Tuesday 2 September, 2008

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!

ஒரு நாட்டின் தலைமை வலிமையற்றதாகவும், அந்த நாடு ஊழலும் ஒழுங்கீனமும் அலட்சியமும் புரையோடிய சமுகத்தைக்கொண்டதாகவும் விள‌ங்கினால், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து புதிதாக ஏதும் சொல்வதிற்கில்லை.

சமீபத்தில் அமர்நாத்/காஷ்மிர் விவகாரங்கள் மற்றும் பொதுவாக முகமதிய பயங்கரவாதம் குறித்து மலர்மன்னன், ஜடாயு போன்றோர் எழுதிய கட்டுரைகளில் (திண்ணை மற்றும் அவர்தம் வலைப்பக்கங்களில் தேடினால் கிடைக்கும்) இதுகுறித்து விரிவாக பதிய‌ப்பட்டுள்ளன.

மேலும், பாகிஸ்தான்/பங்ளாதேஷ் லிருந்து முகமதிய பயங்கரவாதம் இறக்குமதி செய்யப்படுவது ஒருபுறமிருக்க, இந்திய நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் பொருட்டு கழுகாய் காத்திருக்கும் சீனாவின் கொடிய முகம் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் வெளிவருவதையும் அவதானிக்கிறேன்.

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த கட்டுரை ஒன்றை வாசித்தேன். "இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அணுசக்தி உடன்படிக்கையானது அணுஆயுத பரவல் தடைச்சட்டங்களுக்கு கிடைத்த அடி" என்னும் அர்த்தத்தில் வெளியான செய்தி இது.

பார்க்க‌ ...

Indo-US N-deal a blow to non-proliferation: China

பொருளாராத‌ ரீதியில் பார‌த‌த்தைவிட‌ சீனா முன்னேறிய‌ நாடாக‌ இருக்க‌லாம். அணுச‌க்தி போன்ற‌ அறிவிய‌ல் ஆராய்ச்சியில் சீனாவுக்கு பாரதம் எவ்விதத்திலும் சளைத்ததல்ல. சீனா தற்போது கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களை எவ்வாறு பெற்றது என்பது குறித்து பெரிய கட்டுரையையே எழுதலாம்.

பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களாலே பாரத அணுசக்தி தேவைகள் தன்னிறைவு பெறவில்லை என்பதும், அணு ஆயுத பரவல் விஷயங்களில் பாரதம் ஒரு மிகப்பொறுப்பான "ஜனநாயக" நாடாக விளங்கிவருவதும் சீனாவிற்க்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம்.

முகமதிய பயங்கரவாதிகளை உற்பத்தி செய்துவரும் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் மூலமாக வடகொரியா, சிரியா போன்ற அடிப்படைவாதிகளாலும் சர்வாதிகாரிகளாலும் ஆளப்படும் நாடுகளுக்கு அணுஆயுத தொழில் நுட்பங்களை யார் தந்து உதவியது என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் ஒரு சின்ன முனுமுனுப்பு கூட எழுவதில்லை.

அணு ஆயுத பரவல் விஷயங்களில் பாரதம் ஒரு மிகப்பொறுப்பான "ஜனநாயக" நாடான பாரதம் நோக்கி, சீனா போன்ற ஒரு அடாவடி நாடு கைநீட்டி குற்றம் சாட்டுகிறதென்றால், "இந்தியாவிடமிருந்து வலுவான எதிர்வினைகள் இருக்காது என்ற தைரியமும்... தமது இந்திய கைக்கூலித் தோழர்கள் எதிவினைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்" என்ற தைரியம் தவிர வேறென்ன இருக்கமுடியும்

ம்ம்ம்ம்....

***************************************

Indo-US N-deal a blow to non-proliferation: China
Posted online: Monday , September 01, 2008 at 05:58:49

Beijing, September 1: People's Daily, the mouthpiece of the ruling Communist Party of China, described Indo-US nuclear deal a ‘major blow’ to non-proliferation, apparently reflecting the Chinese Government's thinking on the issue.
The article criticised the ‘multiple standards’ followed by the US on the issue of nuclear non-proliferation when it agreed to sign the deal with India, a view that could be worrying to New Delhi, which is trying to get the deal approved by the Nuclear Suppliers' Group at its meeting in early September.
"Irrespective of the fate of the US-India nuclear agreement, the United States' multiple standards on non-proliferation issues have met with a skeptical world," the article written by a scholar of a state-run think-tank, said.
New Delhi needs NSG approval urgently because it will need to be further ratified by the US Congress before it adjourns in September end to prepare for the Presidential elections.
"Whether it is motivated by geopolitical considerations or commercial interests, the US-India nuclear agreement has constituted a major blow to the international non-proliferation regime," the paper said in the opinion pages of its Monday edition, ahead of the September 4 meeting of the 45-member NSG.
China so far had not taken a negative position either in the meetings of the International Atomic Energy Agency or the NSG but it is also not clear if Beijing will openly oppose the deal at the NSG meeting or merely refuse to back it actively.
------------------------------------------
Copyright(c): Indian Express
-----------------------------------------

No comments: