Dinamani.com
First Published : 01 Dec 2009 12:53:52 AM IST
Last Updated : 01 Dec 2009 03:52:07 AM IST
லே, நவ. 30: ஜம்மு காஷ்மீர்மாநிலம் லடாக் மாவட்டத்தில் உள்ள டெம்ஷோக் பகுதியில் தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இணைப்புச்சாலைப்பணி சீன ராணுவத்தின் ஆட்சேபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஒரு மாதத்துக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. லே மாவட்ட தலைமையகத்திற்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் இந்திய எல்லைப் பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை போடும் பணியை அக்டோபர் மாதத்தில் தடுத்து நிறுத்தியது சீன ராணுவம் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தை சீனாவிடம் மத்திய அரசு எழுப்பும் என்று தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு. லடாக், ஹிமாசலப்பிரதேசம்-திபெத்தை ஒட்டிய ஸ்பிடி மற்றும் திபெத் ஆகிய மூன்று பகுதிகளும் சந்திக்கும் இடமான இந்த கயா சிகரப்பகுதியையொட்டி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதே பகுதியில் கடந்த ஜூலையில் சீன ராணுவம் ஒன்றரை கிமீ தொலைவுக்கு இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மலைகள், பாறைகளில் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தி சீன மொழியை எழுதினர்.
இப்போது வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணியை தடுத்து நிறுத்தியுள்ளது. சீன-இந்திய கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் இரு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சாலை மூலம் இணைக்கத் திட்டமிட்ட லே மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் அதற்கான பணியை மேற்கொண்டது.
சுமார் 3.8 கிமீ தொலைவுக்கு சாலைப் பணி நடந்த நிலையில் சீன ராணுவத்தினர் குறுக்கிட்டு சர்ச்சைக்குள்ள பகுதி இது; இங்கு சாலை போடுவதை அனுமதிக்கமுடியாது என ஆட்சேபித்தனர். இது பற்றி இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேசியாக வேண்டும் எனவும் கூறினர்.
இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு மாநில அரசு கொண்டு சென்றுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். சாலை போடும் பணியை ஒரு மாதத்துக்கு முன் சீன ராணுவம் தடுத்து நிறுத்திய விஷயத்தை டோம்ஷு கிராம தலைவர் தன்னிடம் தெரிவித்ததாக லடாக் தன்னாட்சி கவுன்சில் தலைமை அதிகாரி செரிங் டோர்ஜி கூறினார்.
சாலை போடப்பட்ட பகுதி இந்தியாவுக்கு உட்பட்டதுதான். ஆனால் சீன ராணுவத்தினர் சர்ச்சைக்கு உரிய பகுதி என்று கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர் என்றும் டோர்ஜி தெரிவித்தார். இந்திய எல்லைக்குட்பட்ட இந்த பகுதிக்குள் சமீப காலமாக சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி நுழைகிறது என்றும் டோர்ஜி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சாலை போடும் பணி பாதி முடிக்கப்பட்ட நிலையில் சீன ராணுவம் அந்த பணியைத் தடுத்து நிறுத்திய தகவலை அங்குள்ள கிராமவாசிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று அந்த பகுதி மக்களவை உறுப்பினர் ஹசன் கானும் தெரிவித்தார். மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட துணை ஆட்சியர் அஜித் குமார் சாஹு பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மாநில அரசிடமும் முதல்வரிடமும் தாக்கல் செய்துள்ளார். சீன-இந்திய எல்லையில் உள்ள கடைகோடி பகுதி இது. கரடுமுரடான மலைகளும் பாறைகளும் நிறைந்த இந்த பகுதி கிராமங்களை சாலைகளால் இணைத்தால் பொது மக்கள் எளிதில் சென்றுவர உதவுவதுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் நியோமா மற்றும் டெம்ஷோக் பகுதியில் 7 இணைப்புச் சாலைகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. சீனாவுடன் 3000 கிமீ நீள எல்லையைக்கொண்டுள்ளது இந்தியா. சீன உயர் தலைவர்கள் தூண்டுதலில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பதில்லை என்று ஏற்கெனவே வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Showing posts with label சீனா. Show all posts

Tuesday, 1 December 2009
Tuesday, 15 September 2009
எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா

எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா
ம. விஸ்வநாதன்
First Published : 09 Sep 2009 01:22:00 AM IST
Last Updated :
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கியா மலைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தூரம் ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, அதில் சீனா என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.
22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் கியா மலை அமைந்துள்ளது.
இங்கு, ஜுலுங் லா கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர், மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தைப் பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஜூனில் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒருபுறம் சீனா, இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மறுபுறம் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானையாவது எதிரி நாடு என இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால், சீனாவை இந்திய அரசு அப்படி நினைத்துப் பார்ப்பதில்லை.
அதன் பலனைத்தான் 1962-ல் இந்தியா அனுபவித்தது. 1950-களில், காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சாய் சினை (சுமார் 37 ஆயிரம் சதுர கி.மீ.) தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டுவந்தது.
அத்துடன், ஜின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையில் 1951-ல் அக்சாய் சினில் சீனா சாலை போட்டது. சீனா இப்படி ஒரு சாலை போட்டதை 1957-ல் தான் இந்தியா தெரிந்து கொண்டது.
இந்தியாவின் பகுதிகளான அருணாசலப் பிரதேசம் (இதை தெற்கு திபெத் என சொல்கிறது சீனா), சிக்கிம், அசாமின் சில பகுதிகளை சீனா தனது என உரிமை கொண்டாடி வருகிறது.
இப்படிப் பிரச்னைகள் இருந்தபோதும், எல்லைகள் குறித்து இந்தியாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை என தொடர்ந்து சீனா கூறிவந்தது. 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை வகுத்து அதன்படி இருநாடுகளும் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் என அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முழங்கினார்.
ஆனாலும், தொடர்ந்து தனது வரைபடங்களில் இந்தியாவின் 1.20 லட்சம் சதுர கி.மீ. பகுதியை சேர்த்தே சீனா வெளியிட்டது.
1959-ல் திபெத்தில் போராட்டம் வெடித்தபின் இந்தியாவில் தஞ்சம்புகுந்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இருநாடுகள் இடையேயான உறவைப் பாதித்தது.
அக்சாய் சின் அனுபவம் காரணமாக, இந்தியா தனது பகுதியைப் பாதுகாக்க 1962 ஜூனில் எல்லையில் படைகளைக் குவித்தது. இருபுறமும் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், 1962 அக்டோபர் 3-ம் தேதி புது தில்லிக்கு விஜயம் செய்த சீனப் பிரதமர் சூ யென்லாய் இந்தியாவுடன் போர் கிடையாது என அறிவித்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் போர் வெடித்தது. இந்தியத் தரப்பில் 3,128 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3,123 வீரர்கள் சீன ராணுவத்திடம் பிடிபட்டனர்.
சர்வதேச நெருக்கடி அதிகரித்ததையடுத்து நவம்பர் 20-ம் தேதி போர் நிறுத்தத்தை சீனா தன்னிச்சையாக அறிவித்தது. தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததாலும், எதிரியை சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் இந்தப் போரில் இந்தியா தலைகுனிவைச் சந்தித்தது.
தற்போதும், முன்பிருந்ததைப் போன்றே சூழ்நிலை உள்ளது.
சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக மாறிவருவதைச் சீனாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக மாறினால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலுக்கு அதிக மதிப்பு ஏற்படும் என்பதை சீனா அறிந்து வைத்துள்ளது.
அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை ஆக்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவுதந்த போதிலும் சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது.
இந்தியாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவைக் குறைந்தது 20 நாடுகளாக உடைக்க வேண்டும் என அண்மையில் சீன இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு, நமது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சென்று வந்தால், சர்ச்சைக்குரிய பகுதி அது என சீனா அங்கலாய்க்கிறது.
இந்தியாவை தனது எதிரியாகவே கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் சீனா செய்து வருகிறது.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்கு உதவி செய்து, அங்கு கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ள சீனா வழிவகை செய்து கொண்டுவிட்டது.
நேபாளத்தில் தனது சீடர்களை (மாவோயிஸ்டுகள்) வளர்த்துவிட்டு அங்கும் தனது மேலாண்மையை சீனா நிலைநிறுத்தி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் மீதான தாக்குதலில் கூட சீன மாவோயிஸ்டுகளின் பின்னணி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இரும்புத் திரை ஆட்சி நடந்து வருவதால் அது எந்த அளவுக்கு அணுகுண்டுகளையும், ஆயுதங்களையும் பெருக்கிவைத்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
இப்போது ஹெலிகாப்டர் அத்துமீறல், இந்திய எல்லைக்குள் புகுந்து மலைப்பகுதிகளில் சீனா என எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.
வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் மீண்டும் அதையே அனுபவிக்க நேரிடும். இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகளில் கால் பதித்துள்ளதுடன் எல்லைகளிலும் இந்தியாவுக்கு பிரச்னைகளை சீனா உருவாக்கி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்திவந்தாலும், 1962-ல் ஏமாந்தது போல மீண்டும் ஒரு முறை ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(c) dinamani.com

அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!
அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!
First Published : 14 Sep 2009 12:43:08 AM IST
Last Updated :
லே (காஷ்மீர்), செப். 13: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.
லடாக் பகுதியில் சப்தமே இல்லாமல் ஆக்கிரமிப்பு பணியை அரங்கேற்றும் சீன ராணுவம், சில கட்டுமானப் பணியையும் தொடங்கியுள்ளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு இடையே உள்ள கியா மலைப்பகுதியில் சீன ராணுவம் புகுந்து சிவப்பு சாயத்தை பூசிச் சென்றதாக அண்மையில் புகார் எழுந்தது.
இதுபோன்ற நிலையில் இந்திய பகுதியில் கட்டுமானப் பணியை சீனா தொடங்கியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே 1962-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர் தற்போதுதான் இந்திய பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானப் பணியையும் சீனா தொடங்கியுள்ளதாக முதல்தடவையாகப் புகார் எழுந்துள்ளது.
லடாக்கில் காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வீரர்களை நிறுத்தவும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் நடவடிக்கையை கண்காணிக்கக் கேமரா பொருத்தவும் சீனாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த பகுதியில் கட்டுமானப் பணி செய்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரகோரம் மலைத்தொடர் புவியல் ரீதியாக இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங் பகுதிக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் மத்தியில் இந்த காரகோரம் மலைத்தொடர் உள்ளது.
இந்த பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பர். மற்ற பகுதிகளைவிட இங்கு கூடுதல் வீரர்களும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இதையும் மீறி சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது அத்துமீறிய செயலில் ஈடுபட முயல்கின்றனர்.
சமீபகாலமாக அவர்கள் இந்திய பகுதியை துணிந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.
சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஓய்வு பெற்ற துணை கோட்ட ஆட்சியர் நியோமாவை நியமித்தது. அவரும் எல்லைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து திரும்பிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் நாடோடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக இந்த நாடோடி மக்களை சீன ராணுவத்தினர் மிரட்டுகின்றனர். அவர்களை இடத்தைக் காலி செய்யுமாறு அச்சுறுத்துகின்றனர். அந்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் சீன ராணுவத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர் என்றார் நியோமா.
ராணுவம் மறுப்பு: இந்திய எல்லைப் பகுதியை சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.
எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணி எதையும் செய்யவில்லை. நிலத்தை தோண்டும் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. இந்த பணியைக்கூட அவர்களது பகுதியில்தான் செய்துவருகிறார்கள் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)