Thursday, 14 February 2008

கந்தஹார் விமான கடத்தல் : பாரதத்தின் வெற்றிகளும் தோல்விகளும்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை நம்மில் பெரும்பாலோர் மறந்துபோயிருப்போம்.



ஆஃப்கானிஸ்டானின் முகமதிய தீவிரவாதிகளால் நமது விமானம் கடத்தப்பட்டதும், பிணைக்கைதிகளான விமானப்பயணிகளை விடுவிக்க, நமது ராணுவ வீரர்கள் இன்னுயிர்தந்து பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தீவிரவாத பன்றிகள் சிலரை விடுவிக்க நேர்ந்ததையும் இன்நாளில் நினைவுகொள்வோம்.



கடத்தப்பட்ட விமானமும் ரன்வேயில் சைக்கிள் ஒட்டும் முல்லாவும்

கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட முகமதிய தீவிரவாதிகள் யாரும் பிடிபடாத நிலையில் (பாகிஸ்தானில் தஞ்சம்புகுந்து சகல வசதியும் பெற்று உயிருடன் உலவிவரும் இந்த பன்றிகள் குறித்து கேள்விகேட்க உலகில் யாருக்கும் நிர்பந்தமில்லை) கடத்தலுக்கு உதவிசெய்ததாக முகமதியர் மூவர் கைதுசெய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.


தண்டனையை எதிர்த்து இந்திய முகமதியர்களும் இடதுசாரிகளும் பாய்ந்து கடிக்க வரும் என்று நம்பலாம்.


பிப்ரவரி 13 2008 ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை கீழே


***********************




கந்தகார் கடத்தல் வழக்கு...


வெற்றி பாதி... விரக்தி மீதி!


டிசம்பர் 24, 1999... நேபாள நாட்டுத் தலைநகரான காட்மண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மிசி 814 எதிர்நோக்கப் போகும் ஆபத்தை உணராமல், வழக்கம்போல் விண்ணில் ஏறியது. விமானத்தில் 189 பயணிகளுடன் ஐந்து தீவிரவாதிகளும் ஊடுருவியிருந்தது யாருக்கும் தெரியாது.



கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் முதலில் அம்ரித்ஸர் நகரில் அதை இறக்கினர். பிறகு லாகூருக்குக் கொண்டுசெல்ல முயன்றனர். இறுதியில், இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க துபாயில் இறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது ரூபின் என்ற பயணி எதிர்ப்புக் காட்ட, அவர் குத்திக் கொல்லப்பட்டார். அவர் சடலத்துடன் சில பயணிகளை மட்டும் விடுவித்த தீவிரவாதிகள், துபாயில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் நகரில் இறக்கினர்.

அப்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு இருந்தது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக, கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய அரசு. ஜம்மு- காஷ்மீர் ஜெயிலில் அடைக்கப் பட்டிருந்த பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கர் மற்றும் அகமது ஒமர் சையது ஷேக் ஆகிய மூவரையும் விடுவிக்க
வேண்டும் என தீவிரவாதிகள் கெடு விதித்தனர். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார்.


விமானக் கடத்தலுக்குப் பிறகு அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீஸார், அடுத்த சில தினங்களில் விமானக் கடத்தல்காரர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்ததுடன் பாஸ்போர்ட் எடுக்க உதவியதாக அப்துல் லத்தீப் (மும்பை), யூசுப் நேபாலி (நேபாளம்), தலீப்குமார் பூஜைல் (மேற்கு வங்காளம்) ஆகிய மூன்று பேரை மும்பையில் கைது செய்தனர். 2000-மாவது ஆண்டு ஜனவரியில் வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மார்ச், 2001-லிருந்து பஞ்சாப்பின் பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த வருடம் ஜனவரி 18-ல்தான் விசாரணை முடிந்தது. மீதமுள்ள பாகிஸ்தானிகளான ஏழு பேர் பிடிபடாத நிலையில், எட்டு வருடங்களுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி, கடத்தலுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம்.


சி.பி.ஐ-யின் வழக்கறிஞர்கள் குழுவில் ஒருவரான எஸ்.கே.குப்தா நம்மிடம், ''விசாரணைக்காக நேபாளம், ஆப்கானிஸ்தான், துபாய் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டி யிருந்தது. நிறைய பேரை விசாரிக்க வேண்டியிருந்தது. வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தி இருந்தாலும், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்படாததும், மற்ற ஏழு பேர் பிடிபடாததும் எங்களுக்கு வருத்தமே'' என்றார்.


எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பர்ஜேந்தர்சிங் சோதி நம்மிடம், ''சந்தர்ப்ப சாட்சியங்களை ஆதாரமாக வைத்து ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, நேரடி ஆதாரங்கள் எதுவுமில்லை. மூவரில் ஒருவரான அப்துல் லத்தீப்பிடம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் இரு சிம் கார்டுகளில் 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை பேச்சு நடந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆனால், அவர் முந்தைய ஆண்டு டிசம்பரிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்! ஆரம்பத்தில் குற்றவாளிகளிடம் சி.பி.ஐ. மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை அவர்கள் நீதிமன்றத்தில் மறுத்துவிட்டனர். அவர்கள் தயாரித்ததாக சி.பி.ஐ. கூறும் போலி பாஸ்போர்ட் இந்த விமானக் கடத்தலில் பயன்படுத்தப்படவில்லை. இதுபோன்ற பல ஓட்டைகளை, மேல்முறையீட்டின்போது முன்வைப்போம்'' என்றார்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை சி.பி.ஐ-க்கு வெளிநாடுகளிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பயணிகளை மீட்பதற்காக விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவனான ஒமர் சையது ஷேக், பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளர் டேனியல் பேர்ள் கொலை வழக்கில் கைதாகி பாகிஸ்தான் சிறையில் இருக்கிறான். அதேபோல், ஜெய்ஷ்-இ-முகம்மதுவின் தலைவனான மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருந்தபடி அளித்த பேட்டிகள் டி.வி. சேனல்களில் வெளியாகின. ஆனால், தங்கள் நாட்டிலேயே இல்லை என பாகிஸ்தான் வாய்கூசாமல் மறுத்துவந்தது.


இது குறித்து சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.


''கடத்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜீனே மோரே என்ற பெண் அளித்த புகாரின்பேரில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. (Federal Bureau of Investigation) நிறுவனமும் இதே வழக்கை விசாரணை செய்துவருகிறது. இன்டர்போல் மூலமாக நாம் அவர்களிடம் கேட்ட தகவல்களுக்கான பதில், கடந்த வருடம்தான் கிடைத்தது. அதில், காந்தகார் விமான நிலைய ரிக்கார்டுகள் உட்பட பல ஆதாரங்கள் அங்கே இல்லை. அந்த ரிக்கார்டில்தான் விமானக் கடத்தலுக்கு முன்பும் பின்பும் அங்கு வந்து சென்றவர்கள் யார் என்ற முக்கிய விவரம் பதிவாகி உள்ளது. நமது அரசு இந்த வழக்கில் எஃப்.பி.ஐ. கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்துதருகிறது. ஆனால், அவர்கள் நமக்கு உதவுவதில்லை. கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாலிபானின் அமைச்சரையே அக்டோபர் 2003-ல்தான் எங்களால் விசாரிக்க முடிந்தது. ஆனால், எஃப்.பி.ஐ. அவரை ஏழுமுறை விசாரித்துவிட்டது. ஒருவேளை அவர்களையும் தாண்டி நாம் எதுவும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று கருதுகிறார்களா என்று தெரியவில்லை'' என்கிறார் விசாரணைக் குழுவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்.


டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. இயக்குநர் விஜய்சங்கர், ''இது எங்களுக்கு முழுமையான வெற்றியல்ல. மீதம் உள்ள ஏழு பேர் பாகிஸ்தானில் இருந்தும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இவர்களைப் போல், மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமும் அங்கு இருப்பதாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சார்க் உட்பட பல மாநாடுகளை ஆசிய நாடுகள் நடத்தியும், அதில் இதுகுறித்து பாகிஸ்தானிடம் பேச யாருமே முன்வரவில்லை'' என வருத்தப்பட்டார்.


''மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும்...''


கடத்தப்பட்ட இந்திய விமானத்தில் வேலூரைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். நண்பர்களான அந்த ஏழு பேரில் கண்ணன், தனசேகர் ஆகியோரிடம் பேசினோம். ''அந்த மூவருக்கும் கிடைத்துள்ள தண்டனை போதாது. மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அவர்களிடம் சிக்கியிருந்தபோது நாங்க அனுபவிச்ச சித்ரவதைகளும், இந்திய அரசுக்கு அந்தத் தீவிரவாதிகள் கொடுத்த நெருக்கடிகளும் அப்பப்பா... நாங்க அவங்ககிட்டேயிருந்து விடுபட்டு நம் நாட்டுக்கு வந்தபோது, எங்களை சந்தித்த ஒரு மிலிட்டரி ஆபீஸர், 'உங்களைப் பிணைக் கைதிகளாக்கி விடுதலையாகியிருக்கும் அந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடித்து சிறையில் அடைக்க நடத்தப்பட்ட ஆபரேஷனில் கிட்டத்தட்ட முந்நூறு ராணுவ வீரர்கள் மாண்டுபோயிருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகத்துக்கு இப்படி இந்த தீவிரவாதிகளை விடுவிப்பதுதான் மரியாதையா...' என்று ஆதங்கப்பட்டது, இப்போதும் நினைவிருக்கிறது'' என்று சொல்லிக் கலங்கினர்.

No comments: