Tuesday 12 February, 2008

திப்பு புகழ்பாடும் முகமதிய முல்லாக்களுக்கு கார்கில் எழுதிய‌ ஜெய் பதில்கட்டுரை

Thursday February 7, 2008
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
கார்கில் ஜெய்
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் கட்டுரை)
இப்னு பஷீர் முகமதிய அரசரான திப்பு சுல்தானை போற்றி எழுத வேண்டும் என்றால், திப்பு சுல்தானை புகழ்ந்து எழுத வேண்டும்; அல்லது திப்பு சுல்தானை தூற்றிய ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் ஆகியோர் நம்பதகாதவர்கள், திரிபுவாதிகள் என்பதற்கான ஆதாரத்தை எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாமல் சைவர்கள் மேல் கொலை பழி சுமத்துவது இப்னு பஷீரின் எழுத்தில் உள்நோக்கம் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
1) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 8 ) : "திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்" என்று எழுதுபவர் வேறு யாருமல்லர்.பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்' நிற்கிறார் பாருங்கள்!"
முரணான உண்மை: மகாகவிக்கு பொதுவாக ஏழைகள் மேல் பற்றும், அனைத்து மன்னர்கள் மேல் ஆத்திரமும் இருந்தது. மன்னராட்சி முறை மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. இதற்கு ஆதாரமாக பல பாடல்களை காணலாம்:
'எல்லோரும் ஓர் குலம்.....................
.... எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ,
'தனி ஒருவனுக்கு ......'
ஏன் அதற்கும் மேலே போய்,
ருஷ்ய புரட்சி
"கொடுங்கோலன் ஜார் ஒழிந்தான்
ருஷ்யாவில் மக்களாட்சி மலர்ந்த தம்மா"
என மகாகவி பெருமிதத்துடன் பாடினார். சக்ரவர்த்தி ஜார் சதி செய்து கொல்லப்பட்டதும், அவரின் வாரிசான கோமகன் அலெக்ஸி நிகாலொவிச், பதினான்கே வயதில் லெனினால் கொல்லப் பட்டதும், ஒரு பாவமும் செய்யாத, யாருக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்க வாய்ப்பே இல்லாத ஐந்து இளவரசிகளும் கொடூரமாக ஏகாடெரின்பர்க் சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப் பட்டதும் பாரதிக்கு தெரியவேயில்லை!!. (பின்னர், லெனின் தன்னுடன் புரட்சியில் உயிரை பணயம் வைத்து உதவி செய்த போல்ஷெவிக் கட்சி தலைவர்களையும், தோழர்களையும், தோழர்களின் குடும்பத்தினரையும் ஈவு இரக்கமின்றி காரணமேயில்லாமல் கொன்றார்.) மன்னர்கள் மீது பாரதிக்கு அவ்வளவு வெறுப்பு இருந்ததால்தான் சற்றும் கபடமின்றி உணர்ச்சி வசப்பட்டு ருஷ்ய புரட்சி கவிதையை எழுதினார்.
ஆகவே, பொதுவாகவே மன்னர்கள் மீது வெறுப்பு கொண்டதனால், கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் எழுதிய வரலற்றை படித்தத் தாக்கதால், அல்லது திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால் நம்பத் தகுந்ததான பதிவை அறிந்ததனால், (சுட்டி 3 : http://en.wikipedia.org/wiki/Tipu_sultan#Religious_policy ) மகாகவி திப்பு சுல்தான் பற்றி எழுதியதில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கின்றன.
ஆனால் இப்னு பஷீரின் எழுத்தில் நேர்மை சிறிதளவேனும் உண்டா? தாய் நாட்டுக்காக அன்பு மனைவி, அழகுக்குழந்தை, புனிதமிக்க முப்புரிநூலையும் பிரிந்து , உடல், பொருள், புகழ், ஆவி, அனைத்தும் தியாகம் செய்து, கள்ளங் கபடமற்ற மனத்துடன் அல்லா பற்றியும் கவி படைத்த பாரதியை நன்றியில்லாமல், அவர் அந்தணராய் பிறந்தார் என்ற ஒரே காரணத்துக்காக "ஆங்கிலேயருடன் கைக்கோர்த்தார்" என்று இப்னு பஷீர் பச்சை பொய் பேசி பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
(அது சரி, அல்லா பற்றி கவிதை எழுதிய பாரதியை 'முகமதியருடன் கைக்கோர்த்தார்' என்று சொல்லலாமா? அல்லது திப்புவின் மகனே 7000 பேர் என்று சொல்லும்போது அதை விட மிக குறைவாக 'இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி' என்று பாரதி சொன்னதனால் 'முகமதியருடன் ஓரணியில் நிற்கிறார்' என்று சொல்லலாமா? )
2) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 5) : "திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்."
முரணான உண்மை: (சுட்டி 2:) . இது தவிர நான் சில வரலாற்று ஆசிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியிடமும் கூட கேட்டேன் (அந்த வழிகாட்டி கர்நாடக அரசால் மைசூர் பல்கலை கழகத்தில் பயிற்றுவிக்க பட்டவர். திப்புவின் அரண்மனைகளின் ஓவ்வொரு செங்கல்லும் தனக்கு அத்துபடி என்றார். திப்புவை பற்றி மிக உயர்வாக பேசினார்). அனைவரும் சொன்ன ஒரே பெயர்: மீர் சாதிக் மட்டும்தான். நண்பன் மீர் சாதிக்குக்கு ஒரு இளவரசன் போல் திப்பு சுல்தானே வசதிகளை செய்து வளர்த்ததாக சொன்னார்கள். இப்னு பஷீர் குறிப்பிட்ட (சுட்டி 1, பத்தி 7 ) நேர்மையான ஆசிரியர்களான Brittlebank, Hasan, Habib, Saletare அனைவரும் மீர் சாதிக் சதி செய்தது தவிர, முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம் திப்புவை கொல்ல தன் பங்குக்கு 16,000 படை வீரர்களை அனுப்பினாதாக பதித்து இருக்கின்றனர். பூர்ணய்யா துரோகம் செய்ததாக யாரும் சொல்லவில்லை
ஆக துரோகம் செய்தது மீர் சாதிக் என்ற முகமதியர். அதே போரில் 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்' நின்றது முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம். ஆனால் பழியில் பாதி பங்கு பூர்ணய்யா என்கிற பார்ப்பனன். இப்படியே நாலு தடவை பழி சொன்னால் வரலாறு ஆகிவிடும். பிற்பாடு 'மீர் சாதிக்' என்ற பெயரை 'மறதி'யாக விட்டுவிட்டு பூர்ணய்யாவை மட்டும் குறிப்பிட்டு நாலு தடவை சொன்னால் இன்னும் சௌகர்யம். அப்புறம் ஒரேயடியாக 'திப்புவை காட்டி கொடுத்தது பார்ப்பனர்களே' என்று அறிவித்து விடலாம்!! மற்ற இந்துக்களைக்கூட பார்ப்பனரை தாக்க தூண்டிவிடலாம். ஆக இப்பொழுதும் பூர்ணய்யா மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
3) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 11) : மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் 'அன்பே சிவம்' என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!
முரணான உண்மை: (சுட்டி 3 : பத்தி 3) " M.M.K.F.G. எனப்பட்ட ஒரு மொகலாய தளபதி எழுதிய, திப்பு சுல்தானின் மகன்களில் ஒருவராலேயே திருத்தம் செய்யப்பட்ட, திப்பு சுல்தான் வாழ்க்கைக் குறிப்பில், திருவிதாங்கூர் மகாராஜாவுடனான போரில் திப்பு சுல்தான் 10,000 ஹிந்துக்களையும், கிருத்தவர்களையும் கொன்றும், 7000 பேரை ஸ்ரீரங்கபட்டினம் இட்டுச்சென்று சுன்னத் செய்து, கோமாமிசம் புசிக்க செய்தும் முகமதியராக்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது"
திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால், 'திப்பு சுல்தான் சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்தினார்' என்பதும், கிட்ட தட்ட முழு கட்டுரையுமே ஆதரமற்றதாகிறது. 'எண்ணாயிரம் சமண முனிவர்கள் கழுவிலேற்றப்பட்டனர்' என்பது திப்புவை பற்றிய கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒன்றை, திசை திருப்பி பெரிது படுத்தும் உள்நோக்கமுடன் எழுதப்பட்டது. இதுவே திரிபுவாதத்திற்கு மிகச்சிறந்த உதாரணம். அது மற்றும் இன்றி எண்ணாயிரமெல்லாம் முகமதிய மன்னர்களுக்கு 'மொஹல் அல்வா சாப்பிடுவது' போல. திப்புவின் மகனே பத்தாயிரம் பேரை கொன்றதாக ஒப்புதல் அளித்துள்ளார். முதல் தடவையில் மட்டுமே கஜினி முகமது பத்து லட்சம் பேரை கொன்று, பல லட்சம் பெண்களை கெடுத்து, வேண்டும் போதெல்லாம் அனுபவிக்க ஒரு லட்சம் கன்னி பெண்களையும், பிற்காலத்தில் உபயோகப்படுத்த சிறுமிகளையும் கதறக் கதற கட்டி இழுத்துக் கொண்டுபோனார். அப்புறம் திரும்ப திரும்ப வாலிபம் இருக்கும் வரையில் பதினேழு தடவை வந்தார். கணக்கு போட்டு பாருங்கள். இதே போல பல முகமதிய அரசர்கள். மறுபடியும் கணக்கு போட்டு பாருங்கள். 'ரத்த வரலாறுகளை மறக்கடிக்க' முயல்வது யார் என்று தெரியும். இவ்வளவுக்கு அப்புறமும் ஏன் இந்துக்கள் முகமதியரை இந்தியாவை விட்டே விரட்டவில்லை என்று சிந்தியுங்கள். 'அன்பே சிவம்' என்பது புரியும்.
திப்புவை புகழ வேண்டிய கட்டுரையில், திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢ய உண்மையயை மாற்றி, திடீரென்று இந்துக்கள் மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
சரி, அது என்ன உள்நோக்கம்?
இப்னு பஷீரின் உள்நோக்கம் இதுதான்: இந்துக்களிடம், பிராமணர்களிடமும் வேற்றுமையையும், குற்ற உணர்வையும், குழப்பத்தையும் உருவாக்குதல்; முகமதியராக மதம் மாற தூண்டுதல். இந்துக்கள் மேல் சமணர், முகமதியருக்கு அவநம்பிக்கையையும், வெறியையும் ஏற்படுத்துதல்; இதன் மூலம் இந்துக்களை, இந்து மதத்தை ஒழித்தல்.
அதற்கு அவர் கையாண்ட முறை: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தல். அதாவது புளுகும் திரிபுவாதமும்.
- கார்கில் ஜெய்
சுட்டிகள் :
சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html
சுட்டி 2: http://en.wikipedia.org/wiki/Fourth_Mysore_War
சுட்டி 3 : ( பத்தி 3) "A Mogul general, known only by his initials, M.M.K.F.G., wrote an account of Tippoo Sultaun's life, which was corrected by one of Tippoo's sons, wherein he asserts that the Sultan, in his wars against the Maharaja of Travancore, had 10,000 Hindus and Christians killed and 7,000 transported back to Seringapatam, where they were circumcised, made to eat beef and forced to convert to Mohammedanism. A more solid proof may be had from the destruction meted out to numerous lesser temples, especially in the Sultan's southern domains, in the late 1780s."
jaykumar.r@gmail.com

No comments: