Wednesday, 6 June 2007

பிறைநதிபுரத்தானுக்கு வெங்கட்சாமிநாதன் அவர்களின் பதில்

Thursday May 31, 2007
பிறைநதிபுரத்தானுக்கு பதில்
வெங்கட் சாமிநாதன்
திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
என் பெயரோ, தோப்பில் முகம்மது மீரானோ, மீனாட்சி புரமோ, தேங்காய் பட்டினமோ புனை பெயர்களல்ல. கோஷாக்களின் மறைவில் ஒதுங்கவேண்டிய அவசியம் பிறைநதிப்புரத்தானுக்கு மட்டுமே. என்ன பயமோ, என்ன வெட்கமோ. வெட்கமாக இருக்குமானால் நல்லது. இராது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. பிறைநதிப்புரதானின் ஒவ்வொரு வரியிலும் எவ்வளவு ஆவேசம், ஆத்திரம், துவேஷம். ஏன் இந்த வசைபாடல்? பிறைநதிப்புரத்தானின் வீட்டுக்குள், மதத்திற்குள், ஊருக்குள் பாதுகாக்கப்பட்ட ஆபாசங்கள், ரகசியங்களை என் மீனாட்சிபுர மதம் மாற்றத்தைப் பற்றிய கேள்விகள் கிண்டி வெளிக்கொண்டுவந்துவிட்டனவா? உண்மை விவரங்கள்- உண்மையில் பிறைநதிப்புரத்தான் ஆத்திரப்பட்டு வசைகளுக்கிடையே கொட்டியிருப்பது போல், பாளயங்கோட்டை இஷா அத்துல் காரர்கள் நிறைய விசாரணைகள் மேற்கொண்டு, வெகு தயக்கத்தோடு, மீனாட்சிபுர தலித்துகளின் கட்டாயத்தின் பேரில் தான் மதம் மாற்றப்பட்டுள்ளார்கள் என்றால், இப்போது அவர்கள் ஜமாத் தலைவர்களாக உலா வருகிறார்கள் என்றால், 'பாய்' என்று மரியாதையோடு அழைக்கப்படுகிறார்கள் என்றால், விருந்தினர்களாக வீட்டினுள் அழைக்கப்பட்டு விருந்து படைக்கப்படுகிறார்கள் என்றால், இவையெல்லாம் உண்மையானால், இந்த விவரங்கள் சொல்லப்பட்டாலே போதுமே, நான் அதை கணக்கில் கொண்டு, அப்படித்தானா என்று விசாரிக்க தூண்டப்படுவேனே. பிறைநதிப்புரத்தானின் வசைகளும், துவேஷப் பெருக்கமும், சொல்லப்பட்டது அத்தனையையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கத்தான் என்னைத் தூண்டியுள்ளன.
மீனாட்சி புரம் மட்டுமல்ல, தேங்காய் பட்டினத்தின் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை வரலாறே, தோப்பில் முகம்மது மீரானின் எழுத்தில் முற்றிலும் வேறாகத்தான் இருந்திருக்கிறது. அவர் தேங் காய்பட்டின வாழ்க்கை பற்றியும் அரபு மொழி பேசும் முஸ்லீம்கள் தமிழ் பேசும் முஸ்லீம்களை கேவலப்படுத்துவது பற்றியும் தோப்பில் மீரான் எழுதியுள்ளதற்கு பிறைநதிப்புறத்தான் வாய் திறக்க மாட்டேன் என்கிறாரே. தொப்பிலும் வெகு ஜாக்கிரதையாக ஒரு கால கட்டத்தோடு தன் சித்தரிப்பை நிறுத்திக்கொண்டுள்ளார். நிகழ் காலத்திற்கு வர கட்டாயமாக மறுக்கிறார். அவருக்கு ஆபத்தாகிப் போகும். எந்த பிறைநதிப்புரத்தார்கள் என்ன கோஷாக்களில் தம்மை ஒளித்துக்கொண்டு அவரை வசை பாடுவார்களோ அல்லது தாக்குவார்களோ, என்ன ·பட்வா உள்ளூர் காஜி பிரகடனம் செய்வாரோ, யார் கண்டது? பயமாகத்தான் இருக்கும். நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக, இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்வத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆடவேண்டியிருக்கிறது. ஹெச் ஜி ரஸூல் காணாத மிரட்டலா? ஒரு வேளை பிறைநதிப்புரத்தானும் ஏதாவது பிராயச்சித்தமாகத்தான் தன்னை புனித இஸ்லாமியனாக உள்ளூர் ஜமாத்துக்கு நிரூபித்துக்காட்ட ஒரு வேளை இப்படி வசைபாடுகிறாரோ என்னமோ. ஆவேசமும்,ஆத்திரமும், வசையும், பிறைநதிப்புரத்தானின் உடல் நிலையை, மன நிலையைத் தான் வெளிக்காட்டுமே ஒழிய மீனாட்சிபுர உண்மை எது என்று சொல்லாது.
இந்து மதம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட மதமல்ல. இதில் பிறந்தவர்கள் உன்னதங்களையும் கசடுகளையும் இது தாங்கியே வந்துள்ளது. ஜாதி பேதங்கள் இத்தகைய கசடுகள். சமூக நீதி, சாதி ஒழிப்பு என்று கோஷங்கள் இட்டுக்கொண்டு, அதே ஜாதி வெறியை அரசியல் முதலீடாகக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் இந்த மதத்தில் உண்டு. ஹிந்து என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லும் ஹிந்துவையும், ஹிந்து என்றால் திருடன் என்று சொல்லும் ஹிந்துவையும் இந்த மதம் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறது. இம்மாதிரி பேசுபவர்கள் ஹிந்துவாகப் பிறந்துள்ள பாக்கியம் செய்தவர்கள், இவர்களையும் இந்த மதம் சகித்துக்கொண்டுள்ளது. இங்குள்ள ஜாதிப் பிணக்குகளைப் பற்றி மனம் நொந்து திறந்து பேசுவதில் எனக்கு தயக்கமில்லை. இதை நானே எழுதியிருக்கிறேன் மீரான் நாவல்களைப் பற்றி எழுதும்போது. இதற்காக என்னைச் சுட்டுத்தள்ளுகிறவனுக்கு 5 லக்ஷம் ருபாய் பரிசு தருகிறேன் என்று ·பட்வா பிரகடனப்படுத்த ஹிந்து மதத்தில் காஜிகள் ஊருக்கு ஊர் இல்லை.. அந்த ·பட்வாவை நிறைவேற்றினால் தன்க்கு ஜன்னத்தில் மதுக்குடங்களோடு என்னை வரவேற்க கன்னிப் பெண்கள் காத்திருப்பார்கள் என்று எந்த ஜிகாதியும் கிளம்பப் போவதில்லை, கையெறி குண்டோ, துப்பாக்கியோ எடுத்துக் கொண்டு. இது எங்கு நடக்கிறது என்பது பிறைநதிப்புறத்தானுக்குத் தெரியும். அவரது கூடாரத்தில் உள்ள அஹ்மதியாக்களை, ஷியாக்களை, முஹாஜிர்களை, கறுப்பு முஸ்லீம்களை, தமிழ் பேசும் முஸ்லீம்களை, சூ·பிகளை,( இவர்கள் எல்லோருமே முஸ்லீம்கள் தான்), கா·பிர் களாக துவேஷிக்காது, சகோதர முஸ்லீம்களாக அணைத்துக்கொள்ள முஸ்லீம் சமுதாயம் முதலில் கற்றுக் கொள்ளட்டும். பிறகு கா·பிர்களை ஜன்னத்துக்கு அழைத்துச் செல்வது பற்றி யோசிக்கலாம். இஸ்லாம் என்றால் அமைதி என்ற கோஷங்கள் கேட்டு புளித்துப் போயிற்று. குரானிலேயே அமைதி இல்லை. எப்போதும் இணைவைப்பவர்களை பணிய வைப்பது பற்றியும் அல்லது ஒழித்துக் கட்டுவது பற்றித்தான் இறை வாக்குகள் அடிக்கடி கேட்கின்றன. 7-ம் நூற்றாண்டிலிருந்தே ஜிகாத் தொடங்கியாயிற்று. தென்னாட்டில் எத்தனை இடங்களில் சிலைகள் `12-ம் நூற்றாண்டிலிருந்து புதையுண்டவை தோண்டத் தோண்ட வெளிப்படுகின்றன? எல்லாம் மாலிக் காபூரின் அமைதிப் படையின் அரவணைப்பு தாங்காது புதையுண்டன போலும். தார்·போரில் என்ன நடக்கிறது? பிறைநதிப்புரத்தான் சாகேப்? குடி மயக்கத்தில் ஒருவன் 'தலாக்' என்று உளறினால், ஹிந்துவாக இருந்தால் அது வெறும் உளறல் தான். அவன் முஸ்லீமாக இருந்து விட்டாலோ, வந்தது வினை, உள்ளூர் முல்லாவே போதும் ·பட்வா சொல்வதற்கு. குடிகாரனுக்கு தெளிவு பிறந்தாலும், அவன் மனைவியை தலாக் செய்தவன் தான். அவர்களை வாழ் விட மாட்டார்கள். ஏனெனில் ஷரியத் என்ற புனித இஸ்லாமிய சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அது நபீகள் நாயகமே காட்டிய வழி. அதில் மனிதர்கள் கை வைக்கக் கூடாது. எட்டுப் பேர் சேர்ந்து கற்பழிக்கப்பட்ட பெண் தான் சமூக பகிஷ்கரிக்கு ஆளாகுபவள். கற்பழித்தவர்களைப் பற்றி ஷரியத் தில் ஏதும் சொல்லப்படவில்லை. மீண்டும் புனித ஷரியத். நபிகள் நாயகம் காட்டிய வழி. இதென்ன அநியாயமாக இருக்கிறது? என்று கேட்டால், 'ஷரியத் வெறும் சிபாரிசு தான். கட்டாயம் அல்ல" என்று தொலைகாட்சியில் சப்பைக்கட்டு கட்டுவார்கள் All India Muslim Personal Law Board-ன் இஸ்லாம் மத அறிஞர் மேதகைகள்.
கோஷாவுக்குள் ஒளிந்து கொள்பவர்களோடு பேசுவதில் எனக்கு மனமில்லை. ஆனால், தமிழ் மணம் என்று ஒரு மேடை இருக்கிறதே -internet-ல்?, தீந்தமிழ் நாட்டின் அரசியல் பேச்சாளர்கள், வாய் திறந்தால் கொட்டுமே, அந்த ரகமாக இருக்கிறது பிறைநதிப்புறத்தானின் எழுத்து. மறுபடியும் இந்த ரக எழுத்து படையெடுக்கலாம் தான். இந்த ஒரு முறையோடு சரி. உண்மையும் நாகரீகமும் நல்ல ஹிருதயமும் உள்ளவர்கள் பேசட்டும்.
வெங்கட் சாமிநாதன்/30.5.07

No comments: