தர்காவில் பாகிஸ்தான் கொடியேற்றிய 4 பேர் கைது
First Published : 08 Sep 2009 12:06:44 AM IST
ஆனந்த் (குஜராத்), செப். 7: குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள உம்ரெத் நகர் பகுதியில் உள்ள தர்கா ஒன்றில் பாகிஸ்தான் தேசியக் கொடியேற்றிய 4 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
தர்காவில் உள்ள 2 வேப்ப மரங்களில் பாகிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸýக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸôர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தர்காவின் 2 அறங்காவலர்களும் அடங்குவர். மற்ற மூவரும் பள்ளிவாசல் ஊழியர்களாவர். இவர்களில் ஒரு அறங்காவலர் மற்றும் மூன்று ஊழியர்களையும் போலீஸôர் கைது செய்துள்ளனர். மற்றொரு அறங்காவலரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை.
முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் தேசியக் கொடி அல்ல என்றும், கொடியின் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.
dinamani.com
No comments:
Post a Comment