Friday, 14 March 2008

வஹ்ஹாபி(களு)க்கு நேசகுமார் திண்ணையில் எழுதிய பதில்கட்டுரை

கடந்த வாரங்களில் வஹ்ஹாபி எழுதிய அபத்த கட்டுரைகளுக்கு, தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக "நீ மட்டும் ஒழுங்கா ? உங்கிட்ட இல்லாத குறையா ?..." என்ற ரீதியில் கட் & பேஸ்ட் செய்து எழுதபட்ட கடிதங்களுக்கு, விடை கிடைக்காது என்றாலும் விடாப்பிடியாக தமது கேள்விகளுக்கு பதில்தரவேண்டி நேசக்குமார் எழுதிய இவ்வார கடிதம் கீழே

-------------------------------------



Thursday March 13, 2008
வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்

நேசகுமார்

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன்

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில:

1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம்// என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வது போல எழுதிவிட்டு அடுத்த பாராவிலேயே பார்ப்பனர் என்று இன்னின்ன இடங்களில் வருகிறது, சங்கராச்சார் என்று இன்னின்ன செய்திகளில் வந்திருக்கின்றது என்று வழக்கமான வல்லடி வழக்கை முன்வைத்துள்ளார் நம் சகோதரர் வஹ்ஹாபி.

2.
இங்கே இதை சொல்கின்ற நிலையில், இன்னொன்றையும் சுட்டிக் காட்டிட வேண்டியிருக்கிறது - இந்த எனது கடிதத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும். எப்படி பார்ப்பனர் என்பது தன்னளவில் சாதாரணச் சொல்லாக இருந்து வசைச் சொல்லாக இன்று மாறிவிட்டதோ, அதே போன்று ஏராளமான சொற்கள் முன்பு சாதாரணமாகப் பிரயோகிக்கப் பட்டுவந்து பின்பு வசைச் சொல்லாக மாறிவிட்டன. 'பாண்டி' தொடங்கி 'பல்லி' வரை இந்த சொற்களெல்லாம் சாதாரணச் சொற்களே, ஆனால், இன்றைய சூழலில் அவை வசைச் சொற்களாகவே கருதப்படும். ஆனால், நான் சுட்டிக் காட்ட விழைந்தது அதுவல்ல. 'பார்ப்பனர்', 'சங்கராச்சாரி' போன்ற பதங்களை பயன்படுத்துவதை நான் ஆட்சேபிக்கவில்லை. இது போன்ற பதங்களை பயன்படுத்திக் கொண்டே தங்களை 'முகமதியர்', தங்களின் சாமியாரை/நபியை அவதூறாகப் பேசுகின்றார்கள் என்று ஓலமிடும் இரட்டை மனப்பான்மையையே நான் சுட்டிக் காட்டினேன். எனது கட்டுரையிலேயே இதை தெளிவாகவும் எழுதியிருந்தேன். பார்க்க:

//
தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும். இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.//
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html

3.
நான் எந்த விஷயத்தை சுட்டிக் காட்டிட விழைந்தேனோ, அதே விஷயத்தை தெளிவாக தனது செயல்களின் மூலம், தர்க்கங்களின் மூலம், மனோபாவத்தின் மூலம், வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களை பலர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது வஹ்ஹாபியுமே தான் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். பின்பு, அதே அளவுகோளின் அடிப்படையில் 'முகமதியன்' என்று நம் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை அழைப்பதையோ, முஹமதை (வஹ்ஹாபி அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு தூய அரபியில் சல்-புல் என்றெல்லாம் அழைப்பதைவிட்டு) பற்றி பேசுவதையொ கண்டு வஹ்ஹாபியும் ஏனைய இஸ்லாமிஸ்ட் நண்பர்களும் குமுறுவது ஏன்?

4.
இங்கே திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் நான் வஹ்ஹாபியின் எள்ளல், வசவுகள், பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் (மனப்பிறழ்வு, அரைகுறை, மந்தி, பன்றி, இன்னபிற) ஆகியவற்றின் மூல காரணத்தை, தோற்றுவாயை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது அச்சு அசலாக முகமது 1400 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய அதே யுக்தி, தர்க்கம், வசவுகள். பிறந்ததிலிருந்து தினம் தினம் கேட்டு, ஓதி, சிந்தித்து வருகின்ற வஹ்ஹாபி போன்ற சகோதரர்கள் இப்படி மாறிப்போயுள்ளதில் என்ன வியப்பிருக்கின்றது? மவுலானா மவுதூதி தனது குத்பா பிரசங்கங்களில் சொல்வார், ஒரு முஃமீனான முஸ்லீம் தொழுகை செய்வது,இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவது எல்லாமே ஜிகாதுக்கு அவரைத் தயார் படுத்திவிடும் என்று. எப்படி நன்கு படித்த, வசதியான குடும்பங்களிலிருந்து வருகின்றவர்கள் கூட பால் வார்க்கும் கையை பதம் பார்க்கும் நாகம் போல நமது சமுதாயத்துக்கெதிராக குண்டு வைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்றால் ... இப்படி மதத்தால் சிறுவயதிலிருந்து காழ்ப்பை கொட்டி வளர்க்கப் படுவதால்தான். இதை வஹ்ஹாபியின் வார்த்தைகளும் வசவுகளும் மெய்ப்பிக்கின்றன.

5.
அடிப்படையில் நான் சுட்ட வந்த விஷயத்தை கடைசியாகவாவது குறிப்பிட்டு பதிலெழுதியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. ஆனால், வழக்கம் போல நான் கேட்டதற்கு பதில் சொல்வதை விட்டு வசைகளை அள்ளி வீசுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கின்றார்:

///////...
அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது?

அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்:
"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.////////

6.
மேலே குறிப்பிட்டிருப்பது சிதைக்கப்பட்ட எனது கேள்வி தான் என்பதை ஒதுக்கிவிட்டு, கேள்விக்கு பதிலாக என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை பார்ப்போம். நான் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு 'இஸ்லாம்' இப்படித்தான் சொல்கிறது எனவே இதுவே உண்மை என்கிறார். இது தான் சராசரியான இஸ்லாமிஸ்ட் மனோபாவம், கட்டுப்படுத்தப்பட்ட மனதின் குறைபட்ட சிந்தனை. இப்படி என்றால் எந்தக் கேள்விக்குமே 'இஸ்லாம் இதைத் தான் சொல்கிறது' என்ற ஒரே வரியிலேயே பதில் சொல்லிவிடலாமே? உலகம் தட்டையா என்றால், அது தட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதில்லை, இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். மேலே நட்சத்திரம் தெரிகிறது என்றால், இல்லை மேலே கடவுள் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கிறார் - ஏனென்றால் இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாக் கேள்விகளுக்கும் விடை, தனது மதத்தின் வாக்குகளில் உள்ளது என்று சொல்லிவிட்டு , ஒரு ரோபோ போல இருந்துவிடலாம். பின்பு சிந்தனை எதற்கு, தர்க்கம் எதற்கு, விவாதம் எதற்கு, அட திண்ணையில் எழுதுவது விவாதிப்பது எல்லாமே எதற்கு?

7.
ஆனால், இந்த அடிப்படைவாதிகளின் வாதம், தர்க்கம் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது. 'எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை' என்றால், இந்த அறிவுரையைத் தானே முஹமது தன்னைச் சுற்றியிருந்தவருக்கு தந்தார்? முகமது சொன்னதைத் தானே 'அகமது' (அகமதியாக்களின் இறைத் தூதர்)சொன்னார்? பகாவுல்லாவும் இதைத்தானே சொன்னார்? முகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்ள உரிமை இருக்கும்போது, அகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? ஈசா நபியின் வழியில் வந்தவராக தம்மை முகமது அறிவித்துக் கொள்ளும்போது, ஈசா நபி, முகமமது நபி வழியில் வந்தவராக, உண்மையான இஸ்லாத்தை முன்வைப்பவராக தன்னை அகமது அறிவித்துக் கொள்வதும் சரிதானே?

8.
இஸ்லாமே தன்னது என்று அகமதிக்கள் வாதிடும்போது, வகாபிகள் வந்து இஸ்லாம் இப்படி சொல்கிறது என்று சொல்வதன் முரண் வஹ்ஹாபிக்கு புரிபடவில்லை அல்லது அதை அவர் புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அதை புரிந்து கொண்டுவிட்டால் பின்பு அவரது 'நம்பிக்கை' எனும் மண் கோட்டை கரைந்துவிடும் என்பது இதை 'ஈமான்' இல்லாமல் பார்க்கும் எந்த சுயசிந்தனையாளருக்கும் விளங்கிவிடும். ஆம், முகமது அவர்கள் தாம் இறைத்தூதர் என்பதற்கு இருக்கும் 'ஒரே வலுவான' ஆதாரம் அந்த மனிதரின் வாக்கு மட்டுமே. அந்த நம்பிக்கையை சிந்திக்காமலும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் ஏற்றுக் கொண்டு இன்றும் சிந்திக்காமல் அடிகரைந்து கொண்டிருப்பதையும் பார்க்க விரும்பாமல் மண்கோட்டையின் உப்பரிகையில் வன்முறைக் கனவுகளோடு உலவிக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகளின் தடுமாற்றங்களும் தர்க்கங்களும் இன்று உலகில் எல்லோராலும் எள்ளி நகையாடப்படுவதில் வியப்பென்ன?

வஹ்ஹாபி சொல்லியிருக்கும் அதே விஷயத்தைல் ஒரு வார்த்தையை மட்டுமே மாற்றி அஹமதிக்கள் இப்படி சொன்னால் அதற்கு வஹ்ஹாபியின் பதிலென்ன?

**"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் அஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை**

மேலே கண்டதில்

முகமதியர்களின் 'மு' வுக்குப் பதிலாகஅகமதியர்களின் 'அ' இருக்கிறது. ஒரு வார்த்தை மாற்றினால், அவர்கள் இவர்களுக்கு காபிர்களாகிறார்கள், இவர்கள் அவர்களுக்கு காபிர்களாக ஆகிறார்கள். எந்தப் பக்கம் அதிக வன்முறை இருக்கிறது, எந்தத் தரப்பு வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும், பெண்கள், பணம், அதிகாரம் போன்றவற்றின் மூலம் அதிக நபர்களை தன்னிடமிழுத்து வன்முறையின் மூலம் பிறரை 'அமைதிப் படுத்துகிறதோ' (இங்கே அமைதி என்பதற்கு அழித்தொழிப்பு என்று அர்த்தம் கொள்க), அதுவே உண்மையான, 'சத்திய மார்க்க'மாகிறது.

9.
ஆம், இதுதான் இஸ்லாத்தில் நிகழ்ந்தது. இதுவே வஹ்ஹாபியிசத்தில் நிகழ்ந்தது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அஸ்திவாரக் கொணலிலிருந்துதான், அடிப்படையே வெறும் வன்முறையையும், மூடநம்பிக்கையையும், பின்பற்றுபவர்களை சிந்திக்கவிடாமல் இருப்பதையும் நம்பி இருப்பதால்தான் தொடர்ந்து உலகெங்கும் ஜிகாதி வன்முறை இன்று கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

10.
கடைசியாக 'சனாதனக் குட்டை' என்று யார் சொன்னார்கள் என்று கூகிளிட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. ஆனால், வஹ்ஹாபி மற்ற வார்த்தைகள் என்னென்னவெல்லாம் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது. இஸ்லாமிஸ்டுகளின் தொடர்ந்த வசவுகளைப் பார்த்து வருகிற நேரத்தில் அதுவும் புனை பெயரில் பல வஹ்ஹாபிகள் ஒரே பாணியில் தொடர்ந்து எழுதிவருகிற நிலையில் இந்த வஹ்ஹாபி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம், அல்லது வேறெதாவது ஒரு வஹ்ஹாபி பயன்படுத்தியிருக்கலாம். நெருக்கித் தேடினால், யார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கூட கண்டுபிடித்துவிடலாம்தான். அதற்கு நான் முயல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை வஹ்ஹாபி தெளிவுபடுத்திவிட வேண்டும். இப்படி ஒற்றை வார்த்தையை ஒரு மத அடிப்படைவாதிகளின் கும்பலில் எந்த அடிப்படைவாதி பயன்படுத்தினார் என்று சரியாக சொல்லத் தெரியாததனால் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று முடிவு செய்துவிடலாமா என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.

11.
இந்த விவாதம் நீண்டு கொண்டே போவதால், கெடு வைக்க விருப்பமில்லாவிட்டாலும் அடுத்த வாரத்திற்குள் வஹ்ஹாபி மேலே கண்டவற்றிற்கு, என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். ஏனெனில், குறைந்த பட்சம் ஈமான் கண்ணையும் இதயத்தையும் சிந்தனையையும் மறைக்காத பலருக்கு பாரிய விழிப்புணர்வும், எதிர்காலத்தில் தமிழில் இது குறித்த படைப்புகள் பல்கிப் பெருகிடவும் இந்த விவாதங்கள் வழி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏற்கெனவே தனியாக இருந்த இந்த இஸ்லாமிய விமர்சன மரம் இன்று தோப்பாகியுள்ளது - இந்த வஹ்ஹாபி சொல்லி குதூகலித்த பெரியாரிஸ்டுகளிலிருந்து, மார்க்ஸிஸ்டுகளிலிருந்து, இந்துத்துவிஸ்டுகளிலிருந்து, கிறித்துவர்களிலிருந்து இன்று தமிழ் வலையுலகில் ஆளாளுக்கு இஸ்லாம் பற்றிய எண்ணற்ற கேள்விகளை முன்வைக்கத் துவங்கியுள்ளனர், முதன்முறையாக இந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் இஸ்லாம் குறித்த பல கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிரங்கமாக முன்வைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு 'அலிஃப் பே' வேண்டுமானால் சூஃபியிஸ நம்பிக்கைக்காரர்கள் போட்டிருக்கலாம். ஆனால், இதை பாரிய அளவில் எங்கும் பற்ற வைத்த புண்ணியம், வசவுகளையும் மிரட்டல்களையுமே நம்பி களத்தில் இறங்கிய அரை டஜன் வஹ்ஹாபிகளையே சாரும். வேகமாக வீசிய அலை கடந்து சென்றதை கற்பனையில் ஃப்ரீஸ் செய்து கடந்த காலகட்டத்திலேயே திளைத்திருக்க விரும்பும் 'தூய்மையான' இஸ்லாமிஸ்டுகள் தங்கள் காலடியில் மீண்டு செல்லும் அலையுடன் மண்ணும் கரைந்து செல்வதை அவதானிக்க முடியாவிட்டாலும், காலடி மண் மட்டுமல்ல, கோட்டையே கரைந்து கொண்டிருப்பதை வெளியிலிருந்து பார்க்கும் என்னால் அவதானிக்க முடிகிறது. பலரையும் சோம்பலிலிருந்து மீட்டு மீண்டும் மீண்டும் தமிழ் வாசக சமூகம் அறியாத பல தகவல்களை, கோணங்களை வெளிக்கொணர வைப்பதையும் எல்லாம் வல்ல இறையின் செயலாகவே நான் காண்கிறேன். ஒரு பெரிய தாழ்வுக்குப் பின்னால் மகத்தான உயர்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்ற இறையின்/இயற்கையின் விதி இங்கே செயல்படுவதையும் காண்கிறேன்.

வஹ்ஹாபி அவர்களின் பதிலை எதிர்நோக்கியபடி - மாறா அன்புடனும் நம்பிக்கையுடனும்,

நேசகுமார்.

No comments: