2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தடை நீட்டிப்புக்கு தகுந்த ஆதாரங்களை மத்திய அரசு சமர்பிக்கத்தவறியதாக குறிப்பிட்டு இந்த முகமதிய இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை மேல் முறையீடு செய்தது. மத்திய அரசு வழக்கறிஞர்களால், சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதுகுறித்த மத்திய உளவுத்துறை அளித்தத் தகவல்களைகளையும், தீர்ப்பாயம் இத்தகவல்களை முழுமையாக கவனிக்கவில்லை என்று வாதிட்டு, தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் மெத்தனப்போக்கு தொடருமானால், இந்த அமைப்பின் மீதான தடைகள் நீங்க வாய்ப்புகள் அதிகமாகும்.
தினமணி செய்தியொன்று கீழ்காணும் சுட்டியில்....
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20080806123857&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/7/2008&dName=No+Title&Dist=0
No comments:
Post a Comment