Tuesday, 30 September 2008
பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய திண்ணைக்கட்டுரை
****************************
Thursday September 25, 2008
காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் - 1
மலர்மன்னன்
ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின் எண்ணிக்கையும் கூடுதலாகின்றனவோ அங்கெல்லாம் நாட்டைப் பிளவு படுத்தும் தேசத் துரோகம் வலுப்பெறுவதன் காரணம் இதுதான். ஹிந்துஸ்தானத்தின் வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர் எண்ணிக்கை கூடுதலாகிவிட்டதால் அங்கு மிஷனரிகளின் பக்க பலத்துடன் பிரிவினை கோஷம் உரத்துக் கேட்கிறது. பொது இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைகின்றன. வட மேற்கு எல்லைப் புற மாகாணம், மேற்கு பஞ்சாப், ஸிந்து மாநிலம், கிழக்கு வங்காளம் ஆகிய இடங்களில் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்ததால்தான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. இன்று ஹிந்துஸ்தானம் முழுவதிலுமே தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு ஹிந்துஸ்தானத்தை "இஸ்லாமியக் குடியரசாக' மாற்றிவிட வேண்டும் என முகமதிய பயங்கர வாத இயக்கங்களும், "கிறிஸ்தவக் குடியரசாக' மாற்றியமைக்க வேண்டும் என்று கிறிஸ்தவ "நற்செய்தி' இயக்கங்களும் நாடு முழுவதும் ஒன்றோடொன்று போட்டி போட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றன.
இந்த நடப்பு நிலவரத்தை உணராமல் ஹிந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதும், தமக்குள் சச்சரவிட்டுக் கொள்வதும், தாராள மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுத்துப் பலன் பெற வேண்டும் என்ற அற்ப ஆசையில் முகமதிய, கிறிஸ்தவ இயக்கங்கங்களுக்குப் பரிந்து பேசுவதுமாகக் காலங் கடத்தி வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சில தினங்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு வருமாறு சிலரிடமிருந்து அழைப்பு வந்தது. காஷ்மீர் விவகாரம் பற்றி ஒரு சிறு கூட்டத்தில் பேச நான் வர வேண்டும், அதிக பட்சம் நூறு பேர் கூடுவார்கள். ஆனால் அனைவரும் இளைஞர்களாக இருப்பார்கள். காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையான கோணத்தை அறிய விரும்புகிறவர்களாக இருப்பர்கள் என்று சொன்னார்கள். திண்ணை டாட் காம் இணைய இதழில் வந்த எனது காஷ்மீர் தொடர்பான கட்டுரைகளையும் அனேகமாக "ஜடாயு' ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த தருண் விஜய் கட்டுரையினையும் படித்துவிட்டுத்தான் இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்ததை அறிந்துகொண்டேன்.
மேலும் அவர்களுக்கு ஒரு தூண்டுதல் ஏற்பட இன்னொரு விஷயமும் காரணமாக இருந்திருக்கிறது. அது செங்கற்பட்டுக்குப் போன பிறகுதான் தெரிய வந்தது.
"மக்கள் ஜன நாயகம்'
செங்கற்பட்டு நகரில் மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளில் எல்லாம் சிவப்பு நிறச் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். "இந்திய இளைஞர் மக்கள் ஜனநாயகக் கழகம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகங்கள் கண்களை மிகவும் உறுத்தின. ஜன நாயகம் என்றாலே அது மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான். மக்கள் ஜனநாயகம் என்ற பாகுபாடு விசித்திரமாக இருந்தது. ஒருவேளை அரசியல் கட்சிகளின் அடாவடி ஜன நாயகம், சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக நடத்தும் ஜனநாயகம் என்றெல்லாம் பாகுபாடுகள் இருப்பதால் "மக்கள் ஜனநாயகம்' என்பதாக அடையாளப் படுத்தத் தோன்றியிருக்கலாம்.
இந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடலாகாது என்றும் இந்திய அரசு, தனி தேசியமான கஷ்மீர் மக்களின் தனிநாடு கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குமாறும் அந்தச் சுவரொட்டி வலியுறுத்தியது.
இடதுசாரிகள் எப்போதுமே தேசத் துரோகத்தில் முன்னிற்பவர்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாõலும் இந்த அளவுக்கு பகிரங்கமான தேச விரோதப் பேச்சுக்குத் துணிவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக அந்தச் சுவரொட்டியைப் பார்த்துவிட்டுத்தான் என்னை அழைத்துப் பேச வைக்கும் எண்ணம் இளம் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன்.
இதில் குறிபிடத்தக்க அம்சம், என்னை அழைத்த இளஞர்களில் எவரும் எந்த ஹிந்து இயக்கத்தோடும் தொடர்புள்ளவர்கள் அல்ல. பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும், தகவல் அறியும் நாட்டம் உள்ள மாணவர்களேயன்றி, எந்தவொரு இயக்கம் சார்ந்த உணர்வுகளையும் முன்கூட்டியே உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டவர்கள் அல்ல. நானும் அத்தகையவனே என்பதால் என்னை அழைத்துப் பேச வைக்க அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.
பேச்சைக் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை அறுபது, அறுபத்தைந்து இருக்கும். எனது அறிமுகத்தை முதலில் அளித்து அதன் பின் அவர்களின் சுய அறிமுகத்திற்குச் சிறிது நேரம் ஒதுக்கினேன். கூட்டம் ஒரு இளைஞர் வீட்டின் விசாலமான மொட்டை மாடியில் நடந்தது.
மேஜை, நாற்காலி என்றெல்லாம் போட்டிருந்ததை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு, வந்தவர் களை ஒருவர் பின் ஒருவராய் வட்டமாக உட்காரச் செய்து, முதல் வட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்துகொண்டு ஒரு கலந்துரையாடலாகவே எனது பேச்சைத் தொடங்கினேன். பொழுது போவதே தெரியாமல் பேச்சு தொடர்ந்தது. இரவு பனிரண்டு மணிக்கு ஆறிப்போன இட்டலிகளைத் தின்றுவிட்டு, அந்த மொட்டை மாடியிலேயே இரவு படுத்துக் கிடந்துவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன்.
அழிக்க முடியாத ஹிந்து அடையாளம்
கலந்துரையாடலில் நான் பேசியதையும் இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாக இங்கு வழங்குகிறேன்:
காஷ்மீர் என்கிற பெயர் வரக் காரணமே கச்யப முனிவரின் தலமாக அது இருந்ததுதான்.
பல அழிப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தனது புராதன ஹிந்து அடையாளங்களை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் தலை நகரம் உள்ளிட்ட ஊர்கள் பலவும் இன்றளவும் தமது பூர்விக ஹிந்துப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றன. ஆதி சங்கரர் காலடி பட்டு சங்கராசாரியார் குன்று என்று அழைக்கப்படும் குன்றும், பனி லிங்க வடிவில் தரிசனம் தரும் அமர நாதரும், அவர் குடிகொண்டுள்ள குகையையொட்டி அமைந்துள்ள தலங்களும், வைஷ்ணோதேவியும் காஷ்மீர் ஒரு ஹிந்து பூமி என்பதைப் பறை சாற்றுகின்றன. சைவம், சாக்தம் ஆகிய வழிபாடுகளின் ஊற்றுக் கண்ணான காஷ்மீர் பின்னர், ஹிந்து ஞான மரபிலிருந்தே கிளைத்த பௌத்தமும் தழைக்கும் தலமாகவும் விளங்கியது.
ஹிந்துஸ்தானத்தின் மண்ணிலிருந்து முளைத்தெழாமல் வேறு எங்கிருந்தாவது வந்து சேர்ந்த மாற்று சமயம் மத மாற்ற முயற்சிகளில் முனைந்து அதன் விளைவாக அது பரவுமானால் காலப் போக்கில் அவ்வாறு பரவி வேரூன்றும் பகுதி ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து சென்றுவிடும் என்கிற உண்மையைக் கடந்த கால வராலாறு நெடுகிலும் பார்த்து வருகிறோம். ஒரு காலத்தில் ஹிந்துஸ்தானத்தின் ஓர் அங்கமாகவே இருந்த ஆஃகானிஸ்தானம், ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாற்றப் பட்டதன் விளைவாக, ஒரு தனிதேசமாகப் பிரிந்து போனது. பஞ்ச நதிகள் பாய்ந்து வளம் செய்த பஞ்சாப் மாகாணத்தின் மேற்குப் பகுதி நெடுகிலும் ஹிந்துக்களாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாறியதன் விளைவு, அது பாகிஸ்தானாக மாறிப்போனது. ஹிந்துஸ்தானத்திற்கே பெருமை தந்த சிந்து மாகாணத்தில், முகமதியராக மாறிய மக்களின் எண்ணிக்கை மிகுந்ததால் அதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. கிழக்கே வங்காளமும் இதே காரணத்தால் சிதைக்கப் பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் இன்று பிரிவினைக் கோரிக்கை வலுத்து வருகின்றது என்றால் அதற்குத் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ மிஷனரிகளே என்பதும், அங்கெல்லாம் மத மாற்றப் பணி முழு மூச்சாகத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி வருவதும்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.
ஆக, ஹிந்துக்களை மதம் மாறச் செய்து அதன் அடிப்படையில் ஹிந்துஸ்தானத்தைத் துண்டு போடுவது ஒரு தேர்ந்த ராஜ தந்திரத் திட்டமாகச் செயல் பட்டு வருகிறது. எப்படியாவது பெரும்பான்மை மக்களை மதம் மாற்ற வேண்டும், மாற மறுத்துத் தாய் மதத்திலேயே உறுதியுடன் நிற்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, "எங்கள் வழி தனி வழி, ஹிந்துக்களுடன் எங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. நாங்கள் ஒரு தனி தேசியம். சுதந்திர நாடாக நாங்கள் இயங்குவோம்; அல்லது அண்டையில் உள்ள எங்கள் சமயத்தாரின் தேசத்தோடு இணைந்து கொள்வோம்' என்று பேசத் தொடங்குவது இத்திட்டதின் முதல் படி. இன்று காஷ்மீரில் நடப்பது இதுதானே யன்றி வேறென்ன?
குப்புறத் தள்ளியது போதாதென்று குழியும் பறிக்கும் சங்கதி இது!
முழுக்க முழுக்க ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக இருந்த கச்யபரின், கவுதமரின் காச்மீரத்தில் முகமதியர் பெரும்பான்மையினராகிவிட்டதன் மர்மம் என்ன? சைவம், சாக்தம், பவுத்தம் ஆகியவற்றையெல்லாம்விட முகமதியம் உன்னதம் வாய்ந்தது என்கிற விழிப்புணர்வு அங்குள்ள பாமர மக்களுக்குத் திடீரென ஏற்பட்டு விட்டதா? அவ்வளவு விவேகம் உள்ளவர்கள் இன்றளவும் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லும் வயணம் என்ன? அங்கு எஞ்சியிருந்த ஹிந்துக்களான பண்டிட்டுகள் காணாமற் போனதன் காரணம் என்ன? அவர்களைக் காணாமலடித்துவிட்டு, எங்கள் பகுதி முழுக்க முழுக்க இஸ்லாமியரே வாழும் பகுதி, அண்டையிலிருக்கிற இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் இணைவதுதான் எங்களுக்கு இயல்பாக இருக்க முடியும்' என்று பாகிஸ்தான் கொடிகளுடன் திரியும் பகிரங்க தேசத் துரோகத்தின் பின்னணி என்ன?
முற்போக்கு முத்திரைக்காக...
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அண்மைக் கால வரலாறுகூடத் தெரியாமலும் தெரிந்துகொள்ள விரும்பாமலும், "முற்போக்கு, மதச் சார்பின்மை' முதலான முத்திரைகளைக் குத்திக்கொள்வதற்காகக் காஷ்மீர் விவகாரம் பற்றி மனம் போன போக்கில் பேசிவரும் எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஊடகத்தார்களின் எண்ணிக்கை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதில் மிகவும் பரவலாக அறியப்பட்ட, பிரபலமான பெயர்களும் அடக்கம். அவர்களைப் பின்பற்றிப் பெயர் பிரபலமடையும் ஆசையில் அதிகம் அறியப்படாதவர்களும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அந்த விருப்பத்திற்கு இணக்கமான முடிவை எடுப்பதுதான் ஜனநயகப் பண்பு என்று புத்தி சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள்.
கருத்துக் கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் அந்த உரிமையைப் பயன்படுத்தி தேச நலனுக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"காஷ்மீர் மக்கள் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாகத் தமது மாநிலம் இருக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிந்துபோக அனுமதிப்பதுதான் சரி. மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பது ஜனநாயகத்திற்கே விரோதம்' என்று பேசும்போது, காஷ்மீர் மக்கள் எனப்படுவோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதியர் மாத்திரமல்ல என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து திட்டமிட்டு விரட்டப்பட்ட பண்டிட் பிரிவைச் சேர்ந்த லட்சக் கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே ஓரப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் பண்டிட்கள், பள்ளத்தாக்கில் உள்ள டோக்ரா, குஜ்ஜார் வகுப்பு ஹிந்துக்கள்,வேலை, வியாபாரம் என ஹிந்துஸ்தானத்தின் பிற பகுதிகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ள காஷ்மீர ஹிந்துக்கள், ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள், லதாக்கில் உள்ள பௌத்தர்கள் ஆகியோரும் காஷ்மீரிகள்தான்! முகமதியர் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை மட்டும் அங்குள்ள முகமதியர் விருப்பத்திற்கு இணங்கப் பாகிஸ்தானுடன் இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ அனுமதிக்கலாம் என்றால் அடுத்து இங்கே இருக்கிற கேரளத்தின் மலப்புரம் மாவட்டமும் அதே அடிப்படையில் உரிமைகோரத் தொடங்கும். முகமதியர் என்கிற சிறுபான்மையினருக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிப்பது ஓர வஞ்சனை. எங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று பிற சிறுபான்மையினரும் அவரவர் மத அடிப்படையில் வேறு எந்த நாட்டுடனாவது இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ உரிமை கோரக்கூடும்! மண்டைக்காடு சம்பவத்தின்போது சில அதி மேதாவி கிறிஸ்தவர்கள் அமெரிக்காவே, எங்களை ஏற்றுக்கொள் என்று குரல் கொடுத்தார்கள்! லதாக்கிலும், ஹிமாசல பிரதேசதின் சில மாவட்டங்களிலும் உள்ள பௌத்தர்கள் தங்களை ஸ்ரீலங்காவுடன் இணைத்துக் கொள்ள இயக்கம் தொடங்கலாம். மலப்புரம் எங்கே, பாகிஸ்தான் எங்கே, லதாக் எங்கே, ஸ்ரீலங்கா எங்கே , இதெல்லாம் வெறும் விதண்டா வாதம் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு காலத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ, ஹாலந்து போர்ச்சுகல் முதலான ஐரோப்பிய நாடுகள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமது கொடியை நாட்டி, அங்குள்ள நிலப் பரப்பைத் தங்கள் தேசத்தின் நீட்சியாகவும், மக்களைத் தம் பிரஜைகளாகவும் அங்கீகரித்துக் கொள்ளவில்லையா?
காஷ்மீரிகள் அல்ல, முகமதியர்கள்
காஷ்மீர் பள்ளத்தாக்கி லுள்ள ஹுரியத் கூட்டமைப்புக் கட்சிகளில் ஒன்றின் தலைவர் கிலானி நாங்கள் காஷ்மீரிகள் என்று சொல்வதைக் கைவிட்டுத் தங்களை மத அடிப்படையில் முகமதியராக அடையாளப் படுத்திக்கொண்டு, அதன் அடிப்படையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்.
கிலானியைப் படத்தில் பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு விவரம் அறியாத சிறுவனாகவாவது இருக்கக் கூடும் என்று நினைக்கத் தோன்றியது. அவருக்கு நேரடி அனுபவம் இல்லாவிடினும் உற்றார், உறவினர், பெற்றோர் வழியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கும்? இருந்துமா பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்? அவ்வாறு அறிவிப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அவ்வாறு அறிவிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னவாக இருக்கும்? பிற்கால ஷேக் அதுல்லாவுக்கு அளிக்கப்பட்டதுபோல ஏதேனும் இருக்கலாம்; யார் கண்டது?
காஷ்மீரில் விடுதலை முழக்கமும் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கிற குரலும் ஒலிக்கிறதென்றால் அதற்கு ஹிந்துஸ்தானத்தின் மெத்தனம்தான் காரணம். மத்திய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. இதில் பெரும் பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குத்தான் ஒதுக்கப்படுக்கிறது. ஜம்மு, லதாக் பகுதிகளுக்கான ஒதுக்கீடு குறைவுதான். இவ்வளவுக்கும் பரப்பளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட ஜம்மு பெரியது! மக்கள் தொகையும் ஜம்முவில்தான் அதிகம். இருப்பினும் காஷ்மீர் பள்ளத் தாக்கிகிற்குத்தான் நிதி ஒதுக்கீடுகள் கூடுதல். வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில்தான் அதிகம்.
ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டப்படும் வரிப்பணத்திலிருந்துதான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்குப் பலவகைகளிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப் படுகின்றன. இதற்குக் காரணம், அதுவும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு மாநிலம் என்பதோடு, அது ஹிந்துஸ்
தானத்தை விரோதியாகப் பாவிக்கும் அண்டை நாட்டால் மிகுந்த தொல்லைகளை அனுபவித்துவரும் எல்லைப் புறப் பிரதேசம் என்பதாலும்தான்.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே புசிக்குமாம் என்பதற்கு மாறாகப் புல்லுக்கே இறைக்கப்பட்டு, நெல்லுக்குப் பெயரளவுக்கே போய்ச் சேருவது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான் என்றாலும் ஜம்முகாஷ்மீரில் இது மிகவும் கூடுதல். கடந்த அறுபது ஆண்டுகளில் ஒரு சில குடும்பங்களும் அவற்றின் சொந்த பந்தங்களும் உண்டு கொழுப்பதற்கே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் பயன்பட்டிருகின்றன!
மற்ற மாநிலங்களுக்கு இல்லாத விசேஷச் சலுகைகள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவிட்டதால் தட்டிக் கேட்க ஆளில்லாத அரசாங்கமே அங்கு இருந்து வருகிறது.
ஒரு சிங்கம் நரியானது
முக்கியமாக மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி மக்களாட்சியை நிறுவிய முகமது அப்துல்லா, ஆட்சிப் பொறுப்பை வசப்படுத்திக்கொண்டு, காலப் போக்கில் தாமே ஒரு குறு நில மன்னராக மாறிவிட்டார். "ஷேக்' என்பது பிற்காலத்தில் அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டதுதான். அதன் பிறகு "காஷ்மீர் சிங்கம்' என்கிற பட்டமும் சூட்டப்பெற்ற அவர், காலப் போக்கில் தாம் ஒரு நரியே என்பதை நிரூபித்தார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹிந்துஸ்தானம் முழுவதும் விடுதலைப் போராட்டம் தீவிர கதியில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் தாக்கம் சுயேற்சை மன்னர்களின் சமஸ்தானங்களிலும் இயல்பாகவே ஏற்படலாயிற்று. விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு சமஸ்தானங்கள் பலவற்றிலும் உள்ளே நுழைவதற்குத் தடையே இருந்ததுண்டு. தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் நுழைந்து கைதானதும் உண்டு. சமஸ்தான மன்னர்கள் அனைவரும் சுக வாசிகளாக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்று கூற இயலாது. இருந்த போதிலும், மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி வர வேண்டும் என்கிற விழைவு எல்லா சமஸ்தானங்களிலும் இருந்தது. சில சமஸ்தானங்களில் உள்ளூர் அரசியல் வாதிகள் அதிகாரம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்பதற்காகவே மக்களிடையே அப்படியொரு எண்ணத்தைத் தூண்டிவிட்டதும் உண்டு.
சோஷலிசத் தாக்கத்தின் விளைவாக "முதலாளி, ' "செல்வந்தர்' என்றெல்லாம் குறிப்பிட்டவுடன் ஒரு விரோத மனப்பான்மையும் பரிவற்ற அபிப்பிராயமும் வளர்ந்ததுபோல மன்னர்கள் என்றாலே அனுதாபமற்ற கண்ணோட்டம் தோன்றிவிட்ட காலகட்டம் அது. மன்னர்களாக அரியணையில் அமர்ந்தவர்களும் அரச குல அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக மிகவும் ஆடம்பர மான வாழ்க்கை வழ்ந்தது முதலில் பிரமிப்பாக இருந்த நிலை மாறி வெறுப்பு தோன்றிவிட்டிருந்தது (இன்று பிரபல திரைப்பட நட்சத்திர நாயகர்கள் ராஜ போக மமதையுடன் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு வளர்வதற்குப் பதிலாக பிரமிப்பு மிகுந்து அதன் விளைவாக ரசிகர் மன்றங்கள்தாம் வளர்ந்து வருகின்றன! இந்த வளர்ச்சி, திரைப் படக் கவர்ச்சியை முதலாக வைத்து, தனிக் கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி வருகிறது!).
இன்று திரையுலக நட்சத்திரங்களே தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களிடமிருந்து விலகி, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகையில் சமஸ்தான மன்னர்கள் அவ்வாறு வாழ்ந்ததில் வியப்பென்ன? பொன்னும் மணியுமாக மகுடம் தரித்துக் காட்சியளித்த மன்னர்கள் மீது மக்களிடையே எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டுவது அன்றைய சமஸ்தானங்களில் எளிதாகவே இருந்தது.
காஷ்மீரிலும் இதுதான் நடந்தது.
மதவாதத் தாக்கம்
முஸ்லிம் மாநாடு என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, "முகமதியரான நாம் ஓர் ஹிந்து அரசனுக்குக் கீழே கட்டுண்டு கிடப்பதா' என்று மத வாத அடிப்படையில் மக்களைத் தூண்டிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார் முகமது அப்துல்லா. நம் ஊரில் வெகு சுலபமாகப் பலர் மாவீரர்களாகவும், அஞ்சா நெஞ்சர்களாகவும் ஆகிவிடுவதில்லையா, அதுபோல முகமது அப்துல்லாவும் விரைவில் மகத்தான விடுதலைப் போராளியாகிவிட்டார்! ஜன நாயக விரும்பியான நேரு, காஷ்மீர் பிரியராகவும் இருந்தமையால் அப்துல்லாவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக அர்வம் காட்டலானார். "முஸ்லிம் மாநாடு' என்று பெயர் வைத்திருப்பது உங்கள் கட்சி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிரதிநிதி என்பதுபோன்று எண்ண வைக்கிறது. அது உங்கள் கோரிக்கையைப் பலவீனப் படுத்தும். முழு சமஸ்தான மக்களுக்கும் பொதுவாக தேசிய மாநாடு என்று கட்சிக்குப் பெயர் மாற்றம் செய்யுங்கள் என்று நேரு ஆலோசனை சொல்லவும், அதுவும் சரிதான் என்று அவ்வாறே பெயரை மாற்றி வைத்தார் , முகமது அப்துல்லா. பாவம், நேரு , அவர் சொன்ன தேசியம் பிறகு "காஷ்மீரி' தேசியமாக வர்ணிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் (பின்னர் காஷ்மீரின் வடக்குப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியபோது, அப்துல்லாவின் 'முஸ்லிம் மாநாடு' அங்கு புத்துயிர் பெற்றது! காஷ்மீரிலேயே கூட தேசிய மாநாடு என்ற பெயர் மாறத்தை ஒப்புக் கொள்ளாமல் ஒரு பிரிவு தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரிலேயே தொடர்ந்து நீடித்தது)!
அந்தக் கால கட்டத்தில்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுத்து, ஜின்னாவின் விருப்பப்படியே முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகியவை ஒன்று திரட்டப் பட்டு, செயற்கையாக ஒரு தனி நாடு உருவாக்கப்பட்டது. இதுதான் உண்மையேயன்றி, இன்றளவும் பாகிஸ்தான் என்பதாக ஒரு தனி தேசியம் இல்லை! இதை நிரூபணம் செய்வது போலத் தான் பாகிஸ்தான் பிறந்து இருபத்து நான்கே ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கம் பிய்த்துக் கொண்டு போயிற்று. பன்ங்களா தேஷ் என்ற தனிநாடாக அது இன்று இயங்கி வருகிறது.
கிழக்கு வங்காள மக்களைப் பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஹிந்துஸ்தானம்தான் மீட்டது. அவர்கள் சுதந்திரமாக இயங்கத் துøணை நின்றது. ஆனால் அந்த நன்றி விசுவாசம் சிறிதும் இன்றி பண்ங்களா தேஷ் இன்று ஹ்கிந்துஸ்தானத்திற்கு எல்லாவிதமான இடையூறுகளையும் விளைவித்துக் கொண்டிருக்கிறது! காரணம் அங்கு பெரும்பான்மையினராக இருப்பவர்கள் வங்காள மொழி பேசுபவர்களாக இருப்பினும் முகமதியர்களாக இருப்பதுதான்! மதம் அவர்களின் கண்களை மறைப்பதால் தமது உண்மையான தேசியம் ஹிந்து தேசியமே எனபதை அவர்கள் காண மறுக்கிறார்கள்!
Copyright:thinnai.com
அருணகிரியின் திண்ணைக்கட்டுரை Part- 4
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
அருணகிரி
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
"...These are the back-to-the-beginning brigade. They really want to restore the great golden age of Islam. Back to the first four caliphates, over a thousand years ago... There is no such earthly paradise, ofcourse, but fanatics were never deterred by unreality"
- From 'The Afgan" by Frederick Forsyth
மசூதிப்போர்
மசூதி ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் மசூதியில் மாட்டிக்கொண்ட ஹஜ் பயணிகள் குழம்பிப்போயிருந்தனர். இவர்களில் அரபி தெரியாத பலருக்கும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலை வேறு. இந்நிலையில், முஹமது அப்துல்லா ஹதீதுகளில் உள்ளபடி காபாவின் அருகில் துப்பாக்கியுடன் தோன்றி, ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள மாஹ்டியாக தன்னை அறிவித்தான். ஷியா பிரிவைச் சேர்ந்தவனா என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று பதிலுரைத்தான். இதன் பின் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் விசுவாசப் பிரமாணம் வாங்கப்பட்டது. பின்னர் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜுஹைமானின் ஆக்கிரமிப்பு ஆரம்பத்திலேயே அனாவசிய உயிரிழப்பில் தொடங்கியது. மசூதிக்குள் இருந்த ஹஜ் பயணிகளின் கவனத்தைக் கவர மேல் நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு ஒன்று வழவழப்பான சுவர்களில் பட்டு திசை திரும்பி ஜுஹைமானின் போராளி ஒருவர் மீதே பாய அது ஆக்கிரமிப்பின் முதல் உயிரிழப்ப்பானது. அவ்வாறு இறந்தவர் மாஹ்டியாக தன்னை அறிவித்துக்கொண்ட முஹமது அப்துல்லாவின் மாமனார்!
மசூதிக்கட்டிடம் பாதிக்கப்படாமல் மசூதி முற்றுகையை முறியடிக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பல முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. மாஹ்டி தோன்றி விட்டார் என்பது உண்மையானால் அவரை எப்படி எதிர்ப்பது என்றும் புனித மெக்கா மசூதியில் ரத்தம் சிந்துவதா என்றும் பல இஸ்லாமியப் படைவீரர்கள் தயங்கினர். இந்தப்படைகளுக்கு தலைமைப் பொறுப்பிலிருந்த இளவரசர் புனித மசூதியைக் காக்கும் போரில் இறப்பவர்களுக்கு உடனே சுவனம் கிடைக்கும் என்று கறாராக அறிவித்து, தயங்கிய வீரர்களை போருக்கு அனுப்பினார். இவ்வாறு அனுப்பப்பட்ட வீரர்களில் பெரும்பாலோர் மசூதி வாசலை அடையுமுன்னரே உயரமான மினாரெட்டுகளில் ஒளிந்து கொண்டு தாக்கிய ஜுஹைமானின் படையால் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். மசூதிக்குள் நுழைந்து சண்டையிடவோ கவச வண்டிகளின் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தவோ சவுதி அரசுக்கு மதத்தலைமையின் ஒப்புதல் தேவைப்பட்டது. இதற்காக பின் பாஜின் அனுமதியைப் பெற வேண்டி, அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, முல்லாக்களுடன் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வஹாபி இறுக்கத்தை மேலும் நெருக்க இதனை அருமையான சந்தர்ப்பமாகக் கண்ட பின்பாஜ், வஹாபிய அடிப்படைவாதத்தை வலுப்பெறச்செய்யும் பல் கோரிக்கைகளை முன் வைத்து பேரத்தைத் தொடக்கினார். இந்த பேரத்தின் விளைவாக மன்னர் ஃபைசல் தொடங்கிய , பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு அனுமதி தரப்பட்டது உட்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டன. சவுதியில் மட்டுமே கற்றுத்தரப்பட்ட கடுமையான அடிப்படைவாத வஹாபி இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் விதத்தில், உலக மதராஸாக்களுக்கு நிதி உதவி செய்வதற்கும், பல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்களை சவுதிக்கு வரவழைத்து கடுமையான வஹாபி இறையியலில் பயிற்சி அளிப்பதற்கும் எண்ணெய்ப் பணத்தை வாரி இறைக்க சவுதி அரசு ஒப்புக்கொண்டது. உலகெங்கும் ஜிஹாதி தொழிற்சாலை நிறுவ நிதியுதவி செய்யும் நாடாக சவுதி அரேபியா இன்று ஆகியிருப்பதற்கான விதை அன்று பின்-பாஜுடனான பேச்சு வார்த்தையின் முடிவில் விதைக்கப்பட்டது. இளகத் தொடங்கியிருந்த ஒரு இடைக்கால இருண்ட சமுதாயம் மீண்டும் மதவாத இருட்டில் சரிந்து இறுகத்தொடங்கியதும் அன்றைய தினத்தில்தான். 1979 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை மாலை பேரம் முடிந்த போது ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு தொடங்கி மூன்று நாட்கள் முடிந்திருந்தன.
இந்தப் பேரத்தின் விளைவாக, மக்கா மசூதி ஆக்கிரமிப்பானது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அதனை விடுவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பின்-பாஜின் மதத்தலைமை ஃபத்துவா விதித்து அறிவிப்பு விடுத்தது. இதற்கு ஆதரவாக "அவர்கள் உங்களோடு போரைத்துவங்கும் வரை நம்பிக்கையற்றோருடன் புனித மசூதியில் போரிடாதீர்கள்; அவர்கள் போரிடத்துவங்கினால் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்" என்ற குரான் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன. இவை முஸ்லீம்கள் அல்லாதோருக்குத்தான் ("நம்பிக்கையற்றோர்") பொருந்தும் என்றாலும் நம்பிக்கையற்றவர் போல நடந்து கொண்ட ஜுஹைமான் படைகளும் முஸ்லீம்கள் அல்லாதோராகவே கருத்தப்படுவர் என்று சவுதி மதத்தலைமை விளக்கம் அளித்தது. இந்த விளக்கமே பிற்காலத்தில் அமெரிக்க நட்பு முஸ்லீம் நாடுகளின் மேல் - சவுதி அரசு உட்பட- ஜிஹாதியத் தாக்குதல் தொடுக்க வஹாபி ஜிஹாதிகளாலும் அல்-க்வைதாவாலும் வசதியாக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது.
ஜுஹைமான் போன்ற தீவிர முஸ்லீம் ஒருவனையே அவனது செயல்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாளன் என்று சொல்ல முடியும் என்றால், கிறித்துவ மேற்குடன் நட்பு பாராட்டும் முஸ்லீம் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதே பயங்கரவாத ஜிஹாதிகள் தரப்பு வாதமாக ஆனது. (இந்த விளக்கத்திற்கே முன்பே இப்படித்தான் நிலைமை இருந்தது என்றாலும், சவுதி மதத்தலைமையே இந்த விளக்கத்தை குரானை அடிப்படையாக்கிச் சொன்னது, இதற்கு மத அங்கீகாரம் த்ந்து உறுதி செய்தது போலாகி விட்டது). மசூதிக்குள் நுழைந்து தாக்க சவுதி அரசு தயாரானது.
இந்தத் தாக்குதலின் முதல் அம்சமாக அமெரிக்க டவ் (TOW- Tube Launched, Optically Tracked, Wire-command-link guided) வகை ஏவுகணைகள் கொண்டு மெக்கா மசூதியின் மினாரெட்டுகள் தாக்கப்பட்டன. மினாரெட்டுகளில் காவலுக்கு ஒருந்த அத்தனை போராளிகளும் இதில் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, யந்திரத்துப்பாக்கிகள் கூடிய கவச வண்டிகள் உள்ளே செலுத்தப்பட்டது. இவை ஜுஹைமான் தரப்பில் பெரும் சேதத்தை உண்டுபண்ணின. தன்னை உண்மையிலேயே மாஹ்டி என்றும் கொல்லப்பட முடியாதவன் என்றும் நம்பிய முஹமது அப்துல்லா இந்தச் சண்டையில் பல தீரச் செயல்கள் புரிந்தான். சுற்றிலும் பாயும் குண்டுகளைப் பொருட்படுத்தாது மசூதி வளாகத்திற்குள் புகுந்த கவச வண்டி ஒன்றை நெருங்கி, அதன் மேல் ஏறி பெட்ரோல் ஊத்திக்கொளுத்தினான். கவச வண்டி அவசரம் அவசரமாகப் பின் வாங்கியது. கீழ்த்தளத்தில் இன்னொரு கவச வண்டி குறுகலான நுழைவாயிலில் சிக்கிக்கொண்டு ஜுஹைமானின் ஆட்களால் பெட்ரோல் பாம் கொண்டு கொளுத்தப்பட்டது. சவுதி படைகள் வீசிய கையெறி குண்டுகளை "மாஹ்டி" முஹம்மது அப்துல்லா மிகச்சில நொடிகளில் அநாயாசமாக ஓடிப்பொறுக்கி திருப்பி வீச சவுதி தரப்பில் அவை பெரும் சேதத்தை விளைவித்தன. ஆனால், அவனது அதிர்ஷ்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. வீசப்பட்ட கை குண்டு ஒன்றை எடுப்பதற்குக்குனிந்த போது, "மாஹ்டி"யின் கையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் அது வெடித்து விட, முகமது அப்துல்லாவின் இடுப்பின் கீழ்ப்பாதி கூழாகிப் போனது. அந்நிலையிலேயே அந்த இடத்திலேயே அவன் மேலும் சில நாட்கள் உயிரோடு இருந்து, பிறகு இறந்து போனான். மாஹ்டி வீழ்ந்த செய்தி வதந்தியாய்ப் பரவிய நிலையிலும் கூட ஜுஹைமான், தனது உத்வேகப் பேச்சின்மூலம் படையை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து போரிட்டான்.
மசூதியின் மேல் தளம் சவுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர, குறுகிய பாதைகள் நிறைந்த கீழ்த்தளத்தில் ஜுஹைமானின் வீரர்கள் ஒளிந்து கொண்டு போரிடத்தொடங்கினர். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டபோது துணிகளையும், கார்ப்பெட்டுகளையும் தண்ணீரில் நனைத்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கீழ்த்தளத்தில் நுழைய முற்பட்ட சவுதிப்படைக்கே இந்தப்புகை அதிக பாதிப்பை உண்டுபண்ணியது. மேலும் கீழ்த்தளத்திற்குள் இறங்க முயன்ற சவுதி வீரர்களை ஜுஹைமானின் ஜிஹாதிகள் இருட்டில் இருந்து கொண்டு எளிதாகத் தாக்க முடிந்தது. பெரும் சேதம் இல்லாமல் கீழ்த்தளத்திலிருந்து போரிடுபவர்களை வெளியேற்ற முடியாது என்று சவுதி அரசுக்குப் புரிந்தபோது ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. சவுதியின் சிறிய ராணுவம் இதற்குள் ஏகப்பட்ட சேதத்தைக் கண்டு விட்டது. ஆனால் சவுதி அரசோ மெக்கா மசூதி மீட்கப்பட்டது என்று வெளியுலகிற்கு பொய்ச்செய்தி பரப்பத் தொடங்கி விட்டிருந்தது. இந்நிலையில் சவுதியின் எண்ணெய் வளமிக்க கிழக்குப்பகுதியில் உள்ள ஷியாக்கள் வேறு கலகம் செய்யத் துவங்கியிருந்தனர். அதனை அடக்க சவுதி அரசு இன்னொரு முனையில் போராட வேண்டியிருந்தது. 20 ஷியாக்கள் கொல்லப்பட்டு இந்தக் கலகம் அடக்கப்பட்டது.
உடனடியாக மசூதி ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், சவுதி அரசின் நம்பகத்தன்மைக்கே கேடு வரும் என்கிற நிலையில், சவுதி மன்னர் வெளி நாட்டார் உதவியை நாட முடிவு செய்தார். யாரிடம் உதவி கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, மத்திய கிழக்கின் மற்றொரு முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது. சக அராபிய நாடுகளையோ முஸ்லீம் நாடுகளையோ நம்ப சவுதி அரசு தயாராக இல்லை. ஜோர்டான் அரசு உதவி செய்ய முன் வந்தாலும், சவுதி அதனை மறுத்தது (அன்றைய சவுதி மன்னரின் தந்தை ஜோர்டானின் மீது 1920-களில் படையெடுத்தவர்). ஷியா நாடான ஈரானிடம் உதவி கேட்க முடியாது. பிற எந்த மத்திய கிழக்கு முஸ்லீம் நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டாலும் அதனை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு "மெக்காவைக் காக்க முடியாத சவுதி அரசு" என்று எப்போது வேண்டுமானாலும் அவை சவுதி அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொடுத்து விடக் கூடும். ஆக, எந்த சக அராபிய நாட்டிடமும் மசூதியைக் காப்பதற்காக கடன் பட சவுதி மன்னரின் அரசு தயாராக இல்லை. ஆனால் மேற்கு நாடுகளிடம் உதவி கேட்பதில் இவ்வித சிக்கல்கள் எதுவும் இல்லை, எனவே மேற்கு நாடுகளை அணுக முடிவு செய்யப்பட்டது. நட்பு நாடென்றாலும் அமெரிக்க வெறுப்பு உச்சத்தில் இருந்தமையாலும், வெளியே தெரிந்தால் பல குழப்பங்கள் உண்டாகும் என்பதாலும் அமெரிக்காவை இதில் தொடர்பு படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றைய தேதியில் உலகத்திலேயே சிறந்த ரகசியத் தாக்குதல் படையை (SDECE) வைத்திருந்த ஃபிரான்ஸிடம் உதவி கோருவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஏகப்பட்ட ராணுவ தளவாடங்களை விற்று வந்ததில் பிரான்ஸ் ஏற்கனவே சவுதிக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்தது.
போர்க்கருவிகள் பல தந்து பிரான்ஸ் உதவியது மட்டுமன்றி ப்ரான்ஸ் நாட்டின் சிறியதொரு தாக்குதல் குழுவும் ரகசியமாக சவுதிக்கு அனுப்பப்பட்டது. இந்தக்குழு சவுதி படைக்கு டாயெஃப் பகுதியில் கொரில்லா போர்ப்பயிற்சியும் கருவிப்பயிற்சியும் அளித்தது. இதைத் தொடர்ந்து மசூதியின் மேல்தளத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டு அதன் வழியே நரம்புகளைச் செயலிழக்கச்செய்யும் சக்தி வாய்ந்த ரசாயன வாயு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கையெறிகுண்டுகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியபடி சவுதிப்படை உள்ளே நுழைந்தபோது களைத்துப்போயிருந்த ஜுஹைமானின் போராளிகளால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உள்ளிருந்த ஓர் அறையில் பிற போராளிகளுடன் ஜுஹைமானும் பிடிபட்டான். இறந்து கிடந்த "மாஹ்டி" முகமது அப்துல்லாவின் உடலும் மீட்கப்பட்டது. மாஹ்டியின் இறந்த உடல், சவுதி அரசின் மசூதித் தாக்குதலுக்கு இஸ்லாமிய இறையியல் பூர்வமான நியாயத்தையும் தந்தது.
அடுத்து: பின் விளைவுகள்
(தொடரும்)
arunagiri_123@yahoo.com
Copyright:thinnai.com
Thursday, 25 September 2008
பி. ராமன் அவர்கள் எழுதிய பயங்கரவாதம் குறித்த கட்டுரையொன்று.
*******************
தொடரும் குண்டு வெடிப்புகள் : தனி மத்திய புலனாய்வு அமைப்பு தேவை!
"இந்தியன் முஜாஹைதீன்' என்று சொல்லப்படும் தீவிரவாத அமைப்பு, டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் நமக்கு நடுவே தீவிரவாதிகள் உருவாகிவிட்டார்கள் என்பதையும், அவர்கள் இந்திய முஸ்லிம்களில் சிலருக்கு வெடிபொருள்களைச் செய்வதில் மட்டுமன்றி, எப்படிப் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது என்பதிலும், தகவல் தொடர்புகளை எப்படிச் செய்வது என்பதிலும் பயிற்சியளித்துவிட்டார்கள் என்பதும் தெளிவாகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியன் முஜாஹைதீன் அனுப்பிய ஈ-மெயில் எச்சரிக்கை, "எங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே...' என்று பாதுகாப்பு அமைப்புகளைச் சுட்டிக்காட்டும் பாணியில் இருக்கிறது. இது மாதிரி ஈ-மெயில் அனுப்புபவர்களை போலீஸôல் இதுவரை நெருங்க முடியவில்லை என்ற தைரியத்தையே இது காட்டுகிறது.
கடந்த நவம்பரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு உத்திரப்பிரதேசப் போலீஸ் இதன் பின்னணியில் இருக்கும் சிலரைக் கண்டுபிடித்தாலும், தொடர் குண்டு வெடிப்புகள் நின்றபாடில்லை. இதே போல் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பல தீவிரவாதிகளைப் பிடித்திருந்தும், டெல்லி குண்டு வெடிப்பைத் தடுக்க முடியவில்லை.
சாதாரண வேளையில் முன்கூட்டியே தடுக்கும் நுண்ணறிவுத் திரட்டல் என்பது தகவல் தொடர்புகளை இடைமறித்துக் கேட்பதிலிருந்தோ அல்லது தீவிரவாத இயக்கங்களுக்குள்ளேயே ஊடுருவுவதன் மூலமோ செய்ய முடியும். ஆனால், இந்தியன் முஜாஹைதீன் தகவல் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறது என்றும், டெலிஃபோன்களைப் பயன்படுத்துவது இல்லை என்றும் தெரிகிறது. இன்டெர்நெட்டை இடைமறிப்பதில் நம் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ள போதாக்குறையை இது எடுத்துக் காட்டுகிறது.
உத்திரப்பிரதேச குண்டு வெடிப்புகள் நடந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஈ-தொய்பா, பங்களாதேஷைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி போன்ற தீவிரவாத இயக்கங்களைச் சந்தேகப்பட்டோம். பிறகு சிமி அமைப்பைச் சந்தேகித்தோம். ஆனால் இப்போது இந்த இயக்கங்கள் எல்லாவற்றிலும் உள்ள தீவிரவாதிகள் வெடி குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.
இதில் இந்தியன் முஸ்லிம்களும் (இதுவரை போலீஸ் கவனத்திற்கு வராதவர்கள்) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. ஆகவே நமது பாதுகாப்பு அமைப்புகள் திறந்த மனதோடு செயல்பட்டு, இந்தியன் முஜாஹைதீனின் அமைப்பு பற்றிய முழு விவரங்களைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் அந்த இயக்கத்திற்குள் ஊடுருவி, இது போன்ற வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியும்.
எந்தத் தாக்குதலும் நடந்துவிடாமல் தடுக்க, முதலில் ஏற்கெனவே குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இதுவரை நடைபெற்றுள்ள தாக்குதலில் கைதாகியுள்ளவர்களிடம் நடத்திய விசாரணை, -குண்டு தயாரிக்க, வைக்க பயிற்சி கொடுத்துவிட்டு போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பவர்களைக் கைது செய்ய வழி வகுக்கவில்லை.
ஆகவே நமக்கிடையே இருக்கும் பெரும் தீவிரவாதக் கூட்டத்தில் ஒரு நுனி மட்டுமே நமக்குத் தெரிய வந்துள்ளது. இன்னும் அந்தக் கூட்டத்தை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியன் முஜாஹைதீனுக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியவில்லை. அல்கொய்தா போலவே இந்தியன் முஜாஹைதீன் கீழ் பல்வேறு "தீவிரவாதக் குழுக்கள்' (நப்ங்ங்ல்ங்ழ் ஸ்ரீங்ப்ப்ள்) இருக்கின்றன. ஒரு குழு கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்தக் குழுவின் தயவு இன்றியே தன்னிச்சையாக இயங்கக் கூடிய பிற "ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாகவே தெரிகிறது.
தேடப்படும் தீவிரவாதிகள்
இதுவரை பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளுக்காக இயங்கும் பயிற்சி முகாம்கள் பற்றியே நாம் கவலைப்பட்டோம். ஆனால் இப்போது கைதாகிறவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்கள் மூலம் இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி முகாம்களை "சிமி' இயக்கம் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. அந்தப் பயிற்சி முகாம்கள் பற்றியும், அதில் பயிற்சி பெற்றவர்கள் பற்றியும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.
ஆகவே தீவிரவாதச் செயல்கள் பற்றி விசாரிக்க, மத்திய புலனாய்வு செல் தனியாகத் தேவை. அப்போதுதான் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும் பல்வேறு நாசகாரச் சக்திகளை அடையாளம் கண்டு அடக்க முடியும். அதை விடுத்து எந்த மாநிலத்தில் குண்டு வெடிப்பு நடக்கிறதோ அந்த மாநிலத்தில் புலனாய்வு என்ற ரீதியில் போவது பலன் தராது.
குறிப்பாக வெவ்வேறு கோட்பாடுகளுடன் கூடிய கட்சிகள் மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் நேரத்தில் "மத்திய புலனாய்வு செல்' இல்லையென்றால், இந்தத் தீவிரவாதிகளின் "நெட்ஒர்க்'கால் நாடு தொடர்ந்து ரத்தம் சிந்திக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழ்இந்துவில் எழுதிய பின்னூட்டம்.
*****************
வ்வொரு முகமதிய பயங்கரவாத நிகழ்வுகளுக்குப்பின்னர் விவாத்துக்குள்ளாக்கப்படுவது பயங்கரவாத்துக்கு எதிரான சட்ட்ங்கள் போதுமானவையாக இருக்கிறதா இல்லையா என்பதே.
பயங்கரவாதத்தை எதிர்க்க சட்டசீர்திருத்தங்கள் வேண்டும், சட்டங்களை வலுவுடையதாக்க வேண்டும் என்றும்... பொடா போன்ற சட்டங்கள் மீண்டும் வராது. இருக்கும் சட்டங்களே போதுமானவை என்றும் ஆளும் கட்சிக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.
ஒரே அரசின் வெவ்வேறு மட்டங்களில் ஏன் இத்தனை முரண்பாடு ? முகமதிய சிறுபான்மையினரை (?) முன்வத்து நடக்கும் வோட்டு அரசியல் என்பதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்சியெல்லாம் தேவையில்லை.
பொடா போன்ற சட்டங்களை திரும்ப கொண்டு வந்தால் மட்டும் என்ன செய்துவிடமுடியும்? கடுமையான சட்டங்கள் இருந்தபோதும் ஹிந்துஸ்தான மண்ணில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடந்துவந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மீதே முகமதிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி குடிமக்களின் உயிர்களை பலிவாங்கிய சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் நபர்களை கைது செய்வதிலிருந்து, விசாரணைக்கு உட்படுதுவதிலிருந்து, தண்டனை வாங்கித்தருவதுவரை எத்தனைவிதமான தடங்கல்கள்... பயங்கரவாதசெயல்கள் நடக்காமல் தடுக்க சட்டங்களை சீர்திருத்துவதும் புதிய சட்டங்களை கொண்டுவருவதும் ப்ரயோஜனமற்ற வேலை என்பது கண்கூடு.
மேலும், இந்த சட்டசீர்திருத்த விவாஹாரங்கள் எந்தவொரு முடிவையும் எட்டப்படாமல் அடங்கிப்போவதும், அடுத்தமுறை குண்டுவெடித்தவுடன் மறுபடியும் ஜீரோவிலிருந்து சட்டங்கள் குறித்த விவாதங்கள் ஆரம்பிக்கும்.... எத்தனை வெடிகுண்டுகளுக்குப் பின்னர் நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமோ ?
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு அல்-காய்தா தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அமெரிக்காவில் பயங்கரவாத சம்பவங்கள் ஏன் நடக்கவில்லை ? பயங்கரவாத செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை எதையும் அமெரிக்கா இயற்றவில்லையே. காவல்துறையும் உளவுத்துறை ஒருங்கிணைங்து இருக்கும் சட்டங்களை முறையாக அமல் செய்தும், பயங்கரவாதிகளை தீவிரகண்காணிப்புக்கு உட்படுத்தியும்தானே வெற்றிகண்டிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு கொஞ்சம்கூட இல்லை என்பதே இந்த வெற்றிக்கு காரணம்.
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது ? காஷ்மீர் வழியாகவோ, மேற்குவங்கம் வழியாகவோ... நாலாபுறமிருந்தும் பயங்கரவாதிகள் தாராளமாக ஊடுருவலாம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கொடுத்த கள்ள இந்திய பணத்தையும் சவூதியின் பெட்ரோ டாலர்களையும் கொண்டுவந்தால் போதும்.. அவர்களை உள்ளே அனுமதித்து அரவணைத்துக்கொள்ள பெரிய முகமதிய சமுதாயமே காத்திருக்கிறது, எந்தவொரு சாதாரண இந்தியனும் சாதிக்க முடியாத அனைத்தையும் சாதிக்க (தொழில்கள் ஆரம்பிப்பதுமுதல்... கூட்ட்ம் சேர்ப்பதுமுதல்... அரசியலில் ஈடுபடுவது வரை...) அந்த பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பிருக்கிறது.
எப்படி அவர்களால் இதை சாதிக்க முடிகிறது. சாதாரண குமாஸ்தாவிலிருந்து, அதிகாரிகள் வரை... வட்டசெயலாளர்கள் முதல் மந்திரி வரை அனத்துமட்டங்களிலும் ஊடுருவிப்பரவிய ஊழல்களையும், இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளையும் முடக்க்கிப்போடும் அரசியல் தலையீடுகளையும், ஹிந்துஸ்தான மக்களின் அளவுக்கு அதிகமான சகிப்பித்தன்மையையும் காரங்களாகக் கூறலாம்.
முகமதிய பயங்கரவாதிகளின் உயிர்நாடி பாரத்தத்துக்கு உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைத்துவரும் பொருளாதார ஆதரவு மட்டுமே. இவ்வகையான ஆதரவு இல்லாமல் அவைகளால் செயல்பட இயலாது. முகமதிய பயங்கரவாதம் களையப்படவேண்டுமானால், அவைகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வலுப்பெற வேண்டும். அரசு அதிகாரிகள் வுதவியுடன் உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இதை செய்யவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாது இவை நிறைவேற்றப்படவேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடக்கும் பொருளாதார உதவிகளையும் அவைகள் செய்யும் பரிவர்த்தனைகளையும், அவைகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம். முகமதிய சமுதாயத்தால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. முகமதியம் அவர்களுக்கு பயங்கரவாதத்தைத்தவிர வேரெதையும் கற்றுத்தரவில்லை.
பெரும்பான்மை ஹிந்துக்கள் எழுந்து நிற்காதவரை உருப்படியாக ஏதும் நிகழப்போவதில்லை.
Monday, 22 September 2008
தினமணி தலையங்கம் : வீரத்துக்கு தலைவணங்குவோம்
வீரத்துக்கு தலைவணங்குவோம்
ஆர். நடராஜ்
செப்டம்பர் 19-ம் தேதி தில்லி ஜாமியா நகர் பாட்லா வளாகத்தில் தீவிரவாத தேடுதல் வேட்டையில் தில்லி போலீஸôருக்கு மகத்தான வெற்றி கிட்டியது. ஆனால் காவல் அணிக்குத் தலைமை ஏற்ற ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, தீவிரவாதிகளின் குண்டுக்கு இரையானார். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. தலைநகரை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பிற்கு காரணமான முக்கிய தீவிரவாதிகள் இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார். தீவிரவாதத்தைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள இத்தருணத்தில் கடமை உணர்வோடு, துணிச்சலுடன் மக்கள் பாதுகாப்புக்காக தன் உயிரை அர்ப்பணித்த மாமனிதர் மோகன் சந்த் சர்மா.
தீவிரவாதிகளின் இலக்கு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவது, பிரிவினையைத் தூண்டுவது. உயிர் இழப்பைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அப்பாவி மக்கள், எதிலும் சம்பந்தப்படாதவர்கள் இறந்தால் அதன் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கும். மக்கள் கொதிப்படைவார்கள்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களைக் குறை கூறுவார்கள். அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்புத் துறையினர் மீதும் காழ்ப்புணர்ச்சி உடையவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் எதிர்ப்புக் கணைகளை எய்துவார்கள். சமுதாயத்தின் இடைவிடாத குறை கூறலால் நன்றாகப் பணி செய்யக் கூடியவர்களும் மனச் சோர்வடைந்து உந்துதலோடு பணி செய்யாமல் ஒதுங்கி விடுகிறார்கள். காவல்துறையினரை செயலிழக்கச் செய்வதுதான் தீவிரவாதிகளின் முதல் இலக்கு. சமுதாயத்தில் நிலைத்திருக்கும் அமைப்புகளான நீதி, பாதுகாப்புத்துறை, குற்றவியல் துறை, மொத்தத்தில் அரசியல் அமைப்பின் தூண்களாக விளங்குபவற்றைத் தகர்ப்பது அவர்களது முழுமையான இலக்கு. ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும்பொழுதும் மேற்சொன்ன உணர்வுகள் வெளிப்படுவதை நாம் எல்லோரும் காண்கிறோம்.
உயிர், உடைமைக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது, எதனால் பாதிப்பு ஏற்படுகிறதோ அதை எதிர்ப்பதுதான் மனித இயல்பு. ஆனால் தீவிரவாதம் தலைதூக்கும்பொழுது தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். அதனை முறியடிக்க வேண்டும் என்ற உணர்வு யாருக்கும் ஏற்படுவதில்லை. அதற்கு மாறாக தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஈடுபடுபவர்களின் மீதுதான் சமுதாயத்தின் எதிர்ப்பு திரும்புகிறது. திறம்பட முயற்சி செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால் அந்த நடவடிக்கையைக் குறை கூறுபவர்கள்தான் அதிகம். கைது முறையற்றது. விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை, விசாரணையின்போது குற்றவாளிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டன போன்ற விமர்சனங்கள் தான் பரவலாகப் பேசப்படுகின்றன. ஏற்கெனவே மேலாண்மை பாதிப்பில் உள்ள பாதுகாப்புப் பிரிவு உள்ளடங்கி விடுகிறது. தீவிரவாதம் வெற்றி பெறுகிறது. சமுதாயம் தன்னையே தாக்கிக் கொண்டு நிலை குலைகிறது. இந்த சுயதாக்குதல் தீவிரவாதிகள் தாக்குதலைவிட பன்மடங்கு கொடுமையானது என்பது உணரப்படுவதில்லை.
காவல்துறையில் சுயஉந்துதலோடு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டுவரும் இந்நாளில் மோகன் சந்த் சர்மா போன்றவர்கள் எந்த ஒரு புவியால் இயக்கப்படுகிறார்கள்? "யாருக்கு வந்த விருந்தோ' என்று வாழும் மனிதர்கள் மத்தியில் சர்மா போன்றவர்கள் குன்றின் மீது ஏற்றிய விளக்காகப் பிரகாசிக்கிறார்கள்.
காவல்துறையின் பல்வேறு பணிகளில் கடினமானதும், ஆளுமைக்கு அடித்தளமாகவும் விளங்குவது புலன் விசாரணை பிரிவு ஒன்றே ஆகும். அதற்கு பொறுமை வேண்டும், திறமை வேண்டும். ஓய்வில்லாத உழைப்பு தேவை. சங்கிலியைக் கோர்ப்பதுபோல ஒவ்வொரு பாகத்தையும் கண்டுபிடித்து முழுமையான வடிவம் புலப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும். புலன் விசாரணையில் சுய ஆதாயம் கிடைக்காது, மக்களிடம் அறிமுகம் இருக்காது, அவர்கள் அமைதியாகச் செய்யும் பணி மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது சில வழக்குகள் முடிவு பற்றி செய்திகள் வரும். அதுவும் புலன் விசாரணை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகமாகக் கவனத்தை ஈர்க்கும். தான் கொண்ட பணியை நேசித்து புலனாய்வுப் பிரிவில் பலர் பணிபுரிகிறார்கள். தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் விசாரணை மிகவும் சிக்கலானது. அதற்கு நுண்ணறிவுப் பிரிவினர் சேகரிக்கும் தகவல்களை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் தடயங்கள் மீது விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
1984-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 33 பயணிகள் உயிரிழந்தனர். அந்த வழக்கு புலன் விசாரணையின்பொழுது நுண்ணறிவுப் பிரிவினர் "இடைமறிப்பு' மூலம் கிடைத்த "தமு' என்ற தடயத்தின் அடிப்படையில் "தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்' என்பவரின் இயக்கம் தான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டது என்பது கண்டுபிடிக்க உதவியது.
பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மிக அவசியம். தீவிரவாத இயக்கங்களின் அமைப்புகள் பற்றியும், அவைகளுக்குக் கிடைக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவு என்ன, கிடைக்கக்கூடிய பணம், பொருள் எவ்வாறு வருகின்றன என்பதை தொடர்ச்சியாக நுண்ணறிவுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட வேண்டும். புலன் விசாரணையின்பொழுது பெறப்படும் உண்மைகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்களாக ஏனைய புலனாய்வுப் பிரிவுகளோடு பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். தில்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, ஆமதாபாத், பெங்களூரில் நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சி என்பதும் தற்சமயம் பிடிபட்ட குற்றவாளியின் முதல்கட்ட விசாரணையில், உத்திரப்பிரதேச நீதிமன்ற வளாகங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்கள்.
"அதிசயம் ஆனால் உண்மை' என்பது தீவிரவாத இயக்கங்கள் மனித உரிமைகள் பாதுகாப்புப் பற்றி சிலாகிப்பதற்கு பொருந்தும். மனித உரிமைகள் நிலைநாட்டுவதில் உண்மையாக நாட்டம் கொண்ட அமைப்புகள் குரல் கொடுக்கும்பொழுது அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
பயங்கரவாதத்தின் முழு வடிவமான வீரப்பன் சிறப்பு காவல்படையினர் மீது சாடிய மனித உரிமை மீறல்கள் பற்றிய வியாக்கியானங்கள் செய்திகளாக வந்தன. நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றவர், வனச் செல்வங்களை அழித்தவர், கெட்டேசால் என்ற கிராம மக்கள் முன்னால், காவல்துறைக்கு உளவாளிகள் என்று ஐந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொன்றவர், 14 கண்ணி வெடிகள் வைத்து பாலாற்றுப் படுகையில் 22 உயிர்களை அழித்தவர், மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர் என்ற ஒரே காரணத்தால் வன அதிகாரி சீனிவாசனின் தலையை சீவி பர்கூர் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தொங்கவிட்ட கொடூரர், மனித உரிமைகள் பேசியது கொடுமையிலும் கொடுமை. இன்றும் வீரப்பனுக்கு சில சமுதாய அமைப்புகள் அங்கீகாரம் அளிப்பதை அதிசயம் என்று நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்வது?
சட்டத்தை மதிப்பவர்களுக்குத்தான் மனித உரிமைகள் துணை நிற்கும். சட்டத்தை மிதிப்பவர்களுக்கும் மீறுபவர்களுக்கும் அல்ல. அதுவும் ஒன்றும் அறியாத ஏழை மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கு மனித உரிமைகள் கை கொடுக்காது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது.
இந்தியக் காவல்துறை வரலாற்றில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கானோர் உயிர் துறந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஆயிரம் காவல்துறையினர் உள்நாட்டு பாதுகாப்பிற்காக உயிரிழக்கின்றனர். இது ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்பைவிட அதிகம்.
தமிழக காவல் துறையில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதில் ஈடுபட்ட வேலூர், திருப்பத்தூர் ஆய்வாளர் பழனிச்சாமி, சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட பனவடலிச்சத்திரம் உதவி ஆய்வாளர் அய்யாபழம், வீரப்பன் வேட்டையில் உயிர் துறந்த உதவி ஆய்வாளர் செந்தில், செல்வராஜ், ரமேஷ் போன்ற பலர் உயிர்த்தியாகம் செய்து கடமையை நிறைவேற்றியதால் இன்று அமைதியை அனுபவிக்கிறோம்.
இப்போதிருக்கும் சூழ்நிலையில் அமைதி காப்பதில் பொதுமக்களின் பங்கும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. தில்லி தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது சைப் மூலம் பெறப்பட்ட தகவல்படி சுமார் ஐந்து இளைஞர்கள் தில்லி ஜாமியா நகர் பகுதியில் தாங்கள் மாணவர்கள் என்று கூறி குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் தங்களைப் பற்றி கூறியதும், நம்புவதற்குக் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சரகத்தில் புதிதாகக் குடிவருபவர்களை நன்கு விசாரித்து குடி அமர்த்திட வேண்டும் என்று திரும்பத் திரும்ப காவல்துறையினரால் வலியுறுத்தப்படுகிறது. காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று சமுதாயக் காவல் பணியின் ஒரு விதியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் இந்த நேர்வில் கடைப்பிடிக்கப்படவில்லை. அதன் விளைவு எவ்வளவு பயங்கரமானதாக உரு எடுத்துள்ளது!
இப்போதாவது பொதுமக்கள் விழிப்படைந்து உள்ளூர் காவல் துறையினரோடு இணைந்து அவரவரது குடியிருப்புப் பகுதியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தைத் தடுக்க புது சட்டம், பிரத்யேக விசாரணைப் பிரிவு போன்ற யுக்திகள் விவாதத்தில் உள்ளன. இவை எந்த அளவில் நடைமுறைக்கு வந்தாலும், உள்ளூர் காவல்துறையினரின் ரோந்துப் பணி, சமுதாயக் காவல் பணி, சந்தேக நபர்களைக் கண்காணித்தல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளில் தொய்வு இருக்கக் கூடாது.
. புதிய காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நெரிசலான இடங்கள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மையத்தில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை பிரிவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போலீஸ் கமிஷன் தனது பரிந்துரையில் பிரத்யேக புலன் விசாரணை பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. புலன் விசாரணைப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் ஊக்கம் கொடுத்தால்தான் அவர்களது பணித்திறன் செப்பனடையும்.
பணியில் மேலாண்மை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது. உயர் அதிகாரிகள் தங்களுக்கென்ற செயல் வட்டத்தை அமைத்து குறுகிய மனப்பான்மையோடு செயல்படுவதைத் தவிர்த்து நமது காவல்துறை மேன்மையுற வேண்டும் என்ற ஒருமித்த செயலாக்கம்தான் எந்த தீய சக்தியையும் தகர்க்கக்கூடிய ஆயுதம். நடைபெற்ற வழக்குகளில் தீர்க்கமான நடுவுநிலை பிறழாத முறையில் வெளித் தலையீடுகளுக்கு இடம்கொடாது விசாரணை மேற்கொள்ள வழிவகை செய்தால் தான் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும். எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும். திகில் நிகழ்வுகளில் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தமும் எதிர்பார்ப்பும் நிச்சயமாக இருக்கும். இம்மாதிரி தருணத்தில் மனித உரிமை மீறல்கள் இன்றி பொறுமையாக முயற்சிகள் மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இதில் சிறு தவறு நேர்ந்தாலும் பயங்கரவாதத்தைத்தான் மேலும் பலப்படுத்தும். மீண்டும் எதிர்காலத்தில் பயங்கர நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.
காவல்துறையின் சிரமமான பணியினைக் கருத்தில்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரும் தவறுகளைப் பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த காவல்துறையைப் பழிப்பது நியாயமற்றது. நேர்மையாகப் பணிபுரிபவர்களுக்கு மனச் சோர்வை ஏற்படுத்தி பணியில் சுணக்கம் ஏற்பட்டால் சமுதாயத்திற்குத்தான் பாதிப்பு. குறைகள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும், களையப்பட வேண்டும், மெச்சத்தக்கப்பணி போற்றப்பட வேண்டும். இந்த வகையில் மோகன் சந்த் சர்மாவின் வீரச்செயல் மகத்தானது. சர்மா எதிரிகளின் தாக்குதலில் இறப்பதற்கு முன் இருவரை சுட்டு வீழ்த்தினார். ஒரு பெரிய சதிகார கும்பலின் பின்னணி பற்றிய விவரம் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்காவது மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். மக்கள் அமைதிக்காக நிரந்தர அமைதி அடைந்துவிட்டார் இந்த வீரர்.
வீரத்திற்கு தலைவணங்குவோம் - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவோம். இவரது தியாகம் வீணாகாது. ஒளி படைத்த வைராக்கியத்துடனும் உறுதி கொண்ட நெஞ்சத்தோடும் தலை நிமிர்ந்து பயங்கரவாதத்தை எதிர்ப்போம், வெற்றி பெறுவோம்.
(கட்டுரையாளர்: சிறைத்துறை தலைமை இயக்குநர்)
உடனடியான தேவை உறுதியான தலைமையும் கடுமையான சட்டங்களும்.
இதற்கு முக்கிய காரணமாக, அன்நாடுகளின் உறுதியான தலைமை, கடுமையான சட்டங்கள், எந்தவித அரசியல் இன/மதவாத குறிக்கீடுகள் இல்லாமல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், மக்களின் விளிப்புணர்வு... இவைகளை காரணமாகச்சொல்லலாம்.
வேறெந்த நாட்டையும்விட அதிகமாக முகமதியம் போன்ற பயங்கரவாதத்தால் பாதிப்படைந்தது நமது பாரதம். இருந்தாலும், மேற்கூறிய எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பலியாகிவருகிறோம்.
இன்றய தினமணியில் இது தொடர்பாக எழுதப்பட்ட தலையங்கக்கட்டுரை கீழே...
*********************
Monday September 22 2008 00:00 IST
தேவை கடுமையான சட்டம்
ஜெ. ராகவன்
தில்லியில் கடந்த 13-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது. பயங்கரவாதிகளின் கொடூரச் செயல்களுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.
"இந்தியன் முஜாஹிதீன்' என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தில்லி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இது வெளிநாட்டு சக்திகளின் சதி என்று கூறுவதும், பயங்கரவாதச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உண்மையில் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க தற்போதுள்ள சட்டங்கள் கடுமையானதாக இல்லை என்பதுதான் உண்மை. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதா அல்லது சட்டங்களைக் கடுமையாக்க வேண்டுமா என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இது விஷயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.
இது இப்படியிருக்க, நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, தனது கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நாட்டில் குற்றச் செயல்களையும், பயங்கரவாதச் செயல்களையும் தடுப்பதற்காக இப்போதுள்ள சட்டங்கள் பலவீனமாக உள்ளன. பயங்கரவாதத்தை வேறுடன் களைய வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சட்டங்களைக் கடுமையாக்கினால் போதாது; அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் பிடிபட்டால், அவர் மீதான வழக்கு நடந்து தீர்ப்பு வர ஆண்டுகள் பலவாகும். அதற்குள் ஏதாவது ஒருவகையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்கிறார். இதைத் தவிர்க்க வேண்டுமானால் இது தொடர்பான வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு வழங்க ஏதுவாக நீதிமன்ற நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கிரண் பேடியின் கருத்து மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
போலீஸ் துறையில் சிறந்த நிர்வாகி என பெயர் எடுத்தவரும், "மகஸôúஸ' விருது பெற்றவருமான கிரண் பேடி, போலீஸ் துறையை காலத்துக்கு ஏற்றவாறு நவீனப்படுத்தி, சீர்த்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று மற்றொரு கருத்தையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நமது நாட்டின் போலீஸ் துறையில் சிபிஐ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அவற்றின் செயல்பாடு பலவீனமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்செயல்கள், வன்முறை, சட்ட விதிமீறல்கள் போன்ற விஷயங்களில் போலீஸôர் மிகவும் மென்மையாக நடந்து கொள்கின்றனர். இப்படி இருந்தால் குற்றங்களை எப்படி குறைக்க முடியும்? பயங்கரவாதச் செயல்களை எப்படித் தடுக்க முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகளின் புதுப் புது சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமானால், போலீஸôர் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு துணிச்சலுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டால்தான் இலக்கை நாம் எட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளது சிந்திக்க வேண்டிய விஷயம்.
மத்திய அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. குதிரையை வண்டியில் பூட்டிவிட்டு கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
Copyright(c) Dinamani
அருணகிரியின் திண்ணைக்கட்டுரை
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
அருணகிரி
"The Islamic mind is where the current battle will be fought, and this is why it will be a long war".
- M.J.AKBAR in "Shades of the Swords"
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு: உடனடி விளைவுகள்
மசூதி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியில் வந்ததும் சவுதி அரசு முதல் வேலையாக வெளியுலகுக்கான எல்லா தகவல் தொடர்பு வசதிகளையும் துண்டித்தது. இது பல தவறான யூகங்களுக்கும் பூசல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமானது.
மெக்கா முற்றுகைக்கு இரு வாரம் முன்புதான் ஈரானில் கொமேனி அரசு அமெரிக்கத்தூதரக மக்களைச் சிறைப்பிடித்திருந்தது. அமெரிக்கர்கள் சவுதியில் இருப்பதற்கும் ஈரான் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அன்றைய அமெரிக்காவிற்கு சவுதி வஹாபிக்களும், சுன்னிக்களும் மிதவாதிகளாக்வும், (ஈரான் சம்பவங்களின் அடிப்படையில்) ஷியாக்களே தீவிரவாத வில்லன்களாகவும் தெரிந்தனர். இந்நிலையில் நட்பு நாடான சவுதி அரசையும் சங்கடத்துக்குள்ளாகும் விதத்தில் அமெரிக்க அரசு தன்னிடமிருந்த அரைகுறைத் தகவ்ல்களின் அடிப்படையில் மெக்கா ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விஷயத்தையும் இதற்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவசரப்பட்டு வெளியிட்டது. ஈரானை தேவையில்லாமல் இதில் தொடர்புபடுத்தியது மட்டுமன்றி அன்றைய கார்ட்டர் அரசு அவசர அவசரமாக அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றை சவுதியை நோக்கி அனுப்பி வைத்தது.
சதாமின் வில்லத்தனத்தை வைத்து பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருந்ததாக வந்த செய்திகளை தயாராக நம்பி ஈராக் படையெடுப்பை நிகழ்த்திய மேற்கின் அதே தராசுதான் அன்று கொமேனி தலைமையிலான ஈரானை எடைபோடவும் உபயோகப்படுத்தப்பட்டது. அமெரிக்க தூதரக ஊழியர்களைச் சிறைவைத்த கொமேனியின் ஈரான் மேற்குலகின் அன்றைய வில்லன். அமெரிக்க நட்பு நாடான சவுதியில் நடந்த மசூதி ஆக்கிரமிப்பையும் கொமேனியின் ஈரானையும் உடனடியாக முடிச்சுப்போடுவதில் அமெரிக்க நட்பு அரசுகளுக்கோ, ஊடகங்களுக்கோ எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை. நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மெக்கா மசூதி இரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இதனை பிரிட்டனும், இஸ்ரேல் அரசும் ஆதரித்தன. இவையனைத்தையும் அன்றைய சோவியத் யூனியன் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. காதும் காதும் வைத்தாற்போல முற்றுகை விஷயத்தை முடிக்க நினைத்த சவுதி அரசுக்கு இது பெரும் எரிச்சலைத் தந்தது. ஈரானின் வில்லத்தனத்தை நம்பத் தயாராக இருந்த மேற்குலகைப் போலவே, அமெரிக்க-இஸ்ரேல் வில்லத்தனத்தை நம்ப மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளும் தயாராகவே இருந்தன. இதனைச் சரியாகக் கணித்திருந்த அயதுல்லா கொமேனி இந்தச் செய்தியை முதலில் வெளியிட்ட அமெரிக்க அரசுதான் இஸ்ரேல் துணையுடன் இந்த ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகித்திருக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட்டு பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான், உலகெங்கும் பற்றிக்கொண்டது ஒரு பெரும் கலவரத் தீ.
பரவிய இஸ்லாமியக் கலவரங்கள்:
பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பத்தொன்பது வயது அமெரிக்க தூதரக பாதுகாப்பு வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் அமெரிக்க தூதரகத்தின் மேல் பறந்து விட்டு அமைதியாக திரும்பிச் சென்று விட்டது. ராணுவமோ போலீஸோ உதவிக்கு வராத நிலையில் அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் இரும்பு அறைக்குள் ஒளிந்து கொள்ள, தூதரகமே கொளுத்தப்பட்டது. பல மணிநேரம் புகையிலும், தகிக்கும் அனலிலும் சூழ்ந்த நிலையில் இரும்பு அறையில் தவித்த தூதரக ஊழியர்கள் இன்னும் சில மணிநேரங்களில் உயிரோடு வெந்து சாகும் நிலையில் இரவு கவிழ்ந்தது; சூறையாடிய களைப்பில் வெறிக் கும்பல் கலைந்து செல்ல, தூதரக ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளி வந்து உயிர் பிழைத்தனர்.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், பங்களாதேஷ் டாக்காவிலும் இந்தியாவிலும் மதவெறிக்கும்பல் கலவரத்தில் இறங்கியது. இந்தியாவில் கல்கத்தாவில் அமெரிக்க அலுவலகம் தாக்கப்பட்டது. கடைகள் நொறுக்கப்பட்டு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. ஆனால் ஹைதராபாத்தில் நடந்த கலவரங்கள் கிலாபத் இயக்கக் கலவரங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்தன.
கண்மூடித்தனமான வஹாபிய வெறுப்பின் உச்சகட்டமாக மக்கா மசூதி ஆக்கிரமிப்ப்ற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்துக்கள்மீது ஹைதராபாதில் கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. வெள்ளிக்கிழமை நமாஸ் முடித்து விட்டு வந்தால் கலவரம் என்ற வகையில் வெள்ளிக்கிழமை கலவரங்கள் ஹைதராபாத்தில் வாடிக்கையாகிப்போனது இந்த கலவரத்திற்குப் பிறகுதான். சுதந்திரத்திற்குப்பின் தடை செய்யப்பட்டு 1957 தடை விலக்கப்பட்ட எம்.ஐ.எம் (Majlis-e-Ittehadul Muslimeen) என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சி இந்தக் கலவரங்களில் முன்னணி வகித்தது. மதக்கலவரங்களைத் தொடர் உரமாக்கி பின்னாளில் இக்கட்சி பெரும் வளர்ச்சி கண்டது (2). இந்த எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத் வந்தபோது அவரை நாற்காலிகளால் தாக்கியது நினைவிருக்கலாம். இதைத்தொடர்ந்து அவருக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல்களால் அவர் ஒளிந்தும், இடம் பல மாறியும், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட்டே வெளியேறி வேற்று நாட்டிலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கொமேனி கொளுத்திப்போட்ட நெருப்பு துருக்கியிலும் பரவியது. வட்டிகனின் அன்றைய புதிய போப் இரண்டாம் ஜான் பால் துருக்கியின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு துருக்கிக்கு வரும் திட்டம் இருந்தது. காபா முற்றுகை பல இஸ்லாமிஸ்டுகளை கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் போப்பின் வருகை இந்த வெறுப்பு நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது போலானது. கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருந்த மெஹ்மத் அலி ஆகா என்பவன் சிறையிலிருந்து தப்பினான். போப்பின் வருகை விலக்கிக்கொள்ளப்படவில்லையெனில், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டான். 18 மாதங்களுக்குப்பின் ரோம் நகரில் போப் இரண்டாம் ஜான் பால் சுடப்பட்டார். மெஹ்மத் அலி ஆகா சுட்ட மூன்று குண்டுகளில் ஒன்று போப்பின் வயிற்றைத் துளைத்து, அவரை சாவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.
இதற்குள் ஜுஹைமான் குறித்த விவரங்களை அறிந்து கொண்ட சவுதி அரேபிய அரசு, மெக்கா முற்றுகையில் ஷியாக்களுக்கோ, வேற்று நாட்டாருக்கோ எந்த பங்குமில்லை என அறிவிக்க பல நாடுகள் பெருமூச்சு விட்டன. ஆனாலும் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்படுவது நின்றபாடில்லை. குவைத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது லிபியாவில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.
அடுத்து: மசூதிப்போர்
(தொடரும்)
arunagiri_123@yahoo.com
Copyright:thinnai.com
அருணகிரியின் திண்ணைக்கட்டுரை
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
அருணகிரி
2
"What Wahab did was leave behind the seedbed of total intolerance in which today's terror masters could plant the young seedlings before turning them into killers."
- From 'The Afgan" by Frederick Forsyth
வஹாபியிசம் வேர்கொண்டது:
சவுதியின் வஹாபிப்படைகள் துருக்கி மன்னனால் வெல்லப்பட்டு சவுதி மன்னன் கொல்லப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளில் துருக்கியின் ஆட்டோமான் பேரரசு தன் அந்திமக்காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. 1902-இல் அல்-சவுத் சந்ததியில் வந்த அப்துல் அசிஸ் சவுதியின் தலைநகரான ரியாத்தை ஒரு கலகத்தின் மூலம் எளிதாகக் கைப்பற்றினார். அதன் பின் பல சிறு போர்கள் மூலம் அப்துல் அசிஸ் சுற்றியிருந்த பல பகுதிகளை வென்று வஹாபி அரசை மீண்டும் நிலைநாட்டினார். பிற மதத்தினருக்கு மட்டுமல்ல, இஸ்லாத்தின் பிற பிரிவினருக்கு முகமன் சொல்வது கூட இவர்களால் மறுக்கப்பட்டது. ஷியாக்கள் அதிகமாக வசித்த சவுதியின் வளைகுடாப்பகுதியை அவர் வென்றபோது, கறுப்புத் தங்கமென எதிர்காலத்தில் அறியப்படப்போகும், மாபெரும் எண்ணெய் வளம் நிரம்பிய பகுதிக்கு அதிபராகியிருப்பதை அப்தல் அசிஸ் அன்று அறியவில்லை.
முதல் உலகப்போருக்குப்பின் துருக்கியில் காலிபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையைப்பயன்படுத்தி சவுதி மன்னர் அப்தல் அசிஸ் ஜோர்டானைக் கைப்பற்ற செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் வஹாபியப் படைகள் மெக்காவிற்கு அருகில் உள்ள தாயெஃப் என்ற இடத்தை கொடூரமாகத் தாக்கினர். நூறாண்டுகளுக்கு முன் காபாலா தாக்குதலில் வஹாபிக்கள் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் - கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழிததுக் கொன்ற கொடூரம் உட்பட- தாயெஃப் நகர அழிப்பிலும் இடம் பெற்றன. 1920-களின் இறுதியில் சவுதி அரேபியா முழுமையும் - இஸ்லாமிய புனித தலங்களான மெக்கா மெதீனா உட்பட- அப்தல் அசிஸின் கீழ் வந்தது. இந்நிலையில், புனித தலங்களுக்கான (ஷியா உள்ளிட்ட) அனைத்து முஸ்லீம்களின் யாத்திரைக்கும் உத்தரவாதம் தர வேண்டிய பொறுப்பும் அவசியமும் இப்போது சவுதி மன்னருக்கு ஏற்பட்டது. மேலும் ஜோர்டான், ஈராக், குவைத் போன்ற பகுதிகள் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்தன. அன்றைய வல்லரசான பிரிட்டனோடு போரைத்தவிர்க்க வேண்டி, அப்தல் அசிஸ் பிற மத்திய கிழக்கு நாடுகளின் மீதான் போரை நிறுத்திக்கொண்டார். ஆனால் அவரது முந்தைய சகாக்களான தீவிர வஹாபிக்கள் இதனை துரோகச்செயலாகக் கண்டு, ஈராக்கைத் தாக்கத் தொடங்கினர். பிரிட்டனின் உதவியுடன் சவுதி மன்னர் இவர்களை அழிக்கலானார். 1929-இல் நடந்த இறுதிப்போரில், இந்த தீவிர வஹாபிக்களின் தலைவனான பிஜாத் சிறைப்பிடிக்கப்பட்டான். அவனோடு போரிட்டு உயிர்பிழைத்த முகமது பின் செய்ஃப் அல் உத்தய்பி என்பவனுக்குப் பிறந்த மகன்தான் பின்னாளில் மக்கா மசூதியைக் கைப்பற்றப்போகும் ஜுஹைமான் அல் உத்தய்பி.
1938-இல் சவுதியின் முதல் எண்ணெய்க்கிணறு அமெரிக்க கம்பெனி அராம்கோவினால் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், கட்டிடக்கலைஞர்கள் என ஏகபட்ட அமெரிக்கர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வஹாபிய மதத்தலைவர்களின் கோபத்தைத் தூண்டியது. இஸ்லாமிய இறையியலில் தேர்ச்சி பெற்ற, மதவாதிகளிடம் செல்வாக்கு மிகுந்த பின் பாஜ் என்ற இஸ்லாமிய மதத்தலைவர் இதனை எதிர்த்து, மக்கா மதீனா மட்டுமல்லாமல் அரேபியா முழுமையுமே இஸ்லாமியரல்லாதோர் காலடி வைக்கக்கூடாத புனித பூமி என்று ஒரு ஃபாட்வாவைப் பிறப்பித்தார். (இன்றும் அல் க்வைதாவும் பின்லாடனும் இதனை அடிப்படையாக வைத்தே சவுதி அரசை எதிர்க்கிறார்கள்).இந்த பின் பாஜ் பிற்காலத்தில் சவுதியின் தலைமை முல்லாவாக உயர்வார். 'பூமி தட்டை வடிவம்தான் என்றும் அதனை மறுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நாத்திகர்கள்' என்றும் இவர் விடுத்த ஃபாட்வா, இவரது பல ஃபாட்வாக்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
எண்ணெய் வளம் குவியக் குவிய மக்கா மசூதி பெருமளவில் விரிவுபடுத்தப்படத்தொடங்கியது. மக்கா மசூதி விரிவாக்கத்தில் கட்டிடக் காண்ட்ராக்டரான முஹமது பின் லாடன் பெரும்பங்கு வகித்தார். மதத்தலைவர் பின் பாஜ் அவர்களின் செல்வாக்கும் அதிகரித்தது. பின்பாஜின் மதக்கல்லூரியில் கார்ப்போரலாக உயர்ந்த ஜுஹைமான் பின்பாஜுக்கு அறிமுகமானவனாகவே இருந்தான். இப்படி இந்த இஸ்லாமியக்கல்லூரியில் வஹாபிக் கல்வி பெற வந்த ஒருவன்தான், மெக்கா ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகிக்கப்போகும் முஹம்மது அப்துல்லா. ஜுஹைமான் முஹம்மது அப்துல்லாவிடம் இஸ்லாமிய மாஹ்டிக்கான பல குணாம்சங்கள் பொருந்தி வருவதைக்கண்டான். (இஸ்லாத்தின் மாஹ்டி இறையியல் குறித்து பின் குறிப்புகளில் மேலதிக விவரங்கள் உள்ளன). தன்னைப்போலவே முஹம்மது அப்துல்லாவும் சவுதி அரசின் மீது அதிருப்தி கொண்டிருந்தது ஜுஹைமானுக்கு வசதியாகிப் போனது. மெக்கா மசூதியைக் கைப்பற்றும் திட்டத்தில் முஹம்மது அப்துல்லா மாஹ்டியாக ஒரு முக்கிய அம்சமாக ஆனான். ஜுஹைமானும் முஹம்மது அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்களாயினர். ஜுஹைமான் தன் முதல் மனைவியை விவாக ரத்து செய்து விட்டு முஹம்மது அப்துல்லாவின் சகோதரியை மணந்து கொண்டான்.
எகிப்தில் நாசர் பதவிக்கு வந்ததும் அராபிய நிலப்பரப்பில் வாழ்ந்த அனைவரையும் (முஸ்லீம் அல்லாதவரையும் சேர்த்து) அராபிய தேசியவாதம் என்ற பெயரில் மதச்சார்பற்ற அணியில் திரட்ட முற்பட்டார். இது மதவாத சவுதியை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே இதற்கு எதிராக உலகளாவிய இஸ்லாமிய உம்மா உருவாக்கப்பட வேண்டும் என்று சவுதி அரசு பிரசாரிக்கத் தொடங்கியது. பெருகி வரும் எண்ணெய்ப்பணமானது, பல இஸ்லாமிய நாடுகளிலும் உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லைதாண்டிய இஸ்லாமிய மதவாதத்தை வளர்க்க வாரியிறைக்கப்பட்டது. மத்திய கிழக்கில் மத அடிப்படைவாதம் குறைந்திருந்த நாடுகளை எதிர்க்க அன்று உருவான முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்ற அமைப்பு எகிப்திலும் சிரியாவிலும் தடை செய்யப்பட, சவுதி மன்னர் ஃபய்ஸல் (King Faizal) இந்த அமைப்புக்கு அடைக்கலம் தந்தது மட்டுமன்றி இவர்களை சவுதியின் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பெரும் சம்பளத்தில் வேலைக்கும் அமர்த்தினார். இதில் படித்த பல மாணவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகளாக பிற்காலத்தில் உருவெடுத்தனர். அப்படி அங்கு படித்த ஒருவன்தான் சவுதி கட்டிட காண்ட்ராக்டர் முகமது பின் லாடனின் மகனான ஒஸாமா பின் லாடன்.
சவுதி மன்னர் ஃபய்சல் சவுதியில் பல மாற்றங்களைக் கொணர்ந்தார். 1962-இல் அடிமை முறையை சட்ட விரோதமாக்கினார். 1963-இல், பெண் கல்வியை அனுமதித்தார். இச்செயல்கள் பிற்போக்கு மதவாதத் தலைவர்களிடம் அதிருப்தியை படிப்படியாக அதிகரிக்கச் செய்தது. 1965-இல் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது சவுதியில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. தொலைக்காட்சியில் மனித பிம்பங்கள் தெரிவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் தொலைக்காட்சி சைத்தானின் வடிவம் என்றும் மதவாதிகள் தெருக் கலவரத்தில் இறங்கினர். மன்னரின் உறவினரே பங்கெடுத்த இந்தக்கிளர்ச்சி கடுமையாக அடக்கப்பட்டு அந்த உறவினர் கொல்லப்பட்டார். 10 வருடம் கழித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் இறந்தவரின் சகோதரனால் மன்னர் ஃபைசல் படுகொலை செய்யப்பட்டார்.
உள்ளுறை முரண்கள்:
இந்த இடத்தில் சவுதி அரேபியாவின் உள்ளுறை முரண்பாடுகளைக் கவனிக்கலாம்.
1. சவுதி அரசுக்கான அங்கீகாரமும் சவுதி மீதான அல்-சவுத் பரம்பரையினரின் மேலாண்மையும் மக்கா மதீனா ஆகிய புனித தலங்களின் காப்பாளர்களாவதற்கு ஏற்றவர்கள் இவர்கள் என்ற அடிப்படையில் வந்ததாகும்.
2. இந்த புனித தலங்கங்களை நிர்வாகம் செய்யும் உரிமையை அல்-சவுத் பரம்பரையினர் பெற்றது, இவர்கள் முன் வைத்த தீவிர வஹாபிய அடிப்படைவாதத்தின் மூலம். (அல்-சவுத் பரம்பரை அப்தெல் வஹாபின் அடிப்படைவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க). .
3. ஆக, இஸ்லாமிய அடிப்படையிலிருந்து விலகுவது என்பது அல்-சவுத் மன்னர் பரம்பரைக்கு மெக்கா மெதீனா உள்ளிட்ட (எண்ணெய் வளம் கொழிக்கும்) நிலப்பகுதியை ஆளும் உரிமையை இழப்பதற்கு ஒப்பாகும்.
4. ஆட்சியைத் தக்கவைக்க முல்லாக்கள், மதத்தலைமைகள் ஆகியோரின் அங்கீகாரம் சவுதி மன்னர் பரம்பரைக்கு அத்தியாவசியமான ஒன்று.
5. எனவே வஹாபிய இஸ்லாத்தின் அடிப்படைவாதம், அல்-சவுத் பரம்பரையினரின் ஆட்சி, இந்த ஆட்சிக்கு முல்லாக்களின் அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகி, ஒன்றுக்கொன்று உரமாகி வளர்ந்திருக்கின்றன.
6. சவுதியின் எண்ணெய் வளத்திற்கு நவீன கல்வியறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மிக அவசியம். ஆனால் நவீன அறிவியல் கூறுகள் பல இஸ்லாத்துக்கு எதிராக வேறு இருப்பதால் மதத்தலைமை இவற்றை அங்கீகரிக்க முடியாது (கவனிக்க: தலைமை முல்லா பின் பாஜின் பூமி தட்டை வடிவம் என்கிற ஃபாட்வா). நவீன உயர்கல்வியறிவோ ஆராய்ச்சியறிவோ தொழிற்கல்வியறிவோ சவுதி அரேபியரிடம் பரவச்செய்யும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற நிலையில் இதற்கு மேற்கு நாடுகளையும், இந்தியா போன்ற நாடுகளையும் சவுதி அரேபியா சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை அறிவுத்துறைகள் மட்டுமன்றி திறன் உழைப்பு (skilled labor), உடல் உழைப்பு (manual labor) என பல துறைகளுக்கும் விரிந்தது. பொருளாதார வளர்ச்சியில் அவசியமாகிப்போன பல தொழிலாளிகளை (கட்டிடத் தொழிலாளி, தாதிகள் , காரோட்டுனர் இத்யாதி) பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை சவுதிக்கு ஏற்பட்டது.
7. இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள் என்றாலும், இவர்கள் எல்லோரும் வஹாபிக்களோ சுன்னிக்களோ இல்லை. இது மட்டுமல்லாமல், காஃபிர்களான இந்துக்களின் பங்களிப்பும்கூட - அன்றாட வேலைகளில் மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்பம், கருவியியல் துறை, மின்னணுவியல் போன்ற அறிவுத்துறைகளிலும் அதிகம் தேவைப்பட்டது. ஆக, "வழி தவறிய" வழிபாட்டாளர்களும் , காஃபிர்களும் இல்லாது தமது ஒரே இறைவன் அளித்த எண்ணெய்ச் செல்வத்தைக்கூடத் துய்க்க முடியாது என்ற இக்கட்டான முரண் நிலை சவுதியின் மதவாத அரசுக்கு உண்டாகிப் போனது.
8. இந்த முரண்பாட்டை சவுதியின் முல்லாக்கள் மிகச்சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். முஸ்லீம் அல்லாத பிற மக்களால் "களங்கப்படும்" புனித நிலத்தை சவுதி மன்னர் தொடர்ந்து அரசாள வஹாபிய மதத்தலைமையின் ஆசீர்வாதம் தேவையாக இருந்தது. சவுதி அரசுக்கு தமது ஆசீர்வாதம் தொடர, மன்னருக்கு சமமாக அமர்ந்து பேசும் அளவுக்கு தலைமை முல்லாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு சக்தி வாய்ந்ததொரு அதிகார பீடமாக வஹாபியத் தலைமை உருவெடுத்தது. எண்ணெய்ப்பணத்தைக் கொண்டு இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு வஹாபிய அடிப்படைவாதமும் பிறமதக் காழ்ப்பும் ஒருங்கே கலந்து ஊட்டப்பட்டன. இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மதவாதிகளுக்கும் பெருமளவு முக்கியத்துவமும் அதிகார பலமும் பண பலமும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒருங்கே தந்தன.
9. அன்றைய பனிப்போர் யதார்த்தத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் கம்யுனிச சோவியத்திற்கு எதிராகவும் ஜிஹாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக சவுதியின் இஸ்லாமிய பல்கலைகள் வடிவெடுத்தன. அமெரிக்காவிற்கு அன்று இவை எதிர்க்கப்பட வேண்டியவைகளாகத் தோன்றாதது மட்டுமல்ல- சோவியத்தின் ஆதிக்கப்பரவலுக்கு எதிரான அவசிய அரணாகவும் தெரிந்தது.
10. வஹாபிய அடிப்படைவாதம் மூலம் சவுதி அரசைக் கட்டமைத்த அல்-சவுத் பரம்பரை; சவுதியின் எண்ணெய் வளத்திற்குத் தேவைப்படுகின்ற - ஆனால் "இஸ்லாத்திற்கு எதிரான" - சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டிய சவுதி அரசின் நிலை; இவ்வாறு செயலாற்றும் அரசுக்கு அங்கீகாரம் தர அடிப்படைவாத முல்லாக்களின் ஆதரவு; அந்த ஆதரவை நிலைநிறுத்த வேண்டி வஹாபிய அடிப்படைவாத கல்விப் பரவலுக்கு எண்ணெய்ப்பணத்தை வாரியிறைக்கும் சவுதி அரசு - இப்படியாக பல முரண்பட்ட கூறுகள் ஒன்றோடொன்று சார்ந்த ஒட்டுண்ணிகளாய் வெகு விரைவாக சவுதியில் வளர்ந்து கொண்டு வந்தன.
நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன. ஆனால் சவுதி போன்ற இறுக்கமான கட்டமைப்புகளிலோ இத்தகைய உள்ளுறை முரண்பாடுகள் பெரும் விரிசல்களாகி சமூகத்தையே உடைத்துப் போடுகின்றன. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்ட கால கட்டத்தில் சவுதியின் அடிப்படைவாத சமூக அமைப்பில் ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் பல விரிசல்களை உருவாக்கி தவிர்க்க முடியாத ஒரு பெரும் உடைப்பை நோக்கி சவுதி சமூகத்தை இட்டுச் சென்று கொண்டிருந்தன. இதனை விரைவுபடுத்தும் விதமாக இஸ்லாமிய வருடம் 1400 முஹர்ரத்தின் முதல் நாளன்று - 1979 நவம்பர் 20ஆம் தேதி- ஜுஹைமான் உத்தய்பி மெக்கா மசூதிக்குள் தன் படையுடன் ரகசியமாகப் புகுந்து அதனைக் கைப்பற்றினான்.
அடுத்து: உடனடி விளைவுகள்
(தொடரும்)
Friday, 19 September 2008
அழையாத வீட்டுக்குள் எதுவோ நுளைந்தமாதிரி
என்னுடைய இந்த வலைப்பக்கம் நான் படித்தவற்றில் பிடித்த பதிவுகளையும் கட்டுரைகளையும் சேமித்துவைக்கும் ஒரு அந்தரங்க குறிப்பேடு போன்றே பயன்படுத்திவருகிறேன். முறையான ஒப்புதலின்றி பிறரது கட்டுரைகளை, மீள்பதிவுசெய்து பிரசுரம் செய்வதும், வியாபார நோக்கத்துக்காக பயன்படுதுவதும், விவாதத்துக்கு உட்படுத்துவதும் நாணயமற்ற செயல் மட்டுமல்ல... சட்டப்படி விரோதமான செயலும் கூட.
இதனாலேயே எனது வலைப்பக்கங்களை தமிழ்மணம் போன்ற வலைத்திரட்டிகளில் பதிவுசெய்யாதிருக்கிறேன்.
அவ்வப்போது எனது எண்ணங்களையும் (தமிழில் எழுதும் திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டும், முகமதியத்தின்மேல் கொண்டுள்ள அவநம்பிக்கையின் பொருட்டும்) ஒருசில பதிவுகளை எழுதிவருகிறேன்.
இவையனைத்தும் எனது உணர்வுகளுக்கு வடிகாலாகவே. இனைய வாசகர்கள், நண்பர்கள் என்று விளித்து எழுதுவதும் ஒரு கற்பனையே. யார் நோக்கியும், அல்லது, யாருடைய விவாதத்தையும் கருத்துக்களையும் எதிர் நோக்கியும் எழுதப்படவில்லை.(எனக்குத்தெரியாதா நேசக்குமார் போன்றோர் பட்ட கஷ்டங்கள். )
இன்நிலையில், ஒருசில முகமதியர்கள் அவ்வப்போது தங்களுக்கே உரித்தான பாணியில் மிரட்டியும் உருட்டியும் கருத்துக்களை பதிந்து (வாந்தியெடுத்துவிட்டு) போவதுண்டு. அழையா வீட்டுக்குள் இனியும் நுளையாதிருப்பது நல்லது. இல்லையேல், மடியில் குண்டை கட்டிக்கொண்டு ஜிகாத் தொடுக்கவேண்டியிருக்கும் ஜாக்கிரதை(?!!!...)
தற்போதுதான் Comments Moderation செய்திருக்கிறேன். இதற்கு முன்னால் பதியப்பட்ட Comments ஐ நீக்க வழி தெரியாததால் அந்த பதிவு முழுவதையும் நீக்கிவிட்டு நீங்கலான பதிவைமட்டும் கீழே...
*********************
Wednesday, 10 September, 2008
புத்திகெட்ட ஹிந்துக்களும் புத்திசாலி முகமதியர்களும்
இவ்வார திண்ணையில் பிறைநதிபுரத்தானின் "காஷ்மீர் நிலவரம் - புத்தியே வராதா?" என்னும் கட்டுரை(?!) கண்டேன். "நகைச்சுவையும் வித்தியாசமானவையும்" பகுதியில் வரவேண்டியது தவறுதலாக "அரசியலும் சமூகமும்" பகுதியில் வந்துவிட்டது... திண்ணை சார்பாக வாசகர்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன் !!!
இந்தியா தோன்றுவதற்கு முன்பாகவே காஷ்மீரிகளின் "வீரமிக்க விடுதலைப்போராட்டங்கள்" தோன்றிவிட்டது என்று ஆரம்பித்து கட்டுரை (?!) நெடுகிலும் நகைச்சுவையை அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் நடப்பது பிரிவினைவாதமே அன்றி வேறில்லை ... இதுகுறித்து ஆயிரத்தெட்டு கட்டுரைகள் வந்தாயிற்று... திண்ணையிலே தேடினால் நிறைய கிடைக்கும். பிரிவினைவாதம் என்பதே தவறு. மீண்டுமொருமுறை பாரதத்தை துண்டாடி, பிரித்தெடுத்த பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் அனைவரையும் அழித்துவிட்டு/விரட்டிவிட்டு, முகமதிய நாடான பாகிஸ்தானுடன் இணைத்துவிடவேண்டுமென்பதே அனைத்து முகமதியரின் விருப்பம்.
இதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளமுடியாத இந்த முகமதிய கூட்டம் "விடுதலைப்போராட்டம்" அது இது என்று எழுதுகிறது."காஷ்மீரிகள் என்றுமே பாகிஸ்தானுடன் ஒருபோதும் இணைத்து பார்த்ததே இல்லை" என்று எழுதுவதெல்லாம் அப்பட்டமான பொய். காஷ்மீரிய முகமதியர் பலர் பாகிஸ்தானின் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு நாங்கள் பாகிஸ்தானியரே என்று நடுதெருவில் நின்று கூப்பாடு போடுவது இன்றும் நடந்துகொண்டுதானிருக்கிறது. எத்தனை மதரஸாக்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுகிறதோ ?
காஷ்மீர் பிரச்சனைக்கு மூல கர்த்தாவாக ஜவகர்லால் நேருவை குறிப்பிட்டு "காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தன்னுடைய பூர்வீக பூமியான இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார்" என்று எழுதியிருக்கிறது. காரணம் இதுமட்டுமல்ல... "சுயநிர்ணய" விஷயத்தில் நேரு செய்த அரசியல் குளறுபடிகளே முக்கிய காரணம். பிரிவினை வாதத்தை அப்போதே இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்....காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை முழுவதுவாக அனுபவித்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களைக் கொன்று/விரட்டி விட்டு, தாங்கள் அடக்கி ஒடுக்கப்படுவாதாக கூச்சலிடும் இந்த கும்பலை என்ன சொல்ல...காஷ்மீரிகளின் பெரும்பான்மை குறந்துவிடும் என்று அறிந்திருப்பதால் அன்னியர்களுக்கு தங்களது மண்ணில் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த ரீதியில்தான் அமர்னாத் கோவில் நிலம் ஒதுக்கப்பட்டதை காஷ்மீரிகள் பார்க்கிறார்கள் என்ற வாதம் சரியான நகைச்சுவைதான்.
முகமதியர்கள் குடியேறி, ஹிந்துக்கள் விரட்டப்பட்டு, முகமதியர்கள் பெரும்பான்மையான வரலாறுதான் அதிகம். பெரும்பான்மை கிடைத்ததும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் விடுதலைப்போராட்டம் வெடிக்கும்."கடந்த 60 வருடங்களாக, காஷ்மீரிகளின் முன்னேற்றத்திற்கு, இந்திய அரசு நியாயமான பங்களிப்பை செய்யவில்லை" என்று எப்படிதான் கைகூசாமல் எழுத மனம் வருகிறதோ ?. ஏழை இந்தியனின் வரிப்பணத்தைத்தின்று வயிறு வளர்க்கும் இன்த ஜென்மங்கள் செய்வது அப்பட்டமான தேச துரோகமே.
இறுதியாக, பாரதம் மீண்டும் சமஸ்தானங்களாக சிதறுண்டு போகவேண்டும் என்ற தனது ஆசையயும் வெளிப்படுத்தி தன்து மத அரிப்பையும் காட்டிக்கொண்டுள்ளது இந்த ஜென்மம்...அந்த கட்டுரை கீழே.
************************
Thursday September 4, 2008காஷ்மீர் நிலவரம் - புத்தியே வராதா?
பிறைநதிபுரத்தான்கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை - பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய இந்து - முஸ்லிம்களிடையே பிரிவினையை வளர்க்க, காஷ்மீரிகளின் போராட்டத்தை இந்திய முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, அவர்களையும் தேசதுரோகிகளாக சித்தரித்து வருகின்றனர் சிலர்.
ஹிந்துத்வ இயக்கங்களும், இந்தியாவும் தோன்றுவதற்கு முன்பே காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது என்கிறது வரலாறு, டோக்ரா மஹாராஜாவின் ஆடம்பர-அடக்குமுறை வாழ்க்கை, அவரின் மத ரீதியான பாரபடச ஆட்சிமுறையால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மை காஷ்மீரி முஸ்லிம்களே. அரசு வேலைகளுக்கு அவர்களை அனுமதிக்கவில்லை, சொந்த நிலம் வைத்துக் கொள்வதிலிருந்து தடுக்கப்படனர், முஸ்லிம் உழவர்களுக்கும், தொழிற்சாலை பணியாளர்களுக்கும் - இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட வரியை விட மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டது. அதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடங் காய்ச்சிகளாகவே வாழ்ந்து வந்தனர். அதே சமயத்தில், அரசரின் ஆதரவோடு தொழில் துறை, வணிகம் மற்றும் வங்கித் தொழில் ஆகிய லாபம் தரும் தொழில்களை சிறுபானமை பஞ்சாபிகள் மற்றும் டோக்ரா இந்துக்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினர்.
மன்னரின் அடக்குமுறை-அத்துமீறல்-பாரபடசத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் 1931-ல் தங்களின் குறைகளை முன்வைத்து கலகம் செய்தனர். அரசரின் செல்லப்பிள்ளைகளாக விள்ங்கிய காஷ்மீர் பண்டிட்களும் - டோக்ரா ஹிந்துக்களும் மன்னருக்கு ஆதரவாக அக் கலகத்தை எதிர்த்தனர்.
பிரிட்டிஷாரின் ஆதரவுடன் இரும்புக்கரம் கொண்டு காஷ்மீரி முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் மன்னர் ஹரிசிங்கால் நசுக்கப்பட்டது. கிளர்ச்சியை தொடர்ந்து உஷாரான மன்னர், Glancy Commission அமைத்து காஷ்மீர் முஸ்லிம்களின் ‘குறைகளை கண்டறிய ஆவண செய்ததை சுயநலவாத காஷ்மீர் பண்டிட்கள் தீவிரமாக எதிர்த்தனர். இதனால் வெகுண்டெழுந்த பெரும்பான்மை காஷ்மீரிகள், தங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கிய மன்னரை- 'மூட்டை கட்டி' அனுப்புவதற்காக, 'காஷ்மீர் சிங்கம்' என்று பின்னாளில் அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் 1932-ல், 'ஜம்மு கஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி' தொடங்கினர். காஷ்மீரிளின் முக்கிய கோரிக்கைகளான அரசு பணியில் மற்றும் இரானுவத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, நில வரி குறைப்பு, போன்றவைகளை முன்வைத்தனர்.1938-ல் தேசிய மாநாட்டு கட்சி என்ற பெயர்மாற்றத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு, காஷ்மீரிகளின் அடிப்படை தேவைகளை-உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கைகளின் முன்வரைவை உருவாக்குவதில் ஜாதி மதம் பாராது அனைத்து காஷ்மீரிகளின் பிரதிநிதிகளும் ஈடுபட்டனர். இந்த முயற்சியை, சுதந்திரத்திற்கு பிறகு உருவாகப்பொகும் ‘நயா காஷ்மீருக்கான முன்னோட்டமாக அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் - மன்னர் ஹரிசிங்கால் நிராகரிக்கப்பட்டு, இம்முயற்சியை முன்னெடுத்து சென்ற ஷேக் அப்துல்லாவும் அவரின் சகாக்காளும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து ஆயிரக்கணக்கான் காஷ்மீரிகள் சிறைச் சென்றார்கள். - இந்த நிகழ்வுகள், காஷ்மீரிகள் தங்களை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ ஒருபோதும் இணைத்து பார்த்ததே இல்லை என்பதையே மிகத் தெளிவாக்குகிறது, மன்னராட்சி காலத்திலேயே காஷ்மீரிகளிடம் இருந்த் சுதந்திர உணர்வை மறைத்து, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எழுந்ததாக கூறுவது இந்துத்வவாதிகள் கூறுவது இன்னுமொரு அப்பட்டமான பொய்.காஷ்மீரிகளின் வீரமிக்க போராட்டம், சுயநலமிக்க அரசர் மூலம் - இந்திய ஹிந்துத்வ சார்பு அரசியல்வாதிகள், சுயநலமிக்க காஷ்மீர் அரசியவாதிகளின் உதவியோடு திரிககப்பட்டது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். தனித்திருக்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமை (முஸ்லிம்) பிரிவினைவாதியாக சித்தரிக்கும் ஹிந்துத்வ சக்திகள், நிஜாமைப்போலவே தனித்திருக்க விரும்பிய காஷ்மீரின் உயர் சாதி இந்து ஹரி சிங் பற்றி வாயை திறப்பதே இல்லையே அது ஏன்?.1947 -ல் இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீரை ‘சனி' வேறு ரூபத்தில் பிடித்து கொண்டது.
சுதந்திரத்தை தொடர்ந்து மதக்கலவரத்தின் தாக்கம் காஷ்மீரிலும் பரவியது. மன்னருக்கெதிராக அங்கு கலவரம் வெடித்தது. காஷ்மீர் பிரச்சனைக்கு மூல கர்த்தாவாக இருவரை கூறலாம். முதலமவர் காஷ்மீர் மன்னர ஹரி சிங், இரண்டாமவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேரு. இந்து அரசனான ஹரி சிங் தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால், அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் (முஸ்லிம்களுக்கு அரசு பணி அப்பொழுதிலிருந்தே அம்பேல்) பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டால், பதவி-பவிசு போய்விடுமே என்று அதை எதிர்த்தனர் அதனால் காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்ற நிலைப்பாடை எடுத்தனர். ஹரி சிங் இவ்வாறு முடிவு எடுப்பதை காலவரையற்று ஒத்திப்போட்டது பாகிஸ்தான் கைக்கூலிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காரணமாயிற்று..
இரண்டாமவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேருவைக் கூறலாம். நேரு தன்னுடைய பூர்வீக பூமியான இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த இருவரின் தனிபட்ட விருப்பையும்-வெறுப்பையும் அடைப்படையாகக்கொண்டு இயங்கிய இந்திய அரசுகளும் மற்றும் இந்துத்வ சார்பு சக்திகளும்தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணமாக அமைந்து - இன்று காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்திருக்கிறது.
பெரும்பான்மை காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு முரனாக அதை ஆக்ரமித்தது பாகிஸ்தான் மட்டுமல்ல, ந்மது இந்தியாவும்தான், ஆனால் இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டதன் விளைவாக காஷ்மீரின் பின்னணி தெரியாத நமது இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் 'ஆக்ரமிப்பு' சக்திகளை எதிர்த்து காஷ்மீரிகள் நடத்தும் விடுதலை போராட்டம் பிரிவினைவாத போராட்டாமாக தெரிகிறது. காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது காஷ்மீர் மக்களால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல அது இந்திய, பாகிஸ்தானிய, ஆக்ரமிப்பு சக்திகளால் வலிந்து திணிக்கப்பட்டது.காஷ்மீர் பெரும்பான்மையான இஸ்லாமியர்களை கொண்டிருந்தாலும், அதன் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என இந்தியா வாதிடுகிறது. ஆனால், பாக்கிஸ்தானோ, இந்திய பிரிவினையின் பொழுது, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை (80%) உள்ளடக்கிய காஷ்மீரை இந்தியாவுடன் மன்னர் இணைத்தது தவறு, அதனால் காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது.
இந்த பிரச்சினை சம்பந்தமாக, 1948 -ல், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது சுதந்திர நாடாக இயங்குவதா என்று சுயமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற தீர்மானம் இரண்டு நாடுகளாலும் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1951 ல் நடைப்பெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி இந்தியாவுடன் இணைவதாக அறிவித்தது, அதற்கு உபகாரமாக, இந்திய அரசு 1954ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கியது. அன்றிலிருந்து, இந்தியா காஷ்மீரில் ‘பொம்மை' அரசுகளை நிறுவி ஆக்ரமித்து வருவதுபோலவே, பாகிஸ்தானும் தான் ஆக்ரமித்த பகுதிக்கு ‘சுதந்திர காஷ்மீர்' என்று பெயரிட்டு தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது, உண்மை நிலைமை இவ்வாறிருக்க, காஷ்மீரை ஆக்ரமித்ததாக இந்தியா - பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் குற்றம்சாட்டி காலம் கழித்தே, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை போட்டி போட்டுக்கொண்டு இரண்டு நாடுகளும் குழி தோண்டி புதைத்து விட்டது, காஷ்மீரிகளை பொறுத்தவரை தங்களது தாய் மண்ணை, இந்திய ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் - பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் என்றே அழைக்கின்றனர்.அரசியல்வாதிகளின் சுயநலன் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவைக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான். அந்தப்பிரிவின் மூல கொடுக்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றாக - திட்டமிட்டு பறிக்கப்பட்டு, காஷ்மீர் அரசை இந்தியா கலைக்காலாம் என்ற சட்டமும் 1964-65 ல் இயற்றப்பட்டுவிட்டது.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிகளின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகாமல் கவனமாக பார்த்துக்கொண்டது இந்திய ஹிந்துத்வா கும்பல்தான். காஷ்மீரிகளின் தனித்தன்மையை பாதுகாக்க வகை செய்யும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. மேலும், காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படுத்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது என்று தவறான தகவல்களை தந்து குழப்பியோதோடு மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலமும் காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களை பயமுறுத்தி வரும் சுயநலவாத சுயம்சேவக் கும்பலுக்கு உறுதுனையாக இருந்து வந்தது இந்திய அரசு..370வது சட்டம் அளித்த சலுகைகளில் எஞ்சியிருப்பது, இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் குடியேறுவது மற்றும் நிலம் வாங்குவது தடுக்கப்பட்டிருப்பதுதான். பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற நியாயமான அச்சம் காஷ்மீரிகளில் பலருக்கும் உண்டு. அது மட்டுமல்லாது,. விடுதலையை முன்னெடுக்கும் இனங்களின் பெரும்பான்மையை குறைக்க கீழ்த்தரமான முறையில், ஏதாவது சாக்கு-போக்கு சொல்லி, ஆதிக்க-அதிகார மையங்கள் முன்வைத்த இலங்கை, பாலஸ்தீன குடியேற்றத்தைப்பற்றியும் காஷ்மீரிகள் அறிந்திருப்பதால் அன்னியர்களுக்கு தங்களது மண்ணில் இடம் கொடு'க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
காஷ்மீரிகளின் தனித்தன்மையை அழிக்க இந்திய இந்துத்வ கும்பலின் ஒரு 'தொ(ல்)லைநோக்குள்ள' மறைமுகமான முயற்சியாகவே - அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை காஷ்மீரிகள் பார்க்கிறார்கள். உருகும் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கொடுக்கப்படும் இடத்தில் நிர்வகிப்பவர்கள் என்ற போர்வையில், சங்பரிவாரிகளை, காஷ்மீர் மண்ணில் குடியேற்றம் செய்யும் வாய்ப்பிருப்பதாக காஷ்மீரிகள் அஞ்சுகிறார்கள். காஷ்மீரிகளின் அச்சத்தை மேலும் பற்றியெரிய வைத்தவர் ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி அருண்குமார், ‘நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது' என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்து. தங்களின் சந்தேகம் சரியானது என அவர்களை போராட்டத்தில் குதிகக வைத்தது.1950லிருந்து, காஷ்மீரிகளின் அடையாளத்தை அழித்து, அவர்களை சிறுபான்மையாக்க, இந்திய இந்துத்வ கும்பலின் கைப்பாவையாக செயல்பட்ட கவர்னர்கள், காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பத்திற்கெதிராக திணிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் ஆளுநரை அதன் சட்டமன்றம் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்ட வழிகாட்டலை மீறி முன்னாள் பிரதமர் நேரு, அப்துல்லாவை நிர்ப்பந்தித்து, எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசான, கரண் சிங்கை கவர்னராக்கினார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ்மிர் அரசு இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அடங்க மறுத்தபோதெல்லாம் கலைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையையும் கிள்ளிவிட்டு - தொட்டிலையும் ஆட்டுவதுபோல, காஷ்மீரிகளை உணர்வுகளை தூண்டி - அடக்குமுறைகளை ஏவி, காஷ்மீரி சூஃபிககளின் மனதில் மத அடிப்படையிலான எண்ணம் வளர்க்கப்பட்டது.
கடந்த 60 வருடங்களாக, காஷ்மீரிகளின் முன்னேற்றத்திற்கு, இந்திய அரசு நியாயமான பங்களிப்பை செய்யவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்களை செல்வு செய்து - ஆறு காஷ்மீரிக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரானுவத்தை மட்டும் குவித்து, காஷ்மீரின் முன்னாள் மன்னர் ஹரி சிங்கை போல, முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது இந்தியா. பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களை 'முஸ்லிம்கள்' என்ற ஒரே காரணத்திற்காக அரசு பணிகளில் திட்டமிட்டு புறக்கணித்து, உயர் சாதி ஹிந்துக்களுக்கு மட்டும் வழங்கி - சொந்த மண்ணிலேயே அவர்களை அனாதைகளாக ஆக்கியிருக்கிறது இந்தியா. ஒதுக்கல் காரணமாகத்தான் சிலர் பாகிஸ்தானின் ‘கைக்கூலிகளாக' மாறினர் என்பதை இந்தியா இன்னும் உணராமல் உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன இந்திய ஹிந்துத்வ அமைப்புக்களும்.இந்திய இரானுவமும் - போலிசும் நடத்திய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டது காஷ்மீர் முஸ்லிம்கள்தான், இந்திய அரசாங்கத்திற்கும் - பாகிஸ்தான் ஆதரவு, பயங்கரவாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் படுகொலைகள் செய்யப்பட்டது காஷ்மீர் முஸ்லிம்கள்தான், பதவி உயர்வுக்காக தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு இரானுவ-போலீஸ் அதிகாரிகளால் போலி என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக்கட்டப்பட்டதும் காஷ்மீர் முஸ்லிம்கள்கள்தான், காணாமல் போய்விட்டதாக கணக்கு எழுதிவிட்டு - கதை முடிக்கப்பட்டதும் காஷ்மீர் முஸ்லிம்கள்தான், உண்மை இவ்வாறிருக்க பிரச்சினையை திசை திருப்பும் விதமாக 'ஜம்மு' வில் வசிக்கும் உயர்சாதி இந்துக்கள் பாதிக்கப்பட்டதாக மதவாத சக்திகள் மிகைப்படுத்தி அவதூறு செய்கின்றன,வகுப்பு வாதத்தை வளர்த்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியவது மதவாத சக்திகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, அமர்நாத் நில ஒதுக்கீடு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி வருவதோடு. காஷ்மீரிகளின் பொருளாதரத்தை நசுக்கி - 'ஹிந்துஸ்தானத்தின்' வழிக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணம்தான் காஷ்மீரிகளை - பல ‘ஸ்தான்களாக' சிதறப்பொகும், பாக்கிஸ்தானை நோக்கி மீண்டும் திருப்பியிருக்கிறது. இந்த சுழ்நிலையை சாதகமாக்கி, காஷ்மீரில் தனது கொடியை பறக்க விட பாகிஸ்தான் முயல்வது முட்டாள்தனம். மதத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட அதன் பிடியிலிருந்து - மொழி அடிப்படையில் போராடி, சுதந்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் நிகழ்விலிருந்து புத்தி கற்றுக்கொள்ள மறந்துவிட்டதையே இது காட்டுகிறது. அகண்ட பாரதம் அமைக்க - இந்தியாவை 'ஹிந்துஸ்தானாக்க' விரும்பும் மதவாத சக்திகளும், பல் இன மொழி வேறுபாடுகளைக் கொண்ட மக்களை - மதத்தை மட்டும் கொண்டு இணைக்க இயலாது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.காஷ்மீரிகள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் - புறக்கணித்து பணிய வைக்கலாம் என்ற ஹிந்துத்வ சிந்தனையோடு இந்திய அரசு முயற்சித்ததன் விளைவுதான் இந்தியா - இன்று காஷ்மீரிகளிடமிருந்து இன்று அன்னியப்பட்டு கிடக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு நமது நாடு சுமூக தீர்வு விரும்பினால், அதை இந்தியாவாக அனுகினால் மட்டுமே வாய்ப்புள்ளது - அதை விட்டு வகுப்புவாதக் கும்பல் கூப்பாடு போடுவதுபோல் ‘ஹிந்துஸ்தானாக' அனுகினால், காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் மற்றப் பகுதிகளும் மீண்டும் சமஸ்தானங்களாக சிதறுவதை எத்தனை 'இரும்பு மனிதர்கள்' வந்தாலும் தடுக்க முடியாது.
Demystifying Kashmir (2006) by Navnita Chadha Behera,http://en.wikipedia.org/wiki/History_of_the_Kashmir_conflict
http://news.bbc.co.uk/2/hi/south_asia/2739993.stm
http://www.kalachuvadu.com/issue-92/page14.asphttp://
www.un.org/Depts/dpko/missions/unmogip/background.html
http://www.kashmirobserver.com/
http://blog.tamilsasi.com/2008/08/kashmir-independence-amarnath.html
*** Copyright:thinnai.com ***
Wednesday, 17 September 2008
டெல்லியில் முகமதிய பயங்கரவாதம்: ஒரு தாமதமான பதிவு...
ஆனாலும் இந்த முகமதிய பயங்கரவாதிகளுக்கு மத/இன பற்று அதிகம்தான். முகமதியன்கள் யாரும் செத்துவிடாதவாறு, அவர்கள் ரம்ஜான் நோன்பை முடிக்கிற நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஜிகாதிகள் பலிகொண்ட அந்த அப்பாவி இந்தியர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனின் அருள் கிடைக்கட்டும். காயம்பட்டவர்களுக்கும் கைகால்களை இழந்தவர்களுக்கும், இந்த நிகள்வுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காக்கட்டும்.
********
இனி....
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்(பிச்சை) இடப்படும். பிரதமரிலிருந்து ஜனாதிபதியிலிருந்து எல்லோரும் அறிக்கை இடுவர்... வழக்கம்போல் போலீசார் தீவிரவேட்டையை ஆரம்பித்துவிடுவர்... துப்புக்கள் துலங்க ஆரம்பிக்கும்... "உடனே முகமதியரை சந்தேகப்படக்கூடாது, இந்துத்துவ அமைப்புகளையும் கருத்தில்கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும்" என்று இணைய முல்லாக்கள் முதல் இமாம்கள் வரை கூப்பாடு போடுவர், கைது படலம் நடக்கும்... முகமதியர் பலர் கைதுசெய்யப்படுவர்... "ஆதாரமில்லாமல்" பலர் விடுவிக்கப்படுவர்... பல்வேறு இன்னல்களுக்கிடையே பெரும்பாடுபட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டாலும் அப்சல்/ பாஷா மாதிரியாக அனைத்து முயற்சிகளும் வீணாக்கப்படும்...
இதற்கிடையில் ஹிந்துவாக பிறந்த ஒரே காரணத்தால் வெடித்துச்சிதறிய அந்த உயிரும், அவர்தம் குடும்பத்தாரும் மறக்கப்பட்டு நாம் அனைவரும் சொந்த கவலைகளில் மூழ்கிப்போவோம்.
************
கடந்த இரண்டு நாளாக தினசரிகளில் வந்த செய்திகள்... ப்ரதிபா பாட்டீல் (அதாங்க நம்ம ஜனாதிபதி) மாநில முதல்வர்களை தில்லிக்கு வரவளைத்து, கூட்டம்போட்டு, தீவிரவாதத்தை ஒடுக்க "பாடுபடவேண்டும்" என்று "கேட்டுக்கொண்டாராம்". தில்லியில் நடந்த குண்டுவெடிப்புகள் "கவலையளிப்பதாக" உள்ளதாம். தீவிரவாதத்தை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் தடுத்துவிடலாம் என்பது போன்ற "கருத்தாழமிக்க" ஆலோசனைகளை இலவசமாக வழங்கியுருகிறார். இருக்கட்டும்... மாத சம்பளம் ஒன்றறை லட்சமாக சமீபத்தில் உயர்ந்திருக்கிறது, இவ்வளவுகூட பேசாவிட்டால் எப்படி...!
**********
மடியில் குண்டைக்கட்டிக்கொண்டு எவனைக் கொல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கும் இந்த கூட்டம் முகமதிய பயங்கரவாதிகளைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்... எவ்வளவோ ஆதாரங்களை பார்த்தாகிவிட்டது ( கீழ்கண்ட இவ்வார ஜூவி கட்டுரையை பாருங்கள்). ஆனாலும் "முகமதியர்களை மட்டும் சந்தேகப்படக்கூடாது" என்றரீதியில் பல இடங்களிலும் எழுதப்பட்டுவருகிறது... வாஞ்சூரோ மூஞ்சூரோ (இந்த மாதிரி கழிசடை பதிவுகளையெல்லாம் நான் பெரும்பாலும் படுப்பதில்லை... ஆனாலும் அவ்வப்போது கண்ணில் பட்டுத் தொலப்பதுண்டு) தமுமு வின் அறிக்கையாக வந்த விஷயங்களை சமீபத்தில் இப்படி எழுதியிருக்கிறது....
"
தொடர் குண்டு வெடிப்புகளைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது....இந்தப் படுபாதக செயல்களைச் செய்த உண்மை குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.குண்டுவெடிப்புகளுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதினால் தான் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன.
குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.தமிழகத்தில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்தவர்கள் முஸ்லிம் அமைப்பினர் அல்ல.
மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருமுறை குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது பஜ்ரங் தள அமைப்பினர் இறந்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் தானே, பான்வெல், வார்சி போன்ற ஊர்களில் பொது இடங்களில் குண்டு வெடித்த போது மாராட்டிய காவல்துறை சனாதன் சான்ஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுச் செய்துள்ளது.
சமீபத்தில் கான்பூரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்து பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் அதில் முழுப் பலனையும் பெறுவதற்காகப் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சக்திகள் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும்.
குஜராத் முதல்வர் மோடி முன்கூட்டியே டெல்லியில் குண்டுவெடிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதே நேரத்தில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைதுச் செய்யப்பட்டோரை விசாரித்த போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை என்று அஹ்மதாபாத் காவல் இணை ஆணையாளர் ஆசிஸ் பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.
எனவே டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரிக்காமல் பல்வேறு கோணங்களில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விசாரித்து உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
"
எப்படித்தான் இப்படி எழுத மனம் வருகிறதோ ? எவ்வளவுதூரம் இது உண்மையோ.... வலைப்பதிவில் இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார்...
"
என் டி டிவியில் பர்கா தத் ஒரு பெண்மணியிடம், “நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்கிறார்…அந்தப் பெண்மணி தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி சிரித்துக் கொண்டு, “இந்த மாதிரி சமயத்தில் போலீசும் மற்றவர்களும் எப்படி வேலை செய்கிறார்கள், என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை பார்க்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். அதற்காகத்தான் அவளை அழைத்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்கிறார். குண்டு வைத்த ஜிகாதிகளை விட இந்தப் பெண்மணி கொடூர மனம் படைத்தவர்…
தன் சக குடிமக்கள் இறந்தும், இறந்துகொண்டும் இருக்கிறார்களே…அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மனதில் தோன்றவில்லை…வேடிக்கை பார்க்க வேண்டும் என்று தோன்றியதாம்…அதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்…இவரைப் போன்றவர்களும் இந்த தேசத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்!
இதுதானே முகமதியம் அவர்களுக்கு கற்றுத்தந்தது. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும் ?
****** ஜூவி கட்டுரை கீழே ******
Issue Date: 21-09-08
டெல்லியின் நிறம் சிவப்பு!
டெல்லி, இன்னொரு முறை தன் மீது ரத்தக் கறை பூசிக்கொண்டு மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை ஆட்சியாளர்களுக்கு கேட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், கடந்த 13-ம் தேதி டெல்லியில் ஒன்பது இடங்களில் வெடிகுண்டு வைத்தனர். இதில் ஐந்து இடங்களில் குண்டு வெடித்தது. மூன்று இடங்களில் இருந்த குண்டுகள் வெடிக்காமல் போனது. மற்றொரு வெடிக்காத குண்டு பற்றி இதுவரை தகவல் இல்லை. வார இறுதி நாளான சனிக்கிழமையன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடித்த குண்டுகளால் இருபத்தி நான்கு பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
டெல்லி போன்ற வட இந்திய நகரங்களில் வழக்கமாக சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக் கும். கூடவே, ரம்ஜான் உண்ணா நோன்பு திறக்கும் சமயத்தில் டெல்லி பூங்கா, கடை வீதிகள், முக்கிய சாலைகளில் இந்த வெடி குண்டுகள் வெடித்திருக்கின்றன.
அப்பாவிகளை அவ்வப்போது காவு கேட்கும் தீவிரவாதிகளின் கோரிக்கைதான் என்ன? டெல்லி குண்டு வெடிப்பை புலனாய்வு செய்யும் ஒரு உயரதிகாரியிடம் பேசினோம். ''பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் பலவும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யும்தான் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு விவகாரம், அமெரிக்காவுடனான அணுசக்தி
ஒப்பந்தம் என்பதெல்லாம் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம் இல்லை. இரண்டு நோக்கங்களுக்காக இந்திய வரை படத்தில் அவ்வப்போது ரத்தக்கறை பூசுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பது. அடுத்து, இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே விரோதத்தை வளர்த்து, தங்களுக்கு சாதகமாக இந்திய முஸ்லிம்களை வளைப்பது இவைகள்தான் இவர்களுடைய நோக்கம். இதனால் மல்காம், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மெக்கா மசூதி போன்றவைகளையும் ஏற்கெனவே வெடிகுண்டு வைத்து தாக்கினார்கள். இப்படித்தான் இந்திய பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க முயல்கிறார்கள் தீவிரவாதி கள். இவர்களின் கடந்த கால தாக்குதல்களில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், சாட்டிலைட் தொலைபேசிகள் மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் மட்டுமல்ல, பணமும் ஏராளமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது இவர்கள் தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு விட்டனர். ஒரு மொபைல் போனைக்கூட இப்போது உபயோகிப்பது கிடையாது. தொலைபேசி உரையாடல் கிடையாது. இவற்றால் தங்கள் அடையாளங்கள் எளிதாக தெரிந்து விடும் என்பதால்தான் இதனை சாதுர்யத்தோடு தவிர்த்து விட்டார்கள். இப்போது நடத்தப்படும் ஆபரேஷனுக்கு பெயர் L.R.O. (Low risk operation). வெடிகுண்டு சம்பவங்களில் இந்த தீவிரவாதிகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதுதான் இந்த ஆபரேஷனின் முக்கியமான நோக்கம்'' என்று சொல்லும் அந்த அதிகாரி, ''உள்ளூரில் மலிவாக கிடைக்கும் வெடிப் பொருட்களைக் கொண்டு வெடிகுண்டை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தீவிரவாதிகள். பொதுவாக அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளைக் கொண்டுதான் இப்போது வெடிகுண்டை தயாரித்து, வெடிக்க வைக்கிறார்கள். கார் போன்ற வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்து, சைக்கிள்களில் கொண்டு போய் குண்டுகளை வைக்கிறார்கள். ராணுவ ஏரியாக்கள் போன்ற பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. எளிதில் பொதுமக்களோடு கலந்து அதிக உயிர்ச் சேதங்களை உருவாக்கும் பகுதிகளாகப் பார்த்துத்தான் குண்டுகளை வெடிக்க வைக்கிறார்கள்...'' என்றும் சொன்னார் அந்த புலானாய்வுத் துறை அதிகாரி.
இந்த வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமான தீவிரவாத அமைப்பு என்று உளவுத்துறையினர் கண்டறிந்திருப்பது, இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புதான்.
'இனியும் இப்படியரு கோர சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்வது? யார் இந்த இந்தியன் முஜாஹிதீன்?' போன்ற கேள்விகளோடு, தீவிரவாதம் குறித்த ஆய்வாளரும் பிரபல பத்திரிகை யாளருமான தீபக் சர்மாவை சந்தித்தபோது, ''அகமதாபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் சிலர் இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் (சிமி) இருந்தார்கள். ஆனால், இவர்களுக்கும் வெடி குண்டு சம்பவங்களுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது என்பதால், மத்திய அரசு 'சிமி'யை தடை செய்வதில் கால தாமதம் செய்தது. இருந்தாலும், சிமி அமைப்பினர் இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி புரிவது உண்மை. இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தாதவரை இந்த பயங்கரவாதத்தை தடுக்க முடியாது. தீவிரவாதிகள் நம்மை அச்சுறுத்த, எப்படி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறார்களோ... அதே வழியில் நாமும் அவர்களை அச்சுறுத்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை வைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கும் பலரையும் இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை.
வாரணாசி கோயில் தாக்குதலுக்குப் பிறகு உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸார் வலியுல்லா என்ற பங்களாதேஷ்காரரை கைது செய்தனர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தது. இவர் ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படும் ஹ¨ஜி தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். இவரோடு சம்பந்தப்பட்டவர்கள் அப்துல் ஹனந்த் போன்றவர்கள். இவர்கள் ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிரபல தேவ்பந்த் (Saharan pur) மதரஸாவில் வந்து படித்துக் கொண்டு தீவிரவாதச் செயலில் ஈடுபட்டனர். இவர்களுக்கும் ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு மட்டுமல்ல, அல்-கொய்தா இயக்கத்தோடு இருக்கும் தொடர்பு குறித்தெல்லாம் கூட வெளியே தெரிய வந்தது. இவர்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். எல்லை தாண்டுவது காஷ்மீர் பகுதியில் இருந்து இப்போது இடம்மாறி மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக நடக்கிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் பங்களாதேஷ் வழியாக வருபவர்கள்தான் 'இந்திய முஜாஹிதீன்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த முஜாஹிதீன்களுக்கு சிமி இயக்கத்தினரோடு தொடர்பு இருப்பதாலேயே வெடிகுண்டு சம்பவங்கள் இங்கே தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை அரசு தடுக்காத வரை இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரத்தான் செய்யும்'' என்கிறார் சர்மா.
- சரோஜ் கண்பத்படங்கள்: முகேஷ், பங்கஜ்
Tuesday, 16 September 2008
கிறிஸ்தவ பயங்கரவாதம் குறித்த திண்ணைக்கட்டுரை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809111&format=html
மடியில் வெடிகுண்டைக்கட்டிக்கொண்டுதான் திரியவில்லையே தவிர, முகமதிய பயங்கரவாதத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல கிறிஸ்தவ பயங்கர வாதம்.
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றோர்களால் பலகால்ம் கிறிஸ்தவ பயங்கர வாதம் குறித்து எழுதப்பட்டு வந்திருக்கிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு வன்முறை பாதையில் இயங்கிவரும் நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுவரும் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் குறித்தும், முகமதிய பயங்கரவாதிகளுக்கு சவூதியின் பெட்ரோ டாலர்போல, இந்த கிறிஸ்தவ பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ஐரோபிய கிறிஸ்தவ அமைப்புகளின் டாலர் மூட்டைகள்.
ஒருபுறம் பால் மாவு, கோதுமை... மறுபுறம் எறிகுண்டு, நவீன ரகத் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள்.... மதமாற்ற நடவடிக்கைகளுக்கு சாம பேத தான தண்ட அனைத்தும் உண்டு....
இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்கள் அனைவரும் மீண்டுமொருமுறை அக்கட்டுரைகளை தேடியெடுது படிக்க வேண்டுகிறேன்
http://jataayu.blogspot.com/
http://arvindneela.blogspot.com/
*************** திண்ணைக்கட்டுரை ********
Thursday September 11, 2008
கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்
மலர்மன்னன்
தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கூடக் கிறிஸ்தவம் மிகக் கொடுமையான வன்முறையின் மூலமாகத்தான் நிறுவப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடகத்தின் மேற்குக் கடலோரமும், கோவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட கொங்கணத்திலும் சவேரியார் என்று அழைக்கப்படும் சேவியர் சித்திர வதை செய்துதான் உயர் ஜாதி ஹிந்துக்களைக் கூட கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்தார்.
ஆகையால் உன் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று ஏசு நாதர் சொன்னதாகச் சொல்லப் படுவதை மத மாற்றப் பணியில் காலங் காலமாகத் தீவிரம் காட்டிவரும் கிறிஸ்தவ போதகர்கள் கண்டுகொள்வதில்லை. மத மாற்றத்திற்காக அவர்கள் பால் மாவு, இலவச கோதுமை., பள்ளிக் கூடம், மருத்துவ மனை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அற்புத சுகமளிக்கும் ஜபக் கூட்டம் என்றெல்லாம்தான் கை வசம் உத்திகளை வைத்திருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். எறி குண்டுகள், நவீன ரகத் துப்பாக்கிகள் சகிதம் பயங்கர வாதம் என்கிற ஆயுதத்தையும் அவர்கள் தயாராகவே வைத்துக் கொண்டிருக்கிறர்கள்.
ஹிந்துஸ்தானத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு தலை மறைவு வன்முறை இயக்கமான நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வருகின்றன. "விடுதலை இறையியல்' என்று பெயர் சொல்லிக் கொண்டு இவை பயங்கர வாதத்தை நியாயப் படுத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் குறிப்பாக அமெரிக்காவிலிருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளும் நிறவனங்களும் டாலர்களை மூட்டை மூட்டையாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன.
தொடக்கத்தில் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே தீவிர பயங்கர வாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைக் குழுக்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வந்த கிறிஸ்தவ அமைப்புகள், சிறுகச் சிறுகத் தமது எல்லையை விஸ்தரித்து வருகின்றன. குறிப்பாக வனவாசிகள் மிகுந்துள்ள ஜார்க் கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு மாநிலங்களில் நக்சல் இயக்கத்துடன் கூடிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்ட அவை, ஒரிஸ்ஸாவின் வனவாசிகள் மிகுந்த மாவட்டங்களிலும் பயங்கர வாதத்தின் மூலமாகத் தமது மேலாதிக்கத்தை வேரூன்றி வருகின்றன. தொண்ணூறுகளின் இறுதியில் குஜராத்தில் டாங் என்ற வனவாசி மாவட்டத்திலும் வன்முறையின் துனையோடுதான் அவை மத மாற்றத்தை மேற்கொண்டன.
ஒரிஸ்ஸாவில் வனவாசிகளிடையே கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யும் பணிக்குத் தடைக்கல்லாக இருப்பவர்களை வன்முறை மூலமாகத்தான் கிறிஸ்தவ பிரசார அமைப்புகள் அகற்றி வருகின்றன. சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி மீது பல முறை குறி வைத்துத் தாக்கியதற்குக் காரணம் அவர் வனவாசிகள் ஆசை காட்டப் பட்டுக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப்படுவதற்குப் பெரும் தடங்கலாக இருந்தார் என்பதுதான். இறுதியில் அந்த எண்பது வயதுக்கும் மேலான முதிய துறவியைக் கொடூரமாகக் கொலை செய்து தங்கள் விருப்பத்தைக் கிறிஸ்தவ அமைப்புகள் நிறைவு செய்துகொண்டன.
துறவி லட்சுமணானந்தர் என்ன நிலப் பிரபுவா? அல்லது பெரும் தொழிலதிபரா? அவர் ஏழை எளிய வனவாசிகளைச் சுரண்டி வாழ்ந்து வந்தவரா? அவர் என்ன மார்க்சியத்திற்கு எதிராகக் கொடி பிடித்தாரா? அவரை மாவோயிஸ்டு பயங்கர வாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவரோடு சேர்ந்து மேலும் நால்வரும் கொல்லப் பட்டனர். கன ரகத் துப்பாக்கியால் அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாக ஒரு செய்தி கூறியது. இல்லை எறிகுண்டு வீசித் தாக்கப் பட்டனர் என்று இன்னொரு செய்தி சொல்லிற்று.
லட்சுமணானந்தரின் பணி மாவோயிஸ்டுகளுக்குப் பாதகமானதாக இருக்கவில்லை. ஆனால் நிச்சயமாக கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் சிரமப் பட்டு, செலவுகள் பல செய்து கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிய வன வாசிகளையெல்லாம் அவர் அன்பு வார்த்தைகள் சொல்லியே தாய் மதம் திரும்பச் செய்து வந்தார்.
வனவாசிகளை மதம் மாறாமல் தடுத்து அவர்களின் பாரம்பரிய கலாசாரத்திற்கு அழிவு வராமல் பாதுகாப்பு செய்வதிலும் அவர் முன்னின்றார். அதனால் அவரைத் தனது விரோதியாகப் பாவித்துப் படுகொலை செய்தது கிறிஸ்தவ பயங்கர வாதம். பயங்கர வாதக் குழுக்கள் பலவற்றுக்கும் பொருளும் பணமும் கொடுத்து உதவி, அவற்றைத் தனது கூலிப் படைகளாகப் பயன்படுத்திக் கொள்வதில் கிறிஸ்தவ பயங்கர வாதம் வெற்றி பெற்று வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாகத்தான் இந்த பயங்கர வாதக் குழுக்கள் செயல் பட்டு வருகின்றன. சமுதாயத்தின் அடித் தளத்தில் உள்ளவர்களின் விமோசனத்திற்காகப் பணியாற்றுவதுதான் ஏசு நாதரின் கட்டளை என்று அவர் மீது பழி சுமத்தி அதற்கு "விடுதலை இறையியல்' என்கிற சித்தாந்தத்தையும் அவை பரப்பி வருகின்றன. தமிழ் நாட்டிலும் பயங்கர வாதக் குழுக்களுடன் தொடர்புள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மலிந்து வருகின்றன. தேனி போன்ற கானகப் பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டத்திலும் பதுங்கும் நக்சலைட் இளைஞர்களுக்குப் பக்க பலமாகப் பின்னணியில் இருப்பது இவைதானென்றும் தமிழ் நாட்டில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் வசதியாக அரசியல் செய்வதற்கும் அவைதான் துணை நிற்பதாகவும் தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒரு பாஸ்டரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் செய்தி கசி ந்தது.
வட கிழக்கு மநிலங்களில் துப்பாக்கி முனையில்தான் வன வாசிகளின் மத மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வேட்டுச் சத்தங்கள் துணையுடன்தான் அங்கு பிரிவினை கோஷம் எழுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது கிறிஸ்தவ அமைப்புகள்.
இன்று உலகம் முழுவதுமே கிறிஸ்தவ பயங்கர வாதம் முகமதிய பயங்கர வாதத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பரவி வருகிறது. அதன் வேகத்தைக் கண்டு நிதான புத்தியுள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கனடாவைச் சேர்ந்த டாட் பென்ட்லி என்கிற கிறிஸ்தவ மதப் பிரசாரகர் அமெரிக்காவிலும் கனடாவிலும் பலாத்காரமாக ஏசுவின் சாம்ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் ஸ்தாபிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவம் தவிர வேறு எந்த மதமும் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க விடலாகாது என்பது இவரது நற்செய்தி. போதாக் குறைக்கு ஓர் இணைய தளத்தையும் அமைத்துத் தனது வன்முறைக் கிறிஸ்தவத்தை அவர் பரப்பி வருகிறார். அவரை ஆதரிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "யோவேலின் ராணுவம்' என்று அவர் தனது அமைப்பிற்குப் பெயர் சூட்டியுள்ளார். யோவேல் என்பது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம் பெறும் ஒரு இறை நேசரின் பெயர்.
இஸ்ரேலின் மக்கள் சீர்கேடாக வாழ்வதாகக் குற்றம் சுமத்தி ஆணடவன் அவர்களை அழித்துத் தண்டிக்கப் போவதை ஒரு குறியீடு போல,
வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து விளைந்த பயிர்களையெல்லாம் நாசம் செய்த தகவல் யோவேல் என்கிற பகுதியில் வரும். தம்மை ஏற்காதவர்களை அழிக்க ஆண்டவன் வரப் போவதை நினைவூட்டத்தான் தனது இயக்கத்திற்கு யோவேலின் ராணுவம் என்று பென்ட்லி பெயரிட்டிருக்கிறார்.
பிலிப்பைன்சிலும் கிறிஸ்தவ பயங்கர வாதமும் முகமதிய பயங்கர வாதமும் பலப் பரீட்சையில் இறங்கியிருப்பதாகத் தகவல் வருகிறது.
வயது முதிர்ந்த துறவி லட்சுமணானந்தரையும் அவரது ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண் துறவி உள்ளிட்ட நால்வர் கொல்லப் படுவதற்குக் காரணமாக் இருந்துவிட்டு, அதன் காரணமாக இயல்பாகப் பரவிய எதிர்த் தாக்குதலைத் திட்டமிட்ட தாக்குதல் என்று கிறிஸ்தவ அமைப்புகள் பிரசாரம் செய்கின்றன. இங்கு கல்விக் கூடங்களை நடத்தும் அவை, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகக் கூறி ஒருநாள் விடுமுறை அளித்துக் கண்டனம் தெரிவித்தன. அப்பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஹிந்துக்கள். கண்டன நடவடிக்கைகளில் சில பள்ளிகள் தம் மாணவர்களையும் ஈடுபடுத்தின. நாடு முழுவதுமே அவைகளால் இப்படி யொரு கண்டனத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இருக்கும் சர்வ தேசத் தொடர்புகளால் ஏதோ ஹிந்து அமைப்புகள்தாம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது போன்ற பெரும் மாயை தோற்றுவிக்கப்படுள்ளது. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது மறைக்கப்பட்டு விட்டது.
வனவாசிகள் முரட்டுக் குழந்தைகள். கள்ளங் கபடம் இல்லாதவர்கள். எதிர்ப்பாயினும் ஆதரவாயினும் அதனை எப்படிச் சாதுரியமாக வெளிபடுத்த வேண்டும் என்பதை அறியாதவர்கள். அவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொண்டால் உயிரையே
கொடுப்பார்கள். மாறாக நடந்தால் உயிரை எடுக்கவும் செய்வார்கள். அவர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதில் பல ஆண்டுகளைக் கழித்தவன் என்பதால் இதனைக் கண் கூடாக அறிந்திருக்கிறேன்.
ஒரிஸ்ஸாவிலும் இதைத் தான் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் மீது, குறிப்பாகச் சில இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது என்றால் அங்கெல்லாம் அதற்குக் காரணமாக ஒரு முன் கதைச் சுருக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மதம் சார்ந்த விஷமிகள் முன்பு ஏதோ வம்பு செய்திருக்கிறார்கள் என்றும் நேரம் பார்த்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்÷õதுமே ஹிந்துக்கள் மீதான தாக்குதல் பிற மதத்தவரால் நிகழ்த்தப் பட்ட பிறகுதான் இப்போதெல்லாம் ஹிந்துக்களும் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஹிந்துகள் தங்கள் மீதான தாக்குதலைச் சகித்துக் கொண்டு பொறுமையாகப் போய் விடுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது. இப்பொழுது அவர்கள் பொறுமையிழந்து பதிலடி கொடுக்கத் தொடங்கி விடவும் அது ஒரு எதிர்பாராத பரபரப்புக்குரிய பிரச்சினையென பூதாகாரமாகப் பிரசாரம் செய்யப் படுகிறது.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹிந்து இயக்கங்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. கலவரங்களுக்கு மூல காரணமான மத மாற்ற முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு கேட்பதற்கு மாறாக அதற்கு இடையூறாக இருக்கும் ஹிந்து அமைப்புகளான விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று கணவர் சகிதம் கட்சியில் உயர் பதவி வகிக்கும் பிருந்தா காரத் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்துகிறார்.
கிறிஸ்தவ அமைப்புகளுடன் வன்முறையில் முழு நம்பிக்கை உள்ள கம்யூனிஸ்ட்கள் ரகசிய உறவு வைத்திருப்பதை இவ்வாறாக அம்பலப் படுத்தியிருக்கிறார், பிருந்தா காரத்.
நியாயப்படி யார் யாரிடம் எடுத்துக் கூறி அறிவுறுத்த வேண்டுமோ அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, மத நல்லிணக்கம் பேணுமாறு ஹிந்துக்களுக்கு உபதேசம் செய்யப் படுகிறது. அவர்கள்தாம் மத வெறியர்கள் என்பதுபோல!
மத நல்லிணக்கம் நிலவ வேண்டுமானால் அதற்கு இருக்கிற மிக எளிதான ஒரேவழி மத மாற்ற முயற்சி கைவிடப் படுவதுதான். அதற்குத் தானாக மனம் வருவதில்லையாதலால் சட்டத்தின் மூலமாக மத மாற்ற நடவடிக்கையைத் தடை செய்தாக வேண்டும். இது இல்லாதவரை சமுதாயத்தில் மத அடிப்படையிலான பூசல்களைத் தவிர்ப்பது இயலாத காரியமாகவே இருக்கும்.
சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்குத் தடை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போதெல்லாம் கிறிஸ்தவ, முகமதிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்ப்புக் கிளம்புவதைப் பார்க்கிறோம். இதிலிருந்தே மத மாற்றம் செய்வதே அவர்களின் தலையாய பணியாக இருந்து வருவதும் அதன் விளைவாகத்தான் சமுதாயத்தில் சச்சரவுகள் தலை தூக்கி மக்களிடையே ஒற்றுமை சீர் குலைகிறது என்பதும் நிரூபணமாகின்றன.
--------------------------------------------------------------------------------
malarmannan@yrgcare.org
Copyright:thinnai.com