ஏதோ நேற்றுதான் தொலைக்காட்சியில் பார்த்ததுபோன்ற நினைவு... ஏழாண்டு காலம் கடந்துவிட்டது.
முகமதிய தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் இன்னும் முடிவடையவில்லை... முடிவுரும் சாத்தியங்களும் இல்லை. பொருளாதார ரீதியில் வலிவான அமெரிக்கா போன்ற நாடுகள், தமது மண்ணில் முகமதிய தீவிரவாத நடவடிக்கைகள் நிகழாவண்ணம் எடுத்த நடவடிக்கைகளில் பெருமளவு வெற்றியடைந்துள்ளன. வலுவான நடவடிக்கைகள் எடுக்காத(எடுக்கமுடியாத, எடுக்கமறுக்கும்) கையாலாகாத பாரதம் போன்ற நாடுகளில் முகமதிய தீவிரவாதம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் வாழ்க்கையின் ஒருபகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது.
முகமதிய தீவிரவாதம் குறித்து BBC தொலைக்காட்சி தயாரித்து சமீபத்தில் ஒளிபரப்பிய இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தை இணைய நண்பர்கள் பார்த்திருக்கக்கூடும். மேலும் இஸ்ரேலின் SET அமைப்பு தயாரித்த ஆவணப்படமும் சமிபத்தில் ஒளிபரப்பாகியிருக்கிறது. இவைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது... இன்றுமுதல் ஏழு நாட்களுக்கு கீழ்கண்ட தலைப்புகளில்....
8 செப் : உலகை உலுக்கிய விமானக்கடத்தல் (BBC)
9 செப் : பின் லாடனின் போர்பிரகடனம் (BBC)
10 செப் : முகமதிய அடிப்படைவாதம் : ஜிகாதி ஏன் உருவாகிறான் ? (இஸ்ரேலின் SET)
11 செப் : யூத அடிப்படைவாதம் : முகமதியத்துடனான ஓயாத போர் (இஸ்ரேலின் ஸேட்)
12செப் : புறக்கணிக்கப்பட்ட ஃபட்வா 11 ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டப்பட்ட சதி
13 செப்: பாகிஸ்தானும் முகமதிய அடிப்படைவாதமும்
NHK-ன் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் (BS-1)ல் இரவு 12:10 முதல் சுமார் 1மணி நேரம் வருகிறது. ஜப்பானிலுள்ள நண்பர்கள் தவராது பார்க்கவேண்டுகிறேன்.
இவற்றைத்தொகுத்து ஒரு ஏதேனும் இணைய பத்திரிக்கையில் (குறைந்தபட்சம் எனது வலப்பக்கத்திலாவது) கட்டுரைத்தொடர் ஒன்றை எழுத ஆர்வம்...நேரம் கிடைக்கவேண்டும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment