Friday, 22 February 2008

திப்பு விவாதங்கள் சம்பந்தமாக கார்கில் ஜெய் எழுதிய திண்ணைக்கட்டுரை


Thursday February 21, 2008
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
கார்கில் ஜெய்


முன்குறிப்பு: போன கட்டுரையில் (சுட்டி 2) ' நோக்கம், விளக்கம், முடிவு' என்று தனித்தனியாக எளிதாகவே தெரியும்படி எழுதியிருந்தேன். முதல் கேள்வியே 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்பதுதான். அவ்வளவு தெளிவாக எழுதிய பின்னும், அதற்கு பதில் சொல்லாமல் இணையாக அதே போன்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். நான் எழுதிய முதல் கட்டுரையே (சுட்டி 2) இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரைக்கும் போதுமான பதிலாகும். என் சங்கநாதம் சிறிதேனும் அவர் காதில் கேட்டிருந்தால், அவர் சொன்னதையே திருப்பி சொல்லி, நான் 'உள்நோக்கம்' என்று எதையெல்லாம் சொன்னேனோ அதையே மீண்டும் செய்து அதிகமாக எழுதியிருக்க மாட்டார்.

சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html

( இப்னு பஷீரின் முதல் கட்டுரை)

சுட்டி 2: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802072&format=html ( என் எதிர் வினை கட்டுரை)

சுட்டி 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802141&format=html ( இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரை)

(சுட்டி 1, பத்தி 5) இப்னு பஷீரின் முதல் கட்டுரை : //"திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்."//

சுட்டி 2: -ல் இவ்வாறு எந்த சிரியரும் எழுதவில்லை, வரலாற்று சிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியையும் கூட விசாரித்தேன் - என்று சொல்லியிருந்தேன். இப்னு பஷீர் சொன்னது பொய் இல்லை என்றால், எந்த வரலாற்று சிரியர் அவ்வாறு கூறினார் என்று துல்லியமாக சுட்டியிருக்க வேண்டும். னால் அவர் இரண்டாவது கட்டுரையில் சொல்லும் வரலாற்று சிரியரின் ஒரே சுட்டி:

சுட்டி3 கடைசி பத்தி //' திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார் //

னால் இதில் பூர்ணய்யாவின் பெயரே இல்லை!!!. 'அமைச்சர்கள்' - என்பதற்கு பதிலாக 'எல்லா அமைச்சர்களும்' என்று தாராசந்த் எழுதியிருந்தால் அதில் பூர்ணய்யாவும் அடக்கம் என கொள்ளலாம். அல்லது பூர்ணய்யா மட்டும்தான் ஒரே அமைச்சர் என்றால் தாராசந்த் 'அமைச்சர்கள்' என்று பன்மையில் எழுதியிருக்க முடியாது. க தாராசந்த் பூர்ணய்யாவைத்தான் குறிப்பிட்டார் என்பதற்கு சற்று வாய்ப்பிருக்கிற்தே தவிர தாரம் இல்லை.

இரு சுட்டிகளையும்(1,3) ஒப்பிட்டு பார்த்தால் இப்னு பஷீரே 'பூர்ணய்யா,மீர்சதக்' என இடைச்செருகல் செய்து இருப்பது தெரியவரும். மேலும் அவரே ஒப்புக்கொள்கிறார் :

சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை........//

இதையேதான் நான் முந்தைய கட்டுரையிலும் கேட்டேன், 'ஏன் தாரமில்லாமல் பூர்ணய்யா மீது பழி சொல்கிறீர்கள்?' என்று.

சரி அவர் பூர்ணய்யா பற்றி ஒட்டு மொத்தமாக என்ன இந்த கட்டுரையில்(சுட்டி 3) என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்:

சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது 'காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?' என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?


'திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார்.'திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக' காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. //

-- இதில் அற்புதமாக உண்மையை திரித்து உள்ளார் இப்னு பஷீர். சாதாரணமாக படிக்கும் எந்த வாசகனுக்கும் 'பூர்ணய்யாதான் காட்டி கொடுத்தான்' என்றே தோன்றும். னால் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன :

1) முதல் பத்தியில் பூர்ணய்யா ங்கிலேயரிடம் சரணடைந்ததைத்தாகக் குறிப்புள்ளதே தவிர திப்புவை காட்டி கொடுத்தாக சொல்லப்படவேயில்லை.

2) முதல் பத்தியை எழுதியது எதாவது வரலாற்று சிரியரா அல்லது இப்னு பஷீரே-வா என்றும் சொல்லப்படவில்லை.

3) தாரசந்த் எழுதியதாக குறிப்பிட்டதில் 'திப்புவின் அமைச்சர்கள்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே தவிர பூர்ணய்யாவின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. ( சரி, தாராசிங் தமிழிலா எழுதினார்? ஒர்வரி சுட்டியை ங்கிலத்தில் அடிபிழறாமல் எழுத வேண்டியதுதானே? )

4) காந்தி 'ஒரு கட்டுரையில்' எழுதியது எப்போது, எங்கு, ஏன் என்று தெரியவில்லை.

க பூர்ணய்யா காட்டி கொடுத்ததாக இப்னு பஷீர் தவிர எந்த வரலாற்று சிரியரும் சொல்லவில்லை. இதையேதான் நானும் என் கட்டுரையில் சொல்லியிருந்தேன். மேலும், எப்படி காட்டி கொடுத்து கொன்றவனும், சரணடைந்தவனும் சமானமான துரோகத்தை செய்தவர்கள் வர்? காட்டி கொடுத்து கொன்றவன் முகமதியன், சரணடைந்தவன் பார்ப்பனன் என்பதாலா?
இருந்தாலும் காந்திஜி பூர்ணய்யாவின் பெயரை 'ஒரு கட்டுரையில்' சொல்லி இருப்பதால் காந்தி கதைக்கு வருவோம்: எப்போதுமே மகாத்மா இந்துக்கள் செய்யாத தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை கடைபிடித்தார்: ( வரலாறு தெரியாதவர்கள் கூக்ளிட்டு தெரிந்து கொள்ளவும். தாரத்துடன்தான் எழுதுகிறேன் )

1) யிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்களை ஜாலியன் வாலா பாக்-கில் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரை தேசபக்தர் உதம் சிங் கொன்றார். மகாத்மா காந்தி 'வெறியன் உதம் சிங் செய்த படுகொலைக்காக' ங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

2) தேசபக்தர் பகத் சிங் - கிற்கு தண்டனை கொடுக்க பட வேண்டும் என்றும் பகத் சிங் செய்த வெறிச்செயலுக்கு ங்கிலேய அரசிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார். *(பி.கு)

3) முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றாலும் 'அது முஸ்லீம்களின் ஜிகாத் முறை, அதற்காக 'அன்பே சிவமான' ஹிந்துக்களும் தற்காப்புக்காக திருப்பி தாக்கலாமா?' என்றும் பாபுஜி மன்னிப்பு கேட்டார். (இப்பொழுதுவது புரிகிறதா அன்பே சிவத்துக்கு அர்த்தம்)

4) 'முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றனர், கற்பழித்தனர் என்பதற்காக ஹிந்துக்களும் தப்பித்து ஒடி வந்தீர்களா? அங்கேயே இருந்து, திரும்பியும் தாக்காமல், இஸ்லாமிய சகோதர்களிடம் அஹிம்சை போராட்டம் நடத்த வேண்டியது தானே?' என்றும் மகாத்மா வெட்கப்பட்டார்.
இதற்கெல்லாமே மன்னிப்பு கேட்ட காந்தி பூர்ணய்யாவுக்காக மன்னிப்பு கேட்டது ஒன்றும் ச்சரியமில்லைதானே?. **(பி.கு)

சுட்டி 3 பத்தி 2//மேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்' னவும் காந்தி 'யங் இந்தியா'வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்? //

இப்னு ப்ஷீர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் முந்தைய நான்கு புள்ளிகளிலும் இருக்கின்றன. ஏன் தேசபக்தர்களை பார்த்து மகாத்மா காந்திஜி வெட்கப்பட்டு மன்னிப்பு எதிர்மறையாக சொல்லவேண்டும்? அது மாதிரிதான் இதுவும்; அதாவது appeasing muslims and fooling hindus.

மேலும் திப்பு சுல்தான் கோவில்களுக்கு உதவியது ட்சியின் கடைசி காலத்தில்தான்; அப்போதுதான் சங்கராச்சாரியரிடம் கடிதப்போக்குவரத்து நடந்துள்ளது; கடிதங்களின் தேதிகளை பார்க்கவும். அதற்கு முன்னால் சுல்தான் 'இடி' அமீன் தான்.

சுட்டி 3 //'பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை//
அதாவது பாரதியார் வேறு யாராவது சிரியர் எழுதியதை படித்து சமண துறவிகளை கொன்ற பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால் அது சரி(சுட்டி 3); னால் 'கிர்க்பாட்ரிக்', 'வில்க்ஸ்' கிய வரலாற்று சிரியர்களை படித்து திப்பு சுல்தான் பற்றி எழுதினால் அது குற்றம் (சுட்டி 1); னாலும் இப்னு பஷீர் பொன்னம்பலத்தை படித்து எழுதினால் அது சரியே(சுட்டி 3). இப்போது அதே வியூகத்தில் சுட்டி -1 ஐயும், சுட்டி-3 ஐயும் இணைத்தால் ஒரு புதிய கோட்பாடு உருவாகிறது : 'பாரதியார் ஒருவேளை பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால், அவர் நேர்மையானவர் என ஒப்புக்(காக)கொள்ளலாம், இருந்தாலும் பாரதியார் திப்புவை பற்றி 'கிர்க்பாட்ரிக்', 'வில்க்ஸ்' கிய வரலாற்று சிரியர்களை படித்து எழுதியது தவறுதான்; ஏனென்றால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை'.

--இதையேதான் நான் என் கட்டுரையில் ரம்பம் முதல் கடைசிவரை எழுதியிருக்கிறேன். ஏன் சம்பந்தமில்லாத விஷயங்களை சேர்த்து இப்னு பஷீர் எழுதுகிறார்? ஏன் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை?

பாரதியார் ஏன் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லை? - என்று இவர் கேட்பதுவும் சம்பந்தமில்லாததே. பாரதியின் கண் முன்னே ஒரு நிகழ்ச்சி நடந்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவரை சாடலாம். னால் பாரதியார் இதைத்தான் எழுதவேண்டும் என வரையறுக்கவோ, நடக்காத ஒன்றை ***(பி.கு) ஏன் இதை எழுதவில்லை என்று கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற நியமங்களுக்கும், வரையறைகளுக்கும் பாரதியார் உட்பட்டிருந்தாரெனில் அவர் சுப்ரமணியனாகவே இறந்திருப்பார். மகாகவியாக இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்க மாட்டார்.

பாரதியார் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லையாதலால், அவர் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை - என தர்க்கம் செய்யும் இப்னு பஷீர், பல முகமதிய மன்னர்களின் கொடூரங்களை எழுதலாமே? எழுதுவாரா? அல்லது அவரது தர்க்கப்படியே தன் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை என ஒப்புக்கொள்வாரா? அவரே பதில் சொன்னால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

சுட்டி -1 கடைசியில் இப்னு பஷீரே சொன்னது : //வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம். //

அவர் வைத்த ஒவ்வொரு வாதத்துக்கும் மிகத்தெளிவாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை அளித்து இருக்கிறேன். என் கேள்விகளுக்கு அவரால் இரண்டாவது கட்டுரையில் எந்த நேரடியான பதிலும் சொல்ல இயலவில்லை. (அதற்கு பதிலாக பாரதியார் நேர்மையானவர் இல்லை என்று மட்டும் தர்க்கம் செய்து இருக்கிறார்). இப்னு பஷீரே தாரங்களை காட்ட வேண்டிய தன் கடமையில் தவறியுள்ளார். இனி அவர் சொன்னது போலவே ' வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது' செய்வாரா? அல்லது குறைந்தபட்சம், பாரதியும், சுஜாதவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரும் இவர், பாரதியை 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார்' என்றும் 'நேர்மையில்லாதவர்' என்றும் சொன்னதற்காக, காக்கை எச்சமிட்டிருந்தாலும் கண்ணியம் குறையாத பாரதி சிலைக்கு முன் நின்று மன்னிப்புக்கேட்பாரா?

- கார்கில் ஜெய்

2 comments:

kargil Jay said...

Dear Bala,
thanks for your work.
Please contact me in jaykumar DOT r AT gmail DOT com

kargil Jay said...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803209&format=html