Thursday, 19 June 2008

பாரதத்தின் நான்கு பக்கமும் வட்டமிடும் கழுகுகள்

பாரதத்தின் நான்கு பக்கமும் வட்டமிடும் கழுகுகள்...

பாகிஸ்தான், சீனா, பங்ளாதேஷ், இலங்கை என நான்கு திசைகளிலிருந்தும் பாரதம் மீது ஏவப்படும் அரசியல் தீவிரவாதம் மற்றும் மத தீவிரவாத செய‌ல்கள் குறித்து, பத்திரிக்கைகள் மற்றும் இனைய பக்கங்களில் நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி வாசித்துவருகிறோம்.

பாகிஸ்த்தானிலிருந்து ஏவப்படும் மதத்தீவிரவாதத்துக்கு சற்றும் சளைத்ததல்ல சீனாவிலிருந்து ஏவப்படும் அரசியல் தீவிரவாதம். பாகிஸ்தான் உதவியுடன் உள்ளூர் முல்லாக்கள் கைகோர்த்து நமது மண்ணில் நிகழ்திவரும் பயங்கரவாத செயல்களை நாம் நேரடியாக அனுபவித்து வருவத்தால் மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு சமீபகாலங்களில் உண்டாகிவந்திருந்தாலும், பல்வேறு ஓட்டுவங்கி அரசியல் கார‌ணங்களாலும், சரியான வழிகாட்டுதல் கொண்ட தலைமை குறைபாடுகளாலும் தீவிரவாத வெறியாட்டங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தனது பொருளாதார வளர்ச்சிக்காக‌ நாலாபுறமும் நீளும் சீனாவின் கொடுங்கரங்களும் அடாவடித்தங்களும், அதனால் பாதிபிபடைந்த மக்கள் நாடுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு கொஞ்சம் குறைவுதான்.

சீனாவின் ஒரு பகுதியாக(திபெத் உள்பட)பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட திபெத் நாட்டு மக்கள், பெய்ஜிங் ஒலிம்பிக்கை சாதகமாக பயன்படுதிக்கொண்டு தாம் அனுபவித்து வரும் துன்பங்களை உலகத்து மக்களின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் முயற்தியில் ஓரளவு வெற்றி கண்ட செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு அடங்கியது சமீப நிகழ்வு.

சூடான் நாட்டு சர்வாதிகார ஆட்சியாளர்கள் தமது நாட்டு மக்களையே கொன்று குவித்து பல்வேறு நாட்டு மக்களின் கண்டனங்களுக்கு உள்ளானபோதிலும், காசுக்காகவும், எண்ணைவளங்களுக்காகவும் ஆயுத சப்ளை செய்துவரும் இந்த சீன வியாபாரிகளின் செய்திகளயும் வாசித்து வருகிறோம்.

இரு நாட்டின் எல்லைக்கோடு அருகில் எண்ணை வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த எண்ணை வளத்தை எப்படி பங்குபோட்டுக்கொள்ள வேண்டும் ?. ஒருபக்கமாக எண்ணை வளங்களை உறிஞ்சி குடித்தால் அது அண்டை நா‍ட்டையும் பாதிக்காதா? இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதுதான் நியாயமல்லவா ?.

இப்படிதான் சீனா ஜப்பானுக்கிடையே உள்ள கடல் எல்லைப்பகுதியில் நடந்துகொண்டது சீனா. ஜப்பான் இதுகுறித்து ஆட்சேபம் எழுப்பியதுதான் தாமதம்... "அது எல்லைக்கோடே இல்லை... ஜப்பானிலிருந்து சிலநூறு மைல்கள் வரை சீனாவின் எல்லைதான்" என்று ஒரு புதிய உலகவரைபடம் ஒன்று சீனாவினால் தயாரிக்கப்பட்டது. எண்ணைவள தேடுதல்களின் ஒரு பகுதியாக, ஜப்பான் கடல் பகுதிக்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி தென்படுவதும், ஆட்சேபம் எழும்போதெல்லாம், "தொழில் நுட்ப கோளாறு" என்று அடாவடியான பதில்கள் சர்வசாதாரணமாக வரும்.

பாரதத்தை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன்...

இராணுவ பலம், அரசியல் பலம் குறைந்த நாம், நமது கைலாயம் உள்பட பல பகுதிகளை இழ‌ந்து நிற்கிறோம். இனியாவது இழக்காமல் இருக்கக்கூடிய சாதுர்யமும் நமக்கு இல்லை.

அருணாச்சல பிரதேசத்துக்கு நீண்டகாலமாக‌ சீனா உரிமை கொண்டாடிவருவதும், பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டேபோவதும் அடிக்கடி செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கிறது. (அருணாசல பிரதேச பிரச்சனைகள் எழும்போது, சீன அரசின் ஸ்போக்ஸ்மேன் கடுகடுப்பான முகத்துடன் "the so called Arunachal Pradhesh" என்று விளிப்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். காரி முகத்தில் உமிழவேண்டும் என்று தோன்றும்...)

அடாவடியாக நமது மண்ணை உரிமை கொண்டாடுவதும், நமது அரசியல் தலைவர்கள் சீன அரசின்முன் கைகட்டி நிற்பது கண்டும் நமது இயலாமை குறித்து நிறைய யோசித்திருக்கிறேன்.... சீன அரசின் கைக்கூலித்"தோழர்கள்" உதவியுடன் அரசாளும் அரசியல்வாதிகளால் வேறு என்னதான் செய்யமுடியும் ?

இன்றய (19 ஜூன்) செய்திதாளில், சிக்கிம் மாநிலத்தின் எல்லையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவுவரை மோட்டார்சைக்கிளில் வந்து போயிருக்கிறான் சீன இராணுவத்தைச்சேர்ந்த ஒரு அதிகாரி. இவ்வளவிற்கும் சிக்கிம் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீனாவினால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மாநிலம். விரைவில், சிக்கிம் மாநிலத்தின் ஒருபகுதியை உரிமைகோரும் அறிவிப்பு வெளிவரலாம்.

நமது எல்லையோற மாநிலங்களின் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக சீனா பயன்படுத்திவருவது கண்கூடு. நமது மத்திய அரசாங்கம், குறைந்த பட்ச்சம் இந்த எல்லையோர மாநிலங்களின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதும், அம்மாநில மக்கள் கல்வி/பொருளாதார மேம்பாடு அடைவதின் மூலமாகவே இத்தகைய சவால்களை எதிர்நோக்கமுடியும் என்று கருதுகிறேன்.

இன்னொரு காஷ்மீர் பிர‌ச்ச‌னை உருவாக‌ம‌ல் த‌டுக்க‌வும், சீனாவிட‌மும் பாக்கிஸ்தானிட‌மும் மேலும் ந‌ம‌து நில‌ப்ப‌ர‌ப்பை இழ‌க்காம‌ல் இருக்க‌வும், மேலும் மேலும் அதிக‌ப்ப‌டியான‌ விழிப்புண‌ர்வும் தேச‌ப‌க்தியும் ந‌ம்மிடையே உருவாக‌ வேண்டும். ம‌ண்ணாசையால் அழிந்த புராண மன்னர்கள் குறித்து நமது இதிகாசங்கள் சொல்லும் செய்திகள் பொய்த்துப்போகாது....‌

நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்ச‌ம் விளக்கமாக இவ்விஷயங்கள் குறித்து பதிய எண்ணம். ப‌ல‌ இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் "முக‌ம‌திய‌" தீவிர‌வாத‌ம் குறித்து திண்ணை போன்ற இணைய‌ இதள்களிலும், தமது வலப்பக்கங்களிலும் எழுதிவருகிறார்கள். இதுபோன்று சீனா குறித்த கட்டுரைகளும் விவாதங்களும் அதிகப்படியாக பதியப்படவேண்டும் என்பது எனது விருப்பம்.‌திண்ணை 26 செப்ட்.2007‍ல் பெரிய‌வ‌ர் எழுதிய "சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!" என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ க‌ட்டுரையை இன்று மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.

No comments: