Monday, 11 June 2007

மலர் மன்னன் திண்ணை கட்டுரை -24







திண்ணை
ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்

PRINTER FRIENDLY
EMAIL TO A FRIEND
Friday January 20, 2006
ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
மலர் மன்னன்
அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான் அது உதவுமே யன்றி மனமாற்றத்திற்கு வழியே இராதுபோய்விடுமே! எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடம் அவரவர் அறிந்தவரையிலுமான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டு, தீர ஆராய்ந்து மெய்ப்பொருள் காணுதல். இம்மாதிரியான விவாதங்களில் வெற்றி என ஒரு சாரார் எக்களிக்கவும், தோல்வியென மறு சாரார் மனம் குமையவும் இடமில்லை. அனைவருமே மெய்ப் பொருள் கண்டு தேர்ந்த மகிழ்ச்சியை அனைவருக்குமான வெற்றியாகக் கொண்டாடலாம். மேலும், தர்க்கம் என்கிற சாக்கில் எதிராளியைக் கிண்டல் செய்வதும், தனி நபர் தாக்குதலில் இறங்குவதும் அநாகரிகம் என்பதை அறிந்திருக்கிறேன். என்னை எவ்வளவுதான் ஆத்திரமூட்ட முயற்சி செய்தாலும் நிதானம் இழந்து அவர்களின் பாணியில் கேலி, கிண்டல் செய்வதும், தனிநபர் தாக்குதலில் இறங்குவதுமான அநாகரிகத்தை மேற்கொள்ள மாட்டேன். இந்தப் பண்பை எனக்குக் கற்றுத்தந்தவர் அண்ணா என்பதை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு ஒருசிறிதும் தயக்கமில்லை.
விவாதம் என்று வருகிறபோது, கண்மூடித்தனமாக ஒரு நிலைப் பாட்டில் ஏற்கனவே இருப்பதால், அப்படி ஒரு நிலைபாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டதாலேயே அதற்குக் கட்டுப்பட்டிருந்தாக வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் சொல்லாடுவது அரசியல் கட்சிக்காரர்களின் துர்ப்பாக்கியம். நமக்கு எதற்கு அம்மாதிரியான சங்கடங்கள் எல்லாம் ?
இப்படியொரு நிர்ப்பந்தத்தை வலிந்து வரித்துக்கொண்டுவிட்டதால் அல்லவா, 1947க்குப் பிறகு காந்திஜியைச் சுடும் துணிவு வந்ததாகவும் திருட்டுத்தனமாக ராமன் சிலையை பாபர் நினைவு மண்டபத்தில் வைத்ததாகவும் வேறுபலவுமாகப் பழி சுமத்தும் கட்டாயம் சிலருக்கு ஏற்பட்டுப் போகிறது ?
1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்ற வல்லபாய் பட்டேல் மேற்கொண்ட தலையாய பணி தனித்தனி தீவுகளாக பாரத தேசத்தினுள் சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைத்தது என்பது அனைவருக்கும் தெரியும். அத்துடன் குஜராத் கடலோரம் திரும்பவும் சோம நாதர் ஆலயத்தைக் கட்டுவது என்ற வேறொரு பணியையும் அவர் உடனடியாக மேற்கோள்ள முடிவு செய்தார்.
கஜினி முகமது இடித்துத் தரை மட்டமாக்கிய சோமநாதர் ஆலயம் ?ிந்துக்களுக்கு மிகப் புனிதமான ர்க்ஷத்திரம். பன்னிரு ஜேதிர்லிங்கங்களுள் ஒன்று சோமநாதர் என்கிற லிங்க சொரூபம். லிங்கம் என்று நான் குறிப்பிட்டதுமே நான் முன்பு குறிப்பிட்டது போல் விவாதத்தின் நோக்கம் எதிராளியை மடக்கி வெற்றிகொள்வதே என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பி, லிங்கம் என்றால் என்ன ? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையைத் திசை திருப்பிக் கொண்டு போகத் தோன்றலாம்.
?ிந்து தர்மத்திற்காக நான் ஏதோ கண்ணீர் சிந்துவதாகத் திசை திருப்பவில்லையா ?
எனக்கு செந்நீர் சிந்தித்தான் பழக்கம், கண்ணீர் சிந்தியல்ல. மேலும், ?ிந்து தர்மம் எவரும் கண்ணீர் சிந்தவேண்டிய நிலையில் இல்லை. ?ிந்து சமுதாயத்தில் பலரும் தமது பொறுப்பை உணராமல் அலட்சியமாக இருப்பதும், இயற்கையிலேயே தாராள மனதினராகவும், பெருந்தன்மையினராகவும் இருப்பதால் அதன் காரணமாகவே தம் தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டுக்கொள்வதுமாக இருக்கிறர்களே என்பதுதான் எனது விவாதங்களின் ஆதார சுருதி. சற்குண விக்ருதி என்று இதனைச் சொல்வார்கள். அதாவது எவ்வளவுதான் அடிபட்டாலும் அதிலிருந்து பாடங் கற்காமல் மேலும் மேலும் பெருந்தன்மையுடன் நடந்து அதன் விளைவாகத் தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக் கொள்வது. இதுதான் இந்திரப் ப்ரஸ்தத்தை ஆண்ட ப்ரித்விராஜ் சொ ?ான் காலத்திலிருந்து நடந்துவருகிறது.
முதல் முறை முகமது கோரியைத் தோற்கடித்த ப்ரித்விராஜ் ஈவிரக்கமின்றி அவன் தலையைக் கொய்திருக்கவேண்டும். மாறாக, பெருந்தன்மையுடன் மன்னித்து அனுப்பினான். விளைவு, அவன் திரும்பவும் வந்து ப்ரித்வியைத் தோற்கடித்ததோடு கைதியாகக் காபூலுக்கு இழுத்துக் கொண்டும் போனான்.
இன்று ப்ரித்வியின் சமாதி காபூலில்தான் உள்ளது. அதுவும் எந்த நிலையில் உள்ளது தெரியுமா ? முகமது கோரியின் கல்லறை ஒரு மேட்டிலும், ப்ரித்வியின் சமாதி அதற்குக் கீழேயுமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா ?
கோரியின் கல்லறையில் மரியாதை செய்பவர்கள் ப்ரித்வியின் சமாதியை மிதித்து அவமதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கோரியை மன்னித்து அனுப்பிய ப்ரித்வியின் கண்களைப் பொசுக்கிச் சித்திரவதை செய்து அதன்பின் கொடூரமாகக் கொன்றதோடு திருப்தியுறாமல், அவனது சடலத்தையும் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு ஏற்பாடு!
இந்தக் காட்சிக்குப்பின் இன்னொரு காட்சியையும் பார்க்கலாம்.
அப்சல்கான் நய வஞ்சகமாகத் தம்மைக் கொல்லப்போகிறான் என்பதைத் தெரிந்துகொண்டு சத்ரபதி சிவாஜி மகராஜ் வேறு வழியின்றித் தாம் முந்திக்கொண்டு அப்சல்கானின் உடலைக் கீறிக் கொன்றுபோட்டார்தான். ஆனால் அப்சல்கானின் கல்லறை ம ?ாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரு தர்காவைப் போலப் போற்றி மதிக்கப்படுகிறது! அந்தக் கல்லறையை அப்புறப்படுத்தி முகமதியரின் பொதுவான இடுகாட்டில் புதைக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப் படவில்லை. மாறாக, அப்சல்கானின் கல்லறைக்குப் போலீஸ் காவல் போடப்படுகிறது, எவரும் அப்சல்கானின் உடலைத் தோண்டி யெடுத்து அப்புறப்படுத்தி விடலாகாது என்பதற்காக!
காபூலில் ப்ரித்விராஜனின் சமாதி மேடையோ இன்றளவும் வருவோர் போவோரின் மிதியடிகள் கழற்றி வைக்கப்படும் இடமாகவும், காலால் மிதிபடும் தளமாகவும் அவமதிக்கப்படுகிறது! இருப்பினும், பாரத தேசத்து மன்னன் இவ்வாறு அவமதிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என நமது அரசாங்கம் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தவில்லை. அதற்குப் பதிலாக, போரால் சிதிலமாகிப்போன அந்த தேசத்தைப் புனரமைக்க எல்லா உதவிகளையும் வாரி வழங்குகிறது!
இதுதான் நமக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இதற்காக எவரும் நமக்குக் கிரீடம் சூட்டப்போவதில்லை! ?ிந்துக்களின் சற்குண விக்ருதிக்கு இதுவுமொரு எடுத்துக் காட்டு.
இனி, லிங்கம் பற்றி வேறு எவரும் இடக்காகக் கேட்பதற்கு முன் பதில் சொல்லிவிடுகிறேன்:
புராதன கலாசாரங்களில் கள்ளம் புகுந்ததில்லை. உட லுறுப்புகளில் இது அசிங்கம் அது சிங்கம் என்கிற பாகுபாடுகளுக்கெல்லாம் இடம் இருந்ததில்லை. மேலும், உயிரின் பயணம் உடலால் தொடர முழுமுதற் காராணமான உறுப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருந்தது. டெஸ்டிமனி, டெஸ்டிபை, என்பதற்கெல்லாம் வேர்ச் சொல் டெஸ்டிகிள் என்கிற ஆணுறுப்புதான். கிரேக்க, ரோமானிய கலாசாரங்களில் வழக்கு விசாரணையின்போது தமது ஆணுறுப்பின்மீது இடது உள்ளங் கையினை வைத்து (உடுப்புக்கு மேலாகத்தான்), வலது கையினை உயர்த்தி உறுதிமொழி யெடுத்தபின்னர்தான் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்கிற நடைமுறை இருந்தது. ஆகையினால்தான் அதற்கு டெஸ்டிமனி, டெஸ்டிபை என்றெல்லாம் பெயர் வந்தது. மிகப் புராதனமான நமது கலாசாரத்தில் சடப்பொருளின் குறியீடாக லிங்கமாகிய ஆணுறுப்பும் சக்தியின் குறியீடாகப் பெண்ணுறுப்பான யோனிபீடமும் மதிக்கப்பட்டு, உயிரியக்கத்தின் நினைவூட்டுதலாக இரண்டின் இணைப்பும் ஒரு வடிவமாக அமைக்கப்பட்டு வணங்கப் பட்டன.
பகவான் ராமகிருஷ்ண பரம ?ம்சர் போன்ற மகான்கள் தமது ஆணுறுப்பைக் காண நேர்கையில், அவ்வாறு கண்ட மாத்திரத்தில் சிவலிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போவார்கள். ஆனால் சிலருக்கோ ஆலயத்தில் சிவலிங்கத்தைக் கண்டதுமே தமது ஆணுறுப்பின் நினைவு வருமானால் அதற்கு யார் என்ன செய்யமுடியும் ? மனிதப் பிறவியில் இதுவும் ஒருவகை என்று போகவேண்டியதுதான்!
சரி, குஜராத்தின் கதைக்குத் திரும்புவோம்.
சோம நாதர் ஆலயம் பலமுறை முகமதியப் படையெடுப்பாளர்களால் தரைமட்டமாக்கப் பட்டு மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. கடைசியாக அது அவுரங்கசீப்பால் 1706ல் இடிக்கப்பட்டது. இறுதியில் இடிக்கப்பட்ட ஆலயத்தின் அருகமையிலேயே புதிதாக ஓர் ஆலயம் எழுப்பினார் மராட்டிய ராணி அ ?ல்யா பாய். காசியில் அவுரங்கசீப் இடித்த விசுவநாதர் ஆலயத்தை இடிபட்ட இடத்திற்கு அருகாமையிலேயே திரும்பவும் கட்டியவரும் அவர்தான்(சோமநாதர் ஆலயம், விசுவ நாதர் ஆலயம் ஆகியவற்றை அவுரங்கசீப் இடித்ததற்கெல்லாம் ஆவண ஆதாரங்கள் உண்டு).
அவுரங்கசீப் சோமநாதர் ஆலயத்தை இடித்ததோடு திருப்தியுறாமல், ?ிந்துக்களுக்குப் புனிதமான அப்பகுதியை முகமதியருக்கான இடுகாடாகவும் பயன்படுத்த உத்தரவு போட்டதால் அந்த இடத்திற்கு இன்று வக்பு போர்டு உரிமை கொண்டாடிக்
கொண்டிருக்கிறது!
சோமநாதர் ஆலயம் உள்ளபகுதி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. வேராவல் என்ற அந்தப் பகுதியில்தான் தே ?ாத் ஸர்கம் என்ற இடத்தில் கன்ணபிரான் தம்முடலைத் துறப்பதற்கான முகாந்திரமாகத் தமது பாதத்தில் வேடனின் அம்பு தைத்து விழுந்தார். இப்புனிதத் தலம் பாலக் தீர்த்தம் எனவும் அறியப்படுகிறது. சோமநாதர் ஆலயம் இருக்குமிடம் ப்ரபாஸ் பாடண் எனப்படுகிறது. இங்கெல்லாம் சென்றுவந்த வாய்ப்பு கருவிலே திருவாக எனக்குள்ளே நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.
சோமநாதர் ஆலயத்தின் தனிச் சிறப்பு, கடலோரத்திலிருக்கும் அங்கிருந்து
நேர்கோடாகப் பயணித்தால் இடையில் எவ்வித நிலப்பரப்புமின்றிக் கடல் மீதாகவே தென் துருவம் வரைக்கும் போய்ச் சேர்ந்துவிடலாம்!
வல்லபாய் பட்டேல் சோமநாதர் ஆலயத்தை அது ஏற்கனவே இருந்த இடத்தில் கட்ட முடிவு செய்தபோது, நேரு அதை விரும்பவில்லை. அது முகமதியரின் இடுகாடாகத் தொடர்வதையே விரும்பினார், தமது மதச்சார்பின்மையினை நிரூபணம் செய்வதற்காக!
மேலும், 'நீங்கள் துணைப் பிரதமராக இருப்பதால் ?ிந்து ஆலயம் ஒன்றைக் கட்டுவதில் நேரடியாக ஈடுபடுவது அரசின் மதச்சார்பின்மைக்கு முரணாகிவிடும். ஆலயம் கட்டுவதற்கு அரசாங்கத்திலிருந்து நிதி எதுவும் இதற்கு ஒதுக்கப்படலாகாது ' என்று நேரு கூறினார்.
சோமநாதர் ஆலயத்தை அது இருந்த இடத்தில் திரும்பக் கட்டவில்லையென்றால் பாரதம் சுதந்திரம் அடைந்ததற்கே அர்த்தமில்லை என்று சொன்ன பட்டேல், ஆலயம் அங்குதான் கட்டப்படும் என்றார். ஆலயத்தை சுய மரியாதை உள்ள ?ிந்துக்களே கட்டிக்கொள்வார்கள். அரசாங்கத்திடம் கையேந்த மாட்டார்கள், மேலும் ஆலயம் அமைக்க ஒரு துணைப் பிரதமரின் தயவும் ?ிந்துக்களுக்கு அவசியம் இல்லை எனக் கூறினார். பல பிரமுகர்களை அழைத்து திருப்பணிக்கு ஏற்பாடு செய்தார். ஆலயம் கட்டும் பணி 1950ல் தொடங்கியது.
ஆலயம் கட்டியான பிறகு அதன் குடமுழுக்கில் பங்கேற்க அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் திட்டமிட்டபோது, அதற்கும் நேரு முட்டுக்கட்டை போட்டார். மதச் சார்பற்ற அரசின் தலைமகன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஆலயத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பது சரியல்ல என்பதாக!
சோமநாதர் ஆலயக் குடமுழுக்கு வெறும் சமயம் சார்ந்த சமாசாரம் அல்ல. அது பாரத தேசத்தவருக்கே பெருமிதம் தரும் சுய கவுரவ நிர்மாணம். அதில் பங்கேற்க எனது ஜனாதிபதி பதவி ஒரு தடங்கலாக இருக்குமானால் அந்தப் பதவியையே தூக்கி எறிவேன். ஆனால் பாரதத்தின் சுயமரியாதைப் பிரகடனம் போன்ற இந்நிகழ்ச்சிக்கு பாரதத்தின் தலைமகன் என்ற முறையில் பங்கேற்று அதற்கு அங்கீகாரம் வழங்கிவிட்டுத்தான் பதவியைத் தூக்கி எறிவதுபற்றி முடிவு செய்வேன் என்று கர்ஜித்துவிட்டு குஜராத்திற்குச்
சென்றார், அந்த சுயமரியாதைக்காரர்!
சுயமரியாதைக்காரர்களான பட்டேலின் குஜராத்திலோ, ராஜேன் பாபுவின் பிகாரிலோ அயோத்தி இருந்திருக்குமாயின் அங்கும் ஆகஸ்ட் 15க்குப் பிறகு சூட்டோடு சூடாக பாரத தேசத்தவரின் சுயமரியாதை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அது அன்று அய்க்கிய மாகாணம் என்று அறியப்பட்ட நேருவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துவிட்டது. அனால்தான் பாரதியர்கள் தமது சுயமரியாதையை வெளிப்படுத்த அரசின் அங்கீகாரத்திற்காகக் காத்திராமல் ராமபிரானின் ஜன்மஸ்தானத்தில் பாரதியரை அவமானப்படுத்துவதுபோல் எழுப்பப்பட்டிருந்த பாபர் நினைவு மண்டபத்தில் குழந்தை ராமனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்யவேண்டியதாயிற்று.
ராம பிரானை உத்தரப் பிரதேச வட்டாரங்களில், அதிலும் சிறப்பாக அயோத்தியில் மர்யாதா புருஷோத்தம் என்றுதான் அழைப்பது வழக்கம். இதில் மத வேறுபாடு குறுக்கிட்டதில்லை.
பாபர் நினைவு மண்டபத்தில் ராம் லல்லாவின் விக்கிரகம் வைக்கப்பட்டதை உள்ளூர் முகமதியர் திருட்டுத்தனம் என்று கருதியதில்லை. பாபர் நினைவு மண்டபத்தை ஒரு சொத்து என்று உரிமை கொண்டாடியவர்கள் மட்டுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்>
அயோத்தியில் ஜன்மஸ்தான் எனப் பெயர்பெற்ற இடத்தில்தான் ராமபிரான் பிறந்தார் என்பது ?ிந்துக்களாகிய எமது நம்பிக்கை. மதத்தின் அடிப்படையிலான நம்பிக்கைக்கு சட்ட ரீதியிலோ வரலாற்று அடிப்படையிலோ ஆதாரங்கள் கேட்பதும், தேடுவதும் அனாவசியம்.
விவரம் தெரிந்த கிறிஸ்தவர்களுக்கு டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த தினம் அல்ல என்று தெளிவாகவே தெரியும். ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் அது ஏசுவின் பிறந்த தினம் என்று கொண்டாடப்படத் தொடங்கிவிட்ட பிறகு அகில உலகமும் கேள்வி எதுவும் கேட்காமல் டிசம்பர் 25 ஐ ஏசுவின் பிறந்த தினமாக ஏற்றுக்கொண்டுவிடவில்லையா ? இதேபோல ஏசு சிலுவையில் அறையப்பட்ட தினமும் அவர் உயிர்த்தெழுந்ததாகக் கூறப்படும் தினமும் கூடப் பொரு ந்துவதில்லை என்பதை கிறிஸ்தவ இயலாளர் அறிவார்கள். ஆனால் இதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
?ிந்துக்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் அயோத்தியில் ஜன்மஸ்தான் என அறியப்படும் பகுதியில் பாபர் நினைவு மண்டபம் எழுப்பப்பட்ட இடத்தில் ராமபிரான் அவதாரத்தின் அடையாளமாக ஓர் ஆலயம் இருந்தது எனக் கூறினால் அதற்கு மட்டும் ஆதாரம் வேண்டும் என்று ?ிந்துக்களிடமிருந்தே கேள்வி பிறக்கிறது!
மத நம்பிக்கையின் அடிப்படையிலான முடிவுகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அப்பாற்பட்டவை எனத் தெரிந்திருந்த போதிலும் ?ிந்துக்கள் தமது சற்குண விக்ருதியின் பிரகாரம் இதுபற்றி வழக்காடச் சம்மதித்துவிட்டதுதான் தவறாகப் போயிற்று.
எமக்குச் சொந்தமான இடத்தில் எம்மால் போற்றப்படும் ராமபிரானின் விக்ரகத்தை வைக்க எவர் அனுமதியும் எமக்குத் தேவையில்லை என்றபோதிலும், நேரு என்கிற ஒரு போலி மதச்சார்பற்றவரின் அதிகாரம் பாயக்கூடிய பகுதியில் அது அமைந்துபோனதால் தமக்குச் சவுகரியமான சமயத்தில் ?ிந்துக்கள் பாபர் நினைவு மண்டபத்தில் குழந்தை ராமனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.
இப்படித்தான் தமிழ் நாட்டிலும் வேலூர்க் கோட்டையினுள் ஜலகண்டேச்வரர் ஆலயத்தில் லிங்கத்தை ?ிந்துக்கள் தமக்குச் சவுகரியமான விதத்தில் பிரதிஷ்டை செய்ய
வேண்டியதாயிற்று, எண்பதுகளில்!
வேலூர் ஜலகண்டேச்வரர் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு வந்த சிவலிங்கம் முகமதியர் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கருதி சில நூற்றாண்டுகளுக்குமுன் ?ிந்துக்களால் ஆலயத்திலிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஆலயம் புராதனக் கட்டிடங்கள் பராமரிப்புத் துறையின் பொறுப்பில் வந்துவிட்டதால் மீண்டும் சிவலிங்கத்தை அதனுள் பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே ?ிந்துக்கள் தமக்குச் சவுகரியமான விதத்தில் சிவலிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்து இறைவன் இல்லாத ஆலயம் உள்ள ஊர் என்ற ஏளனத்திலிருந்து வேலூரைக் காத்தனர். இன்று வேலூர் ஜலகண்டேச்வரர் ஆலயம் லட்சணமாக அபிஷேக ஆராதனைகளுடன் ?ிந்துக்கள் வழிபடும் தலமாக விளங்கி வருகிறது! ஜலகண்டேச்வரர் ஆலயத்தில் திரும்பவும் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பணியில் எனது பங்கும் ஓரளவு உண்டு.
பாபர் நினைவு மண்டபத்தை மசூதி, மசூதி என்று திரும்பத் திரும்பச் சொல்வதால் அது மசூதியாகிவிடாது. அப்படிச் சொல்வதானால் கடற்கரை மணல்வெளி, மைதானங்கள் என எல்லாவற்றையுமே மசூதி என்று சாதிக்கத் தொடங்கிவிடுவார்கள்! ஓடும் ரயிலைக்கூட மசூதி என்று உரிமை கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏனெனில் தொழுகை வேளை வந்துவிட்டால் எங்குவேண்டுமானாலும் தொழுகை செய்யத்தொடங்கிவிடும் கட்டுப்பாடு உள்ளவர்கள், முகமதியர்கள். எனவே பாபர் நினைவிடத்தில் வீம்புக்காகவும் வம்புக்காகவும் முகமதியர் தொழுகை நடத்தத் தொடங்கியதால் அது மசூதியாகிவிடாது. எனவே மசூதியை இடிக்கும் துணிவை எவரும் பெற்றுவிட்டதாக எண்ண வேண்டாம். இடிக்கப்பட்டது உண்மையில் ராமபிரானை வழிபடும் இடமாக இருந்த பாபர் நினைவு மண்டபம்தான். முகமதியர்களையும் சேர்த்து, ஒட்துமொத்த பாரதியர்களின் அவமானச் சின்னம் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக அது தகர்க்கப்பட்டது, நீல் சிலை அகற்றப் பட்டது போலவே!
எமது வழிபாட்டுக்குரிய ராமபிரானுக்கு அவனது ஜன்மஸ்தானத்தில் நவ ஆலயம் ஒன்று எழுப்ப எவரது அனுமதியும் எமக்குத் தேவையில்லை. இது சம்பந்தமாக நாங்கள் எவர்க்கும் எவ்வித வாக்குறுதியும் தரவில்லை, அதற்கு அவசியமும் இல்லை. அன்றைக்கு இருந்த உத்தரப் பிரதேச மநில அரசு இதுபற்றி வாக்குறுதி ஏதும் கொடுத்திருக்குமானால் அது எங்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் ? அதற்குத் தண்டனையாகத்தான் உத்தரப் பிரதேச மாநில அரசை மட்டுமின்றி அன்றைக்கு இருந்த பாரதிய ஜன சங்க அரசுகள் எல்லாவற்றையுமே கலைத்தாகிவிட்டதே, பிறகு உச்ச நீதிமன்றம் பிற மாநில அரசுகளைக் கலைத்தது தவறு என்று தீர்ப்பும் அளித்ததே, இன்னும் என்ன ?
பாபர் நினைவிடம் அகற்றப்பட்டதும் அதன் எதிரொலியாக எவ்வித விளைவும் ஏற்படவில்லை. ?ிந்துக்களுக்கே உரித்தான சற்குண விக்ருதியின் பயனாகச் சில ?ிந்துக்கள் பாபர் நினைவிடம் தகர்க்கப்பட்டது தவறு என்று பேசப் போகவும்தான் முகமதியர் பபர் நினைவிடம் அகற்றப்பட்டமைக்காகக் கலவரத்தைத் தொடங்கிவைத்தார்கள். அதற்கு ?ிந்துக்களிடமிருந்து எதிர் விளைவு ஏற்பட்டது. பாரதத்தில் எந்த மதக்கலவரமானாலும் அதன் ஆணிவேரை தேடிப் போனால் கலவரத்தை ஆரம்பித்துவைப்பவர்கள் முகமதியராக இருக்கக் காணலாம். அண்டை வீட்டுக்காரன் வேற்று மதத்தவனாயிருந்து அவனுடன் ஏதேனும் சிறு சச்சரவு என்றாலும் அதனை 'ஜி ?ாத் ' என்று பிரகடனம் செய்து பழகிவிட்டவர்கள், அவர்கள். எனவே பாபர் நினைவிடம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்திற்கு ?ிந்துக்கள் பொறுப்பல்ல.
இடிக்கப்பட்டது வெறும் கட்டிடம். அதனால் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ இல்லை. ஆனால் அதனைக் கண்டித்து முகமதியர் தொடங்கிய கலவரத்தில் பல உயிர்களும் உடமைகளும் சேதப்பட்டன.
குஜராத்தில் கலவரம் தொடங்கியதற்கும் அடிப்படைக் காரணம் முகமதியர் கோத்ரா ரயில் நிலையத்தில் ?ிந்துக் குடும்பங்கள் பயணம் செய்த ரயில் பெட்டியைக் கொளுத்தியதுதான். இன்று வேண்டுமானால் முகமதியரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற ஆசையினால் லாலுவும் காங்கிரசாரும் நடந்ததைத் திரித்து அறிக்கை வாங்கலாம். ஆனால் உண்மை அங்கு உள்ளவர்களுக்குத் தெரியும்!
இப்படித்தான் ஒரு முகமதிய இளைஞன் தன்னைத் தாக்க வந்தவர்களிடம் உயிர்ப்பிச்சை கேட்பதுபோல் ஒரு படத்தைப் போட்டு இந்த இளைஞன் கையில் ஒரு துப்பாக்கி இருக்கவேண்டியது அவசியமல்லவா ? என்று கேட்டுப் பொய்ப் பிரசாரம் செய்தார்கள், அந்தக் கலவரத்தின் போது. பிறகு ஆராய்ந்து பார்த்தால் அது தன்னைக் காக்க வந்த காவலர்களுக்கு அந்த இளைஞன் நன்றி தெரிவித்தபோது எடுத்த படம் என்பது தெரியவந்தது!
இதேபோல பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்ட ம ?ாராஷ்டிரப் பெண் குஜராத் போலீசாரால் கொல்லப்பட்டபோது பெரும் கூச்சல் எழுந்தது. அவளது குடும்பத்திற்கு நிதி யுதவி வழங்கப் பல அரசியல் கட்சிகள் போட்டி போட்டன. பத்திரிகைகள் குஜராத் அரசைக் கடுமையாகத் தாக்கின. ஆனால் இறுதியில் அந்தப் பெண் பாகிஸ்தானத்து பயங்கர
வாதிகளின் கூட்டாளி என்பது நிரூபணமாயிற்று. எனினும் பத்திரிகைகள் தமது அவசர துஷ் பிரசாரத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.
குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஏறத்தாழ முன்னூறு ?ிந்துக்கள் இறந்திருக்கிறார்கள். இன்று குஜராத்தில் நடந்துமுடிந்திருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளது. ஏன், கோத்ராவில் நகராட்சி மன்றத்தில் வெற்றிபெற்ற முகமதிய உறுப்பினர்கள் பாஜக வுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர், பாஜக கேளாமலேயே!
ஆகவே குஜராத், குஜராத் என்று இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பொருள் இல்லை.
உள்ளாட்சி நிர்வாக அமைப்பில் நரேந்திர மோதியின் அரசு மிகச் சிறப்பாகச் செயல் பட்டிருப்பதாக மத்திய அரசின் உள்ளாட்சி நிர்வாக ஆணையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. அவரது அரசு பற்றி எவ்வளவுதான் துஷ்பிரசாரம் செய்தாலும் குஜராத்தில் அது எடுபடுவதில்லை. முகமதியரின் ஆதரவும் மோதிக்கு இருப்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், செலவைப் பற்றிக் கவலைப் படாமல் குஜராத்தில் ஒரு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வரலாம். எந்தவொரு பிரச்சினை என்றாலும் எதற்காகவும் காத்திராமல் நேரில் சென்று உண்மை நிலவரம் தெரிந்து வருவது என் வழக்கம். வந்தபின், அது பற்றிய அறிக்கை தயாரித்து 'இதோ என் நேரடித் தகவல். தேவையெனில் பெறலாம் ' எனப் பத்திரிகைகளுக்குக் கொடுத்து செலவை ஈடுகட்டுவது என் செயல் முறை.
இதைச் சொல்லும்போது 1968 டிசம்பர் மாதம் நடந்த கீழ் வெண்மணி சம்பவம் நினைவுக்கு வருகிறது. முதல்வர் அண்ணா அப்போதுதான் அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுத் திரும்பியிருந்தார். உடல் தேறிவிடுவார் என மனம் தேறியிருந்தோம். அந்தச் சமயம் வந்தது அத்துயரச் செய்தி, கீழ் வெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் பல குடிசைக்குள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக. செய்திகேட்ட அண்ணா அனலிடைப்பட்ட புழுவாகத் துடிதுடித்துப் போனார். அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஏனெனில் எம் அண்ணா மிகவும் மென்மையானவர், கொடுமைகளைக் காது கொடுத்துக் கேட்கவும் உறுதியின்றித் துவண்டு போய்விடுபவர் (அதிகாரிகள் முந்தைய ஆட்சியில் தமக்கு இழைக்கப் பட்ட அநீதிகளை அவரிடம் கூறிப் பரிகாரம் கேட்பார்கள். அண்ணா பதறிப்போய் பரிகாரம் காண முன்வருவதோடு நிகழ்ந்துவிட்ட அநீதிக்காகக் கண்ணீரும் சிந்துவார்!
காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை வகித்த வைகுந்த்கூட(இவர் ஒரு பிராமணர்) அண்ணா இவ்வாறு தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிக் கேட்டுக் கண்ணீர் சிந்தியதைத் தமது அனுபவங்கள் பற்றிய நூலில் பதிவு செய்துள்ளார்).
'கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் நீதிவிசாரணை கேட்பவர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து நான் நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்றுசொன்னால் ராமமூர்த்தி அவசர அவசரமாக அதெல்லாம் வேண்டாம் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவேண்டும். போலீஸ் மூலமாகவோ தாசில்தார், கலெக்டர் மூலமாகவோ வரக் கூடிய தகவல் எவ்வளவு தூரம் பாரபட்சமின்றி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆகையால் நீ எனக்காக அங்கு போய் எதனால் அப்படியொரு ஈவிரக்கமற்ற கொடுமை நடந்தது என்று தெரிந்துகொண்டு வா. நீ போவது எவருக்கும் தெரியவேண்டாம். நீ கொண்டுவரும் செய்தி எனக்கு மட்டும்தான். வேறு எவருக்கும் கொடுத்து விவகாரம் மேலும் வளரவிடாதே. செலவுக்கு சொக்கலிங்கத்திடம் பணம் வாங்கிக் கொண்டு போ ' என்று அண்ணா அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். சொக்கலிங்கம் அன்ணாவின் தனிச்செயலராக இருந்தவர். ராஜாஜியிடமும் பணிசெய்தவர்தான் அவர்.
கீழ் வெண்மணிக்கு விரைந்த நான், அங்கு விவசாயக் கூலித் தொழிலாளர் நியாயமான கூலி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆதரவில் போராடத் தொடங்கியதுபற்றிக் கேள்வி
யுற்றேன். மிராசுதார்கள் அதனைச் சமாளிக்க வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வயலில் இறக்கினார்கள். உள்ளூர்த் தொழிலாளிகள் மிராசுதாரர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக வெளியிலிருந்து வந்து வேலை செய்ய எவரும் துணியக்கூடாது என்பதற்காக வெளியூர்ச் சக தொழிலாளர்களை மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். இதன் பின் விளைவாகத்தான் கீழ் வெண்மணியில் உயிரோடு பல குடும்பங்கள் கொளுத்தப்பட்டன. இந்த உண்மை வெளிப்பட்டுவிடுமே என்கிற கவலையினால்தான் ராமமூர்த்தி நீதிவிசாரணை வேண்டாம் என்கிறார் எனத் தெரிந்துவந்தேன். அன்ணாவிடம் மட்டுமே அதனைத் தெரிவித்து அவர் ஓரளவு மன ஆறுதல் பெறச் செய்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, துக்ளக்கில் வேறு ஒரு விவகாரம் பற்றி எழுதிய கட்டுரையில் இதுபற்றி ஜாடையாக நான் குறிப்பிட்டதும், என் மீது இடது கம்யூனிஸ்டுகள் வெகுண்
டெழுந்து பாய்ந்தார்கள்!
கட்டுரை நீண்டுகொண்டே போவதைத் தவிர்க்க இயலவில்லை. முறைப்படி எடிட் செய்துதான் இவற்றை வெளியிடவேண்டும் என்பது தெரியாமல் இல்லை. 'உள்ளே இருப்பதையெல்லாம் வெளியே கொண்டுவந்து கொட்டு ' என்று ஒருநாளைப்போல் தினமும் மெயில்கள் வந்துகொண்டிருப்பதால் நினைவுக்கு வருவதையெல்லாம் உடனுக்குடன் பதிவுசெய்ய முற்பட்டுவிடுகிறேன், கட்டுரை வளர்ந்துகொண்டே போனாலும் பரவாயில்லை என்று(இவ்வாறு மெயில்கள் வருவது உண்மைதான் என்று சொல்லச் சிலராவது வேண்டும் அல்லவா, அதற்காகச் சில மெயில்களை கோ. ராஜாராம் கவனத்திற்கு அனுப்பித் தொல்லை கொடுத்துவருகிறேன் )! எப்போது படிக்கச் சோர்வு தட்டுகிறதோ அப்போது சொல்லிவிடுங்கள், ஒரே ஒருவர் சொன்னாலும் போதும், நிறுத்திவிடுகிறேன்.
இனி, ஒரிஸ்ஸாவில் கிர ?ாம் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியார் அவருடைய இரு இளம் மகன்களுடன் கொளுத்தப்பட்ட கொடிய சம்பவம். எவ்வளவு தூரம் அவர் வனவாசிகளுக்கு எரிச்சலூட்டியிருந்தால் இந்த அளவுக்கு அவர் மீது பகை மூண்டிருக்கும் என்கிற கோணத்திலும் இதுபற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா ?
ஸ்டெயின்ஸும் அவர் மனைவியும் தொழுநோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதற்காக வந்தவர்களா அல்லது அந்தச் சாக்கில் வனவாசிகளை மதமாற்றம் செய்ய வந்தவர்களா என்பதை அறிய அவர்கள் ரகசியமாக அனுப்பிக்கொண்டிருந்த ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பார்த்தால் தெரிந்துவிடும். பணிவிடை செய்ய வந்ததாக அவர்கள் சாதித்த போதிலும், மதமாற்றத்தில் அவர்கள் காட்டி வந்த தீவிரம் பற்றி அவர்களே விவரித்து அனுப்பிய அறிக்கைகளின் நகல்கள் என்னிடம் உள்ளன. தங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவி கிடைத்துவரவேண்டும் என்பதற்காக அவர்கள் ஆஸ்திரேலிய மேலிடத்துக்கு இடைவிடாது அனுப்பி வந்த அறிக்கைகள் அவை!
வனவாசிகள் தெய்வமென நம்பித் தொழுவது தம் மூதாதையரை. மேலும் அனுமனும் அவர்களின் இஷ்ட தெய்வம். வனவாசிகளை மதமாற்றம் செய்வதற்காகத் தொண்டு என்ற முகமூடி தரித்து வரும் கிறிஸ்தவ மிஷனரிகள் வனவாசிகள் வணங்கும் தெய்வங்களுக்குச் சக்தியில்லை என்று நிரூபிப்பதற்காக அத்தெய்வ சொரூபங்களைப் பலவாறு அவமதிப்பது வழக்கம். இது மிகவும் எல்லை மீறிப் போனதன் விளைவுதான் அந்தத் துயர சம்பவம். ஆனால் சம்பவம் நடந்த மனோ ?ர்பூர் கிராமத்தில் போய் விசாரித்தால் வனவாசிகளிடையே அதற்காக வருந்துபவர்கள் கூட இரு சிறுவர்களும் தீக்கிரையானதற்காகத்தான் வருந்துகிறார்கள். இவர்கள் மத மாற்றம் செய்வதற்காகக் குழந்தைகளையும் எதற்காகக் கூட்டிவரவேண்டும் என்று கேட்பவர்கள்தான் அங்கு அதிகம் உள்ளனர்!
அடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு மடாதிபதி பற்றிய சம்பவம் பற்றிக் குறிப்பிடப் படுகிறது. அந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதோடு, பலவாறு அலைக்கழிக்கப்பட்டு, அடுத்தடுத்துப் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதைப் பார்த்தோம். வேண்டுமென்றே அவர் மீது வன்மம் கொண்டு விதம் விதமாகக் குற்றம் சாட்டப்படுவது வெளிப்படையாகவே தெரிந்தது. நான்கு சுவர்களுக்குள் நடந்த விசாரணைகள் டிவிடிகளாகப் போலீசார் மூலமாகவே எதிர்த் தரப்பு தொலைக்காட்சிகளுக்குக் கூட விநியோகிக்கப் பட்டதையும் பார்த்தோம். விசாரணை தொடங்கு முன்னரே பத்திரிகைகள் அந்த மடாதிபதியைத் தூக்கு மேடையில் ஏற்றிவிட்ட விநோதமும் கண்டோம். அதே சமயம், தில்லி ஜும்மா மசூதி இமாம் புகாரி மீது எத்தனையோ சம்மன்கள் கேரள உயர் நீதிமன்றம் தொடங்கிப் பல நீதிமன்றங்களால் அனுப்பப்பட்டும் ஒரு சம்மன் கூட அவரிடம் அளிக்கும் துணிவு நமது காவல் துறையினருக்கு வரவில்லை என்பதும் நாம் அறியவேண்டியதோர் உண்மையல்லவா ? உள்ளே இருந்துகொண்டே இல்லை என்று அவர் சொல்லச் சொல்லுவார். அதைக் கேட்டுக்கொண்டு காவலர் திரும்புவர். ஏனெனில் அதற்குமேல் நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அனுமதி அளிக்க அரசாங்கம் துணிவு பெறவில்லை!
நம் நாட்டில் பூரி சங்கராச்சாரியார் தீண்டாமையை ஆதரித்தார் என்பதற்காக ஒருமுறை கைதானார். காஞ்சி சங்கராச்சாரியரும் கொலைக் குற்றம் உள்ளிட்ட பலவாறான குற்றச் சாட்டுகளுக்கு இணங்கக் கைதாகி ஜாமீனில் வெளிவரமுடியாமல் திண்டாடித் தவித்தார். உச்ச நீதிமன்றமே தலையிட்டு எல்லாம் பழிவாங்கும் போக்குபோல அல்லவா தோன்றுகிறது எனக் குறிப்பிட்டு ஜாமீனுக்கு வழிசெய்ய வேண்டியதாயிற்று. இப்போது அவர் கோவில் நகைகளைத் திருடியதாகப் புதிதாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது! குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதிகளே இது நம்பும்படியாகவே இல்லையே என்றனர்!
ஆக, ?ிந்துஸ்தானத்தில் ?ிந்து துறவியரைப் பலவாறான குற்றங்களின் பேரில் கைது செய்ய எவ்விதத் துணிவும் தேவையில்லை, முகமதிய இமாம்களைக் கைது செய்யத்தான் துணிவு இல்லை என்பது நிரூபணமாகிறது!
அடுத்து நடைபாதை திடார் கோவில்கள் பற்றிய பிரஸ்தாபம். நில ஆக்கிரமிப்புக்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் இச் செயல்கள், ?ிந்து, முகமதிய, கிறிஸ்தவ பேதங்கள் இன்றி அனைவராலுமே கையாளப்படுகின்றன. நடைபாதையில் எழுப்பப் படும் இம்மதிரியான கோவில்களை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சிகளும், நகராட்சிகளும் செய்துதான்வருகின்றன. அண்மையில் மதுரை மாநகராட்சி இப்பணியைத் தீவிரமாக மேற்கொண்டது. இதில் மதம் அல்ல, அரசியல் தலையீடு இருப்பதால்தான் தடங்கல் நேருகிறது. நடைபாதைகளில் அரசியல் கட்சிகளும் கொடி மேடைகளை அமைத்து இடையூறு செய்யத் தவறுவதில்லை. அவற்றை அப்புறப்படுத்துவதும் எளிதாக இல்லைதான். வாக்குகளைப் பற்றிகவலைப்படாமல் அரசு எடுக்க வேண்டிய நடவிடிக்கைகளுள் இதுவும் ஒன்று. ஜயேந்திரரையும், சுந்தரேச ஐயரையும் கைது செய்ததில் இருந்த துணிவில் சிறிதளவேனும் இருந்தால் போதும், அகற்றிவிடலாம், எல்லாவற்றையும்! அதிலும் சுந்தரேச்வர ஐயர் மீது குண்டர் சட்டமே பாயவில்லையா ?
தலித்துகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காகவும் ?ிந்து சமூகம் முழுவதன் மீதும் பழி சுமத்தப்படுகிறது. தலித்துகள் மீது கொடுமைகள் இழைப்பதற்கான துணிவை ?ிந்து சமூகம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, முகமதிய சமூகங்களும்தான் பெற்றுள்ளன. இதற்காக நாம் அனைவருமே ஒன்று திரண்டு போராடக் கடமைப் பட்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டும், குத்திக் காட்டிக் கொண்டும் பொழுதுபோக்காமல் எல்லாரும் உடனடியாகச் செயலில் இறங்கவேண்டிய விஷயம் இது.
இன்று ?ிந்து சமூகம் சட்ட ரீதியான பாதுகாப்பை தலித்துகளுக்கு வழங்கியுள்ள போதிலும், பெரும்பாலான சட்டங்கள் சரிவரப் பின்பற்றப்படாமல் இருப்பதுபோலவே இச்சட்டமும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு சரியான மாற்று காவல் துறையில் சேர தலித்துகள் பெருமளவில் முன்வரவேண்டும். தமக்க்கெனத் தனி கட்சிகள் நடத்தாமல் எல்லா அரசியல் கட்சிகளிலும் பெருமளவில் சேர்ந்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
தலித்துகள் வேறு, நான் வேறு என்கிற பிரக்ஞை இன்றி தலித்துகளுடனான எனது கலந்துறவாடல், 1957 சட்டமன்றத் தேர்தலிலிருந்து தொடங்கியது. அந்தத் தேர்தலின்போது, சிதம்பரத்தில் பொன். சொக்கலிங்கம் என்ற தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காகவும், காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்காக வேலை செய்கிறோம் என்கிற பெருமிதத்துக்காகவும் உழைத்தேன்.
காமராஜர் சிதம்பரத்தில் எப்போதும் நிறுத்தும் வேட்பாளர் வாகீசம் பிள்ளை என்ற மிராசுதாரரைத்தான். அவரை எதிர்த்து நிலச்சுவான்தாரர்களின் சார்பில் கோபால கிருஷ்ணப் பிள்ளை என்ற செல்வாக்கு மிக்க சீமானும் சுயேச்சையகப் போட்டியிட்டார். இப்பெரும் மோதலுக்கு இடையேதான் நம் பொன். சொக்கலிங்கத்தை அண்ணா நிறுத்தினார். நான் காஞ்சி, சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் மாறி மாறி வேலை செய்தேன்.
அந்தக் காலத்தில் தலித்துகளின் வாக்குகள் கொத்தாகக் காங்கிரஸுக்குத்தான் விழும். எல்லாம் மகாத்மா காந்தி, அவர்களுக்கு இட்ட ?ரிஜன் என்கிற நாமகரணத்தின் மகிமை!
இதனை உடைப்பதற்காக நான் தொகுதியில் உள்ள சேரிகளில் எல்லாம் புகுந்து,
'காங்கிரசார் உங்களிடம் காட்டுவது பெரிய மனுஷ தோரணையிலான அனுதாபமேயன்றி உங்களைச் சரி சமமாகப் பாவிக்கும் பெருந்தன்மை அல்ல. அதிக பட்சமாக அவர்கள் மேற்கொள்ளும் சம பந்தி போஜனம் கூட ஒரு பொது இடத்தில் உங்களையும் அருகில் உட்கரவைத்துக் கொண்டு உண்பதுதானேயன்றி, உங்கள் வீட்டிற்கே வந்து உணவருந்தும் சரிசம மனோபாவம் அவர்களுக்கு இல்லை. வேண்டுமானல் ஒரு சோதனை வைப்போம். நான் நாளை முதல் தினமும் ஒருவேளை உங்கள் வீடு வந்து உங்கள் குடும்பத்தாருடன் உணவு கொள்கிறேன். வாகீசம் பிள்ளை தரப்பில் எந்தப் பிள்ளைமாராவது அதேபோல் உங்கள் வீடு தேடி வந்து சாப்பிடுகிறாரா பார்ப்போம் என்று பொது மேடையில் அறைகூவல் விடுத்தேன். மறுநாளே சொன்னதுபோல் செய்யவும் தொடங்கினேன். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ஒருவர்கூட அதற்கு முன் வரவில்லை!
தேர்தலின் முடிவு வாகீசம் பிள்ளைக்குத்தான் சாதகமாயிருந்தது என்றாலும் இரண்டாவது இடம் பொன். சொக்கலிங்கத்திற்குக் கிட்டியது! கோபால கிருஷ்ணப் பிள்ளையே அதிசயித்து சொக்கலிங்கத்திற்கு மாலை அணிவித்தார். வாக்குப் பதிவின் போது பாதிக்கும் கூடுதலாகவே தலித்துகள் தி.மு.க. வேட்பாளர் சொக்கலிங்கத்திற்கு வாக்களித்திருப்பதும் எங்கள் விசாரணையில் தெரிய வந்தது.
தகவலுக்காகச் சொல்ல வேண்டியுள்ளதே தவிர, கிறிஸ்தவர், ?ிந்து என்கிற வேற்றுமையின்றி, தலித்துகளுடனான எனது உறவாடல் அவர்களின் சமையற்கட்டுவரையிலும், எமது சமையற்கட்டுவரையும் இன்றளவும் தொடர்கிறது, உள்ளுணர்வில் எவ்வித பேதப் பிரக்ஞையுமின்றி. இன் றும் பெங்களூரில் என்னைக் கண்டதும் 'அப்பா, அப்பா ' என்று ஓடிவந்து அணைத்துக் கொள்ளும் சிறுவர் சிறுமியரில் ?ிந்துகிறிஸ்தவ தலித்துகளும், முகமதியருமே அதிகம்!
தலித்துகளிடையே கூட மேலவர், கீழவர் என்ற பேதம் நிலவிவருகிறது என்பதுதான் இன்றளவும் நீடிக்கும் கசப்பான நிலைமை. பள்ளரும் பறையரும் தம்மை ஈன ஜாதியினராய் எண்ணுவதாக அருந்ததியர் மனங் குமுறுகின்றனர். மலம் அள்ளுபவர்களும் செருப்பு தைப்பதும் இவர்கள்தான். அண்மையில் வேலுர் அருகே அணைக்கட்டு என்ற கிராமத்தில் அருந்ததியர் மீது பறையர் தாக்குதல் நடந்தது. பரமக்குடியில் கறுப்பி என்ற பெண்ணை பள்ளர்கள் கொன்றதாகக் கூறுகிறார்கள். கோவை அருகே ஒரு கிராமத்தில் பள்ளர் ஜாதி இளைஞனும் அருந்ததியர் வகுப்புப் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தார் மான பங்கம் செய்யப்பட்டு, ஒரு பெண் இறந்தும் போனதாகச் செய்தி வந்துள்ளது.
ஆக, தலித்துகள் மீதான உயர்வகுப்பாரின் அத்துமீறிய செயல்கள் போலவே தலித்துகளிடையே ஒரு சாரார் மீதான மற்றவர் அத்துமீறல்களும் நீடிக்கின்றன. இதில் எவர் மீது பழி சுமத்துவது என்று விவாதித்துக்கொண்டிராமல், ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் அகற்றுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ?ிந்து அமைப்புகள் பலவும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முக்கியமாக மனமாற்றம் நிகழ்ந்தாலன்றி இதில் நிரந்தரத் தீர்வைக் காணவியலாது. இதனைக் கருத்தில்கொண்டுதான் நமது முனைப்பு இருக்கவேண்டும்.
====
malarmannan97@yahoo.co.uk
திண்ணையில் மலர் மன்னன் Copyright:Thinnai.com 

Thursday June 7, 2007 Copyright © Authors - Thinnai. All rights reserved.

No comments: