல்வராஜ்.
‘‘மதானிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில வைச்சிருந்தப்ப, அவருக்கு நான்தான் மூணு மாசம் டியூட்டி பாத்தேன். சுடு தண்ணி, சாப்பாடு வாங்கி தர்றதுல ஆரம்பிச்சு அவரை பாத்ரூமுக்கு கூட்டிட்டு போறது வரைக்கும் என்னோட வேலைதான். அப்பல்லாம், இவங்கதானே என் பையன் சாவுக்கு காரணம்னு மனசு கிடந்து துடிக்கும். ‘ஏன்யா இப்படி செஞ்சீங்க’னு நாலு கேள்வி கேக்கணும்னு தோணும். இருந்தாலும், ‘இப்ப நாம டியூட்டியில இருக்கோம். இங்க சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது’னு மனசை அடக்கிக்குவேன்.
சட்டம் தன்னோட கடமையை செய்யும்னு நினைச்சுக்கிட்டு நான் என்னோட கடமையை செஞ்சேன். இப்ப சட்டம் தன்னோட கடமையை செஞ்சிருக்குது. 158 பேரு தப்பு செஞ்சிருக்காங்கனு தீர்ப்பை கேட்டப்ப, என் கண்ணு கலங்கி போச்சு. இப்பதான் எங்களுக்கு நீதி கிடைச்சிருக்குது’’ என்றார் அவர்.
அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment