Friday, 29 August 2008

காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்து...

காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்த ஜடாயு மொழிபெயர்த்து எழுதிய கட்டுரை ஒன்று இவ்வார திண்ணையில் படிக்கக்கண்டேன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20808282&format=ஹ்ட்ம்ல்
நல்ல நடையில் மொழிபெயர்கப்பட்டுள்ள இக்கட்டுரை.... இணைய நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டும்... விவாதிக்கவேண்டும்.... அதிகமானோரிடம் இதன் சாராம்சங்கள் சென்றடையவேண்டும்.

ஜடாயுவிற்கு நன்றிகள் பல.

பாலா

**************** Jadayu's post below **************


Thursday August 28, 2008
காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
மொழியாக்கம்: ஜடாயு
மூலம்: தருண் விஜய்*
தேவகி மைந்தன் கண்ணனின் அவதாரத் திருநாள் (23 ஆகஸ்டு 2008) அன்று இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணன் பிறந்த நேரத்தில் அவனது பெற்றோர் சிறையில் இருந்தனர். அவர்களுக்குப் பிறக்கும் மகனால் தான் உனக்கு மரணம் வாய்க்கும் என்ற தெய்வ அசரீரியால் பயந்து கொண்டிருந்த மன்னன் கம்சன் அவர்களைச் சிறையில் அடைத்திருந்தான். தேவகிக்கும், வசுதேவருக்கும் வாழ்வில் நம்பிக்கை என எதுவும் எஞ்சியிருக்கவில்லை. உற்ற நண்பர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ அல்லது அந்த நள்ளிரவிலும் விழித்துக் கொண்டிருந்த சில மதுரா நகர மக்களிடமிருந்தோ, பிருந்தாவன வாசிகளிடமிருந்தோ எந்த உதவியும் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அத்தனை பேரும் பயத்தால் பீடிக்கப் பட்டிருந்தனர். தேவகியின் அண்ணனான கம்சனின் ஆட்சியில் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வந்தனர்.
ஆயினும், கண்ணன் பிறந்தான், வளர்ந்தான். கம்சன் அழிந்தான்; குடிமக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்புடனும் வாழத் தொடங்கினர். பாம்புகளின் பேரரசனான காளிங்கனும் கண்ணனுக்கு அடிபணிந்தான்; யமுனைக் கரைகளில் வாழும் மக்களை மதித்து வாழ அறிவுறுத்தப்பட்டான். கண்ணன் புரிந்த போர்கள் பலப்பல; ஒவ்வொரு போருக்கு முன்னும், தவறு செய்த எதிரியை நல்வழிக்குக் கொண்டுவர அவன் பெரும் முயற்சி செய்தான். ஆனால் தீமைபுரிந்து வந்த பேரரசர்கள் வழிக்கு வரவில்லை என்று தெரிந்தவுடனேயே, அந்த அரக்க குணமுடையோரின் கூட்டத்தை அவன் வேரோடு அழித்தான். அறநெறியாகிய தர்மத்தை நிலைநிறுத்தினான்.
கண்ணன் ஒப்புயர்வற்ற பேரரசனாக விளங்கினான்; கோபிகைகளின் அன்பில் திளைத்து ராசலீலை என்னும் தெய்வீக நடனத்தை நிகழ்த்தினான். அவனது தெய்வலீலைகள் பலவிதம். ஆனால் தற்போதைய சூழலில் சுதர்சன சக்கரத்தை ஏந்திய கிருஷ்ணனே நமது ஆதர்சம். அந்தச் சக்கரம் ஏந்திய கண்ணன் தான் பயங்கரவாதிகளை அழித்து, அவர்கள் பூமியில் மிச்சம் மீதியில்லாமல் துடைத்தெறிந்தான்; தர்மத்தை நிலைநாட்டினான். அவன் நம் குல முன்னோன், அவனது பாரம்பரியத்திற்குப் பாத்தியதைப் பட்டவர்கள் நாம்.
அடங்காத வேகத்துடன் தன் இலக்கை நோக்கி வீரநடை போடும் ஜம்முவில் கண்ணனின் தரிசனத்தை நான் கண்டேன்; அங்கு பாயும் தாவி நதியே யமுனையாயிற்று; கண்ணனின் தோழர்களுக்கு அது மகிழ்ச்சியுடன் வழிவிட்டது.
ஆனால், தில்லியில் அமர்ந்து கொண்டு அதிகாரப் பீடத்தையும், ஊடகங்களையும் செலுத்தும் நாம், எல்லாம் தெரிந்த நாம் (அதாவது ஊடகத்தினர்), கண்ணனின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கிறோமா?
அரக்கர்களையும், பயங்கரவாதிகளையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் அழித்தொழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் விரும்புவதை, காஷ்மீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்ற தொனியில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வழிமுறைகள் மூலம் நமக்கு என்றுமே கிடைக்கச் சாத்தியமில்லாத அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக இதைச் செய்யலாம் என்கிறோம். ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் : ஒரு கோழை முன்னிறுத்தும் சமாதான முயற்சிகளுக்கு யாரும் மரியாதை தருவதில்லை. கொடூர ஜிகாதிகள் கூட உறுதிகொண்ட, பின்வாங்காத எதிராளியின் வார்த்தைகளைத் தான் மதிப்பார்களேயன்றி பரபரப்பு செய்திகளுக்காகவும், சமாதான நல்லெண்ண எழுத்துக்கள் தரும் புகழுக்காகவும், தங்கள் தேசத்தின் மூவர்ணக் கொடியின் மானத்தைக் கூட அடகுவைத்துவிடக் கூடிய சொங்கி பத்திரிகையாளர்களின் வார்த்தைகளை மதிக்கமாட்டார்கள். அமைதி வரும் என்ற நம்பிக்கையில் முன்பு நமது தேசத்தைத் துண்டாட ஒப்புக்கொண்டோம்; ஆனால் அதற்குப் பதிலாக வந்தது என்ன? நான்கு போர்களும், அறுபதினாயிரம் இளம் படைவீரர்களின் கோர மரணமும் தான்!
இன்று ‘அமைதி’க்காக காஷ்மீரைக் கொடுக்கலாம் தான்; ஆனால் நாளை அவர்கள் ஹரியானாவையும், ஹிமாசலப் பிரதேசத்தையும், ஏன் தில்லியையும் கூடக் கேட்கப் போகிறார்கள். அப்போது என்ன செய்வது?
காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் - அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் - அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று. கற்பழிப்புக்கு இரையான பெண்ணை, அவள் இல்லாமல் தாங்கள் இருக்கமுடியாது என்று சொல்லும் கற்பழிப்பாளர்களிடமே திரும்பிப் போ என்று சொல்வது எப்படியிருக்கும் என்று உங்களையே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதைக் கவனமாகப் படியுங்கள் -
“ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்து வந்துள்ளது, இனியும் இருக்கும். அதனை தேசத்திலிருந்து பிரிக்க முயலும் அனைத்து செயல்பாடுகளும் தடுக்கப் படும். இதற்காக அனைத்து தேவையான வழிமுறைகளும் கையாளப் படும்.
தனது ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் குலைக்கும் அனைத்து சதிச் செயல்களையும் முறியடிக்கத் தேவையான உறுதியையும், சக்தியையும் இந்தியா கொண்டுள்ளது. தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அது வெளியேற வேண்டும் என இந்தியா கோருகிறது.”
1994ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி இந்தியப் பாராளுமன்றம் ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. “இந்தத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் மிகக் கவனமாக அரசாலும், எதிர்க்கட்சியினராலும் பரிசீலக்கப் பட்ட பின்னரே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது” என்றும் மக்களவையில் சபாநாயகர் அறிவித்தார்.
ஒவ்வொரு கட்சியும் இதற்கு சாட்சியம் கூறியது, ஆதரவளித்தது. அதெல்லாம் வெறும் பாவனை தானா?
இப்போது, இந்தத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் ஒரு ஜோக்; நேரத்தைக் கடத்தவும், சம்பளம் வாங்கவும் மட்டுமே தீர்மானங்கள் போடும் முட்டாள்களின் அர்த்தமற்ற செயல்பாடு என்ற அளவில் கருத்துக்கள் சொல்லப் படுகின்றன.
இந்திய தேசத்தின் பிரஜையாக இருப்பதனாலேயே பேரும், புகழும், பணமும் கொழிக்கும் சில இந்தியப் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்கள். தங்களை இந்தியர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் மீது இந்திய காலனி ஆதிக்கத்தைத் திணிக்கக் கூடாதாம், இவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் ரோமிலும், நியூயார்க்கிலும் உட்கார்ந்து கொண்டு படிப்பதற்கு மிக நன்றாக இருக்கும், ஆனால் இந்தியாவில், இந்தியராக வாழ விரும்பும் தேசபக்த காஷ்மீரிகள்? அவர்களது வீடுகளும், நிலபுலன்களும் இருப்பது காஷ்மீர் மண்ணில். அவர்களில் பல முஸ்லீம்களும் அடங்குவர் என்பது நினைவிருக்கிறதல்லவா?
பின்னர் இந்தியாவுடன் “வாழ விரும்பாத மக்கள்” என்று இந்த அறிவுஜீவிப் பட்டாளங்கள் யாரைத் தான் சொல்கிறார்கள்? ஜிகாதிகளையா? பாகிஸ்தானிய பிச்சையையும், இந்துக்கள் மீதும், இந்தியா மீதும் வெறுப்பு ஊறிய பிரசாரத்தையுமே தின்று வளர்ந்து, முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான அல்லாவின் சாம்ராஜ்யமாக (நிஜாம்-ஏ-முஸ்தஃபா) காஷ்மீரை ஆக்கவேண்டி, மூவர்ணக் கொடியை எரிக்கும் ரத்தவெறிபிடித்த அந்த இந்திய தேசவிரோதிகள் தான் இந்த “மக்களா”? அவர்கள் தலைமைப் பதவிக்காக ஒருவருக்கொருவர் அடுத்துக் கொள்வதைத் தான் தினமும் பார்க்கிறோமே - மீர் வயிஸ்களும், கீலானிகளும், பட்களும், முஃப்திகளும், அப்துல்லாக்களும். பிரிவினைவாதம் பேசும் ஒரு முஸ்லீம் தலைவர் கூட இன்னொரு முஸ்லிம் “சகோதார போராளி”யோடு நல்ல பேச்சுவார்த்தையில் இல்லை! இப்போது தேசிய பாதுகாப்பு செயலர் நாராயணனே சொல்லிவிட்டார் – சமீபத்தில் முஜஃபராபாதை நோக்கி நடந்த பேரணியில் ஒரு பிரிவினைவாதியின் மரணத்திற்குக் காரணம் உள்ளுக்குள் நடந்த மோதல்கள் தான் என்று. ஆனால் தில்லியில், சந்தேகத்திற்குரிய நபர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் சில எழுத்தாள ஜன்மங்கள், இந்தப் பூமிப்பந்தில் தங்கள் தேசிய அடையாளத்தின் சின்னமாக இருக்கும் மூவர்ணக் கொடியையே எதிர்த்து கேவலமாக எழுதுகின்றன.
“காஷ்மீருக்கு விடுதலை” என்ற இந்தக் கருத்து வெளிப்பாடுகள் பொங்கி வரும் நேரமும், ஒத்திசைவும் கவனிக்கவேண்டியவை. இந்தக் கருத்துக்கள் அனைத்தும், தேசிய உணர்வு மற்றும் தேசபக்த செயல்வீரர்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள எதையும் வெறுக்கும் ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இருந்து வருபவை. நம் நாட்டை அரசாள்வதற்கு அன்னிய சிந்தனை முறைகளையும், கொள்கைகளையும் ஏற்கும் ஒரு கூட்டம் தேசத்தில் ஆட்சி செய்யும்போது, இவர்கள் கருத்துக்கள் செலுத்தும் தாக்கம் புரிந்துகொள்ளக் கூடியது தான். அமர்நாத் போராட்டம் முன்னெப்போதும் காணாத வகையில், இவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பேருருக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இந்துக்களை அரக்கர்களாக சித்தரிக்கவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் தேசவிரோத, இஸ்லாமிய மதவெறியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வலிமை சேர்க்கவுமே, இத்தகைய “காஷ்மீருக்கு விடுதலை” ஆதரவுக் குரல்கள் எழும்புகின்றன. இவற்றை எழுப்புபவர்கள் பெரிய அளவில் ஊடகங்களின் மூலம் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர்கள், ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த “காஷ்மீருக்கு விடுதலை” கோஷங்கள், பள்ளத்தாக்கில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களின் இயல்பான எதிரொலி என்றே வைத்துக் கொள்வோம்; அதே அளவில், ஜம்முவின் தேசபக்த இந்தியர்களின் பேரெழுச்சி பற்றியும், அவர்களது பெருங்குரல்களைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஏன் கட்டுரைகள் எழுதப் படவில்லை? ஏன் இந்த ஊடகங்கள் அது பற்றி உரத்துச் சொல்லவில்லை? மூவர்ணக் கொடியேந்திப் போராடும் ஜம்மு மக்களின் குரல் மதிப்பில்லாத ஒன்றாக நிராகரிக்கப் படுகிறது; ஆனால் எல்லா நெஞ்சங்களும் பிரிவினைவாத ஊளைக்கூச்சல்களைக் கேட்க வேண்டும் என்று சொல்லப் படுகிறதே, அது ஏன்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளிவரும் செய்தித் தாள்களின் முதல்பக்க தலைப்புச் செய்திகளைப் பார்த்தாலே போதும் இந்த ஊளைக்கூச்சல்களின் “மதச்சார்பின்மை” முத்திரை தெளிவாகத் தெரிந்து விடும்: “கீலானி கூறுகிறார் – இஸ்லாமும், பாகிஸ்தானுமே காஷ்மீர் போராட்ட இயக்கத்தின் மையப்புள்ளிகள்” (காஷ்மீர் டைம்ஸ், 19 ஆகஸ்டு 2008).
தங்கள் தில்லி அடுக்கு மாடிக் குடியிருப்பில் பக்கத்துவீட்டுக் காரனுக்கு ஒரு இஞ்ச் இடம் தருவதைப் பற்றி என்ணிக் கூடப் பார்க்க முடியாத ஜென்மங்கள் ரத்தவெறி பிடித்த பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை தாரைவார்க்க வேண்டும் என்று உபதேசம் செய்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லீம்களின் பிரிவினைவாதத்திற்குக் காரணம் தான் என்ன? பொருளாதாரமா அல்லது மதமா? வாய்ப்புகளும், பண உதவியும் மாநிலத்திற்கு சரியானபடி வந்துசேருவதில்லை என்று அவர்கள் நினைத்தால், அத்தகைய பொருளாதார பிரசினைகளை வேறுவகையில் தெளிவாகவே பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். திட்டக் கமிஷன் செயலர் அறையில் அவர்கள் வந்து உட்கார்ந்ததுமே கண்டிப்பாக அவர்களுக்குத் தெரியவந்து விடும் – நியாயமாகப் பார்த்தால், மொத்தப் பங்கில் இந்தியாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் தாங்கள் தரும் பங்கை விடக் குறைவான பங்கையே தங்களுக்காக எடுத்துக் கொள்கின்றன என்று!
1947க்குப் பிறகு, தற்போதைய நிலவரம் மத அடிப்படையிலான பிரிவினைக் கொந்தளிப்புக்கான ஆரம்பப் புள்ளியாகவே ஆகி விட்டிருக்கிறது. “நாங்கள் முஸ்லிம்கள். இந்து இந்தியாவுடன் எங்களால் வாழ முடியாது” என்பது தான் ஜின்னாவின் வன்முறைத் தொண்டர் படையின் கோஷமாக 1947க்கு முன் இருந்தது. அதைத் தொடர்ந்து direct action என்ற பெயரில் பெருமளவில் இந்துக்களைப் படுகொலை செய்த நிகழ்வுகள், கல்கத்தா கலவரங்கள், பச்சைக் கொடிகள் எல்லாம் வந்தன. இறுதியாக, காந்திஜி என்ற இந்து வைணவர் வளைந்து கொடுத்தார், “சரி, பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், எங்களை அமைதியாக வாழவிடுங்கள்” என்றார்.
நாம் சமரசம் செய்துகொண்டோம், நமது அகிம்சை கோழைத்தனம் என்று பரிகசிக்கப் பட்டது. நம் மீது போர்த்தாக்குதல்கள் நிகழ்ந்தன. உடனடியாக நாம் தேசத்தைப் பிரிவினை செய்தோம்.
இப்போது மீண்டும் சிலர் அமைதிக்காக காஷ்மீர் பிரிவினை செய்யப் படவேண்டும் என்பது போன்றதொரு சூழலை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அது காஷ்மீருடன் முடிவடைவதல்ல, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று எல்லாப் பக்கங்களிலும் தனிநாடுகள் கேட்கும் பிரிவினைக் கோரிக்கைகளுக்கு இது தூபம் போட்டு விடும் என்பதாவது அவர்களுக்குப் புரிகிறதா?
என்.சி.எஸ்.எம்.மின் கோரிக்கையை ஏற்று தனி “நாகாலிம்” வரட்டுமா? யூ.எல்.ஏ.யின் அஸ்ஸாம் தேசம்? “எங்களுக்கும் தனிநாடு வேண்டும்; ஏனென்றால் நாங்கள் 1947 ஆகஸ்டு 15 என்று சுதந்திர தினம் கொண்டாடவில்லை” என்று மணிப்பூரில் சிலர் கூறுகிறார்கள். “இதுவரை ஒரு பெரிய பத்திரிகையாளரும் உங்களுக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை; அதனால் பொத்திக் கொண்டு போங்கள், சொன்னபிறகு கண்டிப்பாக வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லலாமா? ஒரு டஜன் தனிநாடு வேண்டும் கொந்தளிப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று கூடச் சொல்லலாமே? தமிழ் தேசம்? நேபாளத்துடன் இணையத்துடிக்கும் மாவோ பிரதேசம்? இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் “முகலிஸ்தான்” என்று அட்டகாசமான வரைபடம் ஒன்று இருக்கிறது, முழுப்பச்சை முஸ்லிம் ராஜ்ஜியம் என்று அது அறிவிக்கிறது , பாகிஸ்தான், காஷ்மீரில் தொடங்கி உத்திரப் பிரதேசத்தின் எல்லைகளைத் தொட்டு , லடாக், ஹிமாசலப் பிரதேசத்தையும் விழுங்கி அப்படியே அஸ்ஸாம் வரை போகும். இவை எல்லாவற்றையும் பார்த்து நாம் வேடிக்கையாகச் சிரிக்கலாம் தான், தற்போதைய காஷ்மீர் பிரிவினைவாதப் போராட்டம் நாம் அலட்சியப் படுத்த முடியாத அறிவுஜீவிகள், எழுத்தாளர்களிடமிருந்து இத்தகைய அப்பாவித்தனமான (?) கருத்தாங்களைத் தூண்டிவிடாமல் இருந்தால்! கெட்ட விஷயங்கள் திரண்டு வந்து இந்த அளவு உருக்கொள்வதற்கு நிரம்ப நேரம் பிடிக்கிறது என்பது நினைவிருக்கட்டும்.
அஸ்ஸாம் ஏற்கனவே பங்களாதேச முஸ்லிம்கள் பிடியில் உள்ளது. மதச்சார்பின்மை, மதப் பிரிவினைகளிலிருந்தெல்லாம் விலகி இருத்தல் என்றெல்லாம் என்னதான் சம்பிரதாயமாகச் சொன்னாலும், உண்மை என்னவென்றால் காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மதவாத எரிமலை; அஸ்ஸாமும் அப்படித் தான். அடிப்படையில் இது இந்து-முஸ்லிம் பிரசினை தான், அப்படியில்லை என்று உதாசீனப் படுத்திவிட்டுப் போவது நாளை தேசிய ஒருமைப்பாட்டுக்கே பெரும் ஊறுவிளைவிப்பதாகும். இந்தப் பிரசினைகள் வேண்டுமென்றே நெருக்கடிகளை உருவாக்கி திட்டமிடப்பட்ட அரசியல் முன் முடிவுகளை நோக்கி இட்டுசெல்லும் வகையில் வளர்க்கப் படுபவை. உதாரணமாக அஸ்ஸாமை எடுத்துக் கொள்ளுங்கள் . IMDT சட்டம் வெளிநாட்டு ஊடுருவல் காரர்களுக்கு உதவியாக இருந்தது; இருப்பினும் மத்திய அரசு அந்தச் சட்டத்தை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்புக் கூறியதும் கண்துடைப்புக்காக அது ரத்து செய்யப் பட்டு, பின்னர் பின்வாசல் வழியாக வேறு ஒரு பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது!
காஷ்மீரில் மக்கள் தங்களை “இந்தியர்கள்” என்று உணரும்படியாக ஒன்றும் செய்யப் படவில்லை. 370வது பிரிவு என்ற தனிச் சட்டத்தின் கீழ் தனிமைப் படுத்துதல் நான் நிகழ்ந்தது. பிறகு, அவர்கள் இந்தியர்கள் போன்று நடந்து கொள்ளவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தில்லியின் ஊடக அரசர்கள் தங்கள் உத்தரவு இல்லாமல் சூரியன் கூட உதிக்காது என்று என்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்! அவர்கள் அதிகாரத் திமிரை நுரைபொங்க அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பருகிக் கொள்ளட்டும், ஆனால் சூரியன் தானாகவே உதிக்கிறது, தனக்கு வேண்டிய அளவு தகிக்கவும் செய்கிறது !
ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி விடுகிறது - எதிர்ப்பு ஊர்வலம் இல்லாத நேரங்களில் மட்டும்! தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக வியாபாரிகள் தாங்களாகவே தங்கள் கடைகளை மூடிவைத்திருக்கிறார்கள். சிறுதொழில் முனைவோர், ஆட்டோக் காரர்கள், தொழிலார்களும் யாரும் பணி செய்வதில்லை. கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகள் மூடியிருக்கின்றன. கோடை விடுமுறையின் முடிவில் அமர்நாத் இயக்கம் தொடங்கி விட்டதால் அவை திறக்கப் படவே இல்லை. வங்கிகள் வேலை செய்யவில்லை, எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் தடை, பஸ்கள் ஓடவில்லை. ஒரு நெருக்கடிக் காலம் போன்று, கற்பனை செய்ய முடியாத கொடுங்கனவு.
ஆயினும், மக்கள் கவலை கொள்ளவில்லை. மக்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக, நகர் முழுவதும் பெரிய அளவில் பொது உணவுக் கூடங்கள் (லங்கார்) அமைக்கப் பட்டு விட்டன. சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப் படுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் செலவாகிறது. ஜம்முவின் ஒவ்வொரு இல்லமும் இந்த உணவுக் கூடங்களை நடத்துவதற்கு முகம் சுளிக்காமல் நன்கொடை வழங்குகிறது!
ஆனால் வினோதம் என்னவென்றால், ஜம்முவுக்கும், காஷ்மீர் பகுதிக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஜம்முவின் ஊடகங்களுக்கும், *தில்லி* ஊடகங்களுக்கும் இடையே பிரதிபலிப்பது தான்! ஜம்முவின் முக்கிய செய்தித் தாள்கள் சொல்லும் விஷயங்கள் எதுவும் தில்லியின் செய்தித்தாள்களில், டிவி சேனல்களில் எதிரொலிப்பதில்லை; மாறாக, தங்கள் வகை மதச்சார்பின்மை மற்றும் தங்கள் வகை “நல்லிணக்கத்தின்” பாதுகாவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டுவிட்ட இவர்கள், ஜம்முவிலிருந்து வரும் உண்மையான செய்திகளை மறைத்து, அமுக்கி விட்டால், உடனடியாக அமைதி திரும்பி விடும்; மதவாதம் பரவாமல் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
தேசபக்தர்கள் போராடும்போது, அது வகுப்புவாதம் ஆகிறது; அந்தச் செய்தி மறைக்கப் படவேண்டும்; ஆனால் ஸ்ரீநகரின் மையமான லால் சௌக்கில், இந்திய மூவர்ணக் கொடி கொளுத்தப் பட்டு, பாகிஸ்தான் கொடிகள் ஏற்றப்பட்டு, “அல்லோஹோ அக்பர்”, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷங்கள் ஒலித்தால் அது உடனடியான ‘நடுநிலைமையுடன்’ விரிவான செய்தியாக வந்துவிடவேண்டும். அதுவும் எப்படி? பிரிவினைவாதிகளின் உணர்ச்சிகள் கொஞ்சம் கூட புண்படாத வகையில், எந்த மறைத்தலும், திரித்தலும் இல்லாமல் முழுமையாக வரவேண்டும். என்ன வினோதமான தார்மீக நெறிமுறையோ இவர்கள் கடைப்பிடிப்பது!
தேவகி மைந்தன் கண்ணனால் சகித்துக் கொள்ளவே முடியாத இந்தச் செயல்பாடுகள், அவனது வழியைப் பின்பற்றுபவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்களால் இந்த நாட்டில் அனுமதிக்கப் படுகின்றன. கீதையின் உத்வேகத்தை முன்னிறுத்தி, அறப் போரில் வெற்றியடைய வேண்டிய நேரம் அல்லவா இது? உடல் மட்டுமே அழிகிறது; ஆன்மா என்றும் அழியாதது. ஓ பார்த்தனே, ஏன் அஞ்சுகிறாய் நீ?
பின்னுரை..
ஜம்முவின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து, இந்தப் போராட்டம் முழுவதுமே அரசியல் என்று முத்திரை குத்தப் பார்க்கும் தில்லியின் எண்ணப் போக்கு ஜம்முவில் கொதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு காங்கிரஸ் தலைவர் ஜம்முவின் தேசபக்த போராட்டத்தை, பிரிவினைவாத கட்சியான ஹுரியத்துடன் ஒப்பிடுகிறார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, இந்த இயக்கத்தினரிடம் பெரும் களைப்பும் சலிப்பும் ஏற்படுத்தி, மக்களை மண்டியிடச் செய்வது போன்ற சீன தந்திரங்களை உபயோகிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அணுகுறை அங்கே எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது தவிர வேறு எந்தப் பலனும் தராது; மேலும், ஜம்மு மக்கள் தங்கள் குரல் இன்னும் கேட்கப் படவில்லை என்றெண்ணி தீவிர வன்முறை வழிகளில் ஈடுபடுவதிலேயே கூடக் கொண்டு போய் விட்டுவிடும்.
தங்கள் பொறுமையை முற்றிலும் இழந்து கொண்டிருக்கும் ஜம்மு மக்களின் தீவிர தவிப்பை அங்கே போய் நேரில் தரிசித்தால் தான் அது புரியவரும், உறைக்கும். தில்லியில் உட்கார்ந்து கொண்டு, ஜம்முவின் தற்போதைய உண்மை நிலவரங்களின் சில துளிகளைக் கூடத் தொடமுடியாது. ஜம்முவின் சீனியர் பத்திரிகையாளர் ஒருவர் சில புள்ளிவிவரங்களை எனக்கு அளித்தார், எப்படி காலம் காலமாக ஜம்மு மக்கள் மிகவும் பாரபட்சமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள், இருப்பினும் எந்தப் போராட்டத்திலும் இறங்கவில்லை என்பதை விளக்கினார். “ஏன் நாங்கள் குப்பையில் கிடக்கவேண்டும்?” என்று அவர் கேட்கிறார். “இவ்வளவு காலம் தேசபக்தர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும் இருப்பதற்காகவா? ஒரு பேச்சுக்காக, நாங்கள் தனி ஜம்மு நாடு கேட்டு பிரிவினைவாதக் கொடி பிடித்தால் தான், ஒட்டுமொத்த ஊடகங்களும், அரசும் எங்கள் பின்னால் வந்து எங்கள் கோரிக்கைகளைக் கேட்பார்களா, காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லீம்களுக்குப் பின்னால் அவர்கள் போவது போல?” – ரகுநாத்புராவில் கொதித்துப் போயிருக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்னிடம் தொடுத்த அபாயகரமான கேள்வி இது.
அவர் கேள்வியின் பின் உள்ள சுட்டெரிக்கும் நியாயத்தை நிரூபிக்கும் சில புள்ளி விவரங்கள் –
1) மொத்த சுற்றளவு: ஜம்மு 26,293 சதுர கிமீ. காஷ்மீர் 15,948 சதுர கிமீ.
2) மாநில வருவாய்க்குப் பங்களிப்பு: ஜம்மு 75%. காஷ்மீர் 20%
3) மொத்த வாக்காளர் எண்ணிக்கை: ஜம்மு 30,59,986. காஷ்மீர் 28,83,950
4) சட்டமன்றத் தொகுதிகள்: ஜம்மு 37. காஷ்மீர் 46.
5) ஒரு தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை (சராசரி) : ஜம்மு 66,521. காஷ்மீர் 49,728.
6) ஒரு தொகுதியின் சுற்றளவு (சராசரி): ஜம்மு 710.6 சதுர கிமீ. காஷ்மீர் 346.6 சதுர கிமீ.
7) பாராளுமன்ற தொகுதிகள்: ஜம்மு 2, காஷ்மீர் 3.
8) காபினெட் அமைச்சர்கள் (7 ஜூலை 2008 படி): ஜம்மு 5, காஷ்மீர் 14.
9) மாவட்டங்கள்: ஜம்மு 10, காஷ்மீர் 10.
10) ஒரு மாவட்ட சுற்றளவு (சராசரி): ஜம்மு 2629 சதுர கிமீ. காஷ்மீர் 1594 சதுர கிமீ.
11) வேலையில்லாதவர்கள் : ஜம்மு 69.70%, காஷ்மீர் 29.30%
12) மாநில அரசுப் பணிகளில் பங்கு: ஜம்மு 1.2 லட்சம் பேர்கள். காஷ்மீர் 3 லட்சம் பேர்கள்.
13) மாநில அரசு ஊழியர்களில் உள்ளூர் ஆட்கள் : ஜம்மு : 25% க்கும் குறைவு. காஷ்மீர் : 99%
14) மின் உற்பத்தி: ஜம்மு 22 மெகாவாட். காஷ்மீர் 304 மெகாவாட்.
15) ஒரு ஆண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை: ஜம்மு: 80 லட்சத்திற்கும் மேல். காஷ்மீர் : 4 லட்சத்திற்கும் குறைவு.
16) மாநில வருவாயிலிருந்து சுற்றுலாத்துறை முன்னேற்றதிற்கான முதலீடு: ஜம்மு : 10%க்கும் குறைவு. காஷ்மீர்: 85%க்கு மேல்.
17) கிராமப்புற மின்சார வசதி: ஜம்மு : 70%க்கும் குறைவு. காஷ்மீர் : 100%
இதற்கு மேலும் சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா? ஜம்மு, உன் போராட்டம் வெல்க!
http://jataayu.blogspot.com/
* - கட்டுரையாசிரியர் தருண் விஜய், தற்போது தில்லி, சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவத்தின் இயக்குனர். “பாஞ்சஜன்யா” என்ற ஹிந்தி இதழின் ஆசிரியராக இருந்தவர்.
மூலக்கட்டுரை:
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-3396388.cms

Thursday, 28 August 2008

"இனிய மார்க்க" வழியில் தலிபான்கள்....

நேற்று தொலைகாட்சியில் இந்த‌ செய்தியை காண நேர்ந்தது.

ஜப்பானைச் சேர்ந்த இடோ கசூயா (Ito Kazuya) என்னும் 31வயது NGO குழு உறுப்பினர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இடோ(Ito), அடிப்படையில் விவசாயக்கல்லூரியில் பட்டம் பெற்ற‌ மாணவர். மிகுந்த சமூக ஆர்வலர். தான் பயின்ற விவசாய தொழில்நுட்பங்கள் கொண்டு ஏதாவது ஏழைநாட்டு மக்களுக்கு உதவ ஆர்வம் கொண்டு NGO குழு ஒன்றில் உறுப்பினராகியவர்.

இயற்கையின் சீற்றத்தாலும் உலக அரசியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட... மீண்டு வரத்துடிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போன்று எத்தனையோ நாடுகள் இருக்க, இதோ தேர்ந்தெடுத்தது ஆஃப்கானிஸ்தான் என்னும் "இனிய மார்க்கத்தினர்" வாழும் நாடு.

பொதுவாக இந்த ஜப்பானியர்களுக்கு "இனிய மார்க்கம்" குறித்த புரிதல்கள் கொஞ்ஞம் கம்மிதான்...(பெரும்பாலோருக்கு பூஜ்யம்தான்...). "நல்லது செஞ்சா ஏன் கொல்லுறாங்க ?" என்று 1400 வருடங்களுக்கு அப்புறமும் அப்பாவியாக கேட்டுக்கொண்டிருக்கும் இவர்களைப்பற்றி என்ன சொல்ல...

இந்தியாவிற்கு வந்து விபரம் கேட்டிருந்தால் ஒரு சிறுகுழந்தைகூட சொல்லியிருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கு செல்வதில் உள்ள அபாயங்கள் குறித்து.

ம‌த‌வெறிக்கு அப்பாற்பட்டு "மனித" உள்ளம்கொண்ட சில‌ நல்ல மனிதர்கள் உதவியுடன் பாலைவன நிலங்களை விளைநிலங்களாக மாற்ற பெரும் முயற்சியை மேற்கொண்டார். நாம் நீண்டகாலமாக‌ வாய்கிழிய பேசும் நதிநீர் இணைப்பை, சிறிய அளவேயானாலும், சத்தமில்லாமல் செய்துவந்தார். பல மைல்களுக்கு அப்பாலிருந்து கால்வாய்மூலம் நீர்கொண்டு வந்து... தரிசுநிலங்களை விளைநிலமாக்கி... உள்ளூர் மக்களுக்கு விவசாய நுட்பங்களை கற்றுக்கொடுத்து... வெற்றிகரமாக விவசாயம் செய்து... உள்ளுர்ம‌க்க‌ளுட‌ன் உண்டு உற‌ங்கி அவ‌ர்க‌ளின் இன்ப‌த்திலும் துன்ப‌த்திலும் ப‌ங்கெடுத்துவந்த‌ இந்த‌‌ ஜ‌ப்பானிய காஃபிர் இன்று த‌லிபான் என்ற‌ மிருக‌ங்க‌ளால் வேட்டையாட‌ப்ப‌ட்டு, உட‌ம்பெல்லாம் குண்டுதுளைக்க‌ப்ப‌ட்டநி‌லையில் க‌ண்டெடுக்க‌ப்ப‌டிருக்கிறார்.

த‌லிபான் ப‌ன்றிக‌ளின் இந்த‌ செய‌ல்க‌ளுக்கு ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ள் இருக்க‌லாம். இவைக‌ளின் முக்கிய‌ வ‌ருமான‌ ஆதார‌ங்க‌ளான‌ போதைப்பொருள்க‌ளின் விளைநில‌‌ங்க‌ளுக்கு ஆப‌த்து வ‌ருவதாக‌ உணரந்திருக்க‌லாம்.... காஃபிர் ஒருவ‌ரின் பின்னால் முக‌ம‌திய‌ர் போவ‌தால் இனிய‌ மார்க்க‌த்துக்கு ஆப‌த்து வந்த‌தாக‌ நினைத்திருக்க‌லாம்.... அல்ல‌து முகமது போல அல்லாவிட‌மிருந்தே ஆணைக‌ள் வந்து (அதென்ன‌து... வ‌ஹி ?) இறங்கியிருக்க‌லாம்....

எப்ப‌டியோ... த‌லிபான்க‌ள் ம‌றுப‌டி "தலை"யெடுத்துக்கொண்டிருக்கிறன‌. சிறிதுகால‌த்துக்கு முன்னர் விமர்சகர் திரு வெங்கட் சாமினாதன் அவ‌ர்க‌ள் த‌லிபான்க‌ள் குறித்து எழுதிய‌ க‌ட்டுரை ஒன்று ஞாப‌க‌த்துக்குவ‌ந்து, தேடியெடுத்து மறுப‌டியும் ப‌டித்தேன்.

இக்க‌ட்டுரையை வாசிக்கும் ந‌ண்ப‌ர்க‌ள், கீழ்காணும் சுட்டியில், திரு வெங்கட் சாமினாதன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ க‌ட்டுரைய‌யும் வாசிக்க‌ வேண்டுகிறேன் (இன்னும் வாசிக்காம‌லிருந்தால்...)

http://vesaamusings.blogspot.com/2007/09/blog-post_30.html

__பாலா__

Wednesday, 27 August 2008

அடாவடி ஜிகாதிகளும் அப்பாவி பண்டிடுகளும்

இவ்வார திண்ணையில் கார்கில் ஜெய் எழுதிய கட்டுரை
******************************************

Thursday August 21, 2008
இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்
கார்கில் ஜெய்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

பொதுவாக ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின்போதும் நியூயார்க் நகரத்தில் 'இந்தியா டே பெரேட்' எனப்படும் சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்குபெரும் அந்த அணிவகுப்பை, இந்த வருடம் நானும் காணச் சென்றிருந்தேன்.

இந்த வருடம் மிக வித்தியாசமாக நடந்தது, புதிதாக முளைத்த ஹிந்து 'ஹிந்து மனித உரிமை' அமைப்பின் விழிப்புணர்வு அணிவகுப்பு.

அதிகமில்லை... வெறும் 30 பேர்தான். 'நாங்களெல்லாம் காஷ்மீரிகளா? அநாதைகளா? ஏன் எங்கள் பங்களாக்ககளை விட்டு கூடாரஙகளில் பிச்சைக் காரர்கள் போல் 18 வருடங்களாக தங்கி இருக்கிறோம்?', 'அமர்நாத் நிலத்தை திருப்பி கோவிலுக்கே கொடுங்கள்', 'அரசியல்வாதிகளே உங்கள் ஒட்டுவங்கியின் கொள்முதல் ஹிந்துக்களின் உயிரா?', 'அஹமதாபாத்தில் குண்டு வெடித்து 55 பேர் இறந்து இன்னும் இரண்டு வாரம் கூட ஆகவில்லை... அதற்குள் சிமி இயக்கத்துக்கு தடை நீக்கமா?'.. என்ற அளவில் பல போஸ்டர்கள் என களைகட்டியது.

ஹிந்து மனித உரிமை அமைப்பின் அணிவகுப்பில் அக்ஷர்தாம் கோவில், அஹமதாபாத் வெடிகுண்டு வைப்பு, அமர்நாத் புனித யாத்ரீகர்களின் உரிமை என ஹிந்துக்களை எதிர்நோக்கி இருக்கும் பல பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், மழைக்கு அஞ்சாமல் அணிதிரண்டிருந்த பார்வையாளர்களை உலுக்கி 'ஜெய் ஹிந்த்' என கோஷமிட வைத்தது காஷ்மீர ஹிந்துக்களின் நிலையை விளக்கிய புதினமே:

காஷ்மீர ஹிந்துக்களை சொந்த மண்ணை விட்டு ஓட ஓட விரட்டி அகதியாக்கி அலையவிடும் இஸ்லாமிய பயங்கரவாதமும், ஓட்டு வங்கி அரசியலையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கிய அந்த புதினத்ததில் காஷ்மீரப் பண்டிதராக 'நடித்த' வரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"சௌக்யமா? உங்கள் காஷ்மீர அகதி வேடம் நன்றாக பொருந்துகிறது".
" நன்றி. ஆனால் இது வேடமல்ல. உண்மை; காஷ்மீர அகதிதான் நான்”.

"ஒ.. மன்னிக்கவும். மிகுந்த வருத்தம்... உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு எப்படி இந்த துயரம் நிகழ்ந்தது எனச் சொல்லுங்களேன் ?”

"என் பெயர் ரமேஷ் சுட்ஷி . 1988 ம் ஆண்டு காஷ்மீரப் பண்டிதரான என் தந்தையார், பூனாவில் படித்துக் கொண்டிருந்த என்னைச் சந்திக்க வந்திருந்தார். பின் அவர் காஷ்மீர் திரும்பிய போது அவரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊருக்கு வெளியேயே தடுத்துத் திருப்பி அனுப்பினர். ஒரே நாளில், என்னை தோளில் தூக்கி அவர் நடந்த்த தெருக்கள், ஆண்டாண்டுகளாக எங்களுக்கு சொந்தமான குங்குமப் பூ தோட்டங்கள், அரண்மனை போன்ற பங்களா, எல்லாவற்றையும் விட்டு அவர் துரத்தியடிக்கப் பட்டார். அதைவிட அவரைக் கொன்றிருக்கலாம். அந்த நிலை மனித மனத்தால் புரிந்துகொள்ள இயலாதது. தெருவில் நடந்தால் அழைத்து மரியாதையுடன் இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்ட ரம்மியமான பள்ளத்தாக்கை விட்டு, வெருட்டும் பிரம்மாண்டமான, முகம் தெரியாத டெல்லித் தெருக்களில் கோணிப்பைகளால் ஆன கூடாரத்தில் வாழ நேர்ந்தது”.

“அரசாங்கம் உங்கள் தந்தையாருக்கு ஏதாவது வேலை வாய்ப்பு உதவி செய்ததா? “

"என் தந்தையார் ஏழாம் வகுப்பு வரையே படித்திருந்தார். அதனால் அவருக்கு எந்த வேலை வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஆனால் எங்களை விரட்டி விட்டு, எங்கள் சொத்துக்களை பகிர்ந்து கொண்டு அனுபவித்த பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசாங்கம் மான்ய விலையில் கிலோ அரிசி வெறும் 35-ந்தே பைசாவுக்கு 'வறுமையை நீக்கினால் திருந்திவிடுவார்கள்' என்ற விளம்பரத்துடன் வழங்கியது. இதர பொருட்களும் பத்தில் ஒரு பங்கு விலையில் ராஜ மரியாதையுடன் வழங்கப்பட்டது. இது பயங்கரவாதிகளுக்கு மேலும் மேலும் வளரவும், ஆயுதம் வாங்கவும் உதவியது"

"ம்ம்..மற்ற காஷ்மீர அகதி ஹிந்த்துக்கள் எல்லாம் எவ்வாறு பிழைத்தனர் ?அவர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது செய்ததா? ”

(தொண்டைக் குழிக்குள் துயரத்தை விழுங்க முயற்சி செய்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்..தரையை வெறித்துப் பார்க்கிறார். நான் கேள்வியைத் மீண்டும் கேட்க எத்தனிக்கும் போது அவரே தொடர்கிறார்).

"இந்திய அரசாங்கம் மிகுந்த ராஜதந்திரமும் எதிர்காலத்தை பற்றிய தொலைநோக்கறிவும் கொண்டது. ஹிந்துக்கள் அகதிகளாகவோ, அடிமைகளாகவோ, ஏழைகளாகவோ, உணவில்லாமலோ இருப்பதைக் காரணம் காட்டி தீவிரவாதத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் இழந்தவர்களுக்குக் கொடுக்காமல், எடுத்தவர்களுக்கே இந்திய அரசாங்கம் கொடுத்தது.”

"வேலை வாய்ப்பும் இல்லை, சொத்துக்களும் இல்லையென்றால் என்றால் வங்கி சேமிப்பை வைத்துத்தான் காலம் தள்ளினீர்களா?”

"இல்லை. அதுவும் இல்லை. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் நாங்கள் கணக்கு வைத்திருந்தோம். அடுத்த வேளை உணவுக்காகவும், என்னுடைய படிப்புக்காகவும் பணம் எடுக்க முயற்சிக்கையில் அந்த பாங்க் மேனேஜர் அனுமதி மறுத்துவிட்டார்"

"என்ன? அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறதே? எதற்காக உங்கள் பணத்தை உங்களிடம் தர மறுத்தார்?”

"அந்தக் காலத்தில் இப்போது போல் தொலைபேசி வசதியில்லை. பலமுறை கடிதமெழுதினாலும், காஷ்மீரில் அமைதி நிகழ்வதாயும், அங்கே திரும்பி வந்து ஆனந்தமாக வாழும்படி அழைத்தும், அங்கே வராமல் பணம் பட்டுவாடா செய்ய இயலாது என்றும், பதில் எழுதுவாரே ஒழிய பணம் தர ஒப்புக் கொள்ளவேயில்லை. பிறகு டெல்லியில் இந்தியன் வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதில் எங்கள் கணக்கை மாற்றச் சொல்லி மன்றாடிப் பார்த்தோம். அடையாளங்கள், கையெழுத்து மாறுபடுவதாகவும் பணம் தவறானவர்களின் கைக்குச் செல்வதைத் தவிர்க்கவே பணத்தை பட்டுவாடா செய்யாமல் இருப்பதாகவும் சொல்லி அலைக்கழித்தார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், ஒரு வழியாகப் பணம் கிடைக்க 11 வருடங்கள் ஆகிற்று. என் தந்தையாரோ இதனால் மேலும் நொந்து போய், இடையிலேயே உடல் சுகவீனப் பட்டு காலமானார்"

அவர் குரல் உடைய, என் கண்கள் பனித்தன. அதற்கு மேல் கேள்வி கேட்க மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

"என்னுடைய வீட்டுக்கு தேனீர் அருந்த வாருங்கள்.. டெல்லி நீதிமன்ற வழக்குக் கோப்புகளை நான் காண்பிக்கிறேன்.”

"மிக்க நன்றி.. அவசியம் வருகிறேன்"

ரமேஷ் சுட்ஷியிடம் நான் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ஒரு உயரமான காஷ்மீர மூதாட்டி என்னை அடிக்கடி உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவர் அணிவகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளை தவறவிடாமல் கவனித்துக் கொள்ளவே வந்திருப்பதாக தோன்றியது. அக்குகுழந்தைகள் பிஞ்சுக் கைகளில் இருந்த பேனரை உயர்த்தி 'ஜெய்ஹிந்த்' என முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அக்குழந்தைகளின் மார்பில் குத்தியிருந்த மூவர்ணக் கொடி மழையில் தொப்பலாக நனைந்து இருந்தது. அந்த மூதாட்டி மறுபடியும் என்னைப் பார்த்தவுடன், சற்றுத் தயங்கிப் பின் அவரிடம் சென்றேன். அருகில் சென்றவுடன் அவர் முகத்தில் கலவரத்தின் ரேகைகள் அழிக்க முடியாமல் ஆழமாகப் படிந்திருப்பது தெரிந்தது.

“வந்தனம் அம்மா.. நீங்கள் ஏதோ சொல்ல விரும்புவது போல் தோன்றுகிறதே?”

"மேரே தூஸ்ரா பேட்டா தேரே ஜெய்ஸெஹி தா"

"ஓ என்னைப் போலவா இருந்தார்? பலர் என்னைப் பார்த்து இவ்வாறு குழம்புவதுண்டு.... அப்படியானால் உங்கள் முதல் மகனுடன் தங்கியிருக்கிறீர்களா?"

ஓ.. வென அழ ஆரம்பித்தார்.

kargil_jay@yahoo.com

பி.கு: இந்த ஹிந்து மனித உரிமை அணிவகுப்பு நடந்த அதே நேரத்தில் ஸ்ரீநகரில், காஷ்மீர ஹிந்துக்களை கொன்றும், விரட்டியும், அவர்களின் சொத்துக்களைப் பகிர்ந்து எடுத்துக் கொண்ட அமைதி மார்க்கம் இப்போது 6000 பேரைத் திரட்டி பேரணி நடத்தி, பாகிஸ்தானிய கொடி ஏந்தி "நாங்கள் மதத்தால் உணர்வால் பாகிஸ்தானியரே!! எங்களுக்கு இந்தியாவில் இருந்து விடுதலை வேண்டும்" என நேரடியாகவே ஐ.நா. சபையின் அலுவலகத்தில் மனு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அடித்து விரட்டப் பட்டவர்கள் 'நாங்கள் இந்தியர்' தேசப் பற்றுடன் அன்பு பாராட்ட, அனுபவித்தவர்கள் நாங்கள் பாகிஸ்தானியர் என அறிவித்துள்ளனர்.
Copyright:thinnai.com 

******************************************
ந‌ன்றி "திண்ணை"

கேடுகெட்ட தமிழர்கள்...

திண்ணையில் வாசித்த வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதிய கட்டுரை இது. படித்துவிட்டு மிகவும் வேதனைப்படவைக்கும் நிகள்வுகள் கொண்ட கட்டுரையிது. பாமர மக்கள் மத்தியில் புரட்சி வெடிக்காதவரையில் அரசியல்/அதிகார வர்கத்தினரின் ஊழல்கள் புற்று நோயாக வளர்ந்துகொண்டுதானிருக்கும்...

மேலும் மேலும் சீர்கெட்டுவரும் சுகாதாரம், மாசுபட்டுவ‌ரும் சுற்றுப்புற‌ சூழ்நிலை குறித்த‌ விழிப்புண‌ர்வு ம‌க்க‌ளுக்கும் இல்லை... ம‌க்க‌ளை ஆளும் அர‌சுக்கும் இல்லை.... பார‌த‌ம் ஒளிர்வ‌தாக‌ அர‌சு நாகூசாம‌ல் கூச்ச‌லிடுவ‌தும், அதை ந‌ம்பி ஆமோதிக்கும் ஒரு மேல்தட்டு வர்கமும், இதைப்ப‌ற்றிய‌ பிர‌ஞ்ஞையே இல்லாம‌ல் வாழும் பெரும்பான்மை பாமரர்களும்‌ ஒன்றாக‌ வாழும் ந‌ம் த‌மிழ‌க‌ம்... வேத‌னையான‌ "வேற்றுமையில் ஒற்றுமை".

**********************************************

Thursday August 21, 2008
சென்னை வந்து சேர்ந்தேன்.
வெங்கட் சாமிநாதன்

நான் தமிழ் நாட்டை விட்டு வேலை தேடி முதலில் ஜெம்ஷெட்பூருக்குச் செல்ல சென்னை சென்டிரலிருந்து கிளம்பும் கல்கத்தா மெயிலில் ஏதோ ஒரு பெட்டியில் காலி இடத்தில் ஏறி உட்கார்ந்தது 1948-ம் வருடம் ஜூலை மாதம் 27 அல்லது 28-ம் தேதியன்று. மாலை ஏழு மணிவாக்கில். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான், "டாடா நகருக்கு ஒரு டிக்கட்," என்று கேட்டு ரூபாய் 33 கொடுத்து ஒரு டிக்கட் வாங்கினேன். அது ஒரு காலம். பதிவு செய்தல் என்பதெல்லாம் கிடையாது. அதன் பிறகு 51 வருடங்கள் கழிந்த பிறகு தான், 1999-ம் வருடம், நவம்பர் மாதம், என் நினைவு சரியென்றால் அனேகமாக அன்று 29-ம் தேதியாக இருக்கும், நான் ஒரு வழியாக எனது நீண்ட வட இந்திய வாழ்க்கைக்கு ஒரு முழுக்கு போட்டு எஞ்சிய காலத்தைக் கழிக்க சென்னைக்கு வந்திறங்கிய தினம்.

இந்த நீண்ட அரை நூற்றாண்டுக்கும் மேற்செல்லும் கால நீட்சியில் அவ்வப்போது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் தமிழ் நாடு வந்ததுண்டு தான். அந்த விடுமுறை நாட்களை ஒரிடத்தில் என நான் தங்கியிருந்து கழித்ததில்லை. தமிழ் வாழ்க்கை என்பது ஒரு ஆழ்ந்த பதிவாக, பதிந்த படிமமாக தங்கியுள்ளது பதினாறு வயது வரை மாணவனாக இருந்த காலத்தியது தான். அந்த மனப் பதிவுகளில், பல காட்சிகள், ஒலிகள், மனித உறவுகள் கலந்து இருந்தன. நடு நாயகமான கோவில் கோபுரங்கள், காலையில் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் காணும் தெருக்காட்சிகள், அவ்வப்போது மாறும் பொழுதுகளை அறிவிக்கும் கோவில் மணி ஒசை, காலையில் தெருவைக் கடந்து செல்லும் பஜனை கோஷ்டிகள், அவ்வப்போது மிக அரிதாகக் கேட்கும் அந்நாளைய இனிமையான சினிமா பாடல்கள் - இவையெல்லாம் என் பால்ய காலத்தை இனிமையோடு நினைவூட்டும் - இவற்றை அவ்வப்போது என் தில்லி நாட்களில் நினைத்துக் கொள்வேன். பின்னர் விடுமுறையின் போது சந்தித்த, அப்போது மிக அமைதியாக, வெளி உலகம் அவ்வளவாக பரபரப்புடன் கண்டு கொள்ளாத இலக்கிய பெருந்தலைகளும், அவர்கள் எனக்கு அளித்த இலக்கிய பரிச்சயங்கள் எல்லாம் திரையோடும்.

ஆனால் அந்நாட்களில், தமிழ் நாடு திரும்பவேண்டும் என்ற ஒரு ஏக்கம் எதையும் இவை என்னில் பிறப்பித்து விடவில்லை. ஒரிஸ்ஸாவும், தில்லியும் எனக்களித்தவை, நான் பெற்றவை கற்றவை நிறையவே இருந்தன. நான் ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொன்னூறுகள் வரை பணிசெய்த அலுவலகத்தின் கிளைகள் இந்தியா முழுதிலும் பரவியிருப்பது. எங்கு வேண்டுமானாலும் கொஞ்சம் சிரமப்பட்டால் மாற்றல் வாங்கிக் கொள்ளலாம். என் திருமணம் நடந்ததும் என்னிடம் பிரியம் கொண்டிருந்த உயர் அதிகாரி, வேண்டுமானால் என்னை சென்னைக்கு மாற்ற உதவுவதாகச் சொன்னார். நான் அதை விரும்பவில்லை. மறுத்துவிட்டேன். நான் விடுமுறைகளில் அவ்வப்போது தமிழ் நாடு வந்தபோது கண்ட தமிழக அலுவலகக் கலாச்சாரமும், தெருவில் கால் வைத்தால் தப்ப முடியாத பாமரத்தனமான வெகு ஜன கலாச்சாரமும் எனக்கு மிகவும் வெறுப்பூட்டியிருந்தன. என்னால் அவற்றைச் சகித்துக்கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை. இதன் காரணத்தால் தான் நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தில்லியிலேயே தொடர்ந்து இருப்பதைத் தான் விரும்பினேன். சற்றுத் தள்ளியிருந்த பீதம்புரா என்னும் புறநகர்ப் பகுதிக்கு வீடு மாறிய போதிலும் தில்லி வாழ்க்கை எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்தது.

ஆனாலும், ஒரு விபத்தில் உயிர் தப்பியதும், பின்னர் என்னைப் பற்றிக் கொண்ட இருதயக் கோளாறும் எஞ்சிய நாட்களை தமிழ் மண்ணில், உறவினரோடும் மனதில் பதிந்திருந்த காட்சிகளின், படிமங்களின் நினைவுகளோடும் திரும்ப வாழும் எண்ணத்தை மனதில் பதித்தன. இவற்றோடு இரண்டு அரிய நட்புகளும் ஒரு ஊசலாட்டத்தில் என்னை வைத்தன. தில்லியில் கடைசி 30 வருடங்கள் மிக நெருங்கிப் பழகிய நண்பர், டண்டன், இவரை எப்படிப் பிரிந்து தமிழ் நாட்டுக்குச் செல்வது? எனற தயக்கம். என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவரே ஒரு விபத்துக்கிரையானார். அது உயிரை வாங்கும் விபத்து இல்லை. இருப்பினும்...அதன் பிறகு நான் தில்லியில் இருந்தது சில மாதங்களே.

நான் வரும் முன்னரே எனக்காக வாடகைக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டை மடிப்பாக்கம் தெருக்களில் தேடி விசாரித்த போது, அதோ அந்த ஐயப்பன் கோவிலில் வாசலில் நிற்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள் என்றார்கள். அவர்கள் இதற்கு அடுத்த தெருதான் நாங்கள் தேடும் இடம் என்றார்கள். அந்தக் கோவிலைப் பார்க்கவும், நான் இருக்கப்போவது அடுத்த தெருதான் என்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தன. கோயில் தெருவின் நடுவில் ஒரு கோடியில் இருக்க, அதன் இரு பக்கங்களிலும் சாரியான வீடுகள். இப்போது மறைந்து வரும் சன்னதி தெருவாக அது இருந்தது. தெருவின் ஒரு கோடியில் பழம், தேங்காய் காய்கறி விற்கும் ஒரு கடை தென்னங்கீற்று வேய்ந்த கூரை. மறு நாள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று பார்த்த போது, பதினெட்டுப்படிகள் ஏறித் தான் அய்யப்பனைத் தரிசிக்கமுடியும் என்று தெரிந்தது. தில்லி ராமகிருஷ்ணபுரம் அய்யப்பன் கோவிலும் கேரள கோவில்களைப் போலவே அழகாகக் கட்டப்பட்டிருந்தது தான். ஆனால் அந்த தில்லி அய்யப்பன் கீழ்த் தளத்திலேயே தான் வழக்கம் போல் கால்மடித்து அமர்ந்திருந்தார். பதினெட்டுப் படிகள் அங்கு இல்லாததால், சபரிமலைக் கோயில் கட்டுப்பாடுகள் தில்லிக் கோயில் இருக்கவில்லை. ஆனால், இங்கு பெண்கள் கோவிலுக்குள் செல்லாமே தவிர படியேறி அய்யப்பனைத் தரிசிக்கமுடியாது. சம்பிரதாயங்களைக் காப்பதில் மலையாளிகள் கட்டுப்பாடானவர்கள். கம்யூனிஸ்ட் அரசும், நாத்திகர்களேயானாலும், இதில் தலையிடுவதில்லை.

தில்லியிலிருந்த காலத்தில் மடிப்பாக்கம், அரசுப் பணி ஓய்வு பெற்றவர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் தங்குமிடம் என்று பத்திரிகைக் குறிப்புகளைப் படித்திருந்தேன். மடிப்பாக்கம் 'மடியாக இருப்பவர்கள் நிறைந்த இடம் என்று கேள்விப் பட்டேனே' என்று இன்னொரு நண்பர் சொன்னார், "என்ன இருந்தாலும் எங்க ஆட்களை (யூகித்துக் கொள்ளலாம்) விட்டுக்கொடுத்திருவோம்களா!" என்ற நியாயம் கற்பித்தவர் புரட்சிக் கவிதைகள் எழுதும் கம்யூனிஸ்ட் நண்பர். இப்படித்தான் ஒரு காஷ¤வல் பேச்சில் கூட பொடி வைத்தும் அதேசமயம் தம் அரிப்பைக் காட்டியும் காட்டாமலுமான பேச்சு இப்போது தமிழ் சமூகத்தில் சகஜமாகிக் கொண்டிருந்தது தெரிந்தது. சரி, அது என்ன மேல்தட்டு வர்க்கத்தினரின் புகலிடம் என்று போகப் போக தெளிவு வரத் தொடங்கியது. தெருவுக்கு எதிரே ஒரு பெரிய, மிகப் பெரிய ஏரி. ஏரியின் நடுவே குட்டையாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அதைக் குளம் என்று சொல்லக் கூட தகுதியற்ற தேக்கம் அது. ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே கட்டிடம் இடித்த காரை, செங்கல் குவியல்கள். ஏரிகள் நிறைந்த இடம் தான் மடிப்பாக்கம் அதன் ஒவ்வொரு ஏரியும் வறண்டு குப்பைகள் கொட்டப்படும் இடமாகத் தான் காட்சி தந்தது. பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயமே வந்தியத் தேவன் கடல் போல் அகன்று விரிந்திருந்த வீராணம் ஏரியை குதிரைமேல இருந்து சுற்றி ஆச்சரியத்துடன் வலம் வந்த காட்சியுடன் தான் தொடங்கியது. அப்படித்தான் எனக்கு நினைவு. சென்னையைச் சுற்றிய மாவட்டங்கள் அனைத்தும் பாசனத்துக்கு ஏரியையே நம்பியவை. சுத்தமாக வரண்ட நிலமாக இருந்த அந்தக் கால நிலக்கோட்டையில் கூட அந்த ஊர் கொக்கிர குளம் இம்மாதிரி ஆபாசப் படுத்தப் படவில்லை. எல்லாக் காலத்திலும் திருடர், கொலையாளிகள் சமூகத்தில் இருந்தது போல, ஐம்பது வருடங்களுக்கு முன்னும் தன் எதிரி மாட்டுக்கு விஷம் வைப்பவர்கள், எதிரி வீட்டின் வைக்கோல் படப்பிற்கு தீ வைப்பவர்கள், கிணற்றுத் தண்ணீரை ஆபாசப்படுத்துபவர்கள் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் சமூகத்தில் அரிதாகக் காணப் படும் சமூக விரோதிகள், குற்றவாளிகள். மக்களால் வெறுக்கப்படுபவர்கள். ஆனால் இன்று ஏரிகளை குளங்களை ஆபாசப் படுத்துவதும், குப்பை கொட்டுவதும் புளுத்துப் போன அரிசியை பங்கீட்டுக்க் கடையில் விற்பவர்கள், எல்லோரும் செய்யும் ஒரு காரியமாக சகஜமாகியுள்ளது. ஒரு அராஜக செயல், மக்கள் விரோதச் செயல் வெகு சகஜமான மக்கள் செயலாகியுள்ளது.

இங்கு எங்கள் தெருவின் ஒவ்வொரு வீட்டின் முன்னும் உள்ள சாக்கடை ப்ளாஸ்டிக் மற்றும் பல கழிவுப்பொருட்களால் அடைபட்டுக்கிடக்கிறது. தெருமுனைகளில் சாக்கடை நீர் வழிந்து தெருக்களில் ஓடி வருகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குப்பைகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றது. அதன் மேல் தென்னை மட்டைகளும் குவிந்து கிடக்கும். பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு லாரி வரும். தெருமுனையில் வரும்போதே அது நிறைந்து வழிந்திருக்கும். முடிந்த வரை அவன் தென்னை மட்டைகளை ஒதுக்கி குப்பைகளை மட்டும் அள்ளிப் போட்டுச் செல்வான். குண்டு குழிகள் நிறைந்த ரோடில் குப்பை நிறைந்து வழியும் லாரியிலிருந்து குப்பைக் கழிவுகள் போகுமிடமெல்லாம் வழிந்து சிதறும். அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. லாரி வந்தது. குப்பை அள்ளிச் சென்றது என்று கவுன்ஸிலரும் சொல்வார்.தெரு ஜனங்களும் சொல்வார்கள். லாரி சென்றபின் தென்னை மட்டைகள் எரிய விடப்படும். இது நான் இங்கு வந்ததிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக நடக்கும் காட்சி. நாலைந்து தெரு வாசிகள் சேர்ந்து ஒரு ஆளை நியமித்து வண்டியும் வாங்கிக் கொடுத்து குப்பைகள் அகற்ற ஏற்பாடு செய்திருந்தோம். அது போன பஞ்சாயத்து தேர்தலுக்குப் பின். 2006-ல் வந்த புதிய பஞ்சாயத்து இதைத் தடுத்து விட்டது. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆள் பஞ்சாயத்தில் வேலை தரப்படும் என்று அவர்கள் காட்டிய ஆசை வார்த்தையில் இன்னமும் மயங்கிக் காத்திருக்கிறான். நாங்கள் வாங்கிய வண்டி ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அவனும் நாங்கள் கொடுத்து வந்த மாதம் ர் 1500-ஐயும் இழந்து நிற்கிறான்.

நான் இங்கு வந்த 1999-ம் ஆண்டு நவம்பரில் எந்நிலையில் மடிப்பாக்கம் தெருக்களின் குண்டுகள் குழிகளைக் கண்டேனோ அவை மாறவில்லை. விருத்தி அடைந்திருக்கின்றன. எட்டு வருடங்களில் அவை இனவிருத்தி செய்யாதா என்ன? ஜீவன்கள் தான் இன விருத்தி அடையும் என்பது இல்லை. போன தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் தன் வீட்டுக்கு முன் காங்கிரீட் ரோட் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த முறை தோற்றாலும் ஒரு சுற்றுப் பெருத்துத்தான் இருக்கிறார். ஒவ்வொருவரும் வெற்றி பெற எவ்வளவு லக்ஷங்கள் செலவழித்தார் என்பது அவரவர் யூகத்துக்கே விடப்படவேண்டும். ஒரு பைஸா சம்பளம் இல்லாத நாற்காலிக்கு லக்ஷம் லக்ஷமாக செலவழிப்பானேன் என்று கேட்பவர் நம்மூர் ஜனநாயகம் பற்றி அறியாதார்தான். இது மடிப்பாக்கம் மட்டும் தரும் காட்சியல்ல. சுற்றியுள்ள நங்கை நல்லூர், ஆதம்பாக்கம், என்று தொடங்கி தாம்பரம் வரை, பின், சென்னை நகரத்தில் மௌண்ட் ரோடு தவிர வேறு எங்கு இடப்புறம் வலப்புறம் சென்றாலும் காணும் காட்சி இது.

அறுபது எழுபது வருடங்களுக்கு முன் நம் நாடு ஏழை நாடாக இருந்தது. அந்நாட்களில் நான் நிலக்கோட்டையையும், உடையாளூரையும் அவற்றைச் சுற்றியிருந்த கிராமங்களையும் பார்த்திருக்கிறேன். அவை சுத்தமாக இருந்தன. எங்கும் குப்பை கொட்டிக்கிடக்கவில்லை. சாக்கடை அடைபட்டு தெருவில் வழிந்தோடவில்லை. ஏரிகள் குளங்களை யாரும் குப்பை, கழிவுகள் கொட்டி, ஆபாசப்படுத்தவில்லை.

நான் அடிக்கடி பிரயாணம் செல்ல வேண்டியிருக்கும் மௌண்டிலிருந்து மேடவாக்கம் செல்லும் மேடவாக்கம் நிருஞ்சாலை ஒரு GST சாலையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதில்லை. உண்மைதான். ஆனால் அதன் அகலம் மூன்றில் ஒரு பங்காகக் குறுகியுள்ளது. இரு பக்கக் கடைகளும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இடம் போக மிகுந்த குறுகிய பாதையில் தான் பலமடங்கு அதிகமாகியுள்ள இரு வழி கனவாகன போக்கு வரத்து நெரிசலில் வாகனங்களும், மனிதர்களும் அவதிப் படவேண்டியிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு இங்கு மாத்திரம் காணும் காட்சியல்ல. தமிழ் நாடெங்கும் காணும் காட்சி. இது ஒரு சமூக விரோத குற்றம் என்பது அரசுக்கும், காவல் துறைக்கும், எந்த அதிகாரத்திற்கும் தெரியவில்லை என்பது இன்றைய சோகம். இதற்குக் கட்சிகள் உடன்போகின்றன. காவல் துறை உடன்போகிறது. அரசு உடன்போகிறது. இந்தியாவில் எங்கும் நடக்கும் அராஜகம் தான் இது என்ற போதிலும், தமிழ் நாட்டில் இந்த அராஜகம் நடக்கும் உக்கிரத்தில், சகஜ பாவத்தில், பல்வேறு அதிகார மையங்களின் ஆதரவில், வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திரா காந்தி சொன்னார். லஞ்சம் என்பது உலகளாவியது என்று. வாஸ்தவம். எனக்குத் தெரிந்து லஞ்சம் நிலவும் மற்ற நாடுகளில், லஞ்சம் ஒரு குற்றம் என்பது உணரப்படுவது. தண்டனைக்குரியது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தே இந்தியாவிலும் தம்மைப் பெருக்கிக் கொண்டுள்ளன. வாஸ்தவம். தில்லி அதற்கு விலக்கல்ல. ஆனால் நான் தில்லியில் இருந்த ஐம்பது வருடங்களில் எந்த மருத்துவ மையத்திலும் நான் லஞ்சம் கொடுத்து சிகித்சை பெற்றதில்லை. ஒரு மனு கொடுத்தால், ரேஷன் கார்டு என் வீடு வந்தடையும். வாக்காளர் அட்டைக்கு என் வீட்டுக்கு வந்து படிவங்களை நிரப்பிச் சென்ற பதினைந்தாம் நாள் என் வீட்டில் வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டது. என் ப்ராவிடெண்ட் பணத்தைப் பெற நான் லஞ்சம் கொடுத்ததில்ல். என் பென்ஷன் ஆர்டர் வாங்க நான் லஞ்சம் கொடுத்ததில்லை.இவை எதற்கும் நான் காத்திருக்கவில்லை. நான் அலைக்கழிக்கப்பட்டதில்லை.

இங்கு வந்ததும், நான் ஒரு ரேஷன் கார்டுக்காக எவ்வளவு அலைக்கழிக்கப் பட்டேன் என்பது ஒரு வேதனையான அனுபவம். ஒரு சாதாரண கடை நிலை ஊழியரின் அலட்சிய மனோபாவத்துக்கும், அதிகார ஆசைகளுக்கும் இரையாகிக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு உதவியவர் பூமணி. அவர் சொல்லி கமிஷனரைப் பார்க்கச் சென்ற பின்னும் என்னை இரண்டு மணி நேரம் காக்க வைத்த கமிஷனர், திரும்ப நான் அவர் முன்னின்றபோது, ஒரு ஆளைக் கூப்பிட்டு, "இவருக்கு கார்டைக் கொடுத்தனுப்பு," என்று சொல்ல, அந்த உதவியாள் அடுத்த இரண்டே இரண்டு நிமிடங்களில் ஒரு கட்டைப் பிரித்து எனக்குக் கார்டைக் கொடுத்தார். தயாராக கட்டி வைக்கப்பட்டிருந்த கார்டு என் கைக்கு வர மறுத்தது பல மாதங்களாக. உடனே பூமணியிடம் நான் நடந்த விஷயத்தைச் சொன்னேன். அவரோ, "ஆமாம், என் மூலம் காசில்லாம காரியத்தைச் சாதிச்சிக்கிட்டீங்க. எரிச்சல் படமாட்டாங்களா?" என்றார் சிரித்துக் கொண்டே. அந்த நாட்களில் ஒரு முறை அடையாறு லாட்டைஸ் ப்ரிட்ஜ் சாலையில் (இதற்கு மாறி மாறி மூன்று பெயர்கள் தரப்பட்டிருந்தன கடை போர்டுகளில்) இருந்த அவர் அலுவலகம் சென்றிருந்தேன். அந்தக் கட்டிடத்தில் விசாரித்துக்கொண்டே சென்றபோது, "அதோ அந்த ரூம் தான், போய்ப் பாருங்க" என்று இடத்தைக் காட்டி விட்டு "தானும் உருப்பட மாட்டான், நம்மளையும் உருப்பட விடமாட்டான்யா" என்று பூமணி புகழ் பாடிச் சென்றனர். அவர் காதில் விழுந்தாலும் கவலை இல்லை என்ற ஒரு சூழல் என்று நினைக்கிறேன். வாக்காளர் அடையாள அட்டை எனக்குக் கிடைக்க நான்கு மனுக்கள், ஐந்து வருடங்களாயின. இடையில் முதல் அமைச்சர் அலுவலக உயர் அதிகாரி தொலைபேசியில் காஞ்சி மாவட்டத் தலைவருக்கு இட்ட கட்டளையும் கூட பயனளிக்கவில்லை. லஞ்சம் உலகளாவியது தான்.
ஆனால் இங்கு மக்கள் தொடர்புள்ள எந்த அரசாங்க ஜன்னல் முன்னும் லஞ்சம் இல்லாது எந்த காரியமும் நடப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் என்ன ரேட் என்பது நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது போல் காரியங்கள் நடக்கின்றன. அவ்வப்போது என்ன ரேட் என்பது தான் மாறுகிறது. லஞ்சம் இல்லாது கிடைப்பது ஒன்று இருக்கிறது என்று தோன்றுகிறது. மறந்து விட்டேன். தபால் அலுவலகம் போனால், கார்டு கவர், ஸ்டாம்ப் எல்லாம் எந்த எம்.எல்.ஏ சிபாரிசும் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் இன்று வரை கிடைத்து வருகிறது. பாவம் தபால் ஊழியர்கள். வேறு எங்கு லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. தெரிந்ததைச் சொல்லி விட்டேன்.

இஸ்ரேல் ப்ரெசிடெண்ட் மீது அந்நாட்டு போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டி விசாரணை செய்கிறார். ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதம மந்திரி மீதும் கூட லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு பற்றிப் படித்திருக்கிறோம். இங்கு முதல்வரின் ஒரு உறவினர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி, "என்னை யாருன்னுடா நினைச்சிக்கிடே" என்று ஒரு காவல் அதிகாரியை கன்னத்தில் அறைகிறாள். கன்னத்தைத் தடவிக்கொண்டு முன் நின்ற அந்த காவலரிடம், இந்த இடங்களில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று அவருக்கு மேல் அதிகாரி அவருக்கு உபதேசம் செய்கிறார். காவல் துறைக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை இது. அவர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கின்றன தமிழ் நாட்டில்.
தமிழ் நாடு ஒரு தனி ரகம் தான். இங்கு லஞ்சம் என்றால் எங்கும் யாரும் முகம் சுளிப்பதில்லை. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான ஒரு நடைமுறை, யதார்த்தாமான் ஒன்றாகியுள்ளது. "ஆமாய்யா எவன்யா ஒழுங்கு இதிலே, சும்மா காரியத்தைப் பாத்துட்டுப் போவியா?.." என்ற பதில் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை, வாழும் முறையைச் சொல்கிறது.
பெருந்தலைவர் காமராஜின் பிறந்த நாள் விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வருடமும். இதில் முன்னணியில் இருப்பவர்கள் இங்குள்ள வணிகர் சமூகம். சாலைகள் எங்கும் சுவரொட்டிகளும், பானர்களும் தான் எங்கும். பெரிய பெரிய வாழ்த்து வாசங்களின் கீழ் காணப்பட்ட பெயர்கள் அனைத்தும் நாடார் பேரவையின் பொறுப்பாளர்களின் பெயர்களின் அணிவகுப்பு. அனைவரும் நாடார்கள். அதெப்படி எல்லாரும் தூத்துக்குடி, விருது நகர் நாடார்களாக இங்கு குழுமியுள்ளார்கள்? தமிழ் நாட்டின் ஒரு எளிய, பெரிய தலைவர், நாடார்களின் பிரதிநிதியாகிவிட்டார். தமிழ் நாட்டில் தான் சாதிகளை ஒழித்தாயிற்றே. சாதிகள் ஒழிந்த இடத்தில், வந்து அமர்ந்துள்ளது 'இனம், சமூகம், சமுதாயம்" போன்றவை. இதுவும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தமிழ் வாழ்க்கையில் காணும் ஒரு புதிய மாற்றம். வார்த்தைகளை மாற்றியே நாம் வாழ்க்கை மாற்றத்தைச் சாதித்து விடுகிறோம் என்று தோன்று கிறது. இதிலும் "இந்தியாவுக்கே வழ்காட்டி" தமிழ் நாடு தான் என்று நாம் சொல்லிக்கொள்ளலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். அரை நூற்றாண்டுக்குப் பின் பிறந்த மண்ணில் எஞ்சிய நாட்களைக் கழிக்கலாம் என்று வந்தேன், பழைய நினைவுகளின் தாபத்தோடு. ஆனால் பிறந்த மண்ணில் என்னென்னவோ அல்லவா மண்டி வளர்ந்து கிடக்கிறது.

வெங்கட் சாமிநாதன்/6.8.08
Copyright:thinnai.com 

**********************************************
ந‌ன்றி "திண்ணை"

பதக்கங்கள் வென்ற ஹிந்துஸ்தான வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த ஒலிம்பிக்போட்டிகள்2008 -ல் பதக்கங்கள் வென்ற இந்த மூன்று ஹிந்துஸ்தான வீரர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்....


ஒலிம்பிக்2012னிலும் பதக்கங்கள் வெல்ல வாழ்த்துகிறோம்...


Wrestling - Bronze - Sushil Kumar



Men's 10m Air Rifle - Gold Medal - BINDRA Abhinav



Men's Middle (75kg) - Bronze - KUMAR Vijender

Friday, 8 August 2008

அமர்நாத் யாத்திரையும் முகமதிய ஜிகாதும்...

கடந்த மாதம் அமர்நாத் விவஹாரங்கள் குறித்து பதிவிட்டிருந்தேன்.

http://hikari1965.blogspot.com/2008/07/blog-post.html

இவ்வார திண்ணையில் பெரியவர் மலர்மன்னன் அவர்கள் கீழ்காணும் நீண்டதோர் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20808071&format=html

முகமதியர்களின் 'ஹஜ்' யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் மான்யமாக அரசு செலவிடும் பலநூறு கோடி ரூபாய் வேர்வை/இரத்தம் சிந்தி உளைக்கும் ஹிந்துஸ்தான மக்களின் வரிப்பணம். அமர்நாத்தில் நடக்கும் இத்தகைய ஜிகாத் நடவடிக்கைகள் குறித்து இணையத்தில் எழுதிவரும் (முக‌ம‌தியர்கள் பாதிக்கப்பட்டால் பாய்ந்து வந்து குதறியெடுக்கும்) முகமதிய கூட்டங்கள் முச்சுவிடுவதாக தெரியவில்லை.

பெரும்பான்மை ஹிந்துக்களிடமிருந்தே வலுவான எதிர்வினைகள் இல்லாதபோது, இந்த முகமதிய கூட்டங்களை குறைசொல்லி என்ன பிரயோஜனம்...

பெரியவர் மலர்மன்னன் அவர்களின் திண்ணை கட்டுரை...

----------------------------------------------------------------
Thursday August 7, 2008
அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?
மலர்மன்னன்

ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் மட்டுமே வந்து வழிபட்டுச் செல்ல முடிகிற அமர் நாத் பனி லிங்க குகைக் கோயிலின் அருகாமையில் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமாகச் சிறிது சீரான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக நாற்பது ஏக்கர் நிலத்தை குகைக் கோயில் நிர்வாக அமைப்பிற்கு ஜம்முகாஷ்மீர் மாநில அரசு அளிக்கப் போக, எளிதில் பிரித்துப்போட முடிகிற தாற்காலிக அடிப்படை வசதிகள்தாம் அவை என்று தெரிந்த போதிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதிய அமைப்புகள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் நிலம் வழங்கும் முடிவை அரசு உடனடியாக மாற்றிக் கொண்டு விட்டது. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்முவில் அது முதல் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து அமர்நாத் குகைக் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் வழங்கும் முடிவை அரசு மாற்றிக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, கிளர்ச்சி செய்து வருகின்றன. அரசுத் தரப்பில் அடக்குமுறை கடுமையானதன் எதிரொலியாக, கிளர்ச்சியிலும் வன்முறை தலையெடுத்து, நாளுக்கு நாள் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் அதிகரித்து வருகின்றன.

வனத் துறையின் பொறுப்பில் உள்ள நிலப் பரப்பிலிருந்து நாற்பது ஏக்கர் கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் அதனை அரசு கோயிலுக்கு விற்றுவிடுவதாக அர்த்தம் இல்லை. ஆண்டில் பத்து மாத காலம் மனித நடமாட்டமே இருக்க முடியாத பிரதேசத்தில், மரங்கள் அடர்ந்து வளராத பொட்டல் நிலப் பரப்பில் இரண்டு மாதங்களுக்கு மட்டும் பயன்படும் விதமாக ஏராளமான யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காகக் கூட ஒரு ஹிந்து ஆலயத்திற்கு அரசு உதவலாகாது என்கிற பரந்த மனப் பான்மை காஷ்மீரத்து முகமதிய அமைப்புகளுக்கு இருப்பது கண்டு எவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதிய அமைப்புகள், அமர் நாத் கோயில் நிர்வாகத்திற்குத் தாற்காலிக உபயோகத்திற்காக நிலம் அளிக்கப்படுவதை மத அடிப்படையிலேதான் எதிர்க்கின்றன. வெளியிலிருந்து ஹிந்துக்களைக் காஷ்மீரில் குடியமர்த்தும் திட்டம் என்று அதனைக் கண்டிக்கின்றன. ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே மனித நடமாட்டம் இருக்க முடிகிற பிரதேசத்தில் மக்களைக் குடியமர்த்துதல் எப்படி சாத்தியம் என்று அவற்றிடம் கேட்பதற்கு மாறாக, தனது நிலம் வழங்கும் முடிவை மாற்றிக் கொண்டது, மாநில சோனியா காங்கிரஸ் கூட்டணி அரசு.

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகளும் முகமதிய அமைப்புகளும் ஏராளமான நில புலன்களை மடக்கிப் போட்டிருப்பதோடு, நகர்ப்புறங்களின் கேந்திரப் பகுதிகளிலேயே அரசு நிலங்களை மிக மிகக் குறைந்த தொகைக்குக் குத்தகை பெற்றுக் காலங் காலமாக அனுபவித்து வருகின்றன. இதனைக் கேட்க நாதியில்லை. ஊருக்கு ஊர் ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஓய்வு இல்லங்களைச் சகல வசதிகளுடன் அமைத்துக் கொள்வதற்கு அரசின் உதவியும் பெறப் படுகின்றன. ஆனால் பனிக் காற்று சுழன்றடிக்கும் மலைப் பாங்கான பிரதேசத்தில் தாற்காலிகமான பயன்பாட்டிற்காக நாற்பது ஏக்கர் நிலம் ஹிந்து யாத்ரிகர்களுக்கு அளிக்கப் படுவதற்குக் கடும் எதிர்ப்பு, அந்த எதிர்ப்புக்கு அஞ்சிப் பின் வாங்கும் ஒரு மாநில அரசு!

ஹிந்துஸ்தானத்திலேயே இன்று ஹிந்துக்களுக்கு இதுதான் நிலைமை. ஆனால் இது ஏதோ ஜம்முகாஷ்மீர் மாநிலப் பிரச்சினை என்பதுபோல மற்ற பகுதிகளில் மரத்துப் போன இயந்திர இயக்கம். அந்தமானிலிருந்து ஹிமாசல பிரதேசம் வரை, ராஜஸ்தான் தொடங்கி மணிப்பூர் வரை வாழும் ஹிந்துக்களோடு உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஹிந்துக்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க வரும்போது அவர்களுக்கு ஓரளவு இட வசதி செய்து கொடுப்பதற்கான முயற்சிக்குத்தான் ஹிந்துஸ்தானத்திலேயே இப்படியொரு தடங்கல். ஆனால் இது பற்றி ஹிந்து சமூகத்திடையே பெரும் எதிர்வினை ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஹிந்து அமைப்புகளும் பாரதிய ஜனதாவும் தெரிவித்த ஒருநாள் கடையடைப்பு என்கிற எதிர்ப்பு ஒன்றைத் தவிர.

ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அமர்நாத் யாத்திரைக்கு வரும் ஹிந்துக்கள் மூலம் நல்ல வருமானம் பெற்று வரும் முகமதிய வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலும் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிக வசதிகள் ஏற்பாடுகள் செய்வதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இதை வெளிப்படையாகவே சொல்லுகிற அளவுக்கு காஷ்மீரில் முகமதிய அமைப்புகளுக்குத் துணிவு இருக்கிறது. ஜம்முவில் ஹிந்துக்கள் மத வாத அடிப்படையில் கிளர்ச்சிசெய்வதாக விமர்சித்து, எதிர்க் கிளர்ச்சி செய்யவும் அவற்றுக்கு உரிமை இருக்கிறது. ஹிந்துக்களுக்குத் தான் பத்து நாட்களுக்குமேல் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு ஊரடங்குச் சட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. எனினும் துணிவு மிக்க ஜம்மு ஹிந்துக்கள் ஊரடங்குச் சட்டத்தை லட்சியம் செய்யாமல் வெளியே வந்து உரிமைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமர் நாத் பனி லிங்க வழிபாடு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலத்திலிருந்தே ஹிந்துக்களால் மேற்கொள்ளப் பட்டு வருவது. இது ஏதோ நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் யாரோ ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், அதிலும் குறிப்பாக முகமதியனாக மத மதமாற்றம் செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குஜார் ஜாதிச் சிறுவன் தற்செயலாக அமர் நாத் பனிலிங்க குகையைக் கண்டு பிடித்துச் சொல்ல, அது முதல் அங்கு மக்கள் வழிபட வரத் தொடங்கியதாகப் புனைந்துரைக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், முகமதிய அடக்குமுறையால் வழிபாடு வலிந்து நிறுத்தப்பட்ட பல புனிதத் தலங்களுள் அதுவும் ஒன்று என்பதும், பிந்தைய காலங்களில் மீட்டெடுக்கப்பட்டவற்றுள் அது ஒன்று என்பதுமே யாகும். விரிந்து பரந்த ஹிந்துஸ்தானத்திலிருந்து மட்டுமின்றி உலகம் முழுச்வதும் உள்ள ஹிந்துக்கள் புனிதத் தலமாகக் கருதி வழிபட வருகின்ற இடம் அமர் நாத் குகை.

புராணத்திற்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை. இயற்கை அமைப்பினக் கண்டு இயல்பாகவே ஆன்மிக உணர்வு கிளர்ந்தெழும் மன நிலையினைத் தொன்மைக் கால முதலே அடைந்து வந்திருப்பவன் ஹிந்து. அவனது புராணங்கள் அதைத்தான் பல உருவகங்களில் விவரிக்கின்றன.

கவியுள்ளத்திற்குத்தான் இது புரியும். இவ்வாறான தூண்டுதல்களால்தான் ஹிந்துஸ்தானம் ஓர் ஆன்மிக பூமியாக அடையாளம் காணப்பட்டது. மொத்த மனித சமுதாயத்திற்கும் முழுமையான, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மேற்கின் உலகாயதமும் கிழக்கின் ஆன்மிகமும் ஒத்திசைந்து, ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோது, கிழக்கு என்பது ஹிந்துஸ்தானத்தையே குறித்தது; கிழக்கில் சீனம் உள்ளிட்ட எத்தனையோ தேசங்கள் உண்டென்றாலும்.

ஆதியிலேயே பஞ்ச பூதங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஹிந்து வணங்கக் கற்றுக் கொண்டான். மரம் செடி கொடிகளையும் மலைகளையும் கடல்களையும் ஆறுகளையும் வணங்கினான். அது அச்சத்தினால் அல்ல, மௌட்டீகத்தினாலும் அல்லவே அல்ல. அவ்வாறு வணங்கும் மன நிலையைப் பெறுவதற்கே ஒரு பக்குவம் வரப்பெற வேண்டும். "அவனருளால் அவன் தாள் வணங்கி' என்பதுபோல. அவனது அருளைப் பெறுகின்ற பக்குவம் வந்தாலன்றி அவனை வணங்கும் பக்குவம் வரப் போவதில்லை. அவனது அருளைப் பெறும் பக்குவம் வருவதற்காக நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதுதான் இயற்கையை வணங்குதல், வழிபடுதல். சூரியனிலும் சந்திரனிலும், நட்சத்திரக் கூட்டங்களிலும் அவை வெறும் ஜடங்கள் எனக் கருதாமல் அவற்றின் தெய்வாம்சத்தைக் காணத் தொடங்கினால் இறையுணர்வு இயல்பாகவே சுரக்கும். கடல் மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடிக்குமேல் குளிர் விறைக்கும் இருண்ட குகையினுள் மேற்கூரையிலிருந்து ஒழுகியோ, தரையிலிருந்து பீறிட்டுக் கிளம்பியோ வரும் நீர் உறைந்து செங்குத்தாய் நிற்குமானால் அதனை லிங்கமாகப் பார். அந்த லிங்கத்தில் அருவுருவ சிவனைப் பார். அப்போது உனக்குத் தெரியாமலேயே உனக்குள் உருவாகத் தொடங்கும், அவன் அருளைப் பெறும் பக்குவம். உன்னதங்கள் எல்லாவற்றிலும் இறையுணர்வு பெறும் வழியைப் பார். அவை எங்கும் நிறைந்திருந்தாலும் சில இடங்களில் தீர்க்கமாய் அவை நம்மை ஈர்த்துக் கொள்கின்றன. அமர்நாத் பனிலிங்கம் அவற்றுள் முக்கியமானது. முற்றிலும் மனித அத்துமீறலின் விளைவாக புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருவதாலும், சுற்றுப்புறச் சூழலின் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுவதாலும் அமர் நாத் பனி லிங்கம் சீர் குலையத் தொடங்குமேயானால், என்ன ஆயிற்று அதன் தெய்வீக சக்தி என்று எள்ளி நகையாடுகிற பகுத்தறிவு எனக்கு இல்லை, அப்படியொரு பகுத்தறிவு எனக்குத் தேவையும் இல்லை. மாறாக, கல்லாக இறுகிப்போன மனிதமனம் இறையுணர்வு பெற்று இளக வாய்ப்பளித்த இன்னொரு தெய்வாம்சம் மனிதனின் அறியாமையால் விடைபெற்றுக் கொண்டதாய் துயரம் கொள்வேன்.

ஆண்டு தோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்கள்தான் அமர்நாத் பனிலிங்க வழிபாட்டிற்கான தருணம். ஆண்டுக்கு ஆண்டு அதனை தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழிபாட்டுக்கென வரும் ஹிந்துக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகளும் திடீரெனத் தொடுக்கும் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும், குண்டு வீச்சுகளுக்கும் அஞ்சாமல் அவர்களின் யாத்திரை சளைக்காமல் தொடர்கிறது. வெறும் நடைப் பயணமாகவே வரும் அவர்கள் தங்குவதற்குச் சரியான இட வசதி இல்லை. கான்வாஸ் துணிகளால் அமைக்கப்படும் முகாம்களில்தான் அவர்கள் தங்க வேண்டும். தரை வெறும் மண்தரைதான். உண்பது இன்றியமையாததாக இருப்பதால் கழிவுகளை வெளியேற்றுவதும் அவசியமாகித் தொலைக்கிறதே! லட்சக் கணக்கில் வந்து குவியும் ஆண், பெண் யாத்ரிகர்களுக்கு எவ்வளவுதான் வசதிகள் செய்துகொடுத்தாலும் அவை போதுமானவையாக இருப்பதில்லை. அளிக்கப்படும் வசதிகள் முழுமையாகவும் இல்லை. மழை, பனிப்பொழிவு என்றெல்லாம் பருவ நிலை மோசமாகும் நாட்களில் முகாம்களில் வசித்தல் பெரும் அவஸ்தையாகிப் போகும்.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட இரு மாத காலத்தில் லட்சக் கணக்கில் வரும் யாத்திரிகர்களுக்காகத் தாற்காலிகமாகச் சிறிது வசதி கூடிய, எளிதில் பிரித்துப் போட்டு விடக் கூடிய தங்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்க இடம் அளிக்குமாறு அமர்நாத் பனி லிங்க குகைக்கோயில் நிர்வாக அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே ஜம்முகாஷ்மீர் மாநில அரசு தனது வனத் துறையின் பொறுப்பில் உள்ள நிலத்தில் நாற்பது ஏகரா ஒதுக்குவதாக உத்ரவிட்டது. பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முகமதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு அஞ்சி அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஓர் அரசு அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டுமேயன்றி மிரட்டல்களுக்கு அல்ல. எனவே தனது உத்தரவுக்குத் தாமதமின்றி புத்துயிரூட்ட வேண்டும் என்று ஜம்முகாஷ்மீர் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் உலகம் முழுவதிலிருந்தும் கட்டளை பறக்க வேண்டும். ஜம்மு ஹிந்து அமைப்புகளுக்குத் தங்கள் ஆதரவு உண்டு எனவும் அதில் தெளிவு படுத்தப் பட வேண்டும். ஹிந்துஸ்தானத்திலிருந்து அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள் என யார் வந்தாலும் அவர்களிடம் ஒரு சிறு கடிதமாக இந்த உணர்வை ஹிந்துக்கள் வெளியிட வேண்டும். ஹிந்துஸ்தானத்தில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் எங்களின் கருத்தைச் சொல்லுங்கள் என்று வலியுறுத்த வேன்டும். இது பற்றி றுங்கள் நிலை என்ன என்று கேட்டு, மழுப்பாமல் பதில் சொல்லுமாறும் கூற வேண்டும்.செய்யுமா சர்வ தேச ஹிந்து சமுதாயம்?

இது ஹிந்து ஆலயம் ஒன்று சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதை ஹிந்துக்களின் பிரச்சினையாகத்தான் காண வேண்டும். இதில் உள்ள நியாயத்தை ஒப்புக் கொண்டு மற்ற சமயத்தினரும் ஆதரவுக் குரல் கொடுக்க முன்வந்தால் நன்றி, மகிழ்ச்சி.

Copyright:thinnai.com 

Thursday, 7 August 2008

ஆந்திரமாநில அரசின் ஓட்டு பொறுக்கும் அரசியல் _ முகமதியர்களுக்கு 4% இடஒதுக்கீடு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையை மனதில்கொண்டு பார்த்தால், அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் புரியாமல்போக வாய்ப்பில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தில், ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுவந்த ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சில சமுதாயத்தினரை, பிற்பட்டோர் பட்டியலில் இருந்து ஆந்திர அரசு நீக்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

முகமதியர்க‌ளின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் இயற்றப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு சட்டத்தால் சமுதாயத்தில் மேலும் பிளவு ஏற்படவே வாய்புகள் அதிகம். இடஒதுக்கீடு சட்டத்தால் முகமதிய சமுதாயம் மேம்படும் என்ற கருத்தில் துளியும் அர்த்தமில்லை.

ஆந்திர முகமதியர்க‌ளில் 65 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக இன்றய தினமணி செய்தியொன்று தெரிவிக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மிகத்தெளிவானது. அவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 18 சதவீதம் மட்டுமே. சமஉரிமை கொடுத்திருப்பதாக முகமதிய‌கர்கள் பீற்றிக்கொண்டாலும், ஆந்திர மாநில‌ முஸ்லிம் பெண்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதரஸாக்களை மட்டுமே கல்விநிலையங்களாக கொண்ட இந்த சமுதாயத்துக்கு இடஒதுக்கீட்டால் என்ன நன்மை விழைந்துவிடப்போகிறது.

மீண்டும் மீண்டும் அத்துமீறும் பாக்கிசுதான்

ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடந்த ஒருவார காலமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுவருகிறது.

இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து 16 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததுவருவதும் சகஜமாகிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேசி சண்டை முடிவுக்கு வந்தாலும், மீண்டும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்கிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 19 முறை பாகிஸ்தானிய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்திருக்கிறார்.

இவ்வாரம் புதன்கிழமை பகல் 12.15 மணிக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய ராணுவச் சாவடியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தீவிரவாதிகளா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினரா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறன. தீவிரவாதிகளையும் பாக்கிஸ்தான் ராணுவத்தையும் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை.

எல்லைப் பகுதி மாநிலங்களின் உள்ள பதற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ராணுவஉதவியுடன் தீவிரவாதிகள் எல்லையை கடந்துவருவதுதான் காலகாலமாக நடந்துவரும் நிலை. பாரத இராணுவத்தின் பதிலடியில் பல பாகிஸ்தான் ராணுவ பன்றிகள் அழிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தீவிரவாதிகளும் பலமுறை ஊடுருவ முயற்சி மேற்கொண்டு தோல்வி கண்டுள்ளனர்.

என்றாலும், கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் ஈகிள் போஸ்ட் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எல்லையோர ராணுவ முகாமைச் சேர்ந்த ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாரத மாதாவின் எல்லைகளை காக்கும்பொருட்டு இன்னுயிர் நீத்த அந்த ஜவானுக்கு எனது வணக்கங்கள்.

ஜெய்ஹிந்த்

தொடர் குண்டுவெடிப்புகளை எதிர்பார்கலாம்... சிமி இயக்கத்தின் மீதான தடை நீங்க வாய்ப்பு

2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.


தடை நீட்டிப்புக்கு தகுந்த ஆதாரங்களை மத்திய அரசு சமர்பிக்கத்தவறியதாக குறிப்பிட்டு இந்த முகமதிய இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை மேல் முறையீடு செய்தது. மத்திய அரசு வழக்கறிஞர்களால், சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதுகுறித்த மத்திய‌ உளவுத்துறை அளித்தத் தகவல்களைகளையும், தீர்ப்பாயம் இத்தகவல்களை முழுமையாக கவனிக்கவில்லை என்று வாதிட்டு, தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

ம‌த்திய‌ அர‌சின் மெத்த‌ன‌ப்போக்கு தொட‌ருமானால், இந்த அமைப்பின் மீதான தடைகள் நீங்க வாய்ப்புகள் அதிகமாகும்.

தினமணி செய்தியொன்று கீழ்காணும் சுட்டியில்....‌

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20080806123857&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/7/2008&dName=No+Title&Dist=0