Friday, 27 July 2007

ஜடாயு கட்டுரை - மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்

1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம் தோன்றிய இடம் புனே. அதனால் நகரின் பல இடங்களில் விழாப் பந்தல்களில் அழகிய கணபதி அலங்காரங்களோடு, அந்தந்த வருடத்தின் முக்கியமான சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது போன்று சிறிய, பெரிய கண்காட்சிகள் மாதிரியும் அமைத்திருப்பார்கள். அந்த வருடம் எல்லாப் பந்தல்களிலும் ஒரே ‘தீம்’ தான் : மும்பை குண்டுவெடிப்புகள், அதற்கான சதித்திட்டம், அதில் ஏற்பட்ட மரணங்கள், மனித சோகங்கள். இவற்றை கோட்டோவியங்களாகவும், பொம்மைகளாகவும், வாசகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மரணமடைந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியும், இந்த பெரும் கொடுமையைச் செய்த தாவூத் இப்ராகீம், டைகர் மேமன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு கடும் தண்டனையும் விநாயகர் வழங்குவார் என்பதாகவும் சில காட்சிகள் இருந்தன.அந்த வருடம் மார்ச் மாதம் ஒரே நாளில் 12 இடங்களில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்புகள் 257 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்டு, இன்னும் 800 பேரைக் காயப் படுத்தி அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்ததோடல்லாமல், நாட்டின் பொருளாதாரத் தலைநகரையே ஸ்தம்பித்து செயலிழக்கச் செய்தன.

14 ஆண்டு கால நீதிமன்ற வாசத்திற்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்புகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மாஹிம் மீனவர் குப்பம் பகுதியில் கையெறி குண்டுகளை வீசி எறிந்து 3 பேர் இறப்பதற்குக் காரணமான 4 தீவிரவாத அடியாட்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவர்களில் ஒருவரான முகமது யூசுஃப் ஷேக் மத்திய மும்பையில் ஒரு ஸ்கூட்டர் நிறைய 15 கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி நிறுத்தியிருந்தார் – தெய்வாதீனமாக அவை வெடிக்கவில்லை. இருப்பினும், இந்த சமூக விரோத சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவருக்கு அளிக்கப் பட்ட தண்டனை நியாயமானது தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோடே குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கும் 16 குற்றவாளிகளில் ஒருவரான சுங்கவரித்துறை அதிகாரி சோம்நாத் தாபா, ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் கடற்கரை வழியாக மும்பை நகரத்துக்குள் கடத்திக் கொண்டு வரப் பட்டதற்கு உடந்தையாக இருந்ததற்காக மரணை தண்டனை வழங்கப் படவேண்டியவர் எனினும் அவர் புற்றுநோயால் அவதிப் படுவதன் காரணமாக இது ஆயுள் தண்டனையாக்கப் பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ஜிகாதி தீவிரவாத முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற, இந்தச் சதியின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் தப்பிக்க உதவிசெய்த ஜாகீர் ஹுசைன் ஷேக் உள்ளிட்ட 3 பேருக்கும் மரணதண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜர் படுத்தப் பட்ட 100 பேரில் இதுவரை 91 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு தரப்பட்டு விட்டது. மீதமிருக்கும் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இதே போன்ற கடும் தண்டனைகள் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 1992 டிசம்பரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டிட இடிப்புக்கு பழி வாங்குவதற்காகவே இந்தக் குற்றவாளிகள் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்கள் தரப்பில் இந்தப் படுகொலைகளுக்கான நியாயம் இருப்பதாகவும் வாதிட்டனர். இத்தகைய வாதங்களை போதிய ஆதாரமில்லாதவை என்று கூறி நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் சென்று வாதிடும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், சாட்சிகளும், நிரூபணங்களும் மிக வலுவாக உள்ளதால் உச்சநீதி மன்றம் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பையே வழிமொழியும்.

இந்த வழக்கு நடந்து வந்த காலங்களில், மும்பை பொதுமக்களும் சரி, ஊடகங்களும் சரி, இந்தச் சம்பவத்தையும், பாதிக்கப் பட்டவர்களின் சோகங்களையும் மறக்கவில்லை. அவை தொடர்ச்சியாக நினைவூட்டப் பட்டுக் கொண்டே இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அனுராக் கஷ்யப் இயக்கிய கறுப்பு வெள்ளி (Black Friday) என்ற குறிப்பிடத்தக்க இந்தித் திரைப்படமும், சில குறும்படங்களும் கூட வெளிவந்தன. 2004, 2005 ஆம் வருடங்களில் ஏற்பட்ட சில சிறு குண்டுவெடிப்புகளும், 2006 ஜூலை மாதம் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட ரயில் குண்டுவெடிப்பும், இந்த தீவிரவாதத்தின் கோர முகத்தினை மீண்டும் மும்பை மக்களுக்கு வெளிப்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, 1993 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த 18 முக்கிய குற்றவாளிகளுக்காக வாதாடி வந்த இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞர்களில் ஒருவரான நிதீன் பிரதான் அவர்களுக்காக தான் வாதாடப் போவதில்லை என்று ஜூலை 2006ல் வெளிப்படையாக அறிவித்தார். ரிடீஃப்..காம் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் முதலில் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத் தலைவர்கள் தங்கள் சமூகம் அனியாயமாகக் குற்றம் சாட்டப் படுவதாகக் கூறியதைக் கேட்டு அதில் நியாயம் இருப்பது போலத் தோன்றியதால் அவர்கள் சார்பாக வழக்காட ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வது தெரியவந்ததும் அதிலிருந்து விலகுவதாகும் கூறினார்.

11 ஜூலை,2006 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அண்மையில் 11 ஜூலை, 2007 அன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான ஆங்கில, இந்தி ஊடகங்கள் இந்த குண்டுவெடிப்பால் சிதறிய கனவுகளையும், தொலைக்கப் பட்ட வாழ்க்கைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தன. இந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் இதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் “இந்த கொடுஞ்செயல் செய்ததில் தங்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லை” என்று கடுத்த முகங்களுடன் அளித்த வாக்குமூலத்தையும் ஊடகங்கள் தவறாமல் மக்களிடம் கொண்டு சென்றன. இந்த வழக்கும் விரைவில் விசாரிக்கப் பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப் படலாம் என்று எண்ணுவதற்கு முகாந்திரம் இருக்கிறது.

இந்தப் பின்னணியில், 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்குக்கான தீர்ப்புகள் ஆகஸ்டு முதல் தேதி அன்று அறிவிக்கப் படும் என்று செய்திகள் வந்துள்ளன. இது பற்றி விவாதிக்க ஜூலை-27 அன்று ஒரு கூட்டம் நடைபெறும் என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் சி.அபுபக்கர் கூறியிருக்கிறார்.

1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் உயிரைப் பறிப்பதற்காகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காகவும் திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு 8 ஆண்டுகளாக்ச் சிறையில் இருப்பவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.

தொழில் நகரமான கோவையின் அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவித்த இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், அதுவரை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முளைப்பதைக் கண்டும், காணாமலும் இருந்த தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செயலில் இறங்கி இந்த இயக்கங்களின் எல்லாத் தொடர்புகளையும் ஆணிவேர் வரை சென்று தீவிரமாக ஆராய்ந்து புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பிடித்து, இந்த இயக்கங்கள் செய்திருந்திருக்கக் கூடிய வேறு பல குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அஸ்ஸாம், மும்பை, தில்லி என்று பல நகரங்களிலும் வலைவீசி குற்றவாளிகள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சமீபகால வரலாற்றில், இது போன்று மிகத் துல்லியமாக ஒரு சந்தேக இழையையும் விட்டுவைக்காமல் ஒரு பயங்கரவாதச் சதியில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியற்கான உதாரணங்கள் மிகச் சிலவே உண்டு.

ஆனால், இப்படி ஆரம்பித்த இந்த விசாரணை, கால ஓட்டத்தில் மிக மோசமான அரசியல் நிர்ப்பந்தங்களை சந்தித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாற்றல்கள், அவர்களது சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இவை இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் விசாரணைகள் முடிந்து, இப்போது தீர்ப்ப்புகள் வரப்போகின்றன.திரும்பிப் பார்க்கையில், கோவை மற்றும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த பயங்கரவாதச் செயலையும், அதன் பின்னணியையும், பற்றி ஒரேயடியாக மற்ந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சிறையில் இருக்கும் தீவிரவாத குற்றவாளிகளுக்கு ராஜோபசாரம் நடப்பது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. மதானிக்கு சிறையில் ஆயுர்வேத மசாஜ், ஸ்பெஷல் கோழிக்கறி இவை வழங்கப் படுவது பற்றிய செய்திகள் வந்தன. கேரள சட்டசபை உறுப்பினர்கள் மதானி என்கிற இந்த குற்றவாளியை தமிழக சிறைகளில் “துன்புறுத்துவதாகவும்” அவரை விடுவிக்கவேண்டும் என்றெல்லாம் கூட கோரிக்கை வைத்தனர். இவ்வளவு சீரியஸான விஷயத்தை எதிர்த்து ஒரு கண்டனம், ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இங்கு நடத்தப் படவில்லை. மாறாக, சிறைகளில் “துன்புறும்” தீவிரவாதிகளது “மனித உரிமை”களுக்கு வக்காலத்து வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சில முற்போக்குவாதிகள் அவைகளில் சென்று இந்த மனித மிருகங்களுக்கு தங்கள் பரிவையும், கனிவையும் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு அடங்கி நடக்கும் கோடிக் கணக்கான சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும், நலவாழ்வையும் விட தீவிரவாதிகளுக்கு தரப் படும் வசதிகளும், உரிமைகளும் தான் முக்கியமானவையாக அரசும், அறிவுஜீவிகள் சிலரும் கருதும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது.

இந்த சூழலில் வரப் போகும் கோவை தீர்ப்புகள் மும்பை தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று இயற்கையாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. கோவையைக் கோரமாக்கிய கொடியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கி, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் இழப்புகள், துயரங்கள், வேதனைகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் எடுத்துச் சொல்லப் பட்டதாகதவே தெரியவில்லை.

சமீபத்தில், “ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்” என்ற இந்த வலைப் பதிவில் சுட்டியிருந்த வீடியோ சுட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடச் சென்று, உடல் சிதறி இழந்த மகனைப் பற்றி மீளமுடியாத துயரத்துடன் நினைவு கூறும் தாய். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் குண்டு வெடித்ததால் அருமை அண்ணனை இழந்த சகோதரி. மகனையும், அவன் இறந்த சோகத்தால் மறைந்த கணவனையும் பறிகொடுத்து நிற்கும் அபலைப் பெண். இவர்களது வேதனையைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது. இந்தக் கதி செய்தவர்களை சும்மா விடக் கூடாது, அவர்கள் உடல் சிதறி சாக வேண்டும் என்று ஆற்றாமையில் சாபமிடுகிறார்கள் இந்த அல்லலுற்றவர்கள்.

அந்த கண்ணீருக்குப் பதில் சொல்லும் பொறுப்பு வரப் போகும் நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு இருக்கிறது.

திரு. மலர்மன்னன் சி.பி.காம் கட்டுரை

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்
மலர் மன்னன் SIFY.COM

செய்தித் தாள்களை கவனமாகப் படிப்பவர்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்: சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாலஸ்தீனிய அதிபர் யாசர் அராபத், மாபெரும் இஸ்லாமிய நாடான இந்தியாவுக்கு வருவதில் தாம் மிகவும் மகிழ்வதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மதச் சார்பற்ற எங்கள் நாட்டை இஸ்லாமிய நாடென்று அவர் எப்படிக் கூறலாம் எனக் கேட்டனர். அதற்கு யாசர் அராபத் மிகவும் அலட்சியமாக, உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் முகமதியர்கள் உள்ள நாடு இந்தோனேசியா. அதற்கு அடுத்த படியாக முகமதியர்களின் ஜனத்தொகை அதிகம் உள்ள நாடு இந்தியாதான். எனவே இந்தியாவை இஸ்லாமிய நாடு என்று குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை என்றார்.

யாசர் அராபத் ஹிந்துஸ்தானத்தை இஸ்லாமிய நாடு என்று வர்ணித்தமைக்கு நியாயப்படி நமது மைய அரசு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அராபத்தைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்வதில் ஆரம்ப முதலே அதிக ஆர்வம் காட்டி வந்த நமது மைய அரசு, நாசூக்காகக்கூட அவர் பேச்சுக்குத் திருத்தம் சொல்லவில்லை. ஹிந்துஸ்தானத்தில் முகமதியரைக் காட்டிலும் ஹிந்துக்களின் தொகைதான் மிக மிக அதிகம்; ஆனாலும் எங்கள் தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க நாங்கள் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பதே சிறுபான்மையினர் தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள இடமளிப்பது போலாகிவிடும் என அஞ்சுகிறோம் என்று அராபத்துக்கு முகம் கோணாமல் எடுத்துச் சொல்ல அன்றைய ஆட்சியாளருக்குத் துணிவு இருக்கவில்லை. விருந்தினராக வந்திருப்பபவர் மனம் வருந்த இடமளிக்கலாகாது என்கிற நல்லெண்ணம் உண்மையை எடுத்துச் சொல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டது. எல்லாம் 'அதிதி தேவோ பவ' என்கிற ஹிர்து தர்மப் பண்பாட்டால் வந்த வினை!


யாசர் அராபத் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த போதிலிருந்தே அதிகாரபூர்வமாக அவருக்கு ஆதரவு அ:ளித்து வந்த நாடுதான், நமது நாடு. இஸ்ரேலுக்கு எதிராக அந்த இயக்கம் நடத்திய பயங்கரவாதச் செயல்களுக்கு அளவே இல்லை. விளையாட்டில் அரசியல் கூடாது என்று உபதேசம் எல்லாம் செய்வர்கள். ஆனால் மேற்கு ஜெர்மனியில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடந்த போது அவற்றில் பங்கேற்க வந்த இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் கூடாரம் மீது வஞ்சகமாகக் குண்டு வைத்து அவர்களைக் கூண்டோ டு கொன்று குவித்தது, அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம். அந்த இயக்கம் அரசியல் முகமூடி தரித்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டபோதிலும் முகமதிய மதத்தை முன்னிறுத்தி மதச் சார்புடன்தான் பயங்கரவாதச் செயல்களைச் செய்து வந்தது. சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தாம் சார்ந்துள்ள முகமதிய மதத்தின் அடிப்படையில்தான் அராபத்தின் இயக்கத்தை ஆதரித்தன. பாலஸ்தீனிய விடுதலைப் படை, யூதர்களுக்கு எதிராக ஜிகாது செய்து வருவதாக!

அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியம், வரலாற்றுப் போக்கு, சமூக அமைப்பின் உள் விவகாரம் ஆகியவறில் எல்லாம் சிறிதளவும் பரிச்சயம் இல்லாத, இவை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கரையும் இல்லாத, ஹிந்துஸ்தானத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சிறுபான்மையினரின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தால் போதும் என்பதைத் தவிர வேறு ஏதும் தெரியாத, பிரதமராக இருந்தவரின் மனைவி என்கிற தகுதியைத் தவிர வேறு ஒரு சிறப்பும் இல்லாத அந்நிய தேசத்துப் பெண்மணி சோனியா காந்தியின் பினாமி என்கிற பிரபையைத் தாங்கியிருப்பவர்தான் மன்மோகன் சிங் என்னும் கருத்து வலுப் பெறுமாறுதான் அவரது போக்கு உள்ளது.


இன்றைக்குப் பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அங்கெல்லாம் பலவாறான சங்கடங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சவூதி அரேபியா போன்ற சில தீவிர மதச் சார்பு நாடுகளில் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். அனால் அந்தந்த நாடுகளில் ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை நடத்திவரும் நம் நாட்டுத் தூதுவர்கள் இது பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்பட்டதில்லை. அவர்கள் தமது கடமையெனக் கருதுவதெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வரும் அரசியல்வாதிகளுக்கு எல்லா வசதிகளும் செய்து தருவதும், படப்பிடிப்பிற்காக வரும் சினிமா நட்சத்திரங்கள் பின்னால் அலைவதும், சுதந்திர தினம் போன்ற சந்தர்ப்பங்களில் மதுபான விருந்து அளிப்பதும்தாம். நமது மைய அரசும் நம்முடைய தூதுவர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே எனக் கவலைப்பட்டதில்லை.
ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக. நமது வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரிகளும் அதையே திருப்பிச் சொல்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள நமது தூதரகத்திற்கும் விசேஷ உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது: காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹமீதுக்கு எவ்விதப் பாதிப்பும் வராதபடிப் பார்த்துக்கொள்ளுமாறு! ஆஸ்திரேலிய அரசாங்கமோ, பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்ந்து சகவாசம் வைத்திருப்பவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால்தான் ஹமீதைக் காவலில் வைத்திருப்பதாகச் சொல்கிறது!

நமது வெளியுறவு அமைச்சகம் தில்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதுவரை நேரில் அழைத்து ஹமீது விஷயத்தில் நல்லபடியாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் அரசு முகமதிய பயங்கரவாதத் தீய சக்திகள் மீது காட்டும் பரிவு எல்லை மீறிவிட்டதை இது உறுதி செய்கிறது. இதன் விளைவை வெளிநாடு செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அனைவரும் அனுபவிக்க நேரிடும். ஆனால் வாக்குகளுக்காக முகமதியரிடம் நல்ல பெயர் எடுப்பதிலேயே குறியாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சிக்கு இது பற்றிக் கவலையில்லை!

பொதுவாக ஒரு நாட்டின் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகம் வேற்று நாட்டு தூதுவரை அழைத்துத் தனது கவலையை அல்லது சிரத்தையைத் தெரிவிக்கிறது என்றால் அது தேசத்தின் பொது நலன் சமபந்தப்பட்டதாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். ஆனால் இந்த மரபுக்கு மாறாகச் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் தனது நாட்டுப் பிரஜை ஒருவர் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்று சொல்வதற்காக நமது வெளியுறவு அமைச்சகம், ஆஸ்திரேலிய தூதுவரை வரவழைத்துப் பேசுகிறது. இவ்வாறு செய்வது வேற்று நாட்டின் சட்ட விமுறைகளில் தலையிடுவதாகும் என்கிற உணர்வு கூட நமது மைய அரசுக்கு இல்லை!
பாகிஸ்தானத்தில் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு முகமதிய பயங்கரவாதிகள் மீது தயவு தாட்சண்யமின்றிக் மிகக் கடுமையாக முஷரப் நடவடிக்கை எடுத்ததன் பின் விளைவு, அவருக்குப் பயங்கரவாதிகளிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்கா மேலும் மேலும் அவர் மீது டாலர் மழை பெய்யச் செய்யும். அந்தப் பணத்தில் முஷரப்பும் அவரது சகாக்களும் செய்யும் கையாடல் போக எஞ்சுவது ஹிந்துஸ்தானத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தையும் காஷ்மீரைச் சாக்கிட்டு ஹிந்துஸ்தானம் முழுவதும் நாச வேலைகளைச் செய்துவரும் முகமதிய பயங்கரவாத இயக்கங்களையும் ஊக்குவிக்கப் பயன்படும்.

பயங்கரவாதக் குழுவுடன் இடைவிடாது தொடர்புகொண்டுள்ளமைக்கு ஆதாரம் உள்ளது என்று சொல்லி ஹமீது என்கிற ஹிந்துஸ்தனத்துப் பிரஜையைக் காவலில் வைத்து விசாரித்துவரும் ஆஸ்திரேலிய அரசிடம் ஹமீதை நல்ல விதமாக நடத்துங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதன் பின் விளைவு எப்படி இருக்கும்?

இனிமேல் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அனைவருக்குமே தலைவலிதான். முதலில் அவர்களுக்கு வீசா கிடைப்பதிலிருந்தே சங்கடம் தொடங்கிவிடும். ஹிந்துஸ்தானத்து அரசாங்கமே பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் இயல்பு பெற்றிருப்பதால் அதன் பிரஜைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையை எல்லா நாடுகளும் வீசா பரிசீலனையின் போது அனுசரிக்கும். நமது நாட்டவர் போய் இறங்கும் வெளிதேசங்களில் விசாரணைகளும் பரிசோதனைகளும் மிகக் கடுமையாக இருக்கும். அவர்களின் நடமாட்டத்திற்கும் மறைமுகமான கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருக்கும். வெளிநாட்டு மக்கள் நம் நாட்டவரை எப்போதும் சந்தேகப் பார்வையுடனேயே அணுகும் நிலை உருவாகிவிடும்.

ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகளை அவர்கள் சார்ந்துள்ள சமயத்தின் அடிப்படையில் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் ஏதும் வெளிநாட்டவருக்கு இல்லை. ஹிந்துஸ்தானத்திலிருந்து வரும் எவரும் பயங்கரவாதியாகவோ, பயங்கரவாத ஆதரவாளராகவோ இருக்கக் கூடும் என்கிற எண்ணம் அவர்களுக்கு எழுமானால் அதனை நம்மால் ஆட்சேபிக்க இயலாது. ஹிந்துஸ்தானத்து அரசாங்கமே முகமதிய பயங்கர வாதிகள் மீது பரிவு காட்டும் கொள்கையைக் கடைப்பிடிப்பதுதானே என்று ஒரே வரியில் நமது ஆட்சேபம் தூக்கி எறியப் பட்டுவிடும்.


முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

வெளிநாட்டு வங்கியில் முடக்கி வைக்கப்பட்ட பணத்தையெல்லம் எடுத்துக்கொள்ள குவாட்ரோச்சிக்கு வழிசெய்து கொடுத்தபோதே மன்மோகன் சிங் சோனியாகாந்தியின் பினாமி என்பது உறுதியாகிவிட்ட போதிலும், இப்போது ஹிந்துஸ்தானத்தின் மக்கள் நலன் குறித்துச் சிறிதளவும் கவலையின்றி வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த, சந்தேகத்திற்குரிய முகமதிய பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டுமளவுக்கு அவர் துணிந்துவிட்டிருப்பது ஓர் அந்நிய சுய நலத் தீய சக்தியின் கைப்பாவைதான் மன்மோகன் சிங் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

மன்மோகன் சிங் பினாமி பிரதமராக உள்ள, கம்யூனிஸ்டுகள் ஆதரவில் நீடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒரு தேச விரோத அரசு. எவ்வளவு சீக்கிரம் அது போகிறதோ அவ்வளவு சீக்கிரம் ஹிந்துஸ்தானத்திற்கும் அதன் பிரஜைகளுக்கும் நல்லது.

ஜடாயு - உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை என்னும் தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்பு உலகில் 11 நாடுகளிலும், சில பிரதேசங்களிலும் இந்துக்களின் மீது தொடரும் வன்முறைகள் மற்றும் கொடுமைகள் பற்றிய விரிவான 200-பக்க அறிக்கையை அளித்துள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க சட்ட நிபுணர்கள் உட்பட பலரும் கவனத்துக்குரியதாகக் குறிப்பிட்டு, ஒரு மாபெரும் மானுட சோகத்தைப் பதிவு செய்தமைக்காக இந்த அமைப்பைப் பாராட்டியுள்ளனர்.ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, ஜம்மு & காஷ்மீர் (இந்தியா), கஜகஸ்தான், மலேசியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, ட்ரினிடாட் & டொபாகோ ஆகிய பிரதேசங்களில் இந்துக்களின் மீது தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய விவரணம் இந்த அறிக்கையில் உள்ளது."இந்து மக்கள், இந்து நிறுவனங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள் இவற்றைக் குறிவைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் உலக ஊடகங்களால் பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஆவணம் மிக முக்கியமானதாகிறது. உலகெங்கும் உள்ள இந்துக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செய்ய வேண்டியது அதிகம் உள்ளது" என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஷெரட் பிரவுன் தெரிவித்தார். ஃப்ராங்க் பாலோன், ஜோ க்ரோலி, பீட் ஸ்டார்க் முதலிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கருத்தை எதிரொலிக்கின்றனர்.இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகித்த ஈசானி சௌதரி என்னும் பெண்மணி " 1947 இந்திய தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் (இன்றைய பங்களாதேஷ்) 30 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை இப்போது வெறும் 9 சதவீதமாக ஆகியுள்ளது - . ஒவ்வொரு நாளும், பங்களாதேசில் இந்துக்கள் பெரும் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிகப் பெரிய இன அழிப்பு பற்றிய உண்மைகள் இவ்வளவு தாமதமாகிவிட்டபோதாவது உலகின் கண்கள் முன்னால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம்.

திண்ணை கட்டுரை - மத / மனித அழிப்பின் கதை - அருணகிரி

ஒரு மத அழிப்பின் கதை
அருணகிரி Thursday June 28, 2007


சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார்.

கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார்.

பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.


அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள "கம்யூனிஸ்டு" இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.


எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.


கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். 'இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் - தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்..." என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.


பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:


- 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.


- பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது "எதிரிச் சொத்து" என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட "அர்பிதா சம்பதி" சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.


- பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.


- சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.


- இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.


- பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.


- 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.


- கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.


- பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக் குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.


- இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.


- முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன "நடுநிலைவாதிகளிடமிருந்தும்" ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?


- பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் "பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)" என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது- முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் புகைப்படம் உட்பட.

http://www.hrcbm.org/ ( (எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):

Thursday, 26 July 2007

விகடன் கட்டுரை - "மதம்" பிடித்த மலேஷியா

‘மதம்’ பிடித்த மலேசியா!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஜூனியர் விகடன் 29 July 2007

மத நம்பிக்கை எப்படித் தீவிரவாதமாக உருவெடுத்து இருக்கிறது என்பதைத் தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் மலேசியாவிலும்கூட இப்போது மதவெறித் தீவிரவாதம் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. அங்கே சமீபத்தில் நடந்த சம்பவமொன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரேவதி மசோசை என்ற 29 வயது பெண்ணுக்கு மலேசியாவில் நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும் போது மலேசியாவில் இருப்பது ஜனநாயக அரசாங்கம் தானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ரேவதியின் பெற்றோர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்கள். ரேவதிக்கு அவர்கள் வைத்த பெயர் சித்தி ஃபாத்திமா. ஆனால், அவர் இந்துவாகவே இருக் கும் தனது பாட்டியிடம் வளர்ந்தார். 2001&ல் தனது பெயரை ரேவதி என்று மாற்றிக்கொண்டார். 2004&ம் ஆண்டு சுரேஷ் வீரப்பன் என்ற இந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தன்னை இந்து மதத்தைச் சேர்ந்தவராக அறிவிக்க வேண்டுமென ரேவதி மலேசிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றாகி விட்டது.
அவர் உடனே, இஸ்லாமிய சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டார். ஆறு மாதங்கள் அவர் அங்கே இருக்க வேண்டுமென நீதிமன்றம் கூறிவிட்டது. சீர்திருத்த மையம் என்பது ஒருவகை சிறைதான். இஸ்லாம் மதத்தை விட்டு மாற விரும்பிய ரேவதியை மனம் மாற்ற அங்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப் பட்டன. சைவ உணவுப் பழக்கம் உள்ள அவருக்கு பலவந்தமாக மாட்டிறைச்சி தரப்பட்டது. ஆனாலும், அவர் முஸ்லிமாக நீடிக்க விரும்பவில்லையென்று தெரிவித்து விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை இப்போது அவர் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

மலேசியாவின் பிரதமராக மஹாதிர் முகமது இருந்த போது 2001&ம் ஆண்டில் மலேசியாவை முஸ்லிம் நாடு என அவர் அறிவித்தார். அதன்பிறகு அங்கே இரண்டு விதமான நீதி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு ஷரியா நீதிமன்றங்கள். மற்றவர்களுக்கு ‘சாதாரண’ நீதிமன்றங்கள். சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட மலேசியாவில் 51 சதவிகிதம் பேர் மலாய் சமூகத்தினர். அங்கே சுமார் 27 சதவிகிதம் சீனர்கள் உள்ளனர். 8 சதவிகிதம் அளவுக்கு இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியர்களில் பெரும் பான்மையானவர்கள் தமிழர்கள்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் சந்ததி யினரே இப்போது அங்கு வாழும் தமிழர்களில் பெரும் பகுதியானவர்கள். அதுபோல, இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களும் அங்கே உள்ளனர்.

மலேசியா மீது படையெடுத்துச் சென்று தமது ஆதிக் கத்தை நிலை நாட்டி ‘கடாரம் வென்றான்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவாலோ என்னவோ தற்போதைய மலேசிய அரசு தமிழர்களைப் பகைமையோடே பார்த்து வருகிறது. பதினான்கு மாகாணங்களைக் கொண்ட நாடாக விளங் கிய மலேசியாவிலிருந்து 1965&ல் சிங்கப்பூர் பிரிந்து சென்று தனி நாடானது. உலகின் வர்த்தக மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இப்போது வளர்ந்து விட்டது. ஆனால், மலேசியாவோ பழமைவாதத்தை நோக்கித் திரும்பிச் செல்வதுபோல் தெரிகிறது.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின்போது மலேசிய நாட்டின் வளங்கள் பெரும்பாலும் சீனர்களின் கட்டுப் பாட்டில் இருந்தன. 1957&ல் சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னரும் சிறுபான்மை இனத்தவரான சீனர்களின் பொருளாதார ஆதிக்கம் மலேசியாவில் தொடர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மலாய் மக்கள் கிளர்ந் தெழுந்தனர். 1964 மற்றும் 1969&ம் ஆண்டுகளில் சீனர் களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1969&ல் நாட்டில் அவசர நிலை பிறப் பிக்கப்பட்டு 1971 வரை அது தொடர்ந்தது.

சீனர்களோடு உள்ள பகைமையைப்போல இந்திய வம்சாவளியினரோடு மலாய்காரர்களுக்குப் பகைமை இருந்ததில்லை. ஆனால், அந்த நாடு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை மாறிவருகிறது. இந்தியர்களை இப்போது அவர்கள் இணக்கமாகப் பார்ப்பதில்லை. அதன் ஒரு வெளிப்பாடுதான் ரேவதி மசோசையின் வழக்கு.

மலாய்\சீன கலவரத்துக்குப் பிறகு மலேசியாவில் ‘பூமிபுத்திரர்கள்’ என்ற மண்ணின் மைந்தர்களுக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மலாய் காரர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை, மற்றவர்கள் எல்லோரும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப் பட்டனர். இந்தக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்கள் மலாய்காரர்கள் வசம் சென்றன. தனியார் துறையோ சீனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் எதுவுமில்லாமல் நடுத்தெருவில் விடப் பட்டவர்கள் தமிழர்கள்தான். அவர்களின் நலன் பற்றி இந்திய அரசும் கவலைப்படவில்லை.

தற்போது மலேசியாவில் சுமார் இருபது லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதையட்டி பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் மலேசியாவில் தமிழர்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரசாங் கத்திடம் பதிவு செய்துகொள்ளவில்லை எனக் காரணம்காட்டி தமிழர்களது கோயில்கள் இடிக்கப் படுவது அங்கே தொடர்கதையாகி விட்டது. புதிதாக கோயில்களைக் கட்டுவதற்கும் தமிழர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 2001&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் இந்திய வம்சாவளியினர் மீது மலாய்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மலேசியாவில் வாழும் மூன்றாவது பெரிய இனமாகத் தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் வேறு இப்போது அதில் போட்டிக்கு வந்து விட்டதால் தமிழர்களுக்கு கூலி வேலை கூட கிடைப்பது அரிதாகி விட்டது. கல்வியிலும் அவர் களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களுக்கான ‘பூமிபுத்திரர்கள்’ கொள்கையால் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான இடங்கள் மலாய் காரர்களுக்கே அளிக்கப்படுகின்றன.

2001&ம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய உண்மை களும்கூட வெளி உலகுக்குத் தெரியாதபடி மறைக்கப் பட்டன. அதைப்பற்றி ஆறுமுகம் என்பவர் கடந்த ஆண்டு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். ‘மார்ச்\8’ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் புத்தகத்தை மலேசிய அரசு உடனடியாகத் தடை செய்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மலேசிய அரசு ஐம்பத்தாறு நூல்களைத் தடை செய்திருக்கிறது. அதில் குண்டலினி பற்றிய புத்தகமும் ஒன்று. இன்ஜினீயராக இருந்து வழக் கறிஞராக மாறியிருக்கும் ஆறுமுகம், தனது நூலைத் தடை செய்ததை எதிர்த்து இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்.

மலேசியாவில் இந்துக்கள்தான் இப்படி கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்றில்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்கூட இதே கதிதான். 1997&ம் ஆண்டு லீனா ஜாய் என்ற பெண் தன்னை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக அறிவிக்கும்படி தேசிய பதிவுத்துறையை அணுகினார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இஸ்லாமைத் துறக்க ஷரியா நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களே என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. அதன் பிறகு அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கும் அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. மலேசியாவின் உச்ச நீதிமன்றமான ஃபெடரல் கோர்ட்டில் லீனாஜாய் மனு செய்தார். இந்த ஆண்டு மே மாதம் முப்பதாம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஷரியா நீதிமன்றம் மட்டுமே இதில் தீர்ப்பு வழங்க முடியும் என்று ஃபெடரல் கோர்ட் நீதிபதிகள் கூறிவிட்டனர். மலேசியா எந்த அளவுக்கு மதவாதத்தில் ஆழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்.

மலேசியாவில் எவர் வேண்டுமானாலும் முஸ்லிம் ஆகிவிட முடியும். ஒருவர் முஸ்லிமாக மாறினால் அவரது மைனர் குழந்தைகளும் முஸ்லிமாக மாறிவிட்டதாகவே பொருள் என மலேசிய சட்டம் கூறுகிறது. ஆனால், ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைத்தால் அங்கே அது நடக்காது. இஸ்லாத்தைத் தழுவுவது ஏறத்தாழ ஒரு வழிப்பாதையாகவே வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் தற்போதைய பிரதமர் அப்துல்லா அஹமது படாவி, இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கான வழி எதுவும் இப்போதைக்குத் தெரிய வில்லை.

மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான ஜனநாயக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய அமைப்பு எதுவும் அங்கே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு என்ற வடிவில் முதலில் முற்போக்காக வெளிப் பட்ட மலாய் தேசியவாதம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேரினவாதமாகவும் முஸ்லிம் அடிப்படைவாதமாகவும் மாறியுள்ளது. அந்த நாட்டின் சிறுபான்மை சமூகமாக உள்ள தமிழர்களின் உரிமை அதனால் முழுவதுமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்தத்தின் பெயரால் வெளிப்படும் பேரினவாதம், மலேசியாவில் இஸ்லாத்தின் பெயரால் கொடுமை செய்கிறது. எல்லா நாடுகளிலும் பாதிக்கப் படுபவர்கள் என்னவோ தமிழர்களாகவே இருக்கிறார்கள். மலேசியாவில் தீவிரமடைந்து வரும் மதவெறி குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் முதலிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆனாலும், மலேசிய ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை.

மலேசியாவில் ஆட்சியில் உள்ள கூட்டணியில் தமிழர் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் ஒரு பங்காளியாக இருந்தபோதிலும் அதனால் பதவி சுகத்தை அனுபவிக்க முடிந்த அளவுக்குத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்று மலேசியத் தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியப் பிரதிநிதிகளும் பங்கு பெற்ற ‘தேசியப் பொருளாதார ஆலோசனை மன்றம்’ என்ற அரசாங்க அமைப்பின் சார்பில் தமிழர்களின் மேம்பாட்டுக்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ரப்பர் தோட்டங்களில் பாலர் பள்ளிகள் திறக்கப்படவேண்டும்; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையான அரசாங்க நிதி உதவி அளிக்கப்படவேண்டும்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதற்கான பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு வங்கியும், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனமும் துவக்கப்பட வேண்டும்; இந்திய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் முதலிய பரிந்துரைகளை அந்த அமைப்பு செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் சென்று விட்டன. மலேசிய அரசு இதில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. ஆட்சியில் பங்கெடுத்துவரும் மலேசிய இந்திய காங்கிரஸ§ம் இதுபற்றி வாய் திறப்பதில்லையென்று தமிழர்கள் குறை கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் பரவி நிற்கும் தமிழினம் எல்லா நாடுகளையும் வளப்படுத்தத் தனது உழைப்பைச் செலுத்தி வருகிறது. ஆனால், எல்லா நாடுகளிலும் அது ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டே கிடக்கிறது. மலேசியாவுக்கு அடிக்கடி தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பொருள் ஈட்டி வருகிறார்கள். மற்றும் பல பெருமக்களும்கூட அங்கு சென்று திரும்பு கிறார்கள். ஆனால், மலேசியாவில் வாழும் தமிழர் நிலை குறித்து அக்கறைகாட்ட வேண்டும் என்று அவர்கள் இந்திய அரசையோ, தமிழக அரசையோ இதுவரை வலியுறுத் தியதாகத் தெரியவில்லை. இன்றைய நிலை நீடித்தால் மலேசியாவில் தமிழர்களே இல்லை என்னும் நிலை சில ஆண்டுகளில் ஏற்படலாம். அங்கு வாழும் தமிழர்களின் சனநாயக உரிமைகள் காக்கப்பட உலகத் தமிழர்களின் தலைவராக விளங்கும் நம் தமிழக முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Copyright(C) vikatan.com

Friday, 13 July 2007

திண்ணை கட்டுரை - அ.நீலகண்டன் - இஸ்லாமிய அறிவீனம்

வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
எஸ்.அரவிந்தன் நீலகண்டன் Thursday July 12, 2007


தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை. தனது உரிமைக்காக தருமத்துக்காக தன் குடும்பத்திலிருந்து வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டு போராடும் பெண்ணின் கதை. இரண்டு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு போராடும் தாயின் கதை. காதல் கணவனை காணக்கூட முடியாமல் சிறைக்கம்பிகளின் அப்பால் நிற்க வைக்கப்பட்ட ஒரு தமிழ் பெண் தமிழ் பண்பாட்டினை விட்டுக்கொடுக்காமல் போராடிவரும் கதை.


ரேவதி தமது 26 வயதில் காதலித்து கரம் பற்றிய கணவர் சுரேஷ். கரம் பற்றி வேள்வித்தீ சுற்றி திருமணம் செய்த கணவருடன் சகதர்மிணியாக நடத்திய இல்லற அன்பின் விளைவு திவ்வியதர்ஷனி. தமிழ் பண்பாட்டில் பொங்கலும் கார்த்திகையும் கொண்டாடி வளர்ந்த ரேவதியின் பெயர் அதிகார ஆவணங்களில் தொடர்பேயில்லாமல் என இருந்தது. ஏனெனில் ரேவதியின் பெற்றோர் ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மாறினராம். ஆனால் ரேவதி வளர்ந்ததோ தன் பாட்டியிடம். அவரோ தமிழர் பண்பாட்டில் தோய்ந்தவர். நக்கீரரும் கணியன் பூங்குன்றனாரும் திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் என தொடங்கி தாயுமானவ சுவாமிகளும் வள்ளலாருமென வாழையடி வாழையாக வந்த தமிழ் பண்பில் வாழ்ந்தவர். நெறி தப்பி செல்லாமல் நல்தமிழர் வாழ்நெறியை தன் சந்ததிக்குப் புகட்டினார் அவர். அவ்வையாரும் புனிதவதியாரும் திலகவதியும் வளர்த்தெடுத்த நல்நெறியில் ரேவதி வளர்ந்தார். பின்னர்தான் அவர் தனது கணவனைக் கண்டு காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார். முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் 'இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்' ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள்.

இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் - குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள். ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது. என்ற போதிலும் சில மணிநேரங்கள் தனது காரில் சென்று அந்த இஸ்லாமிய இல்லத்தின் முன்னர் நிற்பார் சுரேஷ். அங்கு கம்பிகளுக்கு நடுவில் பிரிந்தவர் காண்பர் ஒரு சில நிமிடத்துளிகள். இந்த உணர்ச்சிபூர்வமான கண்ணீர் வரவழைக்கும் காட்சியை அல்ஜஸீரா தொலைக்காட்சி காட்டியது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கம்பிக்கதவுகளில் அடைப்புகள் வைக்கப்பட்டு வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை காணமுடியாமல் ஆக்கப்பட்டது. சுரேஷ் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த இஸ்லாமிய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்தார். 'மனிதரை கொண்டு வந்து நிறுத்தும்' அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர். 29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது? இந்நிலையில் ஆறுமாதங்கள் 180 நாட்கள் தாம் சிறை போன்ற அந்த 'இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லத்தில்' நடந்த சித்திரவதைகளை மனரீதியிலான கொடுமைகளை விவரித்துள்ளார் ரேவதி. தலையில் முக்காடு அணிந்திட வற்புறுத்தப்பட்ட ரேவதி பசுமாமிசம் உண்ணும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதைவிடக் கொடுமை "நீ முஸ்லீமாக மாறாவிட்டால் உன் குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவோம். உன்னால் பார்க்கவே முடியாது." என மனரீதியில் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர் மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள். ஆனால் ரேவதி கூறுகிறார்: "என் கணவர் எனக்காக வெளியே காத்திருப்பதை நான் காண்பேன், அவர் நிற்கும் இடத்துக்கு ஓடுவேன் ஆனால் அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த இல்லத்திலிருந்து பலரும் தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள். ஆனால் நான் ஓடவில்லை. நான் இந்து தருமத்தின் நற்பெயரை காட்டிட ஓடாமல் அங்கு (கொடுமைகளை) பொறுத்திருந்தேன்....என் பெயர் ரேவதியாகவே இருக்கும் இறுதிவரை...." தமிழ்பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு தமிழ் பெண்மணியின் கதை இது. கதை அல்ல இனி வரும் காலங்களில் இது மதவெறி பிடித்த அரசொன்றின் இராட்சத அதிகார பலத்தை எதிர்த்து நின்று போராடிய ஒரு ஒற்றைக் குடும்பத்தின் வீர காவியம். எமனிடமிருந்து கணவன் உயிரை மீட்ட சாவித்திரி, எமனிடம் தன் ஆயுளைக் கொடுத்து காதலியை மீட்ட ருரு, கணவனுக்காக நீதி கேட்டு அரசனையே எதிர்த்த கண்ணகி என காவிய மாந்தர்களில் வைத்து எண்ணப்பட வேண்டிய வீரப்பெண்மணியாக ஜொலிக்கிறார் ரேவதி. அவருக்காகவும் தன் குழந்தை திவ்விய தர்சனிக்காகவும் பகீரத முயற்சிகளுடன் தவமிருக்கிறார் சுரேஷ். இதில் ஆனந்தமான விஷயம் என்னவென்றால் குறைவாக என்றாலும் அதிசயிக்கத்தக்க அளவில் கணிசமான எண்ணிக்கையில் மலேசிய இஸ்லாமியர் (பெண்கள் உட்பட) ரேவதிக்காகவும் சுரேஷ¤க்காகவும் குரல் கொடுத்திருக்கின்றனர். 'இஸ்லாமிய சகோதரிகள்' எனும் பெண்கள் அமைப்பு ரேவதியின் விடுதலைக்காக அமைதி ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். ஹரீஸிப்ராஹிம் எழுதுகிறார்: "ஆக 29 வயதுடைய ஒரு பெண்மணியை ஒரு குழந்தையின் தாயை அவரது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உத்தரவிட்டுவிட்டீர்கள்? எந்த நீதியின் அடிப்படையில் அப்பெண்மணியின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்கிறீர்கள்? அது போக அவர் இஸ்லாமிய வகுப்புகளுக்கு வேறு செல்லவேண்டுமாம்.ஏன்? அவருக்கு மாட்டிறைச்சி பிடித்துப் போகவா? அடுத்து அவர் தன் கணவருடன் வாழ்வதையும் அவர் கோவிலுக்கு போவதையும் மலேசிய இஸ்லாமிய அதிகாரிகள் பின்னாலேயே சென்று தடுக்கப்போகிறார்களா? அப்படி அவர் தன் கணவருடன் கோவிலுக்கு போனால் என்ன செய்வீர்கள்? அடுத்தும் ஒரு 180 நாட்கள்? மேலும் அவருக்கு மாட்டிறைச்சி? ... சுரேஷ் ரேவதி நீங்கள் உங்கள் இருவரின் அன்பில் ஒருவருக்கொருவர் மனமொத்து வாழ நான் பிரார்த்திக்கிறேன். அநீதிக்கு எதிராக எழுந்து போராடும் உங்கள் மனவலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். நீதிக்காகவும் சாந்தியுடன் வாழவும் நீங்கள் இருவரும் போராடும் இப்பாதையில் உங்களுக்கு வலிமை கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்." தமிழர் தமிழர் என்று பேசித்திரியும் நாம் என்ன செய்யப் போகிறோம்? நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தலைப்புச் செய்திகளாக்கி விற்பனை செய்து பிழைக்கும் நாளேடுகளுக்கு தர்மம் காக்க நடத்தப்படும் இந்த போராட்டம் கண்ணில் படாததன் காரணம்தான் என்ன? காதல், குடும்பம் என தனிமனித உரிமைகளை நசுக்கி மதம் வளர்க்கும் மதமும் ஒரு மதமா? என கேள்வி நம் அறிவிசீவிகளிடம் ஒரு முணுமுணுப்பாக கூட எழும்பாத அளவு மரத்துவிட்டதா அவர்கள் அற உணர்வு? ரேவதியும் சுரேஷ¤ம் திவ்வியதர்ஷனியும் இணைந்து வாழ காதலொருமித்து ஒரு குடும்பமாக மீண்டும் வாழ நாம் நம்மால் ஆனதை செய்வோம்.

Copyright(C) : www.thinnai.com

திண்ணை கட்டுரை - மலர்மன்னன் - இஸ்லாமிய தீவிரவாதம்

ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
மலர்மன்னன் Thursday July 12, 2007


பயங்கரவாதிகளை முகமதிய பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தலாகாது என முகமதிய பயங்கர வாதத்தால் சூடு பட்டுக்கொண்டிருக்கும் பிரிட்டனின் அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற முமதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் வாக்கு வங்கி அரசியல் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு இது ஓர் அடையாளம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் இப்போது கவனிக்க வேண்டியது இன்னொரு கோணம்.

பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் குண்டு வைத்து ரத்தச் சேறாக்கும் பயங்கர வாத முயற்சிகளில் கைது செய்யப்படுபவர்களை ஆசியர்கள் என்றும், இந்தியர்கள் என்றும் ஊடகங்கள் அடையாளப் படுத்தத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் கைதாகிவரும் முகமதிய பயங்கர வாதிகளில் ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த முகமதியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.

உண்மையில், அனைத்துலகிலும் முகமதிய பயங்கர வாதச் செயல்களால் நீண்ட காலமாக மிக அதிக அளவில் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் அடைந்துவரும் தேசம் ஹிந்துஸ்தானம்தான். பயங்கரவாதச் செயல்களிலிருந்து நாட்டின் உடமைகளையும், நாட்டு மக்களின் உயிரையும் பாதுகாப்பதற்காக மிக அதிக அளவில் மனித வளைத்தையும், அரசின் நிதி ஆதாரத்தையும் செலவிடுகிற கட்டாயத்தில் உள்ள நாடும் ஹிந்துஸ்தானம்தான். ஆனால் நமது மத்திய, மாநில அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளின் மெத்தனம், தயக்கம், வாக்கு வங்கி ஆதாயம் ஆகிய காரணங்களால்
பயங்கர வாதிகளின் கொட்டம் தங்கு தடையின்றிப் பெருகி, அவர்கள் கைது செய்யப்
பட்டாலும் காவல் நிலையங்களிலும் சிறைச் சாலைகளிலும் நிஜமான ராஜாங்க விருந்தினர்போல உபசரிக்கப்படுவதாலும், சிறைபட்டிருக்கும் பயங்கரவாதிகளின் நலன்கோரி மா நில முதல்வர்களும் அதிகாரிகளும் வெளிப்படையாகவே விண்ணப்பம் செய்வதாலும் வெகு விரைவிலேயே ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கர வாதிகளைப் பராமரிக்கும் தேசம் எனப் பிற நாடுகளால் அறிவிக்கப்படும் நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்கள் இதன் காரணமகவே அச்சமின்றிப் பயங்கர வாதக் குழுக்களில் இணைவதும் அதிகரித்து வருகிறது.

ஹிந்துஸ்தானத்து அரசியல்வாதிகள் முகமதிய பயங்கர வாதம் நமது மண்ணில் வேரூன்றிவிட்டிருப்பதற்குச் சமாதானம் சொல்லவும் தயங்குவதில்லை. ஊடகங்களும், தம்மை மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் எனக் கட்டிக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தும் எழுத்தாளர்களும் அந்தச் சமாதானத்தையே திருப்பிச் சொல்லவும் யோசிப்பதில்லை.

முமதியரிடையே அதிக அளவில் வறுமையும், கல்வியறிவு இல்லாமையும்,வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகின்றனவாம். அதனால்தான் முகமதிய இளைஞர்கள் மனம் வெறுத்து வழி தவறி பயங்கர வாதத்தின் பக்கம் போய்விடுகிறார்களாம். இதைத் தவிர்ப்பதற்கு உள்ள ஒரேவழி கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி என எல்லா வகைகளிலும் முகமதியருக்குத் தனிச் சலுகை தருவதுதானாம். இவ்வாறு சிறுபான்மையினர் என்கிற அடிப்படையில் முகமதியருக்குத் தனிச் சலுகைகள் வழங்குவதில் நமது அரசியல் கட்சித் தலைவர்களிடையே ஒரு போட்டியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பயங்கர வாதச் செயல்கள் தொடர்பாகக் கைதாகிற முகமதியர்கள் நன்கு படித்தவர்களாகவும், நல்ல வேலையில் இருப்பவர்களாகவும், வசதிக்குக் குறைவில்லாதவர்களாகவுமே காணப்படுகிறார்கள். இவ்வாறான பிரத்தியட்ச நிலவரத்தைக் காணுகின்ற போதிலும் அதற்கு முரணாக நமது அரசியல் கட்சித்தலைவர்கள் முகமதிய இளைஞர்கள் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபாடு கொள்வதை நியாயப்படுத்துவதால் ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கர வாதத்திற்கு அனுதாபம் காட்டி அனுமதி வழங்கும் தேசம் என்கிற கருத்து பரவலாக வலுப்பெறத் தொடங்கும்.

இங்கு பலவாறான பயங்கர வாதச் செயல்களுக்காக விசாரணைக் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் முகமதிய இளைஞர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகிற போதும், அவர்கள் திரும்ப அழைத்துச் செல்லப்படுகிற போதும், நீதிமன்ற வளாகத்தில் பெருந் திரளாகப் பலர் கூடி நின்று அவர்களைப் பாராட்டி ஊக்குவித்து வாழ்த்தொலி எழுப்ப அனுமதிக்கப் படுகிறார்கள். விசாரணைக் கைதிகளும் தாம் ஏதோ மாகத்தான சாதனை செய்துவிட்டவர்களைப் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, கைகளை அசைத்துக் கொண்டு கம்பீர நடை போடுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் சிறைச் சாலையிலிருந்தோ காவல் நிலையத்திலிருந்தோ அழைத்து வரப்படும் குற்றவாளிகளாகத் தெரிவதில்லை. உடம்பில் ஒரு தூசு கூடப் படாமல், ஏதோ மகிழ்வுச் சுற்றுலாவுக்கு வந்து போகிறவர்கள் மாதிரிதான் தோற்றமளிக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஜெர்மனியிலிருந்து ஒரு பெண்மணி என் வீட்டிற்கு வந்திருந்தார்.
இலங்கை திரிகோணமலைப் பகுதியில் ஐக்கிய நாடுகள் அவை அமைப்பு ஒன்றின் தொண்டராகப் பணியாற்றச் செல்லும் வழியில் சில நாட்கள் சென்னையில் தங்கிய அவர், பேச்சுத் தமிழில் சிறிது பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே என்னோடு அதிக நேரம் செலவழித்தார்.

ஓர் இரவு உணவருந்தியவாறே தொலைக் காட்சியில் செய்தி விவரங்களை நாங்கள் பார்த்திருக்கையில், ஒரு முகமதிய பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் கோலாகலத்தைப் பார்த்து மேல்விவரம் கேட்ட ஜெர்மன் பெண்மணி, நான் தெரிவித்த தகவல் அறிந்து ஆச்சரியப்பட்டார். முகமதிய பயங்கர வாதிகளுக்கு இங்கே இவ்வளவு ஆதரவு இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் இத்தனை வெளிப்படையாக அதைப் பகிரங்கப் படுத்த அனுமதிக்கப்படுகிறதா? என்றெல்லாம் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். நம் தேசத்தைப்பற்றி எம்மாதிரியான அபிப்பிராயம் வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரிய வேண்டும் என்கிற எண்ணத்தால் இதைச் சொல்கிறேன்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு ஏராளமான உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் விளைவித்தது. குற்றவாளிக் கூண்டில் எற்றப்பட்டவர்களிடையே தாம் இழைத்த கொடுமை குறித்து ஒரு சிறிதளவு வருத்தமும் தென்படவில்லை. தாõம் பிறந்து வளர்ந்து வசதியாக வாழ்ந்துகொண்டும் இருக்கிற பூமி! தாம் கலந்துறவாடும் சமுதாயம்! ஆனால் அதற்குத்தான் கொஞ்சமும் விசுவாசம் இன்றி இத்தகைய பெரும் கொடுமையைச் செய்திருக்கிறோம் என்கிற உறுத்தல் சிறிதேனும் இல்லை. நம்மோடு வாழ்ந்துவரும் பல குடும்பங்களின் அடி வேரையே ஈவிரக்கமின்றிப் பிடுங்கிப் போட்டுவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அவர்களிடம் சிறிதும் புலப்படவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்தி, எதோ ஒரு கண நேர ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டோம் என மன்னிப்புக் கோரும் மனப்பான்மையில்லை. ஆனால் நீதி மன்றம் அக்கொடுஞ் செயலுக்காக அவர்களுக்கெல்லாம் அளித்த தண்டனை எத்தனை மென்மையானது என்பது உலக நாடுகளின் கவனத்திற்கு வராமலா போகும்?

குற்றம் நிரூபிக்கப் பட்டுவிட்ட நிலையில் ஏராளமான உயிர்ச் சேதங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதற்காகவாவது அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டாமா? என்கிற கேள்வி பல்வேறு தேசங்களிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
தேசத்திற்கே தலைமைப் பீடம் எனச் சொல்லத் தக்க நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர வாதிகள் புகுந்து தாக்குகிற அளவுக்கு நிலைமை முற்றி, அவர்களின் முயற்சியை முறியடிப்பதற்காகக் காவலர் பலர் உயிர் துறக்க நேரிட்டிருக்கிறது. வேறு தேசமாக இருந்தால் அக்கணமே தேசம் முழுவதும் பயங்கர வாதிகளைக் களையெடுக்கும் வேலை விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கும். ஆனால் ஹிந்துஸ்தானத்திலோ குற்றம் உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு அந்த தண்டனையிலிருந்து விலக்கு அளிக்காலாமா என்பது குறித்துப் பல மாதங்களாகப் பரிசீலனை நடந்து வருகிறது!
நாடு முழுவதும் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் வேர் பரப்பி முகமதிய பயங்கர வாதக் குழுக்களுக்கு ஆள் எடுக்க வசதி செய்து தந்து, பல நாச வேலைகள் நடைபெறவும் வழிசெய்து கொடுத்திருப்பதோடு, ஹிந்துஸ்தானத்தின் பொருளாதாரத்தை முறியடிக்க ஹிந்துஸ்தானத்து ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானே அச்சடித்து நம்மிடையே புழக்கத்தில் விட்டு, எல்லாவற்றுக்கும் உச்ச கட்டமாக நாடாளுமன்றத்தையே வெடிவைத்துத் தகர்க்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்ட போதே இன்னொரு நாடாக இருந்தால் உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும்!

இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பு வந்தமைக்கே நெருக்கடி நிலையை ஏற்றுக் கொன்டு, “முற்போக்கு” வாதிகளின் ஆதரவும் தாராளமாகக் கிடைத்த தேசம்தானே இது, ஒரு நியாயமான காரணத்திற்காக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு ப்யங்கர வாத ஊடுருவலை வேரறுக்கும் செயல் தீவிரப்படுத்தப்
பட்டிருக்குமானால் அதற்கு உலக அரங்கில் ஆதாரவு கிடைத்திராமல் போயிருக்காது. ஆனால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அதற்கான தொலைநோக்குப் பார்வையோ, புத்தி சாதுரியமோ, சாமர்த்தியமோ, துணிவோ இல்லாமல் போய்விட்டது.

இன்று நிலைமை வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது என்று சொல்லத்தக்கதாகிவிட்ட போதிலும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் அகலவில்லை. மாறாக முகமதிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது அனுதாபமும், மென்மைப் போக்கும் அதிகரித்துள்ளது. நக்சலைட் இயக்கத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது இவ்வாறான பரிவு காண்பிக்கப்படுவதில்லை. பிடிபடும் நக்சலைட் இளைஞர்கள் காவல் நிலையங்களிலும் சிறைச் சாலைகளிலும் மிகக் கடுமையாகவே நடத்தப்படுகிறார்கள். ஆனால் பிடிபடும் முகமதிய பயங்கர வாதிகளிடம் அதே காவல் துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மிகவும் மரியாதையோடும், அச்சத்தோடும் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். முகமதிய பயங்கரவாதிகளிடம் விசாரணை செய்யும்போது கடுமை காட்டினால் எங்கே ஆட்சியாளர்களிடமிருந்து தமக்குக் கண்டனமும், தண்டனையும் கிடைத்துவிடுமோ என்கிற தயக்கம் அதிகாரிகளிடம் காணப்படுகிறது. அரசாள்வோர் எவ்வழி, அவ்வழியே அதிகாரிகள் கூட்டமும்! அவர்களை நொந்து என்ன பயன்?

லண்டனில் குண்டு வெடிப்பு சதியிலும் பின்னர் குண்டு வெடிப்பு நாசவேலையிலும் ஈடுபட்ட முகமதிய இளைஞர்கள் ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். பொறுப்பான கடமையைச் செய்ய நியமிக்கப்பட்டு கணிசமான சம்பளம் தரப்படும் நிலையில் உள்ள டாக்டர்கள் அவர்கள். இந்தச் செய்தி வெளியானதுமே ஹிந்துஸ்தானத்து ஊடகங்கள் பதறியடித்துக் கொண்டு அவர்களின் பெற்றோர், உற்றார், நண்பர்கள் எனப் பலரையும் தேடிச் சென்று பிடிபட்ட இளைஞர்கள் மீது அனுதாப அலையினைத் தோற்றுவிக்கத் தொடங்கிவிட்டன.

மிக அதிக எண்ணிக்கையில் செலாவணியாகும் ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கத்திலேயே பிடிபட்ட இளைஞர்களின் தாய்மார்களைப் பேட்டி கண்டு சோகக் கதையைப் பரப்பலானது. என் மகன் அமைதியானவன்; பயங்கரவாதச் செயல்களுக்கெல்லாம் அவன் போகவே மாட்டான் என்று தாய்மார்கள் கண்ணீர் மல்க சத்தியம் செய்யாத குறையாக உறுதியளிக்கின்றனர். ஒரு தாய் மிகவும் அப்பாவித்தனமாக என் மகன் தினமும் தவறாமல் குரான் வாசிப்பான்; தொழுகை செய்வான் என்றெல்லாம் விவரிக்கிறார், பிரச்சினையே அதுதான் என்பது தெரியாமல்!

பிடிபட்டு விசாரணைக் கைதிகளாக இருக்கும் நக்சலைட் இளைஞர்களின் பெற்றோரையோ நண்பர்களையோ இதேபோல் விரிவாகப் பேட்டி எடுத்துப் பக்கம் பக்கமாக வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் இந்தப் பிரபல ஊடகங்களுக்கு இல்லாமல் போனதேன்?
போதாக்குறைக்கு, நமது பிரதமர் மன்மோகன் சிங்கே விசாரணையில் உள்ள முகமதிய இளஞர்களின் தாய்மாருடைய கண்ணீர்ப் பேட்டி கண்டு இரவெல்லாம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு துக்கப்பட்டதாகப் பகிரங்கமாய் அறிவிக்கிறார்!

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முகமதியக் குழுக்கள் மதத்தின் பெயரால் ஜிகாத் நடத்துவதாகத்தான் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. தங்கள் மதத்திற்கு ஆபத்து என்பதால்தான் அதனைச் சமாளிக்கும் பொருட்டு பயங்கர வாத நாசவேலைகளில் இறங்குவதாக அவை பெருமையுடன் அறிவிக்கின்றன. எவ்விதத்திலும் பிரச்சினையில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் பலரைக் கொன்று குவித்தும், நிரந்தரமாகப் பலரை ஊனப்படுத்தியும் ஏராளமாகப் பொருட் சேதம் விளைவித்தும் கொடுஞ்செயல் புரிவது குறித்து அவை கவலைப் படுவதில்லை. இத்தகைய வெறியாட்டங்களைப் பெருமிதம் கொள்ளத்தக்க சாதனையாகவும், தமது மதத்திற்கு ஆற்றும் கடமையாகவும்தான் அவை மகிழ்ச்சியடைகின்றன. ஆனால் முகமதிய பயங்கர வாதச் செயல்களால் உலகில் வேறெந்த நாட்டையும்விடக் கூடுதலாக இழப்புகளை அனுபவித்து வரும் ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் மன்மோகன் சிங் பயங்கர வாதிகள் ஒவ்வொருவரையும் தனி நபராகத்தான் அடையாளம் கான வேண்டும் என்று உபதேசிக்கிறார்! பயங்கர வாதக் குழுக்களின் உறுப்பினராகக் கூட அவர்களைக் காணக் கூடாதாம்! குறிப்பிட்ட ஒரு மதத்தோடு பயங்கர வாதக் குழுக்களை அடையாளப் படுத்தக் கூடாதாம்! அந்த பயங்கர வாத இயக்கங்களே தமது மதத்திற்காகத் தான் பயங்கரவாதச் செயல்களில் தாம் ஈடுபடுவதாக ஒவ்வொரு முறையும் பகிரங்கப் படுத்திய போதிலும் நமது பிரதமர் முகமதிய பயங்கர வாதக் குழுக்களுக்கு மத அடையாளம் கொடுப்பது முகமதிய சமுதாயத்தைப் புண்படுத்துவதாகும் என்கிறார். இவ்வளவுக்கும் எந்த முகமதிய மத குரு மாரும் மதத்தின் பெயரை இழுத்தால் தலை கொய்யப்படும் என முகமதிய பயங்கர வாதக் குழு எதற்கும் பத்வா கொடுக்கவில்லை!

பிடிபட்டிருக்கிற முகமதிய பயங்கர வாத இளைஞர்கள் வேலை வெட்டியில்லாதவர்களோ தெருக் கூட்டுவது போன்ற பணியில் உள்ள விவரம் தெரியாத நபர்களோ அல்ல. மாறாக, டாக்டர்களாகப் பணியாற்றுபவர்கள். ஆகையால் அடுத்து அவர்களை டாக்டர்கள் என்று அடையாளப்படுத்துவது மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் டாக்டர்களின் மனம் புண் படுமாதலால் டாக்டர்கள் என்றும் அவர்களைச் சொல்லக் கூடாது என்று நமது பிரதமர் அறிவுறுத்தக்கூடும்!

நமது அணுகுமுறை இப்படியிருக்க, பாகிஸ்தானில் நிலைமை என்ன? அங்கே அரசாங்கம் மசூதிகளையும் மதரசாக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. மதரசாக்கள் மத அடிப்படையில் சிறுவர்களுக்குப் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவதற்கான மனப்போக்கையும் துணிவையும் தோற்றுவித்து, நவீன ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சியையும் அளிப்பதாலும், மசூதிகள் வழிபாட்டுத் தலமாக இருப்பதற்குப் பதிலாக ஆயுதக் கிடங்குகளாகவும், பயங்கரவாதிகளின் பதுங்குமிடமாகவும் இருப்பதாலும்
அவற்றை அரசே மேற்கொள்ளும் நிர்பந்தம் முஷரபுக்கு எற்பட்டதால் நிகழ்ந்த மாற்றம் இது!
சிவப்பு மசூதி என்ற பெயரில் அழைக்கப்படும் மசூதியையும் அதன் பொறுப்பில் சிறுவருக்கும் சிறுமியருக்கும் நடத்தப்படும் மதரசாக்களையும் சொந்தமாகக் கொண்டுள்ள அண்ணன்தம்பி முல்லாக்கள் இருவர் அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்துத் தமது மத ரசாவில் கற்கும் ஆண், பெண் இளையோரிடம் ஆயுதங்களைக் கொடுத்து ஆட்சிக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துவிட்டார்கள். அதுவும் அவர்கள் கண்ணோட்டப்படி ஜிகாதுதான்! ஆனால் முஷரப் அந்த முல்லாக்களை அடக்கி வழிக்குக் கொண்டு வருவதுதான் ஜிகாது என்று முடிவு செய்தார். அரசின் காவல்துறையும் ராணுவமும் சிவப்பு மசூதியையும் அதன் மதரசாக்களையும் கைப்பற்றிக் கொள்ள அனுப்பிவைக்கப்பட்டன. மசூதியி லுள்ள ஆண் பெண் மாணவர்கள் காவல் துறையினரையும் ராணுவத்தினரையும் ஆயுதங்கொண்டு எதிர்க்குமாறு முல்லாக்களால் தூண்டப்பட்டனர். இரு தரப்பிற்குமிடையே ஆயுத பலப் பரீட்சை தொடங்கியது. முற்றுகையிடப்பட்ட மசூதியிலிருந்து பெண்ணைப் போல புர்கா அணிந்து தப்பியோட முனைந்த அண்ணன் முல்லாவைப் பெண் காவலர்கள் சோதனைசெய்து அடையாளங் கண்டு கைது செய்தனர். நமது நாடு என்றால் புர்கா அணிந்து கொண்டு குற்றவாளி எவரேனும் வெளிப்பட்டால் பெண் காவலர் கூட அவர்களைத் தொடத் தயங்குவர்கள்: அரசின் வழிகாட்டுதல் அப்படி!

சிவப்பு மசூதியில் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளை எவ்வித தயை தாட்சண்யமும் இன்றி நசுக்குவதில் முஷரப் உறுதியாக இருக்கிறார். முல்லாக்களுடன் சமரசப் பேச்சு எதற்கும் இடம் இல்லை; அவர்கள் சரண் அடைந்து மசூதியையும் மதரசாக்களையும் அரசிடம் ஒப்படைப்பது தவிர வேறு வழியில்லை என்கிறார். அண்ணன் முல்லா தன் மனைவிமார்களும் குழந்தைகளும் நோய்வாய்ப்பட்ட வயதான அன்னையும் வசிப்பதற்காகவேனும் மசூதியின் பின்புறம் உள்ள அறைகளைத் தருமாறு கெஞ்சுகிறார். ஆனால் முஷ்ரப் மசியவில்லை. வயதான அம்மாவைக்காட்டி முல்லா அனுதாபம் தேட முடியாது என்கிறார்.

ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

அமெரிக்காவின் கை முறுக்கல் தாங்காமல்தான் முஷரப் பயங்கரவாதிகளிடம் கடுமை காட்டுகிறார் என்று கண்டுபிடிப்பதில் பொருள் இல்லை. முஷரப்புக்கே பயங்கரவாதிகளிடமிருந்து உயிருக்கு ஆபத்து வந்து விட்டதால் அவர் பயங்கரவாதத்தை ஒடுக்க முனைந்து விட்டார் என்று விளக்கம் சொல்வதிலும் பொருள் இல்லை. அவரது பயங்கரவாத ஒடுக்கல் மேற்கிற்கு பாதிப்பு நிகழ்வதைத் தவிர்ப்பதற்கானதுதான் என்றாலும், எப்படியோ ஒரு முகமதிய பயங்கரவாதக் கும்பல் நசுக்கப் படுகிறது என்பதுதான் நிதர்சனம். முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்.


Copyright(C) : www.thinnai.com

Thursday, 12 July 2007

விகடன் கட்டுரை - இந்தியாவில் பதுங்கும் இஸ்லாமிய தீவிரவாத பன்றிகள்

உலகை மிரட்டும் ரகசிய நெட்ஒர்க்!

பெங்களூருவில் பதுங்கிய ‘கிரிக்கெட்’ தீவிரவாதிகள்... Junior Vikatan 15 July 2007

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தை நிலை குலைய செய்யும் வகையில், லண்டன் நகரில் அல்&கொய்தா தீவிரவாதிகள் வைத்த வெவ் வேறு கார் வெடிகுண்டுகளை அந்த நாட்டு போலீஸார் கண்டுபிடித்து, அப்புறப்படுத்தினர். அதேபோல், ஸ்காட்லாந்து மாநிலத்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலை யத்தின் மீது மர்ம ஆசாமிகள் பயங்கர தீ ஜுவாலையுடன் ஜீப்பை ஓட்டிவந்து மோதினர். இந்தத் தாக்குதலும் தோல்வியில் முடிந்தது!

இந்த ஜீப் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பெங்களூருவைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் என்பது தான். பெங்களூருவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியா வையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.

2005&ம் வருடம் மார்ச் மாதம் இந்தியா&பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடந்தபோது, Ôமேட்ச் பார்க்க வருகிறோம்Õ என்கிற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து பதினாறு பேர் பெங்களூருவுக்கு வந்தனர். வந்தவர்கள் மேட்ச்சைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஊருக்குள்ளேயே எங்கோ பதுங்கிவிட்டனர். அவர்கள் அல்&கொய்தா தீவிரவாதிகளாக இருக்கலாம் என்கிற சந்தேகம் அப்போதே போலீஸ§க்கு வந்தது. ஆனால், அப்படி
ஊடுருவியவர்கள் ‘எங்கே போனார்கள், என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?Õ என்று ஒரு தகவலும் நமது நாட்டு போலீஸ§க்குக் கிடைக்க வில்லை. இந்த நிலையில்தான், அந்தப் பதினாறு பேரின் ரகசிய Ôநெட்&ஒர்க்Õகில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவிலும், இந்தி யாவுக்கு வெளியேயும் தீவிரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளாஸ்கோ விமான நிலையத் தாக்கு தலில் ஈடுபட்ட இரண்டு பேரை பிரிட்டன் போலீஸார் பிடித்துவிட்டனர். அவர்களில் ஒருவன், கம்ப்யூட்டர் இன்ஜினீயரான கபீல் அகமது.
இன்னொருவன், டாக்டருக்குப் படித்திருக்கும் சபீல் அகமது. இருவரும் பெங்களூருவைச் சேர்ந்த சகோதரர்கள். எரியும் ஜீப்பை ஓட்டிவந்த கபீல், தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருக்கிறான். எனவே சபீலிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், பெங்களூருவின் ரகசிய நெட்&ஒர்க் பற்றிய ஒருசில விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.

கிளாஸ்கோ விமான நிலைய சம்பவத் துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, ஆஸ்திரே லியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள முகமது ஹனீஃப் என்கிற உறவினருடன் கபீலும், சபீலும் செல்போனில் பேசியிருக்கிறார்கள். இதையடுத்து லண்டன் போலீஸார், ஆஸ்திரேலிய போலீஸ§க்குத் தகவல் கொடுத்து, அங்கே விமான நிலையத்தில் இருந்த ஹனீஃபை கைது செய்தனர். இவனும் கர்நாடகாவில்டாக்டர் படிப்புப் படித்தவன். இந்த விஷயங்கள் எல்லாம் வெளி வந்ததும், இம்மூவர் பற்றிய பின்னணியை விசாரித்த பெங்களூரு போலீஸாருக்குத் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன!

பெங்களூரு போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, நமக்குக் கிடைத்த தகவல்கள் இவைதான்&

‘பாகிஸ்தானிலிருந்து இங்கே(பெங்களூரு வில்) கிரிக்கெட் மேட்ச் பார்க்கவந்து தலை மறைவான பதினாறு பேரும் அல்&கொய்தாவின் உத்தரவின் பேரில் பெங்களூருவை சேர்ந்த கபீல் அகமதுவைதான் முதலில் சந்தித்திருக்கிறார்கள். கபீல் கொடுத்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்கள் பிரிந்து சென்றிருக்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்ற அனைத்து கம்யூட்டர் நிறுவனங்களும், இங்கே கால் பதித்துள்ளன. பொருளாதாரரீதியாக ÔகிடுகிடுÕவென வளர்ந்துவரும் இந்த ஊர்மீது பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முஸ்லிம் தீவிரவாதிகள் பலமுறை முயற்சி செய்தும் பலிக்கவில்லை. இதையெல்லாம் யோசித்த கபீல் அகமது, அடுத்தகட்டமாக சைபர் டெர்ரரிஸம் மூலம் தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கிறான். பிரபல கம்யூட்டர் நிறுவனங்களின் Ôநெட்&ஒர்க்Õகளில் வைரஸ்களை அனுப்பி அன்றாடப் பணிகளை நிலைகுலையச் செய்வதுதான் கபீலின் திட்டம்.

இதற்காக, Ôநெட்&ஒர்க் செக்யூரிட்டிÕ என்கிற படிப்பை ஆன்&லைனில் படித்துவந்தானாம் கபீல். இது தவிர இளைஞர்களைத் தயார் செய்து, வெளிநாடுகளில் கம்ப்யூட் டர் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்து வதும் இவனுடைய திட்டம். மாஸ்டர் பிரெயினாக கபீல் செயல்பட... அவனது உத்தரவுகளை இந்த இளைஞர்கள் வெளிநாடுகளில் தங்கி நிறைவேற்று வார்கள். இங்குள்ள கம்யூட்டர் நிறுவனங்களுக்குள் வைரஸ் அனுப்புவதுதான் இந்த இளைஞர்களுக்கு அஸைன்மென்ட். இதற்காக ஆளெடுக்கும் பணியில் பிஸியாக இருந்தபோதுதான், அல்&கொய்தா இயக்க மேலிடம் கபீலை லண்டனுக்குப் போகச் சொல்லியிருக்கிறது. எரியும் ஜீப்பை ஓட்டிச் சென்று மோதும் வேலை கபீலுக்கு புதிய அனுபவம். ஆகவே, கம்ப்யூட்டரில் கில்லாடியான அவன் இந்த மாதிரியான அதிரடித் தாக்குதலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல், குழம்பிவிட்டான். அதனால், சதித் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.’

இங்குள்ளகபீலின் வீடு மற்றும் வேறு சில இடங்களில் சோதனை நடத்திய போலீஸார், கபீல் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர்க¬ளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் உள்ள விவரங்கள் மிகவும் ரகசியமான வகையில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், மத்திய உளவுத்துறையின் கம்ப்யூட்டர் நிபுணர்கள் அதிலுள்ள விவரங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள அல்&கொய்தா இயக்கத் தினருக்கு ஐயாயிரம் இ&மெயில்களை அனுப்பியிருக்கிறான் கபீல். 2001&03&ம் ஆண்டுகளில் வடக்கு அயர்லாந்துக்குப் போய், அங்குள்ள தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறான். ஒசாமா பின்லேடனின் பேச்சுகள் மற்றும் அல்& கொய்தா இயக்க கமாண்டர்கள் 30 பேரின் பேச்சு களைத் தன் லேப்&டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தானாம். செசன்யா மற்றும் ஈராக் நாடு களில் தீவிரவாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அங்கெல்லாம் தீவிரவாதிகள் சிக்கினால் எந்தெந்த வகையில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்பதை வீடியோ செய்து வைத்திருந் தானாம்.

கபீலின் சகோதரனான சபீலின் பின்னணியைப் பற்றியும் பெங்களூருவிலுள்ள தீவிரவாதிகள் தடுப்பு போலீஸ் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஆகவே அடுத்தடுத்து மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரும் என்பது மட்டும் நிச்சயம்!

ஆர்.பி.

விகடன் கட்டுரை - முஸ்லிம் அடிமைகள்

நெல்லையை கலக்கிய மகளிர் போராட்டம்...

முஸ்லிம் பெண்கள் அடிமைகளா...? Junior Vikatan 15 July 2007

‘‘உயிரற்ற உடலுக்குப் பள்ளிவாசலில் அனுமதி. உயிருள்ள பெண்களுக்கு மட்டும் தடை விதித்து அவமதிப்பா..? உயிரும், உணர்வும் உள்ள எங்களை அடக்கி வைப்பதேன்..?’’ & இப்படியரு கோஷத்தோடு ‘தமிழ்நாடு பெண்கள் ஜமாத்’ என்ற அமைப்பு நெல்லையில் நடத்திய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் கட்டுப்பாடுகளைக் கடந்து இப்படி அன லாய் கொதித்தார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

புதுக்கோட்டையில் இயங்கும் ‘ஸ்டெப்ஸ் பெண்கள் மேம்பாட்டு மையம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பினர் ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் பெண்களை ஒருங்கிணைத்து, பெண்களுக்கென்று தனியாக ஜமாத்தின் கிளைகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். அப்போதே இதற்குப் பல்வேறு முஸ்லிம்
அமைப்புகளிடமிருந்தும், முஸ்லிம் ஆண்களிடமிருந்தும் ஊருக்குள் இருக்கும் ஜமாத்திடமிருந் தும் எதிர்குரல்கள் எழ ஆரம்பித்தன. ஆனாலும் இந்த அமைப்பினர் தொடர்ந்து பல ஊர்களிலும் ஆண்கள் ஜமாத்திற்குப் போட்டியாக பெண்கள் ஜமாத்தை அமைத்து, முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை விசாரித்துத் தீர்ப் பும் வழங்க ஆரம்பித்தனர். இடையிடையே ஜமாத்களில் பெண்களும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல ஊர்களிலும் போராட்டங் களையும் நடத்தத் தொடங்கினர். அந்த வகையில்தான் கடந்த 7&ம் தேதியன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில், இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார்கள்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான மேலப்பாளையம் அருகிலேயே இருப்ப தாலும், தடை செய்யப்பட்ட சில இஸ்லாமிய அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு இருப்பதாலும் இந்தப் போராட்டம் போலீஸ§க்கு ஏகத்துக்கு டென்ஷனைக் கிளப்பியிருந்தது. உளவுத்துறை போலீஸா ரும் உண்ணாவிரதப் பந்தலைச் சுற்றி கழுகுப் பார்வையோடு சுற்றினார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களின் மனக்குறைகளை எல்லாம் காட்டமான வார்த்தைகளால் போட்டுத் தாக்கினார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவரும், ‘ஸ்டெப்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநருமான ஷெரிஃபாவிடம் பேசினோம்.

‘‘இஸ்லாமிய மார்க்கத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டதாகவும், அதற்கு குர்&ஆனே சாட்சி எனவும் ஆண்கள் இன்று வரையில் பெருமைப் பேச்சு பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடிமைகளாகத் தான் நடத்தப்படுகின்றனர். அப்படி பெண்களை அடிமைப் படுத்துவதற்கு மார்க்கத்தையும், குர்&ஆனையும் ஆண்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குர்&ஆனில் பெண்களுக்குக் கல்வி, திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் மறுக்கப்படு கின்றன. ஆண்களையே உறுப்பினர்களாகக் கொண்ட ஜமாத் அமைப்புகள், பெண்களைப் பற்றிய பிரச்னைகளில் முடிவெடுப்பதற்குக்கூட பெண்களை ஆலோசிப்பதில்லை. சொல்லப் போனால் பெண்களை எங்குமே ஜமத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஜமாத் இயங்கும் பள்ளிவாசல் பகுதியில் உயிரற்ற பிணங்களை அனுமதிக்கும் ஆண்கள், பெண்களை அனுமதிக்கமாட்டார்களாம். உயிரும் உணர்வு கலந்தவர்கள்தானே பெண்களும்... தேவையில் லாத கட்டுப்பாடுகளைப் போட்டு பெண்களை அடக்கி வைக்க முயலுவதேன்?’’ என்றவர்,

‘‘குடும்ப, பாலியல் வன்முறைகளால் இறந்துபோகும் இஸ்லாமியப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இஸ்லாமிய பெண்களின் சந்தேகத்துக்குரிய மரணங்கள் நான்கு சுவர்களுக்குள் மறைக்கப்படுகின்றன. காலம் மாறிவிட்ட இன்றைய சூழலிலும் இளவயது திருமணங்களும், பல நூறு பவுன்கள் மஹர்(வரதட்சணை) வாங்குவதும் தொடர்கின்றன. மார்க்கத்தைப் பற்றி வாய்கிழிய பேசும் இஸ்லாமிய பெரியவர்களுக்கு இதுவெல்லாம் தெரியாதா..? மார்க்கம் இதைத்தான் போதிக்கிறதா..? மதத்தின் பெயரால் இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைப் பற்றிப் பேசினால் மத விரோதியாக சித்திரிக் கிறார்கள். நாங்கள் எங்களுக்கு சிறப்பான அதிகாரத்தை வழங்குங்கள் என்று புதிதாக எதையும் கேட்க வில்லை. ஏற்கெனவே குர்&ஆனில் சொல்லப்பட்டி ருக்கும் உரிமைகளைக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதைத் தனி நபராகக் கேட்டால் தீர்வு கிடைக்காது என்றுதான் பெண்கள் ஜமாத்தாக ஒருங்கிணைந்திருக்கிறோம். ஆரம்பித்த புதிதிலும், இப்போதும் எங்களுக்கு முஸ்லிம் ஆண் களிடமிருந்து ஏராளமான நெருக்கடிகள். முஸ்லிம் பெண் ஒருத்தி பெண்கள் ஜமாத்தில் உறுப்பின ராக இருந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவுக்குக் கொடுமைகள் நடக்கின்றன...’’ என்று நீளமாகப் பேசிவிட்டு நிறுத்தினார்.

பிறகு, அவரே தொடர்ந்து பேசுகையில், ‘‘ஆண்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் அதிகாரம் பறிபோகிறது என்ற அடிப்படையில் எங்களை ஏற்றுக் கொள்ளாததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மாநில அளவில் ஜமாத்துகளை கட்டுப்படுத்தும் அமைப்பான வக்ஃப் போர்டு பெண்கள் ஜமாத்துகளை அங்கீ கரிக்க மறுப்பதோடு நாங்கள் அனுப்பும் கடிதங்களைக் கூட பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விடுகிறது. இன்றைய உண்ணாவிரதத் துக்கு தென்காசி, செங்கோட்டை, வல்லம் போன்ற பகுதி களிலிருந்தெல்லாம் பெண்கள் வந்திருக்கின்றனர். ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கிற மேலப்பாளையத்திலிருந்து ஒருத்தர்கூட வரவில்லை. அங்கு அந்த அளவுக்குக் கட்டுப் பாடுகளும், அடக்கு முறைகளும் மிகுந்திருக்கின்றன. மிக சமீபத்தில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண், விபசாரம் செய்தாள் என்ற குற்றத்துக்காக பட்டப்பகலில் பலர் நடமாடும் வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறாள். வெட்டியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர்தான் என பலரும் சொல்கின்றனர். விபசாரம் செய்வது தப்புதான். ஆனால், அதற்கு மும்தாஜ் மட்டும்தான் காரணமா..? மும்தாஜுடன் கூட இருந்தவனை ஏன் விட்டு விட்டார்கள்? அவன் ஆண் என்பதாலா..? அரபு நாடுகள் போல தண்டனை கொடுக்கும் நீங்கள், உங்கள் கோபத்தை நல்லதுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு முன்னால் குர்&ஆனை ஒரு முறைக்கு இரு முறையாக நன்றாகப் படியுங்கள். மனிதர்கள் மனித நேயத்தோடு வாழ நபிகள் அமைத்துக்கொடுத்த ஷரியத் சட்டங்களை அசிங்கப்படுத்தாதீர்கள்...’’ என்றார் காட்டம் குறையாமல்!

இது தொடர்பாக ‘தவ்ஹீத்’ ஜமாத் அமைப்பின் மாநிலச் செயலாளர் சம்சுல்ஹா ரஹ்மானியிடம் கேட்ட போது, ‘‘குர்&ஆனில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் நடைமுறையில் இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜமாத்துகளுமே முழுமை யாக மாறிவிட்டன. பெண்கள் துப்புரவாக இருக்க முடியாத ஒரு சில நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் எல்லா தொழுகைகளுக் கும் பள்ளிவாசலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஒருவேளை ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதனை உள்ளுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதை விடுத்து இப்படியெல்லாம் மார்க்கத்தைப் பற்றி பொதுப்படையாக அவதூறு பேசி பிரச்னையை ரோட்டுக்குக் கொண்டு வருதெல்லாம் தேவையில்லாதது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தனி மனிதத் தவறு களையும் மார்க்கத்தின் தவறாக பேசுவதும் தவறு தான். மற்றபடி அவர்களும் தங்களுக்கென்று தனியாக ஜமாத்கள் நடத்திக் கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மும்தாஜ் கொலையைப் பொறுத்த வரையில் நாங்களும் அந்தச் செயலை மிகவும் கடுமையாகவே கண்டித் திருக்கிறோம். எந்தவொரு தவறுக்கும் கொலை தீர்வாக இருக்க முடியாது... பெண்கள் ஜமாத்தினர் நெல்லைக்கு வந்து உண்ணாவிரதம் நடத்தியிருப் பதால் நெல்லைப்பகுதியில் எந்தப் பிரச்னை யும் ஏற்பட்டுவிடாது... பெண்கள் தனியாக செயல் பட்டுப் பிரச்னைகளைத் தீர்வு காணும் அளவுக்கு இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை...’’ என்றார் சீரியஸாக.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், மேலப்பாளையம் இஸ்லாமியர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. இதன் எதிரொலி எப்படியும் இருக்கலாம் என்பதால், உறக்கத்தைத் தொலைத்துவிட்டு அலைந்து கொண்டி ருக்கிறது உளவுத்துறை போலீஸ்.

Copyright(C) Vikatan.com

Monday, 9 July 2007

பாகிஸ்தான் நாய்கள் கள்ள நோட்டு அடிக்குதுங்க...

பாகிஸ்தானிலிருந்து கள்ளநோட்டு கனஜோர்!

- நாற்பது ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வுக்குக் கடத்திவரப்பட்ட 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கடந்த வாரம் டெல்லியில் பிடிபட்டுள்ளன. இந்த மெகா கடத்தல் வேலையில் பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரிந்து, அதிர்ந்துபோயிருக்கிறது டெல்லி போலீஸ்.

ஜூன் 25&ம் தேதி டெல்லியிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே கள்ளநோட்டு கைமாற உள்ளதாக டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அங்குள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து வெளியே வந்த மூவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவர் களிடம் பெரியபெரிய பெட்டிகளில் அழகாக பேக் செய்யப்பட்ட நூல்கண்டுகள் இருந் திருக்கின்றன. அந்தக் கண்டுகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு நூல்கண்டில் 18 முதல் 20 நோட்டுகள் வரை இருந்தன. பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த ஜமீல் என்கிற வசீம், இவனது கூட்டாளி முகமது முஸ்லிம் மற்றும் ஒன்று விட்ட சகோதரன் நயீம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் ஜமீல், ‘‘இந்த நோட்டுகள், இக்பால் கானா என்பவன் தலைமையில் லாகூர் நகரில் அச்சடிக்கப்படுகின்றன. இதை இந்தியா வுக்குள் கொண்டுவரும் ஆண்கள் சந்தேகத்தின் பேரில் அடிக்கடி பிடிபட்டுவிட்டதால் பெண்களை இந்தக் கடத்தல் வேலைக்குப் பயன்படுத்துகிறோம். இந்தப் பெண்களுக்கு ‘சவாரி’ என்று பெயர். இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப தனியாக ஏஜென்ட்கள் இருக் கிறார்கள். இந்தப் பணத்தைக்கூட ரஷிதா, மெஹருன்னிசா என்ற இரண்டு பெண்கள்தான் பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் வழியாக வரும் தார் எக்ஸ்பிரஸில் கடத்திவந்தனர். அவர்களிடமிருந்து அதை நயீம் வாங்கி வந்தான்.
அவனிடமிருந்து நோட்டுகளை வாங்க நானும் முகமது முஸ்லிமும் வந்தோம், மாட்டிக் கொண்டோம்’’ என்று கூறியிருப்பதோடு,

‘‘இதுவரை ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் தென் இந்தியாவுக்குள்ளும் புழக்கத்தில் விட்டிருக்கிறோம்...’’ என்றும் கூறியிருக்கிறான்.

ஜமீல் கூறுவதற்கு ஏற்ப, கடந்த ஜூன் 7&ல் டெல்லியின் தரியாகன்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தபஸ்யூம் எனும் 26 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் காஸ்மட்டிக் பொருட்களில் பேக் செய்து பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டன. மும்பையில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்துவந்த தபஸ்யூம், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை பாகிஸ்தானுக்கும் துபாய்க்கும் விசிட் செய்து கள்ளநோட்டுகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாக போலீசஸாரிடம் ஒப்புக் கொண்டார். கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்குச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த தகவலையும் போலீஸாரிடம் அவர் சொல்லி இருக்கிறார். அவர் துபாய்க்கு தன் வேலையாக சென்றிருந்தபோது, தற்போது டெல்லி போலீஸாரிடம் பிடிப்பட்டுள்ள ஜமீல் அறிமுகமாகி, இந்தக் கள்ளநோட்டுத் தொழிலில் தன்னை ஈடுபடுத் தியதாகவும் தபஸ்யூம் கூறியுள்ளார்.

இது குறித்து கள்ளநோட்டு வழக்கை விசாரித்துவரும் டெல்லி சிறப்புப் பிரிவின் துணை கமிஷனர் அலோக் குமாரிடம் பேசினோம். ‘‘ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கள்ளநோட்டுகளை அனுப்பி வைக்கும் இக்பால் கானா, உ.பி&யின் முசாபர் நகரைச் சேர்ந்தவன். இவன் 1996&ல் ஐ.எஸ்.ஐ&யிடமிருந்து ஆயுதங்கள் கடத்தும்போது சிக்கியதாக லோதி சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. ஆனால், எப்படியோ தப்பி, பாகிஸ்தான் சென்று செட்டிலாகி, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். அதை விநியோகிக்க ‘சவாரி’ எனப்படும் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையை, இந்தியாவில் ஜமீலும், நேபாளத்தில் ஷஃபீக் என்பவனும் செய்துவருகிறார்கள்.

இந்த சவாரிகள், இலங்கை, மலேசியா, தாய் லாந்து நாடுகளின் வழியாக விமானங் களிலும், பாகிஸ் தான் பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இந்திய எல்லை வழியாகவும் பணத்தைக் கொண்டு வருகிறார்கள். ஜமீல் எங்களுக்குக் கொடுத்த தகவலின் பேரில், விரைவில் சில ‘சவாரிகளைக்’ கைது செய்ய இருக்கிறோம். பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ள நோட்டுகள் ஒரிஜினல் நோட்டைவிட லேசாக இருக்கும். அதன் வரிசை எண்களும் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். அதோடு ரூபாய் நோட்டில் இருக்கும் வாட்டர் மார்க் என்னும் கோடு அதிக இடைவெளியோடு இருக்கும். இதை எல்லாம் ஊனறி கவனத்தால் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்து விடலாம்’’ என்று முடித்தார்.

இந்தியா வரும் இந்தக் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் நாற்பது ரூபாய்க்கு Ôநூறு ரூபாய்Õ என்ற கணக்கில் கைமாறுகிறது. இது உ.பி., பீகார் போன்ற மாநிலங்களின் சிறிய நகரங் களில் புழக்கத்தில் விடப்படுகிறது. இப்படி, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைமாற்றியதில், நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த முடிவின்படி, சில வெளிநாடுகளில் இருப்பதை போல், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் வந்தால்தான் கள்ளநோட்டுகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் போலிருக்கிறது!


நன்றி - ஜூனியர் விகடன் 11 July 2007

Friday, 6 July 2007

திண்ணை கட்டுரை - பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம்

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம்
எஸ் மெய்யப்பன் Thursday July 5, 2007


பகவத் கீதையின் அமைப்பு முறை

குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன.

அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிர மன்னன் அமர்ந்துள்ளான். அவன் கண்பார்வையற்றவன். அருகில் அமைச்சன் சஞ்சயன் இருக்கிறான்.
அப்போது வியாச முனிவர் அங்கே தோன்றி, ‘திருதராஷ்டிரா... குருச்சேத்திரப் போரைப் பார்க்க விரும்பினால்... உனக்கு ஞான திருஷ்டி தருகிறேன்!” என்றார்.

‘உறவினர்கள்; கொல்லப்படுவதை நான் காண விரும்பவில்லை” என்ற திருதராஷ்டிரன், ‘இருந்தாலும், போரின் தன்மையை அறிய விரும்புகிறேன்” என்றான்.

‘அப்படியானால் இதோ.. இந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானதிருஷ்டி அளிக்கிறேன்! இவன் உனக்குப் போர்க்கள நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவான்!“ என்று அருகில் அமர்ந்திருந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானக்கண் அருளிவிட்டு வியாச முனிவர் மறைந்து போனார்.
பிறகு அமைச்சன் சஞ்சயன் போர்க்கள நிகழ்;ச்சிகளை ஞானக்கண்ணால் கண்டு, மன்னவன் திருதராஷ்டிரனுக்கு 1விளக்கிக் கூறுகிறான்.

இவ்விதம் அமைச்சன் சஞ்சயன் விளக்கும் வகையில்தான் பகவத் கீதை அமைந்து, பதினெட்டாம் அத்தியாயத்தின் இறுதியில் அவன் வாய்மொழி மூலமாகவே நிறைவெய்துகிறது.
அமைப்பு முறையில் எடுத்துக் கொண்டால் இது ஓர் அற்புதமான உத்தி என்று தான் சொல்ல வேண்டும்.

இடைப்பட்ட அத்தியாயங்களில் பல இடங்களில் அமைச்சன் சஞ்சயன் பேசுகிறான். இவ்விதம் அவன் பேசுவதெல்லாம், தெளிவு கருதி, இப்புதிய மொழிபெயர்ப்பில் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளன.

(1. வாரியார் சுவாமிகளின் ஸ்ரீமகாபாரதம் - பக். 303 - 305

இதையே உரையாசிரியர் „அண்ணா… கீழ்கண்டவாறு விவரித்துள்ளார்.

„பத்தாவது நாள் போரில் பீஷ்மர் தேரினின்றும் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் சயனித்து மரணத்தை எதிர் நோக்கியிருந்;தார். இச்செய்தியை அமைச்சன் சஞ்சயன், மன்னவன் திருதராஷ்டிரனிடம் கூறிய போது, மன்னவன் மிகவும் துக்கித்து, யுத்தச் செய்திகளை விவரமாய் வர்ணிக்கும்படிக் கேட்டான். வியாசருடைய அருளால் தூரத்தில் நடப்பவற்றை மனக்கண்ணில் காணும் சக்தி பெற்றிருந்த அமைச்சன் சஞ்சயன் போர் ஆரம்பித்தது முதல் வர்ணிக்கத் தொடங்கினான்!…
- ஸ்ரீமத் பகவத் கீதை, பக். 4)


அத்தியாயம் ஒன்று

அர்ஜுன விஷாத யோகம்

விஷாதம் என்றால் துயரம். அர்ஜுனன் துயரமடையும் பகுதி இது. குருச்சேத்திரத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போர் புரிய, நால்வகைப் படைகளுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் எதிரிப்படையை நோட்டம் விடுகிறான். எதிரிகள் அனைவருமே அவனது உற்றார் உறவினர்களாயும், ஆசிரியன்மார்களாயும் இருக்கக் கண்டு உயிரினும் இனிய அவர்களைக் கொல்லுவதா என்று துயரம் மிகுந்தவனாய் வில்லையும் அம்பையும் வீசி எறிகிறான். இந்நிகழ்ச்சிகள் இதில் விளக்கப் பெறுகின்றன.
இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-------

(அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் திருதராஷ்டிர மன்னவன் அமர்ந்திருக்க, அமைச்சன் சஞ்சயன் அருகில் இருக்கிறான்)

திருதராஷ்டிரன்: ஓ சஞ்சயா‚ குருச்சேத்திரத்தில் போர் செய்யத் திரண்ட என் மைந்தர்களும் பாண்டவர்களும் என்ன தான் செய்தார்கள்?

அமைச்சன் சஞ்சயன்1: மாமன்னவரே‚ இதோ2... தங்கள் மைந்தன் துரியோதனன் அணிவகுத்து நிற்கும் பாண்டவர் படையைப் பார்த்த பின்பு, குருதேவர் துரோணாச்சாரியாரிடம் செல்கிறான்.. இவ்வாறு சொல்லுகிறான்‚
(என்று அமைச்சன் சஞ்சயன் ஆரம்பித்து வைக்க குருச்சேத்திர யுத்தகளத்திற்குக் காட்சி மாறுகிறது.)

துரியோதனன்3: குருதேவரே‚ தங்களது சீடனும் துருபதன் மகனுமான திருஷ்டத்யுமனன்4 அணிவகுத்திருக்கும் அதோ.. அந்தப் பெரிய பாண்டவ சேனையைப் பாருங்கள்‚ அங்கே வீராதி வீரர்களும் விற்போர் வித்தகர்களும் இருக்கிறார்கள். விராடன், துருபதன், வீரமிக்க காசிராஜன்.. யுயுதானன், சேகிதானன், குந்திபோஜன், சைவியன்.. அபிமன்யு, யுதாமன்யூ, உத்தமவுஜா, புருஜித்து.. திருஷ்டகேது மற்றும் திரௌபதி மைந்தர்களான உபபாண்டவர்;களும் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே மகாரதர்கள்5. ஓ பிராமண குல திலகமே.. இப்போது6 நமது படைப் பெருமை கூறுவேன்‚ நமது தளநாயகர் வரிசையை நினைவு கூர்வேன்‚ தாங்களும் பீஷ்மரும் கர்ணனும், கிருபரும், விகர்ணனும், அச்வத்தாமனும், சோமதத்தன் மகன் பூரிசிரவசும் இருக்கிறீர்கள்‚ மேலும் எனக்காக உயிரும் கொடுக்கத் துணிந்த சூரர்கள் பலர் இருக்கிறார்கள்‚ அத்தனை பேருமே போரிலே வல்லவர்கள்.. பற்பல ஆயுதம் உள்ளவர்கள்‚ பீஷ்மரால் காக்கப்படும் நமது சேனை அளவுகடந்து7 அலை மோதுகிறது. பீமனால் காக்கப்படும் பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது. (வீரர்கள் பக்கம் திரும்பி) ஓ, சேனா வீரர்களே‚ அவரவர்குரிய இடத்திலிருந்து கொண்டு நமது பீஷ்மரைக் காத்து நின்று போர் புரியுங்கள்‚

(இவ்விதம் கூறிய துரியோதனனுக்கு உற்சாகம் தோன்றும் படியாக, குருவம்சப்பெருவீரர் பீஷ்மர் சிம்மம் போல் கர்ஜித்து, சங்கை ஊதினார். உடனே சங்குகளும் பேரிகைகளும், பறைகளும் கொம்புகளும் மற்றும் தம்பட்டங்களும் முழங்கப் பேரொலி எழுந்தது.
பாண்டவர் படையில் வெள்ளைக் குதிரைகள் பூட்டி.. கொள்ளை அழகு காட்டி ஓர் இரதம் நின்றது. அதில் சாரதியாக அமர்ந்திருந்த கண்ணன் பாஞ்சஜன்யம் என்ற தெய்வீக சங்கை ஊதினான். அருகிலிருந்த அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பீமசேனன் பவுண்டரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான். தருமன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள். மற்றும் காசிராஜன், சிகண்டி8, திருஷ்டத்யுமனன், விராடன், சாத்யகி, துருபதன், திரௌபதி மைந்தர்கள் மற்றும் அபிமன்யு ஆகிய அனைவரும் தனித்தனியே தத்தம் சங்குகளை முழக்கினார்கள். இந்தப் பெருமுழக்கம் வானை அதிரடித்தது... மண்ணில் எதிரொலித்தது... துரியோதனாதியர் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.

போர் துவங்கும் இந்த நேரத்தில் காண்டீபமும் கையுமாக நின்ற அனுமக்கொடி அர்ஜுனன், ஹிருஷிகேசனான9 கண்ணனிடம் சொல்லுகிறான்)

அர்ஜுனன்: அச்சுதா‚ இரு படைகளுக்கும் நடுவே என் தேரை நிறுத்துக‚ போரிலே ஆசை கொண்டு நிற்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும். துன்மதி படைத்த துரியோதனனுக்குக்காகப் போரிட வந்துள்ளவர்களை நான் காண வேண்டும்.
கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா‚ அணி திரண்டு நிற்கும் கௌரவர்களை நீ பார்க்கலாம்‚

(என்றவாறு பரந்தாமன் அழகிய தன் சிறந்த ரதத்தைப் படை நடுவே நிறுத்தினான். அர்ஜுனன் கண்களை மலர்த்தி இருபுறமும் பார்த்தான். எதிரில் தந்தையர் நின்றனர்‚ பாட்டன்மார் நின்றனர்‚ ஆச்சாரியரும் அண்ணன் தம்பியரும் நின்றனர்‚ மக்களும் மாமன்மாரும் நின்றனர்‚ தோழரும் பேரன்மாரும் நின்றனர்‚ இதைப் பார்த்த அர்ஜுனன் குமுறும் துயரத்துடன் கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.)

அர்ஜுனன்: கண்ணா‚ இவர்களுடனா நான் போர் செய்ய வேண்டும்? என் உடல் சோர்வடைகின்றதே‚ வாய் வறள்கின்றதே‚ நடுக்கமும் மயிர்க்கூச்சமும் எழுகின்றதே‚ கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றதே‚ மேலும் தோலும் பற்றி எரிகின்றதே‚ மனது சுழல்கின்றதே‚ என்னால் நிற்கவும் முடியவில்லையே‚
கேசவா10‚ கெட்ட சகுணம் தோன்றுகின்றதே‚ ஆச்சாரியர்களும் பாட்டன்மார்களும் தகப்பன்மார்களும்.. பேரன்மார்களும் பிள்ளைச் செல்வங்களும்.. மாமன்மார்களும் மாமனார்களும்.. சம்பந்திகளும் மைத்துனர்களும் என் எதிரில் நிற்கிறார்களே‚ இச்சுற்றத்தைக் கொன்று, கொற்றத்தை வென்றிட நான் விரும்பவில்லை‚ அதில் எந்த நன்மையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை‚ ராஜ்ஜியம், ரம்மிய சுகவாழ்வு இவற்றில் பயன் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை‚ அரச போகம் எதற்காக‚ ஆசாரியர்களும் அன்பான உறவினர்களும் அக மகிழ்வதற்காக‚ அத்தனை பேரும், இதோ.. உயிரையும் துறக்கச் சித்தமாய் யுத்த பூமியில் நிற்கிறார்களே‚ இவர்களைக் கொன்றா இன்பம் அனுபவிப்பது?

மதுசூதனா‚11 நான் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை... இவர்களை கொல்ல நான் விரும்பவில்லை‚ மூவுலகுமே பரிசாகக் கிடைத்தாலும் சரி.. முன் நிற்கும் இவர்களை நான் கொல்ல மாட்டேன்‚ மேலும் கொடும் பாவிகளான 12கௌரவர்களைக் கொல்லுவதால் பாவமே வந்து சேரும். சுற்றத்தை அழித்துவிட்டு சுகத்தைப் பெற்றிட முடியுமா? குல நாசத்தாலும், மித்திர துரோகத்தாலும் விளையும் கேடுகளை, ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் உணராவிட்டாலும், அதை உணர்ந்த நாம், அந்தப் பழி பாவத்திலிருந்து ஏன் விலகிக் கொள்ளக் கூடாது‚

ஜனார்தனா‚13 குலம் அழிந்தால் குலதர்மம் வீழும் அதர்மம் சூழும் அதர்மத்தின் மிகுதியால் மாதர் கற்பு கெடும் இது வர்ணக் கலப்பில்14 கொண்டு போய்விடும்; இதனால் ஜாதி தர்மங்களும் குலதர்மங்களும் நிலைகுலையும்; இதற்குக் காரணமானவர்களுக்கும் அவர்களின் சந்ததியார்களுக்கும் நிச்சயம் நரகமே ஏற்படும் அவர்களின் பித்ருக்கள்15 சோறும் நீரும் இழந்து வீழ்ச்சியடைவார்கள். குலதர்மத்தை இழந்தவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்; அதனால் சுற்றத்தைக் கொல்லுவது பாவம், அதை நான் செய்ய மாட்டேன். ஆயுதமின்றி இருக்கும் என்னை அவர்கள் கொல்லட்டும்; அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்‚
(இவ்விதம் கூறிய அர்ஜுனன் வில்லையும் அம்பையும் வீசி எறிந்து விட்டு, துயரம் மிகுந்தவனாய் இரதத்தின் பீடத்தில் அமர்ந்து விட்டான்)

(முதல் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. சஞ்சயன் - விருப்பு வெறுப்பு ஆகியவற்றை வென்றவன்.

2. அமைச்சன் சஞ்சயன் ஞானக்கண்ணால் பார்த்து விவரிக்க ஆரம்பிக்கிறான். அக்காலத்திலும் தொலைக்காட்சி இருந்திருக்குமோ‚ தற்காலத் தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனையாளர், நிகழ்ச்சி நடக்கும் களத்திலேயே இருக்கிறார். அமைச்சன் சஞ்சயன் களத்திலே இல்லாமல், அரண்மனை முற்றத்திலிருந்து கொண்டு, ஞானக் கண்ணால் காண்பதை வர்ணனை செய்கிறான்.

3. துரியோதனன் - யுத்தத்தில் எளிதில் வெல்லப்படாதவன்.

4. திருஷ்டத்யுமனன் - எவராலும் எதிர்க்க முடியாதவன்.

5. மகாரதர்கள் - தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பகைவரின் ஆயுதங்களிலிருந்து காத்துக் கொண்டு, பதினாயிரம் வில்லாளிகளை நடத்துபவன் மகாரதன்.

6. துரியோதனனும் அவனைச் சேர்;ந்தவர்களும் மனிதனின் கீழ்த்தர உணர்வுகளையும் அர்ஜுனனும் அவனைச் சேர்ந்தவர்களும் மனிதனின் மேன்மையான உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன். நமது உடம்பு தான் போர்க்களம். மேற் சொன்ன இரு வகை உணர்வுகளுக்கும் இடையில் முடிவில்லாத போராட்டம் நடந்து வருகிறது; இதுவே கீதையில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது. கண்ணனே உடம்பினுள் உறைபவன், தூய்மையான இதயத்தில் அவன் குரல் ஒலித்துக் கொண்டே உள்ளது. கடிகாரத்திற்குப் போலவே இதயத்திற்கும் தூய்மை எனும் சாவி தேவை இல்லாவிட்டால் இதயத்திற்குள் அவன் பேச்சு நின்றுவிடுகிறது.

- காந்தியடிகள்: யங் இந்தியா - நவ 12, 1925.

7. சில உரையாசிரியர்கள் இதில் வரும் „பர்யாப்தம்… என்ற சொல்லுக்கு, „பூரணமான… என்ற பொருளையும் „அபர்யாப்தம்… என்ற சொல்லுக்கு „பூரணமற்ற… என்ற பொருளையும் கொண்டு, துரியோதனன் சேனையை விட, பாண்டவர் சேனை அதிகமாயுள்ளது என்று பொருள் கொண்டுள்ளனர். துவாரகைக்குச் சென்ற அர்ஜுனன்.. கண்ணனுடைய சகாயத்தையும், துரியோதனன்.. கண்ணனுடைய படை உதவியையும் பொறுக்கி எடுத்தனர் என்பதால், துரியோதனன் சேனை அபரிமிதமாக இருந்தது என்று பொருள் கொள்வதே பொருத்தமுடையதாகும்.

8. சிகண்டி - முகத்தில் மீசை இல்லாதவன். துருபத ராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்து, பிறகு ஆண் தன்மை பெற்றவன். இவன் பீஷ்மருக்கு எதிரில் நின்ற போது, அவர் போர் புரியாமல் நிற்கவே, அவருக்குத் தோல்வியுண்டாயிற்று.

9. ஹிருஷிகேசன் - இந்திரியங்களுக்கு ஈசன்.

10. கேசவன் - அழகிய முடியுடையவன்ƒ கேசிகன் என்ற அசுரனைக் கொன்றவன்ƒ மும்மூர்த்திகளை வசப்படுத்தி வைத்திருப்பவன்.

11. மதுசூதனன் - மது என்ற அசுரனை அழித்தவன்.

12. தீ வைப்பவன், விஷம் வைப்பவன், ஆயுதம் கொண்டு ஆயுதம் இல்லாதவனைக்
கொல்பவன், பொருளை அபகரிப்பவன், பிறர் பூமியை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் என்று ஆறு வகையான கொடும் பாவிகள்.

13. ஜனார்தனன் - மக்களால் துதிக்கப்படுபவன்.

14. „வர்ணலங்கர… என்ற வார்த்தைக்கு „குலங்களின் கலப்பு… என்றே பலரும் பொருள் கொண்டுள்ளனர். ஸ்ரீ பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா இதற்கு, „தேவையற்ற மக்கள் கூட்டம்… என்ற பொருள் கொண்டுள்ளார்.

15. இறந்தவர்கள் சிறிதுகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர் என்பதும் அவர்களை, அவர்களைச் சார்ந்தவர்கள் நினைத்துப் பார்க்கும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது என்பதும் ஐதீகம். இவ்விதம் நினைத்துப் பார்க்கும் சொல்லுக்கு சிராத்தம் என்று பெயர். இதில் முன்னோர்களுக்காகப் பிண்டம் மற்றும் நீர் கையாளப்படுகின்றன. அவர்களைச் சூழ்ந்துள்ளவர்களுக்காக, வறியோர்க்கு சிராத்த காலத்தில் உணவளிக்கப் படுகிறது.


அத்தியாயம் இரண்டு
ஸாங்கிய யோகம்

ஸாங்கியம் என்பது ஆராய்ச்சியால் வரும் ஞானம். அழியக்கூடியது உடல், அழிவற்றது ஆத்மா. ஆகவே உடலைக் கொன்றாலும் ஆத்மாவை கொன்றதாகாது. கடமைகளைச் சரிவரச் செய்தால் ஆத்மஞானம் கிட்டும். அதனால் நற்கதியடையலாம். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 72 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-------------

(1மருகித் துயருற்ற அர்ஜுனனுக்கு மதுசூதனன் தேறுதல் வார்த்தைகள் கூறலானான்)

கண்ணன்: அர்ஜுனா‚ உன் செயல் 2ஆரியனுக்கு அடாதது! சொர்க்கத்தைக் கொடாதது‚ புகழின்பால் படாதது! இந்த நெருக்கடி நிலையில் இத்தகைய மனச்சோர்வு உனக்கு எங்கிருந்து வந்தது? 3பேடியைப் போல் வாடி நில்லாதே‚ போரிடேன் எனும் வார்த்தையைச் சொல்லாதே‚ எழுந்திடு‚ எதிரிகள் மேல் பாணத்தைப் பொழிந்திடு‚

அர்ஜுனன்: மதுசூதனா‚ பூஜைக்குரிய பீஷ்மரையும் மகாத்மா துரோணரையும் பாணங்களால் எப்படி அடிப்பேன். இவர்களைக் கொன்றால், இவர்களின் இரத்தம் தோய்ந்த இன்பங்களைத் தான் நான் இம்மையில் அனுபவிக்க வேண்டும். அதைவிட நான் யாசகம் பண்ணலாம்... அதிலே கிடைக்கும் உணவை உண்ணலாம். வானகமும் இந்த வையகமும் ஒருங்கே கிடைத்தாலும், என் புலன்களில் அலை பாயும் இந்தத் துயரம் என்னை விட்டு நீங்காது. எவரைக் கொன்றபின் நான் உயிர் வாழ விரும்ப மாட்டேனோ... அந்தத் திருதராஷ்டிர மைந்தர்களல்லவா எதிரே நிற்கிறார்கள்‚ ஒன்று.. இவர்களை நாம் கொல்லப் போகிறோம்‚ அல்லது அவர்கள் நம்மை வெல்லப் போகிறார்கள்‚ இவற்றில் எது மேலானது என்பது எனக்கு விளங்கவில்லை. கண்ணா! 4கார்ப்பண்யம் என்ற சிறுமையால் கலங்கி நிற்கும் நான் உன் சீடன். உன்னையே சரணடைந்தவன். அறம் எது என்பதை எனக்கு அறிவுறுத்துக‚ அலைபாயும் என் மனத்தை நிலை நிறுத்துக‚

(இவ்விதம் „போர் புரியேன்‚… என்று சொன்ன அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவாறு கண்ணன் கூறுவான்)

கண்ணன்: அர்ஜுனா‚ வீணாக நீ துயரப் படுகிறாய்‚ பேச்சிலே அறிவாளி போல் உயரப் பறக்கிறாய்‚ இறந்தவர் அல்லது இருப்பவருக்காக அறிஞர்கள் துயரப்பட மாட்டார்கள். நானும் நீயும்... இந்த அரசர்களும் இதற்கு முன்பு இல்லாமல் இருந்ததில்லைƒ இனியும் நாம் இல்லாமலிருக்கப் போவதில்லை. உடலுக்கு இளமையும் மூப்பும் வருவது போல், ஆத்மாவுக்கு வேறு உடல் வருகிறது. கிழிந்த துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிவது போல், சிதைந்த உடம்பினை நீத்து விட்டு ஆத்மா புதிய உடம்பினுள் நுழைகிறது. எனவே இறப்பிற்காக உண்மையான வீரன் கலங்கமாட்டான்;5. 6ஐம்புலன்களின் திருவிளையாடலில்..குளிர் வெப்பம், இன்பம் துன்பம் ஆகியவை தோன்றுகின்றன. இவை வரும் போகும்.. நிலைத்து நிற்பதில்லை. இந்த இன்ப துன்பங்களை எவன் சமமாகக் கருதுகிறானோ அந்த வீரனுக்கு மரணமே இல்லை‚

இன்னும் சொல்வேன் குந்தியின் மைந்தா‚ இல்லாததற்கு இருப்புக் கிடையாது, இருப்பது இல்லாமல் போக முடியாது. உலகெல்லாம் ஊடாடி நிற்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள்‚ இதை அழிக்க எவராலும் முடியாது. ஆத்மாவால் தாங்கப்படும் ஸ்தூல வடிவங்களே அழியக் கூடியவை. இவன் கொல்வான்.. இவன் கொலையுண்டான் என்று எண்ணும் இருவருமே அறியாதவர்கள். ஆத்மா கொல்வதும் இல்லை, கொலையுண்பதும் இல்லை‚ அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை‚ அது இல்லாதிருந்து பிறப்பதும் இல்லை‚ அது தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை‚ உடல் கொல்லப்படும் போதும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. ஆயுதங்கள் அதை அறுக்காது‚ தீ அதை எரிக்காது7‚ நீர் அதை நனைக்காது‚ காற்று அதை உலர்த்தாது‚ அது8 அறுக்க முடியாதது‚ எரிக்க முடியாதது‚ நனைக்க முடியாதது‚ உலர்த்த முடியாதது‚ அது நிரந்தரமானது9‚ நிறைவானது‚ நிலையானது‚ உறுதியானது‚ முடிவற்றது‚ மாறுபடாதது‚ சிந்தனைக்கு எட்டாதது‚ பொறிகளுக்குத் தென்படாதது‚ இன்னும் என்றும் புதியது‚ ஆகவே அர்ஜுனா, இவ்வுண்மைகளை அறிந்து துயரத்தைக் கைவிடு‚
ஒரு வேளை, இவ்வாத்மா பிறப்பும் இறப்பும் உடையது என்று நீ கருதினாலும் கூட, அதற்காக நீ வருந்துவதும் பொருந்தாது. பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கும் போது, இதைப் பற்றி நீ வருந்தி என்ன பயன்? இதில் துன்பப்பட என்ன இருக்கிறது? உயிர்களின் துவக்கமும் முடிவும் தெளிவற்ற நிலையில் இருக்க, இடைப்பட்ட காலம் தெளிவாக இருக்கிறது. இந்த ஆத்மாவை ஒருவன் வியந்து பார்க்கிறான்‚ இன்னொருவன் வியந்து பேசுகிறான்‚ மற்றொருவன் வியந்து கேட்கிறான்‚ ஆனால் யாரும் இதனை முழுமையாக அறிந்ததில்லை‚

சுயதர்மத்தை எடுத்துக் கொண்டாலும், நீ அஞ்சுவது பொருந்தாது. அறப்போரைக் காட்டிலும் அரசனுக்குச் சிறந்த சுய தர்மம் இல்லை. தற்செயலாய் மூண்டிருக்கும் இந்த யுத்தம், கதவு திறந்திருக்கும் சொர்க்கம்; நியாயமான யுத்தமே ~த்ரியனுக்கும் பாக்கியம்‚ இதை நீ நழுவ விட்டால் புகழை இழப்பாய்‚ பாவத்தை அடைவாய்‚ பயத்தால் நீ பின் வாங்கினாய் என்று பலரும் உன்னை இழித்துப் பேசுவர்‚ பகைவர் உன் திறமையைப் பழித்துப் பேசுவர்‚ பெருமையாகப் பேசியவர்களே அதை அழித்துப் பேசுவர்‚ இது சிறப்பைக் காட்டிலும் இழிவானதல்லவா? இதைவிடத் துன்பம் வேறு உலகினில் உள்ளதா? போரில் நீ மடிந்தால் கிடைக்கப் போவது பொன்னுலகம்‚ வென்றால் கிடைக்கப் போவது மண்ணுலகம்‚ ஆகவே வெற்றி தோல்வியைச் சமமாகக் கொள்‚ போருக்குத் துணிந்து நில்‚ இதனால் உனக்குப் பாவம் உண்டாகாது‚

அர்ஜுனா‚ இது வரை உனக்கு10 ஆராய்ச்சி வழியில் அறிவுரை கூறினேன்; இனி யோக வழியில் விளக்கிச் சொல்லுவேன்‚ இந்த யோக புத்தி கர்ம பந்தங்களை நீக்கும், குற்றம் வராது காக்கும், இந்தக் கர்ம யோக முறை முழுமை பெறாவிட்டாலும்,11 வீணாகிப் போகாது‚ இதன் சிறு பகுதியும் கூட சம்சார பயத்தைப் போக்கும்‚ இதில் உறுதி கொண்டவனுக்கு அறிவு ஒருமைப்பட்டு 12உயர்ந்து நிற்கும்;‚ மற்றவர் புத்தியோ கிளைவிட்டுப் பிரியும்‚ சொர்க்கப் பயன் கூறும் வேத வாக்கியங்களில் சிலர் பற்று வைக்கிறார்கள்‚ இவர்கள் இறுதிப் பயன் என்று சொர்க்கத்தைத் தேடுகிறவர்கள்‚ ஆசைப் பாட்டுப் பாடுகிறவர்கள்‚ செல்வத்தின் பின்னால் ஓடுகிறவர்கள்‚ அதிகாரத்தை நாடுகிறவர்கள்‚ பேச்சிலே பூப் போன்ற அடுக்குச் சொல் போடுகிறவர்கள்‚ இவர்களின் பேச்சில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்களுக்கு அறிவு என்றுமே ஒரு நிலைப்படாது.

அர்ஜுனா‚ வேதங்கள் கூறும்13 முக்குணங்களை நீ கடந்தவனாக வேண்டும்;;‚ இன்ப துன்ப இருமைகளற்று சமநிலை அடைந்தவனாக வேண்டும். ஆத்மாவை வசப்படுத்திச் சிறந்தவனாக வேண்டும்‚ அப்போது உனக்கு வேதங்கள் தேவையில்லை;;‚ பொங்கும்14 வெள்ள நீர் இருக்கும் போது, சின்னஞ்சிறு பள்ளநீர் எதற்கு?

இன்னொன்றும் கூறுவேன் அர்ஜுனா, சும்மா இருப்பதில் சுகம் காண்பது மடமை, வினை செய்வதே உன் கடமை‚ விளையும் பலா பலன்கள் உனைச் சேர்ந்தவையல்ல, பயன் கருதிக் காரியம் செய்வது பாவமானது, 15பற்றைத் துறந்து பணி செய்வதே சாலச் சிறந்தது, அதிலும் 16திறமையுடன் செயல் புரிவதே யோகம் என்பது, இது கைவரப் பெற்றவன் நன்மை தீமைகளைத் துறந்தவனாகிறான், பிறவித்தளைகளை மறந்தவனாகிறான்‚ மனிதரில் சிறந்தவனாகிறான், அறிவின் துணை கொண்டு மோகம் என்ற குழப்பத்தை அகற்றும் போது, கேட்பது, கேட்கப் போவது இரண்டாலும் நீ பற்றினை விடுவாய், அந்த அறிவை ஆத்மாவுடன் இணைக்கும் போது யோகத்தை அடைவாய்.

அர்ஜுனன்: கேசவா‚ சமாதியில் நிலைத்த புத்திமானுடைய இலக்கணம் என்ன?

கண்ணன்: ஆசைகளைத் துறந்து, தன்னிலே தானாகி, தனக்குள்ளே மகிழ்ந்தவன் நிறைஞானி ஆவான், அவனே ஸ்திதப்பிரக்ஞன்‚

அர்ஜுனன்: அவன் எப்படி இருப்பான்?

கண்ணன்: அவன் இன்பத்தில் மகிழாமல் இருப்பான், துன்பத்தில் துவளாமல் இருப்பான், ஆமை தன் அவயங்களை வேண்டும் போது ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல், அவன் தன் ஜம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் உள்ளிழுத்துக் கொள்வான்.

அர்ஜுனன்: அவன் எப்படிப் பேசுவான்?

கண்ணன்: அவன் நல்லவை நடந்தால் மகிழ்ந்துரைப்பதுமில்லை அல்லவை நடந்தால் நொந்து கொள்வதுமில்லை.

அர்ஜுனன்: அவன் எப்படி நடந்து கொள்வான்?

கண்ணன்: கொந்தளிக்கும் புலன்கள் தவமுனிவர் மனத்தையும் கொதிப்பேற்றுகின்றன. நிறை ஞானி அவற்றை அடக்கி, என்னைச் சரணடைகிறான். உணவை உண்ணாதவன் அதை ஒதுக்கி வைக்கிறான். ஆனால் அதன் சுவையை மறப்பதில்லை, பரம்பொருளைக் கண்டு கொண்டதும், அந்தச் சுவை பற்றிய நினைவும் பறந்து விடுகிறது.

இன்னும் கேள் அர்ஜுனா, பொருட்களை நினைக்கும் போது மனிதனுக்குப் பற்று உண்டாகிறது, பற்று ஆசையாய்ப் பரிணமிக்கிறது, ஆசை கோபமாய் உருவெடுக்கிறது கோபத்தால் மோகம் தோன்றுகிறது, மோகத்தால் நினைவு தடுமாறுகிறது, இத்தடுமாற்றத்தால் அறிவு கெடுகிறது, முடிவில் மனிதன் அழிந்தே போகிறான். ஆனால் புலன்களை வசப்படுத்தும் மனவேந்தன், ஆறுதலடைகிறான். அந்த ஆறுதலில் துன்பங்கள் பொசுங்கி விடுகின்றன. அதனால் அவன் அறிவு ஆத்மாவுடன் கலந்து விடுகிறது. அதே சமயம் மனம் அடங்காதவனுக்கு ஆத்ம சிந்தனை இருப்பதில்லை; ஆத்ம சிந்தனை இல்லாதவனுக்கு அமைதி இருப்பதில்லை, அமைதி இல்லாதவனுக்கு இன்பம் கிடைப்பதில்லை. அலைந்து திரியும் புலன்களை விரைந்து பின் தொடரும் மனமானது கப்பலைக் கவரும் காற்றைப் போல், அறிவை அலைக்கழிக்கிறது.
ஆகவே புலன்களை அடக்கியவன் அறிவே நிலையானது. மனிதன் தூங்கும் போது அவன் விழித்திருக்கிறான், மனிதன் விழித்திருக்கும் நேரமே அவனுக்கு இரவு. ஆறுகளின் தண்ணிரை ஆர்ப்பாட்டமின்றி வாங்கிக் கொள்ளும் 17கடல் போல் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அகங்கார மமகாரமின்றி நடமாடும் அவனுக்கே அமைதி சொந்தம்‚ ஆசையுள்ளவனுக்கு அமைதி வெகு தூரம்.

இதற்குப் பெயர் தான் அர்ஜுனா பிரம்ம நிலை இதை அடைந்த பிறகு மயக்கம் என்பது இல்லை இறுதிக் காலத்திலாவது இந்நிலை அடைந்தவனுக்கு பிரம்ம நிர்வாணம்… என்னும் தெய்வீக நிலை சித்தியாகும்.

(இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது)

1. கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

2. பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும். -சுவாமி சித்பவானந்தர்.

3. உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அது தான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது. -சுவாமி விவேகானந்தர்

4. கார்ப்பண்யம்: மனத்தின் கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும் துயரமும் அதன் கண் உண்டு. -சுவாமி சித்பவானந்தர்.

5. புத்தாடை உடுப்பவன் போல் மகிழ்ச்சியடைய வேண்டும். - ஸ்ரீ இராமானுஜர்

6. கண், காது, வாய், மூக்கு, மெய், இவை புலன்கள். காணல், கேட்டல், உண்ணல், உயிர்த்தல், அறிதல் என்பவை முறையே இவற்றின் செயல்கள்.

7. புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது. - ஸ்ரீ ராமகிருஷ்ணர்

8. ஆத்மாவைப் பற்றி மீண்டும் மீண்டும் வௌ;வேறு விதமாகச் சொன்னாலாவது சம்சாரிகள் ஆத்மாவின் பெருமையறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யக்கூடும் என்று பரிவுடன் கருதி, சொன்னதையே திரும்பச் சொல்லுகிறான் வாசுதேவன். - ஸ்ரீ சங்கரர்

9. கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது, ஆறாக ஓடுகிறதுƒ பனிக்கட்டியாக உறைகிறது, இது போன்றே ஆத்மாவில் மாறுதல் இல்லை, ஆதலால் ஆத்மா நித்தியமானது. - சுவாமி சித்பவானந்தர்

10. ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லைƒ யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது. - யாக்ஞவல்க்யர்

11. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு.
- சுவாமி சித்பவானந்தர்

12. தென்னை மரம்போல். - கண்ணதாசன்.

13. சத்வம், ரஜசம், தமசம் ஆகிய குணங்கள்.

14. கடலுக்கு நடுவே கிணறு எதற்கு? - கண்ணதாசன்.
அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைகாரனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். - ஸ்ரீ இராமகிருஷ்ணர்.

அருட்பெருஞ்சோதி என்னும் அமுதக் கள் உண்டவன் கீழான உடல் இன்ப இச்சையில் உழன்று ஆட மாட்டான். - வடலூர் இராமலிங்க சுவாமிகள்.

15. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட்ட ஆய்வரும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே - திருமந்திரம்.

16. சிந்தையைச் சிதறவிடும் யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் செய்கிறான். கடைத்தெருவில் செருப்புத் தைக்கும் சக்கிலியன் குவிந்த மனத்துடன் திறம்படத் தன் தொழிலைச் செய்கிறான். இவ்விருவரில்
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்.
- சுவாமி சித்பவானந்தர்

17. கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. - சுவாமி சித்பவானந்தர்

(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

திண்ணையில் எஸ் மெய்யப்பன் Copyright:thinnai.com