Thursday 25 September, 2008

பி. ராமன் அவர்கள் எழுதிய பயங்கரவாதம் குறித்த கட்டுரையொன்று.

கேபினெட் செகரட்டேரியட், ஓய்வுபெற்ற கூடுதல் செயலாளர் பி.ராமன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்றை வாசித்தேன்.

*******************

தொடரும் குண்டு வெடிப்புகள் : தனி மத்திய புலனாய்வு அமைப்பு தேவை!
"இந்தியன் முஜாஹைதீன்' என்று சொல்லப்படும் தீவிரவாத அமைப்பு, டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் நமக்கு நடுவே தீவிரவாதிகள் உருவாகிவிட்டார்கள் என்பதையும், அவர்கள் இந்திய முஸ்லிம்களில் சிலருக்கு வெடிபொருள்களைச் செய்வதில் மட்டுமன்றி, எப்படிப் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது என்பதிலும், தகவல் தொடர்புகளை எப்படிச் செய்வது என்பதிலும் பயிற்சியளித்துவிட்டார்கள் என்பதும் தெளிவாகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியன் முஜாஹைதீன் அனுப்பிய ஈ-மெயில் எச்சரிக்கை, "எங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே...' என்று பாதுகாப்பு அமைப்புகளைச் சுட்டிக்காட்டும் பாணியில் இருக்கிறது. இது மாதிரி ஈ-மெயில் அனுப்புபவர்களை போலீஸôல் இதுவரை நெருங்க முடியவில்லை என்ற தைரியத்தையே இது காட்டுகிறது.

கடந்த நவம்பரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு உத்திரப்பிரதேசப் போலீஸ் இதன் பின்னணியில் இருக்கும் சிலரைக் கண்டுபிடித்தாலும், தொடர் குண்டு வெடிப்புகள் நின்றபாடில்லை. இதே போல் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பல தீவிரவாதிகளைப் பிடித்திருந்தும், டெல்லி குண்டு வெடிப்பைத் தடுக்க முடியவில்லை.

சாதாரண வேளையில் முன்கூட்டியே தடுக்கும் நுண்ணறிவுத் திரட்டல் என்பது தகவல் தொடர்புகளை இடைமறித்துக் கேட்பதிலிருந்தோ அல்லது தீவிரவாத இயக்கங்களுக்குள்ளேயே ஊடுருவுவதன் மூலமோ செய்ய முடியும். ஆனால், இந்தியன் முஜாஹைதீன் தகவல் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறது என்றும், டெலிஃபோன்களைப் பயன்படுத்துவது இல்லை என்றும் தெரிகிறது. இன்டெர்நெட்டை இடைமறிப்பதில் நம் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ள போதாக்குறையை இது எடுத்துக் காட்டுகிறது.

உத்திரப்பிரதேச குண்டு வெடிப்புகள் நடந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஈ-தொய்பா, பங்களாதேஷைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி போன்ற தீவிரவாத இயக்கங்களைச் சந்தேகப்பட்டோம். பிறகு சிமி அமைப்பைச் சந்தேகித்தோம். ஆனால் இப்போது இந்த இயக்கங்கள் எல்லாவற்றிலும் உள்ள தீவிரவாதிகள் வெடி குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.

இதில் இந்தியன் முஸ்லிம்களும் (இதுவரை போலீஸ் கவனத்திற்கு வராதவர்கள்) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. ஆகவே நமது பாதுகாப்பு அமைப்புகள் திறந்த மனதோடு செயல்பட்டு, இந்தியன் முஜாஹைதீனின் அமைப்பு பற்றிய முழு விவரங்களைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் அந்த இயக்கத்திற்குள் ஊடுருவி, இது போன்ற வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியும்.

எந்தத் தாக்குதலும் நடந்துவிடாமல் தடுக்க, முதலில் ஏற்கெனவே குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இதுவரை நடைபெற்றுள்ள தாக்குதலில் கைதாகியுள்ளவர்களிடம் நடத்திய விசாரணை, -குண்டு தயாரிக்க, வைக்க பயிற்சி கொடுத்துவிட்டு போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பவர்களைக் கைது செய்ய வழி வகுக்கவில்லை.

ஆகவே நமக்கிடையே இருக்கும் பெரும் தீவிரவாதக் கூட்டத்தில் ஒரு நுனி மட்டுமே நமக்குத் தெரிய வந்துள்ளது. இன்னும் அந்தக் கூட்டத்தை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியன் முஜாஹைதீனுக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியவில்லை. அல்கொய்தா போலவே இந்தியன் முஜாஹைதீன் கீழ் பல்வேறு "தீவிரவாதக் குழுக்கள்' (நப்ங்ங்ல்ங்ழ் ஸ்ரீங்ப்ப்ள்) இருக்கின்றன. ஒரு குழு கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்தக் குழுவின் தயவு இன்றியே தன்னிச்சையாக இயங்கக் கூடிய பிற "ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாகவே தெரிகிறது.
தேடப்படும் தீவிரவாதிகள்

இதுவரை பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளுக்காக இயங்கும் பயிற்சி முகாம்கள் பற்றியே நாம் கவலைப்பட்டோம். ஆனால் இப்போது கைதாகிறவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்கள் மூலம் இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி முகாம்களை "சிமி' இயக்கம் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. அந்தப் பயிற்சி முகாம்கள் பற்றியும், அதில் பயிற்சி பெற்றவர்கள் பற்றியும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

ஆகவே தீவிரவாதச் செயல்கள் பற்றி விசாரிக்க, மத்திய புலனாய்வு செல் தனியாகத் தேவை. அப்போதுதான் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும் பல்வேறு நாசகாரச் சக்திகளை அடையாளம் கண்டு அடக்க முடியும். அதை விடுத்து எந்த மாநிலத்தில் குண்டு வெடிப்பு நடக்கிறதோ அந்த மாநிலத்தில் புலனாய்வு என்ற ரீதியில் போவது பலன் தராது.

குறிப்பாக வெவ்வேறு கோட்பாடுகளுடன் கூடிய கட்சிகள் மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் நேரத்தில் "மத்திய புலனாய்வு செல்' இல்லையென்றால், இந்தத் தீவிரவாதிகளின் "நெட்ஒர்க்'கால் நாடு தொடர்ந்து ரத்தம் சிந்திக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

No comments: