Tuesday 30 September, 2008

பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய திண்ணைக்கட்டுரை

இவ்வார திண்ணையில் பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய கட்டுரை வந்திருக்கிறது.
****************************


Thursday September 25, 2008
காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் - 1
மலர்மன்னன்

ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின் எண்ணிக்கையும் கூடுதலாகின்றனவோ அங்கெல்லாம் நாட்டைப் பிளவு படுத்தும் தேசத் துரோகம் வலுப்பெறுவதன் காரணம் இதுதான். ஹிந்துஸ்தானத்தின் வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர் எண்ணிக்கை கூடுதலாகிவிட்டதால் அங்கு மிஷனரிகளின் பக்க பலத்துடன் பிரிவினை கோஷம் உரத்துக் கேட்கிறது. பொது இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைகின்றன. வட மேற்கு எல்லைப் புற மாகாணம், மேற்கு பஞ்சாப், ஸிந்து மாநிலம், கிழக்கு வங்காளம் ஆகிய இடங்களில் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்ததால்தான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. இன்று ஹிந்துஸ்தானம் முழுவதிலுமே தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு ஹிந்துஸ்தானத்தை "இஸ்லாமியக் குடியரசாக' மாற்றிவிட வேண்டும் என முகமதிய பயங்கர வாத இயக்கங்களும், "கிறிஸ்தவக் குடியரசாக' மாற்றியமைக்க வேண்டும் என்று கிறிஸ்தவ "நற்செய்தி' இயக்கங்களும் நாடு முழுவதும் ஒன்றோடொன்று போட்டி போட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நடப்பு நிலவரத்தை உணராமல் ஹிந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதும், தமக்குள் சச்சரவிட்டுக் கொள்வதும், தாராள மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுத்துப் பலன் பெற வேண்டும் என்ற அற்ப ஆசையில் முகமதிய, கிறிஸ்தவ இயக்கங்கங்களுக்குப் பரிந்து பேசுவதுமாகக் காலங் கடத்தி வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தினங்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு வருமாறு சிலரிடமிருந்து அழைப்பு வந்தது. காஷ்மீர் விவகாரம் பற்றி ஒரு சிறு கூட்டத்தில் பேச நான் வர வேண்டும், அதிக பட்சம் நூறு பேர் கூடுவார்கள். ஆனால் அனைவரும் இளைஞர்களாக இருப்பார்கள். காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையான கோணத்தை அறிய விரும்புகிறவர்களாக இருப்பர்கள் என்று சொன்னார்கள். திண்ணை டாட் காம் இணைய இதழில் வந்த எனது காஷ்மீர் தொடர்பான கட்டுரைகளையும் அனேகமாக "ஜடாயு' ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த தருண் விஜய் கட்டுரையினையும் படித்துவிட்டுத்தான் இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்ததை அறிந்துகொண்டேன்.

மேலும் அவர்களுக்கு ஒரு தூண்டுதல் ஏற்பட இன்னொரு விஷயமும் காரணமாக இருந்திருக்கிறது. அது செங்கற்பட்டுக்குப் போன பிறகுதான் தெரிய வந்தது.

"மக்கள் ஜன நாயகம்'

செங்கற்பட்டு நகரில் மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளில் எல்லாம் சிவப்பு நிறச் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். "இந்திய இளைஞர் மக்கள் ஜனநாயகக் கழகம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகங்கள் கண்களை மிகவும் உறுத்தின. ஜன நாயகம் என்றாலே அது மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான். மக்கள் ஜனநாயகம் என்ற பாகுபாடு விசித்திரமாக இருந்தது. ஒருவேளை அரசியல் கட்சிகளின் அடாவடி ஜன நாயகம், சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக நடத்தும் ஜனநாயகம் என்றெல்லாம் பாகுபாடுகள் இருப்பதால் "மக்கள் ஜனநாயகம்' என்பதாக அடையாளப் படுத்தத் தோன்றியிருக்கலாம்.

இந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடலாகாது என்றும் இந்திய அரசு, தனி தேசியமான கஷ்மீர் மக்களின் தனிநாடு கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குமாறும் அந்தச் சுவரொட்டி வலியுறுத்தியது.
இடதுசாரிகள் எப்போதுமே தேசத் துரோகத்தில் முன்னிற்பவர்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாõலும் இந்த அளவுக்கு பகிரங்கமான தேச விரோதப் பேச்சுக்குத் துணிவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக அந்தச் சுவரொட்டியைப் பார்த்துவிட்டுத்தான் என்னை அழைத்துப் பேச வைக்கும் எண்ணம் இளம் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன்.

இதில் குறிபிடத்தக்க அம்சம், என்னை அழைத்த இளஞர்களில் எவரும் எந்த ஹிந்து இயக்கத்தோடும் தொடர்புள்ளவர்கள் அல்ல. பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும், தகவல் அறியும் நாட்டம் உள்ள மாணவர்களேயன்றி, எந்தவொரு இயக்கம் சார்ந்த உணர்வுகளையும் முன்கூட்டியே உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டவர்கள் அல்ல. நானும் அத்தகையவனே என்பதால் என்னை அழைத்துப் பேச வைக்க அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.

பேச்சைக் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை அறுபது, அறுபத்தைந்து இருக்கும். எனது அறிமுகத்தை முதலில் அளித்து அதன் பின் அவர்களின் சுய அறிமுகத்திற்குச் சிறிது நேரம் ஒதுக்கினேன். கூட்டம் ஒரு இளைஞர் வீட்டின் விசாலமான மொட்டை மாடியில் நடந்தது.

மேஜை, நாற்காலி என்றெல்லாம் போட்டிருந்ததை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு, வந்தவர் களை ஒருவர் பின் ஒருவராய் வட்டமாக உட்காரச் செய்து, முதல் வட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்துகொண்டு ஒரு கலந்துரையாடலாகவே எனது பேச்சைத் தொடங்கினேன். பொழுது போவதே தெரியாமல் பேச்சு தொடர்ந்தது. இரவு பனிரண்டு மணிக்கு ஆறிப்போன இட்டலிகளைத் தின்றுவிட்டு, அந்த மொட்டை மாடியிலேயே இரவு படுத்துக் கிடந்துவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன்.

அழிக்க முடியாத ஹிந்து அடையாளம்

கலந்துரையாடலில் நான் பேசியதையும் இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாக இங்கு வழங்குகிறேன்:

காஷ்மீர் என்கிற பெயர் வரக் காரணமே கச்யப முனிவரின் தலமாக அது இருந்ததுதான்.

பல அழிப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தனது புராதன ஹிந்து அடையாளங்களை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் தலை நகரம் உள்ளிட்ட ஊர்கள் பலவும் இன்றளவும் தமது பூர்விக ஹிந்துப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றன. ஆதி சங்கரர் காலடி பட்டு சங்கராசாரியார் குன்று என்று அழைக்கப்படும் குன்றும், பனி லிங்க வடிவில் தரிசனம் தரும் அமர நாதரும், அவர் குடிகொண்டுள்ள குகையையொட்டி அமைந்துள்ள தலங்களும், வைஷ்ணோதேவியும் காஷ்மீர் ஒரு ஹிந்து பூமி என்பதைப் பறை சாற்றுகின்றன. சைவம், சாக்தம் ஆகிய வழிபாடுகளின் ஊற்றுக் கண்ணான காஷ்மீர் பின்னர், ஹிந்து ஞான மரபிலிருந்தே கிளைத்த பௌத்தமும் தழைக்கும் தலமாகவும் விளங்கியது.

ஹிந்துஸ்தானத்தின் மண்ணிலிருந்து முளைத்தெழாமல் வேறு எங்கிருந்தாவது வந்து சேர்ந்த மாற்று சமயம் மத மாற்ற முயற்சிகளில் முனைந்து அதன் விளைவாக அது பரவுமானால் காலப் போக்கில் அவ்வாறு பரவி வேரூன்றும் பகுதி ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து சென்றுவிடும் என்கிற உண்மையைக் கடந்த கால வராலாறு நெடுகிலும் பார்த்து வருகிறோம். ஒரு காலத்தில் ஹிந்துஸ்தானத்தின் ஓர் அங்கமாகவே இருந்த ஆஃகானிஸ்தானம், ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாற்றப் பட்டதன் விளைவாக, ஒரு தனிதேசமாகப் பிரிந்து போனது. பஞ்ச நதிகள் பாய்ந்து வளம் செய்த பஞ்சாப் மாகாணத்தின் மேற்குப் பகுதி நெடுகிலும் ஹிந்துக்களாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாறியதன் விளைவு, அது பாகிஸ்தானாக மாறிப்போனது. ஹிந்துஸ்தானத்திற்கே பெருமை தந்த சிந்து மாகாணத்தில், முகமதியராக மாறிய மக்களின் எண்ணிக்கை மிகுந்ததால் அதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. கிழக்கே வங்காளமும் இதே காரணத்தால் சிதைக்கப் பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் இன்று பிரிவினைக் கோரிக்கை வலுத்து வருகின்றது என்றால் அதற்குத் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ மிஷனரிகளே என்பதும், அங்கெல்லாம் மத மாற்றப் பணி முழு மூச்சாகத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி வருவதும்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

ஆக, ஹிந்துக்களை மதம் மாறச் செய்து அதன் அடிப்படையில் ஹிந்துஸ்தானத்தைத் துண்டு போடுவது ஒரு தேர்ந்த ராஜ தந்திரத் திட்டமாகச் செயல் பட்டு வருகிறது. எப்படியாவது பெரும்பான்மை மக்களை மதம் மாற்ற வேண்டும், மாற மறுத்துத் தாய் மதத்திலேயே உறுதியுடன் நிற்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, "எங்கள் வழி தனி வழி, ஹிந்துக்களுடன் எங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. நாங்கள் ஒரு தனி தேசியம். சுதந்திர நாடாக நாங்கள் இயங்குவோம்; அல்லது அண்டையில் உள்ள எங்கள் சமயத்தாரின் தேசத்தோடு இணைந்து கொள்வோம்' என்று பேசத் தொடங்குவது இத்திட்டதின் முதல் படி. இன்று காஷ்மீரில் நடப்பது இதுதானே யன்றி வேறென்ன?

குப்புறத் தள்ளியது போதாதென்று குழியும் பறிக்கும் சங்கதி இது!

முழுக்க முழுக்க ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக இருந்த கச்யபரின், கவுதமரின் காச்மீரத்தில் முகமதியர் பெரும்பான்மையினராகிவிட்டதன் மர்மம் என்ன? சைவம், சாக்தம், பவுத்தம் ஆகியவற்றையெல்லாம்விட முகமதியம் உன்னதம் வாய்ந்தது என்கிற விழிப்புணர்வு அங்குள்ள பாமர மக்களுக்குத் திடீரென ஏற்பட்டு விட்டதா? அவ்வளவு விவேகம் உள்ளவர்கள் இன்றளவும் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லும் வயணம் என்ன? அங்கு எஞ்சியிருந்த ஹிந்துக்களான பண்டிட்டுகள் காணாமற் போனதன் காரணம் என்ன? அவர்களைக் காணாமலடித்துவிட்டு, எங்கள் பகுதி முழுக்க முழுக்க இஸ்லாமியரே வாழும் பகுதி, அண்டையிலிருக்கிற இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் இணைவதுதான் எங்களுக்கு இயல்பாக இருக்க முடியும்' என்று பாகிஸ்தான் கொடிகளுடன் திரியும் பகிரங்க தேசத் துரோகத்தின் பின்னணி என்ன?

முற்போக்கு முத்திரைக்காக...

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அண்மைக் கால வரலாறுகூடத் தெரியாமலும் தெரிந்துகொள்ள விரும்பாமலும், "முற்போக்கு, மதச் சார்பின்மை' முதலான முத்திரைகளைக் குத்திக்கொள்வதற்காகக் காஷ்மீர் விவகாரம் பற்றி மனம் போன போக்கில் பேசிவரும் எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஊடகத்தார்களின் எண்ணிக்கை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதில் மிகவும் பரவலாக அறியப்பட்ட, பிரபலமான பெயர்களும் அடக்கம். அவர்களைப் பின்பற்றிப் பெயர் பிரபலமடையும் ஆசையில் அதிகம் அறியப்படாதவர்களும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அந்த விருப்பத்திற்கு இணக்கமான முடிவை எடுப்பதுதான் ஜனநயகப் பண்பு என்று புத்தி சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள்.

கருத்துக் கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் அந்த உரிமையைப் பயன்படுத்தி தேச நலனுக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

"காஷ்மீர் மக்கள் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாகத் தமது மாநிலம் இருக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிந்துபோக அனுமதிப்பதுதான் சரி. மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பது ஜனநாயகத்திற்கே விரோதம்' என்று பேசும்போது, காஷ்மீர் மக்கள் எனப்படுவோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதியர் மாத்திரமல்ல என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து திட்டமிட்டு விரட்டப்பட்ட பண்டிட் பிரிவைச் சேர்ந்த லட்சக் கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே ஓரப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் பண்டிட்கள், பள்ளத்தாக்கில் உள்ள டோக்ரா, குஜ்ஜார் வகுப்பு ஹிந்துக்கள்,வேலை, வியாபாரம் என ஹிந்துஸ்தானத்தின் பிற பகுதிகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ள காஷ்மீர ஹிந்துக்கள், ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள், லதாக்கில் உள்ள பௌத்தர்கள் ஆகியோரும் காஷ்மீரிகள்தான்! முகமதியர் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை மட்டும் அங்குள்ள முகமதியர் விருப்பத்திற்கு இணங்கப் பாகிஸ்தானுடன் இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ அனுமதிக்கலாம் என்றால் அடுத்து இங்கே இருக்கிற கேரளத்தின் மலப்புரம் மாவட்டமும் அதே அடிப்படையில் உரிமைகோரத் தொடங்கும். முகமதியர் என்கிற சிறுபான்மையினருக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிப்பது ஓர வஞ்சனை. எங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று பிற சிறுபான்மையினரும் அவரவர் மத அடிப்படையில் வேறு எந்த நாட்டுடனாவது இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ உரிமை கோரக்கூடும்! மண்டைக்காடு சம்பவத்தின்போது சில அதி மேதாவி கிறிஸ்தவர்கள் அமெரிக்காவே, எங்களை ஏற்றுக்கொள் என்று குரல் கொடுத்தார்கள்! லதாக்கிலும், ஹிமாசல பிரதேசதின் சில மாவட்டங்களிலும் உள்ள பௌத்தர்கள் தங்களை ஸ்ரீலங்காவுடன் இணைத்துக் கொள்ள இயக்கம் தொடங்கலாம். மலப்புரம் எங்கே, பாகிஸ்தான் எங்கே, லதாக் எங்கே, ஸ்ரீலங்கா எங்கே , இதெல்லாம் வெறும் விதண்டா வாதம் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு காலத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ, ஹாலந்து போர்ச்சுகல் முதலான ஐரோப்பிய நாடுகள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமது கொடியை நாட்டி, அங்குள்ள நிலப் பரப்பைத் தங்கள் தேசத்தின் நீட்சியாகவும், மக்களைத் தம் பிரஜைகளாகவும் அங்கீகரித்துக் கொள்ளவில்லையா?

காஷ்மீரிகள் அல்ல, முகமதியர்கள்

காஷ்மீர் பள்ளத்தாக்கி லுள்ள ஹுரியத் கூட்டமைப்புக் கட்சிகளில் ஒன்றின் தலைவர் கிலானி நாங்கள் காஷ்மீரிகள் என்று சொல்வதைக் கைவிட்டுத் தங்களை மத அடிப்படையில் முகமதியராக அடையாளப் படுத்திக்கொண்டு, அதன் அடிப்படையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்.

கிலானியைப் படத்தில் பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு விவரம் அறியாத சிறுவனாகவாவது இருக்கக் கூடும் என்று நினைக்கத் தோன்றியது. அவருக்கு நேரடி அனுபவம் இல்லாவிடினும் உற்றார், உறவினர், பெற்றோர் வழியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கும்? இருந்துமா பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்? அவ்வாறு அறிவிப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அவ்வாறு அறிவிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னவாக இருக்கும்? பிற்கால ஷேக் அதுல்லாவுக்கு அளிக்கப்பட்டதுபோல ஏதேனும் இருக்கலாம்; யார் கண்டது?

காஷ்மீரில் விடுதலை முழக்கமும் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கிற குரலும் ஒலிக்கிறதென்றால் அதற்கு ஹிந்துஸ்தானத்தின் மெத்தனம்தான் காரணம். மத்திய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. இதில் பெரும் பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குத்தான் ஒதுக்கப்படுக்கிறது. ஜம்மு, லதாக் பகுதிகளுக்கான ஒதுக்கீடு குறைவுதான். இவ்வளவுக்கும் பரப்பளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட ஜம்மு பெரியது! மக்கள் தொகையும் ஜம்முவில்தான் அதிகம். இருப்பினும் காஷ்மீர் பள்ளத் தாக்கிகிற்குத்தான் நிதி ஒதுக்கீடுகள் கூடுதல். வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில்தான் அதிகம்.

ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டப்படும் வரிப்பணத்திலிருந்துதான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்குப் பலவகைகளிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப் படுகின்றன. இதற்குக் காரணம், அதுவும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு மாநிலம் என்பதோடு, அது ஹிந்துஸ்
தானத்தை விரோதியாகப் பாவிக்கும் அண்டை நாட்டால் மிகுந்த தொல்லைகளை அனுபவித்துவரும் எல்லைப் புறப் பிரதேசம் என்பதாலும்தான்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே புசிக்குமாம் என்பதற்கு மாறாகப் புல்லுக்கே இறைக்கப்பட்டு, நெல்லுக்குப் பெயரளவுக்கே போய்ச் சேருவது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான் என்றாலும் ஜம்முகாஷ்மீரில் இது மிகவும் கூடுதல். கடந்த அறுபது ஆண்டுகளில் ஒரு சில குடும்பங்களும் அவற்றின் சொந்த பந்தங்களும் உண்டு கொழுப்பதற்கே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் பயன்பட்டிருகின்றன!

மற்ற மாநிலங்களுக்கு இல்லாத விசேஷச் சலுகைகள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவிட்டதால் தட்டிக் கேட்க ஆளில்லாத அரசாங்கமே அங்கு இருந்து வருகிறது.

ஒரு சிங்கம் நரியானது

முக்கியமாக மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி மக்களாட்சியை நிறுவிய முகமது அப்துல்லா, ஆட்சிப் பொறுப்பை வசப்படுத்திக்கொண்டு, காலப் போக்கில் தாமே ஒரு குறு நில மன்னராக மாறிவிட்டார். "ஷேக்' என்பது பிற்காலத்தில் அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டதுதான். அதன் பிறகு "காஷ்மீர் சிங்கம்' என்கிற பட்டமும் சூட்டப்பெற்ற அவர், காலப் போக்கில் தாம் ஒரு நரியே என்பதை நிரூபித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹிந்துஸ்தானம் முழுவதும் விடுதலைப் போராட்டம் தீவிர கதியில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் தாக்கம் சுயேற்சை மன்னர்களின் சமஸ்தானங்களிலும் இயல்பாகவே ஏற்படலாயிற்று. விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு சமஸ்தானங்கள் பலவற்றிலும் உள்ளே நுழைவதற்குத் தடையே இருந்ததுண்டு. தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் நுழைந்து கைதானதும் உண்டு. சமஸ்தான மன்னர்கள் அனைவரும் சுக வாசிகளாக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்று கூற இயலாது. இருந்த போதிலும், மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி வர வேண்டும் என்கிற விழைவு எல்லா சமஸ்தானங்களிலும் இருந்தது. சில சமஸ்தானங்களில் உள்ளூர் அரசியல் வாதிகள் அதிகாரம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்பதற்காகவே மக்களிடையே அப்படியொரு எண்ணத்தைத் தூண்டிவிட்டதும் உண்டு.
சோஷலிசத் தாக்கத்தின் விளைவாக "முதலாளி, ' "செல்வந்தர்' என்றெல்லாம் குறிப்பிட்டவுடன் ஒரு விரோத மனப்பான்மையும் பரிவற்ற அபிப்பிராயமும் வளர்ந்ததுபோல மன்னர்கள் என்றாலே அனுதாபமற்ற கண்ணோட்டம் தோன்றிவிட்ட காலகட்டம் அது. மன்னர்களாக அரியணையில் அமர்ந்தவர்களும் அரச குல அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக மிகவும் ஆடம்பர மான வாழ்க்கை வழ்ந்தது முதலில் பிரமிப்பாக இருந்த நிலை மாறி வெறுப்பு தோன்றிவிட்டிருந்தது (இன்று பிரபல திரைப்பட நட்சத்திர நாயகர்கள் ராஜ போக மமதையுடன் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு வளர்வதற்குப் பதிலாக பிரமிப்பு மிகுந்து அதன் விளைவாக ரசிகர் மன்றங்கள்தாம் வளர்ந்து வருகின்றன! இந்த வளர்ச்சி, திரைப் படக் கவர்ச்சியை முதலாக வைத்து, தனிக் கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி வருகிறது!).

இன்று திரையுலக நட்சத்திரங்களே தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களிடமிருந்து விலகி, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகையில் சமஸ்தான மன்னர்கள் அவ்வாறு வாழ்ந்ததில் வியப்பென்ன? பொன்னும் மணியுமாக மகுடம் தரித்துக் காட்சியளித்த மன்னர்கள் மீது மக்களிடையே எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டுவது அன்றைய சமஸ்தானங்களில் எளிதாகவே இருந்தது.

காஷ்மீரிலும் இதுதான் நடந்தது.

மதவாதத் தாக்கம்

முஸ்லிம் மாநாடு என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, "முகமதியரான நாம் ஓர் ஹிந்து அரசனுக்குக் கீழே கட்டுண்டு கிடப்பதா' என்று மத வாத அடிப்படையில் மக்களைத் தூண்டிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார் முகமது அப்துல்லா. நம் ஊரில் வெகு சுலபமாகப் பலர் மாவீரர்களாகவும், அஞ்சா நெஞ்சர்களாகவும் ஆகிவிடுவதில்லையா, அதுபோல முகமது அப்துல்லாவும் விரைவில் மகத்தான விடுதலைப் போராளியாகிவிட்டார்! ஜன நாயக விரும்பியான நேரு, காஷ்மீர் பிரியராகவும் இருந்தமையால் அப்துல்லாவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக அர்வம் காட்டலானார். "முஸ்லிம் மாநாடு' என்று பெயர் வைத்திருப்பது உங்கள் கட்சி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிரதிநிதி என்பதுபோன்று எண்ண வைக்கிறது. அது உங்கள் கோரிக்கையைப் பலவீனப் படுத்தும். முழு சமஸ்தான மக்களுக்கும் பொதுவாக தேசிய மாநாடு என்று கட்சிக்குப் பெயர் மாற்றம் செய்யுங்கள் என்று நேரு ஆலோசனை சொல்லவும், அதுவும் சரிதான் என்று அவ்வாறே பெயரை மாற்றி வைத்தார் , முகமது அப்துல்லா. பாவம், நேரு , அவர் சொன்ன தேசியம் பிறகு "காஷ்மீரி' தேசியமாக வர்ணிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் (பின்னர் காஷ்மீரின் வடக்குப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியபோது, அப்துல்லாவின் 'முஸ்லிம் மாநாடு' அங்கு புத்துயிர் பெற்றது! காஷ்மீரிலேயே கூட தேசிய மாநாடு என்ற பெயர் மாறத்தை ஒப்புக் கொள்ளாமல் ஒரு பிரிவு தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரிலேயே தொடர்ந்து நீடித்தது)!

அந்தக் கால கட்டத்தில்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுத்து, ஜின்னாவின் விருப்பப்படியே முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகியவை ஒன்று திரட்டப் பட்டு, செயற்கையாக ஒரு தனி நாடு உருவாக்கப்பட்டது. இதுதான் உண்மையேயன்றி, இன்றளவும் பாகிஸ்தான் என்பதாக ஒரு தனி தேசியம் இல்லை! இதை நிரூபணம் செய்வது போலத் தான் பாகிஸ்தான் பிறந்து இருபத்து நான்கே ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கம் பிய்த்துக் கொண்டு போயிற்று. பன்ங்களா தேஷ் என்ற தனிநாடாக அது இன்று இயங்கி வருகிறது.

கிழக்கு வங்காள மக்களைப் பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஹிந்துஸ்தானம்தான் மீட்டது. அவர்கள் சுதந்திரமாக இயங்கத் துøணை நின்றது. ஆனால் அந்த நன்றி விசுவாசம் சிறிதும் இன்றி பண்ங்களா தேஷ் இன்று ஹ்கிந்துஸ்தானத்திற்கு எல்லாவிதமான இடையூறுகளையும் விளைவித்துக் கொண்டிருக்கிறது! காரணம் அங்கு பெரும்பான்மையினராக இருப்பவர்கள் வங்காள மொழி பேசுபவர்களாக இருப்பினும் முகமதியர்களாக இருப்பதுதான்! மதம் அவர்களின் கண்களை மறைப்பதால் தமது உண்மையான தேசியம் ஹிந்து தேசியமே எனபதை அவர்கள் காண மறுக்கிறார்கள்!

Copyright:thinnai.com 

1 comment:

Anonymous said...

Dinamani Editorial 2 Oct 2008

நம்முடைய அரசே குற்றமுடையது!

பழ. கருப்பையா

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் சங்கிலித் தொடர்போல, ஐந்து மணித்துளி இடைவெளிகளில் ஒரே ஊரில் பத்து இடங்களிலாவது குண்டுகள் வெடிக்கின்றன. தேர்ந்த திட்டமிடல் இது!

ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் மடிகிறார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் ஊனமடைகிறார்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன? காலையில் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்கப் போனது குற்றமா? பேருந்து நிலையத்திற்குப் பேருந்து ஏறப் போனது குற்றமா? தொடர்வண்டி நிலையத்திற்கு வேண்டியவர்களை வரவேற்கப் போனது குற்றமா? பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது குற்றமா?

இரவோடு இரவாக ஏற்படுகின்ற ஆழிப் பேரலைகள் ஒரு குடியிருப்பையே அழித்து விடுவதுண்டு. வெடிக்கின்ற எரிமலைகள் ஓர் ஊரையே விழுங்கி விடுவதுண்டு. புயலால், வெள்ளத்தால் பெருஞ் சேதங்கள் விளைவதுண்டு. இவையெல்லாம் இயற்கை காரணமான பேரழிவுகள். பேராற்றல் வாய்ந்த இயற்கையின் முன்னால் மனிதன் ஆற்றலற்றவன்!

ஆனால் வெடிகுண்டுகள் தாமாக வெடிப்பதில்லை; அவை மனித ஏற்பாடுகள்.

ஒருவன் இன்னொருவனைக் கொல்வதற்கு ஒரு நோக்கம் இருக்கும்; முந்தைய பகை இருக்கும்! அதுதான் உலக வழக்கம்.

ஆனால் இதிலே குண்டு வைத்தவன் யாரென்று செத்தவனுக்குத் தெரியாது. தன்னுடைய செயலால் எவன் சாகப் போகிறான் என்று குண்டு வைத்தவனுக்குத் தெரியாது.

அரசாங்கத்தோடு பகை என்றால் அரண்மனைகளிலல்லவா குண்டு வெடிக்க வேண்டும். ஒரு நாட்டோடு பகை என்றால் அந்த நாட்டு ராணுவ முகாம்கள் அல்லவா குறி வைக்கப்பட வேண்டும்.

அவையெல்லாம் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்பதால், பாதுகாப்பில்லாத மக்களைக் குறி வைப்பது நீசத்தனமான செயல்!

மும்பையில் வெடிகுண்டு வைத்தனர்; 209 பேர் செத்தனர். ஹைதராபாத்தில் 16 பேர்; ஜெய்ப்பூரில் 63 பேர்; பெங்களூரில் 2 பேர்; வாராணசியில் 9 பேர்; ஆமதாபாத்தில் 55 பேர். காயம்பட்டோரும், கைகால் இழந்தோரும் ஆயிரக்கணக்கில். அடுத்த இலக்குச் சிங்காரச் சென்னையாம்!

இந்தக் குண்டு வெடிப்புக்கெல்லாம் காரணம் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகள்தான் என்பது கண்டறியப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது.

இந்த அமைப்பு 34 மாவட்டங்களில் விரிந்து பரந்து பரவியிருக்கிறது. இதில் 400 குரூரமான பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்! புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 2,000 புதியவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புகள் செழித்துக் காலூன்றி இருப்பது உத்தரப் பிரதேசத்தில். அதற்குக் காரணம் சிமி அமைப்பினர் சற்புத்திரர்கள் என்று சான்றிதழ் வழங்கி நான்காண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த அமைப்பின் மீதிருந்த தடையை நீக்கி, அவர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டது இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.

குற்றவாளிகளிடம் மென்மை காட்டுவது குற்றங்கள் பெருகத் துணையாகாதா?

கல்விச் சலுகை, கட்டணச் சலுகை, கடன் சலுகை என்று எவ்விதமான சலுகைகளையும் சிறுபான்மையோர்க்கு வழங்குவது நியாயம்! அது ஒரு நாகரிக நாட்டுக்கான இலக்கணம்.

ஆனால் குற்ற நடத்தையினரைக் கொலைகாரர்களைச் சிறுபான்மையினர் என்று பகுத்துச் சலுகை காட்டுவது, நாட்டைப் பாழாக்கி விடாதா? இது நாடாளுகின்றவர்கள் குறைமதியினர் என்பதைத்தானே குறிக்கிறது!

சிமி போன்ற அமைப்புகளுக்குத் தேவையான செலவுகளுக்கும், குண்டு தயாரிப்பதற்கும், அதை எங்கெங்கே எப்போதெப்போது வைக்க வேண்டும் என்பதற்கும், நாடு முழுவதும் இவர்கள் ஏற்படுத்தியுள்ள பின்னலான அமைப்புகளைப் பராமரிப்பதற்கும், ஆடு வெட்டுகிறவன், தூக்கிலிடுபவன் போல எந்த உணர்ச்சியுமின்றிக் கொலை செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டுள்ள கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கில் கொடுப்பதற்கும் தண்ணீராய்ச் செலவழிக்கப்படும் பல ஆயிரங்கோடி ரூபாய்களையும் கூடப் பாகிஸ்தான் தன்னுடைய அன்னியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து செலவழிப்பதில்லை. இந்திய ரூபாய் நோட்டுகளை நம்முடைய ரிசர்வ் வங்கியை விட மிகத் தேர்ச்சியாகப் பாகிஸ்தானில் அச்சிட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்குகின்றனர்.

இந்தியாவை நிர்மூலப்படுத்துவதற்குப் பாகிஸ்தானுக்கு ஆகும் செலவு அச்சிடுவதற்குத் தேவையான உயர் ரகத் தாள்களும், பல வண்ண மைகளுமே.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்குப் பிறகு அவர்களின் அடுத்த இலக்கு தில்லி என்று கண்டறியப்பட்டு, மாநில அரசால் மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

குண்டு வெடிப்பின் காரணமாக ஊர்ஊராகக் கேட்கும் நெஞ்சைப் பிளக்கின்ற ஓலங்களுக்குப் பாகிஸ்தான் மட்டுமே காரணமில்லை. முப்படைகளையும் வைத்துக்கொண்டு, வெறும் 800 கொலைகாரக் கும்பலை வேட்டையாட முடியவில்லை என்ற நிலையிலிருக்கும் அரசியல் உறுதிப்பாடற்ற நம்முடைய மன்மோகன் சிங்கின் அரசே பெருங்காரணம்.

அடுத்தது தில்லி என்று சொன்னார்கள். ""அட... சொன்னபடி நடக்கிறதே'' என்று சிவராஜ் பாட்டீல் மூக்கில் விரல் வைத்து வியந்து கொண்டிருந்தார். இப்போது சென்னை என்று சொல்லியிருக்கிறார்கள். சொன்னபடி நடக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருப்பார்.

சென்னையில் இரண்டாயிரம் காவலர்கள் முடுக்கிவிடப் பட்டிருக்கிறார்கள். ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் இரும்புத் தட்டிகள் வைத்துச் சாலைகள் மறிக்கப்படுகின்றன. நள்ளிரவிலும் வண்டிகளெல்லாம் நிறுத்திச் சோதனையிடப்படுகின்றன. வண்டியில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன், ""சட்டைப்பையில் என்ன வைத்திருக்கிறாய்?'' என்று எட்டிப்பார்த்து ஏட்டையா கேட்கிறார். சட்டைப்பையில் குண்டு இருக்காது என்று பெரிய அதிகாரிகள் ஏட்டையாக்களுக்குச் சொல்லி அனுப்புவதில்லை போலிருக்கிறது.

ஒரு வாரத்திற்குதான் இந்தக் கெடுபிடிகள் இருக்கும்.

மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சாவது நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு வெறும் நிகழ்வு. அவ்வளவுதான். ஆட்சியாளர்கள் குண்டு துளைக்காத கார்களிலல்லவா பயணம் செய்கிறார்கள்.






பிரச்னையே தங்கள் பாதுகாப்புக்கு மதத்தை ஒரு கவசமாகப் பயன்படுத்தும் சிமி போன்ற ஒரு சில தீய கும்பல்களுக்கும், அதன் மீது கை வைத்தால் சிறுபான்மையினரை நமக்கெதிராக அவர்கள் திருப்பி, அதன் மூலம் அவர்களுடைய வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் குறைமதி உடைய அரசுக்கும்தான்.

உயிரில் சிறுபான்மையர் உயிர், பெரும்பான்மையர் உயிர் என்னும் வேறுபாடில்லை.

குற்றம் சிமி போன்ற சிறுகும்பலிடம் இல்லை.

நம்முடைய அரசே குற்றமுடையது!