Thursday 14 February, 2008

பாகிஸ்தானுக்கு ஆப்படிக்கும் காலம் நெருங்கிவிட்டதா ?

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஹிந்துஸ்தானத்துக்கு எதிராக பாம்புக்குக்கு பால்வார்த்த கதையாக அமெரிக்க இன்றய புஷ் வரையான அரசியல்வாதிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அதுவும் ஒரு முகமதிய அடிப்படைவாத நாடு என்று அமெரிக்கர்களுக்கு தெரியாமல்போனதும் காலம் கடந்து முகமதிய தீவிரவாதம் தன்னையே தீண்டும்வரை விழிப்படையாததும் துரதிருஷ்டமான சம்பவங்கள்.

காலம் கடந்தேனும், ஹிந்துஸ்தானின் பக்கம் நெருங்கிவரும் அமெரிக்கா, தனது பாகிஸ்தான் ஆதரவு கொள்கைகளிருந்து விலகிச்செல்லும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அஃப்கானிஸ்தானின் தலிபான்களை சின்னாபின்னமாக்கிய அமெரிக்கா, பாகிஸ்தானையும் துவம்ஸம் செஈயும் நாள் வெகுதொலவில் இல்லை.

அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் வரும் இன்றய நிலையில் முகமதிய அடிப்படைவாத நாடான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்போம்.

ஹிந்துஸ்தானமும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானத்தின் முகமதிய அடிப்படைவாதிகளின் முழுமையான அழிவு மட்டுமே ஹிந்துஸ்த்தான மண்ணில் பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் ஒரே வழி.

இன்றய (14 பிப்ரவரி 2008) தினமணியில் வந்த தலையங்க கட்டுரை கீழே...

****************

சும்மா இருக்குமா அமெரிக்கா?

எஸ். ராஜாராம்

உலக வரலாற்றில் மோசமான கட்டத்தை நோக்கி பாகிஸ்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மதப் பழைமைவாதிகளைப் பகைக்க முடியாமல் அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாததன் விளைவைத்தான் இன்று பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலிதான் ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் எல்லாம்.

நெருக்கடி நிலை, முஷாரப் ராணுவத் தளபதி பதவியைத் துறக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கைது, பேநசீர் படுகொலை, தேர்தல் குழப்பம் என ஒரு நிலையில்லாத தேசமாகி தவிக்கிறது பாகிஸ்தான்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம் வேறு உலக நாடுகளை சந்தேகக் கண்களோடு பார்க்கச் செய்கிறது.
இதுநாள் வரை அமெரிக்காவுடனான உறவை, இந்தியாவுக்கு எதிரான பெரும் பலமாகவே பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நினைத்து வந்துள்ளனர்.

ஆனால், அந்த நினைப்பே அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் திருப்பிவிட்டுள்ளது.

அமெரிக்காவையும் அதன் கூட்டணி நாடுகளையும் ஜென்ம விரோதியாகப் பார்க்கும் பயங்கரவாதிகள், அமெரிக்காவின் தோழமை நாடாக பாகிஸ்தான் செயல்படுவதை வரவேற்கவா செய்வார்கள்?

நியூயார்க் இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை அமெரிக்கா தொடங்கியபோது, அதில் தன்னை ஒரு வலுவான கூட்டாளியாக பாகிஸ்தான் காட்டிக்கொண்டது.

பயங்கரவாத முகாம்களை ஒடுக்கியதாகக் கூறியது, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தளம் அமைத்துக் கொடுத்தது என பாகிஸ்தானின் உதவிகளை அமெரிக்க அதிபர் புஷ் அவ்வப்போது மெச்சிப் பாராட்டியபோதெல்லாம் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், காடு, மலையெல்லாம் தாண்டி யாரை தேடோ தேடு என அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கிறதோ... அந்த அல்-காய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிலேயே மறைந்திருப்பதாக வெளியாகும் தகவல்கள்தான் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளின் உயர் அதிகாரிகள் பலர், பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாகச் சந்தேகம் எழுப்பியபோதெல்லாம் அதிபர் முஷாரப் அதை மறுத்து வந்தார். அவர் மறுத்துவிட்டார் என்பதற்காகவே அதை அமெரிக்கா நம்பிவிடவும் இல்லை.

தற்போது பின்லேடன் மட்டுமன்றி, தாலிபான்களின் தலைவர் முல்லா உமரும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா ஐயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் பாகிஸ்தானிலேயே இல்லை என விடாப்பிடியாகக் கூறிவருவது போல, பின்லேடனும் பாகிஸ்தானில் இல்லவே இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்படும் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பதவிக்காலம் வரை வேண்டுமானால், பாகிஸ்தான் எதையாவது கூறி அமெரிக்காவின் நெருக்கடியிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், அமெரிக்காவின் அடுத்த அதிபரும் பாகிஸ்தானை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அடுத்த அதிபராகும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் பராக் ஒபாமா, பாகிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஒருபுறம், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மறுபுறம் என தடுமாறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வருகிறது.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களின் ஆதாயத்திற்காகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நிலை மாறாவிட்டால், பேநசீர்போல மேலும் பல தலைவர்கள் கொல்லப்படும் ஆபத்தும் உள்ளது.
இப்போதும்கூட... பயங்கரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை காலம்கடந்தது என்றே சொல்ல வேண்டும்.

தாலிபான்கள் மற்றும் அல்-காய்தாவினருக்கு எதிரான நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக் கோடியாக நிதியுதவியை வழங்குகிறது. அப்படியிருக்கையில், அதே இயக்கங்களின் தலைவர்கள் பாகிஸ்தானிலேயே பதுங்கி இருப்பதாகக் கூறப்படும்போது, அதைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கா சும்மா இருக்குமா?

ஏற்கெனவே ஆப்கானிஸ்தானின் எல்லையைத் தாண்டி அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அவ்வப்போது விமானத் தாக்குதல் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானுக்குள் இன்னும் ஊடுருவித் தாக்குதல் நடத்தாது என்பது என்ன நிச்சயம்?

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்திற்காகதான் தாலிபான்கள் ஆட்சிபுரிந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா சின்னாபின்னமாக்கியது. அதே நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

No comments: