Tuesday 3 June, 2008

"முகமதியர்"களுக்கு பதில்கட்டுரைகள், திண்ணையில்

இவ்வார திண்ணையில் "முகமதியர்"களுக்கு கண்ணன், ராம்கி எழுதிய பதில் கட்டுரைகள் வாசித்தேன். மிக இயல்பாக எந்தவொரு சாதாரண மனிதனுக்குள்ளும் எழுகின்ற எளிமையான கேள்விகள்.

சுஜாதா கட்டுரை பற்றி... கைரேகை ஜோஸ்யம் பாக்கிறவன் "எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல்" என்ற வரிகள் சிரிப்பை வரவழைப்பதுடன், இதைத்தவிர வேறெந்த காரணமும் இல்லை என்பதை சுருக்கமாக குறிப்பிடும் வரிகள்.

அந்த கட்டுரைகள் கீழே...
*************************

Thursday May 29, 2008
கடிதம்
ராம்கி

ஐயா,
சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும், நாளை தோன்ற இருப்பவை உட்பட, இறைவனை ஒன்று போலவே விவரிக்கும். இதில் பெரிய வியப்பென்ன! அந்த நம்பிக்கையை இழப்போரை அல்லது இல்லாதோரை அந்த மதம் எவ்வாறு நடத்துகிறது என்பதே கேள்வி. விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். சென்ற வாரத் திண்ணையிலேயே பதில் கிடைக்கிறது.

''யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) -- அபூ முஹை

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி) -- இப்னு பஷீர்

இதை சுஜாதா படித்திருப்பாரா தெரியவில்லை. பொதுவாக அவர் மதம் அரசியல் போன்ற சிக்கல்களை தவிர்த்தார் என்றே நம்புகிறேன்.. தாஜ் கூறும் கட்டுரையை நான் கருத்தில் கொண்டே சொல்கிறேன். கைரேகை, வாஸ்து போன்ற தொழில் செய்வோர் எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல் இது நம்மூர் அரசியல் வியாதி.

இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !
என்ன, துல் பிகர் நம்ம நாட்டாமை சரி தானே!

இவ்வளவிற்கும் இடமளிக்கும் திண்ணை ஆசிரியர் குழுவிற்குத் தலை வணங்குகிறேன்.
regards,
ramki
vijiramki@yahoo.com



Copyright:thinnai.com
*************************

Thursday May 29, 2008
ஈஸ்வர அல்லா தேரே நாம்
கண்ணன்

ஈஸ்வர அல்லா தேரே நாம்
கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு. கா¢ச்சான் குஞ்சு(இவர் தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் காலத்து எழுத்தாளர்) கணையாழியில் எழுதியிருந்த "ஈஸ்வர அல்லா தேரே நாம்" என்ற நாடகம்தான் நினைவிற்கு வந்தது.

அதில் ஒரு பிராமணன் 'எல்லாம் ஒன்றே, இதுவே உபனிஷத்துக்களின் முடிவு - ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் ஒரே இறை தத்துவம்தான்" என்று தன் சகாக்களிடம் வாதித்துக் கொண்டிருப்பார். அவரது சகாக்கள் உங்கள் வாதம் நமக்கு பொ¢ய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சா¢ப்பார்கள். அவர் கேட்கமாட்டார், "நான் வேதம் படித்தவன் எனக்குத் ¦தி¡¢யாதா!" என்று கொக்கா¢ப்பார்.

அப்போது அங்கு ஆட்சியாளன் ஸ¤ல்தானின் படை வீரர்கள் வருவார்கள்; அந்த பிராமணனை ஸ¤ல்தான் அழைத்து வரச்சொன்னதாகச் சொல்வார்கள். அந்த பிராமணனும், "பார்த்தீர்களா ! ஸ¤ல்தான் என் கருத்தைப் பாராட்டி விருது கொடுக்க அழைத்திருக்கிறார்" என்று தன் சகாக்களியடம் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவார். அவரது சகாக்கள் அவரை எச்சா¢ப்பார்கள். ஆனாலு அவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஸ¤ல்தானைப் பார்க்க செல்வார்.

சபையில் ஸ¤ல்தான் ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றுதான் என்ற அவரது கருத்து உண்ம்தானா என்று கேட்பான். இவரோ, "ஆமாம் அதில் சந்தேகமென்ன? வேதங்களும் உபனிஷத்துக்களும் அப்படித்தான் கோஷிக்கின்றன" என்று ததுவமாகப் பொழிவார். ஸ¤ல்தானும் பல முறைகள் கேட்பான், "இரண்டும் ஒன்றுதான் என்ற உங்கள் கருத்து சத்தியந்தானா?" இவரும் அதில் சந்தேகமென்ன, நான் கற்ற வேதம் சொல்வது சத்தியம்தான் என்று சொல்வார்.

"அப்படியானால் நான் சொலவதைக் கேட்பீர்களா" என்று ஸ¤ல்தான் அவா¢டம் கேட்பான். அவரும், "அதில் சந்தேகமென்ன ராஜா விஷ்ணுவின் அம்சம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன நீங்களோ எங்கள் ராஜா, நீங்களே மகாவிஷ்ணு" என்றெல்லாம் வசனம் பேசுவார்.

ஸ¤ல்தான், "உடனே அரண்மனை நாவிதனை அழைத்து வாருங்கள்" என்று ஏவலர்களுக்கு உத்தரவிடுவான். நாவிதரும் வருவார். அவா¢டம் ஸ¤ல்தான், அந்த பிராமணனின் தலையைச் சரைத்து ஸ¤ன்னத்தும் பண்ணிவிடச்சொல்லி உத்தரவிடுவான்.

அந்த பிராமணனோ நடு நடுங்கி "ராஜா ! இது என்ன !" என்று பதறுவான். "இரண்டும் ஒன்றுதான் என்று சத்தியம் செய்திருக்கிறீர் அப்படியானால் அல்லாவே இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில் தடையென்ன; தலையச் சரைக்கும் கத்தி வேண்டுமா அல்லது தலையைச் சா¢க்கும் கத்தி வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்." என்று ஸ¤ல்தான் முடித்துவிடுவான்.
சா¢த்திரத்தை நாம் அறிந்து கொள்வதுமில்லை, நினைவில் கொள்வதுமில்லை. "ஸத் குண விக்ருதி"(நற்குண தி¡¢பு) என்று அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ¤ஜாதாவின் கட்டுரையைப் படித்தவுடன் இதுவே என் நினைவிற்கு வந்தது.
கண்ணன், கும்பகோணம்.

--------------------------------------------------------------------------------
kannankumbakonam@yahoo.com

Copyright:thinnai.com

No comments: